அவளுக்கான பூக்கள்/அவை கால்தடங்கள் மட்டுமன்று
Published December 7, 2007 • By
ப்ரியன்.
ப்ரியன்
அவளுக்கான பூக்கள்
ஓர் அதிகாலையில்
அவளுக்கான பூக்கள்
சேகரித்தவண்ணம்
நடந்து செல்கிறேன்;
புல் மீதான உறக்கம் கலைய
மண் முத்தமிட்டு
மரணம் தழுவுகின்றன
பனித்துளிகள்!
அவை கால்தடங்கள் மட்டுமன்று
மழை ஓய்ந்த நாளொன்றில்
நடைபயிலும் மழலைகளின்
கால்தடங்களை
தன் அறை சுவர் ஓவியங்களாக
பத்திரப்படுத்திக் கொள்கிறது பூமி!
mailtoviki@gmail.com