This entry is in the series 20031113_Issue

ப. பாரதி


நாலடி அறையில் பட்டாசு பொடி நிரப்பி
தினமும் கையில் காசு வாங்கிய நாளை விட
இரண்டு கை கொண்டு என் கால்சட்டையை
நானே அணிந்த நாளை விட
என் தட்டினின்று உணவை நானே
எடுத்துண்ட நாளை விட
இன்று நான் இன்பமாய் இருக்கிறேன்.
பட்டாசு பொடியடைக்கையில் நடந்த
விபத்தில் வலது கை காலமான பிறகு…
ஏனென்றால்..
மதிய உணவருந்தும் ஒரு காரண்த்திற்காகவேனும்
நான் பள்ளிக்கு அனுப்பப்படுகிறேன்.
—-
a_mozhi@yahoo.com

Series Navigation