This entry is in the series 20080731_Issue

ஹெச்.ஜி.ரசூல்


எதிரிகளின் பிடியிலிருந்து தப்பித்து
மறைவாக்கிக் கொண்டேன் என்னை
சிலுவையில் அறையப்பட்டது
என்னைப் போலொத்த
பிறிதொரு உருவமென்பது ரகசியம்
இறைவனின் தூததொருவரை
உண்மையிலேயே கொல்லமுடியுமா..?
சிலுவையில் அறையப்பட்ட நபி
நேற்றென் கனவில் பேசினார்
.o
ரத்தம் சொட்டச் சொட்ட
கொல்லப்பட்டது நான் தான்
சிலுவைமரணத்தை ஆட்கொண்ட
என்னுடலின் உறுப்புகள்
சிதைவைத் தழுவின.
கடவுளின் குமாரனென்ற உண்மைக்காய்
மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தேன்
நன்பனின் கனவில் வந்தும் பேசினார்
சிலுவையில் தொங்கிய நபி.


mylanchirazool@yahoo.co.in

Series Navigation