Toronto International Film Festival 2007

This entry is part [part not set] of 40 in the series 20071101_Issue

ரதன்


2007 சிறு சரித்திரம்
ஆரம்பம்: 1976 – Windsor Arms Hotel, 18 St. Thomas St, Toronto
குறிப்பிடத்தக்க சாதனைகள்: கனடாவின் மிகப் பெரிய 100 வேலை செய்வோர் நிறுவனங்களுள் ஒன்று. இந்தப் படடியலில் இடம் பெற்ற ஒரேயொரு கலை சார்ந்த நிறுவனம். உலகின் இரண்டாவது மிகப் பெரிய திரைப்பட விழா. வுட அமைரிக்காவின் மிகப் பெரிய திரைப்பட விழா.
.இந்த விழா மிக அரிதாக, சிறந்த படங்களை தயாரிக்கும் நாடுகளையும், நிறுவனங்களையும் விட்டுவைப்பதில்லை. பெரும்பாலான திரைப்பட முகவர்களது தேர்வு செயுயும் களமாக இப்பட விழா அமைந்துள்ளது. இவ் விழாவில் திரையிடப்படும் 70 விகிதமான படங்கள் மற்றைய வடஅமைரிக்கா திரைப்பட விழாக்களில் காட்டப்படுகின்றன.
ஆரசியல் படங்களுக்கு முக்கிய இடமளிக்கப்டுகின்றது என்ற விமர்சனம் ரொரன்ரோ விழாவிற்கு ஒல்வொரு வருடமும் முன்வைக்கப்படுகின்றது. இவ் வருடமும் ஈராக் போர் பற்றிய விமர்சனப் படங்கள் திரையிடப்படுகின்றன.
சுமார் 500 திரைப்படப் படைப்பாளிகள், 1000 க்கு மேற்பட்ட பத்திரிகையாளர்கள், 3000 க்கு மேற்பட்ட வேற்று நாட்டு-நகர பார்வையாளர்கள் என நகரம் நிரம்பியுள்ளது.
2005 ம் ஆண்டு கனடா குறுந்திரைப்படப் பிரவில் ரேணுகா ஜெயாபலனது டீஐபு புஐசுடு என்ற 14 நிமிட படத்துக்கு சிற்ந்த பட விருது கிடைத்தது.
உலகின் சிறந்த திரைப்பட விழாக்கள்
“A” Festivals: The festivals in Cannes, Venice, Berlin, Sundance,Toronto, Shanghai, Rotterdam, Moscow, San Sebastian, Montréal, Locarno (since 2002), Karlovy Vary.
Four Women Adoor Gopalakrishnan
Naalu Pennungal
Production Company: Adoor Gopalakrishnan Productions/ Emil & Eric Digital Films Pvt.Ltd.
Executive Producer: Adoor Gopalakrishnan
Producer: Adoor Gopalakrishnan, Benzy Martin
Screenplay: Adoor Gopalakrishnan, based on the short story by Thakazhi Sivasankara Pillai
Cinematographer: M.J. Radhakrishnan
Editor: B. Ajithkumar
Production Designer: Adoor Gopalakrishnan
Sound: N. Harikumar
Music: Isaac Thomas
Principal Cast: Nandita Das, Geetu Mohandas, Padmapriya, Manju Pillai, Kavya Madhavan

இவ் வருட விழாவில் பல நல்ல திரைப்படங்களை பார்க்கும் சந்தாப்பம் கிடைத்தது. (இது வரை “சிவாஜி” யை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை, பார்க்கும் நோக்கமும் இல்லை.) நுழைவுச் சீட்டுக்காக சுமார் இரு மணிநேரம் காத்திருந்தது, இதுவல்ல முதல் தடைவை. ஆப்படியிருந்தும் அடுரின் படத்துக்கு நுழைவுச் சீட்டு கிடைகடகவில்லை. புதன் கிழமை அதி காலை எழுந்து சென்று ஒருவாறு நுழைவுச் சீட்டு பெற்று படத்தை பார்த்தேன்.
அடுரது குறிப்பிடத்தக்க படங்கள்
1972 – சுயம்வரம்
1977 – கோட்டயம்
1981 – எலிப்பந்தாயம்
1984 – முகாமுகம்
1987 – – Anantharam (Monologue)
1989 – மதிலுகள்
1993 – விதயன்
1995 – கதாபுருசன்
2000 – – Kalamandalam Gopi (documentary)
2003 –நிழல் குத்து Nizhalkkuthu (Shadow Kill)
2007 – நாலு பெண்கள்

இப் படத்தில் இந்தியாவின் மிக முக்கிய நடிகைகள் நடித்துள்ளனர். முலையாளத்தின் மிக முக்கிய முண்ணனி நடிகை காவ்யா மகாதேவன், சர்வதேச திரைப்படச் சூழலில் நன்கு அறியப்பட்ட நந்திதா தாஸ், பத்மப்பிரியா, கீது மோகனதாஸ் போன்றோர் நடித்துள்ளனர்.
செம்மீன் என்ற படம் சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் வெளிவந்தது. இதன் மூலப்பிரதி தகழி சிவசங்கரப்பிளளை எழுதிய நாவல். இதன் பின்னர் இவரது பல நாவல்கள் படமாகியுள்ளன. அடுர் இவரது நான்கு சிறு கதைகளை நாலு பெண்கள் என்ற பெயரில் படமாக்கியுள்ளார்.
விபச்சாரி
இது முதலாவது கதை. தெருவோரத்து விளிமபு நிலை மக்களைப்பற்றியது. தெரு வோரத்தில் வசிக்கும் இருவர் கணவன் மனைவியாகின்றனர். இவர்களது திருமணம் என்பது வாக்குறிதியே. ஓரு நாள் பொலிஸ்இவர்கள் கடைத் தெருவில் விபச்சாரம் செய்ததாக இவர்களை கைது செய்கின்றது. இவர்கள் கணவன் மனைவி என்கின்றனர். அத்தாட்சி கேட்கின்றனர். இவர்களால் நீருபிக்க முடியவில்லை. சட்டம் இவர்களுக்கு தண்டனை வழங்குpகின்றது.
வுpதவை.
இது இரண்டாவது கதை. ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்து குடும்பம். ஒரு வாறு தேடி பெற்றோருக்கு ஓரே யொரு ஆண் மகனை மாப்பிளையாக்குகின்றனர். திருமணத்து அன்றே தனது கடைக்கு வியாபாரத்துக்கு செல்கின்றார். பின்னர் சகல வீடுகளிலும் விருந்துண்டு விட்டு அசந்து தூங்குகின்றார். இவர்கள் கணவன் மனைவியாக வாழிவில்லை. விருந்துகள் முடிந்த பின்னர், மனைவியை மனைவியின் பெற்றோர் வீட்டில் விட்டு சென்று விடுகின்றார். விவாகரத்து வேண்டும் என மாப்பினை கேட்கின்றார். பெண் வீட்டார் சீதனக் காசை திரும்ப கேட்கும் பொழுது, மாப்பிளை வீட்டாரும் தமது பங்கிற்கு செலவுக்காசை திரும்பத் தருமாறு கேட்கின்றனர்.
இது போன்ற பல சம்பவங்கள் கனடாத் தமிழர்கள் மத்தியில் பிரபல்யம்.
குடுமபத்து பெண்
இது மூன்றாவது கதை. திருமணமாகி பல வருடங்களாகியும் பி;ள்ளைகள் இல்லை. பிள்ளை பல சமயங்கிளில் உருவாகி கலைந்து விடுகின்றது. இல்லையேல் பிறந்து இறந்து விடுகின்றது. நீண்ட காலத்துக்கு பின்னர் ஊருக்கு வரும், மனைவியன் பள்ளித் தோழனும் ஊர்க்காரரும், பிள்ளளை பிறக்காததிற்கு கணவனே காரணம் என கூறுகின்றாhன். துன்னுடன் இசைந்தால் பிள்ளை பிறக்கும் என ஆசை காட்டுகின்றாhன். முனைவி மறுத்து விடுகி;ன்றாள்.
நாலவது கதையில் குடும்பத்து மூத்த பெண்ணிற்கு கடைசிவரை திருமணம் நடக்கவில்லலை. முதிலில் பெண் பார்க்க வரும் மாப்பிளை தங்கையை விரும்புகின்றான். புpன்னர் தம்பி, அதன் பின்னர் இறுதி தங்கை திருமண்ம் செய்து கொண்டு செல்கின்றனர்.
இக் கதைகள் 1940 க்கும் 1960க்கும் இடைப்பட்ட காலத்தை பிரதிபலிக்கின்றது. முதல் இரண்டு கதைகளில் இருந்த அழுத்தம் இறுதி இரு கதைகிளில் இல்லை. மூன்றாவது கதை மிகவும் பலவீனமானது. இறுதி;க் கதையை பல வர்த்தக சினிமாக்கிளல் காணவாம். முதல் இரண்டு கதைகளும் மிக முக்கியமானவை. இக்கதைகளுக்கிடையில் வர்க்க வேறுபாடுகளையும் பதிவாக்கியுள்ளார். முதலாவது கதை கீழ் நிலை மக்கனைளப் பற்றியது. புpன்னர் சாதரண குடும்பம், அதன் பின்னர் நடுத்தர மக்களது கதைகள்.
முதாலவது கதையில் திருமணம் என்பது அவர்களது ஒரு வாக்குறிதியே. இதனை அவர்கள் மிகவும் நேர்மையாக கடைப்பிடிக்கின்றனர். இங்கு பந்தல் இல்லை ஆடம்பரங்கள் இல்லை.
இரண்டாவது கதையில் ஒரே மகனை எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் வளர்த்தேன் என தாய் பெருமைப்படுகின்றார். ஆனால் இவரால் இல்லற வாழ்வில் ஈடுபட முடியவில்லை. இது பொதுவாக “பொத்தி பொத்தி வளர்ப்பதன் விளைவு” என விமர்சிக்கின்றார் அடூர். இந்த நிலை நடுத்தர மக்களுது சாதாரண குணாம்சம்.
புடத்தின் பின்னர் அடூருடன் நீண்ட நேரம் சந்நிக்கும் சந்;தர்ப்பம் கிடைத்தது. அவர் கூறிய சில விடயங்கள் முக்கியமானவை. கீழ் நிலை மக்கள் கலாச்சாரம் என்பது பற்றி தீவிரமாக சிந்திப்பதிலலை. எது சரிpயோ அதனைச் செய்வார்கள். மேல் தட்டு மக்கள் “Don’t Care”.நடுத்தர மக்கள் மாத்திரமே இந்த விழுமியங்களை ஒழுங்காக கடைப்பிடிப்பார்கள். இதனையே இவர் படத்தில் பதிவாக்கியுளள்hர். ஆனால் கதைகள் அனைத்தும் பெண்களைப்பற்றியது. குhலங்கள் பல கடந்ந பின்னரும் காட்சிகள் மாறவில்லை. இதனை இவரது கதாபுருசன் என்ற படத்தில் முதல் காட்சியில் உருவகமாக்கியுள்ளார். காலங்கள் பல உருண்டாலும் பிரச்சினைகளின் வடிவங்கள் மாறினாலும், கரு மாறுவதில்லை.
குறயீட்டுக காட்சிகள் இவரது படங்களிpல் மிகவும் பிரபல்யம். இரண்டாவது கதையில் மாப்பிளை சோறு உண்ணும் காட்சி பார்வையாளர்களை பலரை சல சலக்க வைத்தது. அத்துடன் அந்த பாத்திரத்தின் மேல் ஓர் வெறுப்பiயும் ஏற்படுத்தியது. இதே சோறு சாபபிடும் காட்சி கடைசிக் கதையிலும் வருகி;ன்றது. இப்பொழுது இது ஓர் அழகான கவிதையாக மலர்ந்துள்ளது. பேண் சோற்றை அலையும் காட்சி நடந்து முடிந்த சம்பவங்களை கோடிட்டு காட்டுகின்றது.
வுர்த்தக சினிமாவில் தொழில் நுட்பம் மிகவும் சிறப்பாக அமையும். புல நல்ல தேர்ந்த படைப்பாளிகள் உள்ளனர். அடூர் இப்படத்தில் ஒளிப்பதிவு கேரளாவின் கொல்லைப்புறத்தை சிறப்பாக பதிவு செய்திருந்தாலும், பல இடங்களில் ஒளி ஏற்ற இறக்கங்கள் காட்சிப்படமங்களில் குறைபாட்டை ஏற்படுத்தியுள்ளன. இதனை இவர் விமர்சனமாக ஏற்றுக் கொள்கின்றார்.
இவரது முன்னைய படங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை அல்லது அதிர்வை, இல்லையேல் ஓர் குற்ற உணர்வின் பாதிப்பை இப்படம் ஏறபடுத்தவில்லை.

Eastern Promises LA ZONA JUNO BODY OF WAR ENCARNACIÓN

இப் படம் சிறந்த மக்கள் தெரிவுப் படமாக தேர்வு செய்யப்பட்டது. லண்டனில் வாழும் ருசிய மக்களிடம் நிலவும் வன்முறைகளை கருவாகக் கொண்டது. அனா லண்டன் வைத்தியசாலை ஒன்றில் பிள்ளை பேறு மருத்துவ தாதி யாக வேலை பார்க்கின்றார். இவர் தனது தாயுடனும், மாமாவுடனும் வசித்து வருகின்றார். இவரது வைத்தியசாலையில் ஒர் இளம் (14 வயது) ருசிய யுவதி குழந்தை ஒன்யை பெற்றுவிட்டு இறந்து விடுகின்றாhள். இவளிட்ம் இருந்து பெறப்பட்ட ஒன்று, ருசிய மொழியில் எழுதப்பட்ட அவளது நாட்குறிப்பு. அதில் ஓர் உணவு விடுதி ஒன்றின் விராசமும் எழுதப்பட்டிருந்தது. அங்கு அனா செய்மனை சந்திக்கின்றாள். சேய்மன் ஓர் வன்முறைக் குடும்பத்தையே நிர்வகிக்கிள்றான். இளம் யுவதியின் நாட்குறிப்பு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட பொழுது, அப் பெண்மணியின் பிரசவத்துக்கு பின்னால் உள்ள அவலங்களை மாத்திரமல்ல, ஓர் பெரிய வன்முறைக் குழுமத்தின் பரிமாணங்களையும் அனா இணம் காண்கின்றாள்.
ரொரண்ரோவில் பிறந்த னுயஎனை ஊசழநெnடிநசப இப்படத்தின் இயக்குனர். இவர் வன்முறை வாழ்;வின் அவலங்களையும், குழப்பமான மனோநிலையில் உலவும் பாத்திரங்களையும் எம்முன் கொண்டுவந்துள்ளார். இவர் ஓர் மிகச் சிறந்த கதை சொல்லி. இதுவே இப்படத்தின் மிகச்சிறப்பம்சமாகும். தொடாச்சியான வன்முறைகளில் வாழ்ந்து வரும் எமது சமுதாயத்துக்கு மிக முக்கிய படமாகும். குறிப்பாக இப்படத்திவ் உடல் குறியீட்டு(Tattoo)வன்முறைகளின் விகாரங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

http://www.tiff07.ca/filmsandschedules/filmdetails.aspx?id=706221442531386

La Zona

2007 ம் ஆண்டின் சர்வதேச விமர்சகர்களின் விருதைப் பெற்றுக் கொண்டது இப்படம்.
மெக்சிக்கோவின் அதி உயர் வர்க்க மக்கள் வாழும் பகுதியில், சுற்றிவர வேவு பார்க்கும் கமாரக்கள், பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் காவல் காக்க ஏழை மக்கள் வாழகின்றனர். யுடநதயனெசழ ன் பிற்ந்த நாளன்று இப்பதுதியில் புகந்த மூன்று சிநுவர்கள் கொள்ளையடிக்கின்றனர். ஓர் முதிய பெண்மணி கொல்லப்படகிள்றார். அவ் வீட்டின் தாதி தப்பி, பாதுகாவலர்;களுக்கு தகவல் கொடுக்கின்றார். காவலர்கள் இருவரை சுட்டுக் கொன்று விடுகின்றனர். ஒருவன் தப்பி இந்த பகுதியின் நடுமையத்துக்கு செனறு விடுகின்றான். முதிலில் அப்பகுதி மக்கள் இது பற்றி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கவில்லை. ஆனால் பின்னர் தமது புத்தியை காட்டிவிடுகின்றனர். இதற்கிடையில் Alejandro மூன்றாவது சிறுவன் தனது நில்க்கீழ் அறையில் ஒளிந்திருப்பதை கண்டு கொள்கின்;றாhன். காலப்போக்கில் Alejandro அச் சிறுவனின் நல்ல குணங்களை அறிந்து கொள்கின்றான். ஆத்துடன் தான் வாழும் உயர் சமூகத்தின் மிக மோசமான குணங்களை அறிந்து கொள்கின்றான். ஆவர்களுக்கு எதிராக குரல் கொடுக்கின்றான். உயர் சமூகம் தனது குணத்தை காட்டிவிடுகின்றது.
இயக்குளர் David Cronenberg உருகுவேயில் பிறந்து மெக்சிககோவில் கல்வி கற்றவர். மெக்சிக்கோவின் வர்க்க வேறுபாடுகளை தௌ;ளத் தெளிவாக மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ள்hர். ஓர் பணக்கார வர்க்கம் வாழும் பகுதியில் சேரி மக்களாக வாழும் மக்களின் மீதான வன்முறைகள், கொடூரங்கள், பண்பற்ற செயற்பாடுகளை கண்முன்னே கொண்டுவந்துள்ளார்.
மிகச்சிறப்பான ஒளிப்பதிவு, திரைக்கதை போன்றவை இயக்குளரின் பார்வையை விரிவடையச் செய்துள்ளது.
இவ்விழாவின் மிகக் குறிப்பிடத்தக்க படம்.
4 MONTHS, 3 WEEKS AND 2 DAYS

ருமேனியாவில் இடது சாரிகளின் ஆட்சியின் போது கருக்கலைப்பு தடை செய்யப்படடிருந்தது. ஒரு இளம் பெண்மணி நான்கு மாதங்கள், மூன்று கிழமைகள், இரு நாட்களாக வளர்ந்த கருவை தாங்கி, தனது நண்பர் பரிந்துரை செய்த வைத்தியரிட்ம் வருக்pன்றாள். அவளுக்கு உதவியாக் அவளது நண்பியும் தங்குகின்றாள். இளம் பெண் கருவின் காலத்தை வைத்தியரிடமிருந்து மறைத்து விடுகின்றாள். வைத்தியர் சட்ட ரீதியாக் செய்யமுடியாத கருக்கலைப்பை செய்வதற்கு பணத்துடன், இறுதித் தவணையாக இரு இளம் பெண்களுடனும் உறவு கொள்ள வேண்டும் எனவும் கேட்கின்றான்.
மாற்று சினிமாவுக்குரிய பல அம்சங்களுடன் இப்படம் மலர்ந்துள்ளது. மிகக் குறைந்த இசை, ஒளி போன்றவுடன், தேர்ந்த நடிபபும் இப்படத்தை சிறப்படையச் செய்கின்றது. கான்ஸ்ஸில் சிறந்த படமான தேர்வு செய்யப்பட்ட இப்படம், இடது சாரி அரசுகளை பெரும் கவனம் செலுத்தியுள்ளது.

The Pope’s Toilet

இயக்குனர்கள் Enrique Fernández, César Charlone
உருகுவே-பிரேசில் எல்லையில் உள்ள உருகுவே நகரம் மெலோ. அங்கு 1988 ல் போப்பாண்டாவர் வருகை தந்ததர். ஆதையொட்டி பெருவாரியான மக்கள் பிரேசிலில் இருந்து இந்த நகரத்தை நோக்கி வருவர்ர்கள் என்பதனால் அவ்வுர் மக்கள் பல வழிகளிலும், தமது வியாபாரத்ததை பெருக்க நினைக்கின்றனர். கேக், சோசேச் போன்றனவற்றின் விற்பளை அதிகமாகும் என கனவு காண்கின்றனர். ஊéளயச வுசழnஉழளழ வித்தியாசமாக நினைக்கின்றான். இவ்வாறு வரும் மக்களுக்கு மல சலம் கழிக்க மலசல கூட்ம கட்ட நினைக்கின்றார்ன். இதன் மூலம் பல வழகளில் தமது குடும்பத்திற்கு உதவி செய்யலாம் என கணவு காண்கின்றான். அவர்கள் இதற்காக பல இன்னல்களை எதிர் நேர்க்குகின்றார்கள்.

ஓர் Documentary முறையில் பதிவு செய்யப்பட்டுள்ள இப்படமும், மத நம்பிககைகளையும், ஏழமையையும் பதிவு செய்கி;ன்றது. வித்தியாசமான முயற்சி இது.

Unfinished Stories Iran
Director Pourya Azarbayjani

ஒரு நாள் நடு இரவில் தெகரான் தெரு ஒன்றில் எங்கு செல்வது என்று தெரியாது, திண்டாடும் மூன்று பெண்களது அவல வாழ்வை இந்தப் படம் பதிவு செய்துள்ளது.
ளுநவயசநா சுதந்திரமான இளம் பெண். தனது காதலை எதிர்ககும் பெற்றோருக்கு எதிராக வீட்டை விட்டு வெளியேறுகின்றாள். தனது காதலனுடன் எங்காவது சந்தோசமாக வாழவேண்டும் என்பது இவளது எண்ணம்.
ர்நபெயஅநா கருவுற்றுள்ளாள். இவளது கணவன் இவளுக்கு எற்த ஆதரவும் இல்லை. தனது கருவை எப்படியாவது கலைத்துவிட வேண்டுமென்பதற்காக வீட்டை விட்டு வெளியேறுகின்றாள்.
ளுயiனைநா க்கு இப்பொழுது தான் பி;ள்ளை பிறந்துள்ளது. வைத்தியசாலைக்கு பணம் கட்ட பணம் இல்லை. செய்வதறியாது உடன் பிறந்த பிள்ளையுடன் வீதிக்கு வருகின்றாள்.
இம் மூவரும் சந்திக்கும் இடம் மாத்திரம் ஒன்றல்ல. இவர்களது பிரச்சினையின் வடிவங்கள் வேறானாலும், பிரச்சினைகள் ஒன்றே. ஈரானிய பெண்கள் மேல் மீது கட்டவிழ்க்கப்பட்டுள்ள வன்முறைகளை இப்படம் வெளிச்சம் போட்டு காட்டுகின்றது. இயக்குளரின் முதலாவது பட்ம் என நம்பமுடியாதுள்ளது.

Buddha Collapsed Out of Shame Iran
Director Hana Makhmalbaf

At Five in the Afternoon  MakhmalbaFஒரு கவிஞர். இவரது சகோதரி Samira Makhmalbaf யும் ஓர் இயக்குளர் (At Five in the Afternoon )இவர்களது தாயார் Marziyeh Meshkini, The Day I Became a Woman என்ற பல சர்வதேச விருதுகளை பெற்ற படத்தை இயக்கியுள்ளார். இவர்களது தந்தை Mohsen Makhmalbaf பல ஈரானிய படங்களை இயக்கியுள்ளார். இவரது ஜந்து படங்கள் ஈரானில் தடைசெய்யப்பட்டன. இன்று வரை இரண்டு படங்களின் தடை நீக்கப்படவில்லை.

The Nights of Zayande-rood (1990), banned since 1990
Bread and Flower-pot (1995), banned from 1995 until 1997
The Silence (1997), banned from 1997 until 2000
Naser-ed-din Shah (1991)

2001 ல் வெளிவந்த Kandahar மொசீனின் குறிப்பிடத்தக்க படம். மொசீனீன் – மரீசியா வின் கடைசி மகளே Hana.
Hana வின் முதலாவது படம் இது. ஏற்கனவே பல குறும் படங்களையும் இவர் இயக்கியுள்ளார்.
ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள், தலிபானால் அழிக்கப்பட்ட புத்தர் சிலையின் கீழ் ஆப்கான் மலையில் குகைகளில் வாழ்கின்றனர். இவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் மிகவும் பின் தங்கிய நிலையில் வாழ்கின்றனர். இவர்கள் ஆறு வயது பாக்ரே என்ற சிறுமிக்கு, அவளது கைக் குழந்தை சகோதரியை பார்க்க வேண்டியது முக்கிய வேலை. அவளது கவனத்தை திருப்பும் குரல் முன்னால் குகை சிறுவனது. இவன் பாடப் புத்தகம் படிக்கின்றான். சிறுமிக்கும் படிக்க ஆசை. அவள் படிப்பதற்கு நோட் புக் தேவை. ஆதற்கு காசு தேவை. வீட்டில் உள்ள முட்டைகளை விற்றால் புத்தகம் வாங்கலாம். ஆந்த சிறுமி பண்டமாற்று வியாபாரியாக மாறிவிடுகின்றாள். இறுதியாக நோட் புக் வாங்கிவிடுகின்றாள். இப்பொழுது பள்ளிக்கு செல்ல வேண்டும். சிறுவனுடன் பள்ளிக்குச் செல்கின்றாள். அது ஆண்கள் பாடசாலை, அங்கே அவளை அனுமதிக்க மறுக்கின்றார்கள். பேண்கள் பாடசாலைக்கு மறு கரைக்குச் செல்ல வேண்டும். இறுதியாக அங்கே சென்று ஒருவாறு ஓர் வகுப்பறையில் அமர்ந்து கொல்கின்றாள். எழுதுவதற்கு அவளிடம் பென்சில் இல்லை. ஆனால் தாயின் லிப்ஸ்ரிக் உண்டு. அதனால் எழுதத் தொடங்கி இறுதியில் பல சிறுமிகளின் முகத்தை இந்த லிப்ஸ்ரிக் அழங்கரிக்கின்றது. கரும்பலகையில் தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கும் ஆசிரியை. சடுதியாக திரும்பிப் பார்க்கின்றாள். சிறுமி வகுப்பறையை விட்டு வெளியேற்றப்படுகின்றாள். ஆனைத்து சிறுமிகளும் முகத்தை கழுவிக் கொள்கின்றனர்.

சிறுமி வீடு திரும்பும் வழியல் ஒரு சிறுவர் கூட்டம் வழிமறிக்கின்றது. இச் சிறுவர்கள் தங்களை தலிபான்கள் போல் கற்பனை செய்து கொள்கின்றார்கள். இப்பொழுது இந்த சிறுமியை கற்களால் எறிந்து கொள்ள வேண்டும், இல்லையேல் அமெரிக்கர்கள் போல் சுட்டுக் கொல்ல வேண்டும் என தீர்மானிக்கின்றார்கள். ஒரு கிடங்கினுள் சிறுமியை நெஞ்சளவிற்கு புதைக்கின்றார்கள். ஒருவாறு அங்கிருந்து சிறுமி தப்பி வீடு செல்கின்றாள்.

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களில் கூட லிப்ஸ்ரிக் காணப்படுகின்றது. தலிபானால் இது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இவற்றையும் மீறி இவ்வாறான பொருட்கள் புகுந்துவிடுகின்றன. வுன்முறைகள் எவ்வாறு ஓர் சமுதாயத்தை அழிக்கின்றன எனபதற்கு இப்படம் ஓர் எடுத்துக்காட்டு. பாடசாலை பாடங்களை கற்பதுடன், சமூக நடைமுறைகளையும் அவர்கள் அதி கூடுதலாக கற்கின்றனர். இதுவே இச் சிறுவர்களது வாழ்வாக மாறிவிடுகின்றது.

ஆப்கான் பாமியன்( Bamian) கிராமத்தில் சில வருடங்களுக்கு முன்னர் பல நூறு ஆண்களும், சிறுவர்களும் இவர்களது தாய்க்கும், மனைவிமாருக்கும் முன்னிலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். ருசிய படைகளின் வன்முறைகளின் பின்னர், தலிபான், பின்னர் அமெரிக்க படைகள் என இவர்களது வாழ்வு தொடர்ச்சியான வன்முறை சமுதாயத்தின் தொடர்ச்சியாகவுள்ளது. “அமெரிக்க பிள்ளளைகள் போல் இவர்கள் கொலிவ+ட்; படங்கள் மூலம் வன்முறைகளை கற்கவில்லை. இவர்கள் தங்களது கண்முன் நிகழ்ந்த அனர்த்தங்கள் மூலமே கற்றுள்ளனர்” இது இயக்குனரின் பேட்டி க் குறிப்பு ஒன்று. புடத்தில் வரும் ஓர் சிறுவன் பாத்திரம் நேரத்துக்கு நேரம் தன்னை மாற்றிக் கொள்ளும். இவ்வாறான பலர் எம் மத்தியில் உள்ளனர். இவர்கள் மாறும் அதிகாரத்துடன் ஒவ்வொரு தடைவையும் நெருங்கிய உறவு கொள்வார்கள். இவர்கள் இந்த வன்முறைகளை நேசிப்பவர்களாக மாறிவிடுவார்கள். வுன்முறை சமூகத்தின் அழிவுகளை ஓர் சிறுமியின் பாடசாலை பயணம் மூலம் இயக்குனர் பதிவாக்கியுள்ளார்.


rathan@rogers.com

Series Navigation

ரதன்

ரதன்