This entry is in the series 20031127_Issue

அபராஜிதா


சனிப்பெயர்ச்சி
குருப்பெயர்ச்சி
ராகு/கேதுப் பெயர்ச்சி

காலம்காலமாகவே
கொண்டாடிக்கொண்டிருக்கிறது உலகம்

கிரகங்கள்
பெயர்ந்து கொண்டிருப்பதுதான் இயற்கை

யார்
எங்கே பெயர்ந்தால் என்ன
எவ்விடத்தில்
இருந்தாலென்ன
இவன்
அங்குமிங்கும் அலைவது மாறவில்லையே
ஊரைப்போல நாட்டைப் போல
வாழ முடியவில்லையே
பெயர்ச்சி
பின்னும் பெயர்ச்சி
ஒரு பெயர்ச்சியேனும்
உருப்படியாய் நிலையமிடச் செய்யாதா

***************************************

Series Navigation