வணக்கம் தமிழ்த்தாயே !
Published October 23, 2003 • By
புகாரி
புகாரி

கணினித்
திரைநிறைத்துக்
கற்கண்டாய்க்
குவிந்தாயே
இணைய
வலைகிழித்துப்
பொற்பாதம்
சுழன்றாயே
அழியும்
மொழிகளுக்குள்
தமிழிருக்கும்
என்றாரே
ஒளியாய்
ஒளிப்பிழப்பாய்
உச்சத்தை
வென்றாயே
துள்ளும்
நடைபோட்டுத்
தொழில்நுட்பம்
தாண்டுகின்றாய்
மெல்லச்
சாவதினிச்
சொன்னவனின்
மொழியென்றாய்
உள்ளம்
உருகியோட
உனதுமடி
தலைவைத்தேன்
வள்ளல்
தமிழ்த்தாயே
வளரமுதம்
ஊட்டுமம்மா !
அன்புடன் புகாரி
==================================================================
buhari@rogers.com