கடிதம்

This entry is part [part not set] of 34 in the series 20100206_Issue

தேவமைந்தன்


அன்பார்ந்த ஆசிரியர் அவர்களுக்கு
வணக்கம்.

இப்பொழுது திண்ணையில் நாகரத்தினம் கிருஷ் ணாவின் ‘மொழிவது சுகம்’ கட்டுரைகளும், இந்தத் திண்ணையில் ஜெயந்தி சங்கரின் ‘நூடில்ஸ்’ வயணக் கட்டுரையும் பயனும் பகிர்தலும் கொண்டுள்ளன. பாராட்டுகள்.
அன்புடன்,
தேவமைந்தன்
(அ. பசுபதி)

Series Navigation

கடிதம்

This entry is part [part not set] of 27 in the series 20091113_Issue

கி.சார்லஸ்


வணக்கம்.திண்ணை இதழ் வாசித்தேன்.புதிய கவிஞர்களின் வரவு மகிழ்வளிக்கிறது.அறிவியல் பகுதியில் வாரா வாரம் புதிதாக ஒன்றினை தெரிந்துகொள்ள முடிகிறது.சிறுகதைகள் அனைத்துமே நல்ல தேர்வு.கட்டுரையில் நேசமுடன் வெங்கடேஷ் அசத்துகிறார்.
நன்றி.
* கி.சார்லஸ் *
காரப்பிடாகை
நாகப்பட்டினம்(மாவட்டம்)
ckicharles@yahoo.com

Series Navigation

கடிதம்

0 minutes, 1 second Read
This entry is part [part not set] of 27 in the series 20090604_Issue

சி.சேகர்


அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

ஹெச்.ஜி.ரசூலின் சாதக் ஹசனின் கட்டுரை பல புதிய அனுபவங்களைக் கொண்டதாக இருந்தது. புதிய விவரங்களை வரலாற்று தகவலென்றாலும் மிகவும் அற்புதமான நடையில் இருந்தது.

சுவர்க்கம் வம்சி படித்து முடித்த பல மணிநேரத்திற்கு பின்னும் அகலவில்லை.

இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – மொழிபெயர்ப்புபோலவே இல்லை. ரா.கிரிதரன் நடையில் தமிழ் நாவலைப் படிப்பதுபோலவே இருந்தது. ஒவ்வொறு அத்தியாயமும் இன்னும் அதிக பக்கங்கள் இருக்கலாம்.

நகைச்சுவையும் வித்தியாசமும் – இன்னும் அதிகமான கட்டுரைகளை வெளியிடலாம்.

நாகூர் ருமிக்கு பதில்கள் கார்கில் மிகச் சூடாகவே எழுதியிருந்தார்.

நன்றி,

சி.சேகர்.


csekhar151@googlemail.com

Series Navigation

கடிதம்

This entry is part [part not set] of 28 in the series 20080918_Issue

மு.இளங்கோவன்


அன்புள்ள ஐயா வணக்கம்.
திண்ணையில் தருமபுரி நிகழ்ச்சி பற்றிய செய்தி வெளியிட்டமைக்கு நன்றி.
படைப்புகள் யாவும் சிறப்பு.

தங்கள் அன்புள்ள
மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா

Series Navigation

கடிதம்

This entry is part [part not set] of 35 in the series 20080731_Issue

தேவமைந்தன்


அன்புள்ள திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு,
வணக்கம். வாழ்த்துகள்.
திண்ணை 24/07/2008 கண்டேன். மேன்மேலும் பொலிவு பெற்று வரும் திண்ணை.காம் வலையேட்டில் தொடர்ந்து எழுதுவதைக் காட்டிலும், ஒரு கிழமை விடாமல், எப்படியாவது இணையமலசும் நடுவங்களுக்குச் சென்று நம் ஏட்டை – அதன் படைப்புகளை வாசித்து விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். அந்த வகையில் இந்தக் கிழமையும் வெளிவந்துள்ள ஆபிரகாம் கோவூர் தொடர்பான நண்பர் தமிழநம்பி அவர்களின் கட்டுரையையும் மதுமிதா அவர்களின் நேர்காணலையும் ‘கண்ணதாசன் இரசித்த கம்பன்’ என்னும் நண்பர் பெஞ்சமின் இலெபோ அவர்களின் கட்டுரையையும் “வெறுப்பும் வேதனையும் – மார்க்கெரித் துராஸின் ‘காதலன்” என்னும் நண்பர் பாவண்ணன் அவர்களின் ஆய்வுரையையும்(இது வாசிக்கப்பெற்ற நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன்; ஆனால் இருந்து கேட்க வாய்ப்பில்லாமல் போனது) தொடர்ந்து வரும் நம் ஜெயபாரதன் ஐயா அவர்களின் நாடக மொழியாக்கத்தையும் அறிவியலாக்கத்தையும் மற்ற நம் திண்ணை நண்பர்களின் கருத்தாக்கங்களையும் வாசித்து இன்புற்றேன்.
அன்புடன்,
தேவமைந்தன்


passoupathi@sify.com

Series Navigation

கடிதம்

This entry is part [part not set] of 26 in the series 20080703_Issue

வேழாபரையன்


அன்புள்ள ஐயா!

இலக்கிய கட்டுரைகள் என்ற தலைப்பின் ஜாடாயுவின் இந்து மத விளக்கங்களை திண்ணை வெளியிடுகிறது. ஏன்?

மதங்கள் என்ற தனியான தலைப்பு இருந்தால், தத்தம் மதத்தைப் பரப்ப விழைவோர் திண்ணை இணையதளத்தைப் பயன்படுத்திக் கொள்ள உதவுமே?

இப்படிக்கு

வேழாபரையன்


Series Navigation

கடிதம்

0 minutes, 6 seconds Read
This entry is part [part not set] of 29 in the series 20080619_Issue

ராம்கி


ஐயா,

அபூ முஹை உங்கள் நம்பிக்கை உங்களுக்கு மட்டுமே உண்மை. அதையே முடிந்த முடிவாக நிறுவ முயல்வது சிக்கலின் ஆரம்பம்; அந்த புள்ளியில் இருந்துதான் வன்முறை பிறக்கிறது. யூதர்களும், கிறிஸ்தவர்களும் அல்லது வேறு எவரும் சாபம் பெறுவது இஸ்லாமிற்கு பிரச்சினை இல்லை என்றே எண்ணுகிறேன். இதை யோசிக்காமல் “இவ்விடத்துக்கும் சொல்வதன்” தேவை என்ன?

நல்லவேளை இஸ்லாமிய உலகம் அபூ முஹையோடு நின்றுவிடவில்லை. சிலர் சிந்திக்க ஆரம்பித்துவிட்டதாகத் தோன்றுகிறது.

பார்க்க, சுட்டி

http://www.telegraph.co.uk/news/newstopics/politics/education/2106757/Muslim-parents-to-blame-for-children-turning-to-extremism.html

http://specials.rediff.com/news/2008/jun/12slid1.htm

இவற்றில் எனக்கு முழு உடன்பாடு இல்லை; ஆனால் இவை ஆறுதல் அளிக்கின்றன.

அவை மரபுக்காகக்கூட நன்றி கூறத் தயங்கும்

ராம்கி


vijiramki@yahoo.com

Series Navigation

கடிதம்

0 minutes, 0 seconds Read
This entry is part [part not set] of 39 in the series 20080605_Issue

ராம்கி


அப்பட்டமான கன்னட மொழி வெறி அரசியலில் இறங்கிய எடியுரப்பா பொறுப்பான தலைவர் என்பதை ஜடாயு மட்டுமே ஏற்க வேண்டி இருக்கும். நீதி மன்ற தீர்ப்பிற்கு எதிராக பேசுபவரை பொறுப்பான தலைவராக ஏற்க வேண்டிய கட்டாயம் எனக்கில்லை. தீர்ப்பு வெளியாகியபின் முடிவு எடுப்பதிற்கு என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. தஞ்சை மாவட்டம் கடை ஐந்து மாவட்டங்களின் பட்டியலில் இடம் பெற்றது யாருடைய துரதிஷ்டம்? ஒகேனக்கல் பிரச்சினையை கைக்கொண்டதால் தான் இந்த வெற்றி பெற்றதா பா ஜ க? இனி அதை கைவிடவோ அல்லது பேச்சு வார்த்தைக்கு வரவோ பா ஜ க வால் முடியுமா?


vijiramki@yahoo.com

Series Navigation

கடிதம்

0 minutes, 4 seconds Read
This entry is part [part not set] of 46 in the series 20080529_Issue

ராம்கி


ஐயா,

சுஜாதாவிற்கு அஞ்சலி செலுத்தும் சாக்கில் தமது சொந்த கடையை விரித்திரிக்கிறார் தாஜ். இஸ்லாத்தை சுஜாதா ஏற்றார் என்பது இயல்பான செய்தி. தாஜ் பிற மதங்களை ஏற்கிறாரா என்பதே. கேள்வி மேலும் எல்லா மதங்களும், நாளை தோன்ற இருப்பவை உட்பட, இறைவனை ஒன்று போலவே விவரிக்கும். இதில் பெரிய வியப்பென்ன! அந்த நம்பிக்கையை இழப்போரை அல்லது இல்லாதோரை அந்த மதம் எவ்வாறு நடத்துகிறது என்பதே கேள்வி. விடை தேடி எங்கும் அலைய வேண்டாம். சென்ற வாரத் திண்ணையிலேயே பதில் கிடைக்கிறது.

”யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்கள் இறைத்தூதர்களின் மண்ணறைகளை வணக்கத் தலங்களாக ஆக்கி விட்டனர். இதனால் அவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் ஏற்படும்” என்று தமது மரணப் படுக்கையில் நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்தனர். (நூல்: புகாரி) — அபூ முஹை

‘கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்திவிட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) ‘அல்லாஹ்வின் அடியார்’ என்றும் ‘இறைத்தூதர் என்றும் சொல்லுங்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என மிம்பரின் (உரை மேடை) மீதிருந்தபடி உமர்(ரலி) சொல்ல கேட்டிருக்கிறேன். (அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) – நூல்: புகாரி) — இப்னு பஷீர்

இதை சுஜாதா படித்திருப்பாரா தெரியவில்லை. பொதுவாக அவர் மதம் அரசியல் போன்ற சிக்கல்களை தவிர்த்தார் என்றே நம்புகிறேன்.. தாஜ் கூறும் கட்டுரையை நான் கருத்தில் கொண்டே சொல்கிறேன். கைரேகை, வாஸ்து போன்ற தொழில் செய்வோர் எம்ஜியார், கருணாநிதி, ரஜினி, கமல் போன்று எல்லோருடனும் புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்வது போல் இது நம்மூர் அரசியல் வியாதி.

இஸ்லாமியர்கள் சற்று வலைபரப்புகளை நிரப்புவதை விடுத்து, உள்முகமாக சிந்தித்து, உங்கள் மத இளைஞர்களுக்கு இணக்கமாக வாழப் பயிற்சியளியுங்கள். நாட்டிற்கும், நாநிலத்திற்கும் நலம் !

என்ன, துல் பிகர் நம்ம நாட்டாமை சரி தானே!

இவ்வளவிற்கும் இடமளிக்கும் திண்ணை ஆசிரியர் குழுவிற்குத் தலை வணங்குகிறேன்.

regards,
ramki

vijiramki@yahoo.com

Series Navigation

கடிதம்

This entry is part [part not set] of 40 in the series 20080522_Issue

துல் பிகர்



பல மாதங்களாக திண்ணையில் தொடரும் இஸ்லாமிய எதிர்ப்பு மற்றும் அதற்கு மறுத்துரைகளை படிக்காமல் நிறுத்தி இருந்தேன். (ஆனால் என்னோட போறாத காலம்), இந்த திங்களில் அண்ணன் மலர்மன்னன் �பெயரை..� பற்றி எழுதிய பெயர் போன கடிதத்தை படிக்கும் பாக்கியத்தை பெற்றேன்.

நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள், முஹம்மது நபி அவர்களை நாங்கள் வணங்க வேண்டும் என்றா? அப்படி நாங்கள் செய்யாததை செய்ததாக சொன்னால் உங்களுக்கு அதிலிருந்து கிடைக்கும் லாபம் ஜிஹாதிகளின் ஹிட் லிஸ்ட்டில் நாங்கள் சேரக் கூடாது என்பது தானா?
வேற வேலையே இல்லையா ஐயா, உங்களுக்கு என்று தான் கேட்க தோன்றுகிறது.

வன்முறை ஒழிவதற்கு யோசனை சொல்வார் என்று பார்த்தால் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட நிறுத்தத்தில் நின்ற வாகனங்களை எரித்ததை பற்றி எழுதுகிறார். எரியிற வாகனத்துல பெட்ரோலை அள்ளி ஊத்தறார். வன்முறையில் பேருந்தோடு உயிரையே கொளுத்தும் மடமையை கொளுத்த வழி சொல்ல முடியுமா, உங்களால்?. சின்னதா கடந்த சங்கை ஊதி பெருசாக்கி பொழுதோட்ட முயல வேண்டாம்.

கடவுள் என்றோ இறைவன் என்றோ அல்லது அல்லாஹ் என்றோ எவரும் இல்லை எவரையும் அல்லது எதையும் நாங்கள் வணங்க மாட்டோம், கடவுள் அல்லது இறைவன் அல்லது அல்லாஹ் ஒருவனை தவிர – இது தான் இஸ்லாத்தின் மூல மந்திரம்.

அரேபிய கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் இறைவனை �அல்லாஹ்� என்று தான் அவர்களது அரேபிய மொழியில் அழைப்பார்கள். உதாரணமாக, அவர்கள் ஒரு பிரச்சினையில் வன்முறையில் ஈடுபட்டு விட்டு �அல்லாஹ் அக்பர்� என்று சொன்னால் அது முஸ்லீம்களை தான் குறிக்குமா? வார்த்தைகளை பிடித்துக் கொண்டு தொங்காதீர்கள்.

மதம் எனும் குறுகிய போர்வைக்குள் இருந்து வெளியே வாருங்கள். தந்தை பெரியார் சொன்னார், �நான் மதங்களை வெறுக்கிறேன், ஏனென்றால் நான் மனிதர்களை நேசிக்கிறேன்� என்று. இந்த மதங்கள் மனிதர்களுக்கு இடையே வெறுப்பை வளர்த்ததை விட பெரிதாக ஒன்றும் செய்து விடவில்லை என்றே தோன்றுகிறது.

மனித நேயம் வளர்ப்போம்


dul_fiqar@yahoo.com.sg

Series Navigation

கடிதம்

This entry is part [part not set] of 40 in the series 20080522_Issue

அடியார்க்கன்பன் ..


அன்புடையீர்!
வணக்கம்.
முத்தமிழ்ச் சங்கம் 08 05 2008 அன்று பிரான்சில் நடத்திய தமிழ்த் தாத்தா விழா வருணனயைத் தங்கள்
இணைய தளத்தில் அழகாகப் படங்களுடன் வெளியிட்டமைக்காக எங்கள் உளங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
வாழ்க தங்கள் தமிழ்த் தொண்டு.

அன்புடன்
அடியார்க்கன்பன் கோவிந்தசாமி செயராமன்
பேராசிரியர் பெஞ்சமின் லெபோ

Series Navigation

கடிதம்

This entry is part [part not set] of 30 in the series 20080214_Issue

செல்வி


அன்புடன் திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு

திண்ணைப்பேச்சில் திரு.கோபால் ராஜாராம் அவர்கள் எழுதியுள்ளது மிகவும் சரியான கருத்தாகும். இன்று நாம் நமது பக்கத்து நாட்டில் நடக்கும் சம்பவங்களை பார்க்கும்போது அது புரியும். ஒரே மதம் சிறிய மக்கள்தொகை என்று எத்தனை வாய்பிருந்தாலும் ஜனநாயகம் என்பது ஒரு கேள்விக்குறியான நிலை அங்கு.

ஆனால் மகாத்மா என்கிற மனிதரின் ஒரு ஆன்ம பலமே எவ்வளவு பெரிய சக்தியுள்ள மனிதராய் இருந்தாலும் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டிய ஒரு பண்பு இன்று உருவாகியுள்ளது.

மகாத்மாவை இவர்கள் விமர்சிப்பதைவிட அவரே தன்னை அதிகம் விமர்சித்துக்கொண்டவர் என்பதை இந்த மனிதர்கள் உணரவேண்டும். அப்படி ஒரு சுய விமர்சனத்தை செய்துகொள்ளும் போது மாகாத்மா என்பவரின் பிரம்மாண்டம் புரியும்.

காந்திய சிந்தனைகள் அதிகம் எழுதப்படவேண்டும், இன்று உலகம் அனுபவித்துக்கொண்டிருக்கும் ஒருவித பாதுகாப்பற்ற வாழ்க்கைமுறைக்கு காந்தியமே சரியான தீர்வு என்பது என் எண்ணம்.

அன்புடன்

செல்வி.


rm_slv@yahoo.com

Series Navigation

கடிதம்

This entry is part [part not set] of 40 in the series 20080124_Issue

ஜெயமோகன்


அன்புள்ள கிரிதரன்

உங்கள் கடிதம். இயல் விருது பற்றி இனி பேச ஏதுமில்லை. வெறும் சொற்களாகவே மாறும். இரு தரப்பும் சொல்லவேண்டியவற்றை சொல்லிவிட்டோம்

ஆனால் உங்கள் கடிதத்தில் உள்ள இரு விஷயங்களைப்பற்றி சில சொற்கள்.

1. நான் இலக்கியத்தில் முக்கியமானவர்களாக எண்ணும் முன்னோடிகள், சமகாலபடைப்பாளிகள், இளம் படைப்பாளிகள் பற்றி தொடர்ச்சியாகவும் விரிவாகவும் எழுதிவருபவன் என என் வாசகர்கள் அறிவார்கள். என் எழுத்துக்களில் கணிசமான பகுதி அதுவே. அவற்றில் பெரும்பகுதி நூல்களாக்வும் கிடைக்கின்றன. வாசிக்கச்செய்ய என்னால் இயலாதல்லவா?

2 குழுக் குற்றச்சாட்டு எளிதானது. ஆனால் என் வாசகர்கள் முன் எடுபடாது. கடந்த இருபது வருடங்களில் நான் முன்வைத்து, முக்கியப்படுத்தி, கவனத்தை ஈர்த்து, விவாதித்த படைப்பாளிகளின் பெயர்களை முடியும்போது பட்டியலிட்டுப் பாருங்கள். குறைந்தபட்ச நுண்ணுணர்வுள்ள ஒரு வாசகன் ஒருபோதும் தவிர்த்துவிடமுடியாத எல்லா முக்கியப் படைப்பாளிகளும் அதில் அடங்குவார்கள்.

அவர்கள் மட்டும் அடங்கியதுதான் என் குழுவா? அப்படியென்றால் அது எனக்கு மகிழ்ச்சியே. அக்குழு சாதனைகள் செய்தது, புறகக்ணிக்கபப்டுவது. அதைச் சேர்ந்தவன் தான் நான். நீங்கள் வெளியெ எஉள்ள பெரும்பான்மையின் குரல் என்றால் உங்கள் தேர்வு உங்களுக்குச் சரிதான்

ஜெயமோகன்
visit http://www.jeyamohan.in

Series Navigation

கடிதம்

This entry is part [part not set] of 54 in the series 20080110_Issue

பரிமளம்


ஜெயமோகன் கட்டுரையிலிருந்து ஒரு வரி இது.
{ஒரு பல்கலைக் கழகக் குழு தங்கள் அந்தரங்க நோக்கங்களுக்காக பரிசைக் கொடுப்பதும் பெறுவதும் அவர்களின் விருப்பம்.}
லட்சுமி ஹாம்ஸ்டாமிடம் இருப்பது ஒருசரளமான பொது ஆங்கிலமா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் தங்கள் ரத்தம் மூலமும் கண்ணீர் மூலமும் இலக்கியத்தை உருவாக்குபவர்கள் இப்படிப்பட்ட வாக்கியத்தை எழுதமாட்டார்கள் என்பது உறுதி.
பரிமளம்


janaparimalam@yahoo.com

Series Navigation

கடிதம்

This entry is part [part not set] of 45 in the series 20071227_Issue

மு.இளங்கோவன்


அன்புள்ள ஐயா வணக்கம்.
திண்ணையில் என் கட்டுரை வெளியிட்டு உதவியமைக்கு நன்றி.
வாசந்தி அவர்களின் கட்டுரை சிறப்பு.
கடிதம்,நிகழ்ச்சிகளை அறிவிக்கும் பகுதியில்
வழக்கம்போல் பயனுடைய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அன்புள்ள
மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா

Series Navigation

கடிதம்

This entry is part [part not set] of 33 in the series 20071220_Issue

என்னார்


நன்றாக தெளிவாக விளக்கமாக மலர் மன்னன் எழுதியுள்ளார் இந்து என்றால் இம்சிப்பதைக் கண்டு துச்சிப்பது என வாரியார் சொல்லியுள்ளார்கள் இந்து என்றாலே பொறுமை என்பதால் தான் உலகத்திலுள்ள மதங்களுக்கெல்லாம் தாய் மதம் இந்து மதம் என்று விவேகானந்தர் சொல்லியுள்ளாரே.

என்னார்


rethinavelu.n@gmail.com

Series Navigation

கடிதம்

This entry is part [part not set] of 41 in the series 20071206_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


நண்பர் திரு மகேஷ் லா.ச.ரா பற்றி – நான் மற்றும் மலர்மன்னன் எழுதிய கட்டுரைகளில் அதிர்ச்சி அடைந்தது முதிர்ச்சி இல்லாததால்தான். அவருக்கு பதில் சொல்ல எனக்கு ஆர்வமே எழவில்லை. காரணம் இந்த வரி –

I request thinnai to obtain good articles from really good tamil writers in memory of La.Sa.Ra and readers like me would be grateful

நிசமாவே நல்ல எழுத்தாளர்கள் அல்ல, நானும் மலர்மன்னனும், பாவ்லா எழுத்தாளர்கள், என்கிறார் இவர். என்னாத்த இவருக்கு பதில் எழுத, சொல்லுங்கள்?

சிலாட்களிடம் எதையோ சொல்ல வந்து ஏன்டா ஆரம்பிச்சம்னு ஆயிப்போகும். ஒரு நண்பரோடு ஸ்ரீ அரவிந்த அன்னை பற்றிப் பேசிட்டிருந்தேன். அன்னைன்னதும், தெரியும் மதர் தெரேசாதானே? அவர் எப்ப பாண்டிச்சேரி வந்தார்? – என்று கேட்டார். என் முகம் மாறியதைக் கண்டதும், சார், நீங்க அன்னிபெசன்ட் பத்திச் சொல்ல வந்தீங்க இல்லியா?… என சமாளிக்கிறதா அடுத்து ஆரம்பித்தார். அன்னை இந்திரா முதல், விஜயலெட்சுமி பண்டிட் வரை அவருக்கு பிரபலங்கள் மனசில் ஆடியிருக்கும். அவரது ஐ.க்யூ. தரத்தை அவரே மெச்சிக் கொண்டிருக்கலாம்.

இந்த ஆபத்து நம்ம ஞானக்கூத்தனுக்கு நடந்ததே. கேளுங்கள் அந்தக் கூத்தை! வணக்கம் தமிழகம், என சன் தொலைக்காட்சியில் ஞானக்கூத்தனோடு நேர்முகம். யார்? உமா வரதராஜன், என நினைக்கிறேன். ஞானக்கூத்தன் சொன்னார் – ”பிரசிடென்சி கல்லூரிக்கு மேல்படிப்புக்கு வந்த பிறகுதான் எனக்கு உலகக் கவிஞர்களின் கவிதைகளில் பரிச்சயம் ஏற்பட்டது.” உமா வரதராஜன் உடனே இடைமறித்தார். ”எப்பிடி? அந்தக் கவிஞர்கள்லாம் சென்னை வந்திருந்தாங்களா?”

கடிதம்தானே? இன்னும் கொஞ்சம் நகைச்சுவையை ரசிக்கலாம். நான் கேட்ட ஒரு அகில இந்திய வானொலி பேட்டி – வயலும் வாழ்வும், போல ஒரு நிகழ்ச்சி. ஒரு மாட்டுப்பண்ணைக்காரருடன் பேட்டி.

உங்க கிட்ட எத்தனை மாடுங்க இருக்கு?

நாற்பது.

என்ன ஜாதி?

கோனாருங்க.

நான் மாட்டோட ஜாதியைக் கேட்டேன்!

இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு தெரியும் அல்லவா? கொஞ்சம் திக்குவாய் அவருக்கு. அவர் ஒரு முக்கியமான அரசியல் பிரச்னையை விவாதித்துப் பேட்டி தந்துகொண்டிருந்தார். திடீரென்று எதிர் நிருபர் கேட்டார் –

நீங்க எப்பவுமே திக்குவீங்களா?

இல்லிங்க, பேசும்போது மட்டுந்தான் திக்குவேன்… என்றார் அவர்.

அந்த சமயத்தில் மெளனம் காப்பதே நல்லது. நம்ம மக§ஷ், என்னையும் மலர்மன்னனையும் உப்புப் பேறாத கேஸ்னு சொன்னா, நாம கடல்வாழ் உயிரினம் அல்லன்னு நினைச்சிக்க வேண்டிதான்.

மகேஷ் சிறந்த வாசகர், நான் ஒத்துக்கறேன்யா! வேற வேலை இருக்கு எனக்கு.

விமரிசனம் வேறு, மரியாதை வேறு.

லா.ச.ரா. பற்றி ஒரு நூல் ‘சந்நிதிகள் பிராகாரங்கள் வீதிகள்’ நான் தொகுக்கிறேன். அதில் அசோகமித்திரன், மணா, அபி, மலர்மன்னன், டாக்டர் ருத்ரன், முருகு-சுரேஷ், எஸ். ஷங்கரநாராயணன், ஜெயமோகன் ஆகியோர் கட்டுரை வழங்கி யிருக்கிறார்கள்.

டிசம்பர் 23 ஞாயிறு காலை பத்து பத்தரை மணியளவில், சென்னை நான்கு மயிலாப்பூர் ஆர்.கே.ஸ்வாமி அரங்கத்தில் (லேடி சிவசாமி பள்ளி வளாகம், பழைய ஆர்.ஆர்.சபா எதிரில்) லா.ச.ரா. நினைவரங்கம் ஏற்பாடு செய்திருக்கிறேன்.

ஜெயகாந்தன், கே.எஸ். சுப்ரமணியம், திருப்பூர் கிருஷ்ணன், டாக்டர் ருத்ரன், திலகவதி, முதலானோர் உரைநிகழ்த்துவார்கள். பட்டியல் நீள வாய்ப்பு உள்ளது. மேலும் பலரிடம் தொடர்பு கொண்டு வருகிறேன்.

இந்த விழா ஏற்பாடும், நூல் வெளியீடும் – என் தனி மனித முயற்சி. பெருமைக்காக அல்ல, லா.ச.ரா.வுக்கு செய்தாக வேண்டும் என நான் நினைத்தேன் என்பதுதான் செய்தி. ஒரு எழுத்தாளர் மறையும்போது சமுதாயத்துக்கு அவரது கொடை என்ன, இலக்கியத்தில் அவர் ஸ்தானம் என்ன, என்றெல்லாம் வரையறுக்க ஆர்வப்படுவது தவறா என்ன? மற்றெப்போதையும் விட இப்போது நாம் அதை அலசினால் பரவலாக எல்லாரும் கவனிப்பார்கள் அல்லவா? அது அல்லவா லா.ச.ரா.வுக்கு, மறைந்த நல்லாத்மாவுக்கு முக்கியம்.

தவிரவும், விமரிசனம் இல்லாமல், இலக்கியம் எப்படி வளரும்?

மகேஷ், நீங்க தாராளமா (விமர்)சிக்கலாம்!

லா.ச.ரா. வரிகளில் – என் கட்டுரை, நம்ம மகேஷ¤க்கு, அல்வாத் துண்டில் மயிர்!


storysankar@gmail.com

Series Navigation

கடிதம்

This entry is part [part not set] of 36 in the series 20071129_Issue

ச.சிவபாலமுருகன்


மதிப்பிற்குரிய திண்ணை
பதிப்பாளருக்கு,வணக்கம்…
நான் திருக்குவளை அருகில் உள்ள குண்டையூரை சேர்ந்தவன்..சேக்கிழாரின் பெரியபுராணத்தில்
வரும் சிவ பக்தர் குண்டையூர்க் கிழார் பரம்பரையை சேர்ந்தவன்..கிழார் பற்றிய வரலாற்றில் இன்னும் அவரின் பரம்பரையினர் (அமரர் மினக்ஷிசுந்தரம் குடும்பத்தினர்) குண்டையூர் தெற்கு வீதியில் சிவ பக்தர்களாக வாழ்ந்து வருவது சேர்க்கப்பட விரும்புகிறேன்..இன்னும் மகம் விழாவில் எங்கள் குடும்பம் சார்பாக நெல் கோட்டை இறைவன்பால் சேர்க்கப்படுகிறது..கால
மாற்றங்கள் காரணமாக வரலாறு மாறிவிடாமல் காத்து வரும் தங்களின் முயற்சி மேலும் தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்..
நன்றி…
அன்புடன்..
ச.சிவபாலமுருகன்
குண்டையூர்


ssivabala@gmail.com

Series Navigation

கடிதம்

This entry is part [part not set] of 36 in the series 20071129_Issue

ஜடாயு


அன்புள்ள முத்துலிங்கம் ஐயா,

49-வது அகலக் கோடு என்ற அந்தக் கதை அருமையாக இருந்தது.. உங்கள் ஒவ்வொரு கதையும், கடைசி வரியைப் படிக்கையில் ஒரு பெருமூச்சு, ஒரு குறுநகை அல்லது ஒரு விகசிப்பை வரவழைக்கும் – இதுவும் விதிவிலக்கல்ல..

சில வருடங்கள் முன் இந்தக் கோடு வழியே போயிருக்கிறேன்.. இந்தக் கதையில் வருவது போன்ற எந்த எண்ணங்களும், உணர்ச்சிகளும் இல்லாமல், ஒரு சராசரி டூரிஸ்டாக மாலை நேர நயாகராவை ரசித்தபடி.. ஆனால் ஒரு தேர்ந்த கதைசொல்லியான நீங்கள் அந்தக் கோட்டின் வழி ஒரு உலகத்தையே திறந்து காட்டுகிறீர்கள்… அற்புதம் சார்!

“அது அங்கே இருக்கிறது”” என்ற கட்டுரையும் அருமை.. அறிவுத்தேடல் என்பதும், இயற்கையின் ரகசியங்களை ஓயாமல் தேடுவதும் மானுடன் என்ற உயிரியின் இயல்பு என்று அழகாக சொல்லியிருக்கிறீர்கள். “ஞானத்தை விடவும் புனிதமான பொருள் ஒன்றை இங்கு நாம் அறியவில்லை” (ந ஹி ஞானேன ஸத்ருசம் பவித்ரம் இஹ வித்யதே) என்ற கீதை வரிகளை அந்தக் கட்டுரை நினைவூட்டியது.

அன்புடன்,
ஜடாயு


jataayu.b@gmail.com

Series Navigation

கடிதம்

This entry is part [part not set] of 41 in the series 20071115_Issue

மு.இளங்கோவன்


அன்பின் ஐயா வணக்கம்.

திண்ணை கண்டும் கற்றும் மகிழ்ந்தேன்.

என் கட்டுரையை வெளியிட்டமைக்கும் அறிஞர் கோவேந்தன் படத்தை முகப்பில் வெளியிட்டமைக்கும் மிகுந்த நன்றியுடையேன்.
அறிஞர் த.கோவேந்தன் பதிப்புத்துறையிலும் மொழிபெயர்ப்புத்துறையிலும் மிகச்சிறந்த பங்காற்றியவர்.

வறுமையில் வாழ்ந்துமறைந்த அறிஞரை முகப்பில் நிறுத்தி அழகுபார்த்தமைக்கு அறிஞர் உலகு சார்பில் மீண்டும் என் நன்றி.

படைப்புகள்,கடிதங்கள்,செய்திகள் சிறப்பு.

எம் புதுவை கல்வி அமைச்சரின் ரியாத் பயணம் பற்றி அறிந்து மகிழ்கிறேன்.

அன்புள்ள

மு.இளங்கோவன்,புதுச்சேரி,இந்தியா


muelangovan@gmail.com

Series Navigation

கடிதம்

This entry is part [part not set] of 41 in the series 20071115_Issue

உஷாதீபன்


எங்கள் ஊரைப் பற்றி எழுதும்போது கண்டிப்பாக அவர்களைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும் என்கிற உறுதியில் ஜோதிர்லதாகிரிஜா அவர்களைப்பற்றி நான் தெரிவிக்கப்போக, தற்செயலாகக் குறிப்பிட்ட அந்த 1.11.07 திண்ணை இதழில் அவர்களும் எழுதியதுதான் எதிர்பாராத ஒன்று.
ஆனால் ஒரே ஒரு வருத்தம். அவர்கள் என் கட்டுரை ‘மாறிப்போன தடங்களைப்’ படித்திருப்பார்களா என்பதுதான் அது. உஷாதீபன்,மதுரை-625014.


ushadeepan@rediffmail.com

Series Navigation

கடிதம்

This entry is part [part not set] of 45 in the series 20071108_Issue

மலர்மன்னன்


அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

ஸ்ரீதேவி பற்றி வாஸந்தி எழுதிய கட்டுரையில் மும்பை அரசியல் குறித்தும் சிவ சேனை பற்றியும் இடையில் எழுதப் புகுந்தமையையொட்டி, சிவ சேனை குறித்த எனது சிந்தனைகளையும் ஒரு பத்திரிகைக்காரன் என்கிற அளவில் எனக்குக் கிட்டிய அனுபவத்தையும் நான் எழுதப் போக, அதனை மிகக் கடுமையாகக் கண்டித்து எனது அன்புக்கு மிகுதியும் பாத்திரரான ஸ்ரீ பி.கே. சிவக்குமார், எழுதியுள்ளமையை, ஒரு தகப்பனோ அல்லது பாட்டனோ தனது சிறு வயது மகன் அல்லது பேரன் ஏதேனும் ஒரு கோபம் அல்லது தாபம் காரணமாக மார்பில் குத்தியும் வேட்டியைப் பிடித்து இழுத்தும் துள்ளுவதை ஒரு விளையாட்டைப் பார்க்கிற ரசனையுடன் படித்தேன். நான் சின்ன ராஜு என்று அழைக்கிற அனுஷ் குமார் என்கிற என் பேரன் சமயங்களில் அப்படித்தான் என் மீது தனது வன்முறையைப் பிரயோகித்து மகிழ்விக்கிறான்!

சிவக்குமார் மிக மிகச் சரியாகவே கணித்திருப்பதைப் போல எந்தவொரு பிரபல வெகு ஜன இதழும், வழ வழ பத்திரிகையும் என்னை ஒரு தீண்டத்தகாதவனாக ஒதுக்கி வைத்திருப்பது நிஜந்தான். மேலும், அவ்வறான பத்திரிகைகள் ஞாபகம் வைத்துக்கொள்கிற அளவுக்கு நான் எவ்விதத்திலும் முக்கியமானவன் அல்ல என்பதைத் தெளிவாக அறிந்துள்ளேன். ஆனாலும் ஒரு காலத்தில் அத்தகைய பத்திரிகைகள் என்னையும் ஒரு பொருட்டாகக் கருதி, முக்கியமான சந்தர்ப்பங்களில் எழுதுமாறு கேட்டமைக்குச் சான்றாக அவற்றின் கடிதங்களை இன்னமும் வைத்துள்ளேன். மூதாட்டி, தான் மஞ்சள் தேய்த்துக் குளித்ததை நினைவு கூர்கிறாள் என்று சிவக்குமார் என்னைக் கிண்டல் செய்யாமல் இருந்தால், ஒருவேளை திண்ணை ஆசிரியர் குழு இடம் அளித்தால், அவற்றில் சிலவற்றையாவது ஸ்கேன் செய்து பிரசுரத்திற்கு அனுப்புவேன். ஆனால் திண்ணையை எனது தம்பட்டத்தை அடித்துக்கொள்ள உபயோகித்துக்கொள்கிறேன் என அதையும் எவரேனும் கண்டிக்கக் கூடும்.

இப்போதல்ல, முன்பு நான் பழக நேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்களுடன் நான் உரையாடுவதையெல்லம் ஒரு புகைப்படக்காரர் என்ற முறையில் படம் எடுத்துவந்த சுபா சுந்தரம் அவராகவே எனக்கு அவற்றிலிருந்து ஒரு பிரதியை அனுப்பி வைப்பார். இவ்வாறு சேர்ந்த அண்ணா, காமராஜர், எம் ஜி ஆர், மதியழகன் மற்றும் வெளிநாட்டுத் தலைவர்கள், தூதுவர்கள் ஆகியோருடன் நான் உரையாடும் நிலையில் உள்ள புகைப் படங்களையெல்லாம் தொகுத்து முன்பு நாங்கள் வசித்த வீட்டின் முன் அறையில் என் மனைவி என் மீதுள்ள அன்பினால் ஒரே சட்டமிட்டுப் பிரதானமாக மாட்டி வைத்திருந்தாள். என்னைக் காண வருகிறவர்கள் அதைப் பார்த்துவிட்டு சிபாரிசுக்கு வர ஆரம்பிக்கவும், தொல்லை தாங்காமல் அதனை எப்போதோ தூக்கிப் போட்டுவிட்டேன். இன்றும் சில வாசகர்கள் திண்ணையில் நான் எழுதிவரும் கட்டுரைகளைப் படித்து விட்டு, அரசியல் தலைவர்களுடனான எனது பழக்கத்திற்கு என்ன ஆதாரம் என்று கேட்கத்தான் செய்கிறார்கள். என்ன செய்ய, அந்தப் புகைப்படங்களை எல்லாம் இன்று எங்கே தேடுவது?

அண்ணாவின் ஹோம் லேண்ட் ஆங்கில வார இதழுக்குச் சந்தா திரட்டி மணியார்டரில் பணம் அனுப்பி அது கிடைத்தமைக்கான சான்றில் அண்ணா தமது கைப்பட ஒப்பமிட்டு அனுப்பிய ரசீதையும், டியர் மலர் என்று அச்சமயம் பாராட்டுத் தெரிவித்து அவர் கைப்பட ஆங்கிலத்தில் எழுதிய அஞ்சலட்டையையும்கூடப் பிற்காலத்தில் அவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் ஏற்படும் என்பதை உணராமல் தொலைத்து விட்டேன். நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஆதாரம் கேட்பார்கள் என்று தெரியாமல் போனதே! நல்ல வேளையாக என் தந்தையாருக்கு ஸ்ரீ அரவிந்தர் கையொப்பமிட்டு அளித்த அவரது நூல் ஒன்றை பத்திரப்படுத்தியிருக்கிறேன், அதன் புனிதம் தெரிந்து!

நான் மிக மிக அற்பமானவன் என்பதை அவையடக்கத்திற்காகவோ சம்பிரதாயமாகவோ அல்ல, மெய்யாகவே உணர்ந்து ஒப்புக்கொள்கிறேன். நான் ஏதோ எழுதிவிட்டேன் என்பதற்காக, என்னையும் ஒரு பொருட்டாக மதித்து, பிரபல எழுத்தாளர்கள் எவரும் திண்ணையில் எழுதாமல் இருந்து விடுவார்களோ என்று சிவக்குமார் சம்சயிப்பது உண்மையில் என்னைக் காட்டிலும் எல்லா வகைகளிலும் சிறந்த அத்தகைய எழுத்தாளர்களை அவர் மரியாதை செய்வதாகாது. என்னை அடிப்பதற்காக ஓங்கிய அவரது கை , ஓங்கிய வேகத்தில் பின் சென்று, அவர் யாருக்காகப் பரிந்து கொண்டு வந்தாரோ அவர்களை அதிகம் காயப்படுத்திவிட்டதில் மிகவும் வருந்துகிறேன். மன்னியுங்கள், என்னைத் தாக்குவதுதான் உண்மையில் சிவக்குமாரின் நோக்கம், அந்த வேகத்தில் உங்கள் மீது அடி பட்டுவிட்டது என்று சிவக்குமார் சார்பில் சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கோருகிறேன். நல்லவேளையாகத் திண்ணை ஆசிரியர் குழுவும் எனது முக்கியத்துவம் இல்லாத தகுதியை நன்கு அறிந்திருப்பதால் நானோ வேறு எவருமோ விமர்சித்து விட்டதற்காக எந்த எழுத்தாளரும் திண்ணையில் எழுதாமல் இருந்துவிட மாட்டார்கள் என்கிற உண்மையைத் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறது.

சிவக்குமார் சொல்வதைப்போல யார் எதை எழுத வேண்டும் என்று கட்டுப்பாடு செய்ய நான் யார்? உண்மையில் வேறு எவருமோகூட அவ்வாறு ஒருவருக்குத் தடை விதிக்கக்கூடுமா என்ன? ஆனால் எழுதுவதற்கு எடுத்துக் கொள்ளும் விஷயம் எதுவோ அதை உட்புகுந்து விரிவாக எழுத வேண்டும் என்பது எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளருக்குமான எழுதப்படாத விதி என்று எண்ணுகிறேன். எழுதுவதில் பயிற்சி பெற்றுள்ள சிவக்குமாருக்கு இதில் கருத்து வேறுபாடு இருக்காது என்றும் நம்புகிறேன்.

வாஸந்தி அவர்கள் ஒரு குறிப்பிட்ட விஷயம்பற்றித்தான் எழுத வேண்டும் என்று ஒரு சட்டாம் பிள்ளை மாதிரியோ நாட்டாமை மாதிரியோ நான் எப்படி அதிகப் பிரசங்கித்தனமாகச் சொல்லி விட முடியும்?

ஆனால் ஒரு விஷயம் பற்றி எழுதுகிற போது அதைக் காட்டிலும் வேறு ஒரு விஷயத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக இருந்தால் அந்த விஷயம் பற்றியும் விரிவாக ஆராய்ந்து எழுதுவதே முறை என்றுதான் நான் அபிப்பிராயம் தெரிவித்திருந்தேன். ஸ்ரீதேவியுடனான சந்திப்பு பற்றி எழுத முற்பட்ட வாஸந்தி, மும்பை அரசியலையும் சிவசேனை பற்றியும் இடையில் எழுதுவதாக இருந்தால் அது பற்றியும் ஆராய்ந்து எழுதியிருக்க வேண்டும் என்றுதான் குறிப்பிட்டிருந்தேனேயன்றி அவர் அதுபற்றியெல்லாம் எழுதக் கூடாது என்று சொல்லவே இல்லையே! மேலும் எனக்குத் தெரிந்த கடந்த கால மும்பை அரசியல் பற்றியும் சிவசேனை குறித்தும் அதன் மூலம் எழுத எனக்கு வாய்ப்பளித்தமைக்காக வாஸந்திக்கு நன்றியும் அல்லவா தெரிவித்திருந்தேன்?

வழ வழ, பள பள பத்திரிகைகள் என்னிடம் கேட்டால் ஓடோடிச் சென்று எழுதாமல் இருந்துவிடுவேனா என்று கேட்டு, அவை என்னைச் சீந்தாமல் இருப்பதால்தான் திண்ணை, தமிழ் சிஃபி போன்ற இணைய இதழ்களில் நான் எழுதிவருவதாகக் குறிப்பிட்டிருப்பதன் மூலம் இணைய இதழ்களின் முக்கியத்துவத்தையும் சிவக்குமார் குறைத்து மதிப்பிட்டு விடலாமா? உண்மையில் இணைய இதழ் சிவக்குமாருக்குப் பிறந்த வீடேயல்லவா? அவர் எழுத அப்பியசித்ததும் அங்கேதான் அல்லவா? என்னைத் தாக்கும் உத்தேசத்திலும் உத்வேகத்திலும் தனது பிறந்தகத்தையும் பள்ளிகூடத்தையுமா அவர் குறைத்து மதிப்பிட்டு விடுவது?

மேலும் சிவக்குமார் சம்சயிப்பதுபோலத் திண்ணைக்கு நான் நாட்டாமை அல்ல. எனது கட்டுரை ஒன்றை அது வெளியிடாமல் புறக்கணித்ததும் உண்டு! சிவக்குமார் தனது திண்ணைப் பள்ளிக்கூடமேயான அதனை இவ்வாறு அவமதிக்க நான் காரணமாகி விட்டதில் மெத்தவும் விசனப்படுகிறேன்.

பத்திரிகைத் தொழில் இப்போது ஒரு பெரிய இன்டஸ்ட்ரி. பத்திரிகை என்பது இப்போது ஒரு நுகரும் வஸ்து (கன்ஸ்யூமர் ப்ராடக்ட்). உங்கள் கட்டுரைகளை எடிட் செய்ய நீங்கள் ஒப்புக்கொள்ள மாட்டீர்கள்; உங்கள் கட்டுரையை அப்படியே வெளியிடுவதாக இருந்தால் எங்கள் அலுவலகத்தின் மீது கல் விழும். பணியாளர்கள் அடிபடுவார்கள், அச்சடிப்பதற்காக வைத்திருக்கும் விலை உயர்ந்த காகிதச் சுருள்களுக்குத் தீ வைக்கப்படும். பல நாட்கள் தொழில் பாதிக்கப்படும் என்றெல்லாம் சொன்னதால்தான் சலிப்புற்று எதுபற்றியுமே அவற்றில் எழுதாமல் ஒதுங்கிக்கொண்டேன்.

நான் சிறுகதைகளும் நாவல்களும் எழுதுவதில் தீவிரமாக இயங்கி வந்த சமயத்தில் வைர மோதிரம் தருவதாகச் சொல்லி என்னிடம் சிறுகதை கேட்ட குமுதம் இதழிடம் எனது அபிப்ராயப்படித் தமிழ்நாட்டு வாசகனின் வாசிப்புப் பழக்கத்தைச் சீரழித்த பத்திரிகை எனக் குமுதத்தை கருதுவதால் அதில் எழுத மாட்டேன் என்று சொன்னேன். சாவியின் மீதும் தனிப்பட்ட முறையில் அல்லாது பொதுக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் எனக்கு மிகவும் கடுமையான விமர்சனம் இருந்த போதிலும், என்னிடம் மிகுந்த அன்பும் மரியாதையும் பாராட்டி வந்த சுப்ரமண்ய ராஜுவும் பாலகுமாரனும் எங்களுக்காக எழுதுங்கள் என்று மிகவும் வற்புறுத்தியதால் சாவி இதழின் முதல் இதழுக்கு சாவியே அதைப் படித்துப்பார்த்து மிகவும் சந்தோஷப்படும் விதமாக, அவர்களின் ரசனையை இளக்காரம் செய்வதுபோலவொரு சிறுகதையை எழுதிக்கொடுத்தேன். அதே அடிப்படையில்தான் பால குமாரன் தயாரித்த குங்குமம் வார சிறப்பிதழுக்கு சாவி அதன் ஆசிரியராக இருந்த போதிலும் சிறுகதை எழுதிக் கொடுத்தேன். பிறகு பால குமாரன் மிகவும் வற்புறுத்தியதால் சாவியின் மோனாவுக்கும் ஒரு குறு நாவலைக் கொடுத்தேன். ஆகவே பிரபல பத்திரிகைகள் கேட்பதால் ஓடோடிப் போய் எழுதுகிற சபலத்திற்கு இளம் பிராயத்திலேயே ஆட்பட்டதில்லை. இனிமேலா அது ஏற்படப் போகிறது? ஆனால் பொதுவாக ஹிந்துஸ்தானத்திற்கும் குறிப்பாக ஹிந்து சமூகத்திற்கும் இன்று ஏற்பட்டிருக்கிற சோதனைகளை வெளிப்படையாக எழுத எந்தப் பிரபல பத்திரிகை வாய்ப்பளித்தாலும் அதனைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவற மாட்டேன். பத்திரிகையில் பெயரைப் பார்த்து அகமகிழ்ந்துகொள்வதற்காக அல்ல, பிரச்னையை அதிகம் பேர் உணரவேண்டும் என்பதற்காக.

திண்ணையில் நான் எழுதும் கட்டுரைகளைப் படித்துவிட்டு, இந்த உண்மைகளையெல்லாம் பிரபல பத்திரிகைகளில் ஏன் எழுத மாட்டேன் என்கிறீர்கள் என்று அப்பாவித் தனமாகக் கேட்கிற வாசகர்களும் இருக்கிறார்கள்! அதிலும், குமுதத்தில் இதனை எழுதுங்கள் என்று ஒரு கட்டுரையைப் பற்றித் திண்ணை வாசகர் ஒருவர் எழுதியிருப்பது அதைவிடப் பெரிய வருந்தத் தக்க நகைச்சுவை!

மிக்க அன்புடன்,
மலர்மன்னன்


malarmannan79@rediffmail.com

Series Navigation

கடிதம்

This entry is part [part not set] of 37 in the series 20071025_Issue

முனைவர் மு.இளங்கோவன்


பேரன்புடையீர் ஐயா வணக்கம்.
திண்ணையில் தரமான படைப்புகளும்.பயனுடைய தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
புலம்பெயர் சஞ்சிகைகள் குறித்த கட்டுரை சிறப்பு.கட்டுரையாளருக்கு என் பாராட்டுகள்.

முனைவர் மு.இளங்கோவன்,புதுச்சேரி,இந்தியா

Series Navigation

கடிதம்

This entry is part [part not set] of 37 in the series 20071025_Issue

உஷாதீபன்


குற்றாலம் பதிவுகள் பற்றி ஜெயமோகன் அவர்களின்; கருத்துரைகளைப் படிக்க நேர்ந்தது. பொதுவாக கவிதைக்கான அமர்வுகள் நிகழ்கையில் குடி அங்கே பிரதான இடம் வகித்து விடுகிறது என்பது குறைபாடாக இருந்தது. இது குறித்து சில கருத்துக்களை இங்கே சொல்லித்தான் ஆக வேண்டியிருக்கிறது. முதலில் வேண்டாம் என்றுதான் மனதுக்குத் தோன்றியது. ஆனாலும் படைப்பாளிகளின் மீதான, அவர்களின் சில படைப்புக்களின் மீதான ஈர்ப்பின் காரணமாக இதைச் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.
கவிதை அமர்வுகளுக்கு படைப்பாளிகள் மட்டும் வருவதில்லை. படிப்பவர்களும், படைக்க ஆர்வமுள்ளவர்களும், எப்போதேனும் ஒன்றிரண்டு என்று படைப்புக்களைத் தருபவர்களும், இலக்கிய ஆர்வலர்களும் என்று பல்வேறு தரப்பினரும் வருகை தருகிறார்கள். இவர்களின் வருகை அவசியமில்லை என்பதான கருத்து உண்டா? அப்படியானால் அதை வெளிப்படையாகச் சொல்லிவிடலாம். தொந்தரவில்லை.; புத்தகக் கடைகள், அங்கே, இங்கே என்று நோட்டீஸ் கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அது மட்டும் இதில் முக்கியம்.
இப்படி படைப்பாளிகள் மீது மதிப்பு கொண்டு வருபவர்கள் மீது தங்கள் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் படைப்பாளிகளுக்குக் கண்டிப்பாக வேண்டும். இம்மாதிரியான எண்ணம் வேண்டுமானால் படைப்பாளிகள் கண்ணியம் மிக்கவர்களாக, பண்பாளர்களாக, நல்ல ஒழுக்க சீலர்களாக இருத்தல் வேண்டும். இந்த குணநலன்களை அடையாளம் காட்டுவது எது? ஒரு படைப்பாளியை அடையாளம் காட்டுவது நிச்சயம் அவனது எழுத்துக்களாகத்தான் இருக்க முடியும.; அப்படித்தான் இருக்க வேண்டும். படைப்பு என்பதே அதற்குத்தானே? எதற்கு? இந்த சமுதாயத்திற்கு. அதன் மேன்மைக்கு. ஒரு நல்ல எழுத்தாளனால் அப்படித்தானே சிந்திக்க முடியும்? ஒரு நல்ல எழுத்தாளன் அப்படித்தானே சிந்திக்க வேண்டும்?
மேற்கண்டவையெல்லாம் இந்தக் கவிதைப்; படைப்பாளிகளுக்கு இல்லை என்று நான் சொல்லவரவில்லை. எல்லாமும் எல்லாரிடமும் இருக்கத்தான் செய்கிறது. அவைகளைக் காலமறிந்து, இடமறிந்து ;காப்பாற்றிக் கொள்வதுதான் இங்கே முக்கியமாகிறது.
இலக்கியம் இலக்கியத்திற்காகத்தான் என்றார் க.நா.சு. ;;;;;அதை முழுமையாக ஒதுக்கிவிடுவதற்கில்லைதான். அதுபோல்தான் மேற்கண்ட படைப்பாளிகளின் அற்புதமான பல கவிதைகளும். முற்போக்குச் சிந்தனையோடு படைப்புக்களைப் பிடிவாதமாக சமுதாயத்திற்கென்று முன்வைப்பது ஒரு வகை. இலக்கியம் இலக்கியத்திற்காகவே என்பது இன்னொரு வகை.
கவியரது கண்ணதாசன் ;அவர்களைப் பற்றி; நாம் அறியாததல்ல. ஆனால் அந்தக் குழந்தை மனசுக் கவிஞனை மனதை விட்டு ஒதுக்கி விடமுடியுமா? அது போல்தான் இன்றைய நவீனக் கவிதைக் கவிஞர்களும்.
ஆனாலும் ஒரு கவிதை அமர்வு என்று வருகையிலும், பொது நிகழ்வுகளிலும், அவர்கள் ;நாகரீகம் காப்பது மனது இதமாக இருக்கும். அவர்கள் படைப்பின் மீதான மதிப்பையும், அவர்கள் மீதான நெருக்கத்தையும் அதிகப்படுத்தும். ஒரு சில கவிதை அமர்வுகளில் கண்ட காட்சிகள் மனதை மிகவும் பாதித்தது. அங்கிருந்து விலகி ;ஓடச் செய்தது. வெறுமே புத்தகங்களைப் படிப்பதோடு நின்றுகொள்வோமே என்று ஒரு விலகலை ஏற்படுத்தியது. அதனால் எழுந்த எண்ணங்கள் இவை. இம்மாதிரியான எண்ணம் கொண்டவர்கள் எங்களுக்குத் தேவையில்லை என்று தோன்றினால் தாராளமாகத்; தொடரலாம். யாரும் தடுக்கப் போவதில்லை.
“யார் இவரு? பெரிசா நீட்டி முழக்கி எழுதிட்டிருக்காரு? அட, விடுங்கப்பா எவனோ கிறுக்கன் உளர்;றான்…”
-கடைசியாக இப்படித்தான் மனதில்தோன்றுகிறது….!!!


ushadeepan@rediffmail.com

Series Navigation

கடிதம்

This entry is part [part not set] of 35 in the series 20070927_Issue

ஸ்ரீனி


அன்புடன் ஆசிரியருக்கு,

முதலில் திரு.தேவமைந்தனுக்கு என் நன்றி. அன்றைய சூழலில் ஊரோடு ஒத்து,சக மனித உணர்வுகளை மதித்து வாழும் மனநிலை இருந்தது.சாதி,மத சமாச்சாரங்கள் இன்று இருப்பது போல உறுத்தலாக இருந்தது இல்லை. நினைத்ததும் இல்லை.அந்த நாளும் வந்திடாதோ என்கிற ஏக்கம் எழுகிறது,அது வாராது என நன்றாக தெரிந்த போதிலும்.

இன்று சூழ்நிலைகள் மாறி விட்டன.விரிவடைந்து வரும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும்,அதனால் மாறி விட்ட மக்களின் அபிலாஷைகளும்,மனோபாவமும் சில காரணங்கள் என்றால், மக்கள் நலத்தை கிடப்பில் போட்டு தன் நலத்திற்காக தரம் தாழ்ந்து, வேண்டாத வெட்டி விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மக்களை உணர்வு பூர்வமாக தூண்டிவிடும் அரசியல் கட்சிகளும்
மெயின் காரண கர்த்தர்கள்.

திரு.மணியின் ஒன்பது கேள்விகளும் இந்த அரசியல் லாப சித்தர்களின் வெட்கக்கேடுகளை புட்டுப் புட்டு வைக்கின்றது.
அதுசரி, பச்சைக் கலரில் ஒரு வகைக்கு ராமர் பச்சை என்று துணிக்கடையில் கூறுவார்கள். அது இனி உபயோகத்தில் இருக்குமா (அ) வேறு பெயர் சூட்டப்படுமா?

அவனை நிறுத்தச் சொல்லு,நான் நிப்பாட்றேன் என்கிற வசனம் அல்டிமேட் கொள்கையாகி கொடி கட்டிப் பறக்கிற போது,உண்மை மையத்திலிருந்து சறுக்கி,ஓரப் புள்ளியாகி விடுகின்றது!

ஸ்ரீனி


kmnsri@rediffmail.com

Series Navigation

கடிதம்

This entry is part [part not set] of 39 in the series 20070920_Issue

கே.பாலமுருகன்


அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

திண்ணை.காம் மின்னியல் வாரப் பத்திரிக்கையில் என்னுடைய “இதற்கு முன்” என்ற கவிதையை வெளியிட்டமைக்கு எனது மனமார்ந்த நன்றிதனைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகம் நம் கையடக்கத்தில் தவழ்ந்து கொண்டிருப்பது போன்ற ஒரு பிரமை ஏற்படுகிறது. அதுவும் பலவகையான எழுத்தாளர்களுடன் இந்த உலகத்தை உள்ளங்கையில் ஏந்திப் பறப்பது போலவே உணர்கிறேன் ஒவ்வொருமுறையும் திண்ணை.காம் முன்பு அமர்ந்திருக்கும் பொழுதெல்லாம்.

இந்த வாரக் கவிதை வரிசையில் வெளியாகியுள்ள கார்த்திக் பிரபுவின் “கிணறு” ஒரு வரலாற்றுக் கிணறை வெளியே தோண்டி எடுப்பது போல இருக்கிறது. எத்தனை தலைமுறைகள் கண்ட அந்தக் கிணற்றின் பின்னனியிலும் பழம் பெரும் கதைகள். நிகழ்வை அருமையாக புனைவில் கொண்டு வந்திருக்கிறார். இந்தக் கிணறைப் படிக்கும் பொழுது எங்கள் ஊரிலுள்ள மேட்டுப் பாலத்தையொட்டி ஓடும் ஆறின் ஞாபகம் தானாக மனதில் எழுந்து கொள்கிறது. கார்த்திக் பிரபு அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
திண்ணை.காம் என்ற அகப்பக்கம், உண்மையிலேயே எழுத்தாளர்களின் அகங்களை மின்னியல் பிரதிகளாக உலகம் முழுவதும் நொடிப் பொழுதில் கொண்டு சேர்த்துவிடுவதுகிறது. இந்தத் திண்ணையில் ஓய்வெடுக்க வந்திருக்கும் மேலும் ஒரு பறவை. நன்றி.
கே.பாலமுருகன்
மலேசியா


bala_barathi@hotmail.com

Series Navigation

கடிதம்

This entry is part [part not set] of 33 in the series 20070913_Issue

தேவமைந்தன்


அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
வணக்கம்.
மறைக்கப்படும் கவிஞர்களுள் ஒருவரான சல்லா ராதாகிருஷ்ண சர்மா பற்றிய என் கட்டுரையை வெளியிட்டமைக்கு மிகவும் நன்றி.
‘இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியர் – பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார்’ (செப்டம்பர் 5, அவர் பிறந்த நாள்) குறித்தும்; ‘மக்கள் தொலைக்காட்சியின் இரண்டாம் ஆண்டுத் தொடக்கவிழா’ பற்றியும் தம்பி முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையையும் சித்திரத்தையும் வாசித்தேன். அவருக்கும், வெளியிட்ட திண்ணை ஆசிரியர் குழுவுக்கும், ஆசிரியர் கோபால் ராஜாராம் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

பிரான்ஸ் ஸ்திராஸ்பூரிலிருந்து புதுச்சேரிக்கு வந்துள்ள நண்பர் நாகரத்தினம் கிருஷ்ணாவுடன் வந்து உங்கள் எல்லாரையும் சந்திக்க மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன். அவருக்கு எதிர்பாராமல் வேலைகள் பலவும் ஏற்படவே, இயலாமல் போயிற்று. அவரும் நாளை புறப்பட்டு விடுவார்.

திண்ணை.காம் குறித்த நீண்ட உரையாடல்கள் எங்களிடையே……. திண்ணையில் வெளியான “புதுச்சேரி வட்டார-வரலாற்று நாவல்கள்: ‘நீலக்கடல்’ குறிப்பாக..’ என்ற என் கட்டுரை – அரிய இளம் நண்பர்களை எனக்குத் தேடித் தந்திருக்கிறது. இதுதான் திண்ணை.காம் வலையேட்டின் சிறப்பு. உலகில் எங்கெங்கோ வாழ்பவர்களைத் தோழமையில் பிணைக்கும் ஆற்றலும், முரண்பட்ட கருத்தாடல்களை நிகழ்த்தும் அறிவாளிகளுக்கு ஒரே திண்ணையில் விருப்பு வெறுப்பில்லாமல் இடம் தரும் பெருந்தகைமையும் திண்ணை.காம் ஆசிரியர் அவர்களுக்கும் ஆசிரியர் குழுவில் பணிபுரியும் நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளது. பாராட்டுகள்!
அன்புடன்
தேவமைந்தன்


pasu2tamil@yahoo.com

Series Navigation

கடிதம்

This entry is part [part not set] of 37 in the series 20070830_Issue

நந்திதா


அன்பார்ந்த ஐயா
வணக்கம் பல

மக்கள் கவிஞர் இன்குலாப் அவர்களுடைய கேள்வியான “திரு ரசூலின் தலையை வெட்டலாம். ஆனால் கேள்விகளை என்ன செய்வது”

பதில் சொல்ல முடியாத வைரக் கேள்வி.

சிந்திக்க வைக்கிறது
அன்புடன்
நந்திதா


nandhithak@yahoo.com

Series Navigation

கடிதம்

author
0 minutes, 2 seconds Read
This entry is part [part not set] of 36 in the series 20070809_Issue

R.பாலா


திண்ணை ஆசிரியருக்கு,

வணக்கம்.

இரண்டு வாரங்களுக்குமுன் திண்ணையில் தாஜ் அவர்கள், மலேஷியாவில் துன்புறும் ரேவதி என்ற பெண்ணுக்கு ஆதரவாய் திரு அரவிந்தன் நீலகண்டன் எழுதிய கட்டுரைக்கு எதிர்வினையாற்றுமுகமாக எழுதிய கடிதம் கண்டேன். எந்தஒரு சாதாரண மனிதனுக்கும் ஏற்படுகின்ற மனிதாபிமானத்தின் வெளிப்பாடே திரு அ.நீ அவர்கள் எழுதிய கட்டுரையின் சாராம்சம். அதற்கு இவ்வளவு அராஜகமான எதிர்வினை எழுதிய தாஜ் அவர்களின் கடிதம் கண்டு மிக்க வருத்தம். திண்ணையில் அழகிய கவிதைகளும் கட்டுரைகளையும் எழுதிவரும் தாஜ் போக இன்னொரு தாஜ்-ம் இருக்கலாமோ என்றொரு சந்தேகம் வேறு வந்து தொலைத்தது.

எனக்கு தெரிந்தவரையில், திரு அ.நீ அவர்கள் மிகுந்த சமுதாய உணர்வுகளுடன் சிந்தனையை தூண்டும் கட்டுரைகள் பலவும் எழுதிவரும் பண்பட்ட மனிதர். வெகு அபூர்வமாக ஒருசில தடித்த வார்த்தைகளை பிரயோகம் செய்து கண்டிருக்கிறேன். அதுகூட அவரது இணைய நண்பர்களால் கடுமையாக சுட்டிக்காட்டப்பட்டதையும் கண்டிருக்கிறேன். அனைத்து மதத்தைச்சேர்ந்த மனிதர்களுடன் அவர் இணக்கமாக பழகிவருவதை அவர் எழுதிய கட்டுரைகளை படித்தவர்களுக்கு புரியும். எந்தவித ஆதாயங்களுக்காகவும் யரையும் கண்மூடித்தனமாக வெறுத்தும் ஆதரித்தும் எழுதியதாக எனக்கு நினைவில்லை. தாஜ் அவர்களின் தவரான புரிதல்கண்டு வருத்தம். திரு அ.நீ அவர்கள் இம்மாதிரியான எதிவினை குறித்து ஏதும் இதுவரை எழுதவில்லை. படித்து, ஒதுக்கிவிட்டு போயிருக்கலாம்.

ஆனாலும், கடந்த வார திண்ணயில் இதுகுறித்து பெரியவர்கள் திரு மலர்மன்னன் அவர்களும், திரு வெ.சாமிநாதன் அவர்களும் எழுதிய கடிதங்கள் கருத்தாழமிக்கதும் சிந்தனையைத்தூண்டுவதாகவும் இருந்தது. அவர்களின் சிரத்தையான கடிதங்களுக்கு நன்றிகள் பல. அவர்களின் முயற்சிகளுக்கு பலன் கிடைக்க வேண்டும். ஒருசில மனங்களாவது நல்வழி திரும்ப இணைய வாசகர்களும் நம்மாலான முயற்சிகளை செய்வதே அந்த பெரியவர்களின் உழப்புக்கு நாம் செய்யும் பிரதிபலன்.

*********************************

திரு சி.ஜெயபாரதன் அவர்களின், ஜப்பானில் எழுந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அணுமின்சார நிலையம் குறித்து கட்டுரை எழுதவிருப்பதான அறிவிப்பு கண்டேன். மிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் “திண்ணை” இணையபக்கத்தை ஆவலுடன் திறந்து பார்ப்பதற்கு திரு சி.ஜெயபாரதன் அவர்களின் கட்டுரைகள்/கதைகள்/கவிதைகள் ஆகியவையும் ஒரு முக்கிய காரணி. மிக்க நன்றி.

இரண்டு வாரங்களுக்குமுன் செல்வி அவர்கள் எழுதியதைப்போல, “மிகுந்த பாதுகாப்பு நடவடிக்கைக்கு பெயர்போன ஜப்பானில் இப்படியென்றால்” என்றே நானும் பலகாலம் நினைத்துக்கொண்டிருந்தேன். சமீபகாலமாக இங்கு பத்திரிக்கைகள் மற்றும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக வெளிவந்து உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளையும் உறுதிப்படுத்தபடாத ஊகங்களையும் பார்க்கும் போதும் படிக்கும்போதும், இது ஒரு பாதுகாப்பற்ற தொழில்நுட்பம் என்ற உணர்வே மேலோங்குகிறது.

அணுமின் தொழில்நுட்பம் குறித்து திரு சி.ஜெ அவர்கள் எழுதிய பல்வேறு கட்டுரைகளையும், அசுரன் போன்றோருக்கு பதிலிறுத்து எழுதிய கட்டுரைகளையும் வாசித்திருக்கிறேன். அணுஆற்றல் தொழில்நுட்பம் என்பது முதிர்ச்சியானதா என்ற கேள்வி ஒருபுறமிருக்கட்டும், அதனை நடைமுறைப்படுத்தும் நம்நாட்டின் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இன்னபிற சம்பந்தபட்டவர்களும் இந்த தருணத்தில் முதிர்ச்சியானவர்களா என்ற கோணத்தையும் கவனத்தில்கொண்டு கட்டுரை எழுத வேண்டுகிறேன்.

மாற்று எரிபொருளுக்கான முயற்சிகள் உடனடியாக தேவையென்று எல்லோரும் ஒப்புக்கொள்ளும் அதேவேளையில், கடினமான தொழில்நுட்ப விஷயங்களையும் புள்ளிவிபரங்களையும் கொண்டுமட்டுமல்லாது இன்றய இந்தியாவின் அரசியல் மற்றும் சமூகநிலைப்பாடுகளையும் கவனித்தில்கொண்டு எழுதிய உங்கள் கட்டுரையைக்காண ஆவலுடன்.

R.பாலா

hikari_1965@yahoo.co.jp

Series Navigation

கடிதம்

0 minutes, 1 second Read
This entry is part [part not set] of 36 in the series 20070809_Issue

செல்வி


ஆசிரியர் அவர்களுக்கு.

திரு ஜெயபாரதன் அவர்கள் கட்டுரையில் ஒசோன் படலம் பாதுகாக்கப் படுவதற்காக கூறியுள்ள 10 புதிய வழிகள் படித்தபோது மிகவும் ஆச்சர்யமாகவும். நான் செய்கின்ற தவறுகளும் புரிந்தது.

நமது திண்ணையில் மட்டுமல்ல பொது நிகழ்ச்சிகளிலும் இந்த விழிப்புணர்வு கருத்துக்களை மக்களுக்கு எடுத்து சொல்லவேண்டும் என்பது மிக முக்கியமான கருத்தாகும், ஏனனில் ஒசோன் படலம் பாதுகாக்க சாதாரணமக்களால் செய்யக்கூடியது ஏதும் இல்லை என்று நினைத்திருந்தேன் ஆனால் சின்னச்சின்ன செயல்கள் மூலம் நாமும் நிறைய செய்ய முடியும் என்பது புரிந்தது.

மின்சார உபயோகக்கட்டுப்பாடு இவ்வளவு முக்கியமானது என்பதை அரசும் மக்களுக்கு கூறவேண்டும். பணமிச்சம் மட்டுமில்லாமல் சமுதாய அக்கரையுடன் கூடிய ஒசோன் பாதுக்காப்பும் உள்ள விஷயம் நிறையபேரைத்தூண்டும்.

திரு ஜெயபாரதன் அவர்களுக்கு நன்றி. நான் என்னால் முடிந்த முயற்சிகளைத் தொடர்வேன்.

அன்புடன்
செல்வி


rm_slv@yahoo.com

Series Navigation

கடிதம்

This entry is part [part not set] of 33 in the series 20070802_Issue

மு.இளங்கோவன்


அன்பின் ஐயா வணக்கம்.
திண்ணை கண்டேன்.
பயனுடைய கட்டுரைகளும் அறிவார்ந்த தகவல்களும்
மகிழ்ச்சி தந்தன.தேவமைந்தனின் புலமைக்காய்ச்சல்
கட்டுரை எம் போன்ற தமிழ்ஆர்வலர்களுக்குப் பயனுடையது.
தொடர்க தங்கள் பணி.
திசைகள் வெற்றிவேலின் விளக்கம் சிறப்பு.

மு.இளங்கோவன்,புதுச்சேரி,இந்தியா


muelangovan@gmail.com

Series Navigation

கடிதம்

This entry is part [part not set] of 33 in the series 20070802_Issue

சி. ஜெயபாரதன்



கடந்த வாரத்தில் வந்த செல்வியின் கடிதம் (ஜூலை 26, 2007)

<< சமீபத்தில் ஜப்பானில் எற்பட்ட நிலநடுக்கம் அணுக்கழிவை கடல்நீரோடு கலக்க காரணமாகி விட்டது பற்றிய செய்தி மிகவும் அதிர்ச்சியை தந்தது. மிகுந்த பாதுகாப்பு நடவடிக்கைக்கு பெயர்போன ஜப்பானில் இப்படியென்றால் நம்நாட்டின் கதை என்னாவது. திரு ஜெயபாரதன் அவர்கள் இதை பற்றியும் கழிவுகளின் கதிரியக்க பரவலின் பாதிப்பு பற்றியும் எழுதிட வேண்டும். >>

“ஜப்பான் நிலநடுக்கமும், அணுக்கழிவு வெளியற்றமும்”, பற்றி ஒரு விஞ்ஞானக் கட்டுரை எழுதுகிறேன்.

சி. ஜெயபாரதன்


jayabarat@tnt21.com

Series Navigation

கடிதம்

This entry is part [part not set] of 30 in the series 20070726_Issue

திசைகள் அ.வெற்றிவேல்



அன்புள்ள நண்பர் திரு.குருராகவேந்திரன் அவர்களுக்கு நன்றியுடன் வணக்கம்.

எனது கட்டுரை குறித்து தங்களின் கடிதம் கண்டேன்.

கட்டுரையின் நோக்கம் “மக்கள் தொலைக்காட்சியின்” மக்கள் பணிகள் பற்றியே.அது ஒரு மொழி ஆராய்ச்சிக் கட்டுரை அன்று.அதற்கு நான் தகுதியானவனும் கிடையாது.

தினந்தோறும் 20 முறையாவது உச்சரிக்கும் ஒரு சொல்லுக்கு, என்ன அர்த்தம் என்று கூட தெரியாமல் பயன்படுத்துவதின் விபரீதத்தை உணர்த்தவே அவ்வாறு என் மனைவியிடம் சொன்னதை குறிப்பிட்டு இருந்தேனே தவிர,மற்ற மொழியினை தாழ்த்திப் பேச வேண்டும் என்பது எனது நோக்கமல்ல.மேலும் தாங்கள் எடுத்துக் காட்டிய ரமேஷ்,சுரேஷ்,தினேஷ் போன்ற பெயர்களின் அர்த்தம் எனக்குத் தெரியாததல்ல..உரையாடல் நடந்த அதே நாளில் அடுத்த ஒன்றிரண்டு மணி நேரத்தில் அந்தப் பெயர்களின் முழுமையான அர்த்தத்தை எனது மனைவிடம் சொல்லி மனைவி முகத்தில் மலர்ச்சியைப் பார்த்தவன்.கட்டுரைக்கு அது தேவையில்லை என்ற நோக்கில்தான் அதை தவிர்த்து இருந்தேனே தவிர அதன் அர்த்தம் தெரியாமலோ, அல்லது மற்ற மொழிகளை தாழ்த்த வேண்டும் என்பதோ எனது நோக்கம் அன்று.

இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் திரு.ராசேந்திரப் பிரசாத் அவர்களை மக்கள் அன்புடன் “பாபு” என்று அழைத்ததும்,மறைந்த திரு.ஜெகஜீவன்ராம் அவர்களை”பாபுஜி” என்று அழைத்ததும் எனக்குத் தெரியாதது அல்ல. தெரிந்தே இருந்தும்,நாம் கூப்பிடும் பெயர்ச்சொல்லுக்கு,அதன் அர்த்தம் தெரியாமல் கையில் அகராதியுடன் திரியத் தேவையில்லை என்பதை உணர்த்தவே “பாபு” என்ற சொல்லுக்கு அவ்வாறு குறிப்பிட்டு இருந்தேன்.”பாபு” என்றால் நாற்றம் என்று நான் படித்த நூலையும் கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தேன்..ஆனால் இந்திய மொழிகளில் எந்த மொழியில் என்பதைத்தான் மறந்துவிட்டேன் என்று குறிப்பிட்டு இருந்தேன்.நான் படித்த அந்த ஓஷோவின் நூல் இந்தியாவில் எனது வீட்டு நூலகத்தில் உள்ளது.அடுத்த விடுமுறைக்குச் செல்லும் பொழுது மறக்காமல் பக்க எண்ணுடன் விபரம் தருகிறேன்.

தமிழ் என்று நீட்டி முழக்கும் எங்களது இல்லங்களில் கூட, அழையா விருந்தாளிகளாக டி.வி,போன்,கார் என வேற்று மொழிகள் நுழைந்துவிட்டது என்பதைத் தான் மன வருத்தத்துடன் குறிப்பிட்டு,இந்தச் சூழலில்,இதனை மாற்றி அமைக்கும் வகையில் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் உள்ளன என்று எழுதி இருந்தேன்.

ஒவ்வொரு வருடமும் ஒரு மாதகாலம் இந்தியாவிற்கு விடுமுறைக்காக செல்லும் பொழுது,போன விடுமுறையில் பழக்கத்தில் இருந்த சொல்,இந்த விடுமுறையில் காணாமல் போவதையும்,அதன் இடத்தில் வேற்று மொழிச் சொற்கள் வந்து உட்கார்ந்து கொள்வதையும் நேரில் வருத்தத்துடன் உணர்ந்தவன் நான்.

இத்தகைய பின்புலத்தில்,மக்கள் தொலைக்காட்சியின் பாதையில் பெரும் சவால்கள் நிறைந்துள்ளது. அந்தச் சவாலை ,மக்கள் தொலைக்காட்சி நிறுவனத்தினர் நன்கு கையாள்கிறார்கள் என்ற பாராட்டினையும் இக்கடிதம் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்

அ.வெற்றிவேல்


E-mail: vetrivel@nsc-ksa.com

Series Navigation

கடிதம்

0 minutes, 1 second Read
This entry is part [part not set] of 30 in the series 20070726_Issue

செல்வி


அன்புடன் ஆசிரியர் அவர்களுக்கு.

1.மஞ்சுளா நவநீதன் அவர்கள் எழுதிய சிவாஜியை வரவேற்ப்போம் என்ற கட்டுரையில் 1500 ரூபாய் கொடுத்து இப்படத்தை பார்ப்பது சட்டத்தை மீறிய செயல் இல்லை என்கிறார். பின்னர் ஏன் பிளாக் டிக்கெட் விற்பவனை போலிஸ் கைதுசெய்கிறது?
படத்தில் கதையை எதிர்பார்ப்பது ஒரு நியாயமான எதிர்ப்பார்ப்புதானே. இத்தனை எதிர்பார்ப்பு இல்லாத பாட்ஷாவின் பக்கத்தில் கூட இந்தப்படம் போகவில்லையே என்கிற ஆதங்கம் இல்லாமல் இல்லை.

2. மலர்மன்னன் அவர்கள் எழுதியுள்ள கட்டுரை மிகவும் சிந்திக்கதூண்டியது. இஸ்லாமிய சகோதரர்களும் தங்களிடையே உள்ள இதுபோன்ற மனிதர்களை அடையாளம் கண்டு பெரிய இழப்புகளுக்கு அவர்கள் காரணமாகக்கூடிய சூழலைத் தவிர்க்க வேண்டும். இது இந்தியாவின் அமைதியான எதிர்காலத்துக்கு உதவும்.

3. சமிபத்தில் ஜப்பானில் எற்பட்ட நிலநடுக்கம் அணுக்கழிவை கடல்நீரோடு கலக்க காரணமாகி விட்டது பற்றிய செய்தி மிகவும் அதிர்ச்சியை தந்தது. மிகுந்த பாதுகாப்பு நடவடிக்கைக்கு பெயர்போன ஜப்பானில் இப்படியென்றால் நம்நாட்டின் கதை என்னாவது. திரு ஜெயபாரதன் அவர்கள் இதை பற்றியும் கழிவுகளின் கதிரியக்க பரவலின் பாதிப்பு பற்றியும் எழுதிட வேண்டும்.

செல்வி.


rm_slv@yahoo.com

Series Navigation

கடிதம்

0 minutes, 1 second Read
This entry is part [part not set] of 27 in the series 20070712_Issue

செல்வி


அன்புடன் ஆசிரியர் அவர்களுக்கு

1.மக்கள் தொலைக்காட்சி பற்றிய கடிதங்களும், கட்டுரையும் மிகவும் சிந்திக்கவும் ஒப்புக்கொள்ளவும் வேண்டியவை. தமிழால் உயிர் வளர்க்கும் பெரியோர்கள் சிந்தித்து பார்க்கவேணும்.

அந்த தொலைக்காட்சியின் வளர்ச்சிக்கு உதவ வேண்டியது நமது கடமை. ஒரு நல்ல விமர்சகர்களாய் தொடர்ந்து நிகழ்ச்சிகளை பார்த்து அதன் தரத்தை கடிதங்கள் மூலம் பதிவு செய்வது அதன் தரப்பரிசோதனைக்கு உதவும்.

2. சிவாஜி பற்றிய விமர்சனம் சிறு பத்திரிக்கை பகுதிகளில் வலம் வரும் விஷயம் ரஜினி போன்றவைகளுக்கு புரியவேணும். இத்தனை பற்றுள்ள ரசிகர்களை ஏமாற்றுகிறோமே என்கிற குற்றவுணர்வு அவருக்கு இருக்குமா? தெரியவில்லை.
இதைப்பற்றி அறிவுஜீவிகள் தொலைக்காட்சிகளில் பெசத்தேவையில்லை.

மிகுந்த ஏமாற்றத்தோடு திரும்பவைத்த படம் இது என்று சொன்னால் அது மிகையில்லை.


rm_slv@yahoo.com

Series Navigation

கடிதம்

2 minutes, 36 seconds Read
This entry is part [part not set] of 34 in the series 20070621_Issue

J.P.Noble Chelladurai


Dear sir,
This has reference to Malarmannan�s article titled Thamilnattu Parppaner Pirachanaiyum atharku Theervum.
I am a Nadar Christian

The article on Thamilnattu parppaner pirachnaiyum atharku theervum has been written at the correct time.
When I was a high school student I witnessed Brahmin �baiting among students. I have seen Brahmin students being bullied and insulted. For instance, a bone of a donkey was placed in a Brahmin student�s bag; four or five students were insulting a Brahmin boy openly because his sister was a working woman; A Brahmin headmaster�s son had to listen to students scolding his father. These things went unnoticed and unpunished. These things made me angry at that time.

I remember once I talked to the bullies very mildly in support of a Brahmin student. A fascistic brainwashing that all Brahmins are venomous was systematically spread. I happened to hear the following remark,� When you come across a cobra and a Brahmin, beat the Brahmin first�.

Even though the allegation that Brahminism was the root cause of all caste atrocities is true, the atrocities against Brahmins is not justifiable. For the caste-created crimes and injustices, all castes/ people are equally responsible except those of lower most rung.

The Dravidian thesis that Brahmins are not Tamils is forced upon Tamil people. Many Tamils_ especially the Tamils whose mother tongue is Tamil believe this emotionally. If Kabilar,the Sangam poet, Uthamathanapuram Venkatasubramanian Swaminatha Iyer, Bharathyar, Sathyamoorthy, Rajaji, Kalki, Ulloor Parameshwara Iyer, Masti Venketesa Iyengar, M.D.Ramanathan, Sundraramasamy, T.Janakiraman, Cho, Delhi Ganesh, Kamalahasan, K.Balachandar, etc etc are not Tamils, who on earth are
Tamils really?

The gap between Tamil Brahmins and other Tamils has created more havoc on Tamil society than any thing else. The separation of Brahmins made Tamils lose the intellectual support. That is how Tamil society got ready for a suicidal plunge into the hallucination called third rate cinema. (Marudur Gopalamenon Ramachandran got the reins in his hands to decide Tamils� fate. Now it is Shivaji Rao Gaikwad). Hurt by the atrocities, Brahmins naturally took anti Tamil stand. Had Tamils earned the love of Tamil Brahmins. Tamils would have achieved Tamil Eelam or atleast supporting Tamil Eelam would not have appeared to be anti_Indian.

Are Tamil Brahmins any better in this conflict? On a TV programme, Balakumaran, the writer, talked about his Guru. Who do you think it was? Kanchi Chandrsekrandra Swamigal, Ramana Maharishi, Visiri Swamigal, Saibhaba? None of them. He said it was MGR! Balachandar directed a movie called Unnal Mudiyum Thambi which shows heroine tearing her certificates in protest when asked by the employment officer to specify her caste.

I hope Brahmins will forgive and forget the wrongs done to them and Tamils as well will forgive and forget the real and imaginary past. It is high time all Tamils joined together to forge a unity to work for the upliftment of the real downdrodden Tamils.

Dear sir, tell Brahmin brothren to come foreward to record the atrocities they underwent.

The article was a real eye opener.

Yours Faithfully,

J.P.Noble Chelladurai..


noblechelladurai@hotmail.com

Series Navigation

கடிதம்

This entry is part [part not set] of 34 in the series 20070621_Issue

நரேந்திரன்.


Dear Sir,

One of the �Thinnai� reader (Mr. Prakash) was requesting me to write an article about the impacts on American economy due to the weak US Dollar. At present I�m not in a position to write the said article immediately because of various other assignments.

The following link got some interesting facts about the weak US Dollar and its pros and cons with regards to global economy.

http://www.msnbc.msn.com/id/19142947/site/newsweek/

Hope this will help.

Regards.

P S Narendran


narenthiranps@yahoo.com

Series Navigation

கடிதம்

0 minutes, 2 seconds Read
This entry is part [part not set] of 29 in the series 20070614_Issue

ஸ்ரீனி


புலம் பெயர் தமிழர்களின் “தமிழ் வளர்ப்பு”&”இந்திய இளப்பம்”குறித்து திரு.ஜடாயு அவர்களின் கடிதம் கண்டேன்,ஒரு மாதத்திற்கு முன்பு.ஒரு விபத்தினால் கால் முறிவு; உடனடியாக எழுத முடியவில்லை.இது பற்றி சில கருத்துக்கள்:

புலம் பெயர்ந்தோர் கொடுக்கும் டாலர் வெள்ளிக்காக,நம்மூர் so called இலக்கிய கர்த்தர்கள் அங்கு மேடையில் வீசும் கொம்பு சீவல் டயலாக்குகளும் காரணிகளில் ஒன்று. இந்த கர்த்தர் சபையில் எல்லா பிரபல மணிகளும் உண்டு.”உங்க ஊரைப் போல மெட்ராஸில் ரசிகர்கள் கிடையாது சார்” என்று பிரபலங்கள் சொல்வதை கேட்கும் போது நொந்து விடும்.எது என் ஊர்?! “உங்கள மாதிரி ஆட்கள் இல்லயென்றால் எங்களுக்கு நம்ப ஊரில் என்ன சார் கிடைக்கும்;மறக்காம அடிக்கடி கூப்பிடுங்க சார்” போன்ற சல்லாப வார்த்தைகளில் நம்மை சடையப்ப வள்ளல் ரேஞ்சுக்கு தட்டேத்தி விடுவார்கள்!

இது போன்ற வசனங்களில் அக மகிழ்ந்து, பிரலபங்களுடன் மேடையில் பேச சான்ஸ் கிடைத்ததையே மிகப் பெரிய வாழ் நாள் சாதனையாக நினைத்து விடும் ஒரு சிலர்,பெரிய மனித தோரணையில் கூத்துக் கட்டுவார்கள்!உணர்வுகளின் வித்தியாசங்கள் எல்லா இடத்திலும் உண்டு.அந்நிய மண்ணும் விலக்கல்ல.திருப்பதியில் காக்கா ‘கோவிந்தா’ என்றா கரைகிறது!!

ஓ.சியில் வந்து தங்கி ஊர் சுற்றுவதற்கும்,மேடையில் வழிந்ததற்கு கிடைக்கும் பச்சையப்ப தட்சிணைக்கும் ஆலாய் பறக்கும் நம்மூர் இ.கர்த்தர் சபையும்,நிதி திரட்டல் என்ற பெயரில் கேனத்தனமாக பேச நடிகர்களும், குத்தாட்டம் போட நடிகைகளும், இவையெல்லாம் தமிழ் இலக்கியம் வளமாக வளர செய்யும் சேவை என்று கட்டியம் கூறுபவர்களும் இருக்கும் வரை இது போன்ற இளப்ப தோரண கூத்துக்களும் நடக்கத்தான் செய்யும்.

ஆனால் நாமும் லேசுப்பட்டவர்கள் இல்லை.சத்யராஜ் ஏதோ ஒரு படத்தில் கூறுவது போல, “வெள்ளைக்காரன் ஜென்டில் மேனுங்க,அவன் கட்டிய தண்டவாளம்,பாலம்,அணை,கட்டிடம் எல்லாத்தையும் போகும் போது விட்டுப்போட்டு போயிட்டான்,மேனர்ஸ் தெரிஞ்சவன்.நம்ம மந்திரிமாரும் அதிகாரிமாரும் போகும் போது அப்படி எதையாவது விட்டுப்போட்டு போவானுங்களா? ஸ்குரூ ஆணியாவது மிஞ்சுமா!”

உண்மைதானே! சர்ச்சில் அன்று கூறியதை மூதரிக்க அறுபது ஆண்டுகளாக நிரம்பவே பாடுபடுகிறோமே!!

நன்றி திரு.ஜடாயு.தங்கள் கடிதம் எனது சில ஆதங்கங்ளையும் பகிர உதவியது.

ஸ்ரீனி


kmnsri@rediffmail.com

Series Navigation

கடிதம்

This entry is part [part not set] of 32 in the series 20070607_Issue

நாகூர் ரூமி


‘பிறைநதிபுரத்தானுக்கு பதில்’ என்ற கட்டுரையில் வெ.சா. “நாகூர் ரூமி satanic verses-க்கு ஆதரவாக எழுதப்போக இப்போது அவர் தன் இஸ்லாமிய புனிதத்துவத்தை நிரூபிக்க எப்படியெல்லாம் ஆவேச ஆட்டம் ஆட வேண்டியிருக்கிறது” என்று போகிற போக்கில் எழுதியிருந்ததை படிக்க நேர்ந்தது.

நான் சல்மான் ரஷ்டியின் தடை செய்யப்பட்ட நாவலான சடானிக் வெர்சஸுக்கு ஆதரவாக எதுவும் எழுதவில்லை. அந்த நாவல் தடை செய்யப்பட்ட விஷயம் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் ஒரு கடிதம் எழுதினேன். அதில், சல்மான் ரஷ்டி அவருடைய Midnight’s Children என்ற நாவலில் தொழுகையை உயர்த்தும் விதத்தில் எழுதியிருக்கிறார் என்றும், பிரதமர் ராஜீவ் காந்திக்கு அவர் எழுதிய திறந்த கடிதத்தில் இஸ்லாத்துக்கு விரோதமாக தான் எதுவும் எழுதவில்லை என்றும் கூறியிருந்தார் என்பதையும் சுட்டிக்காட்டி, இந்த காரணங்களினால் இஸ்லாத்துக்கு விரோதமாக எழுதும் ஒரு எழுத்தாளராக அவர் இருக்கமாட்டார் என்று நான் நினைக்கிறேன் என்றும், ஒரு புத்தகத்தைத் தடை செய்தால் அதைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம்தான் அதிகமாகும். எனவே இந்த நாவலைத் தடை செய்வது அதன் விற்பனையும் புகழும் அதிகமாகவதற்கு உதவி செய்யும் என்று எழுதினேன்.

அதைத் தவறாகப் புரிந்து கொண்ட சிலர் நான் இஸ்லாத்துக்கு விரோதமாக எழுதிவிட்டேன் என்றும், சல்மான் ருஷ்டியின் தடை செய்யப்பட்ட நாவலுக்கு ஆதரவாக எழுதிவிட்டேன் என்றும் சொன்னார்கள். (பல நாட்களுக்குப் பிறகு, அந்த நாவலின் பகுதிகள் பல படிக்கக் கிடைத்தது. அதிலிருந்து ரஷ்டி மிகவும் மோசமாகத்தான் எழுதியிருந்தார் என்று தெரிந்து கொண்டேன்).

நடந்தது இதுதான். அதற்குள் வெ.சா. என்னென்னவோ எழுதிவிட்டார். இஸ்லாத்தின் புனிதத்தை நான் நிரூபிக்க வேண்டியதில்லை. அதை இஸ்லாமே நிரூபித்து விட்டது. உண்மைகள் எல்லாமே புனிதமானவைதான்.

வெ.சா. பற்றிய என் கடந்த கால விமர்சனத்தை இன்னும் அவரால் மறக்க முடியவில்லை போலிருக்கிறது!

அன்புடன்
நாகூர் ரூமி


ruminagore@gmail.com

Series Navigation

கடிதம்

This entry is part [part not set] of 34 in the series 20070517_Issue

செல்வகுமார்


Dear sir,

I like to bring it to your notice that, apart from a flat translation of the SEITLHAMO MOTSAPI, the translator (whose name is not given) has translated “so the red wax of the stars would not drip onto him” as “அப்போதுதான் நட்சத்திரங்களிடமிருந்து சிவப்பு மெழுகு அவன் மீது வழியுமென்றான்”. The translator did not take the word NOT in the translation or he did not care abt that or he thought that it was not so important. An understanding and carefulness essential for translation.
thank you

sincerely
selvakumar/new delhi

Series Navigation

கடிதம்

0 minutes, 1 second Read
This entry is part [part not set] of 32 in the series 20070426_Issue

ஜடாயு


அன்பின் சசிகுமார்,

// தொட்டதெற்கெல்லாம் இந்தியனைக் கேவலப்படுத்திப் பேசும் உரிமையை யாரையா உமக்குக் கொடுத்தது? //

சிங்கப்பூர் திருக்குறள் விழாவில் இந்தியாவைக் கேவலப்படுத்திப் பேசப்பட்ட பேச்சை எதிர்த்து எழுதியதற்கு உங்களைப் பாராட்டுகிறேன்.. சில இந்தியர்களே இப்படிப் பேசியிருப்பது மனவேதனை அளிக்கிறது..

மலேசிய, சிங்கப்பூர் நாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழை வளர்க்கட்டும், தவறில்லை. அதற்காக இந்தியாவை ஏன் ஏசவேண்டும்? புலம் பெயர்ந்த தமிழர்கள் பலருக்கு இந்த இந்திய இகழ்ச்சி சரளமாக வருவதைப் பார்க்கிறேன். இது கண்டிக்கத் தக்கது.

இந்தியாவில் தமிழும், தமிழர்களும் மிக நல்ல, உயர்ந்த நிலையில் தான் உள்ளனர். இந்திய ஜனாதிபதியே ஒரு தமிழர் தான்! தமிழ் போன்றே இலக்கிய வளமும் கொண்டு பெருமளவு மக்களால் பேசப் படும் இந்திய மொழிகளும் பல உள்ளன – வங்காளி, மராட்டி, தெலுங்கு.. இந்த எல்லா மொழிகளுக்கும் இந்திய மைய அரசும், அந்த மாநில அரசுகளும் உரிய இடத்தை அளித்தே வந்துள்ளனர்… அதனால் சிங்கப்பூர் காசில் தமிழ் இருக்கிறது, இந்திய காசில் இல்லை என்றெல்லாம் பேசுவது அர்த்தமற்றது.. காசு சிறிய அளவில் உள்ளதால் இல்லை, இந்திய ரூபாய் நோட்டில் தமிழ் உட்பட எல்லா மொழிகளும் இருக்கின்றன அல்லவா?

இது பற்றி எழுதியதற்கு நன்றி.

அன்புடன்,
ஜடாயு


jataayu.b@gmail.com

Series Navigation

கடிதம்

This entry is part [part not set] of 34 in the series 20070419_Issue

சாய் (என்கிற) பேப்பர்பாய்


‘திண்ணை.காம்’ இணைய இதழில் ‘கடிதங்களும் அறிவிப்புகளும்” பகுதியில் பிரசுரிக்க

கடிதம்

By சாய் (என்கிற)பேப்பர்பாய்

அன்புள்ள திரு. மலர்மன்னன் அவர்களுக்கு,

வணக்கம். என்ன தான் அகழ்வாராய்ச்சி புத்தி ஒட்டிக் கொண்டிருந்தாலும், சில விஷயங்களை யோசித்துப் பார்க்க நமக்கு தோணுவதில்லை. இதற்கு காரணம்…நம்மை அறியாமலேயே அந்த விஷயங்கள் மீது நாம் கொண்டிருக்கும் அதீத நம்பிக்கையோ? (அல்லது ) அவை நம்முள் படர்ந்து பதித்திருக்கும் தாக்கத்தின் வீரியமா…?. தெரியவில்லை !

யாராவது தோளைத் தொட்டுத் தட்டிய பிறகே ‘அட.. ஆமா?’ என்று மனசுக்குச் முழிப்பு வருகிறது.

அந்த வகையில், தமிழால் ஜீவித்து தமிழையே சுவாசமாகக் கொண்டிருந்த /கொண்டிருக்கும் அறிஞர் பெருமக்கள் எல்லாருக்குமே தாய்மொழி தமிழாகத் தான் இருக்க வேண்டுமெனும் கட்டாயமில்லை என்கிற பரிச்சயமான யதார்த்தத்தை, எனக்கு நாசூக்காகத் தட்டி ஞாபகப்படுத்தியதாகவே தங்களின் கடிதத்தை எடுத்துக் கொள்கிறேன்.

நான் ‘திண்ணை’யில் எழுதி வரும் ‘பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ்’ என்ற தொடரின் 13வது அத்தியாயத்தைக் குறிப்பிட்டு தாங்கள் ‘திண்ணை’யில் (12-4-07 பதிப்பில்) எழுதியுள்ள அக்கடிதத்தில், ‘ மறைந்த முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் பூர்வீகத் தாய்மொழி தமிழ் அல்ல. தெலுங்கு தான்’ என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

உண்மை அதுவேயாயின் அதனை ஏற்பதில் எனக்கு சங்கோஜமோ, சங்கடமோ இல்லை. அத்துடன், அந்த தகவல் பத்திரப்படுத்திக் கொள்ளத்தக்கது என்பதால் தங்களுக்கு, ஒரு எழுத்துக்காரனாக நன்றி தெரிவிப்பதிலும் சந்தோஷப்படுகிறேன்.

நேசத்துடன்
சாய் (என்கிற) பேப்பர்பாய்


Series Navigation

கடிதம்

This entry is part [part not set] of 24 in the series 20070412_Issue

மலர்மன்னன்


அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

திண்ணையின் ஏப்ரல் 05, 2007 இதழில் பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் என்ற தொடரின் 13 வது அத்தியாயத்தில் அண்ணா தமிழர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் அண்ணாவும் அடிப்படையில் தமிழர் அல்லாத, தெலுங்கு பேசும் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். அவருடைய தாயாரின் பெயர் பங்காரம்மா என்பதுதான். அண்ணா தம் சித்தியைத் தொத்தா என்றுதான் அழைப்பார். அண்ணாவின் மனைவியார் ராணி அம்மாகூடத் தங்களுடைய பரம்பரை தெலுங்கு பேசும் குடும்பம் என்று கூறுவார். எனினும் அண்ணாவுக்குத் தெலுங்கில் எழுதவோ படிக்கவோ தெரியாது. மொழிப் பயிற்சி, பண்பாடு, பழக்க வழக்கம் சுற்றுச் சூழல் ஆகிய எல்லா அம்சங்களிலும் அவர் ஒரு தமிழனாகவே இருந்தார். இதையொட்டி அவரை ஒரு தமிழர் என்று கூறுவது பொருத்தம்தான் என்றாலும், அவரது பூர்வீகம் என்னவோ தெலுங்குதான். தமிழிலான அண்ணா என்ற சொல் தெலுங்கில் அன்னா என்றுதான் உச்சரிக்கப்படுகிறது. அதேபோல் துரை என்று தமிழில் வழங்கும் சொல் தெலுங்கில் தொர என்று வழங்கப்படும். எனவே அண்ணாதுரை என்கிற தமிழ்ப் பெயருங்கூடத் தெலுங்கிற்கும் ஏற்புடையதுதான்.

அண்ணா அவர்கள் சிறுவனாக இருக்கையில் அழகாகச் சீவிப் பின்னலிட்ட குடுமியுடன், நெற்றியில் நீளமாக ஸ்ரீசூரணம் இட்டுக்கொண்டு பள்ளிகூடம் போவாராம். மிகவும் அடக்கமான, அமைதியான பிள்ளை. அவருடைய முன்னோர்கள் விஷ்ணு காஞ்சி எனப்படும் சின்ன காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டுள்ள வரதராஜப் பெருமாளுக்குச் சேவகம் செய்யும் பாக்கியம் பெற்றவர்கள். திருமால் மீது பக்தி தோய்ந்த பரம்பரை அண்ணாவின் பரம்பரை. இளம் பிராயத்தில் பக்தி சிரத்தையுடன் வரதராஜப் பெருமாளை சேவித்து வந்தவர்தான், அண்ணா.

காஞ்சி நகரைப் பொருத்தவரை இளம் பிராய முதலே அனைவரையும் நேசிப்பவராகவும் அனைவராலும் நேசிக்கப்படுபவராகவும்தான் அண்ணா இருந்து வந்திருக்கிறார். துவேஷப் பிரசாரத்தை முழு மூச்சாகக் கொண்டு இயங்கிய ஒரு கட்சியின் தளபதியாக அறியப்பட்ட காலத்தில்கூட காஞ்சியில் அவர் எவரையும் வெறுத்ததில்லை, வெறுக்கப்பட்டதுமில்லை!

1957ல் தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக அண்ணா அவர்கள் காஞ்சியில் போட்டியிட்ட போது, காமராஜர் டாக்டர் ஸ்ரீ னிவாசன் அவர்களைக் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தினார்.

டாக்டர் ஸ்ரீ னிவாசன் வைணவ பிராமணர். அரசியலில் தீவிரமாக இயங்கியவர் அல்ல. காஞ்சியில் மிகுதியாக உள்ள வைணவ பிராமணர்கள் கட்டுப்பாடாக அவருக்கு வாக்களித்துவிடுவார்கள் என்றும், வழக்கமான காங்கிரஸ் வாக்குகளுடன் அந்த வாக்குகளும் சேர்ந்து, காங்கிரஸ் வேட்பாளரான ஸ்ரீனிவாசன் எளிதாக ஜயித்துவிடுவார் என்று காமராஜர் கணக்குப் போட்டார். காஞ்சிபுரத்து பிராமணர்களுக்கு அண்ணா மீது வெறுப்பு இல்லை என்பதை அவர் அறிந்திருக்க வில்லை. மேலும், அண்ணாவைப் படு தோல்வியடையச் செய்யவேண்டும் எனக் கங்கணம் கட்டிக் கொண்டு காஞ்சியில் முகாமிட்ட ஈ வே ரா, தெருத் தெருவாகச் சென்று மிகவும் இழிவான முறையில் அண்ணாவைப் பழித்துப் பேசத் தொடங்கியதும் அண்ணா மீது அனைவருக்கும் அனுதாபத்தைத் தோற்றுவித்து, குறிப்பாக பிராமணரிடையே அண்ணாவுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்கிற ஆவேசத்தைக் கிளப்பிவிட்டது!

அண்ணாதுரை என்னிடம் நாற்பது ஆண்டுகள் வேலை செய்தார். ஆதலால் அவரைப் பற்றி எனக்குத்தான் நன்றாகத் தெரியும்; அண்ணாதுரையின் எஜமானனாக இருந்தவன் என்கிற முறையில் சொல்கிறேன், அவர் நம்பிக்கைக்கு உகந்தவர் அல்ல என்றெல்லாம் அவருக்கே உரித்தான பாணியில் மிகவும் அனாகரிகமாகப் பிரசாரம் செய்தார், ஈ வே ரா. ஆனால் அதற்குப் பதில் சொல்லும் விதமாக ஒரு வார்த்தைகூட அண்ணா பேசவில்லை. ஈ வேரா வின் அபாண்டமான பழிச் சொற்கள் எல்லை மீறிப் போகவும், ஒரேயொருமுறை மட்டும் பொறுமையிழந்தவராய், இதுவரை நான் அவருக்குக் கடமைப் பட்டவனாயிருந்தேன். இனி அவர் எனக்குக் கடமைப்பட்டவராவார் என்று மனம் நொந்து சொன்னார்.

காஞ்சிபுரத்தில் அண்ணாவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ய வந்த நகைச் சுவை நடிகர் என் எஸ் கிருஷ்ணன் அவருக்கே உரிய நகைச் சுவை உணர்வுடன், அண்ணா அவர்கள் திராவிடர் கழகத்தவராக இருந்தவராயிற்றே என்று எங்கே பிராமணர்கள் அவருக்கு வாக்களித்துவிடாமல் இருந்துவிடுவார்களோ என்றுதான் ஈவேரா இப்படியெல்லாம் பேசி அண்ணா மீது அனுதாபம் அதிகரிக்கச் செய்வதோடு, தம்மீது பிராமணர்களுக்கு உள்ள கோபம் அண்ணாவுக்குச் சாதகமாகத் திரும்பவும் வழி செய்கிறார்; என்ன இருந்தாலும் தந்தைப் பாசம் இல்லாமல் போகுமா என்றார்.

என் எஸ் கிருஷ்ணன் நகைச் சுவையுடன் இன்னொரு விஷயமும் சொன்னார்.

டாக்டர் ஸ்ரீனிவாசன் கைராசியான டாக்டர். மனிதாபிமானம் மிக்கவர். அதிகம் பீஸ் வாங்காமல் அருமையாகச் சிகிச்சை செய்பவர். இப்படிப்பட்ட டாக்டரின் சேவை காஞ்சிபுரத்து மக்களுக்கு எந்நேரமும் அவசியம். அவரை எம் எல் ஏ யாக்கிவிட்டால் அடிக்கடி சென்னைக்குப் போய் டேரா அடித்துவிடுவார். அவசரத்துக்குக் கிடைக்க மாட்டார். ஆகையால் அவரைக் காஞ்சிபுரத்து மக்கள் காஞ்சியிலேயே பிடித்துவைத்துக்கொள்ள வேண்டும். பேசுவதைத் தவிர வேறு எதுவும் தெரியாத அண்ணாவைப் பேசுவதற்கென்றே இருக்கிற சட்டசபைக்கு அனுப்பிவிட வேண்டும் என்றார், என் எஸ் கே.

இதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்த டாக்டர் ஸ்ரீனிவாசன், என் எஸ் கிருஷ்ணன் சொல்வது சரிதானே, உண்மையில் என்னைவிட சி என் ஏ சட்டசபைக்குப் போவதுதான் பொருத்தம் என்றார்.

தேர்தலில் அண்ணா வெற்றி பெற்று, ஓராண்டு கழித்துத் தொகுதி நலத் திட்டங்களுக்காகத் தண்டலம் என்கிற இடத்தில் முதலமைச்சர் காமராஜரையும் பிறரையும் அழைத்து ஆய்வுக்கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில் பங்கேற்ற டாகடர் ஸ்ரீனிவாசன், காஞ்சிபுரம் தொகுதியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்ற முற்றிலும் தகுதி வாய்ந்தவர் அண்ணாதான் என்பது நிரூபணமாகிவிட்டது என்று மனமாரப் பாராட்டினார்.

தமிழ் நாட்டில் பரம்பரை பரம்பரையாகத் தெலுங்கு பேசும் பல்வேறு வகுப்பார் குடியேறித் தமிழகத்தைத் தமது தாயகமாகக் கொண்டுள்ளனர். இவர்களில் பலர் இன்றளவும் வீட்டில் தெலுங்கர்களாகவும் வெளியில் தமிழர்களாகவும் உள்ளனர். வீட்டில் இவர்கள் பேசும் தெலுங்கு தமிழ் மொழியின் தாக்கத்தால் ஆந்திர தேசத்தவரால் அடையாளங் காண வியலாத அளவுக்கு மிகவும் சிதைந்துவிட்டிருக்கிறது. இவர்களையும் தமிழர்களாகக் கருதுவதுதான் முறை என்றாலும், வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் பதிவு செய்ய
வேண்டிய வாழ்க்கைக் குறிப்புக்குரியவர்களைப் பற்றித் தகவல் தருகையில் இதுபோன்ற அடிப்படை உண்மைகளைத் தெரிவிப்பது அவசியமாகிறது. மற்றபடி, அண்ணாவைப் பற்றி இத்தகவலைத் தருவது அண்ணாவைத் தமிழர்களிடமிருந்து அந்நியப்படுத்துவதாகாது. பாரத தேசத்து மக்கள் யாவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளேயாவர் என்கிற உணர்வு இருக்கும்வரை, மொழியால் அவர்களிடையே பேதம் பார்க்கத் தோன்றாது.

தமிழ் நாட்டில் வீட்டிலே தெலுங்கு பேசுவோரைப் போலவே கன்னடம், மராட்டி, சௌராஷ்டிரம் குஜராத்தி, மார்வாரி எனப் பல்வேறு மொழியினர் பல நூற்றாண்டுகளாகத் தமிழ் கலாசாரத்துடன் ஒன்றி, எல்லா அம்சங்களிலும் தமிழர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள். தமிழ் நாட்டின் நலன் கருதுபவர்களாகவும் தமிழ் மொழி வளம் பெறுவதில் நாட்டம் உள்ளவர்களாகவும் இவர்கள் உள்ளனர் என்பதிலும் ஐயமில்லை.

அண்ணா தி மு க தொடங்கப்பட்ட கால கட்டத்தில் புதுவை மாநிலத்தில் தேர்தல் வந்தபோது மலையாளப் பகுதியைச் சேர்ந்த, ஆனால் புதுவை மாநிலத்திற்குட்பட்ட மாஹேயில் தேர்தல் பிரசாரம் செய்வதற்குச் சென்ற எம் ஜி ஆர் மலையாளத்தில் சரியாகப் பேசமுடியாமல் தட்டுத் தடுமாறுகிற அளவுக்குத் தமிழராகவே மாறிப்போய்விட்டிருந்ததும் அவர் பேசிய மலையாளம் தமிழைப் போலத்தான் இருந்தது என்பதும் நினைவுக்கு வருகிறது.

அன்புடன்,
மலர்மன்னன்


Series Navigation

கடிதம்

0 minutes, 0 seconds Read
This entry is part [part not set] of 33 in the series 20070405_Issue

ஸ்ரீனி



திரு.ஜடாயுவிற்கு நன்றி!!

தமிழ் வலைப் பூக்கள் பற்றிய என்னுடைய திண்ணைக் கட்டுரையை ஜடாயு அவர்கள் தன் வலைப்பூவில் போட்டாலும் போட்டார்,எனக்கு பல மின் மடல்கள்.ஒரு சில பாராட்டியும்,சில மிக நாகரீக(!?)மாகவும் வந்தன.கவனிக்கவும்,என்னுடைய இந்த ஒரு கட்டுரையோடு மட்டும்தான் ஜடாயு அவர்கள் தான் ஒத்துப் போவதாக கூறியுள்ளார்.

ஒரு பெண் பதிவர் கேட்கிறார்..ஏன் நாங்க எல்லாம் இப்பவும்தானே எழுதுகிறோம்!பல நன்றாக எழுதிய,எழுதக் கூடிய பெண் பதிவர்கள் இன்று பதிவதில்லை.இதுதான் நான் சொல்லியது.நான் எழுதுகிறேனே,பயப்படவில்லையே என்றால் என்ன சொல்வது!வாழ்த்துக்கள்!பலர் இன்று(இதில் ஆண் பதிவர்களும் உண்டு)எழுதாமல் இருப்பது பயத்தால் அல்ல.ஆபாசம் கண்ட அருவெறுப்பினால்!

ஒன்று புரிந்தது.ஜடாயு அவர்கள் என் கருத்துடன்(இதில் மட்டும்) ஒப்பியதால்,அவர் எழுத்திற்கு எதிர் வினையாடுபவர்கள் என்னையும் தங்கள் லிஸ்டில் போட்டு விட்டனர்.! என் கட்டுரை என் ஆதங்கத்தின் வெளிப்பாடு!

என்னையும் பிரபலமாக்கிய(!??) ஜடாயு அவர்களுக்கு
மறுபடியும் என் நன்றி!

ஸ்ரீனி

Series Navigation

கடிதம்

This entry is part [part not set] of 28 in the series 20070315_Issue

மலர் மன்னன்


அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

திண்ணையில் எனக்குக் கிடைத்துள்ள இடத்தை எவர் மீதும் அபாண்டமாகப் பழி சுமத்துவதற்கான வாய்ப்பாக ஒருபோதும் பயன் படுத்திக்கொள்ள மாட்டேன்.

மூப்பனார் பற்றிய எனது கட்டுரையில்,

எப்போதும் ராஜீவ் காந்தியை மொய்த்துக்கொண்டு தாங்கள்தாம் ராஜீவுக்கு மிகவும் நெருக்கம் என்று தமக்குள் போட்டி போடுபவர்கள் மே 21 ந்தேதி மட்டும் அவரை அம்போ என்று தனியாக விட்டு விட்டது ஏன் என்று யோசிக்கத் தெரியாதவரா மூப்பனார்?

என்றுதான் குறிப்பிட்டிருந்தேன். இது மூப்பனார் மீதே குற்றம் சாட்டுவதுபோன்ற எண்ணத்தைச் சிலருக்குத் தோற்றுவிக்கும் என்று நினைக்கவில்லை. மூப்பனார் என்றுமே தம்மை முன்னிலைப் படுத்திக்கொள்ளாமல் எப்போதும் பின்னணியிலேயே இருந்து, அமைப்பைக் கட்டமைக்கும் சாதனையாளர் என்பதை நன்கு அறிவேன். காமராஜர் மறைந்ததும் நன்கு கட்டமைக்கப் பட்டிரு ந்த ஸ்தாபன காங்கிரசை இந்திரா காங்கிரசுடன் அவர் உடனடியாக இணைத்து விட்டதால்தான் இன்று அது தனது பாரம்பரியப் பெருமையை இழந்து தமிழ் நாட்டில் ஒரு துணைக் கட்சியாக இயங்க வேண்டியதாயிற்று என்கிற வருத்தந்தான் எனக்கு உண்டே யன்றி அவர் மீது பழி சுமத்தும் எண்ணம் சிறிதும் இல்லை. சுய லாபத்திற்காக மூப்பனார் இணைப்பினைச் செய்தார் என்று எவராலும் கருதவும் இயலாது.

மேலும், ராஜீவ் படுகொலை தொடர்பாக உறுதிபடச் சில நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டிருக்க முடியும், ஆனால் அதற்கான துணிவு அவருக்கு இல்லாமல் போய்விட்டது என்பதைத்தான் சுட்டியிருந்தேன். அந்தப் பாராவில் தொடர்ந்து வரும் எனது வரிகள் இதைத்தான் குறிப்பால் உணர்த்துவதாக இப்போதும் நம்புகிறேன். இது பற்றி இதற்கு மேலும் விவாதித்தால் ரசாபாசமாகிவிடும். கட்டுரைக்கு எதிர்வினை செய்த அன்பர் கோவிந்த ராஜனே ஒரு நபரின் பெயரைக் குறிப்பிட்டு விட்டதே போதுமானதாக இருக்கும்.

முந்தைய ஸ்தாபன மற்றும் இந்திரா காங்கிரசில் இன்று பிரபலமாக விளங்கும் பலரை அவர்களின் தொடக்க காலத்திலிருந்தே நன்கு அறிவேன். அந்த வகையில்தான் குமரி அனந்தனை நினைவூட்டியமைக்காக மிகவும் மகிழ்ச்சியடைந்து சில வரிகள் எழுத நேர்ந்தது. சாதியடிப்படையில் அவர் காமராஜர் நிலைப்பாட்டை ஆதரித்தது போன்ற கருத்ததைத் தோற்றுவித்தமையால்தான் அதுபற்றியும் குறிப்பிட நேர்ந்தது. மற்றபடி தனிப்பட்ட நட்பையும் அரசியலையும் சேர்த்துக் குழப்பிக் கொள்வதில்லை.

இந்திரா காங்கிரஸ் மட்டுமின்றி, தி மு க, அண்ணா தி மு க கம்யூனிஸ்ட் எனப் பல கட்சிகளிலும் எனக்கு நன்கு அறிமுகமான முந்தைய தலைமுறையினர் பலர் இன்றும் இருக்கத்தான் செய்கின்றனர். எனது கோட்பாடுகளை அவர்கள் நன்கு அறிந்துள்ள போதிலும் அவர்களுடனான நட்புக்கு எவ்வித ஊறும் நேராமல் இருப்பது அரசியலைத் தனியாகப் பிரித்து வைக்கத் தெரிந்திருப்பதால்தான்.

கடந்த பிரவரி மாதம் 19 ந் தேதி உ. வே. சா. அவர்களின் பிறந்த நாளையொட்டி சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அவர் நினைவைப் போற்றும் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது கூட, இன்று தமிழக நிதியமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் மரியாதைக்குரிய க. அன்பழகன் அவர்கள் மிகவும் அன்பு ததும்ப விசாரித்துத் தம் தந்தையார் மறைந்த கலியாண சுந்தரனாருக்கு என்மீது இருந்த அன்பை நினைவு கூரத் தவறவில்லை. அரசியலையும் நட்பையும் இருவேறு அம்சங்களாக அடையாளங் காண்பதால்தான் இவை போன்ற சம்பவங்கள் சாத்தியமாகின்றன.

கடைசியாக ஒன்று: கிட்டத்தட்ட சேரியைப் போன்ற பகுதியில்தான் தற்போது நான் இரண்டே அறையுள்ள சிறு குடித்தனப் பகுதியில் மிகுந்த மன நிறைவோடும் விருப்பத்தின் பேரிலும் வசித்து வருகிறேன். அடுக்கு மாடி உச்சி எதிலும் வாசம் செய்யவில்லை.

அன்புடன்,
மலர் மன்னன்


malarmannan79@rediffmail.com

Series Navigation

கடிதம்

This entry is part [part not set] of 35 in the series 20070308_Issue

சுப்புராஜ்


திண்ணை ஆசிரியர் குழுவிற்கு,

வணக்கம். சுப்புராஜ் எழுதுகிறேன்.
நான் சமீப நாட்களாகத்தான் திண்ணை மின்னிதழை வாசித்து வருகிறேன். எல்லோரும் தங்களின் கருத்துக்களை சுதந்திரமாக விவாதிக்க திண்ணை களமமைத்துக் கொடுத்து வருவதைப் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. ஆரோக்கியமான இலக்கியப் படைப்புகளும் அரங்கேறி வருகின்றன. தொடரட்டும் உங்களின் பணி. வாழ்த்துக்கள்! முடிந்த போது மீண்டும் எழுதுகிறேன். எல்லோருக்கும் என் அன்பும் விசாரிப்புகளும். மீண்டும் நன்றி சொல்லி முடிக்கிறேன்!

பிரியங்களுடன்
சுப்புராஜ்.


engrsubburaj@yahoo.co.in

Series Navigation