This entry is in the series 20040205_Issue

நளாயினி தாமரைச்செல்வன், சுவிற்சலாந்து


……………………………….
நினைவழியா கால
மடியில் எனது பிண்டம்.
மூழை மடிப்பெங்கணும்
உனது படிமங்கள்
உணர்வு நரம்புகளுள்
உணர்வெடுக்கும் ஊற்று
கருவிழிச் சதுக்கத்தால்
கரைகிறது நினைவுகள்.
மழை நனைந்த
செடி கொடி போல்
மீண்டும் புத்துணர்வுடன்
பூத்து குலுங்குகிறது
உனது படிமங்கள்.
உருகி வழிகிறது உயிர்.
——————————————–
28-01.004

Series Navigation