புரிந்து செய்!!
இமாம்.கவுஸ் மொய்தீன்
‘காற்றுள்ள போதே
தூற்றிக் கொள்’
காலம் கடந்து
புரிந்தது!
உடன் இருந்த
நண்பரின் பெருமை
பிரிந்த பின்பே
புரிந்தது!
நன்றாய் இருந்த
உறுப்பின் அருமை
பழுதடைந்த பின்
புரிந்தது!
பயன் அளித்த
பொருளின் சிறப்பு
இழந்த பின்னர்
புரிந்தது!
உலகக் கோப்பை
வெல்லும் திறமை
தோல்விக்குப் பின்னே
புரிந்தது!
இருக்கும் போது
செய்யத் தவறியது
மரணப் படுக்கையில்
புரிந்தது!
புரியாதது
புரியும் முன்
புரிந்து கொண்டு
செய்து விடு!!
-இமாம்.கவுஸ் மொய்தீன்.
drimamgm@hotmail.com