நட்பா, காதலா
புதுவை சங்கரன்

நான் காதல் வரம் கேட்டேன்
நீ நட்பு விமோசனம் தந்தாய்,
நான் காதல் சுவாசம் கேட்டேன்
நீ நட்பு மூச்சு தந்தாய்,
நான் காதல் தோட்டம் கேட்டேன்
நீ நட்பு மலர் தந்தாய்,
நான் காதல் சிம்மாசனம் கேட்டேன்
நீ நட்பு நாற்காலி தந்தாய்,
நான் காதல் யாசகம் கேட்டேன்
நீ நட்பு பிச்சை தந்தாய்,
நான் காதல் வாழ்க்கை கேட்டேன்
நீ நட்பு உயிர் தந்தாய்,
என் காதல் வரம் நிராகரிக்கப்பட்டாலும்
நட்பு விமோசனம் தந்தவளே,
உனக்காக என் காதல் சலனச்சருகுகளை
நம் நட்பு தீயில் எரித்துவிடுகிறேன்.
—-X—-
அன்புடன்,
புதுவை சங்கரன்.
vshan80@yahoo.com