தேர்.
அருண்பிரசாத்.

நிலையிலிருந்து நகர்கிறது தேர்
நகர்வலம் காண.
மாலை மணிகளுடன்
விழாக்கால அலங்காரம்
ஆண்டுக்கொருமுறை.
தொங்கும் வண்ண சுருள்திரை
கைகளை ஆட்டியபடி,
தொடரும் மக்கள் குதூகலத்தில்
ஆண்டு சோகத்தை மெல்ல இறக்கிவைத்து
திரும்பும் அதன் நிலைக்கு.
வயது கூடுகிறது தேருக்கும்.
———–
everminnal@yahoo.com