நிவாரணம் வந்தது மனிதம் போனது!

This entry is part [part not set] of 28 in the series 20051230_Issue

தேவமைந்தன்


பேசிப் பேசி மணிகள் கழிந்தன
எழுதி எழுதி இளமை போனது
சுயமுன்னேற்றம் ஆன்ம உயர்வுடன்
சான்றோர்இ சிந்தனை ஆன்மிக சிந்தனை
முதலிய உபதேசத் தொழில்கள் எல்லாம்
வகை வகை மனித வடிவமெடுத்து
துண்டு – பட்டு ஜிப்பா – சாிகை அங்கவஸ்திரம்
வெள்ளைப் பட்டு வேட்டிகள் அணிந்தன
தொண்டர்கள் வந்தனர். தலைவர்கள் ஆயினர்
தலைவர்கள் ஆனபின் கோடிகள் குவிந்தன
சுனாமி என்னும் ஆழிப் பேரலை
வந்தது துடைத்தது. கடலின் மக்களை
ஓராண்டு ஆகுமுன் மீண்டும் அவசரம்.
நவம்பர்ஆழில் வியாசர்பாடி கண்டது –
நச்சு மனிதம் பரப்பிய வதந்தியால்
வெள்ள நிவாரணம் வேண்டி வந்த
பெண்கள் அறுவர் சகமனிதத்தால்
ஜீவன் மறுக்கப் பட்டனர் கற்றதா
அரசு மனிதப் பாடம் ? – விளைவு
திசம்பர் பதினெட்டு மறுபடி வஞ்சம்
நாற்பத் திருவர்க்கு நிரந்தர நிவாரணம்
நவம்பர் ஆயினும் திசம்பர் பதினெட்டிலும்
மழைதான் பொங்கிப் பொங்கி அழுதது –
மக்கள் வேடிக்கை பார்த்தனர்- அங்கும்
வீட்டின் முட்டாள் பெட்டியின் முன்னும்
மானுடம் வெல்லுமா ? யாரது சொன்னது ?

—-
annan_pasupathy@hotmail.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்