மௌனம்
Published August 9, 2007 • By
ஆதிராஜ்
ஆதிராஜ்

மௌனமொரு பூஞ்சோலை – வண்ண
மலர்கள் அங்கு சிந்தனைகள்!
மௌனமொரு மொழியாகும் – அது
மனத்தீயை உசுப்பி விடும்!
மௌனமோர் இமயமலை! – அங்கு
மனமெங்கும் கங்கை நதி!
மௌனமொரு கலையரங்கம் – அங்கே
மனமேடை நாடகங்கள்!
மௌனமொரு சிறைச்சாலை – அங்கு
மனக் குரங்கு வசமாகும்!
மௌனமொரு மருந்தாகும் – பகை
மாறி வரும்! உறவாகும்!
மௌனமொரு நோன்பாகும்! – உண்மை
மலரும்! மனம் நிறைவாகும்!
மௌனமொரு விளக்காகும்! – இருள்
மறையும்! பாதை தெளிவாகும்!
மௌனம் தனி உலகமடா! – அதில்
மங்கலம் அனைத்து முண்டு!
– ஆதிராஜ்.