தாகூரின் கீதங்கள் – 13 கண்ணீர்ப் பூக்கள் !
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
என் இதய ரகசியத்தின் மீது
உன் பார்வையைத் திருப்பி
என்ன கண்டாய் நீ
என்னினிய நேசனே ?
எனது பாதாள வீழ்ச்சிகளை,
என் தவறுகளை,
என் முரண் பாடுகளை
என் முயலாத தவிர்ப்புகளை
எல்லாம் நீ
மன்னித் தருள்வாயா ?
வழிபடாத நாட்கள்
எத்தனையோ ? உன்னை
வணங்கிடாத இரவுகள்
எத்தனையோ ?
உன்னை அடிக்கடிப்
புறக்க ணித்தேன் நேசனே !
பறிக்கப் படாமலே
கருகிப் போயின
நெருக்க மரக்கொத்தில்
பூத்து விரியும்
பூஜைக் குரிய மலர்கள் !
என்னுடைய இந்தப்
புல்லாங் குழலில் நீ புகுத்திய
இன்னிசைத்
தொனி தணிந்து போனது
அடிக்கடி,
அடுத்து அடுத்து !
இன்னிசை அமைக்கும்
கவிஞனே !
உன்னிசைக்குப் பாட முடியுமா
என்னால் ?
உன் தோட்டத்தைக்
கண்காணிக்க
முயலும் போது
உறங்கிப் போனேன் நிழலை
அண்டிப் போய் !
அலைகள் பொங்கி எழ
விழிகள் நிரம்பி விழ
விரிந்திடும்
கண்ணீர்ப் பூக்களைக்
கொண்டு வந்துள்ளேன்
உனக்கு !
************
Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (January 21, 2008)]