அரவம்.
அருண்பிரசாத்.

எப்போதும் உதிர்வதற்கு தயாராக
என் நாட்குறிப்புகளின் பழுப்புப் பக்கங்கள்.
ஒவ்வொன்றாய் புரட்டுகிறேன்
இயலாமையின் நடுக்கங்களுடன்.
காலத்தை எதிர்த்த போராட்டங்களில்
தோலுரிந்த பல தருணங்கள்
அழுத்தமான தடங்களுடன்.
ஒரு உருவமற்ற அரவம்
அதன் சட்டையை விட்டுச் சென்றிருக்கிறது
சிலவற்றில்.
everminnal@yahoo.com