எதுவும் நடக்கலாம் என்றாகிப்போன…
Published January 10, 2008 • By
றஞ்சினி
றஞ்சினி

பயத்துடனான முகங்கள்
நிறைந்த தேசத்தில்
விலங்குகளின்
நடமாட்டமும்
குறைந்தே இருந்தது
நேற்றுவரை இருத்தலுக்காக
குரலை உயர்த்தியவள்/ன்
இன்று வீதியில்
இறந்து கிடக்கிறாள்/ன்
பாடசாலை மாணவியிலிருந்து
வீட்டிலிருக்கும் தாய்வரை
எப்பவும் நடக்கிறது, நடக்கலாம்,
ஒரு ஆயுதம் வாங்குவது
பட்டினியால் இறக்கும்
உயிர்களை விட
அவசியமாகிறது இவர்களுக்கு
அதிகாரங்களில் மனிதர்கள்
இன்மையால்
மனித உரிமைகள்
பறிபோன தேசத்தில்
ஆயுதங்களும் பொய்களும்
சுதந்திரமாகவே உலாவித்திரிகின்றன
shanranjini@yahoo.com