This entry is in the series 20031106_Issue


தேவையான பொருட்கள்

ஒரு பெரிய கத்திரிக்காய் சிறு துண்டங்களாக வெட்டி வறுத்தது.

2-3 தக்காளி வெட்டியது

1 மேஜைக்கரண்டி வெங்காயம், பச்சை மிளகாய் வெட்டியது

1/4 கோப்பை எண்ணெய்

1 தேக்கரண்டி அனிஸ் விதைகள்

1 தேக்கரண்டி மிளகாய் தூள்

1 தேக்கரண்டி மல்லித்தூள்

1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்

1 தேக்கரண்டி சோம்பு

1 தேக்கரண்டி உப்பு ருசிக்கேற்ப

கொத்துமல்லி 1 கோப்பை

செய்முறை

எண்ணெயை சூடாக்கி அதில் வெங்காயம், அனிஸ் விதைகள், சோம்பு போடவும். பழுப்பானதும், அதில் உப்பு மிளகாய்தூள், மல்லித்தூள் மஞ்சள் சேர்த்து வறுக்கவும். அத்துடன் வெட்டிய தக்காளி சேர்த்து வதக்கவும். கடைசியில் வறுத்த கத்தரிக்காய் சேர்த்து மூடி தம் செய்யவும். இறுதியில் பச்சை மிளகாய் கொத்துமல்லி சேர்த்து இறக்கவும்.

Series Navigation