உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 11 (இறுதிக் காட்சி)

This entry is part [part not set] of 29 in the series 20081002_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா“உன்னத மனிதர் படைப்பு மேலானவர் (தம்பதிகள்) தேர்ந்தெடுப்பிலும், குழந்தைச் சீராக்க முன்னோக்குச் சிந்தனையிலும் (Eugenics Foresight), உயர்ந்த கல்வி புகட்டுவதிலும் உருவாக்கக் கூடியது !”

“தனிப்பட்ட உயர்ந்த மானிடர் காதலுக்காக மணம் புரிய விட்டு விடுவது எத்தனை அபத்த மானது ? மேலான தீரர்கள் வேலைக்காரியை மணப்பது, மேதைகள் (Genius) தையல்காரியை மணப்பது வியப்புக்குரியது ! ஜெர்மன் வேதாந்தி ஆர்தர் சோபெனர் (Schopenhauer) காதலை “யூஜினிக்ஸ்” (Eugenics) என்று கூறியது தவறு ! (Eugenics : தக்க பெற்றோரைத் தேர்ந்தெடுத்துப் பிறக்கும் குழந்தைப் பண்பாட்டைச் சீராக்குவது). ஒரு மனிதன் காதலில் மூழ்கிக் கிடந்தால், அவனது எதிர்கால வாழ்க்கை முழுவதும் பாதிக்கப்படும் தீர்மானங்களை அவன் எடுக்க அனுமதிக்கக் கூடாது ! காதலுக்கு முன்னிடம் அளித்து அறிவோடு வாழ மனிதனுக்கு ஏற்புடமை இல்லை ! காதலரின் சபதங்கள் பயனற்றதாக நாம் பறைசாற்ற வேண்டும். மேலும் உயர்ந்த இல்வாழ்வுக்குக் காதல் தடையானது என்று சட்டப்படி அது தவிர்க்கப்பட வேண்டும். மேலான ஆடவர் மேலான மாதரை மணக்க வேண்டும். விதிமுறை இல்லாத கும்பலுக்கு (Rabble) காதல் ஒதுக்கப்பட வேண்டும். திருமணம் செய்து கொள்வதின் குறிக்கோள் சந்ததி விருத்திக்கு மட்டுமில்லாது, சந்ததி உயர்வுக்கும் உரியது என்று மேற்கொள்ளப்பட வேண்டும் !”

(உதாரண உன்னத மனிதர் சிலர் : சாக்ரெடிஸ், கௌதம புத்தர், ஏசு நாதர், நபி நாயகம், ஜியார்ஜ் வாஷிங்டன், ஆப்ரஹாம் லிங்கன், லெனின், லியோ டால்ஸ்டாய், விவேகானந்தர், இரவீந்திரநாத் தாகூர், மகாத்மா காந்தி, மாசேத்துங், மார்டின் லூதர் கிங், நெல்ஸன் மாண்டேலா, ஆல்பர்ட் ஸ்வைஸர், அன்னை தெராஸா போன்றோர்)

·பிரடெரிக் நியட்ஸே, ஜெர்மன் சித்தாந்த ஞானி
(Friedrich Nietzsche) (1844-1900)

ஆண் பெண் உடல் உறவோடு வாழ்க்கை உந்துசக்தியின் நீட்சி நின்று போவதில்லை. இல்வாழ்க்கையின் மகத்துவம் வெறும் ஆண் பெண் உடலுறவு மட்டுமில்லை ! உடலுறவு ஒர் வினையூக்கி ! வாழ்க்கையின் பிறவிப்பயன் அறிவுள்ள ஒரு மகவைப் பெறுவது ! அதன் உடற்நலம் பேணி, உயர்ந்த கல்வி புகட்டி, உன்னதப் பிறவியாய் ஆக்குவதே தம்பதிகளின் முக்கியப் பணி ! அப்படி ஒரு குறிக்கோள் இல்லாவிட்டால் வாழ்க்கையின் உந்துசக்தி தோல்வி அடைகிறது ! (தக்கார் தகவிலர் என்பது அவரவர் “மக்களால்” காணப்படும்.)

தாஞ் சுவான் (உன்னத மனிதன் நாடகம்)

“மனிதன் தன் இயற்கைத் தன்மை மட்டத்துக்கு மேல் உயர்ந்திடப் போராடும் போதுதான் (மெய்யான) மனிதன் ஆகிறான். அந்த உன்னதப் பண்பாடு அவனது உள்ளத்திலும் வெளிப்புறத்திலும் எழ வேண்டும். ஓவ்வோர் இனத்தின் ஆற்றலுக்கு ஆணிவேர் அதன் ஆன்மீக உணர்வில் ஒளிந்திருக்கிறது. அந்த ஆன்மீக உணர்வு தேய்ந்து உலோகாயுதம் (Materialism) ஆட்கொள்ளும் போது அந்த இனத்துக்கு மரண நாள் தொடங்குகிறது !

மெய்ப்பாடு (Truth) என்பது எந்த ஒரு பூர்வீக அல்லது நவீனச் சமூகத்துக்கும் அடிபணிவதில்லை ! அந்தச் சமூகந்தான் மெய்ப்பாடுக்குத் தலை வணங்க வேண்டும் அல்லது வழிபடாது மடிய வேண்டும் !

புத்தரிடம் உலக நாடுகள் போற்றும் உன்னத இதயம் இருந்தது. மதத்தை ஒவ்வொரு வீட்டு வாசலுக்கும் கொண்டுவந்து அதனை மனித நடைமுறைக்கு அமைத்த எல்லையற்ற பொறுமை அவரிடம் இருந்தது. . . . . ஞானச் சூரியன் புத்தர் இதயத்தோடு சேர்ந்து வரையறை யில்லா அன்பும் பரிவும் மேலோங்குவது இன்றைய உலகில் நமக்குத் தேவை. அத்தகைய சேர்க்கை நமக்கு உன்னத வேதாந்த சிந்தனை அளிக்க வல்லது. . . . . விஞ்ஞானமும், மதமும் சந்தித்துக் கைகுலுக்க வேண்டும்.

கர்மயோகி விவேகானந்தா (1863-1902)

+++++++++++++++++++

உன்னத மனிதன்

(பெர்னார்ட் ஷா)
அங்கம் : 4 பாகம் : 10
(சுருக்கப் பட்டது)

நடிகர்கள்:

1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.
2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.
3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – 25 வயது வாலிபன்.
4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)
5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி
6. ஹெக்டர் மலோன் (Hector Malone) – ஓர் அமெரிக்கன்
7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ஹெக்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்
8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்
9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.
10. வயலெட் ராபின்ஸன் (Violet Robinson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)
11 வேலைக்காரி மேரி (Parlormaid)

**************

(அங்கம் : 4 பாகம் : 10)

(இறுதிக் காட்சி)

கதா பாத்திரங்கள்: அக்டேவியஸ், மிஸிஸ் வொயிட்·பீல்டு, ஜான் டான்னர்.

காலம்: பகல் வேளை

இடம்: ஐரோப்பிய சுற்றுப் பயணத்தில் தற்போது தங்குமிடம் தெற்கு மலைப் பகுதி : கிரனாடா, ஸ்பெயின்.. தங்கு மாளிகையின் பின்புறப் பூங்கா.

(காட்சி அமைப்பு: பூங்காவில் ஜான் டான்னர் இறுதியில் ஆன்னியை மணக்க உடன்படுகிறான். அன்னை மிஸிஸ் வொயிட்·பீல்டு, ரோபக் ராம்ஸ்டன், அக்டேவியஸ், வயலட், ஹெக்டர் மலோன் அனைவரும் தம்பதிகளை வாழ்த்துகிறார்.)

ஜான் டான்னர்: ஆன்னி ! இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் வரவில்லை. எப்போது விடியும் என்று காத்திருந்தேன் !

ஆன்னி வொயிட்·பீல்டு: ஜான் ! ஏன் உனக்குத் தூக்கம் வரவில்லை ?

ஜான் டான்னர்: உன் தந்தை தன் உயிலில் உனக்குக் காப்பாளியாக என்னைத்தான் குறிப்பிட்டிருக்கிறார். உனக்குகந்த மணமகனைத் தேடும் வரை எனக்கு உறக்கம் வராது ! உணவும் சரியாக உண்ண முடிய வில்லை ! ஆன்னி, உன் திருமணப் பிரச்சனை உனக்கு மட்டுமில்லை ! எனக்கும்தான் ! அதில் பொறுப்பிருக்கிறது எனக்கு !

ஆன்னி: எனக்கு மணமகன் இல்லாமல் போனால் என்ன செய்வாய் ? உயிரை விட்டு விடுவாயா ? அல்லது ஓடிப் போய் விடுவாயா ?

ஜான் டான்னர்: உயிரை விட மாட்டேன் ! உன்னைத் தனியே விட்டு ஓடிப் போக மாட்டேன் ! உன் வீட்டு வாசலில் உட்கார்ந்து யோசனை செய்வேன் ! ஒருவரும் உன்னை மணக்கா விட்டால் நானே உன்னை ஏற்றுக் கொள்வேன் !

ஆன்னி: வீட்டு வாசலில் கிடப்பதற்குப் பதிலாக வீட்டுக்குள் வர உனக்கு மனவலு வில்லையா ? தைரியம் இல்லாத ஆண்மகனை நான் கண்ணாலும் காண மாட்டேன் ! மனதாலும் நினைக்க மாட்டேன் ! கரத்தாலும் தொட மாட்டேன் ! உயிலுக்காக என்னை மணப்பதாய்ச் சொல்ல உனக்கு நாணமில்லையா ? கடமைக்காக நீ என் கணவனாக நடிக்கப் போகிறாயா ?

ஜான் டான்னர்: ஆன்னி ! நான் பயந்தாங்கொள்ளி இல்லை ! திருமணத்துக்கு நான் அஞ்ச வில்லை ! சற்று தள்ளிப் போடுகிறேன் ! உன்னை நான் மணந்தால் என் பொறுப்பு பூர்த்தியாகிறது ! உன் தந்தையின் உயிலுக்கு நான் செய்யும் கடமை தீர்கிறது !

ஆன்னி: ஜான் ! என் தந்தை உயிலைக் காப்பாற்ற நீ என்னை மணக்க வேண்டாம் ! அது மூடத்தனமான காரணம் ! காவல் புரிய எனக்கு நீ கணவனாக வேண்டாம் !

ஜான் டான்னர்: உன் திருமண நிபந்தனையை நான் நிறைவேற்ற ஒப்புக் கொண்டால் அப்போது என்னை நீ மணந்து கொள்வாயா ?

ஆன்னி: அப்படி வா வழிக்கு ! இப்போதுதான் மூடிப் போன உன் மூளை திறக்கிறது ! எந்த நிபந்தனையைச் சொல்கிறாய் ?

ஜான் டான்னர்: நேற்று நீ சொன்னாய் அல்லவா ? வாழ்க்கையின் பிறவிப்பயன் அறிவுள்ள மகவைப் பெறுவது ! அதன் உடற்நலம் பேணி, உயர்ந்த கல்வி புகட்டி, உன்னதப் பிறவியாய் ஆக்குவது ! அந்த நிபந்தனை.

ஆன்னி: நிபந்தனைக்கு ஒப்புகிறேன் என்றால் என்ன அர்த்தம் ? என் நிபந்தனைக்கு எப்படி நீ உதவி செய்வாய் ?

ஜான் டான்னர்: உன்னத பிறவிகளை எப்படித் இல்வாழ்க்கைத் தம்பதிகள் படைப்பது ? முதலில் தம்பதிகளுக்கு உயர்ந்த சிந்தனையும், நோயற்ற உடம்பும் இருப்பது நல்லது. நம் இருவருக்கும் உள்ளது. அடுத்து ஆழ்ந்த கல்வி அறிவும் அனுபவமும் இருப்பது அவசியம். நம்மிருவருக்கும் இருக்கிறது. நல்ல கலை ஞானம், இசை ஞானம் இருப்பது மேலானது ! உனக்குக் கலை ஞானம் உள்ளது. எனக்கு இலக்கிய அறிவு சிறிது உண்டு. நினைத்துப் பார்த்தேன் ! ஏன் நானே உன்னைத் திருமணம் செய்யக் கூடாது ?

ஆன்னி: என் நிபந்தனைக்கு ஒப்புதல் தெரிவிக்கும் ஆணை நான் வேண்டாம் என்று விலக்குவேனா ? நீயே எனக்கு நிகரானவன் !

ஜான் டான்னர்: (திடீரென்று மண்டிக்காலிட்டுப் பரிவோடு) ஆன்னி ! என்னை நீ மணஞ் செய்து கொள்கிறாயா ? இப்போதே சொல் !

ஆன்னி: (புன்முறுவல் பூத்து) யார் என்முன் மண்டி யிடுவது ? வணங்காமுடி ஜான் டான்னரா ? நம்ப முடிய வில்லையே ! நானிதை எதிர்பார்க்க வில்லை !

ஜான் டான்னர்: ஆன்னி ! என்ன சொல்கிறாய் நீ ? திருமணம் செய்து கொள்ள மாட்டாயா ? உன்னுடன் வாழ்நாள் பூராவும் வாழ விழைறேன், என் ஆயுள் முழுதும் !

ஆன்னி: நீ சொல்வதெல்லாம் உண்மையா ? உன்னை நான் எப்படி நம்புவது ? என்னை விட இன்னும் அழகி, அறிவாளியைக் காண நேர்ந்தால் என்னை உதாசீனம் செய்ய மாட்டாய் நீயென்று எப்படி அறிவது ?

ஜான் டான்னர்: நான் அப்படித் திடீர்க் கவர்ச்சியில் சிக்கிக் கொள்ளும் அற்பன் இல்லை. அதற்கு நான் உறுதி அளிப்பேன் ! என்னை நீ நம்பு !

ஆன்னி: நான் நோய்வாய்ப்பட்டு நோய்ந்து போனால் என்னை ஒதுக்குவாயா ?

ஜான் டான்னர்: உன்னருகில் இருந்து நோயைக் குணப்படுத்துவேன் ! உன்னை விட்டு ஒருபோதும் நீங்க மாட்டேன் !

ஆன்னி: வருவாய் குறைந்து நமக்கு வறுமை பீடித்தால் என் மீதுள்ள பிரியம் சலித்து விடுமா ?

ஜான் டான்னர்: ஊதியம் குறைந்தாலும் என் உள்ளன்பு குன்றாது கண்மணி !

ஆன்னி: நீ அழுத்தமாக வாக்களிப்பதால் உன்னை மணக்க உடன்படுகிறேன், ஜான்.

ஜான் டான்னர்: (கையை முத்தமிட்டு) நன்றி ஆன்னி நன்றி. எங்கே என்னை மறுத்து விடுவாயோ என்று அஞ்சினேன் !

(அப்போது தாய் மிஸிஸ் வொயிட்·பீல்டு, ராம்ஸ்டன், அக்டேவியஸ், வயலட், ஹெக்டர் மலோன் யாவரும் மாளிகையிலிருந்து பூங்காவுக்கு வருகிறார்கள்)

ஆன்னி: (மகிழ்ச்சியுடன்) வாருங்கள், எல்லோருக்கும் ஒரு நல்ல செய்தி !

வயலட்: (ஆர்வமுடன்) என்ன செய்தி ? ஜான் உன்னைத் திருமணம் புரிய ஒப்புக் கொண்டு விட்டாரா ?

ஜான் டான்னர்: (எழுந்து நின்று) இல்லை வயலட் ! ஆன்னி என்னைச் சிறைப் படுத்தி விட்டாள் ! இப்போது நானொரு கூண்டுக் கிளி ! தப்பி நான் ஓட முடியாது. எனக்கு நிரந்தரக் கால்கட்டு போட்டு விட்டாள் !

ராம்ஸ்டன், ஹெக்டர் மலோன்: வாழ்த்துக்கள் இருவருக்கும் ஜான், ஆன்னி ! (எல்லாரும் தம்பதிகள் கைகளைக் குலுக்குகிறார்)

மிஸிஸ் வொயிட்·பீல்டு: எனக்கு முன்பே தெரியும் என்னருமை மகள் ஜானுக்குக் கால்விலங்கு போடுவாள் என்று ! நினைப்பதைச் சாதிப்பவள் என் மகள் !

ஆன்னி: (ஆர்வமுடன்) வயலட் ! உனக்கு எப்போது குழந்தை பிறக்கும் ?

வயலட்: எங்கள் திருமணத்துக்குப் பிறகு !

மிஸிஸ் வொயி·பீல்டு: (ஆர்வமுடன்) உங்கள் திருமணம் எப்போது நடக்கும் ?

வயலட்: (கவலையுடன்) எனக்குக் குழந்தை பிறந்த பிறகு !

ராம்ஸ்டன்: இதென்ன வேடிக்கையாய் இருக்கிறதே ! குழந்தை எப்போது பிறக்கும் ? திருமணத்துக்குப் பிறகு ! திருமணம் எப்போது நடக்கும் ? குழந்தை பிறந்த பிறகு ? இந்தச் சுற்றுப் பேச்சு எனக்குப் புரியவில்லையே !

ஜான் டான்னர்: ஹெக்டர் ! ஏன் விழிக்கிறாய் ? புதிரை விடுவித்துப் புரிய வை !

ஹெக்டர் மலோன்: என் தந்தை திருமண நாள் குறித்த பிறகுதான் தெரியும் ! முதலில் திருமணம் ! பிறகு பேறுகாலம் !

ராம்ஸ்டன்: (கோபத்துடன்) ஹெக்டர் ! நான் சொன்னதாகச் சொல் உன் தந்தையிடம் ! வயலட்டுக்குச் சிரமம் எழாமல் இருக்க சீக்கிரம் திருமணத்தை வைக்கச் சொல் ! மருமகள் மீது வளரும் சிசுவின் மீது ஏதாவது இரக்கம் இருக்கிறதா அந்த மதி கெட்ட மனிதருக்கு ? முதலில் திருமணம் வயலட்டுக்கு ! அடுத்த திருமணம்தான் ஆன்னிக்கு ! இது என் கட்டளை ! போய் ஏற்பாடு செய்யுங்கள் !

(எல்லாரும் சிரிக்கிறார்கள்)

(முற்றிற்று)

***************************
தகவல்

Based on The Play

“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)

1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)
2. The Teachings of Reverence for Life By : Albert Schweitzer (1965)
3. The Religious Significance of Art By : Leo Tolstoy, Book on Philosophy – A Modern Encounter (Basic Edition) By : Robert Paul Wolff (1973
4. Vivekananda Speaks to You – Sri Ramakrishna Math, Chennai (1977)
5. Joyful Wisdom By : Friedrich Nietzsche (1971)
6. The Wisdom of India By : Emmons E. White (1968)
7. Friedrich Nietzsche – The Story of Philosophy By: Will Durant (1959)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (September 30, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 10

This entry is part [part not set] of 37 in the series 20080925_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

நியட்ஸே தன் படைப்பைப் படிப்போன் ஒவ்வொருவனும் ஓர் உன்னத மனிதனாகத் தன்னை நினைத்துக் கொள்வான் என்று எதிர்பார்த்தது தெரிகிறது. அதனைத் தவிர்க்கும் பொருட்டு உன்னத மனிதன் இன்னும் உதிக்க வில்லை என்று அவர் வெளிப்படுத்திக் கொள்கிறார் ! நாம் உன்னத மனிதனின் முந்தைய வழித்தோன்றல் ! இந்த மண்ணகம் அவனுக்கு உரியது ! உன் உடல் வலுவுக்கு உட்படாதது எதுவும் இல்லை. அத்துடன் உன் சக்திக்கு மீறிய பண்பாட்டில் இறங்காதே என்றும் எச்சரிக்கிறார்.

நமக்கு உன்னத மனிதன் உணரும் உள்மகிழ்ச்சி வேண்டிய தில்லை. நமது முக்கிய குறிக்கோள் : உலக மாந்தருக்குப் பணி புரிவது. நீண்ட காலமாக நான் மகிழ்ச்சி நாடிப் போவதை நிறுத்திக் கொண்டேன் ! இப்போது நான் பணி புரிவதை மேற்கொள்ள முயல்கிறேன்.”

(உதாரண உன்னத மனிதர் சிலர் : சாக்ரெடிஸ், கௌதம புத்தர், ஏசு நாதர், நபி நாயகம், ஜியார்ஜ் வாஷிங்டன், ஆப்ரஹாம் லிங்கன், லெனின், லியோ டால்ஸ்டாய், விவேகானந்தர், இரவீந்திரநாத் தாகூர், மகாத்மா காந்தி, மாசேத்துங், மார்டின் லூதர் கிங், நெல்ஸன் மாண்டேலா, ஆல்பர்ட் ஸ்வைஸர், அன்னை தெராஸா போன்றோர்)

·பிரடெரிக் நியட்ஸே, ஜெர்மன் சித்தாந்த ஞானி
(Friedrich Nietzsche) (1844-1900)

“கோழைத்தனத்தை விடப் பெரிய பாபம் எதுவுமில்லை ! கோழைகள் தப்பிக் கொள்ள முடியாது என்பது மெய்ப்பாடு ! அதைத் தவிர நான் எதையும் தாங்கிக் கொள்வேன். ஒருவன் ஓரடி கொடுத்தால் உனது சினத்தை இரட்டித்து அவனுக்குப் பத்தடி தரவேண்டும் பதிலுக்கு ! அப்போதுதான் ஒருவன் மனிதனாகிறான் ! கோழை ஒருவன் இரக்கத்துக்கு உரியவன் ! நீ சாகப் போனாலும் சரி, சண்டை இட வேண்டும் நீ ! படை வீரனைப் போல் கட்டளைக்குப் பணிந்து போரில் உயிரை விடு ! ஆனால் கோழையாக மட்டும் ஒதுங்கி நிற்காதே !

நாம் நூலைப் படிக்கலாம். சொற்பொழிவுகளைக் கேட்கலாம். நீளமாகப் பேசலாம். ஆனால் அனுபவம் ஒன்றே கண் திறக்கும் ஓர் ஆசிரியன் ! எல்லாவற்றிலும் அனுபமே உயர்ந்தது. துயரிலும், சிரிப்பிலும் நாம் கற்றுக் கொள்கிறோம்.

என் வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்ட, எல்லாவற்றிலும் உயர்ந்த பாடம் : ஒருவன் பணி முடிவுக்குத் தரும் மதிப்பு, கவனம், உடற் உழைப்பு அதை நோக்கிச் செல்லும் வழிநெறிக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதே ! வெற்றிப் படியின் இரகசியம் அந்த வழி முறையில்தான் உள்ளது !

கர்மயோகி விவேகானந்தா (1863-1902)

+++++++++++++++++++

உன்னத மனிதன்

(பெர்னார்ட் ஷா)
அங்கம் : 4 பாகம் : 10
(சுருக்கப் பட்டது)

நடிகர்கள்:

1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.
2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.
3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – 25 வயது வாலிபன்.
4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)
5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி
6. ஹெக்டர் மலோன் (Hector Malone) – ஓர் அமெரிக்கன்
7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ¦†க்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்
8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்
9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.
10. வயலெட் ராபின்ஸன் (Violet Robinson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)
11 வேலைக்காரி மேரி (Parlormaid)

**************

(அங்கம் : 4 பாகம் : 10)

(சுருக்கப் பட்டது)

கதா பாத்திரங்கள்: அக்டேவியஸ், மிஸிஸ் வொயிட்·பீல்டு, ஜான் டான்னர்.

காலம்: பகல் வேளை

இடம்: ஐரோப்பிய சுற்றுப் பயணத்தில் தற்போது தங்குமிடம் தெற்கு மலைப் பகுதி : கிரனாடா, ஸ்பெயின்.. தங்கு மாளிகையின் பின்புறப் பூங்கா.

(காட்சி அமைப்பு: பூங்காவில் ஆன்னியும், ஜான் டான்னரும் தமது திருமணம் பற்றித் தர்க்கம் செய்கிறார்.)

ஆன்னி வொயிட்·பீல்டு: கேட்டாயா ஜான் ? வயலட் உன்னைத் திருமணம் செய்து கொள்ள என்னைத் தூண்டுகிறாள் ! என் அன்னையும் உன்னைத்தான் நான் திருமணம் புரிய வேண்டும் என்று என்னைத் துளைக்கிறாள் ! அடுத்து அக்டேவியசும் நான் உன்னைத்தான் மணக்க வேண்டும் என்று என்னைக் கைவிட்டு விட்டான் ! இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்று நீ சொல் ! உனக்கோ திருமணம் என்றால் வெறுப்பு !

ஜான் டான்னர்: அவர் மூவரும் உளறுகிறார் ! உனக்கேற்ற ஆடவன் இந்த ஊரில் இல்லை ! நானுனக்கு ஏற்றவன் இல்லை ! நானோர் ஊர் சுற்றி ! ஓரிடத்தில் தங்கி வாழ்பவன் இல்லை ! என்னை நீ மணக்க வேண்டாம் என்பது என் ஆலோசனை ! நீ என்ன சொல்கிறாய் இதற்கு ? உனக்கோ திருமணம் என்றால் கரும்பு !

ஆன்னி: உனக்கு விருப்பம் இல்லை என்று மறைமுகமாகச் சொல்கிறாய் ! திருமணத்தில் உனக்கு விருப்ப மில்லை ! நீ திருமணம் செய்ய முன்வந்தாலும் உன்னை ஒரு பெண்ணும் விரும்ப மாட்டாள் ! மூவர் எனக்கு ஆலோசனை கூறினாலும் நான் உன்னை மணக்க மாட்டேன் ! கவலைப் படாதே ! நான் ஏற்கனவே ஒருவனைத் தேர்ந்தெடுத்து விட்டேன் !

ஜான் டான்னர்: ஏனப்படி என்னை உதாசீனம் செய்கிறாய் ? நீ யாரைத் தீர்மானம் செய்திருக்கிறாய் ? அக்டேவியஸ்தானே !

ஆன்னி: என்மீதுதான் உனக்கு விருப்பமில்லை ! நான் யாரை மணந்தால் என்ன ? நான் தேர்ந்தெடுத்த வாலிபன் பெயர் இரகசியமாகவே இருக்கட்டும் ! யாருக்குச் சொன்னாலும் நானுனக்குச் சொல்வதாக இல்லை !

ஜான் டான்னர்: எனக்குத் தெரியும் யாரென்று ! நானில்லை என்றால் அது அக்டேவியசாக இருக்க வேண்டும். நல்ல தேர்ந்தெடுப்புதான் ! என்னினிய பாராட்டுகள் ஆன்னி !

ஆன்னி: அக்டேவியஸை நேற்றுத்தான் மறுத்தேன் ! அவரது விழிகளில் நீர்த் துளிகள் விழ வைத்து விட்டேன் ! இன்னும் அவை உலர்ந்து கூடப் போயிருக்காது ! யாரை மணந்தாலும் நான் அக்டேவியசை மணக்கப் போவதில்லை ! ஆயினும் அவர் நல்லவர் ! என்னைத்தான் மணப்பேன் என்றவர் ! ஏமாற வைத்தவள் நான் ! ஆயினும் பெண்ணைப் பற்றித் தெரிந்தவர் அவர் ! எல்லாரும் என்னைக் கை விட்டால் அவரிடம்தான் சரணடைவேன் !

ஜான் டான்னர்: அவன்தான் உனது ஆத்மாவின் இரட்டை ! நீ ஒரு கல்நெஞ்சக்காரி ! ஆடவன் இதயத்தைப் பிளக்கும் கோடரி ! எனக்குப் பெண்ணைப் பற்றிச் சரியாகத் தெரியாது.

ஆன்னி: பெண்ணைப் பற்றித் தெரியாத ஆணைத்தான் நான் மணக்க உத்தேசம் ! ஆனால் அந்தப் பட்டியலில் நீ இல்லை ! உணர்ச்சி வசப்படாத ஆடவனை நாடுபவள் நான் !

ஜான் டான்னர்: ஆச்சரியமாய் இருக்கிறது ! பெண்களில் நீ ஒரு புதிரானவள் ! ஆடவனைச் செக்கிலிட்டு கசக்குபவள் நீ ! உன்னை மணப்பவனுக்கு என்னுடைய இரக்கம் உண்டு. என்னுடைய வருத்தமும் உண்டு.

ஆன்னி: என் நிபந்தனைகள் அவை மட்டுமல்ல ! திருமணத்துக்கு ஒரு குறிக்கோள் உண்டு ! அந்தக் குறிக்கோளை நிறைவேற்ற விரும்பும் ஆடவனைத்தான் நான் மணப்பேன் !

ஜான் டான்னர்: அப்படியா ஆன்னி ! நல்ல எண்ணம்தான் ! உன் திருமணக் குறிக்கோள் என்ன வென்று எனக்குச் சொல்ல மாட்டாயா ?

ஆன்னி: யாருக்குச் சொன்னாலும் உனக்குச் சொல்லப் போவதில்லை ! என்மீதுதான் அக்கறை இல்லை உனக்கு ! என் திருமணக் குறிக்கோளைத் தெரிந்து நீ என்ன செய்யப் போகிறாய் ?

ஜான் டான்னர்: ஆன்னி ! தயவு செய்து சொல் ! நானும் தெரிந்து கொண்டால் உனக்கேற்ற கணவனைக் கண்டுபிடித்துத் தருவேன் !

ஆன்னி: (ஆச்சரியமாக) என்மீது உனக்கு அக்க¨றை உள்ளதா ?

ஜான் டான்னர்: உன்மீது எனக்கு அக்கறை உண்டு ! ஆனால் காதல் இல்லை ! உனக்கு நல்ல கணவன் அமைய வேண்டும். ஆனால் அவன் நானாக இருக்கக் கூடாது. அதுதான் எனது குறிக்கோள் !

ஆன்னி: பைத்தியகாரனைப் போல் பேசுகிறாய் ! உன்னைப் புரியவில்லை ! உள்ளத்தில் ஒன்றும் சிரத்தில் வேறொன்றும் உள்ளன ! ஒரு சமயம் உள்ளத்தின் இச்சையைக் காட்டுகிறாய் ! வேறு சமயம் மூளையின் இச்சை வெளிப்படுகிறது. நான் ஒன்று உன்னைக் கேட்கிறேன். அதற்குப் பதில் சொல். ஆண், பெண் இல்வாழ்க்கை தொடங்குவதின் அர்த்தம் என்ன ? ஆணும் பெண்ணும் ஏன் இல்லத்தில் தம்பதிகளாய் வாழ வேண்டும் ?

ஜான் டான்னர்: ஆண் இச்சிப்பது பெண்ணிடம் உள்ளது. பெண்ணுக்குத் தேவையானது ஆணிடம் இருக்கிறது ! இரண்டும் பிணைந்து கொள்ளத் தூண்டுகிறது இயற்கை ! அதற்கு வேண்டிய அடிப்படைச் சக்திதான் “வாழ்க்கை உந்துசக்தி” (Life Force) ! அந்த ஆக்கும் சக்தியை முதலில் ஊக்குவது பெண்மை ! அதற்கு உதவுவது ஆண்மை ! ஆடவனைக் கவர்ந்து வாழ்க்கை உந்துசக்தியை மலர வைப்பது பெண்மை !

ஆன்னி: அப்படியானால் அதைக் கண்டு நீ ஏன் ஓட வேண்டும் ? ஆண் பெண் உடல் உறவோடு வாழ்க்கை உந்துசக்தியின் நீட்சி நின்று போவதில்லை. இல்வாழ்க்கையின் மகத்துவம் வெறும் ஆண் பெண் உடலுறவு மட்டுமில்லை ! உடலுறவு ஒர் வினையூக்கி ! வாழ்க்கையின் பிறவிப்பயன் அறிவுள்ள ஒரு மகவைப் பெறுவது ! அதன் உடற்நலம் பேணி, உயர்ந்த கல்வி புகட்டி, உன்னதப் பிறவியாய் ஆக்குவதே தம்பதிகளின் பணி ! அப்படி ஒரு குறிக்கோள் இல்லா விட்டால் வாழ்க்கை உந்துசக்தி தோல்வி அடைகிறது ! தக்கார் தகவிலர் என்பது அவரவர் மக்களால் காணப்படும் !

ஜான் டான்னர்: (பேராச்சரியம் அடைந்து) நானொரு முறைக் கண்ட கனவிலே, காதல் மன்னன், தாஞ் சுவான் இப்படிச் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது ! எப்படி உனக்கு இந்த உயர்ந்த வாசகம் தெரியும் ? நானதை மறந்து போய் விட்டேன் ! நன்றி எனக்கு நீ நினைவூட்டியது ! இல்வாழ்வின் குறிக்கோள் உன்னத மனிதர் ஆக்குவது ! உயர்ந்த வாசகம் ! உன்னத வாசகம் ! ஒப்பிலா வாசகம் !

ஆன்னி: இந்த உண்மை வாசகத்தைப் பின்பற்றும் ஓர் ஆடவனைத்தான் நான் மணப்பேன் ! அவன் ஆண் அழகனாய் இருக்க வேண்டிய தில்லை ! அவன் பட்டதாரியாக இருக்க வேண்டிய தில்லை ! அவன் என்னைக் காதலிக்க வேண்டிய தில்லை ! என் குறிக்கோளை ஒப்பி அவன் என்னை விரும்பினால் போதுமானது !

ஜான் டான்னர்: (வியப்புடன்) யார் அவன் ? எங்கிருக்கிறான் அவன் ? சொல் ஆன்னி ! என் ஆவலை அடக்க முடிய வில்லை !

ஆன்னி: இன்னும் அவன் காணப்பட வில்லை. நான் அவனைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

ஜான் டான்னர்: கிடைக்கா விட்டால் என்ன செய்வாய் ? அதற்கு ஒரு கால வரையறை ஏதேனும் உள்ளதா ? அவனைத் தேடுவதற்குள் நீ கிழவி ஆகிவிடுவாய் !

ஆன்னி: கிடைக்கும் வரை தேடுவேன் ! கிழவி ஆனாலும் தேடுவேன் ! எனக்கென ஒருவன் பிறந்திருக்கிறான் ஜான் ! என் குறிக்கோள் உடைய ஓர் ஆண்மகன் எங்கோ ஒளிந்திருக்கிறான் ! என்னை அவனும் தேடிக் கொண்டிருக்கிறான் ! நாங்கள் ஒருநாள் சந்திப்போம் பார் ! தம்பதிகள் ஆவோம் பார் ! அந்தத் திருநாள் வரத்தான் போகிறது ! நம்பிக்கை உள்ளது எனக்கு !

(தொடரும்)

***************************
தகவல்

Based on The Play

“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)

1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)
2. The Teachings of Reverence for Life By : Albert Schweitzer (1965)
3. The Religious Significance of Art By : Leo Tolstoy, Book on Philosophy – A Modern Encounter (Basic Edition) By : Robert Paul Wolff (1973
4. Vivekananda Speaks to You – Sri Ramakrishna Math, Chennai (1977)
5. Joyful Wisdom By : Friedrich Nietzsche (1971)
6. The Wisdom of India By : Emmons E. White (1968)
7. Friedrich Nietzsche – The Story of Philosophy By: Will Durant (1959)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (September 23, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 9(சுருக்கப் பட்டது)

This entry is part [part not set] of 28 in the series 20080918_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாநான் தீவிர வெறுப்பாளிகளை (Despisers) நேசிக்கிறேன் ! ஏனெனில் அவரே மாபெரும் பாராட்டியாகவும் (Adorers) இருக்கிறார் ! அவரே எதிர்த்த கரைக்குத் துணிந்து செல்ல ஆர்வம் மிக்க ஏவுகணையாகவும் உள்ளார் !

மரணமடையும் ஒரு குறிப்பணிக்கு விண்மீன்களைத் தாண்டிச் சென்று மடிந்து போகும் தீவிரவாதிகளை நான் நேசிக்கிறேன் ! அதே சமயம் பூமி ஒருநாள் ஓர் உன்னத மனிதனின் அரங்கமாகும் என்று மண்ணில் தம்மைத் தியாகம் செய்வோரையும் நான் நேசிக்கிறேன் !

மனிதன் தன் குறிக்கோளை வர்ணமிட்டுக் காட்டும் தருணம் வந்து விட்டது ! மனிதன் தனது உயர்ந்த நம்பிக்கையின் ஜீவராசிகளை (Germ) நிலைநாட்டும் காலமும் வந்து விட்டது ! சொல்லுங்கள் சகோதரரே ! மனித இனத்துக்குக் குறிக்கோள் குன்றித் தளர்ச்சியாகி விட்டால், மனித இனத்துக்கு வளர்ச்சி குறைந்து போய்விடும் அல்லவா ? வெகு தூரத்துக்கு அப்பால் வசிக்கும் மனிதனை நேசிப்பது, அண்டையில் வாழ்வோனை நேசிப்பதை விட உயர்ந்தது அல்லவா ?

(உன்னத மனிதர் சிலர் : சாக்ரெடிஸ், கௌதம புத்தர், ஏசு நாதர், நபி நாயகம், ஜியார்ஜ் வாஷிங்டன், ஆப்ரஹாம் லிங்கன், லெனின், லியோ டால்ஸ்டாய், விவேகானந்தர், மகாத்மா காந்தி, மாசேத்துங், மார்டின் லூதர் கிங், நெல்ஸன் மாண்டேலா, ஆல்பர்ட் ஸ்வைஸர், அன்னை தெராஸா போன்றோர்)

·பிரடெரிக் நியட்ஸே, ஜெர்மன் சித்தாந்த ஞானி
(Friedrich Nietzsche) (1844-1900)

ஆயிரக் கணக்கான தடுமாற்ற வீழ்ச்சிகள் மீது ஒருவரது பண்பாடு நிலைநாட்டப்பட்டு உருவாக வேண்டும். சமூக நாகரீகத்தின் வரலாறு ஆன்மீகத் துறை பொருளாயுதத்தில் (Materialism) நுழைந்து மேன்மையாகப் பயிலப் படுவதால் உருவானது.

அதிகமாக உணர்ச்சி வசப்படுவது செய்யும் பணியைப் பெரிதளவு பாதிக்கிறது. “எ·கைப் போன்ற வலிமை, மலரைப் போன்ற மென்மை” என்பதே நமது திருவாசகம் (Motto).

பயிற்சியில்லாது போயின் உடற் தகுதி முடங்கித் தணிகிறது. பேச்சு, பேச்சு, எந்த நேரமும் பேசிக் கொண்டிருப்பது உடலில் நோயை உண்டாக்கும் ! இது மெய்யென்று உணர்வாய் ! வினை புரிவது, ஓய்வெடுப்பது இரண்டும் மாறி மாறி மேற்கொள்ளும் போது மாபெரும் சாதனைகள் சாதிக்க முடிகிறது.

நமது இந்தியர் ஒரு பெருங் குறைபாட்டில் பாதிக்கப் படுகிறார். நம்மால் நிலையான ஒரு நிறுவனத்தை (Organization) நீடித்த காலம் அமைத்து வைக்க முடியாது ! காரணம், நாம் பிறருடன் நமது அதிகார ஆற்றலைப் பங்கிட்டுக் கொள்ள விரும்புவ தில்லை ! மேலும் நாமிந்த உலகை விட்டு நீங்கிய பின் என்ன நிகழுமென்று நாம் சிந்திப்ப தில்லை !

கர்மயோகி விவேகானந்தா (1863-1902)

+++++++++++++++++++

உன்னத மனிதன்

(பெர்னார்ட் ஷா)
அங்கம் : 4 பாகம் : 9
(சுருக்கப் பட்டது)

நடிகர்கள்:

1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.
2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.
3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – 25 வயது வாலிபன்.
4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)
5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி
6. ஹெக்டர் மலோன் (Hector Malone) – ஓர் அமெரிக்கன்
7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ¦†க்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்
8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்
9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.
10. வயலெட் ராபின்ஸன் (Violet Robinson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)
11 வேலைக்காரி மேரி (Parlormaid)

**************

(அங்கம் : 4 பாகம் : 9)

(சுருக்கப் பட்டது)

கதா பாத்திரங்கள்: அக்டேவியஸ், மிஸிஸ் வொயிட்·பீல்டு, ஜான் டான்னர்.

காலம்: பகல் வேளை

இடம்: ஐரோப்பிய சுற்றுப் பயணத்தில் தற்போது தங்குமிடம் தெற்கு மலைப் பகுதி : கிரனாடா, ஸ்பெயின்.. தங்கு மாளிகையின் பின்புறப் பூங்கா.

(காட்சி அமைப்பு: பூங்காவில் ஆன்னியின் அன்னை மிஸிஸ் வொயிட்·பீல்டும் ஜான் டான்னரும் ஆன்னியின் திருமணம் பற்றி உரையாடுகிறார்.)

ஜான் டான்னர்: என்ன ? புதிர் போடுவது போல் தெரியுது ! எனக்கொன்றும் விளங்க வில்லை ! ஆன்னியின் திருமணப் பேச்சு ஏன் இப்போது வந்தது ? உங்கள் விருப்பம் என்ன ? சொல்லுங்கள் ! உங்கள் விருப்பம் நிறைவேறும்.

(இருவரும் நாற்காலியில் உட்காருகிறார்கள்)

மிஸிஸ் வொயிட்·பீல்டு: நீ எல்லாம் என் சொற்படி நடக்கச் சித்தமாக உள்ளபோது, என்னருமைப் புதல்வி ஆன்னி மட்டும் நான் சொல்வதைச் செய்ய மாட்டாள் ! வாழ்க்கை சிக்கலானது ! அதிலும் ஒரு பெண்ணின் திருமணம் பிரச்சனைகள் நிரம்பியது ! மேல்நாடு, கீழ்நாடு என்று அதில் வேறுபாடு கிடையாது ! ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தைச் செய் என்பது ஆசியப் பழமொழி ! ஆசிய நாடுகளில் திருமணப் பெண் அடுத்த நாள் குடும்பத்தின் அடிமைப் பெண் ! ஐரோப்பிய நாடுகளில் திருமண ஆடவனே அதிகாரி ! ஒரு குதிரையில் இருவர் செல்ல வேண்டுமானால் ஒருவர் அவசியம் பின்னால் அமரத்தான் வேண்டும் ! யார் முன்னமர்ந்து குதிரை ஓட்டுவது என்பதுதான் இங்கே பிரச்சனை ! ஆனால் ஆசிய வீடுகளில் பெண் தானாவே பின்னே அமர்ந்து கொள்கிறாள் ! இங்கே யார் குதிரையில் முன்னமர்வது என்று போர் துவங்கி இருக்கிறது !

ஜான் டான்னர்: புதிர் சிறிது புரிகிறது ! அதாவது ஆன்னி குதிரை முன்னால் அமரப் போவதாய் விதிமுறை விடுக்கிறாளா ?

மிஸிஸ் வொயிட்·பீல்டு: சரியாகச் சொன்னாய் ஜான் ! ஆமாம் ஆன்னி முன்னேதான் குதிரையில் அமர்வதாக முந்திக் கொள்கிறாள்.

ஜான் டான்னர்: அதை முற்றிலும் வரவேற்கிறேன் மிஸிஸ் வொயிட்·பீல்டு ! அவள் ஜோன் ஆ·ப் ஆர்க் பரம்பரையில் உதித்தவள் ! குதிரை மீதமர்ந்து போரில் முன்வழி நடத்தி பிரெஞ்ச் படையினர் வெற்றி பெறச் செய்த ஜோன் வீராங்கனை போன்றவள் !

மிஸிஸ் வொயிட்·பீல்டு: ஜான் ! இங்குதான் பிரச்சனை ! குதிரையில் தான் முன்னுள்ள போது உன்னைப் பின்னால் அமரச் சொல்கிறாள் ஆன்னி !

ஜான் டான்னர்: நான் ஆன்னியைத் திருமணம் செய்து கொண்டால் தானே ! அது நடக்காது ! நடக்கவே நடக்காது ! நான் ஆன்னி ஏறும் குதிரையில் ஏறி அமர மாட்டேன் ! அப்படி ஏறினாலும் அவள் முன்னால்தால் அமர்வேன் !

மிஸிஸ் வொயிட்·பீல்டு: உனக்கு முன்னிடம் கொடுத்தால் அவளை நீ மணப்பாய் என்று சொல்கிறாயா ? நீ மணந்து கொண்டால், அவளுக்குப் பின்னால் நீ அமர்ந்து கொள்ள மாட்டாய் என்பதை அவள் நன்றாக அறிவாள் ! அவள் உன்னைத்தான் மணக்கப் போவதாக எல்லோரிடமும் முழக்கி வருகிறாள் ! (பரிவுடன்) மேலும் என் விருப்பமும் அதுதான் ஜான் !

ஜான் டான்னர்: மிஸிஸ் வொயிட்·பீல்டு ! இப்படி என்னை முடக்கிப் போட முயல வேண்டாம் ! ஆன்னியை நான் நேசிக்க வில்லை ! அவளை மனதார நேசிப்பவன் அக்டேவியஸ் !

மிஸிஸ் வொயிட்·பீல்டு: ஆன்னி அக்டேவியஸை நேசிக்க வில்லை ! அது உனக்குத் தெரியாது ! அவள் நேசிப்பது உன்னை ! உன்னை ! உன்னை ! அக்டேவியஸ் திருமணம் புரியும் வாலிபனில்லை ! அவன் ஒரு கற்பனைக் கவிஞன் ! கற்பனையில் வாழ்ந்து மடிபவன் !

ஜான் டான்னர்: அப்படி அழுத்திச் சொல்லாதீர் மேடம் ! அக்டேவியஸ் அல்லும் பகலும் ஆன்னியை இதயத்தில் பூஜிப்பவன் ! ஆன்னியும் அக்டேவியஸை நேசிப்பவள். அதை நான் நேராகக் கண்டிருக்கிறேன் ! பலமுறைப் பார்த்திருக்கிறேன் !

மிஸிஸ் வொயிட்·பீல்டு: நீ ஒரு முட்டாள் ! உனக்கு மாதரைப் பற்றிச் சரிவரத் தெரியாது என்பது பளிச்செனத் தெரிகிறது ! பெண்கள் பொய் பேசுபவர் ! ஆடவர் முன்பு நடிப்பவர் ! அந்த நடிப்பில் பொய் எது, மெய் எது என்பதை அறிவது கடினம் ! உன் முன்னால் ஆன்னி அக்டேவியஸை நேசிப்பது போல் நடிப்பது உன் ஆவலைக் கிளப்ப ! அவள் கண்கள் அக்டேவியஸை நோக்கினாலும் விழி ஓரத்தில் உன்னைத்தான் அளக்கின்றன ! உன்மேல்தான் அவளுக்குக் குறி ! நினைத்ததைச் சாதிப்பவள் ஆன்னி ! அவளிடமிருந்து யாரும் தப்ப முடியாது ஜான் ! உன்னை மடக்கி, மயக்கித் தன்வசப் படுத்துவாள் பார் !

ஜான் டான்னர்: மேடம் ! பயமாக இருக்கிறதே அவள் விளையாட்டு ! எப்படி தப்புவது என்று நான் சிந்திக்க வேண்டும் ! அவளை அறவே வெறுக்கச் செய்கிறது உங்கள் பேச்சு ! அவளை விட்டு ஓடிவிடு என்று எச்சரிக்கை விடுக்கிறது என் ஆத்மா !

மிஸிஸ் வொயிட்·பீல்டு: அவளுக்குப் பொருத்தமானன் நீதான் ஜான் ! அக்டேவியஸை விட நீதான் ஆன்னிக்கு ஏற்றவன் ! உனக்குகந்த ஜோடிப் புறா அவள்தான் ! அவளுக்கு இணையான ஆண்மகன் நீதான் ! உன்னையே நீ ஏன் ஒளித்து வைக்கிறாய் ?

ஜான் டான்னர்: அவள் சொல்வ தெல்லாம் உண்மை அல்ல ! அக்டேவியஸ் போல நான்அவளைத் தேவதையாகக் கருதவில்லை ! விரட்டிச் செல்லும் ஒரு சிறுத்தை என்று ஆன்னியைச் சொல்வேன் நான் !

மிஸிஸ் வொயிட்·பீல்டு: மகிழ்ச்சி அடைகிறேன் ஜான், ஆன்னியைத் தேவதையாகக் கருதாத ஓர் ஆண்மகனும் இருக்கிறான் என்று !

ஜான் டான்னர்: ஆன்னி ஓர் பொய்யனி ! அக்டேவியசுக்கு ஆசை மூட்டி மோசம் செய்தவள் ! ஆசை காட்டாது மோசம் செய்கிறாள் எனக்கு ! யார் மீது நாட்டம் என்று கேட்டால் என்னைச் சுட்டிக் காட்ட என்ன தைரியம் அவளுக்கு ? அவள் ஒரு பசப்பி ! அக்டேவியசைத் தூண்டிற் புழுவாக்கி என்னைப் பிடிக்கப் பார்க்கிறாள் ! பசப்புக்காரி ! அவள் ஒரு வன்முறை வனிதா (Bully Woman) ! தன் கவர்ச்சியால் மயக்கி ஆடவனைத் தன்வசப் படுத்த முனைகிறாள் ! அவளுக்குத் தொழில் அதுதான் ! ஆண்களைக் குழப்பி வைக்கும் அழகி ! ஆடவரை மூடராக்கும் அரக்கி !

மிஸிஸ் வொயிட்·பீல்டு: அவை மட்டுமல்ல ! என் மகள் ஒரு வஞ்சகி !

ஜான் டான்னர்: அப்படியானல் அந்த வஞ்சகியை நான் ஏன் மணந்து கொள்ள வேண்டும் ?

மிஸிஸ் வொயிட்·பீல்டு: ஆன்னி ஒரு காட்டுக் குதிரை ! அதை உன்னால்தான் அடக்க முடியும் ! பாவம் அக்டேவியஸ் ! அவன் ஒரு கவிஞன் ! பஞ்சு போன்ற அவன் பாறையுடன் வாழ முடியாது என்பது என் கருத்து ! நீயே ஆன்னிக்கு நிகரானவன் ! அதில் சிறிதும் சந்தேகமில்லை !

ஜான் டான்னர்: வெறுப்பது போல் வெளியே காட்டினாலும் உங்களுக்கு மகள் மீது தீராத பாசம் உள்ளது ! அவளை மணந்து நான் துன்புற வேண்டும் என்ற விருப்பமும் உங்களுக்கு நிரம்ப உள்ளது ! என்மேல் உங்களுக்கு ஏன் அப்படி ஒரு வேண்டா விருப்பு ?

மிஸிஸ் வொயிட்·பீல்டு: ஜான் ! ஆன்னியும் நீயும் ஆனந்தமாக வாழ்வீர் என்பது என் அசையாத எண்ணம் ! நீ துன்பப் பட்டால் அவள் எப்படி இன்பமாய் வாழ்வாள் ? நீதான் அவளை மணக்க வேண்டும் ! இன்பம் அடைபவன் நீ ! துன்பம் அடைபவள் அவள் !

ஜான் டான்னர்: (அழுத்தமாக) முடியாது ! முடியாது ! ஒருபோதும் நான் ஆன்னியை மணக்கப் போவதில்லை மேடம் !

மிஸிஸ் வொயிட்·பீல்டு: வேண்டுமானால் பார் ! நினைத்ததைச் சாதிப்பவள் என் மகள் ! நீ வெல்கிறாயா அல்லது ஆன்னி வெல்கிறாளா என்று பார்ப்போம் ! நீதான் அவளை ஜோன் ஆ·ப் ஆர்க் வீராங்கனை என்று பட்டம் அளித்திருக்கிறாய் ! அதை மறந்து விட்டாயா ?

(தொடரும்)

***************************
தகவல்

Based on The Play

“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)

1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)
2. The Teachings of Reverence for Life By : Albert Schweitzer (1965)
3. The Religious Significance of Art By : Leo Tolstoy, Book on Philosophy – A Modern Encounter (Basic Edition) By : Robert Paul Wolff (1973
4. Vivekananda Speaks to You – Sri Ramakrishna Math, Chennai (1977)
5. Joyful Wisdom By : Friedrich Nietzsche (1971)
6. The Wisdom of India By : Emmons E. White (1968)
7. Friedrich Nietzsche – The Story of Philosophy By: Will Durant (1959)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (September 16, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 8(சுருக்கப் பட்டது)

This entry is part [part not set] of 34 in the series 20080911_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

உன்னத மனிதன் நீடித்து வாழ்வான் என்று சொல்வோம் நாம். உன்னத மனிதனுக்குக் கல்வி புகட்டுவேன் நான். மனிதன் இருப்பதை விட மிஞ்சி மேலுயர, உன்னதம் பெற வேண்டும். மனிதன் மனிதனை மிஞ்சி உன்னதம் அடைய நீவீர் என்ன செய்துள்ளீர் ?

மனிதனிடம் உள்ள உன்னதம் என்ன ? அவன் கடக்கும் ஒரு பாலம். அடையும் ஒரு குறிக்கோள் அல்ல ! மனிதன் ஒருவனிடம் காதல் உண்டாக்குவது, மாற்றமும், அழிவும் அடைந்த அவனுடைய ஒரு நிலையைக் காட்டுகிறது !

மரணத்துக்கு அஞ்சாமல் சாதிக்கப் போவதைத் தவிர வேறு பாதையில் வாழத் தெரியாத தீவிர மனிதரை நான் நேசிக்கிறேன் ! ஏனெனில் அவரே தம்மை மீறி அப்பால் முன்னேறுபவர்.

(உன்னத மனிதர் சிலர் : சாக்ரெடிஸ், கௌதம புத்தர், ஏசு நாதர், நபி நாயகம், ஜியார்ஜ் வாஷிங்டன், ஆப்ரஹாம் லிங்கன், லெனின், லியோ டால்ஸ்டாய், விவேகானந்தர், மகாத்மா காந்தி, மாசேத்துங், மார்டின் லூதர் கிங், நெல்ஸன் மாண்டேலா, ஆல்பர்ட் ஸ்வைஸர், அன்னை தெராஸா போன்றோர்)

·பிரடெரிக் நியட்ஸே, ஜெர்மன் சித்தாந்த ஞானி
(Friedrich Nietzsche) (1844-1900)

அடிமைத் தளைகளை உடைத்த, முடிவில்லா முதல்வனைத் தொட்ட பனிரெண்டு சிங்க ஆத்மாக்கள் இருந்தால் ஒரு தேசத்திற்குப் போதுமானது. யாருடைய ஆத்மா ஆதி முதல்வனை நோக்கிச் செல்கிறதோ, எந்த ஆத்மா செல்வத்துக்கும், அதிகாரத்துக்கும், புகழுக்கும் இச்சைப்பட வில்லையோ அதுதான் உலகத்தை ஆட்டிப் படைக்கும் உன்னத ஆத்மா.

திரும்பிப் பாராது முன்னோக்கிச் செல் ! வரையில்லா வலிமை, எல்லையற்ற உள்ளக் கிளர்ச்சி, மன ஊக்கம், பொறுமைப் பண்பாடு ஆகியவை மட்டுமே ஒருவர் மகத்தான சாதனைகளைச் சாதிக்க உதவி செய்பவை. தெய்வத் திருவருளால் உரிய இடத்தில், உகந்த சமயத்தில் ஓர் உன்னத மனிதன் தோன்றுவான்.

மகத்தான வினைகள் புரிய மாபெரும் போராட்டத்தை நீண்ட காலம் நடத்த வேண்டியுள்ளது. அவற்றில் ஒரு சில வினைகள் தவறிப் போனால் மனமுடையத் தேவையில்லை. இயற்கை விதி முறையே அநேக வினைகளைத் தவறிப் போக வைக்கிறது. இன்னல்களை இடை இடையே எதிர்க்குமாறு விடுகிறது. பேரளவுச் சிக்கல்கள் நேரிடச் செய்கிறது. ஆன்மீகத் தீ உந்தித் தள்ள (உன்னத) மனிதரைக் கடிதுழைக்கத் தனித்து விடுகிறது.

கர்மயோகி விவேகானந்தா (1863-1902)

+++++++++++++++++++

உன்னத மனிதன்

(பெர்னார்ட் ஷா)
அங்கம் : 4 பாகம் : 8
(சுருக்கப் பட்டது)

நடிகர்கள்:

1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.
2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.
3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – 25 வயது வாலிபன்.
4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)
5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி
6. ஹெக்டர் மலோன் (Hector Malone) – ஓர் அமெரிக்கன்
7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ¦†க்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்
8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்
9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.
10. வயலெட் ராபின்ஸன் (Violet Robinson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)
11 வேலைக்காரி மேரி (Parlormaid)

**************

(அங்கம் : 4 பாகம் : 8)

(சுருக்கப் பட்டது)

கதா பாத்திரங்கள்: அக்டேவியஸ், மிஸிஸ் வொயிட்·பீல்டு, ஜான் டான்னர்.

காலம்: பகல் வேளை

இடம்: ஐரோப்பிய சுற்றுப் பயணத்தில் தற்போது தங்குமிடம் தெற்கு மலைப் பகுதி : கிரனாடா, ஸ்பெயின்.. தங்கு மாளிகையின் பின்புறப் பூங்கா.

(காட்சி அமைப்பு: ஆக்டேவியஸ் கவலையுடன் தனியாகப் பூங்காவில் உட்கார்ந்திருக்கிறான்.)அப்போது ஆன்னியின் அன்னை மிஸிஸ் வொயிட்·பீல்டு வருகிறாள். பிறகு ஜான் டான்னர் உரையாடலில் கலந்து கொள்கிறான்.)

மிஸிஸ் வொயிட்·பீல்டு: (கவனமோடு கனிவுடன்) என்ன அக்டேவியஸ் ? இப்படிக் கவலையோடு கண்ணீருடன் தனியாக அமர்ந்திருக்கிறாய் ? சகோதரி வயலட்டுக்கு ஏதாவது உடல்நலக் கேடா ? கர்ப்பவதிக்கு ஏதாவது நேர்ந்து விட்டதா ? அல்லது அவளது திருமணமத்தில் தகராறு உண்டாகி விட்டதா ?

அக்டேவியஸ்: (கண்ணீரைத் துடைத்துக் கொண்டு) அப்படி ஒன்றுமில்லை மேடம். வயலட் வாழ்க்கையில் பிரச்சனை எதுவும் இல்லை ! மகிழ்ச்சியாக இருக்கிறாள் தங்கை.

மிஸிஸ் வொயிட்·பீல்டு: அப்படியானால் நீ ஏன் மகிழ்ச்சியோடில்லை. கண்கள் கலங்கும்படி என்ன நேர்ந்தது உனக்கு ?

அக்டேவியஸ்: எனக்கொன்றும் ஏற்படவில்லை ! இது அழுகைக் கண்ணீர் இல்லை ! ஆனந்தக் கண்ணீர் மேடம் !

மிஸிஸ் வொயிட்·பீல்டு: ஓ அப்படியா ? யாருக்காக இந்த ஆனந்தக் கண்ணீர் இப்படிக் கரை புரண்டு ஓடுகிறது ?

அக்டேவியஸ்: (கேலியாக) ஜான் டான்னருக்காக ! ஆன்னி டான்னரைத் திருமணம் புரியப் போவதாக அறிவித்து விட்டாள் ! அந்த ஆனந்தம் கரை புரண்டு ஓடி என் இதயத்தை உடைத்து விட்டது !

மிஸிஸ் வொயிட்·பீல்டு: (வருத்தமுடன்) உன் இதயம் உடைந்து போனதால் கண்ணீர் வந்ததா ? அல்லது டான்னர் இதயம் களித்து விட்டதால் நீர் வழிந்ததா ?

அக்டேவியஸ்: ஆன்னியின் மகிழ்ச்சிக்காக என் விழிகள் கண்ணீர் விடுகின்றன. அவள் விழிகளில் கண்ணீர் வரக் கூடாது. அதற்காக என் விழிகள் கண்ணீர் விடுகின்றன.

மிஸிஸ் வொயிட்·பீல்டு: நீ என்ன சொல்கிறாய் என்று எனக்குப் புரிய வில்லை. ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது ! என்னருமை மகள் உன் நெஞ்சில் ஒரு பெருங் காயத்தை உண்டாக்கி விட்டாள். உன்னைப் புறக்கணித்து விட்டாள் என்று சொல்கிறாய் !

அக்டேவியஸ்: அதற்காக நான் உங்கள் மீது பழிசுமத்த மாட்டேன் ! அது ஆன்னியின் தவறும் இல்லை ! தவறு என் மீதுதான் ! அதனால் நான் வருந்துகிறேன். என்னால் வரும் கண்ணீரையும் தடுக்க முடிய வில்லை !

மிஸிஸ் வொயிட்·பீல்டு: என் மீது ஏன் பழி சுமத்த வில்லை என்று சொல்கிறாய் ? நான் என்ன செய்தேன் அவள் திருமணத் தீர்மானத்தில் ?

அக்டேவியஸ்: உங்களுக்கு முழு உரிமை உள்ளது. என்னைத் தவிர்த்து டான்னரை ஆன்னிக்குக் கணவனாய்த் தேர்ந்தெடுப்பது உங்கள் உரிமை. நான் யார் அதில் குறுக்கிட ? ஆனால் நான் ஆன்னியை நேசிக்கிறேன் ! மனதார நேசிக்கிறேன் ! மனைவியாக்கக் கனவு காண்கிறேன் ! அந்தக் கனவைக் கலைப்பவர் ஜான் டான்னர் ! ஆனால் டான்னர் ஆன்னியை நேசிக்க வில்லை ! ஆன்னியும் டான்னரை நேசிக்க வில்லை ! அதுதான் எனக்கு வருத்தம் அளிக்கிறது.

மிஸிஸ் வொயிட்·பீல்டு: அப்படி யார் உனக்குச் சொன்னது ?

அக்டேவியஸ்: வேறு யாருமில்லை ! ஆன்னியே என்னிடம் சொன்னாள் ! நீங்கள் வருவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்புதான் என்னிடம் ஆன்னி பேசிக் கொண்டிருந்தாள். வேடிக்கையாக இருக்கிறது அந்தத் திருமணம். தம்பதிகள் ஒருவரை ஒருவர் நேசிப்பதில்லை ! ஆனால் அவர் இருவரும் திருமணம் செய்ய விரும்புகிறார் ! அது என் நெஞ்சைப் பிளக்கிறது !

மிஸிஸ் வொயிட்·பீல்டு: ஏன் அப்படி விரும்பாத தம்பதிகள் திருமணம் செய்கிறார் ?

அக்டேவியஸ்: எனக்கு ஒன்றும் புரிய வில்லை ! ஆன்னி உன்னத குழந்தைகளை அத்தகைய தம்பதிகள் உறவில் பெற்று உருவாக்குவாளாம் ! உன்னத மனிதரை எப்படி உருவாக்குவது என்று உலக சிந்தனையாளர் நியட்ஸே எழுதிருப்பது நினைவுக்கு வருகிறது !
ஆனால் என்னறிவுக்கு எட்ட வில்லை !

மிஸிஸ் வொயிட்·பீல்டு: அக்டேவியஸ் ! ஆனால் ஆன்னியிடம் நான் உன்னை வேண்டாம் என்றும் தடுக்க வில்லை ! டான்னரை மணந்து கொள் என்றும் முடுக்க வில்லை !

அக்டேவியஸ்: நீங்கள்தான் டான்னரை மணந்துகொள் என்று ஆன்னியிடம் கூறினீராம் !

மிஸிஸ் வொயிட்·பீல்டு: ஆன்னி அப்படித்தான் பேசுவாள் ! அது அவள் பேசும் முறை ! தான் விரும்புவதை நான் விரும்புவதாகச் சொல்வாள் ! உனக்கு ஆன்னியைத் தெரியவில்லை ! நான் சொல்வதை அவள் கேட்பதுமில்லை. நான் விழைவதை அவள் செய்வதுமில்லை ! அவளொரு சுதந்திரப் பறவை ! அவளை யாரும் கூண்டுக்குள் பிடித்து அடைக்க முடியாது !

அக்டெவியஸ்: சரி மேடம் ! இப்போது நீங்கள் சொல்லுங்கள் : யார் ஆன்னிக்கு உகந்த கணவன் ? காதலிக்கும் நானா ? அல்லது நேசிக்காத டான்னரா ?

மிஸிஸ் வொயிட்·பீல்டு: எனக்குத் தெரியாது அக்டேவியஸ் ! இது கடிமான கேள்வி ! வாலிப ஆடவரைப் பற்றி நான் நியாயம் கூற முடியாது. எது ஆடவனுக்குத் தேவை என்பது இந்தத் தலைமறைக்கு நான் சொல்ல முடியாது ! உன்னைப் போல் ஓரளவு அறிவு பெற்றவனா ? அல்லது டான்னரைப் போல் பேரளவு ஞானம் பெற்றவனா ? யார் ஆன்னிக்கு ஏற்ற கணவன் என்பதை நான் தீர்மானிக்க இயலாது !

அக்டேவியஸ்: மேடம் ! நீங்கள் ஒரே வரியில் சொல்லாமல் சொல்லி விட்டீர் ! டான்னர் என்னை விடப் பேரளவு ஞானம் பெற்றவர். புரிந்து கொண்டேன் மேடம் ! புரிந்து கொண்டேன் ! மிக்க நன்றி ! கொந்தளித்த என் மனதில் இப்போது அமைதி நிலவி விட்டது !

(அப்போது ஜான் டான்னர் வருகிறான். அக்டேவியஸ் அவனைப் பார்த்ததும் பேச விரும்பாமல் உடனே போக முயல்கிறான்)

அக்டேவியஸ்: மேடம் ! நான் முகத்தைக் கழுவ மாளிகைக்கு நழுவ வேண்டும். ஆன்னி எடுத்த முடிவை டான்னரிடம் நீங்களே சொல்லி விடுங்கள். ஆன்னி எனக்கு அனுமதி கொடுத்திருக்கிறாள்.

(டான்னருக்கு ஹலோ சொல்லாமல் அக்டேவியஸ் நழுவுகிறான்)

ஜான் டான்னர்: ஆன்னி என்ன முடிவு செய்திருக்கிறாள் ? ஆன்னி என்ன அனுமதி கொடுத்திருக்கிறாள் ? அக்டேவியஸ் ! என்னைக் கண்டதும் ஏன் இப்படி ஓடுகிறாய் ? ஆன்னி உன்னை மணந்து கொள்ளச் சம்மதம் அளித்து விட்டாளா ?

அக்டேவியஸ்: ஆமாம் ! சம்மதம் அளித்து விட்டாள் ஆன்னி ! உன்னை மணந்து கொள்ள ! என் வாழ்த்துக்கள் உங்களுக்கு ! நான் வருகிறேன் ! சந்திக்கிறேன் உங்களைத் திருமணத் தினத்தன்று !

ஜான் டான்னர்: ஓடாதே அக்டேவியஸ் ! நான் திருமணம் புரிவதாக இல்லை ! ஆன்னியை நீ மணந்து கொள் !

அக்டேவியஸ்: (திரும்பிப் பார்த்து) இந்தப் பிறப்பில் ஆன்னி எனக்கு மனைவியாகப் போவதில்லை ! நான் திருமணம் புரிய விரும்ப வில்லை ! ஆன்னியை நீதான் மனைவியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் ஜான் ! . . . போய் வருகிறேன் ஜான் !

(அக்டேவியஸ் மாளிகை நோக்கிப் போகிறான்)

(தொடரும்)

***************************
தகவல்

Based on The Play

“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)

1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)
2. The Teachings of Reverence for Life By : Albert Schweitzer (1965)
3. The Religious Significance of Art By : Leo Tolstoy, Book on Philosophy – A Modern Encounter (Basic Edition) By : Robert Paul Wolff (1973
4. Vivekananda Speaks to You – Sri Ramakrishna Math, Chennai (1977)
5. Joyful Wisdom By : Friedrich Nietzsche (1971)
6. The Wisdom of India By : Emmons E. White (1968)
7. Friedrich Nietzsche – The Story of Philosophy By: Will Durant (1959)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (September 9, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 7 (சுருக்கப் பட்டது)

This entry is part [part not set] of 35 in the series 20080904_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

ஆக்க சக்தி, கூரிய யுக்தி, சுயமதிப்பு உறுதி ஆகிய மூன்றும் உன்னத மனிதனுக்கு வேண்டிய திறம்பாடுகள். அம்மூன்றும் செம்மையான சீரமைப்பில் இணைந்திருக்க வேண்டும், மனித உள்ளுணர்ச்சிக்கு வசப்பட்ட ஆசைப்பணிகள், நாட்டுக் கொந்தளிப்பைக் கட்டுப்படுத்தி உன்னத குறிக்கோளை நோக்கி மக்களை ஒன்றுபடுத்தி வெற்றி பெறும் போது அப்புரட்சியின் தளபதி உன்னத மனிதனாக உயர்கின்றான். (உதாரணம் : சாக்ரெடிஸ், கௌதம புத்தர், ஏசு நாதர், நபி நாயகம், ஆப்ரஹாம் லிங்கன், மகாத்மா காந்தி, மார்டின் லூதர் கிங், லெனின், மாசேத்துங், அன்னை தெராஸா, விவேகானந்தர் போன்றோர்)

உன்னத மனிதனைக் காணும் ஒரு குறிக்கோள் இருப்பது நமது வாழ்வுப் பணிக்கு வெகுமதி அளிப்பது. அது நம்மை உயர்த்துவது. உன்னத மனிதர் ஒருவருக்காக ஒருவருடன் ஒருவர் பரிவுடன் வாழ்வது நமக்கொரு குறிப்பணியாக அமைய வேண்டும். நாமெல்லாம் உன்னத மனிதன் ஒருவனுக்கு அன்புடன் பணிந்து வேலை செய்வோம். அவனுக்கு ஒரு கருவியாக இருந்து நாம் உதவி செய்வோம்.

இன்று தனித்துவம் கொண்ட பண்பாளர் நீவீர் ! சமூகத்திலிருந்து விலகி நின்று தனிச் சிந்தனையுடன் செயல் புரிகிறீர் நீவீர் ! ஒருநாள் நீவீர் புதியதோர் குழுவை அமைப்பீர் ! உமது குழுவிலிருந்து உதயமாவான் ஓர் உன்னத மனிதன் !

·பிரடெரிக் நியட்ஸே, ஜெர்மன் சித்தாந்த ஞானி
(Friedrich Nietzsche) (1844-1900)

ஐரோப்பிய நாடுக:ள் சமூகப் பேராற்றல் படைப்பிற்கும், ஆசியா நாடுகள் ஆன்மீக சிந்தனைக்கும் மூலாதாரமாக இருந்து வருகின்றன. உலக வரலாறுகள் முழுவதும் இவ்விரண்டு ஆற்றல்களின் கூட்டியக்கக் கதைகள் காணப்படுகின்றன. பெருந்திரள் உண்டாக்குவதில் எந்த சிறப்பு மில்லை ! ஒரு நூற்றாண்டு காலத்தில் பெருந்திரள் கூட்டம் ஒன்று சாதிப்பதை விட, உடலும் உள்ளமும் ஊன்றி, சக்தி வாய்ந்த ஒரு சில உன்னத மனிதர் பேரளவு சாதிக்க முடியும்.

என் தனிப்பட்ட வாழ்விலிருந்து ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன். எங்கள் குருநாதரின் (இராம கிருஷ்ண பரஹம்சர்) ஆத்மா பிரிந்த பிறகு பணம் காசில்லாமல், யாரும் அறியாத பன்னிரெண்டு வாலிபராய் நாங்கள் இருந்தோம். எங்களை எதிர்த்து முளையிலே வெட்டி விடக் கடுமையாக முயற்சி செய்தவை சக்தி வாய்ந்த நூறு நிறுவனங்கள் ! ஆனால் இராம கிருஷ்ணர் எங்களுக்கு அளித்திருந்த உன்னத கொடைகள் : ஆத்ம இச்சை ! ஆயுள் நீடித்த போராட்டம் ! வெறும் உபதேசமற்ற மெய்யாக வாழும் வாழ்வு !

இன்றைக்கு இந்தியா முழுவதும் மக்கள் குருநாதரை அறிவார். குருநாதரை மதிக்கிறார். அவரது உன்னத மெய்ப்பாட்டு அறிவுரைகள் காட்டுத் தீபோல் பரவி வருகின்றன. பத்தாண்டுகளுக்கு முன்பு அவரது பிறந்தநாள் விழாவுக்கு நூறு பேரை அழைத்த வர முடியாது ! சென்ற ஆண்டு விழாவில் (1894) கலந்து கொண்டவர் எண்ணிக்கை ஐம்பதினாயிரம் !

வெறும் மனித ஆற்றல், மாபெரும் செல்வம், மேம்பட்ட படிப்பு, சொற்பொழிவுத் திறமை அல்லது பின்பற்றுவோர் எண்ணிக்கை மட்டும் ஒருவர் செல்வாக்கைக் காட்டுவ தில்லை ! உள்ளும் புறமும் தூய்மை கொண்டு உண்மை வாழ்வை வாழ்ந்து காட்டுவதே நிலைபெற்ற மதிப்பை அளிக்க வல்லது.

கர்மயோகி விவேகானந்தா (1863-1902)

+++++++++++++++++++

உன்னத மனிதன்

(பெர்னார்ட் ஷா)
அங்கம் : 4 பாகம் : 7
(சுருக்கப் பட்டது)

நடிகர்கள்:

1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.
2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.
3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – 25 வயது வாலிபன்.
4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)
5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி
6. ஹெக்டர் மலோன் (Hector Malone) – ஓர் அமெரிக்கன்
7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ¦†க்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்
8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்
9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.
10. வயலெட் ராபின்ஸன் (Violet Robinson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)
11 வேலைக்காரி மேரி (Parlormaid)

**************

(அங்கம் : 4 பாகம் : 7)

(சுருக்கப் பட்டது)

கதா பாத்திரங்கள்: வயலட் ராபின்ஸன், டிரைவர் ஹென்றி ஸ்டிராக்டர், ஹெக்டர் மலோன். ஹெக்டரின் தந்தை மிஸ்டர் மலோன்

காலம்: பகல் வேளை

இடம்: ஐரோப்பிய சுற்றுப் பயணத்தில் தற்போது தங்குமிடம் தெற்கு மலைப் பகுதி : கிரனாடா, ஸ்பெயின்.. தங்கு மாளிகையின் பின்புறப் பூங்கா.

(காட்சி அமைப்பு: ஆக்டேவியசும் ஆன்னியும் தனியாகப் பூங்காவில் உரையாடுகிறார்.)

ஆன்னி: தெளிந்த ஞானமும், உயர்ந்த நெறியும், உறுதி உள்ளமும் கொண்டவர் ஜான் டான்னர் ! அவரை நான் மணந்தால் எங்களுக்கு உன்னத குழந்தைகள் பிறக்கும் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளது ! இது தேர்ந்தெடுப்புப் திருமணம் ! உயர்ந்த சிந்தனை உடையவர், உறுதியான உள்ளங் கொண்டவர், ஒப்பிலா மனநோக்கு உடையவர் தம்பதிகளானால் இல்வாழ்வில் உன்னத சிசுக்களைப் பெறுவர் என்பது என் அழுத்தமான நம்பிக்கை.

அக்டேவியஸ்: நேசிக்கும் நண்பனைப் புறக்கணித்து விட்டு நாடோடி ஒருவனை நீ மணப்பது என்னால் தாங்க முடியாது ! நான் உன்னை மனதாரக் காதலிக்கிறேன். நீயும் என்னைக் காதலிக்கிறாய். இல்லா விட்டால் நீ இப்படி தர்க்கம் புரிந்து கொண்டு நிற்க மாட்டாய் !

ஆன்னி: உன் மனக்கனவை நான் கலைக்க மாட்டேன். நான் உன்னைக் காதலித்தாலும் திருமணம் புரிய விருப்பமில்லை ! ஏனென்று கேளாதே ! சில வினாக்களுக்கு எனக்கே விடை தெரியாது. நீ உணர்ச்சி வசப்பட்ட பிரமச்சாரி ! நீயும் நானும் இப்போது காதலித்தாலும் ஒருநாள் அந்தச் சங்கிலி அற்றுவிடும் ! அது எனக்கு மிக்க வேதனை அளிப்பது !
நமக்கிடையே நெருக்கம் உள்ளதை விடத் தூரம் இருப்பது நல்லது ! நெருக்கத் தொடர்பு நம்முள் பிணக்கை உண்டாக்குவது ! நீயும் நானும் பிரிந்திருப்பதே நலம் தருவது. நெடுங்காலம் நண்பராய் வாழலாம் !

அக்டேவியஸ்: அந்தப் பிரிவு வாழ்வு எனக்கு நரக வேதனை அளிப்பது ! நீண்டகால நண்பராய் இருப்பதை விடக் குறுகிய காலத் தம்பதிகளாக வாழ்வது சொர்க்கமாகத் தோன்றுகிறது. உன்னை நான் இழந்தால் நானிந்த உலகை விட்டே நீங்கி விடுவேன்.

ஆன்னி: இப்படியெல்லாம் பயமுறுத்தி என்னை இழுக்க முயலாதே ! நான் உன்னிடம் பரிவாக இல்லா விட்டாலும் உன் உயிர்மீது நீ இரக்கம் கொள்ள வேண்டும். எனக்காக நீ ஏன் உயிரை விடுகிறாய் ? நானந்தத் தகுதி பெறாதவள் ! நான் வெறுத்தாலும் நீ வாழ வேண்டும் !

அக்டேவியஸ்: நான் சாவதை உன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை ! இத்தனை அன்பு என்மேல் உள்ள போது ஏன் என்னை மணக்க வெறுக்கிறாய் ?

ஆன்னி: அப்படித்தான் ஏனென்று கேட்காதே வென்று சில விநாடிக்கு முன்பு கூறினேன். என்னால் பதில் சொல்ல முடியாது. நான் உனக்குக் கண்மருட்சி தருவதாக அஞ்சுகிறேன் !

அக்டேவியஸ்: என்னை நீ வெறுக்க வெறுக்க உன்மீது எனக்கு விருப்பம் அதிகமாகுது ! ஆனால் நீ டான்னருக்குக் கண்மருட்சி தர அஞ்சுவ தில்லையே !

ஆன்னி: அங்குதான் நீ தவறி விடுகிறாய் அக்டேவியஸ் ! டான்னருக்கு என்மேல் எந்த மருட்சியுமில்லை. நான் அருகில் நின்றாலும் அவரது கண்கள் என்னை முற்றுகை போடுவ தில்லை ! என் விழிகளும் அவரை வேட்டை ஆடுவதில்லை !

அக்டேவியஸ்: உனக்கு நானொரு உதவி செய்யட்டுமா ? அதற்காவது அனுமதி அளி ! நீ டான்னரை நேசிப்பதாக நான் போய்ச் சொல்லட்டுமா ?

ஆன்னி: அப்படிச் சொன்னால் அவர் மறுபடியும் என்னை விட்டு ஓடிப் போய்விடுவார் ! பிறகு திருமணப் பந்தலில் நான் தனித்துப் போய் விடுவேன். நான் விரும்பா விட்டாலும் நீ என்னைத் தியாகம் செய்யத் துணிகிறாய் ! நான் புறக்கணித்தாலும் நீ என்னைத் திருமணம் செய்ய விழைகிறாய். நீயொரு விந்தை மனிதன் ! வேடிக்கை மனிதன் ! எனக்கு உன்னைப் போன்ற தியாகிகள் மீது அனுதாபம் உண்டாகுதே தவிர ஏனோ அன்பு எழுவதில்லை ! நீ ஒரு கவிஞன் ! அதனால் உன்மேல் எனக்கு மதிப்பு உண்டு ! ஆனால் அது காதலில்லை ! வெறும் மரியாதை !

அக்டேவியஸ்: நீ ஒரு மதில்மேல் பூனை ! எங்கே பூனை தாவும் என்று யூகிக்க முடியாது ! ஞானப் பெண்டிர் அனைவரும் மதில்மேல் உலவும் பூனைகள்தான் ! என் மனம் எளியது ! நான் உன்னை நேசிக்கிறேன் ! நீ என்னை நேசிக்க வில்லை ! ஆதலால் நான் உனக்கு உற்சாகம் அளிக்க முடியாது ! ஆனால் வேறொருவன் உனக்கு உவப்பளிக்க நான் உதவி செய்ய முடியும் !

ஆன்னி: அக்டேவியஸ் ! இப்படி நீ அறிவில்லாது பேசுவாய் என்று நான் எதிர்பார்க்க வில்லை. உனக்கு மாதரைப் பற்றித் தெரியாது ! நீ கற்பனை உலகில் மிதக்கும் ஓரு கவிஞன் ! பெண்ணின் மனம் உன் கண்களுக்கு ஏனோ தெரியவில்லை ! நீ உடலை வர்ணிக்கும் உடலை மோகிக்கும் ஒரு கவிஞன் ! அதனால் என் உள்ளத்தில் நீ நடமாட வில்லை !

அக்டேவியஸ்: நீ சொல்வது ஒன்றும் எனக்குப் புரியவில்லை ! நான் நானேதான் ! என்னை நான் மாற்றிக் கொள்ள முடியாது ! எப்படி நானிருந்தாலும் என்னை நான் நேசிக்கிறேன்

ஆன்னி: (அழுத்தமாக) அக்டேவியஸ் ! நான் உன்னை மணக்க முடியாது ! உன்னை நான் ஏமாற்ற மாட்டேன் ! உண்மையைச் சொல்வேன் நீ என்னை வெறுத்தாலும் !

அக்டேவியஸ்: என் துரதிருஷ்டத்தை ஏற்றுக் கொள்கிறேன் ! நீ என் இதயத்தை நார் நாராகக் கிழிப்பது உனக்கே தெரியவில்லை ! நீ ஒரு கல் நெஞ்சக்காரி !

ஆன்னி: உன் நெஞ்சு ஒரு பஞ்சுக் கூடு ! உன் சகோதரி வயலெட் போல் உனக்கு இரும்பு இதயமில்லை ! அவள் எண்ணியதை சாதிப்பவள் ! ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்பவள்.

அக்டேவியஸ்: நான் எண்ணியதை இழப்பவன் என்று மறைமுகமாகச் சொல்கிறாய் ! வயலெட் போல் நான் வைர நெஞ்சம் படைத்தவன் அல்லன். நான் வாழ்விலும் கோழை ! காதலிலும் கோழை !

ஆன்னி: உன்னைத் துணிந்து மணப்பவளுக்குத் தெய்வம்தான் துணை யிருக்க வேண்டும் !

அக்டேவியஸ்: ஏன் அப்படிச் சொல்கிறாய் ஆன்னி ? நீதான் என்னை விரும்பவில்லை என்றால் மணக்க வரும் மாதையும் ஏன் தடுத்து நிறுத்துகிறாய் ?

ஆன்னி: அறிவுள்ள ஒருத்தி உன்னை விரும்ப மாட்டாள் ! அறிவில்லா ஒருத்தியும் உன்னை வெறுப்பாள் ! நானிந்த வாதத்தை இனித் தொடர விரும்ப வில்லை ! அதற்கொரு முற்றுப் புள்ளி வைக்கிறேன் ! என்னை மன்னித்து விடு உன்னைப் புண்படுத்தியதற்கு !

அக்டேவியஸ்: என்னைப் புண்படுத்தியது உனக்குப் பூரிப்பளித்தால் நான் பொறுத்துக் கொள்கிறேன் ! காதலிலே நான் தோல்வியுற்றேன் (கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறேன்)

ஆன்னி: அதனால்தான் என்னைக் காதலிக்காதே என்று உன்னை எச்சரித்தேன் ! நீ கேட்க வில்லை ! மலைமேல் மோதும் அலைபோல் முயன்றாய் ! போதும் அலைகள் ஓயட்டும் ! நான் போகிறேன் அக்டேவியஸ் ! (கன்னத்தில் முத்தம் கொடுக்கப் போனவள் திரும்பி முத்தமிடாமல் விரைகிறாள். அக்டேவியஸ் மனமுடைந்து பூங்கா பெஞ்சில் தளர்ந்து போய் உட்காருகிறான்)

(தொடரும்)

***************************
தகவல்

Based on The Play

“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)

1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)
2. The Teachings of Reverence for Life By : Albert Schweitzer (1965)
3. The Religious Significance of Art By : Leo Tolstoy, Book on Philosophy -A Modern Encounter (Basic Edition) By : Robert Paul Wolff (1973
4. Vivekananda Speaks to You – Sri Ramakrishna Math, Chennai (1977)
5. Joyful Wisdom By : Friedrich Nietzsche (1971)
6. The Wisdom of India By : Emmons E. White (1968)
7. Friedrich Nietzsche – The Story of Philosophy By: Will Durant (1959)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (September 3, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 6 (சுருக்கப் பட்டது)

This entry is part [part not set] of 31 in the series 20080828_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

காத்துக் கொண்டு உட்கார்ந் திருந்தேன்
காத்திராமல் நான் யாருக்கும்,
நல்லதுக்கும்
பொல்லாத தற்கும் அப்பால்
பூரித்துக் கொண்டு !
இப்போது வெளிச்சம் !
இப்போது நிழல் !
இங்கே பகல் பொழுது மட்டும்தான் !
நடுப்பகல் ! ஏரிக்கரை !
முடிவற்றுச் செல்லும் காலம் !
அடுத்து என் நண்பர்
திடீரென
ஒருவர் இருவர் ஆனார் !
ஸரதுஸ்டிரா (Zarathustra) என்
அருங்கில் சென்றார் !

(From Man Might Be Surpassed.)

·பிரடெரிக் நியட்ஸே, ஜெர்மன் சித்தாந்த ஞானி
(Friedrich Nietzsche) (1844-1900)

“ஆதரித்தாலும் சரி ஆதரிக்க விட்டாலும் சரி நான் இளைஞர்களைச் சீர்நெறிப் படுத்தப் பிறந்திருக்கிறேன். நூற்றுக்கணக்கில் வாலிபர் ஒவ்வொரு நகரிலிருந்தும் என்னுடன் இணையத் தயாராக இருக்கிறார். அவர்களை எல்லாம் இந்தியாவில் சுக வாழ்வு, நீதி நெறி, மத வாழ்வு பெறுக, எதிர்க்க முடியாத அலைகள் போல் சுருட்டி அனுப்பப் போகிறேன். குறுகிய சிந்தை உடையோருக்கும், தாழ்த்தப் பட்டோருக்கும் சிறந்த கல்வி முறை வசதிகள் அளிக்க நான் முயல்வேன். அவற்றை நிச்சயம் செய்து முடிப்பேன் அல்லது செத்து மடிவேன் !

இந்தியாவில் மூன்று பேர் ஒன்றாகச் சேர்ந்து ஓரிடத்தில் ஐந்து நிமிடங்கள் கூட இயங்க முடியாது ! அந்த மூவரில் ஒவ்வொருவனும் ஆதிக்கம் செய்யும் ஆற்றல் பெறப் போராடுகிறான் ! இறுதியில் (ஒற்றுமையின்மையால்) அந்த நிறுவனம் முழுவதும் துயரத்துள் வீழ்கிறது ! பிரபு, பிரபு ! பொறாமைப் படக்கூடாது என்று எப்போது நாம் கற்றுக் கொள்ளப் போகிறோம் ?

இந்தியாவைக் கைப்பற்ற ஆங்கிலேயருக்கு எப்படி எளிதாக முடிந்தது ? அதற்குக் காரணம் என்ன வென்றால், அவர்கள் தேசீய மனப்பான்மை கொண்டவர்; ஆனால் நாம் அப்படி அல்லர். நமது உன்னத மனிதர் ஒருவர் இறந்தால், அடுத்தவர் உருவாக நாம் பல நூற்றாண்டுகள் காத்திருக்கிறோம் ! ஆனால் உன்னத மனிதர் இறந்ததும் அவர்கள் அடுத்தொருவரை வெகு விரைவாக உருவாக்க முடிகிறது ! காரணம் நமக்கு உயர் மனிதர் மிகச் சொற்பம். ஏன் அப்படி ? அவர்கள் தேர்ந்தெடுக்க பரந்த தளத்தைக் கொண்டவர்கள். நமது தேர்ந்தெடுப்புக் களம் சிறியது. 30 கோடி இந்திய மக்கள் தொகையில் உன்னத மனிதரைத் தேர்ந்தெடுப்பதற்குச் சிறிதளவு களமே இருக்கிறது.

மேலும் அவரது தேசத்தில் கல்வி கற்ற ஆண், பெண் ஆகியோர் எண்ணிக்கை மிகையானது. போதிய கல்வியின்மையே இந்திய தேசத்தின் மாபெரும் குறைபாடு; அது அறவே நீக்கப்பட வேண்டியது. பொதுநபருக்குக் கல்விப் பயிற்சியை ஊட்டி, அவரது நிலையை உயர்த்துவது ஒன்றுதான் தேசீய உணர்வை நமக்குள் எழுப்ப வல்லது.”

கர்மயோகி விவேகானந்தா (1863-1902)

+++++++++++++++++++

உன்னத மனிதன்

(பெர்னார்ட் ஷா)
அங்கம் : 4 பாகம் : 6

நடிகர்கள்:

1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.
2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.
3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – 25 வயது வாலிபன்.
4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)
5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி
6. ஹெக்டர் மலோன் (Hector Malone) – ஓர் அமெரிக்கன்
7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ¦†க்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்
8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்
9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.
10. வயலொட் ராபின்ஸன் (Violet Robinson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)
11 வேலைக்காரி மேரி (Parlormaid)

**************

(அங்கம் : 4 பாகம் : 6)

(சுருக்கப் பட்டது)

கதா பாத்திரங்கள்: வயலட் ராபின்ஸன், டிரைவர் ஹென்றி ஸ்டிராக்டர், ஹெக்டர் மலோன். ஹெக்டரின் தந்தை மிஸ்டர் மலோன்

காலம்: பகல் வேளை

இடம்: ஐரோப்பிய சுற்றுப் பயணத்தில் தற்போது தங்குமிடம் தெற்கு மலைப் பகுதி : கிரனாடா, ஸ்பெயின்.. தங்கு மாளிகையின் பின்புறப் பூங்கா.

(காட்சி அமைப்பு: ஜான் டான்னரும் ரோபக் ராம்ஸ்டனும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மிஸ்டர் மலோன் அவருடன் கலந்து கொள்கிறார். ஆக்டேவியசும் ஆன்னியும் தனியாகப் பிறகு உரையாடுகிறார்.)

ஜான் டான்னர்: (ராம்ஸ்டனைப் பார்த்து) அந்த மலோன் கிழவரை நம்பாதீர்கள் ! அந்த ஏழைக் கிழவர் ஒரு பில்லியனர் தெரியுமா ? பார்த்தால் எளியவராகக் காட்சி அளிக்கிறார். வயலட் ஒரு செல்வத் திமிங்கலத்தைத்தான் பிடித்திருக்கிறாள் !

ராம்ஸ்டன்: பெரிய திமிங்கலம் சிறிய மீனைப் பிடிப்பது நடப்பதுதானே ! ஆனால் இந்தத் திருமணத்தில் சிறிய மீன்தான் பெரிய மீனை விழுங்கப் போகுது ! வயலட் பார்த்தால் வயதில் சிறியவள்தான். ஆயினும் அறிவில் அவள் ஹெக்டர் மலோனை விடத் திறமைசாலி ! என் செவியில் பட்டது, ஹெக்டர் எந்தப் பணத்தையும் தந்தை யிடமிருந்து கையேந்தி வாங்குவதில்லை என்று உறுதி எடுத்துக் கொண்டிருக்கிறானே !

ஜான் டான்னர்: வயலட் ஹெக்டரை மாற்றி விடுவாள். பாருங்கள். தானாக மடியில் வந்து விழும் செல்வத்தை யார்தான் வேண்டாம் என்று தடுப்பார் ?

(அப்போது வயோதிகர் மலோன் அவருடன் உரையாட வருகிறார்)

வயோதிகர் மலோன்: (இருவரையும் பார்த்து) வயலட் உண்மையாகவே ஓர் அதிசயப் பெண் ! ஹெக்டருக்கு ஏற்ற பெண் ! பிடிவாத ஹெக்டரை மிதவாதியாக மாற்றி விடுவாள் இந்தப் பெண் ! பத்து பிரிட்டீஷ் சீமாட்டிகளைக் கொடுத்தாலும் நான் வயலட்டை மாற்றிக் கொள்ள இணங்க மாட்டேன் !

ஜான் டான்னர்: மிகவும் பெருமைப் படுகிறேன் மிஸ்டர் மலோன் ! உங்கள் பேச்சு எங்களைச் சிலிர்க்க வைக்கிறது !

வயோதிகர் மலோன்: (ராம்ஸ்டனைச் சுட்டிக் காட்டி) ஜான் ! இவரை முதலில் எனக்கு அறிமுகப் படுத்தி விடுங்கள் !

ஜான் டான்னர்: ஓ மறந்து விட்டேன். மன்னிக்க வேண்டும். இவர்தான் மிஸ்டர் ரோபக் ராம்ஸ்டன் ! உங்கள் அருமை மருமகளின் பல நாள் குடும்ப நண்பர்.

வயோதிகர் மலோன்: உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன், மிஸ்டர் ராம்ஸ்டன் ! அன்பு மருமகள் வயலட்டை உங்களுக்கு முன்பே தெரியுமா ? மிக்க மகிழ்ச்சி. உங்கள் இருவரையும் இன்று அறிந்து கொண்டதில் பெரு மகிழ்ச்சி. தொடர்பு வைத்துக் கொள்வோம். அவரச வேலை குறித்து நான் போக வேண்டியுள்ளது. போய் வருகிறேன் வணக்கம்.

(மிஸ்டர் மலோன் போகிறார். அவருக்கு வந்தனம் செலுத்தி டான்னரும், ராம்ஸ்டனும் எதிர்த்திசையில் செல்கிறார். பூங்காவிலிருந்து ஆன்னியும், அக்டேவியசும் வெளியே வருகிறார்கள்)

அக்டேவியஸ்: முடிவாகச் சொல் ஆன்னி ! இன்று நான் உன் விருப்பைத் தெரிந்து கொள்ள வேண்டும். நான் உன்னை நேசிக்கிறேன் ! உன்னை என் மனைவியாக ஏற்றுக் கொள்ள விரும்புகிறேன் ! உன் விருப்பம் என்ன ? தினமும் என்னை நீ கண்டு பேசினாலும் உன் மனது மர்மமாகவே உள்ளது. நீ ஒரு புதிர் ! யாரும் புரிய முடியாத விசித்திர மாது ! உண்மையைச் சொல் ! நீ என்னை நேசிக்கிறாயா ? அதை நான் முதலில் அறிய வேண்டும்.

ஆன்னி: ஏனிப்படி நான் பதில் சொல்ல முடியாத வினாக்களைக் கேட்கிறாய் ? நீ என்னை நேசிப்பது நன்றாகத் தெரிகிறது ! எனக்கு யார் மீது விருப்பம் என்று நானே என்னை அடிக்கடிக் கேட்கிறேன். எனக்குத் தெரியாத பதிலை எப்படி நான் சொல்ல முடியும் ?

அக்டேவியஸ்: என் உள்ளத்தைக் கீறுகிறாய் ஆன்னி ! நீ என்னை நேசிப்பதைச் சொல்ல ஏன் தயங்குகிறாய் ? என்னிடம் என்ன குறை உள்ளது ? இராப்பகலாக நீதான் என் மனத்திரையில் நடனம் ஆடுகிறாய் ! கனவுகளில் வந்து நீ என் தூக்கத்தைக் கலைக்கிறாய் ! நெஞ்சினில் நின்று கொண்டு நிலைபெயர மறுக்கிறாய் நீ !

ஆன்னி: அப்படி என் மனத்திரையில் நீ ஏன் ஆட வில்லை அக்டேவியஸ் ? இரவுக் கனவில் வந்து நீ ஏன் எனக்குத் தொல்லை அளிக்கவில்லை ? உன் ஆத்மா மெய்யாக என்னை நேசித்தால் அப்படி என்னை ஆட்டி அலைக்க வேண்டுமே ?

அக்டேவியஸ்: (அதிர்ச்சி அடைந்து) ஆன்னி ! என் காதலை நீ சந்தேகப் படுகிறாயா ? மெய்யாக நீதான் என்னை நேசிக்க வில்லை ! அப்படி உண்மையாக நீ என்னை நேசித்தால் நான் உனது கனவில் வருவேன் ! உன் ஆத்மா வேறு யாரையோ நேசிக்கிறது !

ஆன்னி: நான் யாரை நேசிப்பதாக நீ நினைக்கிறாய் ?

அக்டேவியஸ்: ஆன்னி ! ஏன் இப்படிக் கண்ணாம்பூச்சி விளையாடுகிறாய் ? நீ நேசிப்பது யாரென்று உனக்கே தெரியவில்லை என்று சொல்லி மூடி மறைக்கிறாய் ! எனக்குத் தெரியும் நீ நேசிப்பது ஜான் டான்னரை ! நீ மணக்கப் போவது ஜான் டான்னரை ! நீ ஏமாற்றப் போவது அப்பாவி அக்டேவியஸை ! எனக்கு எல்லாம் தெரியும் ஆன்னி !

ஆன்னி: இவற்றை யெல்லாம் சரியாகத் தெரிந்து கொண்டு ஏன் என்னிடம் பிறகு கேள்வி கேட்கிறீர் ?

அக்டேவியஸ்: என் யூகம் தப்பாக இருக்கலாம் இல்லையா ? மேலும் உன் வாயிலிருந்து அந்த உண்மைகள் வர வேண்டும் ! சொல் ஆன்னி ! என்னை விட டான்னர் அழகனா ? அறிவு உள்ளவனா ? செல்வந்தனா ?

ஆன்னி: உண்மை. அத்தனையும் டான்னரிடம் இல்லைதான் ! அத்தனையும் உன்னிடம் அதிகமாக உள்ளவைதான் !

அக்டேவியஸ்: பின் ஏன் டான்னர் பின்னால் விரட்டிக் கொண்டு போகிறாய் ? உனக்கு அழகு இருக்குது ! அறிவு இருக்குது ! அனுபவம் உள்ளது ! நம் இருவருக்கும் எல்லாப் பொருத்தமும் உள்ளது ! திருமணம் செய்தால் சொர்க்க வாழ்வு நிச்சயம் நமக்கு !

ஆன்னி: இப்படி எல்லாம் ஜான் டான்னர் பேச மாட்டார் ! பேசும் போது அவர் ஞானமாகப் பேசுகிறார் ! அவர் பேச ஆரம்பித்தால் என் மனம் ஏனோ அவற்றை நம்புகிறது ! அவருக்கு என் மீது காதல் இருப்பதாகத் தெரியவில்லை ! எனக்கும் அவர் மீது காதல் இருப்பதாக நான் உணரவில்லை ! ஆயினும் என் ஆத்மா அவரைத்தான் வேண்டுகிறது ! அவரைத்தான் மணந்து கொள்ள விழைகிறது ! ஆனால் இது காதல் கனவில்லை !

அக்டேவியஸ்: என்ன சொல்கிறாய் ஆன்னி ? நீ நேசிக்காத ஒருவரையா மணக்க விரும்புகிறாய் ? உன்னை மனதார விரும்பாத ஒருவரையா மணக்க விரும்புகிறாய் ? இல்வாழ்வுக்குக் காதல் ஓர் ஆதார சுருதி இல்லையா ? காதல் இல்லாத திருமண வாழ்வு பாழாவது உண்மை இல்லையா ?

ஆன்னி: உண்மைதான் ! அதே சமயத்தில் மணமுறிவு ஏற்படும் பெரும்பான்மைத் தம்பதிகள் காதல் பண்ணித்தானே திருமணம் புரிந்தவர் ! என் சிந்தனை இது : காதல் இல்வாழ்வுக்கு அவசியமில்லை ! வெறும் காதல் மட்டும் இருந்தால் இருவர் இல்வாழ்வு நிரந்தரம் ஆவதில்லை. காதல் ஒரு வினைவூக்கிதான் ! ஆனால் காதல் தேய்பிறை போல் கரைந்து போவது ! கரைந்து போன காதல் மீண்டும் முழுதாக ஏனோ வளர்வதில்லை ! உன்னத மனிதரை இல்லறத்தில் உருவாக்கக் காதல் ஒரு தடையாக இருக்கிறது. காதலுக்குக் கண்ணில்லை, காதில்லை, சிந்தனை இல்லை !

அக்டேவியஸ்: (கேலியாகச் சிரித்து) நீ ஜான் டான்னரை மணந்து உன்னத பிள்ளைகளைப் பெற்றெடுக்கப் போகிறாயா ? அதே சமயம் என்னை நீ மணந்தால் உன்னத சிசுக்கள் உதிக்கா என்றோர் எண்ணம் உண்டாகுதா உனக்கு !

ஆன்னி: தெளிந்த ஞானமும், உயர்ந்த நெறியும், உறுதி உள்ளமும் கொண்டவர் ஜான் டான்னர் ! அவரை நான் மணந்தால் எங்களுக்கு உன்னத குழந்தைகள் பிறக்கும் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளது ! இது தேர்ந்தெடுப்புப் திருமணம் ! உயர்ந்த சிந்தனையை உடையவர், உறுதியான உள்ளங் கொண்டவர், ஒப்பிலா மனநோக்கு உடையவர் இல்வாழ்வில் உன்னத சிசுக்களைப் பெறுவர் என்பது என் அழுத்தமான எண்ணம்.

(தொடரும்)

***************************
தகவல்

Based on The Play

“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)

1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)
2. The Teachings of Reverence for Life By : Albert Schweitzer (1965)
3. The Religious Significance of Art By : Leo Tolstoy, Book on Philosophy -A Modern Encounter (Basic Edition) By : Robert Paul Wolff (1973
4. Vivekananda Speaks to You – Sri Ramakrishna Math, Chennai (1977)
5. Joyful Wisdom By : Friedrich Nietzsche (1971)
6. The Wisdom of India By : Emmons E. White (1968)
7. Friedrich Nietzsche – The Story of Philosophy By: Will Durant (1959)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (August 27, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 4 (சுருக்கப் பட்டது)

This entry is part [part not set] of 35 in the series 20080821_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

ஆக்க சக்தி, கூர்மையான யுக்தி, சுய உறுதி ஆகிய மூன்றும் உன்னத மனிதனுக்கு வேண்டிய திறன்பாடுகள். அம்மூன்றும் செம்மையான சீரமைப்பில் இணைந்திருக்க வேண்டும், மனித உள்ளுணர்ச்சிக்கு வசப்பட்ட ஆசைப்பணிகள், நாட்டுக் கொந்தளிப்பைக் கட்டுப்படுத்தி உன்னத குறிக்கோளை நோக்கி மக்களை ஒன்றுபடுத்தி வெற்றி பெறும் போது அப்புரட்சியின் தளபதி உன்னத மனிதனாக உயர்கின்றான்.

தோட்டக்காரனாக இல்லாது செடிகளுக்கு வெறும் மண்ணாக மட்டும் இருக்கும் சிந்தனாவாதிக்கு நிந்தனைதான் ! மன உணர்ச்சியை மட்டும் பின்பற்றிச் செல்பவன் யார் ? பலவீனவாதி ! தன் சுயத்திறன் வலுவைக் காட்ட துணிவில்லாதவன் ! இல்லை என்று எதிர்த்துப் பேச நெஞ்சழுத்த மில்லாதவன். அவன் அவையில் விலக்கப்பட்டு வெளியேற்றப்பட வேண்டியவன். தன்னை ஓர் ஒழுக்க நடை முறையில் ஊன்றிக் கொள்வது – அதுதான் ஒருவரின் உயர்ந்த பண்பாடு.

பொதுநபரில் ஒருவனாக இருக்க விரும்பாத தனித்துவன் தன்னைப் புரட்சிவாதியாக ஆக்குபவன். வாழ்க்கையில் உயர்ந்த குறிக்கோள் ஒன்றைத் தொடர்ந்து போராடத் தயாரித்துக் கொண்டு, பிறரையும் ஊக்கி அதற்காக எதையும் புரியும் இதயம் உள்ளதே உன்னத மனிதனுக்கு உரிய பண்பாடு.

·பிரடெரிக் நியட்ஸே, ஜெர்மன் சித்தாந்த ஞானி (Friedrich Nietzsche) (1844-1900)

புத்தர் வாழ்ந்த போதும் உன்னதமாய் இருந்தார். இறந்த பிறகும் உன்னதமாய் ஒளிர்ந்தார். தான் இறக்கும் போது தனக்காக அவர் எந்த மதிப்புச் சின்னத்தையும் நிலைநாட்டிக் கொள்ள வில்லை ! புத்தரை அதனால் நான் போற்றி வழிபடுகிறேன்.

குருவுக்குச் சீடராக இருப்பது எளியதன்று. அதற்கு அநேகச் சுயத் தயாரிப்புகள் அவசியம். பல்வேறு நிபந்தனைகள் பூர்த்தியாக வேண்டும். உலகளாவிய சகோதரத்துவ உணர்ச்சி மட்டுமில்லாது, உலகளாவிய ஒற்றுமைக்கு நம் வேத நெறிகள் விளக்கம் அளிக்கின்றன. உலக வரலாறு என்பது புத்தரின் சரிதையும், ஏசுவின் சரிதையும் கொண்டிருக்க வேண்டும்.

வயதாக வயதாக எனக்கு ஒவ்வொன்றும் மனித உறுதியில்தான் அடங்குகிறது என்று தெரிகிறது. என்னுடைய புதிய உபதேசம் இதுதான்.

புத்தரின் பணியாட்களின் பணியாட்களுக்கு நானொரு பணியாள் ! புத்தரைப் போலோர் தனக்கென வாழா ஓர் உத்தமரை நான் இதுவரைக் கண்டதில்லை. அவரது உன்னத சிந்தனைகள் இந்தியாவைத் தாண்டி, உலகம் முழுவதும் பரவிச் சென்றன. இரக்கக் குணம் மிக்க இளவரசராகவும், துறவியாகவும் வாழ்ந்து ஓர் ஆட்டின் உயிரைக் காக்கத் தன்னுயிரை அளிக்கவும் தயாராக இருந்தவர்.

உன்னத ஆன்மீக மெய்ப்பாடுகளை உபதேசிக்க ஒருவர் மிக்க இளைய வயதிலே துவங்கக் கூடாது ! கீதையையும், மற்ற வேதாந்ததில் உள்ள உன்னத படைப்புகளையும் படிக்க வேண்டும்.

கர்மயோகி விவேகானந்தா (1863-1902)

+++++++++++++++++++

உன்னத மனிதன்

(பெர்னார்ட் ஷா)
அங்கம் : 4 பாகம் : 5
(சுருக்கப் பட்டது)

நடிகர்கள்:

1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.
2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.
3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – 25 வயது வாலிபன்.
4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)
5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி
6. ஹெக்டர் மலோன் (Hector Malone) – ஓர் அமெரிக்கன்
7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ¦†க்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்
8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்
9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.
10. வயலொட் ராபின்ஸன் (Violet Robinson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)
11 வேலைக்காரி மேரி (Parlormaid)

**************

(அங்கம் : 4 பாகம் : 5)

(சுருக்கப் பட்டது)

கதா பாத்திரங்கள்: வயலட் ராபின்ஸன், டிரைவர் ஹென்றி ஸ்டிராக்டர், ஹெக்டர் மலோன். ஹெக்டரின் தந்தை மிஸ்டர் மலோன்

காலம்: பகல் வேளை

இடம்: ஐரோப்பிய சுற்றுப் பயணத்தில் தற்போது தங்குமிடம் தெற்கு மலைப் பகுதி : கிரனாடா, ஸ்பெயின்.. தங்கு மாளிகையின் பின்புறப் பூங்கா.

(காட்சி அமைப்பு: வயலட்டும், மிஸ்டர் மலோனும் வாதாடிக் கொண்டிருக்கிறார். ஜான் டான்னர், ரோபக் ராம்ஸ்டன் இருவரும் முன்னே வரப் பின்னால் ஆக்டேவியசும் ஆன்னியும் தொடர்கிறார்கள்)

வயோதிகர் மலோன்: ஹெக்டர் ! அமைதியாகச் சிந்தனை செய் ! எளிதாகத் தந்தை மூலம் வரும் பூர்வீக நிதியை விலக்கித் தள்ளாதே ! அது ஆத்திரத்தில் புரியும் அறிவற்ற செயல் ! உனக்குக் கடுமையான வெளி உலகம் தெரியாது ! கண்களை மூடி வறுமையில் குடும்பத்தைத் தள்ள வேண்டாம் ! நான் பொறுத்திருக்கிறேன் ! சிந்தித்துச் பேசு !

ஹெக்டர் மலோன்: வேண்டாம் ! வேண்டாம் ! உங்கள் சொத்து எனக்கு வேண்டாம் ! என் காலில் நான் நிற்பேன் ! என் ஊழியத்தில் நான் பிழைப்பேன் ! என் ஊதியத்தில் நான் வாழ்வேன் ! (வயலட்டைப் பார்த்து) வா போகலாம் கண்மணி ! நாம் ஹோட்டல் அறை எடுத்து நமது உடுப்பு, பெட்டிகளை அங்கே நகர்த்த வேண்டும். புறப்படு வயலட் !

வயலட்: நான் வருகிறேன் ஹெக்டர் ! முதலில் எனக்கு மேல் மாடியில் பூங்காவை நோக்கும் ஓர் அறையை ஏற்பாடு செய்யுங்கள். நான் எனது உடைகளைப் பெட்டிகளில் நிரப்பி விடுவேன் அதற்குள்.

ஹெக்டர்: சரி நான் போகிறேன். (தந்தையைப் பார்த்து) நீங்கள் ஹோட்டலில் எங்களுடன் இன்று மாலை உணவு உண்ணச் சேர்ந்து கொள்வீரா ?

வயோதிகர் மலோன்: (மகிழ்ச்சியோடு) நிச்சயம் கலந்து கொள்கிறேன். உங்களுடன் சேர்ந்து உண்பதில் எனக்குப் பேருவகையே !

அக்டேவியஸ்: (ஆர்வமோடு) எனக்கு அழைப்பில்லையா ஹெக்டர் ?

ஹெக்டர்: மன்னிக்க வேண்டும் அக்டேவியஸ் ! உங்களை மறந்தது என் தவறு. நான் பெருமை அடைவேன் நீங்களும் கலந்து கொண்டால் !

(ஹெக்டர் சித்துக் கொண்டு போகிறான். ஆன்னி, டான்னர், அக்டேவியஸ் மூவரும் பூங்காவினுள் நுழைகிறார்கள். தனியாக வயலட்டுடன் வயோதிகர் பேச நெருங்குகிறார்.)

வயோதிகர் மலோன்: (பரிவுடன்) நானின்று உன்னிடம் சற்று கொடூரமாக நடந்து கொண்டது மகாத் தவறு ! என்னை மன்னிக்க வேண்டும் வயலட் ! உன்னை என் மகன் பூரணமாக நேசிக்கிறான். அதனால் நீ என் மதிப்புக்குரியவள் என்று தெரியாமல் நடந்து கொண்டேன். நீதான் ஹெக்டரை மாற்ற வேண்டும். உன் சொற்கள்தான் இனி அவன் காதில் விழும். என் பேச்சுக்கள் காற்றில் போய்விடும்.

வயலட்: (தடுமாற்றமோடு) நான் சிறியவள் ! நான் என்ன உங்களை மன்னிப்பது ? என்னைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டீர். அது போதும் எனக்கு ! இப்போது நான் என்ன செய்ய வேண்டும் ?

வயோதிகர் மலோன்: புதிய தம்பதிகளுக்கு முதலில் உதவி நிதி தேவை ! ஓர் இல்லம் தேவை ! வாகனம் தேவை ! அவன் ஊழியத்தில் சம்பாதித்து அவற்றுக்கு ஈடு கொடுப்பதற்குள் உங்கள் வயதேறிவிடும். என்னிடம் சொத்தும் நிதியும் உள்ளன. ஹெக்டரின் கண்களைத் திறந்து இவற்றை எல்லாம் ஏற்றுக் கொள்ளத் தூண்ட வேண்டும் நீ.

வயலட்: ஹெக்டர் பெரும் பிடிவாதக்காரர். உங்கள் ஆலோசனையைக் கேளாத ஹெக்டர் என் தூண்டலை எப்படி ஏற்றுக் கொள்வார் ? அவர் சொன்னால் சொன்னதுதான் ! அப்படித்தான் என்னோடும் பழகுகிறார் ! என்ன செய்வது ? எப்படிச் செய்வது ? எப்போது செய்வது ? சொல்லுங்கள்.

வயோதிகர் மலோன்: அடிமேல் அடி வைத்தால் குன்றும் நகரும் ! உன் கயல் விழியால், உன் கனிவு மொழியால் ஹெக்டரை நீ எளிதில் மயக்கலாம் ! ஹெக்டரிடம் உரையாடுவதாக நீ எனக்கு வாக்களி வயலட் !

வயலட்: முயற்சி செய்கிறேன் முடிந்த மட்டும் ! உறுதியாகச் செய்கிறேன் ! வீணாய் நாமே நம்மை வறுமையில் தள்ளுவதா ? எனக்கும் அவர் பிடிவாதம் ஏனென்று புரியவில்லை ! . . . ஒன்று செய்யுங்கள் ! நன்கொடை அளிக்கும் நிதியை என்னிடமே கொடுக்கிறீரா ? அறை வாடகை அவர் இன்று தர வேண்டும். உங்கள் பணத்தை ஏற்றுக் கொள்ள நான் அவரிடம் மன்றாடுகிறேன்.

வயோதிகர் மலோன்: (சிரித்துக் கொண்டு) நல்ல யோசனை ! என் மூளையில் அது உதிக்க வில்லையே ! உண்மையில் நீ சாமர்த்தியக்காரி ! (பையைத் திறந்து, ஆயிரம் டாலர் நோட்டைத் தருகிறார்) (சிரித்துக் கொண்டு) இது நான் பிரமச்சாரிக்கு அளிக்கும் நன்கொடைத் தொகைதான் !

வயலட்: (நோட்டைக் கையில் பெற்றுக் கொண்டு, கவனமுடன்) ஓ ! அப்படியா ? சரி கொடுங்கள் ! அது போதும் இப்போது ! . . . (சற்று யோசித்து) ஆமாம், மிஸ்டர் மலோன் ! ஏதோ இரண்டு மாளிகை வாங்கப் போவதாகச் சொன்னீரே ?

வயோதிகர் மலோன்: ஆமாம்.

வயலட்: அந்த இரண்டில் எந்த ஒரு மளிகையையும் நான் பார்க்கும் முன்பு வாங்கி விடாதீர் ! அந்த மாளிகைகளில் என்ன ஓட்டைகள் உள்ளன வென்று யாருக்குத் தெரியும் ?

வயோதிகர் மலோன்: (கவனமுடன்) நான் வாங்க மாட்டேன், உன்னைக் கலந்து பேசாமல். அஞ்ச வேண்டாம் வயலட் ! நீ மலோன் குடும்பத்தில் ஒரு பங்குதாரி ஆகிவிட்டாய் !

வயலட்: மிக்க நன்றி, மிஸ்டர் மலோன் ! இன்று உங்களுடன் உரையாடி நான் உங்களை அறிந்து கொண்டேன் ! என்னை நீங்கள் அடையாளம் கண்டு மலோன் குடும்பத்துடன் சேர்த்துக் கொண்டீர் ! மீண்டும் நன்றி ! நான் போகிறேன் ! இன்று மாலை விருந்தில் உங்களை நான் எதிர்பார்க்கிறேன்.

(வயலட் போகிறாள். அவள் நளின நடையைக் கண்டு களிக்கிறார் வயோதிகர்)

(தொடரும்)

***************************
தகவல்

Based on The Play

“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)

1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)
2. The Teachings of Reverence for Life By : Albert Schweitzer (1965)
3. The Religious Significance of Art By : Leo Tolstoy, Book on Philosophy -A Modern Encounter (Basic Edition) By : Robert Paul Wolff (1973
4. Vivekananda Speaks to You – Sri Ramakrishna Math, Chennai (1977)
5. Joyful Wisdom By : Friedrich Nietzsche (1971)
6. The Wisdom of India By : Emmons E. White (1968)
7. Friedrich Nietzsche – The Story of Philosophy By: Will Durant (1959)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (August 20, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 4 (சுருக்கப் பட்டது)

This entry is part [part not set] of 45 in the series 20080814_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

உயர்தரக் கல்வியும் ஆத்ம வளர்ச்சியும் பெற்ற மனிதன் நல்வினைக்கும் தீவினைக்கும் அப்பாற் பட்டவன். தன் குறிக்கோள் பணிகளுக்குத் தானே ஆட்சியாளனாக முன் நிற்பவன். நன்னெறிக்கும் மேலாக இருப்பது அச்சமின்மை. நன்னெறி என்பது என்ன ? உள்ளச் செம்மையும், உறுதியும் அடைவது நன்னெறி. மனிதனிடம் ஆத்மச் சக்தியை மிகைப்படுத்துவது, ஆற்றலைக் கைக்கொள்ள உறுதி பெறுவது, ஆற்றல் நெறி மட்டுமே உன்னத நிலைக்கு அவனை உந்த வைப்பது. பலவீனத்திலிருந்து வருபவை அனைத்தும்
தீவினைகள் !

உன்னத மனிதனின் ஒப்பிலாச் சின்னங்கள் எவை ? அபாய வாழ்வை எதிர்கொள்வது. அபார முயற்சியில் ஈடுபடுவது, ஆனால் ஒரு நற்பாதை தேடிச் செல்லும் குறிக்கோளில் முனைந்தால் மட்டுமே, அவை வரவேற்கத் தக்கவை. முதன்மையாக முயற்சியில் அவன் தனக்குப் பாதுக்காப்பு ஏற்பாடு செய்து கொள்வது ஏற்புடமையன்று. சுகபோக வாழ்வை உன்னத மனிதன் எந்த விதத்திலும் தவிர்க்க வேண்டும்.

நற்பாதை தேடலில் போர்களும், போராட்டங்களும் வரவேற்கப்பட வேண்டும். புரட்சியும் ஒரு வாய்ப்பாக எதிர்பார்க்கப்பட வேண்டும். ஏனெனில் அத்தகைய கொந்தளிப்பில்தான் உன்னத மனிதர் உண்டாக வழிபிறக்கும். உதாரணம் பிரெஞ்ச் புரட்சி நெப்போலியனை உருவாக்கியது ! அமெரிக்கப் போர் சுதந்திர வீரர் ஜார்ஜ் வாஷிங்டன் உருவாக வாய்ப்பளித்தது ! (ரஷ்யப் புரட்சி லெனினையும், பாரத விடுதலைப் போராட்டம் மகாத்மா காந்தியையும், தென்னாப்பிரிக்க சுதந்திரப் போர் நெல்ஸன் மாண்டெல்லாவையும் உருவாக்கின)

·பிரடெரிக் நியட்ஸே, ஜெர்மன் சித்தாந்த ஞானி (Friedrich Nietzsche) (1844-1900)

ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் வாழ்ந்தவர். அப்போது வாழ்ந்த இந்திய மக்கள் உயர்ந்த கல்வி கற்றவராக இருந்திருக்க வேண்டும். ஆழ்ந்த விடுதலை மனத்துடன் வாழ்ந்திருக்க வேண்டும். பெருவாரியான மக்கள் புத்தரைப் பின்பற்றினர். அரசர்கள் தமது அரச பீடத்தை விட்டகன்றனர் ! நாட்டு அரசிகள் தம் அரசாங்கத்தை விட்டுச் சென்றார். பல யுகங்களாக மதக் குருமார்கள் போதித்த நெறிமுறைகளுக்கு மாறாகப் புரட்சிகரமாக இருந்த புத்தர் உரைமொழிகளைப் பின்பற்றினர். ஆதலால் மக்களின் மனது அக்காலத்தில் சுதந்திரமாக விரிந்திருக்க வேண்டும்.

புத்தர் மானிட நன்னெறி படைப்புக்காகப் பிறந்தவர். எப்படி மக்களுக்கு உதவுவது என்பது மட்டுமே புத்தரின் சிந்தனையாக இருந்தது. வாழ்நாள் பூராவும் தனக்கென அவர் எதுவும் கருதியது கிடையாது. அவரது உன்னத மூளையைப் பற்றிச் சிந்திப்பீர். எதிலும் உணர்ச்சி வசப்படுவது அவரது வழிமுறையன்று. அவரது பூதகரமான மூளையில் மூட நம்பிக்கை, குருட்டுப் பழக்க வழக்கங்கள் எவையும் கிடையா.

கர்மயோகி விவேகானந்தா (1863-1902)

+++++++++++++++++++

உன்னத மனிதன்

(பெர்னார்ட் ஷா)
அங்கம் : 4 பாகம் : 4

(சுருக்கப் பட்டது)

நடிகர்கள்:

1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.
2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.
3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – 25 வயது வாலிபன்.
4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)
5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி
6. ஹெக்டர் மலோன் (Hector Malone) – ஓர் அமெரிக்கன்
7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ¦†க்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்
8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்
9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.
10. வயலொட் ராபின்ஸன் (Violet Robinson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)
11 வேலைக்காரி மேரி (Parlormaid)

**************

(அங்கம் : 4 பாகம் : 4)

(சுருக்கப் பட்டது)

கதா பாத்திரங்கள்: வயலட் ராபின்ஸன், டிரைவர் ஹென்றி ஸ்டிராக்டர், ஹெக்டர் மலோன். ஹெக்டரின் தந்தை மிஸ்டர் மலோன்
காலம்: பகல் வேளை
இடம்: ஐரோப்பிய சுற்றுப் பயணத்தில் தற்போது தங்குமிடம் தெற்கு மலைப் பகுதி : கிரனாடா, ஸ்பெயின்.. தங்கு மாளிகையின் பின்புறப் பூங்கா.

(காட்சி அமைப்பு: வயலட்டும், மிஸ்டர் மலோனும் வாதாடிக் கொண்டிருக்கிறார். ஜான் டான்னர், ரோபக் ராம்ஸ்டன் இருவரும் முன்னே வரப் பின்னால் ஆக்டேவியசும் ஆன்னியும் தொடர்கிறார்கள்)

வயோதிகர் மலோன்: (வயலட்டைக் கூர்ந்து நோக்கிக் கோபமாக) மிஸ் ராபின்ஸன் ! உனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டதே ! நீ எப்படி என் மகனுக்கு வலை போடலாம் ? அவனுடைய உயர்குடி வாழ்க்கைமேல் உனக்கு அத்தனை மோகமா ? நீ எப்படி என் மகனுக்கு உரிமையாக அந்தக் காதல் கடிதத்தை எழுதலாம் ? நீ வேறொருவன் மனைவி ! அதை மறைத்துக் கொண்டு நீ எப்படி மற்ற ஆடவனைக் கவர நினைக்கலாம் ?

ஹெக்டர் மலோன்: இதுதான் ஒட்டக முதுகில் நீங்கள் ஏற்றும் கடைசி வைக்கோல் ! முறிந்து போவது என் முதுகு ! இனியும் தாங்க முடியாது நீங்கள் ஏவும் அம்புகளை ! என் மனைவியைப் பலர் முன் அவமானப் படுத்தி விட்டீர் !

வயோதிகர் மலோன்: (ஆவேசமாக) என்ன ? வயலட் ராபின்ஸன் உன் மனைவியா ? நீதான் அவளை மணந்து என்னை அவமானப் படுத்தி விட்டாய் ! உன்னையும் அவமானப் படுத்திக் கொண்டாய் ! நான் எப்படி அவளை ஓர் கண்ணியம் உள்ள மருமகளாய் ஏற்றுக் கொள்வேன் ?

ஜான் டான்னர்: (ஹெக்டரைப் பார்த்து) என்ன ? நீதான் வயலட்டின் கணவனா ? எங்களுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும் காதலன் நீதானா ? (தளர்ந்து போய் நாற்காலியில் அமர்கிறார்)

வயோதிகர் மலோன்: எனக்குத் தெரிமால், அறிவிக்காமல் நீ அருகதையற்ற இந்த மாதை மணந்து கொண்டாய் ! ஏனப்படிச் செய்தாய் என்று சொல் ஹெக்டர் ?

ராம்ஸ்டன்: வேண்டுமென்றே எங்களையும் ஏமாற்றி விட்டாய் ஹெக்டர் ! வயலட்டை மணந்தவர் யாரென்று அறிய முடியாமல் நாங்களும் துடித்துக் கொண்டிருந்தோம்.

ஹெக்டர் மலோன்: என்மீது அம்புகளை ஏவியது போதும் நண்பர்களே ! வயலட்டும் நானும் திருமணம் செய்து கொண்டோம். அதுதான் நீண்ட கதையைச் சுருக்கிச் சொல்வது ! இப்போது எங்களை என்ன செய்து விடுவீர் நீவீர் ? எதைத் தடுத்து விடுவீர் உங்களில் எவராவது ஒருவர் !

வயோதிகர் மலோன்: நான் சொல்வதற்கு உள்ளது ! வயலட் ராபின்ஸன் ஒரு பிச்சைக்காரனை மணந்திருக்கிறாள் ! வயலட் மலோன் வயலட் ராபின்ஸனை விட வறியவள் ! ஹெக்டரும், வயலட்டும் மாநில பஞ்சப்படியில்தான் வாழ முடியும் !

ஹெக்டர் மலோன்: வயலட் ஓர் உழைப்பாளியை மணந்திருக்கிறாள். நாங்கள் அரசாங்கப் பஞ்சப்படியிலோ அல்லது என் பிதாவின் பணத்திலோ வாழப் போவதில்லை ! இன்று முதலே நான் ஊதியம் பெற ஊழியம் செய்யப் போகிறேன் !

வயோதிகர் மலோன்: நீ இப்போது அப்படித்தான் நினைப்பாய் ! நேற்று நான் கொடுத்த பணம் உன் கையில் உள்ளது. அது கரைந்து போன பிறகு உன் வயிறு காயும் ! உன் மனைவியின் உள்ளம் வெடிக்கும் உன்மீது ! வேடிக்கை பார்ப்பார் அண்டை வீட்டுக்காரர் !

ஹெக்டர்: [பையிலிருந்துநொரு தாளை எடுத்து] உங்கள் மாதக் கொடைப் பணம் ஈதோ ! எடுத்துக் கொள்வீர் ! நான் செலவழிக்க வில்லை ! பெற்றுக்கொள்வீர் ! நான் என் காலில் நிற்க முடியும் ! உங்கள் காலில் நான் நிற்க விரும்பவில்லை ! என் நிழலில் நான் நிற்க முயல்வேன் ! உங்கள் கைப்பணம் எனக்குத் தேவையில்லை !

வயோதிகர் மலோன்: ஹெக்டர் ! வறுமை வாழ்க்கையைப் பற்றி உனக்குத் தெரியாது !

ஹெக்டர் மலோன்: இனிமேல் நான் தெரிந்து கொள்கிறேன் ! நான் தனி மனிதனாக விரும்புகிறேன். வயலட் ! வா என்னுடன் உன் வீட்டுக்கு !

[அப்போது வயலட்டின் சகோதரன் அக்டேவியஸ் ஓடி வருகிறான்]

அக்டேவியஸ் ராபின்ஸன்: [கையை நீட்டிக் கொண்டு] ஹெக்டர் ! போவதற்கு முன் என் கையைக் குலுக்கு ! நான் வயலட்டின் சகோதரன் ! உன்னை நான் என் மைத்துனன் என்று ஏற்றுக் கொள்கிறேன் ! வயலட்டின் கணவன் யாரென்று தெரியாமல் நான் அலைமோதினேன் ! இப்போது யாரென்று தெரிந்தபின் மகிழ்ச்சி அடைகிறேன் (கண்களில் நீர் பொங்குகிறது) என் தங்கை காதலிக்கும் ஒருவரை நான் மதிக்கிறேன் ! உங்களுக்கு உதவி செய்ய நானிருக்கிறேன்.

(அக்டேவியசும், ஹெக்டரும் கை குலுக்கிக் கொள்கிறார்)

வயலட்: (கண்களில் நீர் வழிய) நீ ஏன் கண் கலங்குகிறாய் அக்டேவியஸ் ! என் கண் கலங்காமல் என்னைக் காப்பாற்றுவார் ஹெக்டர் ! அவருக்கு உன்னைப் போல் மெழுகு மனது ! என் கண்ணில் நீர் வடிந்தால் அவர் நெஞ்சில் குருதி கொதிக்கும் ! எனக்கு ஏற்றவர் ! உனக்குப் பிடித்தவர் ! வேறென்ன வேண்டும் நமக்கு ?

ஜான் டான்னர்: வீட்டுச் செலவுக்குப் பணம் வேண்டும் ! வாரா வாராம் வர வேண்டும் ! தானாக வர வேண்டும். அதற்கு ஒரு வழியைப் பார்க்க வேண்டும் ! முதலில் உங்களுக்குப் பண உதவி செய்ய நானிருக்கிறேன். கவலை கொள்ள வேண்டாம் வயலட் ! என்னை உங்கள் நண்பராக நினைத்துக் கொள்வீர். கடவுள் கைவிட்டாலும் நான் கைகொடுப்பேன் உங்களுக்கு ! (கையை நீட்டுகிறார்)

(டான்னரும், ஹெக்டரும், கை குலுக்கிக் கொள்கிறார்)

வயோதிகர் மலோன்: (பொறாமையோடு டான்னரைப் பார்த்து) யாருக்கு வேண்டும் உனது குப்பைப் பணம் ? தந்தை நானிருக்க அந்நியர் உமது பணம் எதற்கு ? ஹெக்டர் ! நான் தெரியாமல் கடிந்து பேசி விட்டேன் ! என்னை மன்னித்து விடு ! வயலட்டை அவமானம் செய்வது எனது நோக்க மில்லை ! நான் சிந்திக்காமல் பேசியவற்றை நினைத்து இப்போது மனம் வருந்துகிறேன். வயலட்தான் உன் மனைவி ! உனக்கேற்ற மனைவி ! நீ ஏற்றுக் கொண்டவளை நான் ஆசீர்வதிக்கிறேன் !

ஹெக்டட் மலோன்: [மனம் தாழ்ந்து] அப்படியானால் சரி தந்தையே ! வேறு ஒன்றும் சொல்ல வேண்டாம் ! எல்லாவற்றையும் மறந்து விடுவோம் ! நாமினி நண்பர்கள் மீண்டும் ! ஆனால் நான் யாருடைய பணத்தையும் கைநீட்டி வாங்கப் போவதில்லை !

(தொடரும்)

***************************
தகவல்

Based on The Play

“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)

1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)
2. The Teachings of Reverence for Life By : Albert Schweitzer (1965)
3. The Religious Significance of Art By : Leo Tolstoy, Book on Philosophy -A Modern Encounter (Basic Edition) By : Robert Paul Wolff (1973
4. Vivekananda Speaks to You – Sri Ramakrishna Math, Chennai (1977)
5. Joyful Wisdom By : Friedrich Nietzsche (1971)
6. The Wisdom of India By : Emmons E. White (1968)
7. Friedrich Nietzsche – The Story of Philosophy By: Will Durant (1959)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (August 12, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 3 (சுருக்கப் பட்டது)

This entry is part [part not set] of 31 in the series 20080807_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாஉன்னத இல்வாழ்வில் பிறந்தாலின்றி ஒருவர் பெருந்தன்மையாய் (Nobility) இருக்க இயலாது. வெறும் கல்வி ஞானம் மட்டும் ஒருவரைப் பெருந்தன்மை மனிதராக ஆக்காது. அதற்கு முரணாக கல்வி ஞானத்தை உன்னத மாக்க ஏதோ ஒரு பண்பாடு தேவை. அப்படியாயின் அது என்னவாக இருக்கும் ? (உன்னத வாழ்வுச் சந்ததிகளின்) குருதி . . . (பிரபுக்கள் குருதி அல்ல). உன்னத இல்வாழ்வுப் பிறப்பு, குழந்தைக்கு உயர்ந்த வளர்ப்பு ஆகிய இரண்டோடு கடுமுறைக் கல்வி அளிப்பு என்ற மூன்றாவதும் சேர்ந்தது உன்னத மனிதர் உருவாக்க உதவும் முறைப்பாடு (Formula). செம்முறைக் கல்வியானது நுட்பமும், ஆழமும், அகலமும் கொண்ட பூரணக் கல்வி. அக்கல்விப் பயிற்சி சுமுக வசதிகளின்றிப் (Few Comforts) பொறுப்புகள் நிரம்பியதாக இருக்கும். மனப் பயிற்சியும், உடற் பயிற்சியும் அளிக்கும் போது உடல் நோவை மௌனமாகத் தாங்கிக் கொள்ளும் தன்மை ஊட்டப்படும். அதுபோல் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும் அடக்கமும், கட்டளையிடும் மேற்படி அதிகாரமும் கற்றுக்கொள்ள பயிற்சிகள் தரப்படும்.

·பிரடெரிக் நியட்ஸே, ஜெர்மன் சித்தாந்த ஞானி (Friedrich Nietzsche) (1844-1900)

உலகத்திலே உன்னத மனிதராக நான் மதிப்பவர் இருவர் : கௌதம புத்தர், ஏசு கிறிஸ்து. ஏசு நாதரின் மலை உபதேசத்தையும், கீதையும் எடுத்துக் கொள்ளுங்கள். அவை எத்தகைய எளிமையாக உள்ளன ! தெருவில் நடக்கும் சாதாரண மனிதருக்கும் அவை புரிகின்றன !எத்தகைய மகத்தான படைப்புகள் அவை ! அவற்றில் மெய்ப்பாடுகள் தெளிவாக, எளிதாகக் கூறப்பட்டு இருப்பதை நீங்கள் அறியலாம்.

புத்தர் மேன்மையான மெய்ப்பாடுகளை உபதேசித்தார். வேத நெறிகளை உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் போதித்தார். உலக மாந்தருக்கு அவற்றை எடுத்துக் கூறினார். அவரது உன்னத போதனை நெறிகளில் ஒன்று மனித சமத்துவம் ! மனிதர் சம மதிப்புள்ளவர். அந்த கருத்தில் எவருக்கும் தனிச்சலுகை இல்லை. புத்தரே சமத்துவத்தைப் போதித்த ஓர் மகத்துவக் குரு ! ஒவ்வொரு மனிதருக்கும், மாதருக்கும் ஆன்மீக உன்னதம் அடைவதில் ஒரே தர உரிமை உள்ளது. அதுதான் புத்தரின் போதனை. குருமாருக்கும், பிற மானிடருக்கும் இருந்த வேற்றுமை புத்தரால் நீக்கப்பட்டது.

புத்தரின் வாழ்க்கை ஒரு மகத்தான கவர்ச்சி கொண்டது. என் வாழ்நாள் முழுவதும் நான் புத்தரைப் போற்றி வந்தேன். யார் மீதும் இல்லாத ஒரு தனி மதிப்பு அவர் மீது எனக்கிருந்தது : அவருக்கிருந்த அந்த மன உறுதி, அந்த அச்சமற்ற தன்மை, அந்த அளவில்லா அன்பு . . . (என்னைக் கவர்ந்தது.)

கர்மயோகி விவேகானந்தா (1863-1902)

+++++++++++++++++++

உன்னத மனிதன்

(பெர்னார்ட் ஷா)
அங்கம் : 4 பாகம் : 3

(சுருக்கப் பட்டது)

நடிகர்கள்:

1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.
2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.
3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – 25 வயது வாலிபன்.
4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)
5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி
6. ஹெக்டர் மலோன் (Hector Malone) – ஓர் அமெரிக்கன்
7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ¦†க்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்
8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்
9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.
10. வயலொட் ராபின்ஸன் (Violet Robinson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)
11 வேலைக்காரி மேரி (Parlormaid)

**************

(அங்கம் : 4 பாகம் : 3)

(சுருக்கப் பட்டது)

கதா பாத்திரங்கள்: வயலட் ராபின்ஸன், டிரைவர் ஹென்றி ஸ்டிராக்டர், ஹெக்டர் மலோன். ஹெக்டரின் தந்தை மிஸ்டர் மலோன்

காலம்: பகல் வேளை

இடம்: ஐரோப்பிய சுற்றுப் பயணத்தில் தற்போது தங்குமிடம் தெற்கு மலைப் பகுதி : கிரனாடா, ஸ்பெயின்.. தங்கு மாளிகையின் பின்புறப் பூங்கா.

(காட்சி அமைப்பு: வயலட்டும், மிஸ்டர் மலோனும் வாதாடிக் கொண்டிருக்கிறார். ஜான் டான்னர், ரோபக் ராம்ஸ்டன் இருவரும் முன்னே வரப் பின்னால் ஆக்டேவியசும் ஆன்னியும் தொடர்கிறார்கள்)

வயோதிகர் மலோன்: ஹெக்டர் ! என்ன சொல்கிறாய் நீ ? கண்களைத் திறந்து கொண்டே பள்ளத்தில் விழுகிறாய் ! உனக்கு உயர்ந்த நிலையைத் தரப் போவது என் சொத்தும், செல்வமும். அவற்றை எல்லாம் வேண்டாம் என்று நீ ஒதுக்குகிறாய் !

ஹெக்டர் மலோன்: அந்த நல்ல காரியத்தை நாசமாக்கியது – என் கடிதத்தைத் திறந்து வாசித்த உங்கள் தவறான பழக்கம் ! அது ஓர் ஆங்கில மாதின் கடிதம் ! எனக்கெழுதிய அந்தரங்கக் கடிதம் ! உங்கள் பெயருக்கு வந்த சொந்தக் கடிதமில்லை ! தனிப்பட்ட கடிதம் ! அதைத் திறந்து படித்தவர் தந்தை என்றால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை !

வயலட்: கடிதத்தைப் பார்த்ததிலும், படித்ததிலும் தவறில்லை ! ஏனெனில் அவரது குடும்பப் பெயர் உறையில் உள்ளது ! என்னை அவர் பின்னால் தெரிந்து கொள்வதற்கு முன்னால் அறிந்து கொள்ள ஓர் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது ! நானும் அவரைப் பின்னால் தெரிந்து கொள்வதற்கு முன்னால் அறிய முடிந்தது !

வயோதிகர் மலோன்: நன்றி மிஸ் ராபின்ஸன் ! என் மகனுக்குப் புரியா விட்டாலும் அது உனக்குப் புரிகிறது ! நம் குடும்பப் பெயரைக் காக்க நான் கடிதத்தை உடைக்க நேர்ந்தது ! உங்கள் கள்ளக் காதலை நான் காண முடிந்தது ! தந்தைக்குத் தெரியாமல் நீ செய்தது ஒரு தவறே !

ஹெக்டர் மலோன்: நானும் உனக்கு நன்றி கூறுகிறேன் வயலட் ! உன் மனது பெரியது, உயர்ந்தது ! அதனால்தான் நீளென் தந்தையை மன்னித்தாய் ! ஆனாலும் என் கடிதத்தை உடைத்து வாசித்தது பெரும் தப்புதான் ! அதை நான் மன்னிக்கப் போவதில்லை ! வயதானவர் மீண்டும் சிறு பிள்ளை ஆகிறார் !

வயலட்: இல்லை ! மகன் தந்தை ஆகிறார் ! மனப் பக்குவம் மாறுகிறது !

வயோதிகர் மலோன்: (உரத்த குரலில்) என்னை யாரும் எடை போட வேண்டாம்.

வயலட்: ஐயோ மெதுவாகப் பேசுங்கள் ! அதோ அங்கே எல்லோரும் வருகிறார் !

(ஜான் டான்னர், ரோபக் ராம்ஸ்டன் இருவரும் முன்னே வரப் பின்னால் ஆக்டேவியசும் ஆன்னியும் தொடர்கிறார்கள்)

ஜான் டான்னர்: அல்ஹாம்பிரா காட்சி மனை இன்று பொதுநபருக்கு ஏனோ திறக்கப்பட வில்லை. ஆதலால் பெருத்த ஏமாற்றம் அடைந்து திரும்பினோம். (ஹெக்டரைப் பார்த்து) ஏன் ஒரு மாதிரி காணப்படுகிறாய் ? யார் மீது கோபம் ? வயலட் மீது கோபமா ?

வயலட்: இல்லை ! வயதான மிஸ்டர் மலோன் மீது !

ராம்ஸ்டன்: வயலட் ! எப்படி இருக்கிறது உன் தலைவலி ? இந்த வெயிலில் நீ தலை வலியுடன் வெளியே வரலாமா ?

வயலட்: தலை வலி போய் விட்டது ! இப்போது வந்திருப்பது நெஞ்சு வலி ! (கனிவுடன்) ஹெக்டர் ! உன் தந்தையை எல்லோருக்கும் அறிமுகப்படுத்த மாட்டாயா ?

ஹெக்டர் மலோன்: இல்லை ! இவர் என் தந்தை இல்லை !

வயோதிகர் மலோன்: (மிக்கச் சினத்துடன்) என்ன ? என்னை உன் ஆங்கில நண்பர்கள் முன்பு இப்படி அவமானப் படுத்தலாமா ?

வயலட்: இப்படி மனம் உடையாதீர் மிஸ்டர் மலோன் !

ஹெக்டர் மலோன்: அப்படி சொன்னதற்கு நான் வருத்தப்பட வில்லை மிஸ் ராபின்ஸன் ! இவர் ஒருகாலத்தில் என் தந்தையாக இருந்தது மெய்தான் ! நானும் இவருக்கு மகனாக இருந்தது மெய்தான் ! அதுவும் கடமை தவறாத மகனாக இருந்தேன் ! இப்போது நான் சுதந்திர மனிதன் ! தந்தை நிழலை விட்டு நகர்ந்த மகன் நான் ! நிழலை விட்டுத் தாண்டியது என் தந்தைக்கு ஏனோ பிடிக்க வில்லை ! எனக்கு வந்த தனிப்பட்ட கடிதத்தை அவர் உடைத்துப் படித்து உன்னைத் திருமணம் செய்யக் கூடாதென்று எனக்குத் தடையிடுகிறார் !

ஜான் டான்னர்: (கூர்ந்து பார்த்து) ஹெக்டர் ! நீ வயலட்டை மணந்து கொள்ளப் போகிறாயா ?

ஹெக்டர் மலோன்: ஆம் ! நான் வயலட்டை மணம் புரிவதாக வாக்களித்து விட்டேன் !

ராம்ஸ்டன்: ஹெக்டர் ! நீ சிந்தித்துச் செய்த முடிவா இது ? அல்லது திடீர் முடிவா ?

ஜான் டான்னர்: நாங்கள் சொன்னதை எல்லாம் நீ மறந்து விட்டாயா ?

ஹெக்டர் மலோன்: நீங்கள் என்ன சொன்னீர் என்பதைப் பற்றி நான் கவலைப் படவில்லை !

ராம்ஸ்டன்: (கோபத்துடன்) இது அக்கிரம் ஹெக்டர் ! நீ வயலட்டைத் திருமணம் செய்யத் தகுதியற்றவன் !

வயோதிகர் மலோன்: என்ன ? எனக்கொன்றும் புரியவில்லையே ! இந்த மாதைத் திருமணம் செய்ய என் மகனுக்குத் தகுதி இல்லையா ? ஏனப்படிச் சொல்கிறீர் ?

ஜான் டான்னர்: மிஸ்டர் மலோன் ! இந்த மாதுக்கு ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டது ! ஹெக்டருக்குத் தெரியும் அது ! ஆனாலும் விடாமல் வயலட்டை விரட்டி மணந்து கொள்ளத் துணிந்து விட்டார் ! வீட்டுக்கு மகனைக் கூட்டிச் சென்று உள்ளே விட்டுப் பூட்டி விடுங்கள் !

வயோதிகர் மலோன்: (மனக் கசப்புடன்) ஓ ! ஏற்கெனவே மணமான மாதா இந்த சொப்பன சுந்தரி ? இந்த ஒப்பனை மாதுக்காகவா நீ என்னைக் கூட ஒதுக்கத் துணிந்து விட்டாய் ! நான் மனதில் நினைத்தது சரிதான் ! இவள் ஒரு நாடகக்காரி ! என் மகனை மயக்கிய சிங்காரி ! போயும் போயும் மணமான மாதையா நீ காதலிக்கிறாய் ? வெட்கக் கேடான திருமணம் இது ! பிரிட்டீஷ் கோமகனார் போல் நீயும் ஆகிவிட்டாயே !

ஹெக்டர் மலோன்: (கோபத்துடன்) அதெல்லாம் சரி ! என் தீர்மானத்தை யாரும் எடை போட வேண்டாம் ! நான் என்ன செய்கிறேன் என்ற எனது ஒழுக்கப்பாட்டைச் சொல்கிறேன் ! சற்று பொறுங்கள் தந்தையாரே ! முழுக்கதை தெரியாது உங்களுக்கு. ஒற்றைக் கடிதத்தைப் படித்து நியாயம் பேச வராதீர் தந்தையாரே !

வயோதிகர் மலோன்: நன்றி மகனே நன்றி ! இப்போதாவது என்னைத் தந்தை என்று கருதி அழைக்கிறாயே !

(தொடரும்)

***************************
தகவல்

Based on The Play

“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)

1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)
2. The Teachings of Reverence for Life By : Albert Schweitzer (1965)
3. The Religious Significance of Art By : Leo Tolstoy, Book on Philosophy -A Modern Encounter (Basic Edition) By : Robert Paul Wolff (1973
4. Vivekananda Speaks to You – Sri Ramakrishna Math, Chennai (1977)
5. Joyful Wisdom By : Friedrich Nietzsche (1971)
6. The Wisdom of India By : Emmons E. White (1968)
7. Friedrich Nietzsche – The Story of Philosophy By: Will Durant (1959)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (August 5, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 2 (சுருக்கப் பட்டது)

This entry is part [part not set] of 35 in the series 20080731_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

மங்கலம் என்ப மனைமாட்சி, மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.

பெறுமவற்றுள் யாமறிந்த தில்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை, மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

திருவள்ளுவர் (மனைமாட்சி & மக்கட் பேறு)

நீ வாலிப வயதில் திருமணம் புரியவும், குழந்தை பெற்றுக் கொள்ளவும் தயாராக உள்ளாய். நான் கேட்கிறேன் : ”குழந்தை வைத்துக் கொள்ள விரும்பும் மனிதனா நீ ? நீ வெற்றி அடைபவனா ? எதையும் நீ தன் வயப்படுத்தும் பண்பாளியா ? ஐம்புலனை நீ கட்டுப் படுத்துபவனா ? நீ உன் நெறிப்பாடுகளின் அதிபதியா (Master of Thy Virtues) ? அல்லது எதையும் எளிதில் விட்டுவிட்டு நீ விலகிச் செல்பவனா ? நீ தனிமை தேடும் ஏகாந்தவாதியா ? குழந்தை பெற்றுக் கொள்ள ஓர் வெற்றி எண்ணமும், விடுதலை உணர்வும் தேவை. நீ உருவாக்குவது உன்னை விட உயர்ந்ததாக இருக்க வேண்டும் ! ஆனால் அதற்கு முதலில் நீ உன் உடலையும், ஆத்மாவையும் சீராகப் பண்படுத்த வேண்டும் ! உன்னையே
மீண்டும் உருவாக்காமல், நீ உன்னை விட உயர்ந்தவற்றை ஆக்க வேண்டும் ! திருமண வாழ்க்கை என்பது தம்மைவிட உயர்ந்த பிள்ளைகளை உண்டாக்க விரும்பும் தாம்பத்திய உறவை மேற்கொள்வது ! அத்தகைய உடன்பாடு கொண்ட தம்பதிகள்தான் உண்மையாகத் திருமணத்தை மதிப்பவராக நான் கருதுவேன்.

·பிரடெரிக் நியட்ஸே, ஜெர்மன் சித்தாந்த ஞானி [Friedrich Nietzsche (1844-1900)]

உண்பது, உடுத்துவது, வசிப்பது, பொழுது போக்கில் ஈடுபடுவது, விளையாடுவது, பாடுவது, நோய்வாய்ப் பட்டோரைக் கண்காணிப்பது அனைத்திலும் உன்னத நெறிப்பாடைப் பின்பற்று.

எந்த ஒரு வேலையும் நீ சிரமமாக நினைத்தால் நீ இங்கு வராதே ! கடவுள் அருளால் எல்லாப் பாதைகளும் நமக்கு எளிதாக அமையும். ஜாதி, நிற வேறுபாடு இல்லாமல் நீ ஏழைகட்கும், இன்னல் படுவோருக்கும் பணி புரிய வா ! முடிவுகளைப் பற்றிக் கவலைப் படத் தேவையில்லை. உன் கடமை தொடர்ந்து பணி புரிவது. அதன் விளைவுகள் தானாகப் பின் தொடரும். என்னுடைய பணி நெறி ஆக்க வினைகள் புரிவது; எவற்றையும் சிதைத்து அழிப்பதன்று ! கடவுள் எல்லா உயிர்ப் பிறவிலும் உள்ளது. அதைத் தவிர வேறு கடவுள் எதுவுமில்லை. ஆகவே ஒருவர் மனிதப் பிறவிகளுக்குப் பணி புரிவது மெய்யாகக் கடவுளுக்குப் பணி புரிவதாகும் !

சுமுக வாழ்வு (Comfort) சத்திய சோதனைக்கு ஏற்புடையதில்லை. மாறாகச் சத்திய நெறியைக் கடைப்பிடிப்பது கடின வாழ்வை எதிர்ப்பார்த்து மேற்கொள்வது. யார் மீதும் பரிதாபம் கொள்ளாதே. எல்லோரையும் சமமாக நடத்து. பாபத்தில் முதலிடம் பெறுவது சமத்துவம் பேணாமை. நீ அதைத் தவிர்த்திடு. நாம் எல்லோரும் சமம். எண்ணமே ஒருவருக்கு முக்கியமானது. எதை நாம் உள்ளத்தில் நினைக்கிறோமோ அதுவாகவே நாம் மாறுகிறோம்.

கர்மயோகி விவேகானந்தா (1863-1902)

+++++++++++++++++++

உன்னத மனிதன்

(பெர்னார்ட் ஷா)
அங்கம் : 4 பாகம் : 2

(சுருக்கப் பட்டது)

நடிகர்கள்:

1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.
2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.
3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – 25 வயது வாலிபன்.
4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)
5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி
6. ஹெக்டர் மலோன் (Hector Malone) – ஓர் அமெரிக்கன்
7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ¦†க்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்
8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்
9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.
10. வயலொட் ராபின்ஸன் (Violet Robinson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)
11 வேலைக்காரி மேரி (Parlormaid)

**************

(அங்கம் : 4 பாகம் : 2)

(சுருக்கப் பட்டது)

கதா பாத்திரங்கள்: வயலட் ராபின்ஸன், டிரைவர் ஹென்றி ஸ்டிராக்டர், ஹெக்டர் மலோன். ஹெக்டரின் தந்தை மிஸ்டர் மலோன்
காலம்: பகல் வேளை
இடம்: ஐரோப்பிய சுற்றுப் பயணத்தில் தற்போது தங்குமிடம் தெற்கு மலைப் பகுதி : கிரனாடா, ஸ்பெயின்.. தங்கு மாளிகையின் பின்புறப் பூங்கா.

(காட்சி அமைப்பு: வயலட்டும், மிஸ்டர் மலோனும் வாதாடிக் கொண்டிருக்கிறார்.)

வயலட்: (பொங்கி வரும் கோபத்தை அடைக்கிக் கொண்டு) மிஸ்டர் மலோன் ! ஹெக்டர் நிலைக்கு என் நிலை எந்த விதத்தில் குறைந்தது ? ஹெக்டர் உம்மைப் போல் ஒருவர் பீடத்தின் உயரத்தை அளந்து நேசிப்பவர் அல்லர். நீவீர் எந்த தராசைக் கொண்டு மனிதரை எடை போடுகிறீர் ? உயர்வும், தாழ்வும் ஏறி இறங்கும் தட்டுகள் ! நேற்று சிகரத்தில் இருந்தவர் இன்று பாதாளத்தில் கிடக்கிறார் ! நேற்று பள்ளத்தில் உழன்றவர் இன்று பல்லக்கில் போகிறார் !

வயோதிகர் மலோன்: இங்கிலாந்தில் ஹெக்டரின் சமூக உயர்ச்சியைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது என்பது நன்றாகத் தெரிகிறது மிஸ். ராபின்ஸன் ! அந்த மேல்நிலை உன்னை மணந்தால் கீழ்நிலை அடைந்து விடும் ! அதை மீண்டும் உயர்நிலைக்கு ஏற்ற இயலாது ! நிரந்தரக் கீழ்நிலை ஆகிவிடும் ! நான் அந்த மாறுபாட்டை நிறுத்த எச்சரிக்கை விடுக்கிறேன், உனக்கும் என் மகனுக்கும் !

வயலட்: உங்கள் எச்சரிக்கையை உங்கள் மகன் மீறினால் என்ன செய்வீர் ? நான் மீறினால் என்ன செய்வீர் ? எனக்கு எச்சரிக்கை விட உரிமை இல்லை உமக்கு !

வயோதிகர் மலோன்: உண்மை மிஸ். ராபின்ஸன் ! உன்னை நான் தடுக்க முடியாது ! ஆனால் என் மகனை நான் தடுக்க முயல்வேன், முனைவேன், முன்னால் நின்று வழி மறைப்பேன் ! ஒருவர் உயர்குடிப் பிறப்பை அடுத்தவர் திருமணத்தால் வாங்க முடியாது ! அந்த நிலை வாழையடி வாழையாய் பல்லாண்டுகள் ஓரினத்தில் வளர்ந்தோங்கியது ! ஹெக்டர் தனக்குகந்த உயர்குடிப் பழக்க வழக்கங்களைப் பெற்ற ஓர் குடும்பப் பெண்ணை மணக்க வேண்டும். ஆனால் ஒருசில விநாடிகளில் அந்தப் பொன் சங்கிலியை ஒருவர் அற்று விடலாம் ! அப்படி ஆகும் போது என்னைப் போல் பலரது அடிமனம் வேதனையில் அதிர்கிறது !

வயலட்: தனக்குகந்த பெண்ணென்றால் என்ன அர்த்தம் ? நல்ல குடும்பப் பெண்ணொருத்தி அந்த உயர்ந்த பழக்கங்களை ஏன் கற்றுக் கொள்ள முடியாது ?

வயோதிகர் மலோன்: உயர்ந்த பழக்கங்களைக் கற்றுக் கொள்ளலாம் ! ஆனால் உயர்ந்த குடிப் பிறப்பைப் பெற்றுக் கொள்ள முடியாது ! அத்தகைய மாது ஒருத்தி அதில் பிறக்க வேண்டும் ! அவளது பெற்றோரும், பெற்றோரின் முற்சந்ததியும் உயர்குடியில் பிறந்து மரணம் அடைந்திருக்க வேண்டும் !

வயலட்: ஹெக்டர் எத்தகைய உயர்குடியில் உதித்தவர் ? நான் அறிந்து கொள்ள விழைகிறேன்.

வயோதிகர் மலோன்: ஹெக்டரின் பாட்டி அயர்லாந்தில் பிறந்தவள் ! வெறுங்காலில் நடந்தவள் ! அந்தக் காலத்து உருளைக் கிழங்குப் பஞ்சத்தில் (Potato Famine) உயிர் பிழைத்து மீண்டவள் ! பஞ்சத்திலும் சாகாத பணக்காரி ! என் மகன் செல்வந்த மாதை மணந்து சீரும் சிறப்பாக வாழ என் சொத்து பயன்பட வேண்டும். யாரை மணந்தால் அவன் செல்வாக்கு உயருமோ, அவள்தான் அவனுக்கு ஏற்ற இல்லத்தரசி ! உன்னைத் திருமணம் புரிவதில் என்ன பயன் அவனுக்கு விளையப் போகிறது ?

வயலட்: என் உறவினரும் என்னை ஏசுவார் பஞ்சத்தில் அடிபட்ட பாட்டியின் பேரனை மணக்கப் போகிறேன் என்று ! செல்வம் வழிகின்ற குடி, மேல்குடி என்பது உமது வாய்மொழி ! என்ன அபத்தமான வாசகம் இது ? என்னை ஒதுக்க நீங்கள் கூறும் காரணம் வேடிக்கையாக இருக்குது ! நான் படித்தவள் ! வேலை செய்ய வலுவான உடலும், தெளிவான அறிவும் உள்ளன ! என்னைத் திருமணம் புரிவதால் ஹெக்டரின் வருமானம் கூடும் !

வயோதிகர் மலோன்: வருமானம் இனிமேல்தான் வரும் ! இப்போது என்ன கொண்டு வருகிறாய் என் மகனுக்கு வெறுங்கையைத் தவிர ?

வயலட்: மிஸ்டர் மலோன் ! நீங்கள் தண்டிப்பது என்னை மட்டும் அல்ல ! உமது வாலிப மகனின் காதல் மண வாழ்வையும் சிதைக்கிறீர் !

வயோதிகர் மலோன்: அவன் ஆண்பிள்ளை ! காதல் தோல்வியில் அவன் காயப்பட மாட்டான் ! காயப் பட்டாலும் காலம் அந்தப் புண்ணை ஆற்றி விடும் ! அயர்லாந்தில் பட்டினியில் மாண்டார் என் தந்தை ! அந்தப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறாயா ?

வயலட்: எதைப் பற்றி ? அயர்லாந்து பஞ்சத்தைப் பற்றியா ?

வயோதிகர் மலோன்: இல்லை ! பட்டினியைப் பற்றி ! ஒரு நாடு உணவுப் பண்டங்கள் நிரம்பி வழிய ஏற்றுமதி செய்யும் போது பஞ்சம் ஏன் உண்டாகுது ? பட்டினியால் செத்தார் என் தந்தை ! பட்டினியுடன் நான் அமெரிக்காவுக்குத் தாயின் கைப்பிள்ளையாய் வந்து சேர்ந்தேன் ! ஆங்கில ஆட்சி அயர்லாந்தை விட்டுத் துரத்தியது எங்களை ! நானும் என்னைப் போன்றவரும் இங்கிலாந்தை வாங்க மீண்டும் வருகிறோம் ! எல்லாவற்றையும் விட மிக்க உயர்ந்ததை வாங்குவோம் ! நடுத்தர வகுப்பு எமக்கு வேண்டாம் ! நடுத்தர வகுப்பு மாது ஹெக்டருக்கு வேண்டாம், உன்னைப் போல் ! அதுதான் எனது நேரடிப் பேச்சு !

வயலட்: (சீற்றம் அடைந்து) இத்தனைக் கடுமையாக ஒரு வயதான உயர்குடிச் செல்வந்தர் பேசுவது எனக்குப் பேராச்சரியம் அளிக்குது ! ஆங்கிலப் பிரபுக்கள் உமக்குத் தமது மாளிகைகளை விற்பார் என்று கருதுவீரா ?

(அப்போது வாசல் இரும்புக் கதவைத் திறந்து கொண்டு ஹெக்டர் மலோன், வயலட் இருக்கும் இடத்திற்கு வருகிறார். வயலட்டைக் கட்டி அணைத்து வாயில் முத்தம் கொடுத்துத் தந்தையாரைக் கூர்ந்து நோக்குகிறார்.)

வயலட்: ஹெக்டர் ! ஒன்றும் சொல்லாதே ! தயவு செய்து ஒதுங்கி நில் நான் உன் தந்தையோடு தர்க்கம் செய்வது வரை ! நம் திருமணத்தை அவர் நிறுத்த முற்படுகிறார் ! இது என் போராட்டம் ! இதற்கொரு முடிவு காண வேண்டும் நான் !

ஹெக்டர் மலோன்: வயலட் ! இது உனது போராட்டம் மட்டுமில்லை ! எனது போராட்டமும் இணைந்தது ! என் தந்தை பேசிய தகாத வார்த்தைகள் சில என் காதில் விழுந்தன ! இந்தத் தடையை நான் இப்போதே உடைக்க வேண்டும் ! நீ எனக்கு எழுதிய கடிதத்தை வழிப்பறி செய்து கொண்டு திருமணத்தை நிறுத்த வருகிறார் என்னருமைப் பிதா ! என்ன மன அழுத்தம் இருந்தால் இப்படி ஒரு கல்லில் இருவரை வீழ்த்தப் பார்க்கிறார் ? நமது முடிவை யாரும் மாற்ற முடியாது ! வயலட்டே எனக்கு மனைவியாக வரப் போகிறவள் தந்தையே !

(தொடரும்)

***************************
தகவல்

Based on The Play

“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)

1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)
2. The Teachings of Reverence for Life By : Albert Schweitzer (1965)
3. The Religious Significance of Art By : Leo Tolstoy, Book on Philosophy -A Modern Encounter (Basic Edition) By : Robert Paul Wolff (1973
4. Vivekananda Speaks to You – Sri Ramakrishna Math, Chennai (1977)
5. Joyful Wisdom By : Friedrich Nietzsche (1971)
6. The Wisdom of India By : Emmons E. White (1968)
7. Friedrich Nietzsche – The Story of Philosophy By: Will Durant (1959)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (July 30, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 1 (சுருக்கப் பட்டது)

This entry is part [part not set] of 33 in the series 20080724_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

“உன்னத மனிதர் படைப்பு மேலானவர் (தம்பதிகள்) தேர்ந்தெடுப்பிலும், குழந்தைச் சீராக்க முன்னோக்குச் சிந்தனையிலும் (Eugenics Foresight), உயர்ந்த கல்வி புகட்டுவதிலும் உருவாக்கக் கூடுமானது !”

“எத்தனை அபத்தம் இது – தனிப்பட்ட உயர்ந்த மானிடர் காதலுக்காக மணம் புரிய விட்டு விடுவது ? மேலான தீரர் வேலைக்காரியை மணப்பது, மேதைகள் (Genius) தையல்காரியை மணப்பது ! ஜெர்மன் வேதாந்தி ஆர்தர் சோபெனர் (Schopenhauer) காதலை “யூஜினிக்ஸ்” (Eugenics) என்று கூறியது தவறு ! (Eugenics : தக்க பெற்றோரைத் தேர்ந்தெடுத்துப் பிறக்கும் குழந்தைப் பண்பாட்டைச் சீராக்குவது). ஒரு மனிதன் காதலில் மூழ்கிக் கிடந்தால், அவனது எதிர்கால வாழ்க்கை முழுவதும் பாதிக்கப்படும் தீர்மானங்களை அவன் எடுக்க அனுமதிக்கக் கூடாது ! காதலுக்கு முன்னிடம் அளித்து அறிவோடு வாழ மனிதனுக்கு ஏற்புடமை இல்லை ! காதலரின் சபதங்கள் பயனற்றதாக நாம் பறைசாற்ற வேண்டும். மேலும் உயர்ந்த இல்வாழ்வுக்குக் காதல் தடையானது என்று சட்டப்படி அது தவிர்க்கப்பட வேண்டும். மேலான ஆடவர் மேலான மாதரை மணக்க வேண்டும். விதிமுறை இல்லாத கும்பலுக்கு (Rabble) காதல் ஒதுக்கப்பட வேண்டும். திருமணம் செய்து கொள்வதின் குறிக்கோள் சந்ததி விருத்திக்கு மட்டுமில்லாது, சந்ததி உயர்வுக்கும் உரியது என்று மேற்கொள்ளப்பட வேண்டும் !

·பிரடெரிக் நியட்ஸே, ஜெர்மன் சித்தாந்த ஞானி [Friedrich Nietzsche (1844-1900)]

“முதலில் சத்துள்ள உணவை உட்கொண்டு உடல்நலத்தைப் பேணிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உறுதியாக இருக்கும் உள்ளம். உடம்பிலே உள்ளம் மென்மையான பகுதி. உன் உள்ளத்திலும், வாய்மொழியிலும்தான் பேருறுதி நிலையாக வேண்டும். நான் தாழ்ந்தவன், நான் கீழானவன் என்று உள்ளம் மீண்டும் மீண்டும் உச்சரிக்கும் போது மனிதன் தன்னை அவமதிப்பதோடு சிறுமைப் படுத்திக் கொள்கிறான் ! எந்நேரமும் விடுதலைச் சிந்தனையில் விழிப்புடையவனே விடுதலை அடைவான். வீரனாக நடமாடு. “அச்சமில்லை எனக்கு” என்று எப்போதும் சொல் !”

“தேர்வில் உயர்ந்த மதிப்பெண் வாங்குவதும், உரை ஆற்றுவதும் மட்டுமல்ல மனிதர் கல்வி கற்பது ! வாழ்வில் போராட ஒரு முறைப்பாடைப் பொதுநபருக்கு உதவாத கல்வி ஒரு கல்வி ஆகுமா ? மனிதப் பண்பாட்டு உறுதியை வெளிக் கொண்டு வராத கல்வி ஒரு கல்வி ஆகுமா ? மனிதன் தன் காலில் நிற்க உதவி செய்யும் ஒரு கல்வியே மெய்யான கல்வியாகும்.”

கர்மயோகி விவேகானந்தா (1863-1902)

+++++++++++++++++++

பெர்னார்ட் ஷா (புரட்சிவாதியின் கோட்பாடுகள்)

****************

உன்னத மனிதன்
(பெர்னார்ட் ஷா)

அங்கம் : 4 பாகம் : 1
(சுருக்கப் பட்டது)

நடிகர்கள்:

1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.

2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.

3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – கவர்ச்சி முகத்தான்.. 25 வயது வாலிபன்.

4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)

5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி

6. ஹெக்டர் மலோன் (Hector Malone) – ஓர் அமெரிக்கன்

7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ஹெக்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்

8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்

9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.

10. வயலொட் ராபின்ஸன் (Violet Robinson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)

11 வேலைக்காரி மேரி (Parlormaid)

**************

(அங்கம் : 4 பாகம் : 1)
(சுருக்கப் பட்டது)

கதா பாத்திரங்கள்: வயலட், டிரைவர் ஹென்றி ஸ்டிராக்டர், ஹெக்டர் மலோன். ஹெக்டரின் தந்தை மிஸ்டர் மலோன் மற்றும் ஓர் ஐரிஸ் நாட்டவன்.

காலம்: பகல் வேளை

இடம்: ஐரோப்பிய சுற்றுப் பயணத்தில் தற்போது தங்குமிடம் தெற்கு மலைப் பகுதி : கிரனாடா, ஸ்பெயின்.. தங்கு மாளிகையின் பின்புறப் பூங்கா.

(காட்சி அமைப்பு: ஐரிஸ் நாட்டவனும் டிரைவர் ஸ்டிராகெரும் பேசிக் கொண்டிருக்கிறார்.)

ஸ்டிராகெர்: அந்த இளம் மாது நீ இங்குதான் தங்க விரும்புவதாகச் சொன்னாள்.

ஐரிஸ் நாட்டவன்: யார் அந்த மாது ? வயலட் தானே ?

ஸ்டிராகெர்: உனக்கு அந்த மாது யாரென்று தெரியுமல்லவா ? வயலட் ராபின்ஸன் !

ஐரிஸ் நாட்டவன்: மிஸ் ராபின்ஸன் என்பது அவள் பெயரா ? உனக்கு எப்படித் தெரியும் அவள் பெயர் ?

ஸ்டிராகெர்: நான்தான் மிஸ்டர் எக்டர் மலோன், மிஸ். வயலட் ராபின்ஸன் இருவரையும் ஐரோப்பிய சுற்றுப் பயணத்துக்குக் காரில் கூட்டி வந்தவன்.

(அப்போது ஹெக்டரின் தந்தை மிஸ்டர் மலோன் வருகிறார்)

மிஸ்டர் மலோன்: (டிரைவரைப் பார்த்து) எக்டர் என்று சொல்லாதே ! அவன் பெயர் ஹெக்டர்.
என்னுடைய மகன் அவன்.

(அப்போது தங்குமிடத்து மாளிகையிலிருந்து ஒய்யாரமாக நடந்து வருகிறாள் வயலட்)

வயலட்: (டிரைவர் ஸ்டிராகெரைப் பார்த்து) என்னுடைய அஞ்சல் தகவலை எடுத்துச் சென்றாயா ?

ஸ்டிராகெர்: ஆமாம் மிஸ் ராபின்ஸன் ! நான் ஹோட்டலுக்கு எடுத்துச் சென்றேன். இளையவர் மிஸ்டர் மலோனிடம் கொடுக்கப் போனேன் ! ஆனால் என் முன்னால் எதிர்ப்பட்டது இந்த வயோதிக மிஸ்டர் மலோன் ! என்னிடமிருந்து இவர் வாங்கிக் கொண்டார் அந்த அஞ்சலை ! இளையர் மலோனிடம் தந்து விடுவதாக வாக்களித்தார்.

வயோதிகர் மலோன்: (புன்னகையுடன்) மிஸ் ராபின்ஸன் ! உன்னிடம் ஒரு சில நிமிடங்கள் பேச வாய்ப்புக் கிடைத்தால் நான் பேருவகை அடைவேன் ! நான்தான் ஹெக்டரின் தந்தை. ஆமாம் இந்த பிரிட்டீஷ் அறிவாளி என்னிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தது உண்மை ! ஓ அந்தக் கடிதத்தை எழுதிய மடந்தை நீ தானா ? மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

வயலட்: மன்னிக்க வேண்டும் மிஸ்டர் மலோன். இவர் உங்களிடம் நாகரீகமில்லாது நடந்து கெண்டிருந்தால் நான் அதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன், இவர் எங்கள் கார் டிரைவர்.

வயோதிகர் மலோன்: இந்த அநாகரீக டிரைவருக்கு ஒரு நாரிமணி மன்னிப்புக் கேட்க வேண்டியதில்லை ! நான்தான் டிரைவருடன் பேச்சுக் கொடுத்து இந்த மாளிகையில் நீ ஹெக்டருடன் தங்கி இருப்பதை அறிந்து கொண்டேன்.

வயலட்: ஆம் ஹெக்டர் இங்குதான் தங்கி இருக்கிறார். நாங்கள் நைஸ் (Nice) இத்தாலி செல்வதாக இருந்தோம். சற்று தாமதமாகி விட்டது. உட்கார்ந்து பேசலாம் நாம். நாற்காலியில் அமருங்கள்.

வயோதிக மலோன்: (அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்து) நன்றி மிஸ். ராபின்ஸன். (வயலட் உட்காருவதைக் கூர்ந்து கவனிக்கிறார்) நான் ஒன்று கேட்கலாமா ?

வயலட்: (முகத்தைத் திருப்பி) கேளுங்கள் மிஸ்டர் மலோன். எதைப் பற்றிக் கேட்கப் போகிறீர் ?

வயோதிக மலோன்: அதாவது (மெதுவாகப் பையில் கையை விட்டு ஒரு கடிதத்தை எடுத்து) நீ ஹெக்டருக்கு எழுதிய இந்தக் கடிதத்தை நான் படித்துக் காட்ட விரும்புகிறேன். தடையில்லையே உனக்கு ?

வயலட்: (சற்று தடுமாறி) இந்தக் கடிதத்தை யார் திறந்தது ? திறந்த கடிதம் எப்படி உமது கையில் கிடைத்தது ? நான் திறந்த கடிதத்தை அனுப்ப வில்லையே !

(ஸ்டிராகெர் விழிக்கிறான்)

வயோதிக மலோன்: அதைப் பிறகு சொல்கிறேன். (தங்க வரம்புக் கண்ணாடியை மாட்டிப் படிக்கத் துவங்கிறார்) : முதலில் படிக்கிறேன் ! கேள் !

‘அருமை மிக்க ஹெக்டர்’,

அவர்கள் யாவரும் ஒன்றாக அல்ஹாம்பிரா கோட்டையைக் காணச் சென்று விட்டார். எனக்குத் தலைவலி. நான் மட்டும் போக வில்லை. பூங்காவில் காற்றாட உலவி நான் தனிமையை அனுபவித்துக் கொண்டிருந்தேன். சீக்கிரம் வா சீக்கிரம். ஸ்டிராகெர் உன்னையும் அங்கே அழைத்துச் செல்வார்.

உன் நேசம் மிக்க,
வயலட்.

(படித்த பின் வயலட்டைக் கூர்ந்து நோக்குகிறார் வயோதிகர். வயலட்டும் கிழவரைக் கூர்ந்து நோக்குகிறாள்)

பிரிட்டனில் இந்த கடிதத்தைப் படித்தால் எப்படி எடை போடுவாரோ தெரியாது. இது மிக்க நெருங்கிய ஆழ்ந்த நட்புள்ள ஒருவர் எழுதியதாக அமெரிக்காவில் நினைப்பார் !

வயலட்: (சற்று அழுத்தமாக) ஆமாம் மிஸ்டர் மலோன். நான் உமது மகன் ஹெக்டரை மிக நன்றாக அறிவேன் ! அதில் உங்களுக்கு எதாவது ஆட்சேபனை உண்டா ?

வயோதிகர் மலோன்: ஆட்சேபனை இல்லை எனக்கு மிஸ் ராபின்ஸன் ! என் மகன் என்னைக் கலந்து அனுமதி பெற்று இம்மாதிரி உறவு வைத்துக் கொண்டிருந்தால் ஆட்சேபனை இருக்காது எனக்கு ! என் பொறுப்பில் உள்ளவன் என் மகன் என்று தெரியுமா ? தானாகச் செய்ய ஆணாக இருந்தாலும் என் கட்டளைக்கு உட்பட வேண்டும் அவன் ! அதில் உனக்கு ஆட்சேபனை உண்டா மிஸ் ராபின்ஸன் ?

வயலட்: வாலிப மகனை உங்கள் பொறுப்பில் வைத்திருப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை மிஸ்டர் மலோன் ! இப்போது காதலி என்ற பொறுப்பில் எனது கணவனாகப் போகிறார் உமது மகன். ஆகவே மனைவி என்ற முறையில் இப்போது என் பொறுப்பு உமது பொறுப்பை விட மிகையாகி விட்டது !

வயோதிகர் மலோன்: இன்னும் நீ ஹெக்டருக்கு மனைவி ஆக வில்லை மிஸ் ராபின்ஸன் ! உன் வயதில் இவையெல்லாம் நியாயமற்றதாகத் தெரியலாம் !

வயலட்: (அழுத்தமாக) சுற்றி வளைக்காமல் நான் சொல்கிறேன் மிஸ்டர் மலோன் ! ஹெக்டர் என்னைத் திருமணம் புரிய முடிவு செய்து விட்டார் ! இதுவரை உமக்குரிய மகனாய் இருந்தவர் இப்போது எனக்குரிய கணவனாக ஆகப் போகிறார் ! ஹெக்டரை அதிகாரம் செய்ய உம்மை விட என்கைக்கு வலு மிகுந்து விட்டது !

வயோதிகர் மலோன்: உன் கடிதத்தைப் படிக்கும் போது என் மண்டையில் அது உதைத்தது மிஸ் ராபின்ஸன் ! அவன் முடிவுக்கு அவனே காரண கர்த்தா ! ஆனால் ஒன்று சொல்கிறேன். அவன் உன்னை மணந்தால் என்னிடமிருந்து எதுவும் கிடைக்காது அவனுக்கு ! (கண்ணாடியைக் கழட்டி அதையும் கடிதத்தையும் பையிக்குள் வைக்கிறார்)

வயலட்: (கோபத்துடன்) இந்த அம்பு என்னைக் குறிவைத்து அடிப்பதாகத் தெரிகிறது ! இந்த எச்சரிக்கை என்னை விரட்டிவிட ஏவுவதாகத் தெரிகிறது !

வயோதிகர் மலோன்: உன்மீது எனக்கு எந்தக் கீழான எண்ணமும் கிடையாது மிஸ் ராபின்ஸன் !
நீ கூரிய அறிவுள்ள மாது ! அழகும், நளினமும் நாகரீகமும் உள்ளவள் ! ஆனால் ஹெக்டருக்கு நான் வகுத்த திட்டம் வேறு !

வயலட்: அதுபோல் ஹெக்டரும் தனக்குத் திட்டம் வகுத்திருக்கிறார் மிஸ்டர் மலோன் !

வயோதிகர் மலோன்: ஹெக்டர் திட்டத்தில் எனது பங்களிப்பு முற்றிலும் இருக்காது ! அவனது திருமணத்துக்கு எந்தப் பண உதவியும் என்னிடமிருந்து கிடைக்காது !

வயலட்: ஹெக்டர் பணங்காசு இல்லாத பரம ஏழை இல்லை என்பது உமக்குத் தெரியும் ! வேலை செய்து பிழைக்க உடல்வலுவும் உன்னத திறமையும் இருக்கிறது ! நானும் வேலை செய்வேன். உமது பணம் எமக்குத் தேவையில்லை ! பயமுறுத்தி, பணங்காட்டி எங்கள் திருமணத்தை உம்மால் நிறுத்த முடியாது ! இப்போது நான் முறையிடுகிறேன் ! முதலில் ஹெக்டருக்கு நான் எழுதிய கடிதத்தை நீங்கள் படித்ததே அநாகரீகம் ! கடிதத்தில் இருப்பது உமது பெயரில்லை ! உமது மகனிடம் ஏனந்தக் கடித்ததைக் கொடுக்காமல் எழுதிய எனக்கே படித்துக் காட்டுகிறீர் ? ஹெக்டருக்குத் தெரியாமல் என்னைப் பிரித்து விடலாம் என்று திட்டம் போட்டீரா ? வயது மேலாக இருந்தாலும் உமது அறிவு கீழாக உள்ளதே !

வயோதிகர் மலோன்: (உறுதியாக) என்னைப் பாதிக்கப் போகும் அந்தக் கடிதத்தை நான் எப்படித் திறக்காமல் இருக்க முடியும் ? எங்கள் குடி உயர்ந்த குடி ! உயர்குடி மாந்தர் உயர்குடி மாதைத்தான் திருமணம் புரிய வேண்டும் ! ஆனால் உன் வயது கீழாக இருந்தாலும், நீ மேலாகப் பேசவில்லை ! நான் இந்த திருமணத்தை நடக்க விடாமல் தடுப்பேன் ! அதற்கு உன் ஆட்சேபனை உண்டா மிஸ் ராபின்ஸன் ?

வயலட்: ஓ ! நீவீர் செல்வந்த குடியுடன், உயர்குடிப் பிறப்பு வேறா ? காதல் திருமணத்துக்குத் தடை போடும் உமது அநாகரீக முறைமீது எனக்கு ஆட்சேபனை உண்டு மிஸ்டர் மலோன் !

(தொடரும்)

***************************

தகவல்

Based on The Play

“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)

1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)

2. The Teachings of Reverence for Life By : Albert Schweitzer (1965)

3. The Religious Significance of Art By : Leo Tolstoy, Book on Philosophy -A Modern Encounter (Basic Edition) By : Robert Paul Wolff (1973

4. Vivekananda Speaks to You – Sri Ramakrishna Math, Chennai (1977)

5. Joyful Wisdom By : Friedrich Nietzsche (1971)

6. The Wisdom of India By : Emmons E. White (1968)

7. Friedrich Nietzsche – The Story of Philosophy By: Will Durant (1959)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (July 22, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 16 (சுருக்கப் பட்டது)

This entry is part [part not set] of 36 in the series 20080717_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

உன்னத மனிதனை உருவாக்கு !

“எப்படி ஒழுக்க நெறிப்பாடு இரக்கமின்றி மன உறுதியைச் சார்ந்ததுவோ, அதுபோல் மானிடக் குறிக்கோள் மாந்தர அனைவரையும் உயர்த்துவதாக இல்லாமல், தனிப்பட்டவரை மட்டும் கூரிய சிந்தனை, மன உறுதி உள்ளவராக விருத்தி அடைய முயல வேண்டும். மனித இனத்தை மாற்றுவ தில்லை. தனி மனிதனை உன்னதப் படுத்துவதே நமது குறிக்கோள். மனித இனம் முழுவதையும் அறிவுள்ள மனிதன் உயர்வடையச் செய்ய இயலாது. எப்போதும் விருத்தி அடையாது மனித இனம் ! மனித இனம் என்று எங்கும் வசிப்பது கிடையாது ! அது வெறும் மனோ உருவகச் சிந்தனையே (Abstraction). உலகத்தில் பெருமளவில் இருப்பவை படர்ந்து எழுந்துள்ள தனிப்பட்ட புற்று எறும்புகளே !”
·பிரடெரிக் நியட்ஸே, ஜெர்மன் சித்தாந்த ஞானி [Friedrich Nietzsche (1844-1900)]

வலுவாகப் பயிற்சி செய்
என் துணைவி ! கீழே நான்
விழும் போது நீ
தளராது நின்றிட !
அறிய வேண்டும் நான் இறுதியில்
தெறித்துத் துணுக்கான என் பாடல்
உன்னிடையே
இன்னிசை எழுப்புவதை !
இதயத்தினிடம் சொல்ல வேண்டும்
விட்டுச் சென்ற எனது
இடத்தி லிருந்து
தொடங்க வேண்டும் நீ
ஆழமாய் என்று !

வில் டூரன்ட் மனைவிக்கு எழுதியது (Will Durant) (1885-1981)

“கடலை நோக்கு, அலைகளை அல்ல ! கடவுளின் பேரளவு மகத்தான குழந்தைகள் மீது பரிவு கொண்டு அவரது அருளைப் பெறு. அதுவே இறைவனை அடையும் பாதை. அபூர்வமான அந்த ஒளிமயக் குழந்தைகளின் கூட்டுறவு ஐந்து நிமிடத்தில் ஒருவரது முழு வாழ்வை மாற்றிவிடும். சுய இச்சை இல்லாத பொதுநலப் பணியில்தான் ஒருவர் உன்னத மானிடச் சேவையை அழுத்தமாகப் புரிய முடியும்.

இப்போதெல்லாம் கடவுள் நம்பிக்கை உலகில் புறக்கணிப்பட்டு வருகிறது ! காரணம், கடவுள் உலகுக்குப் போதிய வேலைகள் புரிவதில்லை. கடவுளால் என்ன நற்பலன் விளைந்திருக்கிறது என்று பல மாந்தர் கேட்கிறார் ! கடவுள் என்பது நாட்டில் உள்ள கற்பகத் தருவா அல்லது காமதேனுவா ?”

கர்மயோகி விவேகானந்தா (1863-1902)

+++++++++++++++++++

உன்னத மனிதன் தேவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக வேண்டப் படுவது அரசியல் துறையிலேதான் !

பெர்னார்ட் ஷா (புரட்சிவாதியின் கோட்பாடுகள்)

****************

உன்னத மனிதன்
(பெர்னார்ட் ஷா)

அங்கம் : 3 பாகம் : 16
(சுருக்கப் பட்டது)

நடிகர்கள்:

1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.

2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.

3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – கவர்ச்சி முகத்தான்.. 25 வயது வாலிபன்.

4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)

5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி

6. ஹெக்டர் மலோன் (Hector Malone) – ஓர் அமெரிக்கன்

7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ஹெக்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்

8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்

9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.

10. வயலொட் ராபர்ட்ஸன் (Violet Robertson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)

11 வேலைக்காரி மேரி (Parlormaid)

**************

(அங்கம் : 3 பாகம் : 16)
(சுருக்கப் பட்டது)

(காட்சி அமைப்பு): கனவுக் காட்சி முடிகிறது. தாஞ் சுவான், சாத்தான், இளம்மாது, முதியவர் அனைவரும் மறைந்து போகிறார். ஜான் டான்னர், ஆனி வொயிட்·பீல்டு, ஸ்டிராகெர், வயலட், ஹெக்டர் மலோன், ராம்ஸ்டன், அக்டேவியஸ் மீண்டும் அரங்கத்துக்கு வருகிறார்கள்)

கதா பாத்திரங்கள்: ஜான் டான்னர், ஆனி வொயிட்·பீல்டு, வயலட், ஸ்டிராக்டர், ஹெக்டர் மலோன். ராம்ஸ்டன், அக்டேவியஸ். ஆன்னியும், ஜான் டான்னரும் கார் அருகில் நின்று பேசிக் கொண்டிருக்கிறார்.

காலம்: பகல் வேளை

இடம்: ஐரோப்பிய சுற்றுப் பயணத்தில் தற்போது தங்குமிடம் பிரான்ஸின் தென் பகுதியில்.

ஜான் டான்னர்: ஆன்னி நீ கனவு கண்டாயா ? கற்பனை உலகில் உலாவி வருகிறாயே !

ஆன்னி வொயிட்·பீல்டு: ஆமாம் நேற்றுக் கண்ட கனவில் ஒரு தாஞ் சுவான் வந்தார். உன்னைப் பார்த்தது போல் இருந்தது. உன்னை மாதிரியே பேசினார். உன்னை மாதிரியே முரணான கருத்துக்களைப் பிறர் மீது திணித்தார் ! உலகில் இல்லாத உன்னத மனிதனைப் படைக்க விதிமுறைகளை வகுத்தார். உன்னத மனிதனை உருவாக்கும் தம்பதிகளுக்குத் திருமணம் ஒரு விலங்காம் ! திருமண மில்லாத விடுதலைக் கூட்டுவாழ்வை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமாம் ! நியட்ஸே விரும்பிய உன்னத மனிதனைத் தாஞ் சுவானும் வரவேற்கிறார். உனக்குத் தெரியுமா யார் உன்னத மனிதன் என்று ? உன்னத மனிதன் ஒருவனைக் காண நானும் விரும்புகிறேன்.

ஜான் டான்னர்: எனக்குத் தெரியாது யார் உன்னத மனிதன் என்று ? தெரிந்தாலும் நானுக்குச் சொல்லப் போவதில்லை ?

ஆன்னி: ஏன் அப்படிச் சொல்கிறாய் ?

ஜான் டான்னர்: பிறகு என்னைப் புறக்கணித்து விட்டு அவனைப் பின்பற்றி ஓடிவிடுவாய் !

ஆன்னி: (சிரித்துக் கொண்டு) என்னை விட இளங்கன்னி உன்முன் கவர்ச்சியாக நின்றால் நீ என்ன செய்வாய் ? கண்களை மூடிக் கொள்வாயா ?

ஜான் டான்னர்: உண்மைதான் ! என் கண்களைக் கட்டுப்படுத்த என்னால் முடியாது ! ஒரு பெண்ணழகி வீதியை வெளிச்சமாக்கினால் ஆடவன் கண் அவளைக் காணாமால் விடாது ! ஆனால் பெண்ணுடைய கண்களும் ஏன் அந்த பேரழகியைக் காணத் திரும்புகின்றன ?

ஆன்னி: மனதுக்குக் கடிவாளம் பூட்ட முடியாது ! உன் கண்கள் அவளைச் சுற்றி முற்றுகை போடுகின்றன ! அவளுடைய கவர்ச்சி திறனைக் காணத் தாவுகின்றன ! ஆனால் பெண்ணின் கண்கள் அழகியை எடை போட்டு ஒப்பிட்டுப் பார்க்கின்றன ! தன்னை விட எந்த விதத்தில் மிஞ்சியவள் அவள் என்று அவளுடைய குறைகளைக் காண விரைகின்றன ! முடிவில் அந்த அழகியை வெறுக்கிறாள் பெண் ! ஆனால் ஆடவன் கண்கள் அழகியைத் தொடர்கின்றன !

ஜான் டான்னர்: (பதில் கூறாது பேச்சை மாற்றி) இப்போது நாம் எங்கே போகிறோம் என்று தெரிகிறதா அன்னி ? மான்டி கார்லோவுக்கு !

ஆன்னி: ஆனால் இந்தப் பெருவீதி மான்டி கார்லோவுக்குப் போகாது ஜான் ! பாதை தவறி வந்து விட்டோம்.

(அப்போது காரில் போகும் வயலட்டும், ஹெக்டர் மலோனும் டான்னரைப் பார்த்துக் காரை நிறுத்தி அவரிடம் வருகிறார்கள். வேறு திசையிலிருந்து வரும் ராஸ்டன், அக்டேவியஸ் இருவரும் காரை நிறுத்தி அவரும் ஆன்னி அருகில் வருகிறார்.)

அக்டேவியஸ்: (ஆச்சரியம் அடைந்து தங்கை வயலட்டைப் பார்த்து) வயலட் ! நீயும் மிஸ்டர் ஹெக்டர் மலோனும் இத்தனை நெருங்கிய நண்பர்கள் என்று எனக்குத் தெரியாதே !

ராம்ஸ்டன்: நீங்கள் இருவரும் காதல் ஜோடி என்பது எனக்கும் தெரியாதே !

வயலட்: ஹெக்டர் ஓர் அமெரிக்கத் தோழன் ! நாங்கள் காதல் ஜோடி அல்லர் ! ஹெக்டர் பிரான்ஸை சுற்றிக் காட்டுகிறேன் என்று அன்புடன் என்னை அழைத்தார். ஒப்புக் கொண்டு காரில் ஏறி அமர்ந்தேன் ! சுற்றுப் பயணத்தில் எங்களுக்குப் பகலா, இரவா என்பது தெரியாமல் பொழுது பறக்கின்றது.

ஜான் டான்னர்: வயலட் ! நீங்கள் இருவரும் காதல் ஜோடி என்பதை நீ நிரூபித்தல்லவா காட்டுகிறாய் !

ஆன்னி: (சிரித்துக் கொண்டு) நல்ல இளம் ஜோடிகள்தான் !

வயலட்: நாங்கள் காதல் ஜோடி அல்லர் ! காதல் ஜோடி மாதிரி உங்களுக்கும் தெரிகிறதா ? எப்படி வேண்டுமானாலும் நினைத்துக் கொள்வீர் ! நான் தடுக்க மாட்டேன்.

(தொடரும்)

***************************

தகவல்

Based on The Play

“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)

1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)

2. The Teachings of Reverence for Life By : Albert Schweitzer (1965)

3. The Religious Significance of Art By : Leo Tolstoy, Book on Philosophy -A Modern Encounter (Basic Edition) By : Robert Paul Wolff (1973

4. Vivekananda Speaks to You – Sri Ramakrishna Math, Chennai (1977)

5. Joyful Wisdom By : Friedrich Nietzsche (1971)

6. The Wisdom of India By : Emmons E. White (1968)

7. Friedrich Nietzsche – The Story of Philosophy By: Will Durant (1959)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (July 16, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 15 (சுருக்கப் பட்டது)

This entry is part [part not set] of 33 in the series 20080710_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

உன்னத ஆன்மீக உணர்வு

(புவியில்) இந்த மனிதன் உயர்கிறான் !
போற்றுவோம் நாம் அவனை !
உன்னத நிலையில் வைத்து நாம்
நேசிக்கும் மற்றவர்
நீடித்த காலம் உயர்ந்துள்ளார் !
சிகரத்தில் இருப்போரைச்
சீராக உயர்த்துவோம்
பாராட்டி இன்னும்
அந்த மாமனிதர் மேலிருந்து
வந்துளதால் !

·பிரடெரிக் நியட்ஸே, ஜெர்மன் சித்தாந்த ஞானி [Friedrich Nietzsche (1844-1900)]

நல்லோரைக் காண்பதுவும் நன்றே ! நலமிக்க
நல்லோர் சொல் கேட்பதுவும் நன்றே !
நல்லோர் நற்பண்பைச் சொல்வதும் நன்றே !
எல்லோ வற்றிலும் மகத்தானது
நல்லோர் அருகிலே வாழ்வது !

இந்திய ஞான மொழிகள் (The Wisdom of India From Tamil)

“இந்தியக் கலாச்சாரத்தின் மூலாதாரச் சிந்தனை, இந்தியச் சுமையின் நெடித்துவக் கீதங்கள் (Eternal Songs), இந்திய நெடுங்கால நிலைப்புக்கு முதுகெலும்பு, இந்திய வாழ்வுக்கு அடித்தளம் ஆகியவற்றுக்குக் காரணம், இந்தியா மனித இனத்துக்கு (இந்து மதம், புத்த மதம் மூலமாக) ஆன்மீக மார்க்கத்தை அளித்ததே (Spiritualization of the Human Race) !”

“எவருக்கும் நான் சவால் விடுக்கிறேன்: உலகத்துக்கு நல்வழி காட்டும் ஆன்மீக உன்னத மனிதர் (Spiritual Giant) எப்போதாவது இந்தியா வரலாற்றில் இல்லாமல் போனதுண்டா ? இந்திய ஒளி ஆன்மீக வழி ! இதுவரைக் கேள்விப்படாத அபூர்வமான இந்திய உந்து நிகழ்ச்சி (Influence) எப்போதுமே உலகத்தின் மீது மென்மைப் பனித்துளி போல் பொழிந்தது ! ஆயினும் அவையே உலக மண்ணில் உன்னத பூக்களை மலரச் செய்தன !”

“ஒளிமயமான வாழ்வு தெளிவாக என் கண்ணெதிரே தெரிகிறது ! பூர்வீக அன்னை புத்துயிர் பெற்றுத் தன் பீடத்தில் அமர்ந்து முன்னை விட உன்னத முற்று மீண்டும் விழித்துக் கொண்டு விட்டாள் ! அமைதியும் பேரின்பமும் பரவ அகிலமெங்கும் உரைமொழியைப் போற்றிப் பறைசாற்று !”

கர்மயோகி விவேகானந்தா (1863-1902)

+++++++++++++++++++

உன்னதப் படுத்துவதில் மனிதரின் தனிப்பட்ட எதிர்ப்புகள் . . . .

மனிதன் தன்னிலைக்கு மேம்பட்டு உன்னதம் அடைய விரும்பினால் அத்தகைய ஓர் மாற்றம் மனித சமூகத்தில் வரவேற்கப்படுமா ? மனிதனுடைய இயற்கைத் தப்பெண்ணத்தால் அந்த மாற்றம் ஏற்றுக் கொள்ளப்படலாம் ! உடலூட்டம் (Nutrition) அளிக்கும் உணவைத் தவிர்க்கும் ஆற்றல் உள்ள, ஒவ்வொரு சமயத்திலும் காணப்படும் உயர்ந்த பிறவியைப் போல் பூரணமான ஓர் உன்னத மனிதனை (An Ideal Superman) சாதாரண மனிதன் விரும்புவதில்லை !

மனிதன் போற்றும் தளர்ச்சியற்ற போர்த் தளபதி (மகா) அலெக்ஸாண்டர் என்று ஒரு காலத்தில் உருவாக்கப் பட்டவர் ! மனிதனுக்கு அவனது நாட்டு வேந்தரே உலகில் முதன்மையான கோமகன் ! போப் மதக்குருவே அவனுக்கு ஒரு புனித மனிதர் ! போலி மாமனிதராக வழிபாட்டு மாந்தர் அநேகர் வரிசையில் இல்லாமல் ஒருபோதும் மனிதன் இருக்க வில்லை !

மெய்யான உன்னத மனிதன் மானிட உரிமை, கடமை, சுயமதிப்பு, நியாயம், மதம், நன்னெறியோடு மானிட நியாயக் கடமைகள் யாவற்றையும் தானே மேற்கொள்வான் என்பதைத் தற்போதைய மனிதன் முன்னோக்கி இருக்கவில்லை ! சாதாரண மாமனிதன் ஒருவன் சாதிப்பது வீதி மனிதன் கண்முன்னே தெரியாமல் போகிறது ! அவனே அனுதினமும் செய்யும் அரிய வினைகள் அவனுக்குத் தெரியாமல் இருக்கின்றன. ஆகவே மாமனிதன் அல்லது மாவீரன் என்று கருதப்படும் உன்னத மனித இனத்தை உருவாக்க மனிதர் எதிர்ப்புக் கூறுவதில்லை. ஏனெனில் அவரது காலத்தில் அவரை மாமனிதர் என்பதாக மானிடர் கருதுவதில்லை. அதற்குப் பதிலாக எல்லையற்ற ஞானமும், வரையிலா ஊக்கமும், ஏராள செல்வமும் கொண்ட மாமனிதனாக மானிடன் தன்னையே எண்ணிக் கொள்வான் !

பெர்னார்ட் ஷா (புரட்சிவாதியின் கோட்பாடுகள்)

வேதாந்தியாக வாழ்வதைவிட நானோர் உழவனாக வேலை செய்ய விரும்புகிறேன். இரவில் பயங்கரக் கனவுகள் காணும் வேதாந்திக்குத் தூக்கம் வராது ! வேதாந்தி இன விருத்தி உந்துவிசையில் (Life Force) சிக்கிக் கொண்டிருக்கிறான் ! ஆனால் நெற்றி வேர்வை நிலத்தில் பாய்ச்சும் உழவனுக்குக் கனவுகள் வாரா ! அதனால் அவன் ஆழ்ந்து உறங்குவான் !

பெர்னார்ட் ஷா (உன்னத மனிதன் நாடகம்)

****************

உன்னத மனிதன்
(பெர்னார்ட் ஷா)

அங்கம் : 3 பாகம் : 15
(சுருக்கப் பட்டது)

நடிகர்கள்:

1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.

2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.

3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – கவர்ச்சி முகத்தான்.. 25 வயது வாலிபன்.

4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)

5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி

6. ஹெக்டர் மலோன் (Hector Malone) –

7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ஹெக்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்

8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்

9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.

10. வயலொட் ராபர்ட்ஸன் (Violet Robertson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)

11 வேலைக்காரி மேரி (Parlormaid)

**************

(அங்கம் : 3 பாகம் : 15)
(சுருக்கப் பட்டது)

கதா பாத்திரங்கள்: காதல் மன்னன் தாஞ் சுவான் (Don Juan), ஒரு வாலிப மாது, ஸ்பானியர் மென்டோஸா, ஜான் டான்னர், சாத்தான் (பெர்னாட் ஷாவின் கற்பனை வில்லன்)
காலம்: காலை வேளை
இடம்: நரகம் (பெர்னாட் ஷாவின் கற்பனைத் தீய உலகம்)

(காட்சி அமைப்பு): காதல் மன்னன் தாஞ் சுவான் நரகத்தில் ஒரு வாலிப மங்கையைச் (ஆன்னி வொயிட்·பீல்டு) சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறான். புதல்வியைக் காண தந்தை மிஸ்டர் வொயிட்·பீல்டு சொர்க்கத்திலிருந்து வயோதிகராக வருகிறார். சாத்தான் மூவரையும் சந்திக்கிறான்.

தாஞ் சுவான்: வேதாந்தியாக வாழ்வதைவிட நானோர் உழவனாக வேலை செய்ய விரும்புகிறேன். இரவில் பயங்கரக் கனவுகள் காணும் வேதாந்திக்குத் தூக்கம் வராது ! வேதாந்தி இன விருத்தி உந்துவிசையில் (Life Force) சிக்கிக் கொண்டிருக்கிறான் ! ஆனால் நெற்றி வேர்வை நிலத்தில் பாய்ச்சும் உழவனுக்குக் கனவுகள் வாரா ! அதனால் அவன் ஆழ்ந்து உறங்குவான் ! சந்ததி உந்துவிசை வேதாந்தி காதில் சொல்வதென்ன ? “என் வசம் ஆயிரக் கணக்கான அற்புதங்கள் மறைந்துள்ளன ! அவை உனக்குக் கிடைக்க வேண்டுமானால் தடையற்ற வழவழப்பான பாதையில் நடக்க நீ விரும்ப வேண்டும். இப்போது என் பாதை என்ன வென்று அறிய விருப்பம் எனக்கு ! நான் யாரென அறிந்து கொள்ள வேட்கை உண்டாகும் எனக்கு ! அதற்குச் சிறப்பான ஓர் மூளையை ஆக்கியுள்ளேன் நான் ! என்ன மூளை தெரியுமா ? ஒரு வேதாந்தியின் மூளை !

இளம்மாது: வேதாந்தியாக இருக்க விருப்ப மில்லை என்று சொல்லிக் கொண்டு அவன் மூளையை மட்டும் ஏன் விரும்ப வேண்டும் ? இரவில் மூளை குழம்பி உறக்கம் வரவில்லை என்றால் என்ன செய்வீர் ?

தாஞ் சுவான்: முறையான கேள்வி ! நான் உழவனாக உழைக்க விரும்பினாலும், வேதந்தியாகச் சிந்திக்க விழைகிறேன் ! வேளாளன் உடம்பும் வேதாந்தி மூளையும் எனக்குத் தேவை ! அதுதான் உன்னத மனிதனின் வடிவம் ! உடல் உழைப்பும் சிந்தனையும் ஒன்றாகச் சேர வேண்டும் !

சாத்தான்: அது எப்படி நேரும் என்று எண்ணிப் பாரும் மிஸ்டர் தாஞ் சுவான் ! நீவீர் சாக்ரெடீஸாக பிறரது மனத்தை உழுது பயிரிடலாம் ! நிலத்தை உழுது பயிரிடச் சாக்ரெடீஸால் முடியுமா ?

தாஞ் சுவான்: திருமண இல்வாழ்வு எளிய பாதையில் செல்வது ! எளிய பாதை எனக்கேற்ற பாதை ஆகாது ! அது எளிய மனிதன் மேற்கொள்வது ! உன்னத மனிதனுக்கு முள்ளும் கல்லும் நிறைந்த முரண் பாதை ! தடைகள் நிறைந்த தனிப்பாதை அது ! தனிப் பாதையே உன்னதப் பாதை ! கப்பல் திசை அறிந்து செல்லும் தகுதி உடையது ! ஆனால் வெறும் கட்டுமரம் அவ்விதம் செல்லாது ! வேதாந்தி பிறப்பது இயற்கையின் சதி ! மிஸ்டர் சாத்தான் ! உனக்கும் எனக்கும் உள்ள வேறுபாடு இப்போது தெரிகிறது ! நரகத்தில் இருந்தால் தாறுமாறாய்த் திரிந்து செல்லலாம் ! சொர்க்க லோகத்தில் இருந்தால் திசை திருப்பியுடன் பயணம் செய்யலாம் !

சாத்தான்: (எரிச்சலுடன்) யாரிந்த உன்னத மனிதன் ? எங்கிருக்கிறான் இந்த உன்னத மனிதன் ? எத்தனை பேரைச் சொல்லலாம் உன்னத மனிதராக ? சந்ததி உந்துசக்தி பித்தரின் வித்தையா (Life Force Fanatics) ? உன்னத மனிதனைக் கற்பனை செய்தவர் நான் சொர்க்கத்தில் சந்தித்த ஜெர்மன் பைத்தியகாரர் நியட்ஸியா ? (முதியவரைப் பார்த்து) உமக்குத் தெரியுமா அந்தப் பித்தரை ?

முதியவர்: எனக்குத் தெரியாது நியட்ஸியை. அந்தப் பெயரை நான் இதுவரைக் கேட்டதில்லை.

தாஞ் சுவான்: மிஸ்டர் சாத்தான் ! பித்தர் சொர்க்கத்தில் வாழமாட்டார் ! முதலில் நியட்ஸி பித்தரில்லை என்று சொல்லிக் கொள்கிறேன். அவர் புகழ்பெற்ற உலகச் சிந்தனையாளர். உன்னத மனிதனை உருவாக்கலாம் என்று சிந்தனையைத் தூண்டி விட்டவர் !

சாத்தான்: சிந்தனையாளர் என்பதை விடச் சந்ததி உந்துசக்தி வழிபடும் பித்தர் என்று சொல்வது பொருந்தும்.

முதியவர்: அந்த சிந்தனையாளரைச் சந்திக்க நான் விழைகிறேன். உன்னத மனிதர் நாட்டுக்குத் தேவை ! ஒப்புக் கொள்கிறேன் அதை மட்டும் ! அவரை எப்படி உருவாக்குவது என்னும் கோட்பாடில் எனக்குக் குழப்பமாக இருக்கிறது ! உன்னத மனிதர் தேவையை உணர்வது பாதி யுத்தம் ! அவரை உருவாக்க முயல்வது மீதி யுத்தம் !

இளமாது: நான் நியட்ஸியைச் சந்திக்க விரும்பவில்லை ! ஆனால் உன்னத மனிதனைச் சந்திக்க விழைகிறேன் ! எங்கிருக்கிறான் உன்னத மனிதன் ? எப்படி அவனைக் கண்டுபிடிப்பது ?

சாத்தான்: உன்னத மனிதன் இன்னும் உருவாக்கப் படவில்லை ! எப்படிப் படைக்கலாம் என்று தாஞ் சுவான் போன்ற வேலையற்றவர் மூளையைக் கலக்கிக் கொண்டிருக்கிறார் !

தாஞ் சுவான்: (சிரித்துக் கொண்டு) வேடிக்கையாகப் பேசுகிறீர் ! உமது செழிப்பான மூளையில் எவை முளைத்தாலும் அவை எல்லாம் விஷ வித்துக்கள் !

சாத்தான்: உன்னத மனிதனை உருவாக்க முடியாது ! அதுவும் தாஞ் சுவான் விதி முறையில் சாதாரண மனிதன்தான் உதிப்பான் ! உன்னத மனிதன் என்றும் உதிக்கப் போவதில்லை ! தாஞ் சுவான் கனவு காணும் உன்னத மனிதன் கற்பனையில் பிறந்து கற்பனையில் மரணம் ஆனவன் !

இளம்மாது: என்ன ? உன்னத மனிதனை உருவாக்க முடியாதா ? அப்படியானால் என் பணி முடியவில்லை இன்னும் ! அதற்குத் தேவை ஓரு தந்தை ! உன்னத மனிதனைப் படைக்க ஓர் உயர்ந்த ஆடவன் தேவை ! உயர்ந்த மனிதனை முதலில் எங்கே காண்பது ?

தாஞ் சுவான்: அது நானாக இருக்க முடியாது ! தேடிப் பிடி மாதே ! தேடிப் பிடி ! தேடினால் கிடைப்பான் ! இளம்மாதே ! உன் நெஞ்சில் கனலை எழுப்பி விட்டேன் ! என் பணி முடிந்தது !

(தொடரும்)

***************************

தகவல்

Based on The Play

“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)

1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)

2. The Teachings of Reverence for Life By : Albert Schweitzer (1965)

3. The Religious Significance of Art By : Leo Tolstoy, Book on Philosophy -A Modern Encounter (Basic Edition) By : Robert Paul Wolff (1973

4. Vivekananda Speaks to You – Sri Ramakrishna Math, Chennai (1977)

5. Joyful Wisdom By : Friedrich Nietzsche (1971)

6. The Wisdom of India By : Emmons E. White (1968)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (July 8, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 14 (சுருக்கப் பட்டது)

This entry is part [part not set] of 26 in the series 20080703_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

“உடல் வலுவற்று, உள்ளத் தளர்ச்சியுடன் ஆன்மீகச் சிந்தனையின்றி நெறி இல்லாமல் இருக்காதீர், மேலை நாடுகள் “செய் ! செயல் மூலம் உன் வலுவைக் காட்டு,” என்று சொல்கின்றன. ஆனால் இந்தியா, “இன்னல் படுவதின் மூலம் உன் வலுவைக் காட்டு,” என்று சொல்கிறது. ஒரு மனிதன் வாழ்க்கையில் எவ்வளவு மிகையாக வைத்துக் கொள்ளலாம் என்னும் பிரச்சனையை மேலை நாடுகள் தீர்த்திருக்கின்றன. ஒரு மனிதன் எவ்வளவு குறைவாக வைத்துக் கொள்ளலாம் என்பதை இந்தியா தீர்த்துள்ளது. மனித இனத்தைக் கவர்ந்த பூரண நாகரீகத்தில் (Ideal Civilization) தியாகம் செய்வது, மண்டியிட்டு வழிபடுவது, சுலோகங்களை முணுமுணுப்பது ஆகியவை மெய்யான மதமாகக் கருதப்படா ! வீர தீர கலைத்துவச் செயல் புரிய நம்மைத் தூண்டுவதற்கும், சிந்தனைகளை உன்னதப் படுத்த நம்மை உயர்த்துவதற்கும், தெய்வீகப் பூரணத்துவத்தைப் புரிந்து கொள்வதற்கும் உதவி செய்தால்தான் அவை நற்பழக்கமாகும். அவ்விதமின்றி கடவுளை நம் எல்லோருக்கும் பிதாவாகப் பிரார்த்தனையில் கருதி, நாம் ஒவ்வொருவரையும் நமது சகோதரராக அனுதினமும் நடத்தாவிடில் மதத்தால் என்ன நற்பயன் ஏற்படும் ?”

“மதத்தைப் பற்றி நான் சொல்வது என்ன ? நம்மிடையே மதத்தை வைத்துக் கொள்ளலாமா ? அல்லது அதை நீக்கி விடலாமா ? மதம் நிலைத்து நம்முடன் இருக்க வேண்டுமானால் அதற்கு உன்னத வல்லுநர், நெறியுள்ள பணியாளர் பலர் தேவை. குருமார்கள் மத வல்லுநர்தான். மதக்குரு மதத்தைத் தனது ஒற்றைத் தொழிலாக வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டவர். அவரே கடவுளின் பணியாளர். தம்மை அத்தகைய சீரான பணிக்கு அர்ப்பணித்துக்கு கொண்ட மதக் குழுவினர் நீண்ட காலம் இருக்கும் போது, மதம் ஏன் மறைந்து போகிறது ?”

கர்மயோகி விவேகானந்தா (1863-1902)

கடந்தது பாதி வழி உன் ஆயுட் காலம் !
கடிகா ரத்தின் கரங்கள் சுற்றிடும் !
துடிக்குதுன் ஆத்மா அச்ச மிகுந்து !
தொலைதூரக் கரையில் திரியும் ஆன்மா
தொங்கி நிற்கும் உனைக் கண்டு கொளாது !
கடந்தது பாதி வழி உன் ஆயுட் காலம் !
மணிக்கடுத்த மணி வலிதான், பிழைதான் !
ஏனிங்கி ருக்கிறாய் மனிதா ?
எதை மிகுதியாகத் தேடுகிறாய் ?
இதைத் தான்நான் தேடுவது
ஏனிங்கு நான் இருக்கிறேன் ?

·பிரடெரிக் நியட்ஸே, ஜெர்மன் வேத ஞானி [Friedrich Nietzsche (1844-1900)]

உன்னத மனிதரை உருவாக்க . . . .

திருமண நடப்பு முறைகள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. இங்கிலாந்தில் மணவிலக்கு விதிகளும், பெண் சொத்துரிமைச் சட்டங்களும் திருமண வாழ்க்கையைத் தற்போது மாற்றி யிருக்கின்றன. இங்கிலாந்தின் திருமண முறை பிரான்ஸ் திருமண அமைப்புக்கும், ஸ்காட்லந்து திருமண நிகழ்ச்சிக்கும் வேறு பட்டுள்ளது. இங்கிலாந்தோ அல்லது அமெரிக்காவோ திருமணம் புரியும் வழக்கத்தை முறித்து விடுவதை ஒருபோதும் சகித்துக் கொள்ளாது. ஆனால் அதைச் செம்மையாய்ச் சீர்திருத்த இரண்டு நாடுகளும் தயாராக இருக்கும்.

உன்னத மனிதர் ஆக்கும் முயற்சிக்கு ஒரு பொதுக் கொள்கை தேவைப்படுகிறது. அது என்ன வென்றால் கட்டாயத் திருமண வாழ்வில் உன்னத மனிதரை உருவாக்க ஆண்-பெண் தம்பதி இருவர் உடலுறவு கொள்வதைத் தவிர்ப்பது. அதே சமயத்தில் உடலுறவைப் பெரும்பான்மை யானவர் திருமண வாழ்க்கையின் முக்கியத் தேவையாகக் கருதுகிறார். ஆனால் அந்தக் கருத்தைத் தவறு என்று சொல்வேன் நான். ஆண்-பெண் உடலுறவு திருமண வாழ்வில் நேரும் ஒரு சந்தர்ப்ப நிகழ்ச்சி என்றோ அல்லது நிகழும் சம்பவம் என்றோ வைத்துக் கொள்ளலாம். உடலுறவு வெறும் சந்ததி இனவிருத்தி நிகழ்ச்சிக்கு மட்டும் இல்வாழ்வில் அவசியான ஒரு தேவை. உடலுறவு திருமணத்தைத் தவிர பிற முறைகள் மூலமும் கிடைப்பதால், திருமணம் செய்வதற்கு அதுதான் ஒரு காரணம் என்பது தவறாகிறது. ஆதலால் உன்னத மனிதனைப் படைக்கும் திட்டத்துக்குத் திருமணங்கள் சிக்கன முறைகள் அல்ல என்று முடிவு செய்ய நேரிடுகிறது.

பெர்னார்ட் ஷா (புரட்சிவாதியின் கோட்பாடுகள்)

இயற்கை உணர்வை ஒழுக்கமற்றதாக நீ நினைப்பாயா ? எனக்கு அது நாணத்தை அளிக்கிறது. இயற்கை நமக்குக் காதல் தூது ! காலம் நம் வாழ்வைச் சிதைப்பது ! மரணம் நம்மைக் கொலை புரிவது ! என் வாழ்க்கையில் மோகம் பலதடவை வந்து நழுவிப் போனது. காதல் பிணக்கில் சிக்கித் தவித்த காலம் உண்டு ! உணர்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்தோடி என் நாக்கில் அழகு மொழிகள் பொங்கி இன்பமளிக்க இச்சை உண்டாகித் தாறுமாறாகப் பேசினேன் ! மற்ற சமயங்களில் நான் என் உணர்ச்சிக்கு முரணாகப் போராடிக் கண்ணீர் விழவைத்துச் சாத்தானைப் போல் கூத்தாடினேன் ! ஆயினும் கனிவுடன் இருந்த போதும் கடுமையாக இருக்கும் போதும் காதல் உணர்ச்சியிலிருந்து என்னால் தப்பிக் கொள்ள இயலவில்லை ! ஒரு மாதின் கண்ணோட்டம் என்னைப் பிடிக்க வந்த போது ஒருகணம் என்னுள்ளம் உடன்பட்டு அடிமையானது ! அடுத்த கணம் இடத்தை விட்டு ஓடிவிடு என்றென்னைத் தூண்டியது !

நானா பீற்றிக் கொள்கிறேன் ? நீ நம்பினாலும் சரி விலக்கினாலும் சரி நான் சொன்னவை யாவும் உண்மை ! என்னை மீறி நான் எப்போது வாழ்க்கையில் ஓர் உன்னதக் கோட்பாடைக் கண்டுபிடிக்கிறோனோ அப்போது நான் விஞ்ஞானி ஆகிறேன் ! உடனே அதை நிலைநாட்ட முனைவேன் ! அல்லது அது நடமாடப் பாதை இடுவேன் ! அதுதான் என் வாழ்வின் விதி ! அவ்வுணர்வே என்னை உன்னதம் அடைய வைக்கும் ஆன்மீக உள்ளுணர்வு ! அந்த ஆன்மீக எழுச்சியே கண நேரம் இன்ப மளிக்கும் இந்தக் காதல் மோகத்தை நசுக்கி வைத்தது ! காதல் மோகினி வீனஸ் என்னைப் பெண்ணிடம் தள்ள வில்லை ! களைத்துப் போன தருணம்தான் சந்தர்ப்பம் என்னைக் காதற் பெண்களிடம் தள்ளியது !

பெர்னார்ட் ஷா (உன்னத மனிதன் நாடகம்)

****************

உன்னத மனிதன்
(பெர்னார்ட் ஷா)

அங்கம் : 3 பாகம் : 14
(சுருக்கப் பட்டது)

நடிகர்கள்:

1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.

2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.

3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – கவர்ச்சி முகத்தான்.. 25 வயது வாலிபன்.

4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)

5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி

6. ஹெக்டர் மலோன் (Hector Malone) –

7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ஹெக்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்

8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்

9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.

10. வயலொட் ராபர்ட்ஸன் (Violet Robertson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)

11 வேலைக்காரி மேரி (Parlormaid)

**************

(அங்கம் : 3 பாகம் : 14)
(சுருக்கப் பட்டது)

கதா பாத்திரங்கள்: காதல் மன்னன் தாஞ் சுவான் (Don Juan), ஒரு வாலிப மாது, ஸ்பானியர் மென்டோஸா, ஜான் டான்னர், சாத்தான் (பெர்னாட் ஷாவின் கற்பனை வில்லன்)
காலம்: காலை வேளை
இடம்: நரகம் (பெர்னாட் ஷாவின் கற்பனைத் தீய உலகம்)

(காட்சி அமைப்பு): காதல் மன்னன் தாஞ் சுவான் நரகத்தில் ஒரு வாலிப மங்கையைச் (ஆன்னி வொயிட்·பீல்டு) சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறான். புதல்வியைக் காண தந்தை மிஸ்டர் வொயிட்·பீல்டு சொர்க்கத்திலிருந்து வயோதிகராக வருகிறார். சாத்தான் மூவரையும் சந்திக்கிறான்.

தாஞ் சுவான்: சந்ததி உந்துசக்தி ஆண்-பெண் இருவருக்கும் உடற் கவர்ச்சியை உண்டாக்கிக் கண்கள் விழுங்கி ஒருவரை ஒருவர் தழுவிக் கொள்ளச் செய்கிறது ! பெண்ணைக் கலந்து கொள்ளாமல் அவள் கருத்தை அறிந்து கொள்ளாமல் பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணங்களில் இவ்விதக் கேளிக்கைகள் நிகழ்வதைக் காண வில்லையா ? இங்கிலாந்து தேசத்தில் உயர்குடிச் செல்வந்த ஆடவர் பெண்டிர் ஒருவரை ஒருவர் தெளிவாக அறிந்து கொள்ளாது குடியானவர் (Peasants) போல் குலாவிக் கொள்வதைக் கண்டு அருவருப்பு அடைவதில்லையா ? பார்த்தவுடன் ஒருவரை உன் வழக்காளராகவோ, மருத்துவராகவோ ஏற்படுத்தாத போது, கண்டதும் ஒருவர் மீது எப்படிக் காதல் கொண்டு உடன்பட்டு மணந்து கொள்வது ?

இளம்மாது: நியாய மில்லாத முறைகளை நாம் அறிவோம். நீவீர் எப்போதும் மாதருக்கு விளையும் பாதகங்களை விலக்கி விடுவீர். திருமண ஒப்பந்தம் தேவையானது என்பதை நீவீர் ஒப்புக் கொள்ள வேண்டும் முதலில். உமது கொள்கைப்படி காதலுக்குச் சிறுபான்மை மதிப்புதான் கிடைத்துள்ளது.

தாஞ் சுவான்: மனிதக் உறவுகளில் காதலுக்கு உன்னத மதிப்பில்லை என்று நான் சொல்ல வில்லை ! நான் சொன்ன தெல்லாம் திருமணத் தம்பதிகள் உடலுறவு தனிப்பட்ட சொந்த நிகழ்ச்சியில்லை என்பதே. அவரது உறவால் மூளைக் கோளாறான பிள்ளைகள் பிறந்து சமூகத்தின் பிரச்சனை ஆகலாம் ! தம்பதிகளின் தொத்து நோய் பிறக்கும் பிள்ளைகளைப் பற்றி பிறரைத் தீண்டலாம் ! ஆகவே திருமணம் என்பதும், உடலுறவு என்பதும் சமூகத்தைத் தாக்கும் பிரச்சனைகளே ! என்னை விரும்பும் மாதரின் பண்பும், அறிவும் எனக்குச் சமமாகவோ அல்லது மிகையாகவோ இருக்க வேண்டும். அந்தப் பெண்பால் மேல் எனக்கு உண்டாவது சாதாரண ஆண்பால் உணர்ச்சிதான் !

இளம்மாது: அப்படியானல் அந்த இயற்கை எழுச்சி ஒழுங்கற்ற உணர்ச்சி என்று சொல்கிறீரா ?

தாஞ் சுவான்: என்னருமை மேடம் ! இயற்கை உணர்வை ஒழுக்கமற்றதாக நீ நினைப்பாயா ? எனக்கு அது நாணத்தை அளிக்கிறது. இயற்கை நமக்குக் காதல் தூது ! காலம் நம் வாழ்வைச் சிதைப்பது ! மரணம் நம்மைக் கொலை புரிவது ! என் வாழ்க்கையில் மோகம் பலதடவை வந்து நழுவிப் போனது. காதல் பிணக்கில் சிக்கித் தவித்த காலம் உண்டு ! உணர்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்தோடி என் நாக்கில் அழகு மொழிகள் பொங்கி இன்பமளிக்க இச்சை உண்டாகித் தாறுமாறாகப் பேசினேன் ! மற்ற சமயங்களில் நான் என் உணர்ச்சிக்கு முரணாகப் போராடிக் கண்ணீர் விழவைத்துச் சாத்தானைப் போல் கூத்தாடினேன் ! ஆயினும் கனிவுடன் இருந்த போதும் கடுமையாக இருக்கும் போதும் காதல் உணர்ச்சியிலிருந்து என்னால் தப்பிக் கொள்ள இயலவில்லை ! ஒரு மாதின் கண்ணோட்டம் என்னைப் பிடிக்க வந்த போது ஒருகணம் என்னுள்ளம் உடன்பட்டு அடிமையானது ! அடுத்த கணம் இடத்தை விட்டு ஓடிவிடு என்றென்னைத் தூண்டியது !

இளம்மாது: போதும் உமது முரண்பாட்டுப் பேச்சு ! முதுகு எலும்பில்லாத ஓர் ஆண்பிள்ளை நீவீர் ! எனக்கு முன்பாக, என் தந்தை முன்பாக ஏன் இப்படித் தம்பட்டம் அடிக்கிறீர் ? ஒவ்வொரு பெண்ணும் உம்மீதுதான் கண்ணும் கருத்தும் கொள்கிறார் என்று பீற்றிக் கொள்கிறீர் ! இவற்றில் உண்மை எது ? புளுகு எது ? யாருக்குத் தெரியும் ?

தாஞ் சுவான்: நானா பீற்றிக் கொள்கிறேன் ? நீ நம்பினாலும் சரி விலக்கினாலும் சரி நான் சொன்னவை யாவும் உண்மை ! என்னை மீறி நான் எப்போது வாழ்க்கையில் ஓர் உன்னதக் கோட்பாடைக் கண்டுபிடிக்கிறோனோ அப்போது நான் விஞ்ஞானி ஆகிறேன் ! உடனே அதை நிலைநாட்ட முனைவேன் ! அல்லது அது நடமாடப் பாதை இடுவேன் ! அதுதான் என் வாழ்வின் விதி ! அவ்வுணர்வே என்னை உன்னதம் அடைய வைக்கும் ஆன்மீக உள்ளுணர்வு ! அந்த ஆன்மீக எழுச்சியே கண நேரம் இன்ப மளிக்கும் இந்தக் காதல் மோகத்தை நசுக்கி வைத்தது ! காதல் மோகினி வீனஸ் என்னைப் பெண்ணிடம் தள்ள வில்லை ! களைத்துப் போன தருணம்தான் சந்தர்ப்பம் என்னைக் காதற் பெண்களிடம் தள்ளியது !

இளம்மாது: நீவீர் சொல்வது எனக்குப் புரிய வில்லை காதல் மன்னா ! நீவீர் களைத்துப் போனாலும் கண்மூடிப் பெண் மடியில் தூங்கும் பித்தர் இல்லை ! உம்மைக் காதலித்துக் களைத்துப் போன பெண்டிர்தான் பலர் ! அவரது கண்ணீர்க் கடலில் நீந்தியவர் நீவீர் ! அதில் ஐயமில்லை !

(தொடரும்)

***************************

தகவல்

Based on The Play

“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)

1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)

2. The Teachings of Reverence for Life By : Albert Schweitzer (1965)

3. The Religious Significance of Art By : Leo Tolstoy, Book on Philosophy -A Modern Encounter (Basic Edition) By : Robert Paul Wolff (1973

4. Vivekananda Speaks to You – Sri Ramakrishna Math, Chennai (1977)

5. Joyful Wisdom By : Friedrich Nietzsche (1971)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (July 2, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 13 (சுருக்கப் பட்டது)

This entry is part [part not set] of 26 in the series 20080626_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

இந்துக்களுக்கு நான் காட்டும் எனது வழிமுறை இதுதான். அவர் எதையும் விட்டுக் கொடுக்க வேண்டி தில்லை. நமது வேத ஞானிகள் வகுத்த பாதையைப் பின்பற்றினால் போதுமானது. அடிமைத் தொழில் உண்டாக்கும் முடக்கத்தை (Inertia, the Result of Servitude) விட்டொழிப்பீர். நம் பாதையில் நமக்கு வகுத்த பாதையில் நாமெல்லாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். ஒவ்வொரு நாட்டுக்கும் உலக நடப்பில் முக்கியமாக ஒரு புத்துணர்ச்சி ஓட்டம் (A Main Current) உருவாகியுள்ளது ! இந்தியாவில் அது மதமாக உருவாகி உள்ளது. அதை உறுதி ஆக்குவீர் ! இருபுறத்திலும் ஓடும் நீர் வெள்ளம் அதன் போக்குடன் ஒன்றிச் செல்ல வேண்டும்.

இந்தியனாக இருப்பதில் பெருமைப்படு. “நானொரு இந்தியன். ஒவ்வோர் இந்தியனும் என் சகோதரன் என்று பீடுடன் பறைசாற்று.” உனது உச்சக்குரலில் முழக்கமிடு பெருமையாக, “இந்தியன் என் சகோதரன். இந்திய வாழ்க்கை என் வாழ்க்கை. இந்தியத் தெய்வங்கள் எனது கடவுள். இந்தியச் சமூகம் குழந்தையாய் என்னைத் தாலாட்டி வளர்த்தது. இதுவே என் இளமை வாழ்வின் ஆனந்தத் தோட்டம். முதிய வாழ்க்கையின் எனது புனித சொர்க்கம்.” சகோதரா ! சொல் நீ, “இந்திய மண்ணே என் உன்னத மேலோகம். இந்தியாவின் நற்காலம் எனது நற்காலம்” என்று. இரவும் பகலும் திரும்பத் திரும்ப உச்சரி: “பிரபஞ்சத் தாயே ! பரம்பொருள் சக்தியே ! மனிதப் பண்பை (Manliness) எனக்குள் திணிப்பாய் ! சக்தி அன்னையே ! எனது பலவீனத்தை நீக்கிடு ! எனது மனிதக் கொடூரத்தை அழித்திடு. என்னை மனிதனாக ஆக்கிடு.”

கர்மயோகி விவேகானந்தா (1863-1902)

உன்னத மனிதரை உருவாக்க . . . .

ஆரோக்கிய மற்றோருக்கு மலட்டுத்தனம் உண்டாக்குவதை (Sterilization of the Unhealthy) விட மிகச் செலவாவது ஆரோக்கியமுள்ளவரை ஆரோக்கியமற்றவரிடம் உடலுறவு கொள்ள வைக்கும் முறை. அவ்விதம் ஆரோக்கியமுள்ள மனித நலப்பாடு, ஆரோக்கியமற்ற நலப்பாடுத் தன்மைகளைத் தெளிவாக அறிவதில் தவறுகள் நேரலாம். அத்தகைய தவறுகளை மனித அனுபவம் திருத்திச் செம்மைப்படுத்த முடியும். உன்னத குடிமக்கள் இன்பத் திருமணத்திலிருந்து பிறக்கும் பிள்ளைகளாய் எழுவார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை ! உணர்ச்சி முறிவு (Conflict of Temperament) இடையிடையே தோன்றும் திருமண வாழ்க்கையில் உன்னத மாந்தர் உதிப்பதற்கு வாய்ப்பில்லை என்பதற்கும் ஆதாரமில்லை ! அந்தக் கருத்துக்கு முரணாக பொருத்தமற்ற இரண்டு திருமணத் தம்பதிகள் கூடிப் பிறக்கும் குழந்தைகள் மேம்பட்டவராய்த் திகழ்வது நிகழக் கூடிய ஒன்றே. அவ்விதம் எதிர்பாராது நடக்கும் இல்வாழ்வு போல் இப்போது கருத்துக்கு முரணான தம்பதிகள் இணைந்து சோதனை புரிவதை நேரடியாக செய்து பார்க்கலாம். அப்படிச் செய்யும் சோதனையில் தம்பதிகள் உடலுறவை மட்டும் அனுமதித்துத் திருமணத்தைக் கட்டாயப் படுத்தாமல் இருப்பது நல்லது !

உடலுறவில் பங்கு கொள்ளும் பூர்த்தித் தம்பதிகள் இருவர் (இல்லாததில் ஒருவரை ஒருவர் பூர்த்தி செய்யும் இரட்டைத் தம்பதிகள் -Two Complementary Couples) ஒருவர் குறைபாட்டை மற்றவர் நிறைவு செய்து பூரண மாக்கலாம். ஆனால் திருமண வாழ்க்கையில் சிக்கிக் கொண்ட பூர்த்தித் தம்பதிகள் தம்முள் இருக்கும் வேறுபாடுகளைத் தெரிந்து கொண்டாலும், அவற்றால் அவர் இருவரும் வேதனைப் படுவதையே காண்கிறோம். உருண்டு திரண்டு புன்னகையோடு இருக்கும் பிரிட்டீஷ் கோமகனாரின் புதல்வனும், அதே சுவைப் பண்புள்ள வகுப்பு நிலை உயர்ந்த நாகரீக அறிவாளி யுதப் பெண்ணும் தமது பெற்றோரை விடவும் உன்னத புத்திசாலிகளாய் இருப்பர். ஆயினும் அந்த யூதப் பெண் பிரிட்டீஷ் கோமகனார் புதல்வனைத் தனக்குகந்த துணைவனாகக் கருதமாட்டாள். அவனுடைய பழக்க வழக்கங்கள், நண்பர்கள், வாழுமிடம், வாழ்வின் போக்கு எதுவும் யூதப் பெண்ணுக்கு இனிதாகத் தோன்றாது ! ஆதலால் மணவாழ்வு என்பது உடலுறவுக்கு நிபந்தனையாக எடுத்துக் கொள்ளப்பட்டாலும் உன்னத மனிதன் படைப்புக்கு அது முட்டுக்கட்டை போடுவதாகும் !

பெர்னார்ட் ஷா (புரட்சிவாதியின் கோட்பாடுகள்)

மனித இன அழிவுக்கு நான் திட்டமிட வில்லை. நான் முழுவதும் கூறி முடிப்பதற்குள் தடைசெய்யப் பட்டேன். நான் விளக்கிய மனித மலடாக்கம் தவிர்க்க முடியாத வருங்காலத் தேவையானால் பலத்த எதிர்ப்புக்கள் கிளம்பும் என்று அறிவேன். இனப்பெருக்கத்தின் குறிக்கோள் உன்னத மனிதரைப் படைப்பது ! அப்படி உன்னத மாக்குவது மனித முயற்சிக்கு அப்பாற் பட்டதோர் மேம்பாட்டுப் பணியாக உள்ளது !

ஆண்-பெண் தம்பதிகள் உடலுறவு கொள்வது அவரது தனியுரிமைச் செயலுமில்லை ! நட்புரிமைச் செயலுமில்லை ! அந்த உடலுறவு புனித உறவு என்று சொல் ! தூய உறவு என்று சொல் ! ஒப்புக் கொள்கிறேன் ! ஆனால் அது தனி உறவு இல்லை ! நட்புறவு இல்லை ! கடவுளிடம் நீ கொண்டுள்ள ஆன்மீக உறவு தூயது ! மேலும் புனிதமானது ! அதைத் தனி உறவு, நட்புறவு என்று தைரியமாய்ச் சொல்வாயா ? தம்பதிகள் கவர்ச்சியாலும், தனிமைத் தவிப்பாலும், உடலுறவு கொள்ளத் தூண்டுவது “உலகளாவிய இனவிருத்திப் படைப்புச் சக்தி” (Universal Creative Energy) ! அது ஒரு திசைப்பாதை ! அதனுள் வீழ்ந்த தம்பதிகள் தவிர்க்க இயலாத நிலையில் மீள முடியாது தத்தளிப்பவர் ! காப்பாற்ற முடியாமல் அந்தக் கணத்தில் அவர் இருவரும் தூக்கிச் செல்லப் படுகிறார் ! அப்போது அவரது சிந்தனா சக்தியும் இழக்கப் படுகிறது !

தம்பதிகள் முற்றிலும் அன்னியராக இருக்கலாம் ! வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தவராய் இருக்கலாம் ! வேறு மொழிகள் பேசலாம் ! மாறுபட்ட கலாச்சாரத்தில் வளர்ந்திருக்கலாம் ! மதம், இனம், நிறம், வயது எல்லாம் வேறாக இருக்கலாம் ! கண நேரத்தில் கட்டுப்பாடு களைந்து ஒட்டிக் கொண்டோர் அடுத்த கணம் தவறு செய்து விட்டோம் என்று கண்ணீர் வடிக்கலாம் !

பெர்னார்ட் ஷா (உன்னத மனிதன் நாடகம்)

****************

உன்னத மனிதன்
(பெர்னார்ட் ஷா)

அங்கம் : 3 பாகம் : 13
(சுருக்கப் பட்டது)

நடிகர்கள்:

1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.

2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.

3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – கவர்ச்சி முகத்தான்.. 25 வயது வாலிபன்.

4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)

5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி

6. ஹெக்டர் மலோன் (Hector Malone) –

7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ஹெக்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்

8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்

9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.

10. வயலொட் ராபர்ட்ஸன் (Violet Robertson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)

11 வேலைக்காரி மேரி (Parlormaid)

**************

(அங்கம் : 3 பாகம் : 13)
(சுருக்கப் பட்டது)

கதா பாத்திரங்கள்: காதல் மன்னன் தாஞ் சுவான் (Don Juan), ஒரு வாலிப மாது, ஸ்பானியர் மென்டோஸா, ஜான் டான்னர், சாத்தான் (பெர்னாட் ஷாவின் கற்பனை வில்லன்)
காலம்: காலை வேளை
இடம்: நரகம் (பெர்னாட் ஷாவின் கற்பனைத் தீய உலகம்)

(காட்சி அமைப்பு): காதல் மன்னன் தாஞ் சுவான் நரகத்தில் ஒரு வாலிப மங்கையைச் (ஆன்னி வொயிட்·பீல்டு) சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறான். புதல்வியைக் காண தந்தை மிஸ்டர் வொயிட்·பீல்டு சொர்க்கத்திலிருந்து வயோதிகராக வருகிறார். சாத்தான் மூவரையும் சந்திக்கிறான்.

தாஞ் சுவான்: இளம்மாதே கேள் ! மனமிருந்தால் மார்க்கம் உண்டு ! மனிதன் தான் விரும்புவதைத் தேடிப் பிடிக்க ஒரு வழியை அமைத்துக் கொள்வான். உன்னைப் போன்ற நேர்மையான பெண்டிர் தம்மால் இயன்றதைத் சாதித்திருக்கிறார் ! ஆடவரின் மனத்தை வளைத்து பெருமைக்குரிய காதலே உயர்ந்த தென்று காட்டி வருகிறீர். பெண்டிருக்குத் தமது இளமை, உடல்நலம், வனப்பு, வடிவாக்கம், எல்லாவற்றையும் விட நாகரீக நடத்தை ஆகியவை மதிப்பளிப்பவை என்று எடுத்துச் சொல்கிறீர் ! மனிதரின் வேண்டுதல் என்ன ? தனக்கெனக் காதல், வனப்பு, காதற் களியாடல் (Romance), மனக்கிளர்ச்சி (Emotion), வெறியாசை (Passion) போன்றவை எழுப்பும் ஒரு முறையைக் கண்டுபிடிப்பது ! பண ஆசை பிடித்தோர், கற்பனைக் கவிஞர், வெற்றி வீரர், கலைஞர், காதல் மன்னர் யாவரும் இனப்பெருக்கு உந்துசக்தியை (Force of Life) எதிர்ப்பார். அந்த உந்துசக்தியே மனித மலட்டுத் தன்மைக்குப் படைப்புச் சாதனம் !

முதியவர்: மிக்க ஆழமான கருத்து நண்பரே ! நான் ஆன்னியின் தாயை மணந்தது உமக்குத் தெரியாமல் இருக்கலாம். எப்படி நான் அவளை மணந்தேன் என்று இப்போது சிந்திக்கிறேன் ! என்னைக் கண்டுபிடித்து எனக்குக் கால்விலங்கு போட்டவள் என் மனைவிதான் ! திருமணம் முடிந்தபின் நான் என் தலையணையில் முட்களை நட்டதாக உணர்ந்தேன் ! எனது மணவாழ்கை ஒரு தோல்விக் கேலிக்கூத்து ! நான் கற்றுக் கொண்டது என்ன ? திருமணம் புரியாமல் காலம் கடந்தி யிருக்கலாம் என்பது !

இளம்மாது: அப்பா என்ன சொல்கிறீர் ? இப்படி நமது குடும்ப வாழ்வை நீங்கள் இகழ்ந்து பேசலாமா ? எனக்கு அவமானம் ! அன்னைக்கும் அவமதிப்பு ! தலை நிமிர்ந்து எப்படி நீங்கள் தெருவில் நடப்பீர் ? தலையணை முட்கள் என்றால் நானும் அந்த முட்களில் ஒன்றா ?

முதியவர்: இல்லை ஆன்னி ! நீ என் வாசனை ரோஜா ! நீ கொடுத்த துன்ப மெல்லாம் உன் தாயிடம் இருந்தன ! நான் வெறுப்பது உன் தாயை ! அவளுடைய நாக்கு ஒரு தேள் நாக்கு ! அதன் தாக்குதலில் நான் தவித்ததுண்டு ! வலி தாங்காமல் நான் துடித்ததுண்டு ! உனது நாக்கில் முட்களில்லை !

சாத்தான்: ஆரோக்கியமற்ற தம்பதிகளை மலடாக்கும் உமது தத்துவம் என்னை முள்ளாய்க் குத்துகிறது ! அது மனித நேயமற்ற முறை ! மனித உரிமையைப் பறிக்கும் பயங்கர நெறி ! ஒரு சிலரை மட்டும் மலடாக்கும் உமது மனித ஈனச்செயல் மடத்தனமான வழி ! மனித இனத்தை அழிக்கும் திட்டம் ! அந்தக் கடுஞ்செயல் நியாய மற்றது ! நீவீர் போற்றும் கலைஞரும், கவிஞரும் கூட அந்தக் கோட்பாடை ஏற்றுக் கொள்ள மாட்டார் !

தாஞ் சுவான்: மனித இன அழிவுக்கு நான் திட்டமிட வில்லை. நான் முழுவதும் கூறி முடிப்பதற்குள் தடைசெய்யப் பட்டேன். நான் விளக்கிய மனித மலடாக்கம் தவிர்க்க முடியாத வருங்காலத் தேவை யானால் பலத்த எதிர்ப்புக்கள் கிளம்பும் என்று அறிவேன். இனப் பெருக்கத்தின் குறிக்கோள் உன்னத மனிதரைப் படைப்பது ! அப்படி உன்னத மாக்குவது மனித முயற்சிக்கு அப்பாற்பட்டதோர் மேம்பாட்டுப் பணியாக உள்ளது ! ஆண்-பெண் தம்பதிகள் உடலுறவு கொள்வது அவரது தனியுரிமைச் செயலுமில்லை ! நட்புரிமைச் செயலுமில்லை !

இளம்மாது: என்ன வேடிக்கைப் பேச்சு இது ? ஆண்-பெண் உடலுறவு தனியுரிமைச் செயலில்லையா ? நட்புரிமைச் செயலுமில்லையா ? இது இல்லாவிட்டால் வேறு எந்த உறவு தனி உறவு ? புனித உறவு ? தூய உறவு ?

தாஞ் சுவான்: அந்த உடலுறவு புனித உறவு என்று சொல் ! தூய உறவு என்று சொல் ! ஒப்புக் கொள்கிறேன் ! ஆனால் அது தனி உறவு இல்லை ! நட்புறவு இல்லை ! கடவுளிடம் நீ கொண்டுள்ள ஆன்மீக உறவு தூயது ! மேலும் புனிதமானது ! அதைத் தனி உறவு, நட்புறவு என்று தைரியமாய்ச் சொல்வாயா ? தம்பதிகள் கவர்ச்சியாலும், தனிமைத் தவிப்பாலும், உடலுறவு கொள்ளத் தூண்டுவது “உலகளாவிய இனவிருத்திப் படைப்புச் சக்தி” (Universal Creative Energy) ! அது ஒரு திசைப்பாதை ! அதனுள் வீழ்ந்த தம்பதிகள் தவிர்க்க இயலாத நிலையில் மீள முடியாது தத்தளிப்பவர் ! காப்பாற்ற முடியாமல் அந்தக் கணத்தில் அவர் இருவரும் தூக்கிச் செல்லப் படுகிறார் ! அப்போது அவரது சிந்தனா சக்தியும் இழக்கப் படுகிறது ! தம்பதிகள் முற்றிலும் அன்னியராக இருக்கலாம் ! வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தவராய் இருக்கலாம் ! வேறு மொழிகள் பேசலாம் ! மாறுபட்ட கலாச்சாரத்தில் வளர்ந்திருக்கலாம் ! மதம், இனம், நிறம், வயது எல்லாம் வேறாக இருக்கலாம் ! கண நேரத்தில் கட்டுப்பாடு களைந்து ஒட்டிக் கொண்டோர் அடுத்த கணம் தவறு செய்து விட்டோம் என்று கண்ணீர் வடிக்கலாம் !

(தொடரும்)

***************************

தகவல்

Based on The Play

“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)

1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)

2. The Teachings of Reverence for Life By : Albert Schweitzer (1965)

3. The Religious Significance of Art By : Leo Tolstoy, Book on Philosophy -A Modern Encounter (Basic Edition) By : Robert Paul Wolff (1973

4. Vivekananda Speaks to You – Sri Ramakrishna Math, Chennai (1977)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (June 24, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 12 (சுருக்கப் பட்டது)

This entry is part [part not set] of 29 in the series 20080619_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

“நெஞ்சிலே தீயை மூட்டிப் பிறருக்கும் ஏற்றி வை ! பணியை மேற்கொள், பணியை மேற்கொள் ! ஊழியனாகப் பணிசெய் ! சுயநலம் பேணாய் ! பிறரைக் குறைகூறும் தோழனுக்குச் செவி சாய்க்காதே ! வெற்றி உனக்குக் கிடைக்கும் வரைப் பொறுமையோடு இரு. யாரையும் அதிகாரம் செய்யாதே. பணியை மேற்கொள், பணியை மேற்கொள் ! பிறரது நலத்துக்கெனப் பணிசெய்வதே மனித வாழ்வு.”

“உடம்பைக் கவனித்துக்கொள்வீர். பொய்களுக்கு இடம் கொடாதீர். சத்தியத்துக்குக் (Truth) கடமைப் பட்டால் மெதுவாக ஆனால் நிச்சயமாக வெற்றி பெறுவோம். ஒவ்வொருவர் தோள் மீதும் முழுப் பொறுப்பு உள்ளதாக எண்ணிக் கொண்டு நீவீர் பணி புரிய வேண்டும் ! கடந்த ஐம்பது நூற்றாண்டுகள் உம்மை நோக்கி இருந்தன. இந்தியாவின் எதிர்காலம் உம்மைச் சார்ந்துள்ளது. பணிபுரிந்தால் உமக்கு ஆசீர்வாதம் கிடைக்கும்.”

“கடந்த காலத்தில் நாம் செய்தவை கீழானவை அல்ல என்று உறுதியாகச் சொல்கிறேன். நமது சமூகம் கேடானதில்லை. நல்ல சமூகம்தான். ஆயினும் இன்னும் மேன்மை அடைய வேண்டும் என்று விழைகிறேன். தவறு செய்வதைத் தவிர்த்துச் சத்திய மார்க்கம் தேடிப் போவதல்ல. தீய முறை விட்டு நல் வழிகள் நாடுவதல்ல. நான் விரும்புவது சத்தியத்திலிருந்து உன்னத சத்தியத்துக்கு உயர்வது, நல்லதிலிருந்து வல்லதிற்கும், வல்லதிலிருந்து உன்னதத்துக்கும் (From Good to Better from Better to the Best) மேம்படுவது ! என் தேச மாந்தருக்கு நான் சொல்வது இதுதான் : இதுவரை நாம் செய்தவை சிறந்தவை. இப்போது வேளை வந்து விட்டது, இந்தியர் உன்னத வினைகள் புரிவதற்கு !”

கர்மயோகி விவேகானந்தா (1863-1902)

“என் அகராதியில் நேர்மை என்பதின் அர்த்தம் வேறு. திருமணம் செய்து கொள்பவரின் “ஐக்கிய வணிகம்” (Trade Unionism) என்பதைத் தவிர நேர்மை என்பதின் பொருள் வேறு என்னவாக இருக்கும் ? “இனப்பெருக்கு உந்துசக்தி” (Life Force) மாந்தர் திருமணத்தை வரவேற்பதின் முக்கிய நோக்கம் என்ன ? இல்லற முறை ஒன்றில்தான் உச்ச எண்ணிக்கை கொண்ட குழந்தைகளை நெருங்கிய பாதுகாப்பில் கண்காணிக்க முடிகிறது. நீ குறிப்பிடும் மானம், மதிப்பு, கற்பு போன்றவை எல்லாம் அங்கே கவனிப்பில் இருப்பதில்லை ! மனித இனத்தின் மிகப்பெரும் அனுமதியைப் பெறும் ஓர் சமூகத் துறைதான் இந்த இல் வாழ்க்கை !”

பெர்னார்ட் ஷா (உன்னத மனிதன் நாடகம்)

உன்னத மனிதரை உருவாக்க . . . .

. . . . எதிர்காலத்துப் பெற்றோராக உம்மை எண்ணிக் கொண்டு, (உன்னத மனிதர் உருவாக) மனிதர் ஒவ்வொருவரும் ஊக்கப்பட்டுப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். செல்வக் கோமகளுக்குப் பதிலாக ஓர் இராணுவப் படையாளியோ அல்லது உயர்நிலை மாந்தருக்குப் பதிலாக ஓர் விறகுக்கடைப் பெண்ணோ புறக்கணிக்கப்படாமல் தடுப்பில்லாத “நேர்மைத் தேர்வுமுறை” கையாளப்பட வேண்டும் ! சமத்துவ நியதி உன்னத மனிதர் சீரிய பெருக்கத்துக்கு (Good Breeding of Supermen) மிகவும் அவசியம். ஆனால் சொத்துரிமை என்பது சமத்துவத்துக்கு முரணான தகுதிப்பாட்டில் பேணப் படுகிறது.

. . . . அதே சமயத்தில் சமத்துவ நோக்கம் சீரழிவுப் பெருக்கத்துக்கும் (Bad Breeding) ஓர் முக்கிய காரணமாக உள்ளது ! மனித இனத்தில் களையெடுத்து வடிக்கட்டச் சமத்துவப் போக்கு தடை செய்யும் வினையாகும் ! கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்திமக் காலத்தில் சந்ததி விதிமுறை (Conception of Heredity) விஞ்ஞானச் சிந்தனைகளை அமுக்கிக் கொண்டிருந்த போது, அதன் சீடர்கள் “பைத்தியகாரன் பைத்தியத்தை மணந்து கொள்வது குற்றம் என்று அறிவித்தார். ஆனால் நாம் நோய் பீடித்த மந்தையைத் திருத்த ஆரோக்கிய மந்தையை அதனுடன் கூட்டிச் சீரழிக்க முயல்கிறோமா என்று சிந்திக்க வேண்டும். இரண்டு ஆரோக்கிய மற்ற ஆண்பெண் மணந்து கொண்டால் அவருக்குப் பிறக்கும் அநேகப் பிள்ளைகள் முதிர்ச்சி அடைவதற்குள் மடிந்து போய்விடும். ஓர் ஆரோக்கிய நபரும் ஆரோக்கிய மற்ற ஒரு நபரும் ஐக்கியமாகி அடையும் துயரை விட முன்கூறிய ஏற்பாடு திருப்பி உண்டாக்கக் கூடியது !

பெர்னார்ட் ஷா (புரட்சிவாதியின் கோட்பாடுகள்)

****************

உன்னத மனிதன்
(பெர்னார்ட் ஷா)

அங்கம் : 3 பாகம் : 12
(சுருக்கப் பட்டது)

நடிகர்கள்:

1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.

2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.

3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – கவர்ச்சி முகத்தான்.. 25 வயது வாலிபன்.

4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)

5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி

6. ஹெக்டர் மலோன் (Hector Malone) –

7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ஹெக்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்

8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்

9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.

10. வயலொட் ராபர்ட்ஸன் (Violet Robertson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)

11 வேலைக்காரி மேரி (Parlormaid)

**************

(அங்கம் : 3 பாகம் : 12)
(சுருக்கப் பட்டது)

கதா பாத்திரங்கள்: காதல் மன்னன் தாஞ் சுவான் (Don Juan), ஒரு வாலிப மாது, ஸ்பானியர் மென்டோஸா, ஜான் டான்னர், சாத்தான் (பெர்னாட் ஷாவின் கற்பனை வில்லன்)
காலம்: காலை வேளை
இடம்: நரகம் (பெர்னாட் ஷாவின் கற்பனைத் தீய உலகம்)

(காட்சி அமைப்பு): காதல் மன்னன் தாஞ் சுவான் நரகத்தில் ஒரு வாலிப மங்கையைச் (ஆனி வொயிட்·பீல்டு) சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறான். புதல்வியைக் காண தந்தை மிஸ்டர் வொயிட்·பீல்டு சொர்க்கத்திலிருந்து வயோதிகராக வருகிறார். சாத்தான் மூவரையும் சந்திக்கிறான்.

இளம்மாது : சமூகத்தில் பெண்ணுக்கு உரிமை வேண்டும் ! ஆனால் விருப்பு வெறுப்புகளில் தனக்குத் தோன்றுவதைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பில்லாத இல்லாத சுதந்திரம் அவளுக்குத் தேவையில்லை ! தேர்தெடுக்க வாய்ப்பில்லாச் சுதந்திரம் (Freedom without A Choice] பாதிச் சுதந்திரம்தான் ! அது முழுச் சுதந்திர மில்லை ! ஆணுக்கும் பெண்ணுக்கும் நேர்மை (Virtue) அவசியம் என்பது எனக்குப் பிடித்தது.

தாஞ் சுவான்: என் அகராதியில் நேர்மை என்பதின் அர்த்தம் வேறு. திருமணம் செய்து கொள்பவரின் “ஐக்கிய வணிகம்” (Trade Unionism) என்பதைத் தவிர நேர்மை என்பதின் பொருள் வேறு என்னவாக இருக்கும் ? “இனப்பெருக்கு உந்துசக்தி” (Life Force) மாந்தர் திருமணத்தை வரவேற்பதின் முக்கிய நோக்கம் என்ன ? இல்லற முறை ஒன்றில்தான் உச்ச எண்ணிக்கை கொண்ட குழந்தைகளை நெருங்கிய பாதுகாப்பில் கண்காணிக்க முடிகிறது. நீ குறிப்பிடும் மானம், மதிப்பு, கற்பு போன்றவை எல்லாம் அங்கே கவனிப்பில் இருப்பதில்லை ! மனித இனத்தின் மிகப்பெரும் அனுமதியைப் பெறும் ஓர் சமூகத் துறைதான் இந்த இல் வாழ்க்கை !

இளம்மாது: பெண்ணுக்குப் பாதுகாப்பு அளிக்கும் ஓர் உன்னத சமூகத் துறை இல்லம் என்று நான் சொல்வேன். பிறக்கும் பிள்ளைகளுக்குக் கண்காணிப்பு அளிப்பதும் இல்வாழ்வுதான்.

தாஞ் சுவான்: ஆடவனைக் கட்டிப் போடும் ஓர் சிறையாக நான் இல்லத்தைக் கருதுகிறேன். சிறைக்குள் இருந்த பெண்ணுக்கு இல்லத்தில் சுதந்திரம் கிடைக்கிறது. ஆணுக்குச் சுதந்திரம் பறிபோகிறது ! ஒரு கணவனைத் தேடிப் பிடிக்கும் மாதைப் போல் பழி பாவத்துக்கு அஞ்சாத மனிதப் பிராணி வேறு எதுவும் இருக்கக் கூடுமா ? மண வாழ்க்கையுடன் ஒழுக்க நெறியைக் குழப்பிக் கொள்வது மனித உள்ளுணர்வை அழிப்பதற்குச் சமமாகும் ! பார் இளம்மாதே ! ஏனிப்படி முகம் சுழிக்கிறாய் ? உனக்குத் தெரியும் நன்றாகவே ! திருமணம் என்பது ஆடவனைப் பிடித்துப் போடும் வலைப்பொறி (Man-Trap) ! அதற்குத் தூண்டில் புழுவாக வைக்கப்படுபவை : விலை மதிப்புச் சாதனங்கள் ! மயக்கும் மனக்கனவு நோக்குகள் (Delusive Idealizations) !

இளம்மாது: பெண்ணின் வனப்பல்லவா ஆணைப் பற்றும் வலைப்பொறி ? அவளது மேனிக் கவர்ச்சி அல்லவா ஆடவனைக் கட்டி இழுக்குகிறது ?

தாஞ் சுவான்: இல்லை இல்லை ! சிலந்தி வலை பின்னுவது எதற்காக ? வலை நூலில் பசையைத் தடவி வைப்பது எதற்காக ? புனித மாதான உன் தாய் உனக்கு ஒப்பனை செய்து புகட்டி யிருப்பது என்ன ? நீ ஒரு அழகு தேவதை ! நீ ஒருத்தனைக் கட்டி ஆள வேண்டும். உன் கணவன் உண்ட பிறகு கண்துஞ்ச இசைபாடும் ஒரு தேவதையாக நீ ஆட வேண்டும் என்பது அவள் கண்ட கனவு ! அதை நிறைவேற்றி வைக்கிறாய் நீ !

இளம்மாது: தாஞ் சுவான் ! நீ ஒரு முட்டாள் ! காலை எழுந்தவுடன் கனிவுப் பாட்டு ! பகல் முழுவதும் எதிர்பார்ப்பு ! இரவு பூராவும் கணவனுக்கு இன்னிசை வெள்ளம் ! எந்த மனைவியும் இவ்விதம் வீட்டில் இருப்பதில்லை ! பூமியில் இத்தகையச் சொர்க்கம் கிடையாது ! கணவனுக்குத் தாலாட்டுப் பாட்டு பாடுவதைத் தவிர மாதருக்கு வேறு வேலைகள்ளில்லையா ? இப்படி எதிர்பார்க்கும் கணவன் இல்வாழ்வில் பெருத்த ஏமாற்றம் அடைவான் ! பெண்ணுக்குக் குறிக்கோள் உண்டு ! தனித்துவம் உண்டு ! கொள்கை உண்டு ! கோபம் உண்டு ! விருப்புண்டு ! வெறுப்புண்டு ! சுயத்தனம் மிக்க கணவன் அவற்றை எழவிடாமல் அமுக்கி வைக்கிறான் !

தாஞ் சுவான்: எல்லாம் எனக்குத் தெரியும் ! இன்னிசை மீது பெண்ணுக்கு இச்சை இருந்தால் நான் சொன்னபடி நடக்கும். பறவையைக் கூண்டில் அடைத்த பிறகு பெண் தூண்டிலை விட்டெறிகிறாள் !

இளம்மாது: (வெறுப்புடன்) ஆமாம் ! ஆடவர் தமது பறவையைக் கூண்டில் அடைத்த பிறகு அவரது முகமூடியை எப்போதும் நீக்குவதுண்டா ? கணவன் வீட்டில் சுயநல மிருகமாய்த் திரிவதில்லையா ? மூர்க்கத்தனமாய் மனைவியிடம் நடந்து கொள்வதில்லையா ? மனைவி வீட்டில் இருப்பதைக் கண்டுகொள்ளாமல் கணவன் கண்மூடிப் புறக்கணிப்ப தில்லையா ?

தாஞ் சுவான்: குற்றவாளி எதிர்த்துக் கூறும் இவையெல்லாம் எதை நிரூபிக்கின்றன ? கதா நாயக னும் கதா நாயகியைப் போல நடிக்கிறான் என்று சொல்கிறாய் !

இளம் மாது: இந்தத் தர்க்கத்தில் எந்த அர்த்தமும் இல்லை ! பெரும்பான்மையான திருமண வாழ்க்கைகள் பூரண சுகநலம் கொண்டதாகவே காணப்படுகின்றன. ஆனால் நான் சொன்னவை யெல்லாம் விதி விலக்கல்ல ! விதி விலக்காய் இருக்க வேண்டியவை விதி முதன்மையாய் இருக்கின்றன !

தாஞ் சுவான்: பூரணம் என்பது பொருத்த மற்ற சொல் ! குறையுடைய மனிதர் இல்வாழ்வில் கூடும் போது எப்படிப் பூரண நிலை அடைவார் ? நீ சொல்ல வந்தது என்ன ? அறிவுள்ள இருவர் ஒருவர் மூலமாக ஒருவர் ஆக்க உயர்வைப் பெற்று உன்னத நிலை அடைய முடியும் என்பதுதான். இல்வாழ்வின் உன்னதத்தைப் பற்றியும், இல்லப் பிணைப்பு உறுதி பற்றியும் பேசுவோர்தான், சங்கிலி அறுபட்டுக் கைதிக்கு உரிமை அளித்தால், சமூகப் பின்னலே சிதைந்து போகும் என்று அலறுபவர் ! இருபுறத்திலும் பேசிக் கொண்டு தர்க்கம் புரிவது தவறு ! கைதி பூரிப்படைந்தால் சிறையில் ஏன் அவனைப் பூட்ட வேண்டும் ? அப்படியில்லா விட்டால் அவன் பூரிப்பதாக ஏன் நடிக்க வேண்டும் ?

இளம்மாது: நானொரு மூதாட்டி போல் சொல்கிறேன். மணவாழ்க்கைகள் உலகத்தின் இனத்தொகையைப் பெருக்குகின்றன ! உடலின்ப இச்சைகள் அப்படிச் செய்ய முடியா ! இனப்பெருக்கு உந்துசக்தி என்று கதைக்கும் நீவீர் இல்லத்தின் மூலம்தான் அதை இயங்க வைக்க முடியும் என்று தெரியாமல் பேசுகிறீர் !

(தொடரும்)

***************************

தகவல்

Based on The Play

“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)

1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)

2. The Teachings of Reverence for Life By : Albert Schweitzer (1965)

3. The Religious Significance of Art By : Leo Tolstoy, Book on Philosophy -A Modern Encounter (Basic Edition) By : Robert Paul Wolff (1973

4. Vivekananda Speaks to You – Sri Ramakrishna Math, Chennai (1977)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (June 17, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 11 (சுருக்கப் பட்டது)

This entry is part [part not set] of 39 in the series 20080612_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

“பிறருக்கு உரிமை அளிக்கத் தயாராக இல்லாதவர் எவரும் சுதந்திரம் அடையத் தகுதி பெறாதவர். நமது சக்தியை வீணான வாய்ப்பேச்சிலும் குறை காணுவதிலும் விரையமாக்காது, நாமெல்லாம் அமைதியாக ஆண்மையுடன் பணிபுரியச் செல்வோம். பிரபஞ்சத்தில் எந்த ஆற்றலும் தானடையத் தகுதியுள்ள யார் ஒருவரையும் அதிலிருந்து தடுத்து நிறுத்த முடியாதென நான் உறுதியாக நம்புகிறேன். நமது கடந்த காலம் உன்னதமாக இருந்தாலும், நான் வரப்போகும் ஒளிமயமான எதிர்காலத்தைத்தான் உண்மையாக நம்புகிறேன் ! இறைவன் நம்மைத் தூயவராகவும், பொறுமை உள்ளவராகவும், விடாமுயற்சி கொண்டவராகவும் ஆக்குவாராக.

தொன்னூறு சதவீத மூர்க்க மனிதர் மாண்டு போகிறார் ! மனித நேயம் கொண்டவரைத் தவிர வேறெவரும் நீண்ட காலம் வாழ்ந்திலர். எனது அருமைச் சிறுவர்களே ! எளியவர் மீது பரிவு காட்டுவீர் ! அறியாமையில் இருப்போர் மீது இரக்கம் காட்டுவீர் ! காலடியில் மிதிக்கப்படுவோர் மீது கனிவு கொள்வீர் ! . . . அஞ்சாதீர் ! செல்வச் சேமிப்பு உமக்கு மதிப்பு அளிக்காது ! பேரும், புகழும், பெருங் கல்விப் பட்டமும் உமக்கு மதிப்பு அளிக்காது. மாந்தர் மீது நீ கொள்ளும் அன்பே மதிப்பு அளிக்க வல்லது. உமது நேர்மைப் பண்பாடுதான் துன்பதைக் கடந்து செல்ல வழி காட்டுவது.

கர்மயோகி விவேகானந்தா (1863-1902)

சொத்தும் இல்லற வாழ்க்கையும் :

. . . . புரட்சிவாதிகள் அவற்றைப் பற்றி (சொத்தையும், இல்லறத்தையும்) மிகவும் பீற்றிக் கொள்வார் ! சமூகம் சொத்தை அழிக்காவிடில் சொத்துப் பிரச்சனை சமூகத்தை அழித்துவிடும் என்பதை எடுத்துக் காட்டுவது எளிது ! மேலும் பேரரசுகள் அனைத்தையும் சொத்துப் பிரச்சனைகளே சிதைத்துள்ளன என்பதிலும் ஐயமிருப்பதில்லை. . . . .

. . . . ஓர் உன்னத மனிதன் உருவாக வேண்டுமானால், ஆண் ஒருவன் விருப்பத்தாலும் மனத் தேர்வாலும் சேர்ந்து ஒரு பெண்ணுக்குத்தான் பிறக்க வேண்டும். . . . இல்லற ஒப்பந்த மோதிர அடிமைகள் படும் துன்பங்களைக் கண்டு பொதுநபரால் அவர் இருவரும் எள்ளி நகையாடப் படுவர் ! மனித இனத்தின் முக்கியக் குறிக்கோள் உன்னத மனிதர் உருவாக்கம் என்பது பூரணமாக உணரப்படும் போது அந்தக் கேலி நகைப்புகள் புறக்கணிக்கப்படும்.

. . . . ஆடுகளை இரைச்சிக்காகக் கொழுக்க வைப்பது, நாய்களுக்கு ஓட்டப் பந்தயப் பயிற்சி கொடுப்பது, சேவல்களைக் கோழிச் சண்டைக்கு வளர்ப்பது போல், மனிதரைச் சிறப்புப் பண்பாட்டுக்காகச் செம்மைப் படுத்துவது வீணான முயற்சி என்று எண்ணப் படலாம். மனிதருள்ளே இருக்கும் முக்கிய மெய்ப்பாடு நமக்குப் புலப்படாத ஒன்றாகவும், அவனுடைய உடம்பு பாகத்தைச் சேர்ந்ததாயும் உள்ளது ! நமது இருதயப் பம்பு (Heart Pump) உடம்பில் இரத்த ஓட்டம் இயக்கி வருவதை நாம் பெரும்பாலும் உணராமல் இருக்கிறோம். அந்த ஓட்டத்தைப் புறக்கணித்தால் நாம் இறந்து போய் விடுவோம். உன்னத மனிதனை உருவாக்கும் பெற்றோர், அவனை இனப்பெருக்கம் செய்யும் பயிற்சியாளர் (Breeders) இருவருக்குமே “மெய்யுணர்வில்லா சுயப்பண்பு உயர்ச்சி” (Superiority in the unconscious Self) வழி காட்ட வேண்டும்.”

பெர்னார்ட் ஷா (புரட்சிவாதியின் கோட்பாடுகள்)

****************

உன்னத மனிதன்
(பெர்னார்ட் ஷா)

அங்கம் : 3 பாகம் : 11
(சுருக்கப் பட்டது)

நடிகர்கள்:

1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.

2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.

3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – கவர்ச்சி முகத்தான்.. 25 வயது வாலிபன்.

4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)

5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி

6. ஹெக்டர் மலோன் (Hector Malone) –

7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ஹெக்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்

8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்

9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.

10. வயலொட் ராபர்ட்ஸன் (Violet Robertson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)

11 வேலைக்காரி மேரி (Parlormaid)

**************

(அங்கம் : 3 பாகம் : 11)
(சுருக்கப் பட்டது)

கதா பாத்திரங்கள்: காதல் மன்னன் தாஞ் சுவான் (Don Juan), ஒரு வாலிப மாது, ஸ்பானியர் மென்டோஸா, ஜான் டான்னர், சாத்தான் (பெர்னாட் ஷாவின் கற்பனை வில்லன்)
காலம்: காலை வேளை
இடம்: நரகம் (பெர்னாட் ஷாவின் கற்பனைத் தீய உலகம்)

(காட்சி அமைப்பு): காதல் மன்னன் தாஞ் சுவான் நரகத்தில் ஒரு வாலிப மங்கையைச் (ஆனி வொயிட்·பீல்டு) சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறான். புதல்வியைக் காண தந்தை மிஸ்டர் வொயிட்·பீல்டு சொர்க்கத்திலிருந்து வயோதிகராக வருகிறார். சாத்தான் மூவரையும் சந்திக்கிறான்.

இளமாது: மிஸ்டர் தாஞ் சுவான் ! பெண்ணை வழிபட்டு விரட்டிச் செல்லும் நீவீர் என்னைக் கண்டதும் ஏன் ஓடினீர் ?

தாஞ் சுவான்: உன் கவர்ச்சியில் சிக்கிக் கொண்டு தவிக்கக் கூடாதே என்றுதான் ! உன்னை விட்டு நான் ஓடினாலும் நீ என் கண்ணை விட்டு மறையவில்லை ! ஆனாலும் உன்னைக் கண்டால் கால்கள் ஏனோ தாமாகவே ஓட்டம் பிடிக்கின்றன !

இளமாது: தெளிவோடுதான் பேசுகிறீரா ? உம்மை ஓட விடாமல் நான்தான் கயிற்றில் கட்டிப் போட்டிருக்கிறேன் ! மற்றவரிடம் நீவீர் குழைவது போல் என்னுடன் நடமாடுவது சற்று கடினம் தான் ! ஆடவர் இல்லப் பொறுப்புகளைப் புறக்கணித்துச் சென்றால், அவரை இழுத்து வந்து தோள்மீது அவற்றை ஏற்ற வேண்டும் ! நீவீர் இசைத் தேவதைகளை மணந்து கொள்ள விழைகிறீர் ! உன்னத ஓவியக்கலை, காவியக் கவிதையை உரிமை கொள்ள விரும்புகிறீர் ! அவை உமக்குக் கிடைக்கா ! ஏனெனில் அப்படி எதுவும் உண்மையாக இல்லை ! உமக்கு உடலும் உதிரமும் போதா என்றால் அவை இல்லாமலே நீவீர் தனித்து வாழ வேண்டும் ! அவ்வளவுதான் ! மாதர் யாவரும் இல்லறத்தில் உடலும் உதிரமும் உள்ள கணவருடன் வாழத்தான் வேண்டும். சில சமயங்களில் அவை சிறுத்தும் போகலாம். உடலும், உதிரமும் உள்ள மனைவிகளுடன் வாழக் கணவருக்குச் சகிப்புத் தன்மை வேண்டும் ! நான் சொல்வது உங்கள் யாருக்கும் பிடிக்காது.

தாஞ் சுவான்: என் அருமை மாதே ! எனது கோட்பாடுகளை காதல் மோகத்துக்கு (Romance) எதிராகச் சொல்லி விட்டாய். அதனால்தான் நான் காதல் மயவாதியை விலக்கி விட்டு கலைத்துவ வாதியை நாடினேன். என் கண் நோக்கையும் செவிக் கூர்மையும் செம்மைப் படுத்தியவன் கலைஞனே ! ஆனால் அவனது அழகு வழிபாடு, இன்ப வேட்டை, பெண் உயர்வெண்ணம் (Woman Idealizing) அனைத்தும் வாழ்க்கை சித்தாந்தம் போல் பாராட்டத் தகுந்தவை அல்ல. அதைக் கேட்ட காதல் மோகி என்னை வாழத் தகுதி இல்லாதவன் (Philistine) என்று முத்திரை குத்திப் போய் விட்டான்.

இளமாது: குறைகள் இருந்தாலும் மாதர் கூட உமக்குச் சிறிது அறிவு புகட்டியிருக்கிறார் என்பது என் கருத்து.

தாஞ் சுவான்: சிறிது அறிவா ? இல்லை இல்லை ! நிரம்பப் புகட்டியுள்ளார் பெண்டிர். மற்றவர் கூறியதை எனக்குத் தெளிவாக விளக்கியவர் பெண்களே. . . . அந்தக் கணம்வரை நான்தான் பீடத்தின் கோமான் என்பதை மறக்கவில்லை ! சிந்தனை ஏனென்று காட்டி எனக்கு அங்கீரம் அளிக்காமல் நான் எந்த முன்னடியும் வைக்கவில்லை ! நானொருக் காரணிப் பிராணி ! ஓர் உன்னத சிந்தனைவாதி ! ஒரு மூட வேதாந்தியிடம் சொன்னேன் : “நான் சிந்திப்பவன். அதனால் நான் நானாக இருக்கிறேன்,” என்று. ஆனால் ஒரு மாதுதான் இப்படி என்னைத் திசை திருப்பியவள் : “நான் நானாக இருப்பதால் நான் சிந்தனைவாதியாக இருக்கிறேன்.”

முதியவர்: இது வரட்டு வேதாந்தம் ! மேல்நிலைச் சித்தாந்தம் (Metaphysics) ! நீவீர் பீடத்தை விட்டுக் கீழே இறங்கி வந்து தரைமீது நின்று உமது வீர தீரப் பெண் வேட்கைப் கதைகளைப் பேசினால், சற்று கேட்கலாம்.

தாஞ் சுவான்: உமக்குத் தெரியுமா இது ? பெண்ணின் முகத்தை நேருக்கு நேராக நோக்கி நின்றால் எனது மூளையின் ஒவ்வோர் நரம்பும் சொல்லும் : “பெண்ணை விலக்கி உன்னைக் காத்திடு.” எனது நெறிப்பாடு வெறுக்கும் : “பெண்ணா ? வேண்டாம்.” எனது உள்ளுணர்வு சொல்லும் : “மாதா ? வேதனை.” பெண்டிர் மீது எனக்குண்டு பரிவு ! அனுதாபம் ! பரிதாபம் ! பெண்ணிட மிருந்து பிழைத்துக் கொள்ள நானொரு வழி கண்டுபிடித்து வரும் போது, விதி என்னைப் பெண்ணொருத்தி அணைப்பிலே தள்ளியது, கடற்பறவை வாயில் ஒரு மீனைத் தூக்கி வீசியதைப் போல !

இளமாது: (கடகடவெனச் சிரித்து) மிஸ்டர் தாஞ் சுவான் ! வேடிக்கையாகப் பேசுகிறீர் ! கடற்பறவை யார் ? மீன் என்பது யார் ? பெண்ணை ஆணாதிக்கம் ஆட்டிப் படைத்தாலும், ஆண்வர்க்கம் எல்லாம் பெண்ணின் கவர்ச்சிக்கு அடிமைதான் ! அதை உமது கூற்று நன்றாகவே முரசடிக்கிறது !

சாத்தான்: மாதரால் உமக்கு என்ன இழப்பு ஏற்பட்டது ? என்ன இழந்தாலும் பெண்ணோடு வாழ்ந்த வாழ்வு உமக்குப் பூரணத்தையும் பூரிப்பையும் அளிக்க வில்லையா ?

தாஞ் சுவான்: பூரித்தது உண்மை, ஆனால் ஞானத்தோடு இல்லை ! அந்தக் கணம் என்னை நானாக்கியது ! பெண்மை புகுந்து என்னை ஆணாக்கியது ! இனவிருத்திச் சக்தி (Life Force) எத்தகைய வலுக் கொண்டது என்பதை உணர்ந்தேன் ! எத்தகைய எதிர்ப்பும் அதற்கு முன் வலுவற்றுப் போவதை உணர்ந்தேன் ! கவனக் கண்காணிப்பு, கவனத் தேர்ந்தெடுப்பு, நேர்மை, மனித மதிப்பு, கற்பு
ஆகியவற்றை உரைப்பது எத்தகைய உன்னதமானது என்பது விளங்கியது !

இளமாது: கற்பை எதிர்த்துப் பேசும் எந்தக் கடுமை வாசகமும் என்னை இழிவு படுத்துவதாகும்.

தாஞ் சுவான்: மாதே ! நான் கற்பை எதிர்த்துப் பேச வில்லை. பத்துப் பிள்ளைகள் பெற்று ஒரு கணவனுக்கு மனைவியாய் வாழ்ந்து புறக்கணிக்கப் பட்டால் நீ என்ன செய்திருப்பாய் ?

இளமாது: என்ன செய்திருப்பேன் நான் ? பத்துக் கணவரை மணந்து பிள்ளையே இல்லாமல் இருந்திருப்பேன் ! அப்படித்தான் பூமியில் இனவிருத்தி இடத்தை நான் பூர்த்தி செய்திருப்பேன் ! பெண்டிர் இனவிருத்திக்கு மட்டும் பிறந்தவர் அல்லர் !

முதியவர்: மெச்சுகிறேன் மேடம் ! சரியான பதில் ! தாஞ் சுவானை அப்படித்தான் தாக்கிப் பேச வேண்டும் ! தாஞ் சுவானின் இனவிருத்திக் கோட்பாடுக்கு நல்ல உதை கொடுத்தாய் நீ !

தாஞ் சுவான்: அதில் எனக்கு வேறுபாடு உண்டு. காதலோ, கற்போ அல்லது இல்லற நிலைப்போ
பற்றி நான் பேச வரவில்லை. நீ பத்துக் கணவருடன் வாழ்ந்து பத்துக் குழந்தைகள் பெற்று இந்தப் பூமியை நிரப்பினால் நானதைப் பெரும் பயனாக வரவேற்பேன். மாதருக்கு உரிமை கொடுத்தால் இரண்டு முறை என்ன, மூன்று முறை கூட மணந்து கொள்ளத் தயங்கா திருப்பார் ! அவ்விதம் மூன்று முறைச் செய்த திருமணங்களில் பனிரெண்டு பிள்ளைகள் பெற்றால் இந்தச் சமூகம் கண்டிக்காமல் அவரை ஏற்றுக் கொள்ளும் ! சட்ட முரணாய்ப் பிறந்த கள்ளப் பிள்ளைக்கு இல்லாத பொதுமக்கள் வரவேற்பு, மூன்று திருமணங்களில் பனிரெண்டு பிள்ளைகள் பெற்ற தாயிக்குக் கிடைக்கும் ! அதில் ஐயமில்லை !

(தொடரும்)

***************************

தகவல்

Based on The Play

“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)

1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)

2. The Teachings of Reverence for Life By : Albert Schweitzer (1965)

3. The Religious Significance of Art By : Leo Tolstoy, Book on Philosophy -A Modern Encounter (Basic Edition) By : Robert Paul Wolff (1973

4. Vivekananda Speaks to You – Sri Ramakrishna Math, Chennai (1977)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (June 10, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 10 (சுருக்கப் பட்டது)

This entry is part [part not set] of 39 in the series 20080605_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

“எல்லோரும் போவீர் ! எங்கெல்லாம் பஞ்சம் பரவுகிறதோ, கடும் தொத்துநோய் தாக்குகிறதோ, எங்கெல்லாம் குடிமக்கள் துயர்ப்படுகிறாரோ அங்கு செல்வீர் அவரது துன்பத்தைக் குறைப்பதற்கு ! அந்தப் பணியில் ஒரு வேளை உமது உயிருக்கே ஆபத்து நேரலாம் ! அதனால் என்ன ? உங்களைப் போன்று எத்தனை பேர் மண் புழுவைப் போல் பிறப்பதையும், மடிவதையும் ஒவ்வொரு நாளும் ஏற்றுக் கொள்கிறீர் ? உலகளாவிய முறையில் என்ன வேறுபாட்டை அது உண்டாக்கும் ? உயிரைக் கொடுக்க உமக்கு உன்னத பணிகள் அநேகம் வாழ்க்கையில் உள்ளன. நமது தேசத்தின் எதிர்கால நன்னம்பிக்கை உங்கள் கைவசம் உள்ளது. நீவீர் பங்கேற்காது ஒதுங்கி இருப்பது கண்டு நான் பெரு வேதனைப் படுகிறேன். ஆகவே பணிசெய்யப் புறப்படுவீர் ! ஆமாம் பணி புரிவதற்கு ! கால தாமதம் செய்யாதீர் ! மரண வேளை நாளுக்கு நாள் நெருங்கி வருகிறது ! எல்லாம் பின்னால் செய்யலாம் என்று எண்ணிக் கொண்டு சோம்பிச் சும்மா உட்கார்ந்து இருக்காதீர் ! ஒன்றும் முயலாமல் எதுவும் சாதிக்க முடியாது, கவனம் வைப்பீர். ஆயுள் சிறியது ! உலகப் பகட்டுகள் நிலையற்றவை ! ஆனால் பிறர்க்கென வாழ்பவர் மட்டுமே நீடித்து வாழ்வார்; மற்றவர் உயிரோடு இருப்பினும் செத்தவருக்கு ஒப்பானவரே !

கர்மயோகி விவேகானந்தா (1863-1902)

“கலைஞன் பொதுவாகப் பார்த்தால் ஒரு காதல் மோகியே ! காதல் கனவுகளில் மூழ்கிப் பெண்ணை வழிபடுபவன் ! என் மதிக்கும், விதிக்கும் ஒருவகையில் ஏற்றவன் ! அவன் பையில் காதல் பாக்கள் ஒளிந்திருக்கும் ! இல்லச் சுவர்களில் அவரின் கண்கவர் ஓவியங்கள் கதை சொல்லும் ! பல்லாண்டுகள் என் இதயத்துக்குக் கலை விருந்தளித்தவன் கலைஞன். அவருடன் பழகிய நான் பூரிப்பில் திளைத்தேன். அந்த கூட்டுறவால் எனக்கு ஏராளமான நற்பலன்கள் விளைந்தன. அந்த நாட்கள் மறக்க முடியாதவை. பெற்ற நற்பலன்கள் பல. எனது ஐம்புலங்களின் உணர்ச்சிகள் கூர்மை ஆயின ! அவனது இனிய பாக்கள் என் நெஞ்சக் கனிகள் ஆயின ! செவிகள் செம்மையாயின ! ஓவியச் சிற்பங்கள் என் கண்களைக் கூர்மையாக்கின ! அவனது பாக்கள் பெண்களைத் தேவதைகளாய்க் காட்டின ! என்னையும் இப்போது பெண்ணை வழிபடும் பித்தனாய் ஆக்கிட்டான் கலைஞன்.”

பெர்னார்ட் ஷா (உன்னத மனிதன் நாடகம்)

. . . . பிட்டுவின் தரம் அதன் சுவையில் உள்ளது என்று சொல்கிறார். அவர் கூறுவது உண்மை. உன்னத மனிதன் இருந்ததற்கு நிரூபணம் அவன் வாழ்ந்த வாழ்வு மூலம்தான் நாம் சொல்ல முடியும். பழக்கமான பயிற்சி-பழுது முறை (Trial & Error) மூலமாக உன்னத மனிதனை எவ்விதம் உருவாக்குவது என்று நாம் அறிய வேண்டும். மாமனிதனை வடிவாக்கும் உபரிச் சாதனங்களை வைத்து உற்பத்தி செய்ய நாம் காத்திருக்கப் போவதில்லை !

. . . . நாம் பொதுவாக அனுமானித்து வெளிப்படையாகத் தெரியும் சில தவறுகளை ஆரம்பத்திலே விலக்கி விடுவோம். உதாரணமாக உன்னத மனிதனுக்கு உயர்ந்த உள்ளம் தேவை என்பதை ஒப்புக் கொள்வோம். அதே சமயத்தில் உன்னத உடம்பு தேவை என்னும் கால் பந்தாட்ட குழுவினரின் மூடக் கணிப்பை நிராகரிப்போம் ! உயர்ந்த உள்ளம் என்பதை ஒழுக்கவியல் பிரிப்புகளான “நேர்மை, தீயொழுக்கம்” (Virtue & Vice) என்ற வகுப்பில் “சம்பிரதாய நெறிப்பாடாக” (Conventional Morality) நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது ! நாம் தெளிவாகப் பந்தய உடற்பாடு தீரர்களுக்கும் (Race of Athletes) நல்ல மனிதர் இனத்துக்கும் (Race of Good Men) இடையே ஓரினத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் ஸாம்ஸனை (Biblical Hero Samson) பந்தய உடற்பாடு வலுவனாய் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் ஸாம்ஸன் உன்னத மனிதன் நிலையை அடைய மாட்டான் !

பெர்னார்ட் ஷா (புரட்சிவாதியின் கோட்பாடுகள்)

****************

உன்னத மனிதன்
(பெர்னார்ட் ஷா)

அங்கம் : 3 பாகம் : 10
(சுருக்கப் பட்டது)

நடிகர்கள்:

1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.

2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.

3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – கவர்ச்சி முகத்தான்.. 25 வயது வாலிபன்.

4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)

5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி

6. ஹெக்டர் மலோன் (Hector Malone) –

7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ஹெக்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்

8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்

9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.

10. வயலொட் ராபர்ட்ஸன் (Violet Robertson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)

11 வேலைக்காரி மேரி (Parlormaid)

**************

(அங்கம் : 3 பாகம் : 10)
(சுருக்கப் பட்டது)

கதா பாத்திரங்கள்: காதல் மன்னன் தாஞ் சுவான் (Don Juan), ஒரு வாலிப மாது, ஸ்பானியர் மென்டோஸா, ஜான் டான்னர், சாத்தான் (பெர்னாட் ஷாவின் கற்பனை வில்லன்)
காலம்: காலை வேளை
இடம்: நரகம் (பெர்னாட் ஷாவின் கற்பனைத் தீய உலகம்)

(காட்சி அமைப்பு): காதல் மன்னன் தாஞ் சுவான் நரகத்தில் ஒரு வாலிப மங்கையைச் (ஆனி வொயிட்·பீல்டு) சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறான். புதல்வியைக் காண தந்தை மிஸ்டர் வொயிட்·பீல்டு சொர்க்கத்திலிருந்து வயோதிகராக வருகிறார். சாத்தான் மூவரையும் சந்திக்கிறான்.

தாஞ் சுவான்: கூரிய ஞானத்தை (Intellect) வரவேற்பவர் மிகச் சிலரே ! பொதுநபர் ஞானத்தைப் புறக்கணிப்பர். வாழ்க்கையில் மனிதர் முற்போக்கு அடைவதற்கு ஞான சிந்தனை முக்கியமாகிறது. அந்த ஞானவளம் இல்லாவிட்டால் மனித இனம் மடிந்து போவதற்குத் தவறிழைக்கிறது. ஞான சிந்தனையே மனித இனம் மண்ணில் தோன்றியதின் காரணத்தை அறிய வழி காட்டுகிறது. மனிதன் மாமனிதனாக மாற அந்த ஞான ஒளி தேவை.

சாத்தான்: ஞான ஒளியிருந்தாலும் பிறந்த அத்தனை மனிதரும் உன்னத மனிதராக ஆக முடியுமா ? எத்தனை பேர் ஞான ஒளிபட்டு மாமனிதராய் மாறுவார் என்று சொல்வீர் ?

தாஞ் சுவான்: பிறக்கும் போதே உன்னத மனிதன் பிறப்பதில்லை ! உன்னத மனிதன் உண்டாக்கப் படுகிறான் ! அவன் தானாக மேம்பட்டு அந்த நிலையை அடைய வேண்டும் ! அவரைத் தனியாக உற்பத்தி செய்யச் சமூகம் தக்க பக்குவச் சூழ்நிலையை உருவாக்க வேண்டும் ! நான் முன்பு கூறியபடி அத்தகைய மனிதனுக்குப் புறக்கண்ணுடன் அகக்கண்ணும் திறக்க வேண்டும்.

முதியவர்: கலைஞனைப் பற்றி உமது கருத்தென்ன ? கலைஞன் உன்னத மனிதனாக முடியுமா ?

தாஞ் சுவான்: கலைஞன் பொதுவாகப் பார்த்தால் ஒரு காதல் மோகியே ! காதல் கனவுகளில் மூழ்கிப் பெண்ணை வழிபடுபவன் ! என் மதிக்கும், விதிக்கும் ஒருவகையில் ஏற்றவன் ! அவன் பையில் காதல் பாக்கள் ஒளிந்திருக்கும் ! இல்லச் சுவர்களில் அவரின் கண்கவர் ஓவியங்கள் கதை சொல்லும் ! பல்லாண்டுகள் என் இதயத்துக்குக் கலை விருந்தளித்தவன் கலைஞன். அவருடன் பழகிய நான் பூரிப்பில் திளைத்தேன். அந்த கூட்டுறவால் எனக்கு ஏராளமான நற்பலன்கள் விளைந்தன. அந்த நாட்கள் மறக்க முடியாதவை. பெற்ற நற்பலன்கள் பல. எனது ஐம்புலங்களின் உணர்ச்சிகள் கூர்மை ஆயின ! அவனது இனிய பாக்கள் என் நெஞ்சக் கனிகள் ஆயின ! செவிகள் செம்மை யாயின ! ஓவியச் சிற்பங்கள் என் கண்களைக் கூர்மையாக்கின ! அவனது பாக்கள் பெண்களைத் தேவதைகளாய்க் காட்டின ! என்னையும் இப்போது பெண்ணை வழிபடும் பித்தனாய் ஆக்கிட்டான் கலைஞன் !

இளமாது: தாஞ் சுவான் ! ஆணை வழிபடும் பெண்டிரும் ஏன் ஆடவரும் இருக்கும் போது நீவீர் பெண்ணை வழிபடுவதாக ஏளனம் செய்வது ஆணையா இல்லை பெண்ணையா ?

தாஞ் சுவான்: இரக்கப்படுவது என்மீதுதான் ! பெண்ணுக்கு இரையாகி விட்ட அடுத்தோர் ஆண் பிறவி நான் ! ஆணாதிக்கம் வீட்டுக்கு வெளியே ! பெண்ணாதிக்கம் வீட்டுக் குள்ளே ! ஒரு பெண் இசைக்குரல் இனிமைக்கு நான் அடிமை ! அவளது மேனி அழகு ஓர் ஓவிய வடிப்பு ! அவளது ஆத்மாவுக்குள்ளே இனிய கவிதைகள் அடக்கம் !

இளமாது: இனிய குரல், மேனி எழில், கவிதை ஆத்மா இல்லாத பெண்கள் எல்லாம் எங்கே போவார் ? அந்தப் பெண்ணுக் கெல்லாம் உமது இதயத்தில் இடமில்லையா ? அல்லது அவள் மண்ணிலே பிறந்தது தப்பா ?

தாஞ் சுவான்: அப்படிச் சொல்லவில்லை நான் ! கலைஞர் என் கல்நெஞ்சைக் கனிய வைத்து விட்டார் என்றவரைச் சாடுகிறேன். பெண் ஊமையாக இருந்தாள், நானவளைப் போற்றிப் புகழ்ந்த போது என்னை அனுமதித்து ! அவள் தந்திரக்காரியாய் இருந்தாள், அவள் மீதிருந்த எனது உணர்ச்சிகள், எண்ணங்கள், கனவுக் காட்சிகள் யாவும் தவறாகப் போய்விடக் கூடா தென்று ! இப்போது என் கலை நண்பன் வறியவன் ! அழகிய பெண்ணைக் கண்டால், நாகரீகப் பெண்ணைப் பார்த்தால் கூச்சப் படுபவன், வெட்கப்பட்டு ஒதுங்குபவன் ! அவன் தன் கற்பனைக் கனவுகளை நம்பிக் கொண்டு கல்லறையில் அடக்கமாகி விட்டான் !

முதியவர்: பெண்ணைக் கண்டால் நீவீர் ஒதுங்குவதைப் பார்க்கிறேன் ! அது எதனால் ? நீவீர் கலைஞனின் நண்பன் அல்லவா !

தாஞ் சுவான்: இல்லை ! உமது கேள்விக்கு எனது விளக்கம் இது. ஒரு பெண்ணின் கற்பனைத் திறம் என் இதயத்தைத் தொட்டால் அவள் என்னைக் காதலிக்கிறாள் என்றென் மனதில் தூண்டி விடுகிறாள். நானவளை ஏற்றுக் கொண்டதும் தான் பூரிப்படைவதாக ஏனோ சொல்வதில்லை ! தன் காதல் பூரணமானது என்றும் கூறுவதில்லை ! என் குழப்பத்தைத் தூண்டி விடுவதில் அவள் பெருமைப்பட்டுக் கொள்கிறாள் !

இளமாது: ஆத்திரம் அடைபவர் ஆடவர் ! ஆவேசப்படுபவர் பெண்டிர் ! இரண்டும் கலக்கும் போது குழப்பம் விளையும் ! ஆண் காரண-காரிய இலக்குவாதி (Objective Person) ! பெண் நியாயம் பேசும் உணர்ச்சிவாதி (Subjective Person) ! இரண்டும் சேரும் போது ஒவ்வாத இணைப்பாக இடைவெளியுடன் சேர்த்துக் கொள்கிறது. எது வலுவுற்றதோ அது வலுவற்றதை அடிமைப் படுத்துகிறது. ஆண் பெண் இருவரும் உணர்ச்சிவாதியானால் அவர் ஒன்றாய் வாழ முடியாது ! அதே சமயத்தில் இருவரும் இலக்குவாதியானால் இல்லற நட்பு இறுகப் பிணைக்கிறது.

சாத்தான்: இளம் பெண் கூறுவதில் அர்த்தமும் ஆழ்ந்த சிந்தனையும் உள்ளது.

தாஞ் சுவான்: இளமாது சொல்வதை அப்படியே நீ ஏற்றுக் கொள்ளக் கூடாது. அவள் சொல்வதில் பாதி உண்மை பாதிப் பிழை உள்ளது. ஊமையாக நடிக்கும் ஒரு பெண்ணுக்கு என்னைப் போல் ஒருத்தன் அகப்பட்டால் விரட்டிப் பிடிக்க முனைகிறாள் ! கையில் மாட்டிக் கொண்டதும் என்னைத் தன்னுடமை ஆக்கிக் கூண்டுக்குள் இடுகிறாள். பிறகு என் சுதந்திரம் பறிபோகிறது ! ஆதலால் என்னை விரட்டும் மாதை விட்டுவிட்டு அப்பால் ஓடுகிறேன் !

இளமாது: காதல் மன்னரே ! கதையை நேர் எதிராகச் சொல்கிறீர் ! யார் யாரைக் கூண்டுக்குள் அடைப்பது ? விடுதலைப் பறவையைக் கூண்டுக்குள் இடுவது ஆடவர் அல்லவா ? கூண்டுக்குள் பூட்டியதும் பறவையின் இறக்கைளை வெட்டி விடுவது ஆடவர் அல்லவா ?

தாஞ் சுவான்: துல்லியமாகச் சொன்னால், திருமணத்துக்கு முன்பு நிகழ்வது ஆணாதிக்கம் ! பிறகு நடப்பது பெண்ணாதிக்கம் ! பெண்ணின் கை ஓங்கும் போது ஆணை விடக் கடுமையான அடக்கு முறையைக் கையாளுகிறாள் !

இளமாது : இந்தக் கூற்றை நான் ஏற்றுக் கொள்ள முடியாது ! திருமணத்துக்கு முன்னும், பின்னும் எப்போதும் ஆணாதிக்கம்தான் ! பெண்ணை அரசாளத்தான் ஆணாதிக்கர் விடுவதில்லையே ! பெண்ணை ஆளவிட்ட நாடுகள் ஒன்று அல்லது இரண்டுதான் ! முழுக்க முழுக்க ஆணாதிக்க உலகில் அல்லவா பெண்டிர் எல்லாம் நடமாடி வருகிறார் !

தாஞ் சுவான்: நானிதை ஏற்றுக் கொள்ள முடியாது ! உலகைப் பெண்டிர் ஆளா விட்டாலும், வீட்டை ஆள்பவர் பெண்டிர்தான் ! ஆணாதிக்க உலகம் கண்ணில் பளிச்செனத் தெரிகிறது. ஆனால் பெண்ணாதிக்க இல்லம் கண்ணுக்குத் தெரிவதில்லை !

(தொடரும்)

***************************

தகவல்

Based on The Play
“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)

1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)

2. The Teachings of Reverence for Life By : Albert Schweitzer (1965)

3. The Religious Significance of Art By : Leo Tolstoy, Book on Philosophy -A Modern Encounter (Basic Edition) By : Robert Paul Wolff (1973

4. Vivekananda Speaks to You – Sri Ramakrishna Math, Chennai (1977)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (June 4, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 9 (சுருக்கப் பட்டது)

This entry is part [part not set] of 46 in the series 20080529_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

என் அறிவுரையைக் கேட்பீர். கல்லூரியிலிருந்து வெளிவந்த பிறகு உங்களைப் பிறரது பணிக்கென முழுமையாகத் தயார் செய்ய வேண்டும். என்னை நம்புவீர். பெரும் நிதிக் களஞ்சியத்தைப் பெற்றவரை விடவும், விலை மதிப்பில்லாப் பொருட்கள் உமது கைவசம் உள்ளதை விடவும் பேரின்பம் உமக்குக் கிடைக்கும். வறுமை எண்ணங்களைப் புறக்கணித்து விலக்குவீர். எந்த விதத்தில் நீவீர் ஏழையர் என்று கருதுகிறீர் ? அழைத்ததும் ஓடிவரும் வேலை ஆட்கள் இல்லை என்றா, வாகனம் இல்லை என்றா, எதற்காக வருந்துகிறீர் ? அவை இல்லாவிட்டால் என்ன ? உமது இதயக் குருதியில் இரவும் பகலும் பிறருக்காகப் பணி செய்தால், உம் வாழ்க்கையில் சாதிக்காமல் போவது ஏதாவது இருக்க முடியுமா ?

இந்தியா முழுவதும் நான் பல்லாண்டுகளாகப் பயணம் செய்த போது, உன்னத ஆத்மா உடைய பலரைச் சந்தித்து உரையாடினேன். அவரில் பலர் அன்பும், பரிவும், அறிவும் மிக்கவர். அவரது பாதங்களின் அருகில் அமர்ந்து உரையாடிய போது வலுவோட்டம் மிகுந்த உறுதி இதயத்துள் பாயும் உணர்ச்சியை அனுபவித்தேன் ! இப்போது நான் உம்மிடம் பேசும் உரைகளும் அந்த வலுவோட்டத்தில் பலனடைந்த அருள் வாக்குகளே !

கர்மயோகி விவேகானந்தா (1863-1902)

மெய்ஞானிகளும், விஞ்ஞானிகளும் தமது அகக்கண்ணால் கண்டுபிடித்தவை ஏராளம். நீயும் நானும் மரத்திலிருந்து ஆப்பிள் பழம் பூமியில் விழுவதை அனுதினமும் பார்த்துக் கொண்டு வருகிறோம் ! புறக்கண் பார்வையில் மட்டும் நோக்கும் நாம் அதை ஏனென்று ஆழ்ந்து சிந்திக்க வில்லை ! நியூட்டனின் புறக்கண் அதை நோக்கியதும் அவரது அகக்கண் விழித்துக் கொண்டு ஓளி பெற்றது ! ஆப்பிள் பழம் ஏன் பூமியில் விழுகிறது என்று சிந்தித்தார் ! ஓர் ஆப்பிளைக் கையில் எடுத்து மேல் நோக்கி எறிந்தார். அது மேலே சென்று மெதுவாகி நின்று கீழ் நோக்கித் திரும்பியது ! ஆகா ! மேல் நோக்கிப் போகும் ஆப்பிளைக் கீழ் நோக்கி இழுப்பது பூமி அல்லவா ! அவரது ஞானக்கண் கண்டுபிடித்தது நமக்குத் தெரியாத புவியீர்ப்பு !

பெர்னார்ட் ஷா (உன்னத மனிதன் நாடகம்)

உபரி மொழிகள் (Stray Sayings):

. . . . இயற்கைப் பண்பாட்டைத் தன்னிச்சைப்படிக் கீழாக்கி, உயிரனத்தை அவமதித்து அல்லது உன்னதப் படுத்தி மனிதன் தனது திட்டக் குறிக்கோளுக்காகக் கடவுளாக நடமாடினான் ! ஓநாயுடன் பழக்க வழக்கம் வைத்துக் கொள்வது போல் மனிதருடன் உலவி வருகிறான். உடன் பிறப்புகளான அத்தகைய அரக்கர்கள் (Monsters) மனிதரின் பேராசைத்தனத்தாலும் மூடத்தனத்தாலும் உருவான துணைப் பிறவிகளே !

. . . . நீ கொடுத்த உதைக்குத் திருப்பி உன்னை அடிக்காதவனிடம் கவனமாயிரு ! உன்னை அவன் மன்னிக்கவும் இல்லை ! உன்னை நீ மன்னிக்கவும் அவன் அனுமதிக்க வில்லை !

. . . . அண்டை வீட்டுக்காரனை நீ காயப்படுத்த முனைந்தால், பாதிக் காயப்படுத்தாதே !

. . . . இரப்பவனுக்குக் காசைக் கொடுக்கலாமா அல்லது கூடாதா என்று சிந்திக்கச் செய்யும் பசப்பு உணர்ச்சி (Sentimentality) நெறி முரண்பாட்டுத் தவறாகும் !

. . . . பசியுடைய இரண்டு நபர் ஒருத்தனைப் போல் இரட்டை மடங்கு பசியுடையர் அல்லர். ஆனால் அயோக்கியர் இருவர் ஒருத்தனைப் போல் பத்து மடங்கு தீயவராய் இருப்பார் !

. . . . சிலுவையை உனது ஊன்றுகோலாய் வேண்டுமானால் ஆக்கிக்கொள் ! ஆனால் அவ்விதம் அடுத்தொருவன் செய்வதைப் பார்க்கும் போது, நீ அவனிடம் கவனமாக இரு !

பெர்னார்ட் ஷா (புரட்சிவாதியின் கோட்பாடுகள்)

****************

உன்னத மனிதன்
(பெர்னார்ட் ஷா)

அங்கம் : 3 பாகம் : 9
(சுருக்கப் பட்டது)

நடிகர்கள்:

1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.

2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.

3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – கவர்ச்சி முகத்தான்.. 25 வயது வாலிபன்.

4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)

5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி

6. ஹெக்டர் மலோன் (Hector Malone) –

7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ஹெக்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்

8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்

9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.

10. வயலொட் ராபர்ட்ஸன் (Violet Robertson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)

11 வேலைக்காரி மேரி (Parlormaid)

**************

(அங்கம் : 3 பாகம் : 9)
(சுருக்கப் பட்டது)

கதா பாத்திரங்கள்: காதல் மன்னன் தாஞ் சுவான் (Don Juan), ஒரு வாலிப மாது, ஸ்பானியர் மென்டோஸா, ஜான் டான்னர், சாத்தான் (பெர்னாட் ஷாவின் கற்பனை வில்லன்)
காலம்: காலை வேளை
இடம்: நரகம் (பெர்னாட் ஷாவின் கற்பனைத் தீய உலகம்)

(காட்சி அமைப்பு): காதல் மன்னன் தாஞ் சுவான் நரகத்தில் ஒரு வாலிப மங்கையைச் (ஆனி வொயிட்·பீல்டு) சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறான். புதல்வியைக் காண தந்தை மிஸ்டர் வொயிட்·பீல்டு சொர்க்கத்திலிருந்து வயோதிகராக வருகிறார். சாத்தான் மூவரையும் சந்திக்கிறான்.

தாஞ் சுவான்: வெற்றி பெறுவது மனிதன் ஆக்கும் அழகு மயத்திலும் உடலமைப்புப் பூரணத்திலும் உண்டாவதில்லை ! பறவை தனது நளின இறக்கை உதவியால் பறக்கும் ஆற்றல் மகிமை பெற்றுள்ளது. வெறும் அழகு மட்டும்தான் முக்கிய மென்றால் அவலட்சண மனிதக் குரங்கின் பேரப் பிள்ளைகளாக நாம் பிறந்திருக்க மாட்டோம்.

இளைய மாது: மிஸ்டர் தாஞ் சுவான் ! நீவீர் மனிதக் குரங்கை விடச் சற்று கவர்ச்சியாக இருக்கிறீர்.

சாத்தான்: தாஞ் சுவான் என்ன நிரூபிக்க வருகிறார் ? மனிதப் பிறப்பு உலகில் அவலட்சணத்தையும், அலங்கோலத்தையும் நோக்கிச் செல்கிறது என்றுதானே சொல்கிறார் ?

தாஞ் சுவான்: இல்லை ! இல்லை என்று ஆயிரம் தடவைச் மறுப்பேன் ! மனிதப் பிறப்பு மூளை விருத்தி நோக்கிச் செல்ல வேண்டும் என்று சொல்ல வருகிறேன் ! வெறும் மேனி அழகும், உடற் பூரணமும் பெறுவது மட்டுமல்ல மனிதனின் உன்னதக் குறிநோக்கு ! அந்த அரிய மூளைக் கருவியால் மனிதன் சுயத்தன்மை உணர்வும் (Self-Consciousness) சுயத்தன்மைப் புலப்பாடும் (Self-Understanding) அடைய வேண்டும் என்று சொல்ல வருகிறேன்..

வயோதிகர்: இது விஞ்ஞான மேற்போக்கு விளக்கம் (Metaphysics) மிஸ்டர் தாஞ் சுவான் ! நான் கேட்கிறேன். மூளையைப் பற்றி ஏன் மனிதப் பிறவி மண்டையைக் குழப்பிக் கொள்ள வேண்டும் ? கண், காது, வாய், மூக்கு போன்று மூளையும் ஓர் உறுப்புதான் ! பிறவி இன்பம் சுவைப்பதைத் தவிர்த்து ஏன் ஒருவன் தன்னைப் பற்றி உணர்ந்து கொள்ள வேண்டும் ?

தாஞ் சுவான்: இராணுவத் தளபதியாரே ! மூளை கண், காது, வாய், மூக்கு போன்ற ஓர் உறுப்பில்லை ! மூளை ஓர் ஆட்சி அரங்கம் ! அதற்கு மூளையே அரசன் ! கண், காது, வாய், மூக்கு, கை, கால் அனத்தையும் கட்டுப்படுத்தி ஆட்டி வைக்கும் ஓர் அதிபதி ! மூளை என்னும் ஒர் கருவியின்றி வாழ்வைச் சுவைக்க முடியாது ! மனித இன்பம், துன்பம், ஏமாற்றம் அனைத்தும் உணருவது மூளை ஒன்றுதான்.

வயோதிகர்: நான் யார் ? நீ யார் ? அவன் யாரென்று நான் தெரிந்து கொள்ள விரும்ப வில்லை ! உயிரோடிருப்பவர் ஆசா பாசங்களை அப்படியே நான் ஏற்றுக் கொள்கிறேன். படைப்புப் பண்பாடுகள் மாறிவிடுகின்றன. காலம் மாறுகிறது. நாகரீகம் மாறுகிறது. கலாச்சாரம் மாறுகிறது. மனித மூளை நாளுக்கு நாள் விரியாமல் குறுகிப் போகிறது. விஞ்ஞானம் வளர்ச்சி பெற்றாலும், இன்னும் அஞ்ஞானம் அடிப்படையிலே உள்ளது ! என்னை நானே ஆராய விரும்பவில்லை. உன்னை ஆராயவும் எனக்கு ஆர்வமில்லை. மூளைக்கு வேலைப் பளுவைக் குறைக்க விழைகிறேன் !

தாஞ் சுவான்: மூளையால்தான் மூளையை உளவ முடிகிறது. மூளையின் நீட்சி எல்லையற்றது. அண்டக்கோளையும், அதற்கு அப்பாலும் நீண்டு அது ஆராயும். மனிதன் சிந்தனை ஆழத்தை நோக்கும். அதன் திறமைக்கு அளவில்லை. படைப்பிலே மனிதனின் மூளைக்கு இணையான ஓர் உயிர்ச் சாதனம் எதுவுமிருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும் உலகில் சிந்தனை ஞானத்துக்கு மதிப்பில்லை. சீரான வாழ்வுக்குச் செழிப்புள்ள மூளை தேவை. தெளிந்த மூளையுடைய ஒருவன் வாழ்வில் பிழைகளைக் குறைப்பவன். மூளைக்கு அடுத்ததாக உள்ள உன்னத உறுப்பு விழிகள். காந்தக் கருவிபோல் கண்கள் திசை காட்டுபவை. அந்த மகத்தான சாதனம் நாம் எங்கே இருக்கிறோம், எங்கே போகிறோம், எங்கே போக வேண்டும் என்று நமக்கு இடமும் திசையும் காட்டுகிறது. ஆனால் மெய்யாக மூளைக்கும் ஓர் கண்ணுண்டு ! அதுதான் அகக்கண் அல்லது ஞானக்கண் (Mind’s Eye or Inward Eye) என்று அழைக்கப்படுவது ! புறக்கண் நோக்குவது இயற்கையான வெளியுலகை மட்டுமே ! ஆனால் அகக்கண் காண்பது : புவியில் மனிதப் பிறப்பின் நோக்கம் என்ன ? மனிதப் பிறப்பின் உன்னதம் என்ன ? மனிதப் பிறப்பின் மகத்துவம் என்ன ? கற்கால மனிதனைத் தற்கால நாகரீக முன்னேற்றத்துக்கு இழுத்து வந்தது எப்படி ? இவற்றை எல்லாம் சிந்திப்பது. மூளையின் உன்னதம் அதன் ஞானக்கண் மூலமாகப் புலப்படுகிறது.

சாத்தான்: புறக்கண் என்றால் எனக்குப் புரிகிறது ! ஆனால் நீங்கள் சொல்லும் அகக்கண் எனக்குத் தெரியவில்லை ! அகக்கண் மூளைக்குள் இருக்கிறதா ? என் மூளை குழம்புகிறதே !

தாஞ் சுவான்: உமக்குப் புறக்கண் மட்டுமே உள்ளது ! அகக்கண் உமக்கு இல்லாததால் அதன் இருக்கையை நீவீர் உணர முடியவில்லை ! அல்லது உமது மூளைக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் அகக்கண்ணைத் தட்டி நீவீர் எழுப்ப வில்லை !

வயோதிகர்: தாஞ் சுவான் சொல்வது எனக்குப் புரிகிறது. நீவீர் குறிப்பிடும் அகக்கண் பற்றி நானும் சிறிது அறிந்திருக்கிறேன். மனித மூளையில் ஞானக்கண் உள்ளதற்கு ஓர் உதாரணம் சொல்ல முடியுமா ?

தாஞ் சுவான்: மெய்ஞானிகளும், விஞ்ஞானிகளும் தமது அகக்கண்ணால் கண்டுபிடித்தவை ஏராளம். நீயும் நானும் மரத்திலிருந்து ஆப்பிள் பழம் பூமியில் விழுவதை அனுதினமும் பார்த்துக் கொண்டு வருகிறோம் ! புறக்கண் பார்வையில் மட்டும் நோக்கும் நாம் அதை ஏனென்று ஆழ்ந்து சிந்திக்க வில்லை ! நியூட்டனின் புறக்கண் அதை நோக்கியதும் அவரது அகக்கண் விழித்துக் கொண்டு ஓளி பெற்றது ! ஆப்பிள் பழம் ஏன் பூமியில் விழுகிறது என்று சிந்தித்தார் ! ஓர் ஆப்பிளைக் கையில் எடுத்து மேல் நோக்கி எறிந்தார். அது மேலே சென்று மெதுவாக நின்று கீழ் நோக்கித் திரும்பியது ! ஆகா ! மேல் நோக்கிப் போகும் ஆப்பிளைக் கீழ் நோக்கி இழுப்பது பூமி அல்லவா ! அவரது ஞானக்கண் கண்டுபிடித்தது நமது புறக்கண்களுக்குத் தெரியாமல் போன புவியீர்ப்பு ! நியூட்டன் மேலும் எழுதினார். ஆப்பிளைப் பேரளவு ஆற்றலில் மேல் நோக்கி எறிந்தால் அது புவியீர்ப்பை மீறி அப்பால் விண்வெளியில் போய்விடும் என்று !

வயோதிகர்: அற்புதமான உதாரணம் தாஞ் சுவான் ! மனித மூளையின் உன்னதத்தை ஞானக்கண் படைப்புகள் மூலம் நாம் காண முடிகிறது ! உண்மைதான்.

சாத்தான்: நியூட்டனின் புவியீர்ப்பு சக்தி எனக்குப் புரிகிறது ! ஆனால் அந்தக் கண்டுபிடிப்பு மூளையின் அகக்கண்ணில் தோன்றியது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

(தொடரும்)

***************************

தகவல்

Based on The Play
“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)

1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)

2. The Teachings of Reverence for Life By : Albert Schweitzer (1965)

3. The Religious Significance of Art By : Leo Tolstoy, Book on Philosophy -A Modern Encounter (Basic Edition) By : Robert Paul Wolff (1973

4. Vivekananda Speaks to You – Sri Ramakrishna Math, Chennai (1977)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (May 27, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 8 (சுருக்கப் பட்டது)

This entry is part [part not set] of 40 in the series 20080522_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

தேச நோக்கத்தில் சிந்தித்தால் நாமெல்லாம் நமது (ஆன்மீகத்) தனித்துவத்தை இழந்துவிட்டோம். அதுவே நமது தீவினைகளுக்குக் காரணம். நாமிழந்துவிட்ட ஆன்மீகத் தனித்துவத்தை மீண்டும் தூண்டிவிட்டுத் தேச மக்களுக்குப் புத்துயிர் அளிக்க வேண்டும். இந்துக்கள், இஸ்லாமியர், கிறிஸ்துவர் மூவரும் தமது மக்களைத் தம் பாதத்தின் கீழ் அமுக்கி வைத்திருக்கிறார். அவர்களைத் தட்டி எழுப்பும் சக்தி இந்துக்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெளியே வரவேண்டும். எல்லா நாடுகளிலும் மதங்களுக்கு ஆதரவாக இல்லாமல் அவற்றுக்கு முரணாகவே தீவினைகள் எழுகின்றன. பழி சுமத்தப்பட வேண்டியவை மதங்கள் அல்ல, மனித சமுதாயமே ! அதை நிறைவேற்ற முதலில் தகுந்த மனிதர் நமக்குத் தேவை. அடுத்து நிதி உதவி தேவை.

நல்ல கனவுகள், நல்ல சிந்தனைகள் உங்களுக்கு உருவாகட்டும். மெய்யாக நீங்கள் நல்மனதும் உன்னதமும் கொண்டவர். ஆன்மீகத்தைப் பொருளாயுத (Materialism) மண்ணில் புதைக்காது பொருளாயுதங்களை ஆன்மீகக் கருவிகளாய் மாற்றி அந்த உலகின் முடிவிலா எழிற் காட்சியின் அமைதியையும், புனிதத்தையும் அனுதினமும் கண்டு களிப்பீராக !

கர்மயோகி விவேகானந்தா (1863-1902)

உபரி மொழிகள் (Stray Sayings):

. . . . மனிதனின் பொறுப்பான கடமை சந்ததி விருத்திக்கு மாதரின் சாதனமாக மட்டுமில்லாது அதற்கும் மேம்பட்ட வினைகள் புரிவது.

பெர்னார்ட் ஷா (உன்னத மனிதன் நாடகம்)

. . . . சொத்துக்களை ஆக்கிரமிக்கும் நோக்கங்கள் மனித இயலுணர்ச்சியை விட வலுத்தது ! முக்காடு போட்டவர் பொது இடங்களில் முகத்தைத் திறக்க வைப்பதை விட துறவி மடங்களுக்கும் கன்னிமாடங்களுக்கும் (Monastries & Convents) மனிதரைத் தேர்ந்தெடுப்பது எளிதானது !

. . . . ஒருவன் மூடனாக இல்லாவிடில் நேர்மையாக நடந்து கொள்வது அபாயமாக இருக்கிறது !

. . . . சீனர்கள் காட்டுக் கோழிகளைக் (Fowls) பழக்கப் படுத்த இறக்கைகளை அறுத்து விடுவார் ! கனத்த வளையத்தை மாட்டிப் பெண்டிரின் கால்களை நெளித்து விடுவார். கணுக்கால்களில் பாவாடையைச் சுற்றி அணிவதும் அதற்குச் சமமானதே !

. . . . அரசியல் செட்டமைப்பு (Political Economy) சமூகச் செட்டமைப்பு (Social Economy) ஆகிய இரண்டும் நகைப்புக் கிடமாகும் அறிவார்ந்த விளையாட்டுகளே ! ஆனால் உடற் செட்டமைப்பே (Vital Economy) வேதாந்திக்கு விலைமதிப்பற்ற மாணிக்கக் கல் !

. . . . சூனியக்காரர் (Heretic) ஒருவர் தன்னுயிர்த் தியாகத்தைத் தவிர்க்கும் போது, சமய மரபுக் கோட்பாடு ‘பொய்யா அல்லது மெய்யா” என்னும் பிரச்சனையில் உரையாடித் தனது சூனியக் கோட்பாடுதான் உண்மையானது என்று எடுத்துக் காட்டுகிறார்.

பெர்னார்ட் ஷா (புரட்சிவாதியின் கோட்பாடுகள்)

****************

உன்னத மனிதன்
(பெர்னார்ட் ஷா)

அங்கம் : 3 பாகம் : 8
(சுருக்கப் பட்டது)

நடிகர்கள்:

1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.

2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.

3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – கவர்ச்சி முகத்தான்.. 25 வயது வாலிபன்.

4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)

5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி

6. ஹெக்டர் மலோன் (Hector Malone) –

7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ஹெக்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்

8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்

9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.

10. வயலொட் ராபர்ட்ஸன் (Violet Robertson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)

11 வேலைக்காரி மேரி (Parlormaid)

**************

(அங்கம் : 3 பாகம் : 8)
(சுருக்கப் பட்டது)

கதா பாத்திரங்கள்: காதல் மன்னன் தாஞ் சுவான் (Don Juan), ஒரு வாலிப மாது, ஸ்பானியர் மென்டோஸா, ஜான் டான்னர், சாத்தான் (பெர்னாட் ஷாவின் கற்பனை வில்லன்)
காலம்: காலை வேளை
இடம்: நரகம் (பெர்னாட் ஷாவின் கற்பனைத் தீய உலகம்)

(காட்சி அமைப்பு): காதல் மன்னன் தாஞ் சுவான் நரகத்தில் ஒரு வாலிப மங்கையைச் (ஆனி வொயிட்·பீல்டு) சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறான். புதல்வியைக் காண தந்தை மிஸ்டர் வொயிட்·பீல்டு சொர்க்கத்திலிருந்து வயோதிகராக வருகிறார். சாத்தான் மூவரையும் சந்திக்கிறான்.

தாஞ் சுவான்: ஆடவனின் ஒரே ஒரு வேலை என்ன ? பெண்ணைக் கர்ப்பமாக்கும் ஒரே ஒரு வினை ! அதற்கு மட்டும் ஒரு மனித தனிப் பிறவியைப் படைத்துள்ளது அநீதியானது ! அபாயகரமானது ! இந்த வையகத்தில் என்ன ஏற்பட்டிருக்கிறது என்று எண்ணிப் பார் ! முதலில் ஆடவர் எண்ணிக்கைப் தமக்குச் சமமாகப் பெருக்கி விட்டவர் பெண்டிர் ! அவன் கைவசம் முடிவில்லாத பெருக்குச் சக்தியை ஈந்து அதில் மிகச் சிறிய அளவு மட்டுமே எடுத்துக் கொள்ளப் படுகிறது ! தேவைக்கு மிஞ்சிய இந்த சக்தி ஆடவனின் மூளைக்குள் புகுந்து அவனுக்கு அசுர பலத்தைத் தந்து விட்டது ! பெற்றவளால் கட்டுப்படுத்தி அடக்க முடியாத பேரளவு வலுக்கொண்ட பூதமாய் மனிதனை ஆக்கிவிட்டது ! கற்பனைச் சக்தியையும் சீரோங்கச் செய்து விட்டது. பெண்ணின் இல்லறப் பொறுப்பை அனுமானித்துக் கொண்டு பெண்ணைக் கலந்து ஆலோசனை செய்யாமல் தானே ஒரு நாகரீகத்தை உலகில் படைத்து விட்டான் மனிதன் ! அந்தப் பீடத்தில் அமர்ந்து கொண்டு ஆணாதிக்கவாதியாய் எதிர்ப்பில்லாத ஏகாதிபதியாகத் தன்னை முடி சூட்டிக் கொண்டான் ! அவன் அரண்மனையில் யாரும் அண்ட முடியாத உயரத்தில் அவன் தனிக்கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது !

இளம்மாது: ஆம் ஆம் நீங்கள் சொல்வது அனைத்தும் மெய்யானவை. கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூர்க்கக் கொடியை யார் கீழிறக்க முடிந்தது ?

சாத்தான்: சரி. இந்த நாகரீகம் இன்னும் மாறாமலா இருக்கிறாது இப்போது ?

தாஞ் சுவான்: மனிதனின் பொறுப்பு : சந்ததி விருத்திக்கு மாதரின் சாதனமாக மட்டுமில்லாது அதற்கும் மேன்மையான வேறு வினைகளில் ஈடுபடுவது. இதுவரை வாழ்க்கையின் தொடர்ந்த விளைவு : தன்னை பராமரித்துக் கொள்வது மட்டுமே ! மனிதன் வாழ்க்கையில் மென்மேலும் உயர உன்னத சாதிப்புப் பேரரங்குகளை இன்னும் அமைக்க வில்லை ! பூரணச் சுய உணர்வுக்கும் மரணம் மற்றும் பண்பாட்டுச் சிதைவு ஆகியவற்றுக்கும் இடையே எப்போதும் ஓர் உடன்பாடில்லாப் போராட்டமே நிகழ்ந்து வருகிறது ! இந்த யுத்த களத்துப் போர்களில் வெற்றி கிடைத்தாலும் அவை யாவும் தவறானவை !

வயோதிகர்: இராணுவத்தில் பணிபுரிந்த என்னை நோக்கி அம்புகள் எறிவதாகத் தெரிகிறது எனக்கு. தொடருங்கள் ! பொறுத்துக் கொள்கிறேன்.

தாஞ் சுவான்: இராணுவ அதிகாரியே ! உமக்கே இது தெரியும் ! உமது தொழிலில் கவனித்திருப்பீர் இந்த வேடிக்கையை ! மூடத்தனமான ஒரு ஜெனரல் கூடப் போரில் வெல்ல முடிகிறது எதிர்க்கும் படையினர் ஜெனரல் படுமூடனாகச் சண்டையிடும் போது !

வயோதிகர்: முற்றிலும் உண்மை ! சில மூடக் கழுதைகள் வேகக் குதிரைகளை விட அதிட்டம் உள்ளவை !

தாஞ் சுவான்: நான் சொல்கிறேன் ! இனப்பெருக்கு உந்துசக்தி (Life Force) என்பது முட்டாள்தனமானது ! ஆனால் அதை விட மரணமும், பண்பாட்டுச் சிதைவும் (Degeneration) சீர்கேடானவை ! அவற்றில் மரணமும், பண்பாட்டுச் சிதைவும் எப்போதும் இழப்புக்கு ஈடாகக் கொடுக்கின்றன ! ஆதலால் பிறவிப் பெருக்கை வளப்படுத்தும் உந்துசக்தி வெற்றி பெறுகிறது !

சாத்தான்: பிழைத்துக் கொள்ளும் மானிட நியதி உடல் வலுவைப் பொருத்தது ! உன்னத அறிவு உடல் வலுவுக்கு இடம் அளித்து விட்டு வெளியேறுகிறது !

தாஞ் சுவான்: அதனால் சொல்கிறேன் ! மனிதரின் உன்னத மூளைக்கு உலகில் வரவேற்பில்லை ! எதிர்ப்பே அதை விரட்டுகிறது ! 400 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே என்ன நடந்தது ? கத்தோலிக்கப் பாதிரிமார் வைத்துதான் சட்டம் ! சுண்டக்காய்ப் பூமிதான் மையத்தில் இருக்கிறது ! சூரியனும் பிறகோள்களும் பூமியைச் சுற்றி வருவதாய் ஆயிரத்தி ஐநூறு ஆண்டுகளாகப் பறைசாற்றி வந்தார் ! கலிலியோ காலத்தில் புரட்சிக் கருத்துக்கள் எழுந்தன ! பரிதியை மையமாக வைத்து பூமியும் பிறக்கோள்களும் சுற்றி வருகின்றன என்று கூறியவரை மதாதிபதிகள் கம்பத்தில் உயிரோடு எரித்தார் ! அது உன்னத அறிவுக்குக் கிடைக்கும் வெகுமதி ! உடல் வலுவே உன்னத அறிவை எழவிடாமல் தடுத்துக் கொண்டு வந்தது யுக யுகமாக !

(தொடரும்)

***************************

தகவல்

Based on The Play
“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)

1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)

2. The Teachings of Reverence for Life By : Albert Schweitzer (1965)

3. The Religious Significance of Art By : Leo Tolstoy, Book on Philosophy -A Modern Encounter (Basic Edition) By : Robert Paul Wolff (1973

4. Vivekananda Speaks to You – Sri Ramakrishna Math, Chennai (1977)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (May 19, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 7 (சுருக்கப் பட்டது)

This entry is part [part not set] of 33 in the series 20080515_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

இளைஞர்களே ! மதத்தின் இரகசியம் அதன் கோட்பாடுகளில் இல்லை. செயற்பாட்டில் உள்ளது. நன்னெறி உடையவராகவும் நல்வினை புரிபவராகவும் இருப்பதே மதப் பூரணம் அடைவது. “பிரபு பிரபு” என்று இறைவனை நோக்கிக் கூக்குரல் இடுவதில் இல்லை ! எழுதப்பட்ட மெய்நெறியைக் கடைப்பிடிப்பவர் உண்மையாக மதத்தைப் பின்பற்றுபவர். இளைஞராகிய நீவீர் அனைவரும் உன்னதம் உடையவர். அருகிவரும் எதிர்காலத்தில் உங்களில் சிலர் சமூகத்தின் ஆபரணங்களாக ஒளிவீசுவார். பிறந்த நாட்டின் பேராசிகளைப் பெறுவார். இடையிடையே உங்களுக்கு எதிர்ப்படும் உலகத்தின் புறக்கணிப்புக்கு மனம் தளராதீர் ! அவை எல்லாம் விரைவில் நீங்கி உமக்கு ஆதரவு உண்டாகும்.

நெறியுடன் வாழ்வீர் ! நிமிர்ந்து நிற்பீர் ! அஞ்சாதீர் ! ஆழ்ந்த மதக் கோட்பாடுகளைத் திணித்துக் கொண்டு மூளையைக் குழப்பிக் கொள்ள வேண்டாம் ! கோழைகள்தான் பாபம் செய்யத் துணிவார் ! ஊக்கம் கொண்டவர் ஒருபோதும் பாபம் புரியார் ! மனதிலும் பாபத்தைக் கருத மாட்டார் ! எவரையும் நேசிப்பீர் ! எல்லோரையும் நேசிப்பீர் !

கர்மயோகி விவேகானந்தா (1863-1902)

உபரி மொழிகள் (Stray Sayings):

. . . . நீ உனது மறுப்புரையைப் போராட எதிர்க்கும் தோல்வியாக எடுத்துக் கொள்ளாதே. – அதாவது அடிமையாக இருந்திட மறுப்பது ! – அடிமைப் படுத்துவை எதிர்ப்பது ! – அண்டை வீட்டான் போல் செல்வத்தில் புரள்வதை மறுப்பது ! – வறுமையில் இருந்திட மறுப்பது ! கோழையும், ஆணைக்குப் பணியாதரும், பொறாமைப் படுபவரும் உனது மறுப்புரைத்தலை ஆதரிக்கிறார்.

. . . . உனக்கு விருப்பமானதைப் பெற்றுக் கொள்வதில் கவனம் செலுத்து. இல்லாவிட்டால் பிறர் வற்புறுத்தித் திணிப்பதை நீ ஏற்றுக் கொள்ள வேண்டியதிருக்கும் ! காற்றோட்டம் இல்லாத ஓர் இடத்தில் பசுமையான காற்று முழுமையாக வரவேற்கப் படுவதில்லை ! மதமில்லாத இடத்தில் வஞ்சக மொழிகள் செவிக்கு இனிதாக உள்ளன ! ஞானமில்லாத இடத்தில் அறிவின்மை (Ignorance) ஞானமாகப் பீற்றிக் கொள்கிறது !

. . . . தீயவர் பெருகிப் பலசாலிகள் பிழைத்து எழும் போது, இயற்கைக் கடவுளாக நிச்சயம் அயோக்கியர் ஆகிவிடுவார் !

. . . . வரலாறு மீள்கிறது என்று சொல்ல வந்தால் எதிர்பாராததே எப்போதும் வாழ்வில் நிகழ்கின்றது ! அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்வதில்லை என்னும் மனிதனுடைய வலுவற்ற தன்மை எத்தகைய தீவிரமானது !

. . . . இரக்கத்தன்மை (Compassion) நேர்மை யற்றவரின் (Unsound) உடன்பிறப்பு உணர்ச்சி !

. . . . தீவினையைப் புரிந்து கொள்பவர் மன்னித்து விடுக. எதிர்ப்பவர் அதை அழித்து விடுக !

பெர்னார்ட் ஷா (புரட்சிவாதியின் கோட்பாடுகள்)

****************

உன்னத மனிதன்
(பெர்னார்ட் ஷா)

அங்கம் : 3 பாகம் : 7
(சுருக்கப் பட்டது)

நடிகர்கள்:

1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.

2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.

3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – கவர்ச்சி முகத்தான்.. 25 வயது வாலிபன்.

4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)

5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி

6. ஹெக்டர் மலோன் (Hector Malone) –

7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ஹெக்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்

8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்

9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.

10. வயலொட் ராபர்ட்ஸன் (Violet Robertson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)

11 வேலைக்காரி மேரி (Parlormaid)

**************

(அங்கம் : 3 பாகம் : 7)
(சுருக்கப் பட்டது)

கதா பாத்திரங்கள்: காதல் மன்னன் தாஞ் சுவான் (Don Juan), ஒரு வாலிப மாது, ஸ்பானியர் மென்டோஸா, ஜான் டான்னர், சாத்தான் (பெர்னாட் ஷாவின் கற்பனை வில்லன்)

காலம்: காலை வேளை

இடம்: நரகம் (பெர்னாட் ஷாவின் கற்பனைத் தீய உலகம்)

(காட்சி அமைப்பு): காதல் மன்னன் தாஞ் சுவான் நரகத்தில் ஒரு வாலிப மங்கையைச் (ஆனி வொயிட்·பீல்டு) சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறான். புதல்வியைக் காண தந்தை மிஸ்டர் வொயிட்·பீல்டு சொர்க்கத்திலிருந்து வயோதிகராக வருகிறார். சாத்தான் மூவரையும் சந்திக்கிறான்.

தாஞ் சுவான்: அதனால்தான் யுத்தங்களால் பயனில்லை என்று சொல்கிறேன் ! மனிதர் அச்சத்தை நீக்க முடிவதில்லை ! அச்சம் இல்லாதவனும், ஆதிக்கவாதியும் உலகத்தில் உள்ள வரைப் போர்கள் நடக்கும் ! போர்கள் தொடரும் ! மனிதர் ஆயிரக் கணக்கில் மடிவார் ! மனிதத்துவம் நசுங்கிப் போன மானிடர் மரணப் போர்களில் மகிழ்ச்சி அடைகிறார் ! அவரது பூர்வீக மிருகத்தனம் மேலோங்கி வெளியே மீண்டும் மீண்டும் வருகிறது ! மனிதன் மடியக் காரணமாகும் ஒவ்வொரு கோட்பாடும் காத்தலிக் மதத்தைச் சார்ந்ததாக இருக்கும். அகில உலக விடுதலைக்கும் மனிதச் சமத்துவத்துக்கும் பட்டினி கிடந்து பாழடைந்த புழுதி மண்ணில் உயிரைவிடத் தயாராக இருக்கிறார்.

முதியவர்: பூ இதுதானா ? இது ஒன்றும் புதிய செய்தி யில்லை !

தாஞ் சுவான்: பூ என்று நீ உதறித் தள்ளும் இந்த விடுதலைப் போராட்டத்தில் குதிக்க எத்தனை பேர் முன்வருகிறார் என்பது உனக்குத் தெரியாது ! தாய்நாட்டு விடுதலையே ஒரு மனிதனின் தனித்துவ பிறப்புரிமை ! சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் இம்மூன்றிலும் சுதந்திரமே மனிதனின் சிரம் ! சமத்துவம் உடம்பு ! சகோதரத்துவம் கை, கால்கள் ! சமூக விடுதலையைப் பற்றி காத்தலிக் மதத்துக்குக் கவலை இல்லை ! மன விடுதலைக்குப் பாடுபடும் அந்த மதம் மனித விடுதலைக்கு கண்மூடிக் கொள்கிறது ! மனிதன் பூரணமடைய உயிரை விடுகிறான். விடுதலை நாட்டத்தையும் விருப்போடு கைவிடுகிறான் !

சாத்தான்: மேலும் ஒருவரை ஒருவர் கொல்வதற்கு உகந்த காரணத்தை ஏற்படுத்திக் கொள்கிறான்.

தாஞ் சுவான்: அதனால் என்ன ? மரணம் முக்கிய மில்லை ! மரண பயமே முக்கியமானது ! மக்களைக் கொல்வதும், மனிதர் மடிவதும் நம்மை இழிவாக்குவதில்லை. அடிப்படை வாழ்வு, இழிவாக்கிடக் கிடைக்கும் கூலி இலாபம் ஆகியவற்றை ஏற்றுக் கொள்வது முக்கியமானது ! உயிருடன் நடமாடும் அடிமை அல்லது அவரது கோமகன் வாழ்ந்திடப் பத்துப் பேர் சாவது ஒப்புக் கொள்ளப் படுகிறது ! காத்தலிக் மதத்தின் அடிமை ஒழிப்புக் கொள்கை : மகனுக்கு எதிராகத் தகப்பன், சகோதரனுக்கு எதிராகச் சகோதரன், ஒருவரை ஒருவர் கொல்லத் தயங்கார்.

சாத்தான்: நீ நீட்டி முழக்கும் விடுதலையும், சமத்துவமும் சுதந்திர வெள்ளைக் கிறித்துவரை, அடிமைச் சந்தை ஏலத்தில் விற்கப்படும் காட்டுமிராண்டிக் கறுப்பரை விட வணிகத் துறையில் மலிவாக்கி விட்டது ! கறுப்பு அடிமைகள் கடினமாக ஊழியம் செய்வது போல் வெள்ளைக் கிறித்துவர் வேலை செய்ய மாட்டார். வேலைக் கேற்ற கூலி ! கூலிக் கேற்ப வேலை ! வெள்ளைக் கிறித்துவரைப் பிடித்துக் கொண்டுபோய் அடிமைச் சந்தையில் விற்கும் ஒரு காலம் வரும் ! அப்போது அவரது நிதி மதிப்பு ஏறும்.

தாஞ் சுவான்: அஞ்சாதீர் ! வெள்ளை வர்க்கம்தான் இப்போது அதிகார பீடத்தில் உள்ளது ! கறுப்பர் வெள்ளையர் காலைத் துடைக்கும் வேலை உள்ளவரை ஒருவருக் கொருவர் துணை தேவைப்படும். இந்த மனித விலங்கு புதிரானது ! சுயநலப் பிராணி ! மண்டை ஓட்டைத் தாண்டி அண்டை வீட்டுத் தீயை அணைக்காது ! ஆழமான எலும்புவரைக் கோழையானது ! நெஞ்சுறுதி இல்லாது கூனிப் போவது ! ஒரு கோட்பாட்டுக்காகத் தீரமாய்ப் போராடுவது ! தன்னுயிரை இழக்கத் துணியும் மதவெறி கொண்டது ! ஆன்மீக சக்தி வலுவில்லாத போது எளிதாக அடிமை ஆக்கி விடலாம் அந்த உயிர்ப் பிராணியை !

வாலிப மாது: தன் பொறுப்பை எல்லாம் தூக்கி மனைவி மீது பொதி சுமக்க வைத்து விடுவான் ஆண்மகன் !

வயோதிகர்: அடித்துச் சொல் அப்படி அருமை மகளே ! ஆடவர் தலைகனத்து கொம்புக்குத் தாவினால் அடிமரத்தை வெட்டிவிடு !

தாஞ் சுவான்: மனிதனின் கடமையும் பொறுப்பும் பிள்ளைகள் உண்ண நாளுணவு மேஜைக்கு வந்ததும் முடிந்து விடுகிறது. பெண் குழந்தை பெறுவதற்கு இயற்கை படைத்த ஒரு கருவி ஆடவன் ! வாழ்க்கையின் ஒரு முடிவுக்கு வேண்டிய ஓர் மூலாதாராம் !

வாலிப மாது: இப்படித்தான் ஒரு மாது நினைப்பாள் என்பது உமது எண்ணமா ? அருவருப்பாக இருக்கிறது இதைக் கேட்டும் போது !

தாஞ் சுவான்: மன்னிக்க வேண்டும் மேடம் ! பெண்மனதில் என்ன நினைக்கிறாள் என்பது எனக்குத் தெரியாது ! எனக்குத் தெரிவது இது ஒரு பெண் தன்னைத் தாயாகப் பாராட்டிக் கொள்வது. மனித சந்ததி பெருக இயற்கை விளைவித்த உன்னத ஒரு வினைக்குப் பெண் படைக்கப் பட்டிருக்கிறாள் ! இயற்கையின் மகத்தான அப்பணியைப் பூர்த்தி செய்ய ஆண் வணிக முறையில் அதை நிறைவேற்றுகிறான் ! மனித சந்ததி விருத்திக்குப் பூர்வீக காலம் முதல் பெண்ணே ஆணைத் தயாராக்கி யிருக்கிறாள் ! பெண், ஆண் இரு பாலாரையும் பெண்ணே பெற்றுத் தருகிறாள் ! ஆயினும் ஆண் பெண்ணுக்கு நன்றி செலுத்துவ தில்லை ! ஆணுக்குப் பெண் நன்றி உரைப்பது மில்லை !

சாத்தான்: இயற்கை நியதி என்று சொல்லிய பிறகு எதற்கு ஆண் நன்றி சொல்ல வேண்டும் பெண்ணுக்கு ?

வாலிப மாது: வேடிக்கையான பேச்சு இது ! என் கேள்வி பெண் எதற்காக ஆணுக்கு நன்றி சொல்ல வேண்டும் ?

தாஞ் சுவான்: ஆணை எப்போதும் வரவேற்கிறாள் பெண் ! அவனது கனவுகள், கோட்பாடுகள், வீர தீரச் செயல்கள், மூடத்தனங்கள் அனைத்தும் ஒரு நிபந்தனையின் கீழ் வரவேற்கப் படுகின்றன. குடும்பத்தில் பெண்ணை ஓர் அன்னையாக வழிபட வேண்டும் ஆண் ! ஆணாதிக்கம் பெருகிடப் பெண் செய்த பிழைகள் என்ன ? முதல் பிழை : ஆணின் எண்ணிக்கையைத் தனக்குக் குறைவாக ஆக்கிக் கொண்டது ! இரண்டாவது பிழை : குடும்பத்தில் ஆணுக்குப் பூரண விடுதலை கொடுத்தது ! மூன்றாவது பிழை : வாயில் ஊட்டி உடலைத் தேக்கு போல் வலுவாக்கியது ! நாலாவது பிழை : ஆணின் மூளையை விருத்திசெய்து அவனே அறிவாளி என்று கர்வம் ஊட்டியது ! இறுதிப் பிழை : ஆணுக்கு விசிறி வீசிச் சுகவாசி ஆக்கிக் காலடியில் அமர்ந்து பெண் அடிமையாகிப் போனது !

வாலிப மாது : அடடா ! எத்தகைய ஞான மொழிகள் இவை எல்லாம் ! இன்னும் சொல்லுங்கள் பெண்ணிழைத்த பிழைகளை !

(தொடரும்)

***************************

தகவல்

Based on The Play
“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)

1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)

2. The Teachings of Reverence for Life By : Albert Schweitzer (1965)

3. The Religious Significance of Art By : Leo Tolstoy, Book on Philosophy -A Modern Encounter (Basic Edition) By : Robert Paul Wolff (1973

4. Vivekananda Speaks to You – Sri Ramakrishna Math, Chennai (1977)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (May 13, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 6 (சுருக்கப் பட்டது)

This entry is part [part not set] of 41 in the series 20080508_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாகிரேக்க தேசத்தின் காலநிலை அமைப்பு மிதமாக மனிதருக்குச் சாகதமாக இருப்பதால் அவர் வெளித்துறைக் கலைகளையும், வெளித்தள விடுதலையையும் (External Arts & Outward Liberty) விருத்தி செய்தனர். இந்தியக் காலநிலைச் சூழ்வெளி சூடாக இருந்ததால் ஆரியரின் சிந்தனை உட்புற ஆய்வு (Introspective) விரிந்து மதத்தை விருத்தி செய்தது. கிரேக்கர் அரசியல் விடுதலை (Political Liberty) நாடித் தேடிய போது, இந்தியா ஆன்மீக விடுதலை (Spiritual Liberty) நோக்கிச் சென்றது. ஆயினும் அவை இரண்டுமே ஒற்றைப் பாதை நோக்கிச் செல்பவைதான் ! இந்தியனுக்குத் தேசப் பாதுகாப்புப் பற்றிப் போதுமான கவலை இல்லை ! இந்தியனுக்குத் தேசப்பற்று கிடையாது ! அவன் மதம் ஒன்றுக்காக மட்டும்தான் எதிர்த்துப் போராடுவான் ! ஆனால் கிரேக்கருக்கும், ஐரோப்பியருக்கும் தேசமே முதன்மையானது ! ஆன்மீக விடுதலைக்கு மட்டும் கவனம் செலுத்தி சமூக விடுதலையைப் புறக்கணிப்பது தவறாகும். ஆனால் அதற்கு எதிர்மாறானது (சமூக விடுதலையைப் பேணி ஆன்மீக விடுதலையைக் கைவிடுவது) முன்னதை விடப் பெரும் தவறாகும் ! ஆத்மா, உடல் இரண்டிற்கும் ஒருங்கே விடுதலை தேடுவதே சாலச் சிறந்தது. மதத்தைப் பூரணமாகப் பின்பற்றுவது என்றால் தூயவராகவும், சுயநலம் இல்லாதவராகவும் ஒருவர் இருக்க முயல்வதே ஆகும்.

கர்மயோகி விவேகானந்தா (1863-1902)

உபரி மொழிகள் (Stray Sayings):

. . . . (யூதரின்) ஜெஹோவா கடவுள் உலகைப் படைத்த போது, எல்லாம் இனியதாக இருக்கக் கண்டதாக நமக்குச் சொல்லப்படுகிறது. இப்போது என்ன சொல்லும் அந்தக் கடவுள் ?

. . . . காட்டுமிராண்டிகளைக் கிறித்துவராக மாற்றி விடுவது கிறித்துவரைக் காட்டுமிராண்டிகளாய் மாற்றுவதாகும் !

. . . . தானே எத்தகைய அரசியல் அடிப்படைவாதியாகத் (Extremists) தோன்றுவது என்று தன்னைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்துச் சொல்வதில் எவனுக்கும் மன உறுதி கிடையாது.

. . . . பூரண நலமுடைய உடம்பு பூரணப் பண்பாட்டு உள்ளத்தால் உண்டாவது.

. . . . ஒழுங்கீனச் சிதைவுகள் சமூக முன்னேற்றம் என்னும் முகமூடியை மட்டும் அணிந்து கொள்ளும் போது அவற்றின் தொண்டரைக் கண்டுபிடிக்கும் !

. . . . முன்னேறிச் செல்லும் போது ஆதரவாக எல்லம் அமைந்து விடுவதால் உன்னத மாந்தர் வெற்றி பெறுவார் ! ஒழுங்கீனச் சிதைவின் போது, அடிப்படை வாதிகள் அதே காரணத்தால் வெற்றி பெறுவர். உலகில் சம காலத்தினர் வெற்றி மகிழ்ச்சி அடையாமல் இருக்க முடியாது !

. . . . உலகம் சீருடன் உள்ளதாகக் கருதாத சீர்திருத்தவாதி உலகத்தோடு செம்மையாக இல்லாத நபருடன் நெருங்கிப் பழகி வருகிறார் !

. . . . எல்லாரும் மன்னித்து:ள்ள வாலிபர் தாம் எதையும் மன்னிப்பதில்லை ! ஒவ்வொன்றையும் மன்னிக்கும் வயோதிகரை மற்ற எவரும் மன்னிப்பதில்லை !

. . . . ஆங்கிலேயர் கோமான்களாக (Masters) ஒருபோதும் ஆக மாட்டார் என்று பறைசாற்றும் போது அடிமைத்தனத்துக்கு நாம் முடிவு கட்டுகிறோம் !

பெர்னார்ட் ஷா (புரட்சிவாதியின் கோட்பாடுகள்)

****************

உன்னத மனிதன்
(பெர்னார்ட் ஷா)

அங்கம் : 3 பாகம் : 6
(சுருக்கப் பட்டது)

நடிகர்கள்:

1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.

2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.

3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – கவர்ச்சி முகத்தான்.. 25 வயது வாலிபன்.

4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)

5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி

6. ஹெக்டர் மலோன் (Hector Malone) –

7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ஹெக்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்

8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்

9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.

10. வயலொட் ராபர்ட்ஸன் (Violet Robertson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)

11 வேலைக்காரி மேரி (Parlormaid)

**************

(அங்கம் : 3 பாகம் : 6)
(சுருக்கப் பட்டது)

கதா பாத்திரங்கள்: காதல் மன்னன் தாஞ் சுவான் (Don Juan), ஒரு வாலிப மாது, ஸ்பானியர் மென்டோஸா, ஜான் டான்னர், சாத்தான் (பெர்னாட் ஷாவின் கற்பனை வில்லன்)
காலம்: காலை வேளை
இடம்: நரகம் (பெர்னாட் ஷாவின் கற்பனைத் தீய உலகம்)

(காட்சி அமைப்பு): காதல் மன்னன் தாஞ் சுவான் நரகத்தில் ஒரு வாலிப மங்கையைச் (ஆனி வொயிட்·பீல்டு) சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறான். புதல்வியைக் காண தந்தை மிஸ்டர் வொயிட்·பீல்டு சொர்க்கத்திலிருந்து வயோதிகராக வருகிறார். சாத்தான் மூவரையும் சந்திக்கிறான்.

வயோதிகர்: உன்னத விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை நான் ஆழமாக ஆராய்ந்தேன் ! முடிவில் ஏமாந்தேன் ! வாழ்வுக் கலைக்காக மனிதன் எதுவும் கண்டுபிடிக்க வில்லை ! வருந்துகிறேன் அதற்கு ! மரணக் கலைக்காகக் கண்டுபிடித்திருக்கிறான், மனிதன் இயற்கையை விட ! படைக்கும் புது யந்திரங்கள் எதற்கு ? மனிதரைக் கொல்வதற்கு ! ஆக்கும் ரசாயன வாயுக்கள் வெடிகள் எதற்கு ? மனிதரைக் கொல்வதற்கு ! அங்கிங்கெனாதபடி எங்கும் போர் ! போர் ! போர்தான் ! ஏசு நாதர் போராயுதங்களை ஏர் முனையாக்கு என்று போதித்தார் ! போருக்கு அமைதியே புதுப் பாதை காட்டுகிறது ! போருக்குப் பின் அமைதி உண்மைதான் ! ஆனால் அமைதிக்குப் பிறகு போர் ! இப்படிப் போரும் அமைதியும் சுற்று வட்டம் போடுகிறது ! அமைதி ஏனோ தொடர்வதில்லை ! மேலும் தற்காலப் போர் என்பது அழிவியல் விஞ்ஞானமே ! போர் புகுந்த நாட்டில் பாதுகாப்புக்கும் போரிட்ட நாட்டில் அடுத்த போருக்கும் ஆயுதங்கள் தீட்டப் படுகின்றன ! போராயுதங்கள் புதிதாய் விதவிதமாய்த் தயாராகின்றன ! ஆயுதங்களின் அசுரச்சக்தி மென்மேலும் அதிகமாகி வருகிறது ! புதிய ஆயுதங்கள் தயாரான பிறகு யார் மீது போட்டுச் சோதிக்கலாம் என்று பணவீக்க நாடுகளுக்கு அரிப்பு உண்டாகி விடுகிறது !

சாத்தான்: சமாதானக் கலை அமைப்பில் மனிதன் குழம்பிப் போகிறான் ! போராயுதங்கள் கைவசம் இருந்தால் அமைதி நிலவும் என்று கனவு காண்கிறான் ! இப்போது ஆழ்கடல் போர்க் கப்பல்களும் அடிக்கடல் தாக்குச் சாதனங்களும் பெருகிவிட்டன ! மனிதனின் பேராசைக்கு அளவில்லை ! மனிதனின் ஆதிக்க வெறிக்கு எல்லையில்லை ! மனிதனின் இதயம் போர் யந்திர உற்பத்திக் கூடமாக மாறிவிட்டது ! நீ பீற்றிக் கொள்ளும் வாழ்வுச் சக்தி வலுத்த மரணச் சக்திக்கு வழி வகுக்குகிறது ! மனிதன் கைப்பலத்தைக் காட்டித் தன்னைப் போற்றிக் கொள்கிறான் ! போர் அழிவைக் காட்டிப் புத்திமதியும் கூறி வருகிறான் ! மனிதனின் மதக் கொள்கை என்ன ? மற்றவரை அழிப்பது ! அடுத்த மதத்தவரை எள்ளி நகையாடுவது ! எதிர்ப்பது ! அழிக்க முற்படுவது ! பிற மதத்தினரை மதிக்காதவன் தன் மதத்தை மதிக்காதவன் ஆகிறான் !

தாஞ் சுவான்: நீ மதச் சரணாளியா ? அல்லது மதப் பகையாளியா ? சாத்தான் நீ மதச் சார்பாளியைத் தூண்டி விடுபவன் ! மதப் பகையாளி கையில் வாளைக் கொடுப்பவன் நீ ! நரக மாந்தர் கூட உன்னை வெறுக்கிறார் !

சாத்தான்: நான் மதச் சார்பாளியும் அல்லன் ! மதப் பகையாளியும் அல்லன் ! நரக உலகத்தை நான் வெறுப்பவனில்லை ! இத்தாலியன் ஒருவன் நரகத்தைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறான் தெரியுமா ? அது புழுதி பூமி ! பனித்தளம் ! நாற்றமடிப்பது ! தீப்பற்றுவது ! நச்சுப் பாம்புகள் நிரம்பியது ! ஆங்கிலேயன் என்னைப் பற்றி எப்படிச் சொல்லி யிருக்கிறான் தெரியுமா ? சொர்க்கத்திலிருந்து வெளியே தள்ளப் பட்டவன் என்று என்னைப் பற்றிக் கத்தோலிக்க மதாதிபதிகள் கடிந்து கூறியிருக்கிறார். நாட்டு இலக்கியத்தைப் பற்றிச் சொல்கிறேன். உன்னத நாடக இலக்கியம் ஒரு துன்பியல் நாடகம். அந்த நாடகத்தில் முக்கிய நபர் யாவரும் இறுதியில் மாண்டு போகிறார் ! மனிதன் ஒரு பெரும் படைப்பாளி கடவுள்போல் ! என்ன படைத்திருக்கிறதான் ? உள்ளே வைத்திருப்பவை : கழுவேற்றும் முனை ! கம்பத்தில் கட்டி எரிப்பது ! தூக்கு மேடை ! மின்னதிர்ச்சி நாற்காலி ! நச்சு வாயு ! ஆனால் வெளியே காது குளிர முழக்குவது : கடமை ! நீதி நெறி ! தேசப்பற்று ! அத்தனையும் வேடம் !

தாஞ் சுவான்: அவை அத்தனையும் பழங்கதை ! சாத்தான் ! பழங் கூழைக் குடித்தும், பிறருக்கு அளித்தும் பசியாற்ற முடியாது ! புதிய உலகைப் பற்றிப் பேச வா ! பூமியை மையமாக வைத்து பரிதியும் எல்லாக் கோள்களும் சுற்றி வருகின்றன ! ஆயிரத்தி ஐநூறு ஆண்டுகளாய் இப்படிச் சொன்னவர் கத்தோலிக்க மதாதிபதிகள் ! இது பழங்காலப் பாட்டி கதை ! பரிதியை மையமாகக் கொண்டு பூமியும் பிறக் கோள்களும் சுற்றி வருவதாகச் சொல்வது புதுக்கதை ! மெய்க்கதை ! பொய்க்கதைகளைச் சொல்லிச் சொல்லி மெய்க்கதையாய் ஆக்கியவர் மதாதிபதிகள் ! ஒரு பொய்யை அழுத்தமாக ஆயிரம் தடவை சொன்னால் அது மெய்யாக மாறி விடுகிறது ! ஆனால் மெய்யிக்கு வாய் ஊமை ! பொய்யின் வாய் எரிமலை போன்றது ! குப்பென எழுந்து விரைவாகப் பரவும் ! உண்மை வாசலைத் தாண்டுவதற்குள் பொய் ஒருமுறை உலகைச் சுற்றி விடுகிறது !

சாத்தான்: ஓகோ ! நீவீர் ஓர் உண்மை விளம்பியா ? மெச்சுகிறேன் உன்னை ! உண்மைக்கு ஒரு கால் ! அதுவும் நொண்டி ! பொய்யிக்கு நாலுகால் ! குதிரைபோல் பாய்ந்து செல்வது !

தாஞ் சுவான்: மனிதன் ஒரு கோழை ! துணிந்து எதிர்க்காத எத்தன் ! உள்ளொன்று வைத்து புறமொன்று உரைப்பவன் ! அவன் நாக்கு சொல்வது ஒன்று ! அவன் உடம்பு சொல்வது வேறொன்று ! மனிதனுக்கு நெஞ்சழுத்தம் இல்லை ! நேர்கொண்ட பார்வை இல்லை ! அவனை ஏதேச்சைவாதி என்று சொல் ! கொலையாளி என்று சொல் ! புளுகன் என்று சொல் ! திருடன் என்று திட்டு ! மனிதனின் நடத்தை வெறுப்பை எனக்குத் தருவது ! மனிதன் வீழ்ச்சிக்கு மனிதனே பொறுப்பு ! மனிதன் கோழை ஆனதால் பொறுப்பேற்க மாட்டான் !

வயோதிகர்: மனிதன் கோழை என்பது வெளிப்படை ! நான் இராணுவத்தில் பங்கெடுத்தவன் என்ற முறையில் சொல்கிறேன். மனிதக் கோழைத்தனம் என்பது கப்பல் பயணிகளின் கடல்நோய் போல் உ