December 7, 2007
ப்ரியன்அவளுக்கான பூக்கள் ஓர் அதிகாலையில் அவளுக்கான பூக்கள் சேகரித்தவண்ணம் நடந்து செல்கிறேன்; புல் மீதான உறக்கம் கலைய மண் முத்தமிட்டு மரணம் தழுவுகின்றன பனித்துளிகள்! அவை கால்தடங்கள்…
January 4, 2007
ப்ரியன். கூண்டில் உதிர்ந்திட்ட ஒற்றை சிறகு; அடிகாற்றின் விசையில் கனமாய் படபடத்தபடி அரற்றிக் கொண்டிருக்கிறது பறவையின் விடுதலை தாபத்தை! - ப்ரியன். mailtoviki@gmail.com
September 7, 2006
ப்ரியன் ஒடிந்த வலியினையும் தீக்கோலிட்ட புண்ணினது ரணத்தையும் காற்றினூடே சொல்லிச் சொல்லி அழுகிறது புல்லாங்குழல் - ப்ரியன். mailtoviki@gmail.com
September 5, 2006
ப்ரியன் சென்ற வருட வறட்சிக்கே ஊர் காலியானது தெரியாமல் இன்னும், காவல் காத்துக் கொண்டிருக்கிறார் ஊர் எல்லையில் அய்யனார் - ப்ரியன் mailtoviki@gmail.com
July 20, 2006
ப்ரியன் * ஆற்றிலிருந்து தோண்டப்படுகிறது மணல் அக்குழியிலேயே அவ்வாற்றை சமாதியாக்க! * வெள்ளி ஒட்டியாணமாய் ஆறு ஓடிய எம் ஊரின் தெருவெல்லாம் தண்ணீருக்காய் பிளாஸ்டிக் குடங்களின் தவங்கள்…
April 14, 2006
ப்ரியன் இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே ஊடகங்கள் அரசியலில் பெரும்பங்காற்றி வருகின்றன.அன்று தேசிய நலனை முன்வைத்து அநேகமான எல்லாப் பத்திரிக்கைகளும் ஏடுகளும் இந்திய சுதந்திர வேகத்தை ஊட்டி வந்தன,வரவேற்கப்படவேண்டியவை.அன்றிருந்த…
December 16, 2005
ப்ரியன் ஊனமான நெஞ்சம் மெல்ல தத்தித் தத்தி தாவும்! இயலாமையில் தீக்கிரையாக்கிய என் கவிதைகள் கொஞ்சம் சிறகு முளைத்துப் பறக்கும்! அறுப்பட்ட வீணை மனதில் மெல்லிய கீதம்…
May 13, 2005
ப்ரியன் வனாந்திரத்தில் வனாந்திரமாய் அலைந்தேன்! அங்கொன்றும் இங்கொன்றுமாய் திரியும் பாம்புகளைத் தவிர வேறு ஜீவராசிகள் இல்லை துணைக்கு! சுற்றி சுற்றி வந்தாலும் ஏதோ ஒன்று கொண்டு சேர்க்கிறது…
May 6, 2005
ப்ரியன் தப்பு தப்பாய் தமிழ் வாசிக்க அறிவாய்! தாறுமாறாய் எழுதித்தந்தாலும் தலைவன் எனக்காக தரமானது என்பாய்! கவிதை புத்தகங்கள் காணோமென்று தேடினால் தலையணை அடியிலிருந்து எடுத்து நீட்டி…
May 6, 2005
ப்ரியன் தளிரோடு தளிர் ரகசியம் பேசி சிரிக்கும்! கிளையும் முடிந்தமட்டும் வளைந்து நெளிந்து குலுங்கி வைக்கும்! பலமிழந்த பூக்களும் காய்க்கனியும் புன்னகை சுமந்து மண் முத்தமிடும்! தப்பி…