சான்றுகள்
சுகுமாரன்

@
ஒரு காக்கை
தன் எச்சத்தைக்
கொத்தி விழுங்கியதில்லை
இன்னொரு காக்கை
மற்றொரு காக்கையின் எச்சத்தைக்
கொத்தி ஊட்டியதில்லை.
காக்கைமட்டுமல்ல
குருவி,கழுகு
எந்தப் பறவையும்
ஒரு பன்றி
தன் விட்டையை
நக்கிப் புசித்ததில்லை
இன்னொரு பன்றி
மற்றொரு பன்றியின் விட்டையைப்
புசிக்கச் செய்ததில்லை.
பன்றிமட்டுமல்ல,
கழுதை,நாய்
எந்த விலங்கும்
நானும்
என் மலத்தைத் தின்பதில்லை
உன்னைத்தான் தின்னவைக்கிறேன்
நான்,நீ,நாம்
ஒவ்வொருவரும்.
பறவைகள் விலங்குகளை விடவும்
மேலானவர்கள் நாமென்பதற்கான
அதிகப்படியான சான்றுகள்
அன்றாடம் உருவாகிக்கொண்டிருக்கின்றன.
@
சு கு மா ர ன்
n_sukumaran@rediffmail.com