தாகூரின் கீதங்கள் – 36 மரணமே எனக்குச் சொல்லிடு !

This entry is part [part not set] of 29 in the series 20080619_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


எனக்குச் சொல்லிடு !
மரணமே ! எனது மரணமே !
திருமணச் சடங்கா இது ?
கொண்டாட்டம் எதுவும் இல்லையா ?
அதற்கேற்ற பழக்க வழக்க
முறையும் இல்லையா ?
தெரு ஊர்வலத்தில் கலந்து கொள்ள
வருபவர் யாரும் இல்லையா ?
முடிசூட்டிக் கொண்டு
வெற்றிக் கொடி உயர்த்துவாய்
விளம்பரச் சின்னமுடன் !
ஆற்றங் கரைதனில்
ஆதவனின் வெய்யில் கொளுத்த
அச்சம் ஊட்டிக்
குவலயத்தைக்
கொந்தளிக்க வைத்திடும்
செந்நிறக் கடவுளே !
கண்திறந்து பாராயோ ?

மரணமே ! எனது மரணமே !
உன்னுடைய
திருமணப் பெண்ணைத்
தேடிப் பிடித்திட நீ
திட்ட மிட்டது எத்தனை
முறைகள் ?
அவை நூற்றுக் கணக்கிலா ?
அல்லது
ஆயிரக் கணக்கிலா ?
இடையிடையே
உறுமிடும்
எருது மேலேறிப்
போனாய்
புலித் தோலைப்
போர்த்திக் கொண்டு !

************

Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (June 15,, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா