பெரியபுராணம் – 86 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

This entry is part [part not set] of 34 in the series 20060428_Issue

பா.சத்தியமோகன்


2393.

சொல்மலை வேந்தரான அப்பர் பெருமானும்

திருத்தோணிபுரம் எனும் ஊர் தோன்றிய ஞானசம்பந்தர்

தம் காதலுடன் தொடர்ந்து செல்ல திருப்புகலூர் தொழ போய்ச் சேர்ந்தார்

புகலிப்பிரானாகிய சம்பந்தர் இடைவிடாமல் நினைவுடைய மனது

திருவிற்குடி வீரப்பதிகத்தை அடைந்து

காளையூர்தி உடைய இறைவரின் திருவடி வணங்கினார்

பலப்பல ஆயிரம் தொண்டர்களுடன்

பாடலானான் மறை எனத்தொடங்கும் திருப்பதிகம் பாடினார்

திருவாரூர் சென்றார்

(வடிகொள் எனும்பதிகம் திருவிற்குடி வீரட்டப்பதிகம்)

2394.

மலர்க்கொத்துகள் உடைய சோலையும்

நெல்லினை வேலிபோல் கொண்ட நீர்த்துறை வயல்களையும்

மணம் பொருந்திய கரும்புக்காடுகளையும்

ஞானம் உண்ட பிள்ளையார் கண்டார் பக்கமெங்கும்

அணைந்து சென்றபடி

அள்ளழகன் கழனி ஆரூர் அடைவோமே என மொழிந்தார்

அன்பு பொங்கியது

இசையுடன் கூடிய செந்தமிழ்ப்பதிகத்தால் போற்றினார்

அழகிய மதிலுடைய திருவாரூர் பக்கம் அடைந்தார்

(பாடலனான் மறை எனத் தொடங்கும் பதிகம் செல்லும் வழியில் பாடியது)

2395.

வானில் செங்கதிர் உடைய ஞாயிறு மண்டலத்தின் பக்கத்தில் அணையும்

நீண்ட கொடிகள் பொருந்திய திருவாரூர் நகர்

ஒரு பொன் உலகம் போல் தோன்றி விளங்கும் ஒளியை முன்னே கண்டார்

சீகாழியில் தோன்றிய பால்போன்ற வெண்ணிறம் கொண்ட திருநீறு அணிந்த
சம்பந்தர்

பருக்கை யானை எனத் தொடங்கும் திருப்பதிகத் தமிழ் இசையினை

தேனுடன் வண்டு ஒலிக்கின்ற சோலைகள் சூழ்ந்த அப்பதியின் எல்லை அடைந்தார்.

2396.

பொங்கியது சிந்தையிலிருந்த விருப்பு

அது வெள்ளமாகியது பொழிந்தது அது

பூமி மீது விளங்குவது போல

எப்பக்கமும் குளிர் ஒளி வீசும் முத்துப் பல்லக்கிலிருந்து

இறங்கி வந்தார் தமிழ் விரகரான ஞானசம்பந்தர்

சிவந்த திருக்கையில் நிறைந்த மலர்கள் கொண்டு தூவினார் வழிபட்டார்

திருவிருக்குக்குறம் பதிகம் பாடிப் புகழ்ந்தார்

தங்கள்: பிரான் சிவபெருமான் அரசாளும் திருவாரூர் நகர் பணிந்தார்

(சித்தம் தெளிவீர்கள் எனத் தொடங்கும் பதிகம் பாடி அருளினார்)

2397.

ஒப்பிலா ஞான அமுதம் உண்டருளிய பிள்ளையாரை பணிவதற்காக

அடியார்கள் சென்று எதிர்கொள்ளும் அந்நாளில்

வடிவு கொண்ட சூலத்தை உடைய இறைவர்

நிலையாய் எழுந்தருளிய பொன் மதில் கொண்ட

திருவாரூரின் பேரலங்காரத்தை காணமுடியும்

2398.

புனுகும் கஸ்தூரியும் கலந்த குளிர் பெருகும் சேற்றில்

உயர்ந்த பொன் போன்ற தூய குணமுடைய சுண்ணப்பொடிகள் தூவி

ஒளியுடைய அழகு ¦செய்யப்பட்ட தெருக்கள்

ஆடி வழுக்குகின்றன அந்தச் சேறும் துகளும் கரைந்து போகுமாறு

பூக்களிலிருந்து வான்மழைபோல் தேன்மழை பொழிவதால்.

2399.

மாடங்கள் மாளிகைகள் மண்டபங்கள் என

திரும்பிய பக்கங்களிலெல்லாம் துணிக்கொடிகள்

அழகானகூந்தலுடைய கொடி போன்ற பெண்கள்

காடு தானோ என வியக்கும்படி

வாழைகள் தோரணங்கள் பாக்குமரங்கள் இருந்தன

வண்டுகளும் பொன்குடங்களும் மலர் இதழ்கள் அணிந்தன.

2400.

அத்தகு பக்கங்கள் சூழ்ந்த புறவாயில்களில் மாலைப்போதில்

மணிகளின் வரிசையுடன் தொங்கும் விளக்குகளில்

அழகிய நீண்ட சுடர் ஒளி

அதனுடன் தொடர்பு கொண்ட இடை இடையே உள்ள

நீல்மணிகளின் நிழல்

சுடர் ஒளியும் நிழலும் கூடி அலைப்பதால்

பவளநிறத் திண்ணைகளின் மேல் உள்ள பூம்பந்தல்களில் செந்நிறம்

புகர் நிறம் அடைந்தது.

2401.

தழைத்த மலர்களின் தடச்சாலைகள் எங்கும் முழக்கங்கள்

குழைந்த முகத்துடன் ஆடுகின்ற அரங்கில் சிறு குழுக்கள்

விழைந்த சிறப்புடன் பார்க்குமிடம் யாவும்

முழங்கின மழையின் முழக்கமென மங்கல வாத்தியங்கள்.

2402.

மேலே குறித்தவாறு வேறு வேறு பேரலங்காரமுடன்

தேனுடைய மென்மலர் சோலைகள் சூழ்ந்த பெருமை கொண்ட திருவாரூர்

அரசாளும் தியாகராசப்பெருமான் அருளல்

அடியவர் கூட்டமும் மற்ற மக்களும் நகரின் வெளியே வந்து

பிள்ளையாரை அன்புடன் எதிர்கொண்ட போது-

2403.

தம் எதிரே வந்து இறைஞ்சுகின்ற

மெய்த்தொண்டர் கூட்டத்தைத் தாமும் வணங்கி

சத்தமுடைய முத்தமிழ் வல்லுநரான சண்பையர் தலைவர் சம்பந்தர்

அந்தமாய் உலகம் ஆதியாம் எனும் பதிகம் அங்கு தொடங்கி

எம்பெருமான் தான் எனை ஏற்றுக்கொள்வாரோ எனும் கருத்துடன் இசைந்தார் .

2404.

அத்திருப்பதிகத்தைப் பாடியவாறே வந்தணைகின்ற

ஞானவித்தகரான பிள்ளையாரை

மெய்த்தவம் உடையவர்கள் சூழ்ந்து வரவும்

அத்திருவரூர் நகரினர்

மலர்களையும் பொரிஒயினையும் தூவித் தொழுது வணங்க

வானநாயகர் சிவபெருமான் கோயில் வாசல் அடைந்தார் சம்பந்தர்.

2405.

தோரணங்கள் நிலைபெற அமைந்த வாயில் முன்பு

வணங்கி உட்புகுந்தவரான பிள்ளையார்

தன்னுள் எல்லா வகைப் பெருமையும் தாங்கிய தன்மையுடைய

பலநீண்ட ஒளி வரிசைப்பரப்பினைப் பார்த்து தலை வணங்கி

தேவாசிரிய மண்டபம் தொழுது வணங்கினார்.

2406.

பக்கத்திலும் சுற்றிலும் சூழ் திருமாளிகை வலம் கொண்டு வந்து வணங்கினார்

கூடும் காதலினால் கோபுரத்தைப் பணிந்து கை குவித்தார்

தம்மைத் தேடும் திருமாலுக்கும் நான்முகனுக்கும் அரியவராகி

செழுமையான மணிப்புற்றுள் இடம்கொண்டு

நீடி எழுந்தருளியுள்ள இறைவரைப் பலமுறையும்

நிலத்தில் விழுந்து வணங்கினார்.

2407.

ஞானசம்பந்தர் பணிந்து வீழ்ந்தார் பதைத்தார்

உடல் முழுதும் மயிர்ப்புளகம் பரவி

அணிந்த மேனியோடு ஆடினார் பாடினார்

அறிவில் துணிந்து கண்டு மெய்பொருளான சிவபெருமானை

வெளியிலும் கண்டு துதிப்பவராகி

தம் தணிந்த உள்ளத்தில் விரைந்து எழுகின்ற

விருப்ப்த்தால் வணங்கினார்.

2408.

செஞ்சொல்லான வண்தமிழ்ப்பதிகம் தொடங்கி

நஞ்சினை அமுதம் எனப்பருகிய இறைவர் முன்பாடி

மேகம் சூழ்ந்த மாளி¨கௌ வாயிலின் பக்கம் அடைந்து

திருஐந்தெழுத்தின் மெய் உணர்ந்தவரான பிள்ளையார்

திருமடம் அடைந்தார்.

2409.

அத்திருமடத்தில் தங்கிய பிள்ளையார்

திருவரனெறி என்ற கோயிலில் விரும்பி எழுந்தருளிய

சிவந்தகண் உடைய காளைவாகனரான இறைவரின்

சேவடி வணங்கி திளைத்தார்

பெரும் பேரொளியுடைய புற்றிடம் கொண்ட பெருமானின்

தூய்மையான தாமரை போன்ற திருவடிகள் காலம்தோறும் தொழுதார்

(அரனெறி திருவாரூர் கோயிலில் தென்கிழக்குத் திசையில் உள்ள
தனிக்கோயில்)

2410.

புற்றில் கோயில் கொண்டவருளும் புனிதரான இறைவரைப் போற்றினார்

இசை பெருகப் பற்றினார் அன்போடு பணிந்தர்

இசைப்பதிகங்கள் பாடினார்

நல்தவத் தொண்டர்க:ளோடு நலம் சிறக்க

வளம் உடைய ஊரில் தங்கியிருக்கும் நாளில்-

2411.

செழிப்பு மிகுந்த திருவலிவலம் திருக்கோளிலி முதலாகிய தொன்மையான

நான்மறைகளின் முதல்வரான இறைவரின் பதிகள் பலதொழுதார்

அளவிலாத திருப்பதிகங்கள் பாடி பணிந்தேத்தினார்

உலகின் அல்லல் தீர்ப்பவரான பிள்ளையார் மீண்டும் திருவாரூர் தொழ
வந்தார்.

*பூவியல் எனத் தொடங்கும் பதிகம் திருவலிவலத்தில் அருளினார்

*நாளாய் எனத்தொடங்கும் பதிகம் திருக்கோளிலியில் அருளினார்.

2412.

ஊறுகின்ற காதலால் ஒளிவளரும் புற்றில் வீற்றிருக்கும்

கங்கை உலாவிய சடையுடைய ஐயரான இறைவரைப் பணிந்து

திருநீறே தம் வாழ்வெனக் கொண்ட திருத்தொண்டர்களோடும்

எல்லை இறுதி இல்லாத சிவஞானமுடைய ஞானசம்பந்தர் அங்கு தங்கியிருந்தார்.

2413.

திருவாரூரில் அவ்விதமாக நன்மையில் தங்கிய நாள்கள் சில அகன்றன

தம் திருநாவுக்கரசரை விரும்பி

பொங்கும் சிறப்புடைய திருப்புகலூர் வணங்க விடைப்பெற்று

திருவாரூர் பதியின் பக்கம் சேர்ந்தார்.

2414.

மண் உலகில் சிறந்த திருவாரூரின் நகர்புறத்தில்

மருதநிலத்தில் போய் சேர்ந்து அந்நகரை நோக்கி நின்றேபயனிலாது

அழிய விரும்பா நெஞ்சமே நீ அஞ்சேல்

நீ உய்யும் வகையை அறிவாய் அல்லவோ

சிவபெருமானின் திருவாரூர் தொழ நீ மறவாதே என்று செங்கை கூப்பி

பவனமாய் சோடையாய் எனும் திருப்பதிகம் பாடி அருளினார்.

2415.

சீகாழி வாழ்வதன் பொருட்டாய் தோன்றிய கவுணியப்பிள்ளையார்

ஆழியானாகிய திருமாலும் அறிய இயலா அண்ணலாகிய இறைவர்

உறையும் திருவாரூர் பணிந்து செல்பவரானார்

வலிமையும் மதமயக்கமும் உடைய யானையின் தோலைப்பார்த்த சிவனாரின்

திருப்பனையூர் பணிந்தார்

வாழ்வுடைய பெரியமறைகளின் பொருளும் இசையுமுடைய

திருப்பதிகம் பாடி அப்பதியில் தங்கியிருந்து –

2416.

அந்தப் பதியிலிருந்து அரிதாய்ப் புறப்பட்டுச் செல்வாராகி

அகில உலகுக்குக்கும் காரணம் ஆன சிவபெருமான் தங்குகின்ற

நன்மையுடைய பிறபதிகளும் பணிந்து திருப்பதிகம்ன்பாடி

எவ்விடத்தும் உண்மைத் தவமுடைய அடியார்கள்

தம்மை எதிர்கொள்ளத் தொழுது வந்தார்

பொங்கும் குளிர்ச்சியான இலைகளையுடைய தாமரைத் தடங்கள்

சூழ்ந்த திருப்புகலூர் அடையச் சென்றார்.

2417.

திருநாவுக்கரசரும் சிறந்த முருகநாயனாரும் மற்றும்

காளைகொடியுடைய உயர் சிவபெருமானின் திருத்தொண்டர்களும்

முன்பாகச் சென்று எதிர் கொண்டார்

குளிர்ப்பூக்களால் பொலிவு பெற்ற நீர்வளம் கொண்ட

புகலியாரின் ஆனைக்கன்றின் திருமுன்பு பணிந்து சேர்ந்தனர்

அவர்களுடன் சம்பந்தர் சென்று விமலர் திருக்கோயிலை அடைந்தார்.

2418.

தேவர்களின் தலைவனார் சிவபெருமானின் கோவில் புகுந்து

அனைவரும் நிலத்தில் பொருந்த்ச் விழுந்து வணங்கினார்

பாக்களின்பாகுபாடுக்கு இணங்கத் தமிழைப் பதிகமும் பாடி

இறைவரின் திருமுன்பு துதித்து வெளியே வந்தார்

குற்றமற்ற முருகநாயனாரின் திருமனை எய்தினார்

ஒப்பில்லாத அத்தனி முதல் தொண்டரே யாவையும்

குறைவிலாது அமைத்திட அங்கு விரும்பித் தங்கியிருந்த நாட்களில்

2419.

செய்திகேட்டு நீலநக்கடிகளும் புகழ்கொண்ட சிறுத்தொண்ட நாயனாரும்

சீலமுடைய மற்ற மெய்த்தவதவர்களும்

தம்முடன் இறைவரைக் கும்பிடும் செய்கையில் நின்றனர்

வாய்மையில் மிகவுமுயர்வுடைய உண்மைத்திறம் தெளிவாக நாடி

காலம் உய்த்தவர்களோடு அளவளாவினார்

கலந்தருளினார் சீகாழிநாடர்.

2420.

கும்பிடும் கொள்கையின் குறிப்பு உள்ளடக்கி

குறிகலந்திசை எனும் திருப்பதிகம் ஒன்றை

தமது பெரும் தலைமைப்பாட்டினால்

நல்லநிலைமை நிறைந்த அந்தப்பதியின் பெருமையை விலக்கினார்

தேவர்களும் போற்றுவதற்கரிய பிள்ளையார்

உள்ளத்தில் மெய்க்காதல் பெருக இறைவரின் பதிகள்

தொழுவதற்காக விரும்பினார்.

2421.

நீர்ப்பறவைகள் ஒலிப்பதற்கு இடமான

குளிர்ந்த நீர்நிலை சூழ்ந்த திருப்புகலூரில் உறையும் புனிதனார்

சிவபெருமானின் அருள் பெற்றார்.

பிள்ளையாருடன் நாவுக்கரசரும் இறைவரின்

பிறபதிகள் தொழச் செல்பவரானார்

வள்ளலான சிறுத்தொண்டநாயனாரும் நீலநக்க நாயனாரும்

தம் வளம் பொருந்திய பதிகளுக்குச் செல்லவும்

உள்ளத்தில் அன்பு கொண்ட முருகநாயனார் அங்கே தங்கவும்

அவர்களுடன் உடன்பட இசைந்தார்.

2422.

இடம் அகன்று திருப்புகலூரைத் தொழுது மேலே செல்கின்ற போதில்

கடற்கரையில் உள்ள சீகாழியில் உள்ள பிள்ளையார்

திருநாவுக்கரசரின் பக்கம் விட்டு நீங்காமல்

அழகிய முத்துச் சிவிகையும் பின்னே வழியில் போகத் தொடங்கியபோது

எண்ணத்தில் சிறப்புடைய நாவுக்கரசர் சம்பந்தருக்கு எடுத்துக் கூறியதாவது:-

2423.

நம் இறைவன் உமக்கு அருள் செய்த

நலம் கிளரும் அழகிய ஒளிமுத்துச் சிவிகை மீது ஏறி வருவீராக என்றார்

ஒளியுடைய பிறைச்சந்திரன் பொருந்திய இறைவரின் திருவருளும்

இவ்வாறே பொருந்துவதாயின்

விரும்பும் தொண்டர்களோடும் நீவீர் முன் செல்வது எந்தப் பதியோ

அங்கு யான் பின் தொடர்வேன் என்றார் சம்பந்தர்.

— இறையருளால் தொடரும்

pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்