கலைக்கண் பார்வை

This entry is part [part not set] of 40 in the series 20031225_Issue

ஜோதிர்லதா கிரிஜா


படித்து முடித்துப் பன்னாள் ன பின்னும், பணி யேதும் கிடைக்கவில்லை அவளுக்கு.
துடிதுடித்துப் போனாள் அவள் தன் வயோதிகத் தாயே எத்தனை காலம்தான்
வடித்துக்கொட்டுவாள் தந்தைக்கும், தங்கை தம்பிக்கும், தனக்கும் என்று.
குடித்துக் கூத்தடிக்கும் தந்தைக்கோ துளியளவும் அது பற்றிக் கவலை இல்லை.

படிப்பிலே அவளொன்றும் புலி அல்லள் – மதிப்பெண் அதிகம் பெறவில்லை யானதனால்
படியேறி இறங்திய பல்வேறு பணியகங்கள்,தொழிலகங்கள்,அலுவலகங்கள்அவளுக்குப்
படியளக்க மறுத்துக் கை விரித்துவிட்ட நிலையில் இன்னுமோர்
இடியாய் இறங்கியது அவள் தலை மேல் அந்நிகழ்ச்சி.

நாய் போல் அலைந்த பின்னும் நல்லதாய் ஒரு வேலை
வாய்க்காத கரணத்தால் அவள் நலிந்து போன தருணம் – தலை
சாய்ந்துவிட்டான் அவள் குடிகார அப்பனுமே;
ஓய்வின்றி உழைத்துவந்த தாயும் ஓய்ந்துபோய்ப் படுத்துவிட்டாள்.

நோய்வாய்ப் பட்டுவிட்ட அவள் தாயின் வருவாயும் போயிற்று.
பேய் போல் தெருத் தெருவாய் அலைந்து திரிந்த பின்னும்
காய்ந்த வயிறுகளுக்குணவு தர ஒரு வேலை கிடைக்காமல்
ஓய்ந்து போய் ஒரு நாள் தற்கொலை எண்ணமே கொண்டாளவள்.

தற்செயலாய் அவளைத் தெருவில் கண்ட தோழி யொருத்தி
குச்சியாய் இளைத்திருந்த அவள் நிலைபற்றிக் கேட்டறிந்து
நற்செய்தி யொன்றை அவளுக்கு தெரிவித்தாள் –
லச்சையை விட்டொழித்தால் உடனே ஒருவேலை கிடைக்குமென்று.

“மாதிரி மங்கை (model girl) யாய்ப் பணிபுரியக் காலியிடம் ஒன்றுளது:
பாதி உடை யணிந்து நிற்கும் உன்னை ஓவியர்கள் வரைவார்கள் – முதலில் ஒரு
மாதிரியாய்த் தானிருக்கும் – போகப் போகச் சரியாகிவிடும்,” என்றாள்.
நாதியற்ற நிலையில் இருந்ததனால் நன்றியோடவள் அதற்குச் சம்மதித்தாள்.

“சில நாள் கழிந்த பின்னர் பொட்டுத் துணி கூட இன்றிச்
சிலை போல நிற்கவேண்டும், அமாவேண்டும், படுத்துக்கிடக்க வேண்டும்;
விலையாய் உனக்குக் கை நிறைய பணம் கிடைக்கும் என்றவள் தொடர,
சிலையாய் அப்போதே வாய் பிளந்து நின்றாளவள்.

“உடனே பதில் சொன்னால் உடனழைத்துப் போவேன் நான்,” என்றவள்
தொடர்ந்தாள் – “தாமதித்தால் அதுவும் கை நழுவிப் போகு”மென்று.
உடன் பிறப்புகளின் ஒட்டிய வயிறுகளும் நோயாளித் தாயும் மட்டுமின்றிக்
கடன் தொகைகள் நினைவில் எழ, சடுதியில் அவள் அதற்கு உடன்பட்டாள்.

சட சடவென்று கண்ணீர் விட்டுக் கூசியவள் முதல் நாள் கலங்கிய போது அவள்
உடலை வரைந்த ஓவியருள் ஒருவன் றுதல் அவளுக்குக் கூறினான்:
“உடம்பை நாங்கள் உன்மத்தம் கொண்டவராய்ப் பார்ப்பதில்லை;
படமாய் உன்னை வரையும் நோக்கம் மட்டுமே எங்களுக்கு.

“கலைக்கண் அல்லாது வேறெந்தக் கண்ணாலும் மாதிரி மங்கையரை
தலைதூக்கிப் பாராத ஓவியர் மட்டுமே நாங்கள்; வெறும் ண்களல்லர்,” என்றானவன்.
மலையாய் அவள் மனத்தை அழுத்திய அவலம் சற்றே ஒழிந்தது – வீட்டில்
உலை கொதிக்கும் என்றெண்ணிய போதோ அதுவும் அறவே அழிந்தது!

று மாதம் போல் மாதிரி மங்கையாய்ப் பணி புரிந்து யாவர்க்கும்
சோறு போட்டுக் காப்பாற்றி மகிழ்ந்த அவளுக்குக் குறைந்தது வேதனை.
வேறிடத்தில் கண்ணியமாய் ஒரு வேலையும் கிடைத்தது;
சேறு நீக்கிக் குளித்த சுகத்துடன் ஏற்றுக் கொண்டாள் அவள் அதனை.

திருமண முயற்சியில் இறங்கினாள் அவள் அம்மா – னால் பெண்பார்க்க வந்த சிலர்
ஒருமனத்தோடு அவளைப் புறக்கணித்தனர் – எப்படியோ அவள் முன்
ஒரு நாளைய மாதிரி மங்கை என்றறிய நேர்ந்த காரணத்தால்.
நொறுங்கிப்போனாள் அவள் தாய் தன் மகள் ‘இழிதொழில்’ செய்தாளெனும் ரணத்தால்.

பின்னர் ஒரு நாள் யாரென்றறியாது அவளைப் பெண் பார்க்க வந்தான் அந்த ஓவியன்
முன்னம் ஒரு நாள் கலைக்கண் பற்றி பேசி அவளைத் தேற்றியவன்.
நம்பிக்கை அவளுள் துளிர்த்தது; மனத்துள் அவனைப் போற்றியவள் – “ இவன்
என்னைக் கைவிட மாட்டான், ” என நிம்மதியாய் எண்ணமிட்டாள்.

மகிழ்ச்சியோடு அவனை நோக்கி அவள் சிரித்தாள் – னால் அவனோ
அதிர்ச்சியோடு அவளை ஏறிட்டான், பின் தலை சரித்தான்:
பதிலைப் பின்னர் சொல்லுவதாக் கூறிச் சென்றவன் மறு நாள்
முதிர்ச்சியற்ற மனத்தினனாய் அவளை நிராகரித்தான்!

நேரில் அவனைச் சந்தித்த அவள் கண்கள் கலங்கி வினவினாள்:
“தூரிகையால் எனை அன்று வரைந்த கலைஞனாம் நீயே மறுத்தால்
யாரிங்கே எனனை ஏற்பார் ?” என்றவள் கண்ணீரில் கரைந்து தன்
கோரிக்கையை வெளிப்படையாய்த் தெரிவித்தாள்.

“உடலைக் கலைக் கண் கொண்டு காணல் என்பதாய் ஒன்று உண்டுதான்! னால்
கடையர்கள் சிலர் உன்னை வரைந்த போது என்னவெல்லாம் கற்பனை செய்தனரோ!!
மடையனல்லேன் நான் ஒன்றும்! மன்னித்து, மற, போய் வா!” என்றானவன் இரக்கமற்று.
“கடையன்தான் நீ!!” என்று மனத்துள் காறி உமிழ்ந்த பின் படி இறங்கினாள் அவள் – வெறுப்புற்று.

. . . . . . . . .
jothigirija@hotmail.com

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா