This entry is in the series 20041014_Issue

அன்பானவன்


1)
குழந்தை வீட்டிலில்லை,
கலர் கலரான பலூன்களோடு
கடந்து செல்கிறான் பலூன்காரன்! ?
எனக்கான பலூனை
எப்படி வாங்குவது ?!

2)
நின்று.., கவனித்து,
இட,வலமாய் திரும்பி,
முட்டாமல்,மோதாமல்
திரும்பி வரும் ரிமோட் கார்! ?,
எப்படி இயக்குவதென்று
தெரிவதில்லை குழந்தைக்கு! ?.

3)
தொட்டால் சுடுமென்று,
குழந்தையின்
கைபிடித்துச் சுற்றுவதுண்டு
மத்தாப்புக் கம்பி!!.

4)
வந்த விருந்தினரிடம்
பின் எப்படிச் சொல்வது ?,
என் குழந்தைக்குப் பிடித்தது
கார்ட்டூன் நெட்வொர்க் ? ?.
—-
அன்பானவன்,பாண்டிய நாடு.
anbanavann@yahoo.com

Series Navigation