புரியவில்லையே…?
அனாமிகா பிரித்திமா
என் கண்களை பார்த்து…
என்னவர் சிலிர்த்ததுண்டு
அதே கண்களை…
காயப்படுத்தியதும் உண்டு…
என் முகத்தைப் பார்தது…
ரசித்ததுண்டு…
அதே முகத்தில்…
அறைந்ததும் உண்டு…
என் கரங்களை பற்றிக்கொண்டு…
சிலாகித்ததுண்டு…
அதே கரங்களை …
முறித்ததும் உண்டு…
என் இதயத்தில் குடியிருப்பதைப் பற்றி…
பேசியதுண்டு…
அதே இதயத்தை…
கிழித்ததும் உண்டு…
என் கால்களைப் பார்த்து…
சிரித்ததுண்டு…
அதே கால்களை…
தாக்கியதும் உண்டு…
ஏன் எல்லாம் இருவேறு…
விதமாக நடந்தது…
எனக்கு ?…
புரிந்து கொண்டேனா?
புரிந்து கொண்டாரா?
புரியவில்லையே…?
anamikapritima@yahoo.com
http://anamikapritima.blogspot.com/