வண்ணத்திப்பூச்சி
பா.அ.சிவம்

வீட்டைச் சுற்றி சுற்றி
வந்துக் கொண்டிருந்தது
ஒரு வண்ணத்திப்பூச்சி ..
.
தலையில் அமர்ந்தது
முதலில்
தோளில் இறங்கியது
பின்னர் …
விரட்ட முயன்றேன்
மனமில்லை
எனினும் …
விட்டு விட்டேன்
அதன் போக்கில் …
வேறு யார்
செய்வார்
இதையெல்லாம்
அம்மாவின்
நினைவு நாளில் …
பா.அ.சிவம், கோலாலும்பூர்
sivam_balan@yahoo.com