தாண்டவன்
அருண்பிரசாத்

ஓய்வின்றி ஆடுகின்றான் தாண்டவன்.
ஒற்றைக் காலில்
வெறுமையின் உக்கிரம் தாளாமல்.
தேவியின் பாத சலங்கை
பின்னணி இசை
நினைவு அம்பலத்தில்.
மற்றுமொரு மானசரோவராய்
உருவெடுக்கும் வியர்வை
பிரளயங்களின் வெடிப்புகளை நிரப்புகிறது.
===================
everminnal@yahoo.com.