முதலா முடிவா ?
Published February 12, 2004 • By
காளிதாஸ்
காளிதாஸ்

என்
பிறப்பில் நான்
அழுது
காட்டினேனே
மறந்துவிட்டாயா
உலகமே
நான்
இறக்கும் போது
எப்படி
அழவேண்டும்
என்று
உங்களுக்குச்
சொல்லித்தரவே
நான் அழுதேன்
என் பிறப்பில்
நான்
இறக்கும்போது
எல்லோரும்
அழ
நான் மட்டும்
அழாமல்
கிடப்பேனல்லவா
அதற்காகத்தான்
இப்படி
முன்னதாகவே
அழுதுவிட்டேன்
எனக்கே
நான்
கடன்படலாமோ
எனக்கான
ஒப்பாரியை
நானே
செய்யாதிருக்கலாமா
ஆம்
நானென்
கடைசி
அழுகையைத்தான்
முதலிலேயே
அழுது வைத்தேன்
kaalidas@hotmail.com