மரம் தாவும் சிலந்திகள்
பனசை நடராஜன், சிங்கப்பூர்

சிலந்திகளின் உமிழ்நூல்,
வலை பின்னி
இரைபிடிக்க மட்டுமல்ல…
மரம் தாவவும்….!
பழம் நிறைந்த
மரங்களை நோக்கியே
பயணிக்கின்றன கூட்டமாய்…
சொந்தப் பழங்களைப்
பங்கிட வந்து விட்டதாய்
சிலநாட்களுக்கு முன்தாவிய
சிலந்திகளின் புலம்பல்களையும்
பொருட்படுத்தாமல்…
கல்விக்கூட ‘ரேகிங்’ போல
காலந்தோறும் தொடர்கிறது
இன்று தாவியவை
அடுத்து வருபவற்றை
எதிர்பார்த்து வசைபாடுதல்…
“பழங்களின் விளைச்சல்
நிரந்தரமல்ல” என்பதை
அறிவதில்லை அறியாமையால்…!
(feenix75@yahoo.co.in)