பன்றியை விரும்புபவர்களும் பன்றியை வெறுப்பவர்களும் -1

This entry is part [part not set] of 18 in the series 20010812_Issue

மார்வின் ஹாரிஸ்

(இந்தக் கட்டுரை மார்வின் ஹாரிஸ் எழுதிய ‘பசுக்கள் பன்றிகள் போர்கள் சூனியக்காரிகள் ‘ என்ற மானுடவியல் பாடப்புத்தகத்தின் இரண்டாம் அத்தியாயம்)

மேம்போக்கில் ‘பகுத்தறிவுக்கு ‘ ஒவ்வாத உணவுப்பழக்கங்களின் உதாரணங்கள் நம் எல்லோருக்கும் தெரியும். சீனர்கள் நாய் மாமிசத்தை விரும்பிச் சாப்பிடுகிறார்கள் ஆனால் பசும்பாலை வெறுக்கிறார்கள். நமக்கோ பசும்பால் மிகவும் பிடிக்கும் ஆனால் நாம் நாயைச் சாப்பிடமாட்டோம். பிரேசிலில் இருக்கும் சில பழங்குடியினர் எறும்புகளை மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள். ஆனால் மான் கறியைச் சாப்பிடமாட்டார்கள். ஆக இப்படியே உலகம் முழுவதும் இருக்கிறது.

பசுவைப் பற்றி பேசியபின்னர் பன்றியின் புதிரைப் பற்றிப் பேசுவது எனக்குப் பொருத்தமாகத் தோன்றுகிறது. ஒரே மிருகத்தை சிலர் மிகவும் வெறுக்கவும் மற்றும் சிலர் மிகவும் விரும்பவும் காரணம் என்ன என்பதை விளக்குவது எனக்கு ஒரு நல்ல சவாலாகத் தோன்றுகிறது.

பன்றியை வெறுப்பவர்களைப் பற்றியதான பன்றிப்புதிரின் ஒரு பகுதியைப் பற்றி யூதர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் கிரிஸ்தவர்களுக்கும் நன்றாகத் தெரியும். பழங்காலத்திய ஹீப்ரூக்களின் கடவுள் சம்பந்தமேயில்லாமல் (ஜெனஸிஸ் பகுதியிலும், மறுபடி லெவிடிகஸ் பகுதியிலும்) பன்றியை சுத்தமற்ற மிருகம் எனவும், தொட்டாலோ சாப்பிட்டாலோ தீட்டு என்றும் அறிவிக்கிறார். 1500 வருடங்கள் கழித்து, அல்லா தனது தூதரான முகம்மதுவிடம் இஸ்லாமின் வழி நடப்பவர்களுக்கும் பன்றி பற்றிய நிலைப்பாடு அதேதான் என்று தெரிவிக்கிறார். வேறெந்த மிருகத்தையும் விட, கிழங்குகளையும், தான்யங்களையும் அதிக தரமுள்ள கொழுப்பாகவும், புரோட்டானாகவும் மாற்ற வல்லதாக இருந்தாலும், பன்றி என்ற இந்த மிருகம், லட்சக்கணக்கான யூதர்களுக்கும் கோடிக்கணக்கான முஸ்லீம்களுக்கும் வெறுக்கத்தக்கதாகவே இருக்கிறது.

அதிகம் தெரியாதது, அதிதீவிரமாக பன்றியை விரும்புபவர்களது பாரம்பரியம். நியூ கினியாவிலும், பசிபிக் மெலனீசிய தீவுகளுமே உலகத்தின் பன்றி விரும்புபவர்களது மையம். இங்கு கிராமங்களில் வாழ்கிற, தோட்டவேலையை முக்கியமான வேலையாகக் கொண்டிருக்கும் பழங்குடியினர்களைப் பொருத்தவரை பன்றிகள் புனிதமான மிருகங்கள். முக்கியமான நிகழ்ச்சிகளான திருமணம், இறப்பு போன்ற தருணங்களில், இந்தப் பன்றிகள் முன்னோர்களுக்குப் பலியிடப்பட்டு உண்ணப்படுகின்றன. இன்னும் பலவேறு பழங்குடி சமூகங்களில் பன்றிகள் போரினை அறிவிக்கவும், அமைதியை அறிவிக்கவும் பலியிடப்படுகின்றன. இந்தப் பழங்குடியினர் தங்களது இறந்த மூதாதையர்கள் பன்றி மாமிசத்துக்கு மிகவும் ஆசைப்படுகிறார்கள் என்று நம்புகிறார்கள். இறந்தவர்களிடமும் உயிரோடு இருப்பவர்களிடம் பன்றி மாமிசம் வேண்டி அளவுகடந்த பசி உண்டாகிற நேரம் மாபெரும் விருந்துகளை வைத்து ஒரே நாளில் ஊரில் இருக்கும் எல்லாப் பன்றிகளையும் கொன்று தின்றுவிடுகிறார்கள். தொடர்ந்து பல நாட்கள், கிராமத்தினரும், அவர்களது விருந்தினர்களும் அளவுகடந்து பன்றி மாமிசத்தைத் தின்று கொண்டே இருப்பார்கள். அவர்களால் செரிக்க முடியாததை வாந்தி எடுத்துக் கொட்டி விட்டு, இருக்கும் மாமிசத்தைத் தின்ன வயிற்றில் இடம் தேடுவார்கள். எல்லாம் முடிந்த பின்னர் உயிரோடு இருக்கும் பன்றிகளின் எண்ணிக்கை மிகமிகக் குறைந்துவிடும். மீண்டும் இந்தப் பன்றிகளை வளர்த்து முன்னைப்போல எண்ணிக்கையுள்ள பன்றிக் கூட்டத்தை உருவாக்க பல வருடங்கள் பிடிக்கும். அதே எண்ணிக்கையுள்ள பன்றிகள் உருவானதும், இன்னொரு விருந்து கொண்டாட்டம் போட விஷயங்கள் தயார் செய்யப்படும். இதே போல இந்த வினோதமான வீணடிப்புச் சுழற்சி போய்க் கொண்டே இருக்கிறது.

யூத மற்றும் இஸ்லாமிய பன்றி வெறுப்பாளர்களிடமிருந்து பிரச்னையை ஆரம்பிக்கிறேன். யெஹ்வா மற்றும் அல்லா போன்ற உயர்ந்த, மேலான கடவுள்கள், உலகத்தின் பல பகுதிகளில் மிகவும் விரும்பிச் சாப்பிடப்படும் ஒரு தொந்தரவும் செய்யாத, பார்த்தாலே சிரிப்பு வரவைக்கும் ஒரு மிருகத்தை, ஏன் வெறுக்க வேண்டும் ? பைபிள் மற்றும் குரான் சொல்லும் வெறுப்பை ஒப்புக்கொண்ட பல அறிஞர்கள் இதற்குப் பலவித விளக்கங்களைச் சொல்லியிருக்கிறார்கள். மறுமலர்ச்சிக்கு (Renaissance) முன்பு, மிகவும் பிரபலமாக இருந்த காரணம் பன்றி என்ற இந்த மிருகம் மிகவும் அசுத்தமானது என்பதும், இது தனது மூத்திரத்தில் புரள்வதும், மலத்தைச் சாப்பிடுவதும் இது அசுத்தமானது என்பதற்கு உதாரணம் என்பதும் எனப்பட்டது. ஆனால் வெளிப்புற அசுத்தத்தையும், மத ரீதியான வெறுப்பையும் இணைப்பது சில முரண்பாடுகளுக்கு இட்டுச் செல்கிறது. கூண்டுக்குள் அடைக்கப்பட்ட பசுவும் தனது மூத்திரத்திலும் மலத்திலும் விளையாடுகிறது. பசித்த பசுக்கள் மனித மலத்தை ஆர்வமாகச் சாப்பிடும். நாய்களும், கோழிகளும் இதே வேலையை யாரையும் புண்படுத்தாமல் செய்கின்றன. சுத்தமான சூழ்நிலைகளில் வளர்க்கப்படும் பன்றிகள் நல்ல மனிதத்தோழர்கள் என்பது பழங்காலத்து மனிதர்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும். அழகியல் நோக்கில் நாம் சுத்தம் பற்றிய மதிப்பீட்டைக் கொண்டோமானால், வெட்டுக்கிளிகளையும் பூச்சிகளையும் பைபிள் ‘சுத்தம் ‘ என்று வரையறுப்பதை முரண்பாடாகப் பார்க்கலாம். பூச்சிகள், பன்றிகளைவிட அழகியல் நோக்கில் முழுமையானவை என்பது இந்த மத நம்பிக்கைக்கு ஏற்றம் தருவது அல்ல.

மறுமலர்ச்சியின் ஆரம்பக் காலகட்டத்தில் யூத மதகுருக்கள் இந்த முரண்பாடுகளை உணர்ந்திருந்தார்கள். 12ஆம் நூற்றாண்டில் எகிப்தில், கெய்ரோவில், அரசர் ஸலாதீன் அவர்களது அரசவை மருத்துவராக இருந்த மோஸஸ் மைமோனிடெஸ் (Moses Maimonides) அவர்களுக்கே, பன்றியை வெறுக்கும் யூத, முஸ்லீம் கொள்கை பற்றி முதன்முதலாக இயற்கை ரீதியான விளக்கம் அளித்ததற்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம். பொதுமக்களின் சுகாதாரம் வேண்டித் தான் கடவுள் பன்றி மாமிசத்தைச் சாப்பிடக்கூடாது என்று கடவுள் ஆணையிட்டிருக்கிறார் என்று மைமோனிடெஸ் கூறினார். இந்த ராபை (யூத மதகுரு) ‘பன்றியின் மாமிசம் மனித உடலுக்குக் கெடுதி ‘ என்று எழுதினார். மைமோனிடெஸ் இதற்கான மருத்துவ காரணங்களைச் சொல்லவில்லை. ஆனால் அவர் அரசரின் மருத்துவர். அவரது ஆலோசனை வெகுவாக மதிக்கப்பட்டது.

19ஆம் நூற்றாண்டில் டிரிச்சினோஸிஸ் என்ற வியாதி, நன்றாக வேகவைக்கப்படாத பன்றி மாமிசத்தால் வரும் என்று கண்டுபிடிக்கப்பட்டபோது, இது மைமோனிடெஸ் அவர்களது ஞானத்தின் ஆதாரமாகப் பேசப்பட்டது. சீர்திருத்த சிந்தனையுள்ள யூதர்கள், பைபிளுக்குள் இருக்கும் சட்டங்களை, பகுத்தறிவுக்கு ஒத்துப்போகும் சட்டங்களாகக் கண்டு உடனே பன்றி மாமிசம் சாப்பிடலாம் என்று அறிவித்தார்கள். நன்றாக வெந்தால் பன்றி மாமிசம் பொதுச் சுகாதாரத்துக்கு கேடு அல்ல என்றும் எனவே பன்றி மாமிசத்தை நன்றாக வேக வைத்துச் சாப்பிடலாம் என்றும் து கடவுளுக்கு வருத்தம் தராது என்றும் அறிவித்தார்கள். இது அடிப்படைவாத யூதர்களைத் தூண்டிவிட்டு அவர்களை இயற்கை ரீதியான காரணங்களுக்கு எதிரானவர்களாகத் திருப்பி விட்டுவிட்டது. யாஹ்வா, அவரது மக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என விரும்பியிருந்தால், பன்றிமாமிசமே சாப்பிடாதே என்று சொல்வதற்குப் பதிலாக, நன்றாக வெந்த பன்றி மாமிசத்தை மட்டும் சாப்பிட வேண்டும் என ஆணையிட்டிருக்கலாம். எனவே, யாஹ்வாவின் மனத்தில், மக்களின் சுகாதாரத்தை தாண்டியும், வேறேதோ இருக்கிறது என்று வாதிடப்பட்டது.

மதத்தத்துவத்தின் முரண்பாடுகள் தாண்டி, மைமோனிடெஸ் அவர்களின் விளக்கத்தில் மருத்துவ மற்றும் நோய் அறிதலியல் முரண்பாடுகள் இருக்கின்றன. மனித வியாதிகளுக்கு பன்றி ஒரு வியாதிகடத்தும் மிருகமாக இருக்கிறது. ஆனால் யூதர்களும், முஸ்லீம்களும் வெகுவாக உண்ணும் மற்ற வீட்டு விலங்குகளும் மனித வியாதிகடத்தும் மிருகங்களாகத்தான் இருக்கின்றன. முக்கியமாக, சரியாக வேகவைக்காத மாட்டுக்கறியில் நாடாப்புழுக்களும், இன்னும் ஒட்டுண்ணிகளும் இருக்கின்றன. இவை 16லிருந்து 20அடி வரை மனிதனின் குடலுக்குள் வளரும். மனிதனுக்கு மிகவும் மோசமான சோகை இதனால் வரும். மற்ற வியாதிகளை சகிக்கிற பாதுகாப்பையும் வெகுவாகக் குறைக்கும். மாடுகள், ஆடுகள் மூலம் புருசெல்லோஸிஸ் என்ற வியாதி வரும். சுரம், குளிர்சுரம், வேர்த்தல், பலவீனம், உடல் வலி போன்றவைகள் வரும் இந்த வியாதி விலங்குகள் கடத்தும் பாக்டாரியாவால் பரவி வளரும் நாடுகளை வெகுவாகப் பாதிக்கிறது. ஆடுகள் கடத்தும் புருசெல்லோஸிஸ் மெலிடென்ஸிஸ் என்ற வியாதி மிகவும் ஆபத்தானது. இதனால் வரும் சோம்பேறித்தனம், களைப்பு, நடுக்கம், மன அழுத்தம் போன்றவைகள் பல நேரங்களில் பைத்தியம் என நிர்ணயிக்கப்பட்டு விடுகின்றன. கடைசியாக, ஆடு, மாடு, பசு, குதிரைகள், கோவேறுகழுதைகள் போன்ற எல்லா மிருகங்களாலும் வரும் கொடிய அந்த்ராக்ஸ் வியாதி பன்றிகளால் வருவதில்லை. பன்றிகளால் வரும் டிரிச்சினோஸிஸ் வியாதியால் யாரும் இறப்பதில்லை, சில சமயங்களில் அதன் வெளிப்படையான அறிகுறிகளும் தெரிவதில்லை. ஆனால் அந்த்ராக்ஸ் வியாதி வந்ததும், வெகுவேகமாக உடலெங்கும் கொப்பளங்களும், ரத்தம் கெட்டுப்போவதால் இறப்பும் நிச்சயமாக வருகிறது. லூயிஸ் பாஸ்டியர் 1881இல் கண்டுபிடித்த அந்த்ராக்ஸ் தடுப்புமருந்துக்கு முன்னர், ஐரோப்பாவும் ஆசியாவும் மிகவும் அதிகமாக அந்த்ராக்ஸ் வியாதியால் பாதிக்கப்பட்டு மாபெரும் மக்கள் தொகை அழிந்தது.

யாஹ்வா கடவுள் அந்த்ராக்ஸ் வியாதியை தடுக்க எந்த விதமான முயற்சியும் எடுக்கவில்லை என்பது மைமோனிடெஸ் அவர்களின் விளக்கத்துக்கு மிகவும் பலத்த அடி. ஏனெனில் அந்த்ராக்ஸ் வியாதிக்கும் இந்த மிருகங்களுக்கும் உள்ள தொடர்பு என்பது பைபிள் காலத்திலேயே அறிந்த ஒன்று. எக்ஸோடஸ் என்ற புத்தகத்தில் எகிப்தியர்களுக்கு அனுப்பிய பிளேக் வியாதி மிருக அந்த்ராக்ஸ் வியாதி அறிகுறிகளை வெகுவாக ஒத்திருக்கிறது.

…and it became a boil breaking forth with blains upon men and beast.

And the magicians could not stand before Moses because of the boils,

for the boils were upon the magicians, and upon all the Egyptians.

இந்த மாதிரி முரண்பாடுகள் இருப்பதால், பெரும்பாலான யூத மற்றும் முஸ்லீம் மதவியலாளர்கள், பன்றி வெறுப்புக்கான இயற்கை சார்ந்த அடிப்படையைத் தேடுவதை விட்டுவிட்டார்கள். யாஹ்வா என்ன மனத்தில் வைத்துக்கொண்டு சொன்னார் என்பதை அறியாமலேயே, அறிய முயற்சிக்காமலேயே, அவர் வகுத்த உணவுப்பழக்கங்களைப் பின்பற்றுவதே கடவுளின் அருளைப் பெற்றுத் தரும் என்ற வெளிப்படையான மர்ம நிலைப்பாடு சமீபத்தில் பிரபலமாகி வருகிறது.

நவீன மானுடவியலாளர்களும் இத்தகைய இக்கட்டுக்கு வந்துவிட்டார்கள். உதாரணமாக, பல தவறுகள் இருந்தாலும், மோஸஸ் மைமோனிடெஸ் அவர்கள், ‘தங்க கிளை ‘(Golden Bough) எழுதிய ஸர் ஜேம்ஸ் ஃபிரேஸரை விட, சரியான விளக்கத்துக்கு அருகில் இருக்கிறார். ஃபிரேஸர் தனது புத்தகத்தில், பன்றிகளைப் போன்ற ‘அசுத்தமான விலங்குகள் என்று கூறப்படுபவை எல்லாமே முன்பு புனிதமான மிருகங்களாக இருந்தன. அவைகளைத் தின்னாமல் இருப்பதற்குக் காரணம் அவை முன்பு புனிதமானதாக இருந்ததே ‘ என்று கூறுகிறார். இது எந்த விதத்திலும் உதவவில்லை. மத்தியக்கிழக்கில், ஆடு, மாடு, பசுக்கள் எல்லாமே முன்பு மத்தியக்கிழக்கில் வணங்கப்பட்டன. இருப்பினும் அவைகளது மாமிசத்தை, இந்தப் பகுதிகளில் இருக்கும், எல்லா இன, மத மொழிக்காரர்களும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். புனித சினாய் மலையின் அடிவாரத்தில் வணங்கப்பட்ட ‘தங்கக் கன்றுக்குட்டி ‘ பிரபலமானது. ஆகவே ஃப்ரேஸரின் சிந்தனைப்படி, யூதர்களுக்கு, பன்றியைவிட, பசுவின் கன்று மிகவும் அசுத்தமான மிருகமாகி இருக்க வேண்டும்.

அசுத்தம் என்று பைபிளிலும் குரானிலும் அறிவிக்கப்பட்ட பன்றிகளும், மற்ற மிருகங்களும், இந்தப்பகுதியில் இருந்த பல பழங்குடி கூட்டுக்குடும்பங்களின் அடையாளச்சின்னங்களாக இருந்திருக்கலாம் (Totem Symbols) என பல அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். இது பழங்காலத்தில் இருந்திருக்கலாம். அதனை ஒரு சாத்தியமாகக் கருவோமேயானால், ‘சுத்தமான ‘ மிருகங்களான ஆடு, மாடு, பசு போன்றவைகளும் அடையாளச்சின்னங்களாக இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்பதையும் யோசிக்க வேண்டும். டோடெமிஸம் (Totemism) பற்றி எழுதியிருக்கின்ற பல கட்டுரைகளைப் பார்க்கும்போது உணவாகப் பயன்படக்கூடிய மிருகங்கள் டோடம் அடையாளமாகப் பயன்படுவதில்லை என்பதையும் காணவேண்டும். ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்காவில் வாழும் பழங்குடிமக்களை ஆராய்ந்தால், அவர்களது டோடம் அடையாளம் பெரும்பாலும் பிரயோசனமில்லாத பறவைகளும் பூச்சிகளும், உதாரணமாக எறும்புகள், கொசுக்கள், மற்றும் உயிரற்ற மலைகள், பாறைகள், மேகங்கள் ஆகியவைதான் என்பதையும் பார்க்க வேண்டும். இருப்பினும், மனிதன் சாப்பிடக்கூடிய மிருகம் டோடம் அடையாளமாக இருந்தால் அதனை சாப்பிடக்கூடாது என்பது போல மாறாத சட்டம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. இப்படி எத்தனையோ இருக்கையில் பன்றி டோடம் அடையாளம் என்று சொல்வது எதனையும் விளக்குவதில்லை. ‘பன்றி தடை செய்யப்பட்டது ஏனெனில் அது தடைசெய்யப்பட்டது ‘ என்று அறிவிப்பது போலத்தான் இது.

நான் மைமோனிடெஸ் அவர்களது அணுகுமுறையை விரும்புகிறேன். குறைந்தது, ராபை (யூத மதகுரு) இதனை, இயற்கையின் பின்னணியில் அமைத்து, நோயையும் சுகாதாரத்தையும் முன்னிறுத்தி அதன் மூலம் சாதாரணமான நடைமுறை சக்திகள் வேலை செய்கின்றன என்று இந்தத் தடையை புரிந்து கொள்ள முயற்சிக்கிறார். இதில் இருக்கும் ஒரே பிரச்னை அவரது பார்வை ஒரு மருத்துவனின் குறுகிய பார்வையாக மனித உடல் ரீதியான அக்கறையாக மட்டும் நின்றுவிடுவதுதான்.

பன்றி பற்றிய புதிரை விடுவிக்க நாம் பொதுச்சுகாதாரத்தைப் பற்றிய பரந்த பார்வையையும், அதில் பல முறைமைகளையும், மிருகங்களும், தாவரங்களும், மனிதர்களும் கலாச்சார இயற்கைச்சூழ்நிலைகளில் வாழ்வதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். பைபிளும், குரானும் பன்றி வளர்ப்பதை தடை செய்யக் காரணம், பன்றி வளர்ப்பது என்பது மத்தியக்கிழக்குப் பிரதேசத்தின் அடிப்படையான கலாச்சார இயற்கை சுற்றுப்புறச்சூழ்நிலையின் கட்டுக்கோப்புக்கு மிகவும் ஆபத்தானது என்பதால்தான் என்று நான் நினைக்கிறேன். ஆரம்பத்தில், வரலாற்றின் ஆரம்பத்தில் வந்த ஹீப்ருக்கள் (ஆப்ரஹாமின் குழந்தைகள், கிமு 2000) மெசபடோமியாவுக்கும் எகிப்துக்கும் இடையே இருக்கும் வரண்ட யாருமற்ற பாலைவனப்பிரதேசத்தில் வாழ கலாச்சார ரீதியில் மிகவும் பழக்கப்பட்டவர்கள் என்பதை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். கி மு 1300இல் பாலஸ்தீனத்தில் இருக்கும் ஜோர்டான் பள்ளத்தாக்கை கைப்பற்றுவதற்கு முன்னர், ஹீப்ரூக்கள் ஆடு மாடு போன்ற கால்நடைகளை வளர்க்கும் நாடோடிகளாகவே இருந்தார்கள் என்பதையும், அவர்கள் அங்கங்கு இருக்கும் பாலைவனச்சோலைகளில் இருக்கும் விவசாயிகளுடனும் அங்கங்கு இருக்கும் ஆற்றுப்படுகையில் இருக்கும் விவசாயிகளுடனும் நெருங்கியத் தொடர்பு கொண்டவர்களாக இருந்தார்கள் என்பதையும் நாம் அறிவோம். பலநாள் தொடர்பு முதிர்ந்து ஹீப்ரூக்களும் மெதுவான, விவசாயம் சார்ந்த வாழ்க்கைமுறையைப் பின்பற்ற ஆரம்பித்தார்கள். இதுவே மெசபடோமியாவில் தங்கிய ஆப்ரஹாமின் சந்ததியினரும், எகிப்தில்

தங்கிய ஜோஸப்பின் பின்வந்தவர்களும், மேற்கு நைகரில் தங்கிய ஐஸக் அவர்களின் பின்வந்தவர்களும் கொண்ட வாழ்க்கை முறை என்பது தெரிகிறது. அரசர் டேவிட் அவர்களது காலத்திலும், அரசர் சாலமன் அவர்களது காலத்திலும் நகரம் கிராமம் போன்றவைகளும் உச்சத்தில் இருந்தாலும், ஆடு, மாடு போன்ற கால்நடைகளை மேய்ப்பதே முக்கியமான பொருளாதார நடவடிக்கையாக இருந்தது.

இந்த விவசாய, ஆடுமேய்ப்பு கலந்த பொருளாதார நடைமுறை வாழ்க்கையில், பன்றியை வளர்க்கத் தடை என்பது நல்ல சுற்றுச்சூழல் சட்டமாக தெரிகிறது. நாடோடி வாழ்க்கை வாழும் இஸ்ராயலிய மக்களுக்கு பன்றிகளை வளர்ப்பது என்பது வறண்ட பகுதிகளில் முடியாத காரியம். கிராம விவசாய சமூகங்களுக்கு பன்றிகள் ஆபத்துதானே தவிர சொத்து அல்ல.

ஆடுமாடு மேய்க்கும் மேய்ச்சல் வாழ்க்கை முறை அதிகம் இருக்கும் உலகப்பிரதேசங்கள், காடுகளற்ற பரந்த வெளிகளும், மலைகளும், மழை இல்லாமல் வறண்டு போன நிலங்களும், விவசாயத்துக்கு கடினமாக இருக்கும் பிரதேசங்களுமே. இந்தமாதிரிப்பிரதேசங்களுக்கு ஏற்ற வீட்டு விலங்குகள் மாடுகளும், ஆடுகளும்தான். ரூமினெண்ட்கள் (Ruminants) என்று சொல்லப்படும் இந்த அசை போடும் விலங்குகளுக்கு இரண்டு வயிறுகள் இருக்கின்றன. வயிற்றுக்கு முன்னால் இருக்கும் இன்னொரு பையால் புற்களையும், இலைகளையும், முக்கியமாக செல்லுலோஸ்களையும் மற்றெந்த விலங்குகளை விட சிறப்பாகச் செரிக்க முடிகிறது.

ஆனால், பன்றி அடிப்படையில் காடுகளில், நதிக்கரைகளில் உருவான ஒரு மிருகம். இது எதை வேண்டுமானாலும் சாப்பிடும் மிருகமாக இருந்தாலும், இதனது உடல் பருமனாவது செல்லுலோஸ் குறைவாகவும், புரோட்டான்கள் அதிகமாகவும் இருக்கும் கொட்டைகள், பழங்கள், தான்யங்கள் மூலம் தான். இதனால், பன்றி மனிதனுக்கு நேரிடையான உணவு எதிரியாக ஆகின்றது. இது வெறும் புற்களை மட்டும் தின்று வாழ முடியாது. உலகத்தில் எங்கும், நாடோடி மாடு மேய்ப்பவர்கள் பன்றிகளை அதிக அளவில் வளர்ப்பதில்லை. மேலும் இன்னொரு குறை, பன்றி பால் தருவதில்லை என்பது. இதனை வெகு தூரத்துக்கு ஓட்டிச் சென்று மேய்ப்பதும் கடினம்.

இதை விட இன்னும் முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. பன்றி, வெப்ப இயங்கியலின் படி (Thermodynamically) நெகெவ், ஜோர்டான் பள்ளத்தாக்கு, போன்ற பைபிள் மற்றும் குரானின் சூடான, வறண்ட தட்பவெப்பம் இருக்கும் பிரதேசங்களுக்கு கொஞ்சமும் ஒவ்வாத மிருகம். ஆடு மாடு போன்ற கால்நடைகளை ஒப்பிடும்போது, பன்றி தனது உடல் தட்பவெப்பத்தை சிறப்பான முறையில் ஒழுங்கு செய்ய இயலாத மிருகம். ‘பன்றி போல வேர்த்தல் ‘ என்ற என்பது பரவலான வார்த்தையாக வழக்கிலிருந்தாலும், பன்றி வேர்ப்பதே இல்லை என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. உலகத்திலேயே அதிகம் வேர்க்கும் மிருகமான மனிதன் சுமார் 1000 கிராம் உடல் நீரை ஒவ்வொரு மணி நேரமும் ஒரு சதுர மீட்டர் உடல்ப்பரப்பில் வேர்வையாக ஆவியாக்கி தனது உடலை குளிர்ப்படுத்திக்கொள்கிறான். ஒரு பன்றியால் அதிக பட்சம் முடிந்தது, ஒரு மணிநேரத்துக்கு, ஒரு சதுர மீட்டர் உடல்பரப்புக்கு சுமார் 30 கிராம் தண்ணீர் மட்டுமே. ஆடுகள் தங்கள் உடலிலிருந்து பன்றியை விட இரண்டு மடங்கு தண்ணீரை வேர்வையாக ஆவியாக்கி தங்களை குளிர்வித்துக்கொள்ள வல்லவை. ஆடுகளுக்கு நெருக்கமான வெள்ளையான கம்பளி உடல் முழுவதும் இருந்து சூரியனின் கதிர்களை பிரதிபலித்து, வெளிக்காற்றின் வெப்பம் உடலின் வெப்பத்திலிருந்து அதிகமாகும் போது, உடலை குளிர்வாக வைத்துக்கொள்ள உதவுகின்றன. இங்கிலாந்தில் இருக்கும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின், விவசாய ஆராய்ச்சி குழு நிலையத்தின் இருக்கும் எல். ஈ. மவுண்ட் அவர்கள், வளர்ந்த பன்றிகள் நேரடியாக சூரிய வெளிச்சத்தில் இருந்து காற்றின் வெப்பம் 98 டிகிரி பாரன்ஹீட் ஆனால் உடனே இறந்து விடும் என்று குறிப்பிடுகிறார். ஜோர்டான் பள்ளத்தாக்கில் 110 டிகிரி பாரன்ஹீட் எல்லா கோடைக்காலங்களிலும் சர்வ சாதாரணமாக வருகிறது. வருடம் முழுவதும் கொளுத்தும் வெயிலும் அடிக்கிறது.

உடலைச்சுற்றி பாதுகாக்க முடி இல்லாததாலும், வேர்க்க முடியாததாலும், பன்றிகள் தங்கள் உடலை வெளியில் இருக்கும் ஈரத்தைக்கொண்டே தங்கள் உடலை குளிர்வித்துக்கொள்ள வேண்டும். நல்ல புதிய சுத்தமான தண்ணீரிலும் சகதியிலும் புரண்டு, அதன் உடலை குளிர்வித்துக்கொள்ள முயல்கிறது. அவ்வாறு ஒன்றும் கிடைக்காத பட்சத்தில் தனது மூத்திரத்திலும், மலத்திலும் புரண்டாவது தன் உடலைக் குளிர்வித்துக்கொள்ள முயலும். 84 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்துக்கு குறைவாத இருக்கும் போது பன்றிகள் தங்கள் மலத்தையும் மூத்திரத்தையும் தாங்கள் தூங்கும், உண்ணும் இடத்துக்கு வெகு தொலைவில் கழிக்கின்றன. அதுவே 84 டிகிரிக்கு அதிகமாகிவிட்டால், பாரபட்சம் பார்க்காமல் எல்லா இடத்திலும் கழிக்க ஆரம்பிக்கின்றன. அதிக வெப்பம் ஏறினால், இன்னும் ‘அழுக்காக ‘ அவை ஆகின்றன. ஆகவே, மத ரீதியான சுத்தம் என்பது நடைமுறை உடல் ரீதியான சுத்தத்தோடு சம்பந்தப்பட்டது என்பதில் கொஞ்சம் உண்மை இருக்கிறது. ஆனால், பன்றிகளின் இயற்கையிலேயே அவை எல்லா இடங்களிலும் அழுக்கானவை அல்ல. மத்தியக்கிழக்கு பிரதேசங்களின் வெப்பமான, வறண்ட பிரதேசங்களில் தான் அவைகள் தங்களது கழிவுகளிலேயே தங்களை குளிர்வித்துக்கொள்ளவேண்டிய கட்டாயத்துக்குச் செல்கின்றன.

வெள்ளறியாடுகளும் செம்மறியாடுகளும் கம்பளியாடுகளும் மத்தியக்கிழக்கில் வீட்டுமிருகங்களாக்கப்பட்ட முதல் விலங்குகள். இவை சுமார் கிமு 9000த்தில் நடந்திருக்கலாம். சுமார் 2000 வருடங்கள் கழித்து பன்றிகள் இங்கு வீட்டு மிருகங்களாக்கப்பட்டன. அகழ்வாராய்ச்சியாளர்களால் பழங்காலத்திய கிராமக் குடியிருப்புகளை ஆராய்ந்ததில், அங்கு எலும்புகளின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும் போது, பன்றிகள் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே ( வளர்த்த மிருகங்களில் சுமார் 5 சதவீதமே) வளர்க்கப்பட்டன என்பதும் தெரிகிறது. நிழலும், சகதி குட்டைகளும் கொடுத்து, பால் கறக்க முடியாமல், மனிதன் சாப்பிடும் உணவையே சாப்பிடும் ஒரு மிருகத்தின் எண்ணிக்கை இவ்வளவுதான் இருக்கும் என்று எதிர்பார்த்தது போலவே.

முன்பு இந்துக்களின் மாடு தடையைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது நான் சொன்னது போலவே, தொழிற்சாலைசமூகத்துக்கு முன்னர் இருந்த விவசாயச் சமூகங்களில், மாமிசத்துக்காக மட்டும் வளர்க்கப்படும் மிருகங்கள் ஒரு ஆடம்பரச் செயல். இது தொழில்மய சமூகத்துக்கு முன்னர் இருந்த மேய்ச்சல் சமூகத்துக்கும் பொருந்தும். மேய்ச்சல் சமூகங்களும், தங்கள் மிருகங்களை வெறும் மாமிசத்துக்காக மட்டும் வளர்ப்பதில்லை.

கலப்பு விவசாயமும், மேய்ச்சலும் பண்ணிக்கொண்டிருந்த பழங்காலத்திய மத்தியக்கிழக்கு சமூகங்களில், வீட்டு மிருகங்கள் அவைகளது பாலுக்காகவும், பாலாடைக்கட்டிக்காகவும், தோலுக்காகவும், சாணத்துக்காகவும், உழுவதற்கு உதவுவதாலும் மதிக்கப்பட்டன. ஆடுகளும், மாடுகளும் இந்த தேவைகளைக் கொடுத்து அதன் மேல் அவ்வப்போது மாமிசமும் கொடுத்தன. ஆகையால், ஆரம்பத்திலிருந்தே பன்றிக்கறி அதன் மென்மையான, ருசியான, கொழுப்பான தன்மையால், ஆடம்பர உணவாக இருந்திருக்க வேண்டும்.

கிமு 7000த்திலிருந்து கிமு 2000 வரை பன்றிக்கறி இன்னும் ஆடம்பரமானதாக ஆனது. இந்தக் காலகட்டத்தில் மத்தியக்கிழக்கில் இருக்கும் மக்கள்தொகை 60மடங்கு அதிகரித்தது. பரந்துபட்ட காடு அழிப்பும், அதிகமான மக்கள் தொகையும், நிரந்தரமாக ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் இல்லாமல் அழிக்கப்பட்ட மேய்ச்சல் நிலங்களும் பிரச்னையை தீவிரப்படுத்தின. பன்றி வளர்ப்புக்குத் தேவையான நிழலும் தண்ணீரும் தொடர்ந்து குறைந்தன. ஆகவே சுற்றுச்சூழலுக்கும், பொருளாதாரத்துக்கும் இன்னும் ஆடம்பரமான பொருளாக பன்றிக்கறி ஆனது.

மாட்டுக்கறி சாப்பிட இருந்த தடை போலவே, பன்றிக் கறி உண்ணுவதைத் தடை செய்யவும் இது தான் காரணம் : அதிக அளவு ஒரு விஷயத்தில் ஆர்வம் எழுந்தால், அதனைக் கட்டுப்படுத்த கடவுள் பெயரைச் சொல்லித் தான் தடை செய்ய வேண்டும். பாலுணர்வு ஆர்வங்களான, குடும்பத்துக்கு வெளியே பாலுறவு கொள்வதையும், மிக நெருங்கிய உறவினர்களுடன் கொள்ளும் பாலுறவு போன்றவற்றையும் தடை செய்ய ஏன் கடவுள்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை விளக்க மேற்கண்ட தொடர்பை பொதுவாக ஒப்புக்கொள்கிறார்கள். நான் இங்கே அதே வாதத்தை ஆர்வம் உண்டாக்கும் உணவுக்கும் உபயோகப்படுத்துகிறேன். மத்தியக்கிழக்குப் பிரதேசங்கள் பன்றி வளர்க்க தவறான இடங்கள். ஆனால் பன்றிக்கறி மிகவும் ருசியான உணவு. மக்கள் தங்களுக்குத் தாங்களாகவே இது போன்ற ஆவல்களைக் கட்டுப்படுத்த இயலாதவர்களாக இருக்கிறார்கள். எனவே யூதர்களின் கடவுள் யாஹ்வா ‘சாப்பிட மட்டுமல்ல, தொடவும்

கூட பன்றி அசுத்தமானது ‘ என்று சொன்னால் மக்கள் கேட்பார்கள். அல்லாவும் இதே செய்தியை இதே காரணத்துக்காகச் சொல்லக் கேட்கிறார்கள். சுற்றுச்சூழல்படி, அதிக அளவில் பன்றிகள் வளர்ப்பது சூழலுக்குப் பொருந்தாதது. சிறிய அளவில் வளர்ப்பது ஆவலை அதிகரிக்கும். இதை விடச் சிறந்தது, பன்றி சாப்பிடுவதையே நிறுத்திவிட்டு, ஆடுகளையும், மாடுகளையும் வளர்க்க மனத்தைச் செலுத்துவது. பன்றிகள் சாப்பிட ருசியாக இருக்கின்றன. ஆனால் அவைகளுக்குச் சாப்பாடு போட்டு, அவைகளைக் குளிராக வைத்திருப்பதற்கு சமூகம் தர வேண்டிய விலை மிகவும் அதிகம்.

பல கேள்விகள் இன்னும் இருக்கின்றன. ஏன் மற்ற பல உயிரினங்கள் (கோட்டான், வல்லூறு, கழுகு, பாம்புகள், நத்தைகள், செதிள் இல்லாத மீன்கள், ஓடுடைய மீன்கள், இப்படி நிறைய) பைபிளில் மத ரீதியாகத் தடை செய்யப்பட்டிருக்கின்றன என்பது. மத்தியக்கிழக்கிலும் அதன் சுற்றுப்புறங்களில் வாழாத பல முஸ்லீம்களும் யூதர்களும் ஏன் இந்த மத ரீதியான பழங்காலத்திய சாப்பாட்டு தடைகளை (சிலர் தீவிரமாக இல்லாமலும், சிலர் தீவிரமாகவும்) இன்னும் பின்பற்றுகிறார்கள் என்பது. பொதுவாக எனக்குத் தெரிவதென்னவென்றால், இவ்வாறு தடை செய்யப்பட்ட உயிரினங்கள் இரண்டு பகுதியாகப் பிரிக்கலாம். வல்லூறுகள், கழுகுகள் போன்றவை உணவுக்கு அதிகமாகப் பிரயோசனப்படாதவை. ஓடுடைய மீன்கள் போன்ற மற்றவை, கலப்பு விவசாயம் செய்யும் மேய்ச்சல் சமூகமான மத்தியக்கிழக்கில் கிடைக்காதவை. இந்த இரண்டு வகைகளும் நான் முன்பு எழுப்பிய கேள்விக்கு (எப்படி வீணான, புரிந்து கொள்ளமுடியாத உணவுப்பழக்கங்களை விளக்குவது என்பதற்கு) சம்பந்தமற்றவை. மதிய உணவுக்கு கழுகைத் தேடி ஓடாமல் இருப்பதிலோ, அல்லது 50 மைல் பாலைவனத்தில் நடந்து சென்று ஒரு தட்டு ஓடுள்ள மீன்களை தேடிப்போகாமல் இருப்பதிலோ எந்த விதமான பகுத்தறிவுக்குப் புறம்பான விஷயமும் இல்லை.

எல்லா மத ரீதியான உணவுப்பழக்கங்களுக்கும் சமூக சுற்றுச்சூழல் காரணம் இருக்கும் என்பதை மறுக்க இதுவே சரியான இடம். தடைகளுக்குச் சமூக வேலைகளும் இருக்கின்றன. மக்கள் தங்களை ஒரு குழுமத்துடன் அடையாளம் செய்து கொள்ளவும் இந்தப் பழக்கங்கள் பயன்படுகின்றன. மத்தியக்கிழக்குக்கு வெளியே இருக்கும் யூதர்களும், முஸ்லீம்களும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள இது போன்ற உணவுப்பழக்கங்கள் பயன்படுகின்றன. இந்த நடைமுறைப் பழக்கங்களைக் கேள்வி கேட்க வேண்டுமெனில், இந்த உணவுப்பழக்கங்கள் மூலம், இந்த யூதர்களுக்கும், முஸ்லீம்களுக்கும், வேண்டிய உணவு கிடைக்காமலும், இந்த உணவில் இருக்கும் அடிப்படை உணவுகளை வேறு முறையில் பெற்றுக்கொள்ள முடியாமலும் இருக்கின்றனவா என்றும் கேட்க வேண்டும். பதில் பெரும்பாலும் இல்லை என்பதுதான். பன்றிக்கறி இல்லாமலேயே அவர்கள் தங்களுக்கு வேண்டிய உணவைப் பெற்றுக்கொள்ளும் சூழ்நிலை எல்லா இடங்களிலும் இருக்கின்றன.

இதே நேரத்தில் நான் இன்னொரு தவிப்பையும் தவிர்க்கவேண்டும். எல்லாவற்றையும் விளக்கத்துடிக்கும் தவிப்புத் தான் அது.. பன்றி வெறுப்பவர்களைப் பற்றி இன்னும் அதிகமாகப் புரிந்து கொள்ள, புதிரின் மறுபக்கமான, பன்றியை மிகவும் விரும்புபவர்களைப் பற்றிப் படிக்கும் போது தான் தெரியும் என்று நான் நினைக்கிறேன்.

(அது அடுத்த வாரம்)

Series Navigation