உயிருள்ள அதிசயம்..
பனசை நடராஜன்

மொழியின் நாற்றங்கால்
முப்பரிமாண ஓவியம்..
தவழும் மெய்க்கடவுள்..
தலைமுறையின தொடர்ச்சி..
உடலால் வளர்பிறை..-கள்ளமில்லா
உள்ளத்தால் பெளர்ணமி..
கடலளவு துயரத்தையும்
கண்டவுடன் மறைய வைக்கும்
‘கையடக்க சந்தோஷம் ‘!
குடும்பப் பிணக்கைப் போக்கி
குதூகலம் மட்டுமே தரும்..
இருவரால் உருவான இந்த
உயிருள்ள அதிசயம்..!!
-பனசை நடராஜன், சிங்கப்பூர்
feenix75@yahoo.co.in