சித்திரைதான் புத்தாண்டு

This entry is part [part not set] of 43 in the series 20080417_Issue

மலர் மன்னன்



ஆழ்ந்து யோசித்தோமானால் காலம் என்பதாக ஒன்று இல்லை, அது வெறும் மாயை என்பது புலப்படும். ஆனால் அந்த மாயையினை அவசியம் கருதி ஒரு நிஜம் போல அனுசரிக்க வேண்டியுள்ளது. இல்லாவிட்டால் எல்லாம் குழப்பமாகிப் போகும். எதையும் கனக்கிட இயலாமல் போய்விடும். ஆனால் இப்படிக் காலக் கணக்கு வைத்துக் கொள்வதற்கும் ஒரு முறையும் நியாயமும் இருக்க வேண்டும்.
பிரபஞ்ச வெளியில் காலம் என்பதற்கு அர்த்தமில்லை. நம்முடைய சூரியக் குடும்பத்தைப் பொருத்த வரை நமது பூமி உள்ளிட்ட கிரகங்கள் யாவும் தமது பயணக் கோட்டில் ஒரு முறை சுற்றி வந்தால் அது அந்த கிரகத்தைப் பொருத்த மட்டில் ஓர் ஆண்டாகும். அதேபோல அவை தங்ஙைத் தாமே ஒருமுறை சுற்றி வந்தால் அது ஓர் நாளாகும்.
சில கிரகங்கள் ஒருமுறை சூரியனைச் சுற்றி வருவதற்கே நமது பூமி ஆண்டைப் போலப் பன்மடங்கு எடுத்துக் கொள்கின்றன. ஆக, அத்தகைய கிரகங்களைப் பொருத்தவரை ஓர் ஆண்டு என்பது பூமியின் பல ஆண்டுகளுக்குச் சமம்! சில கிரகங்கள் தம்மைத் தாமே ஒருமுறை சுற்ரி வருவதற்கும் சூரியனை ஒருமுறை சுற்றி வருவதற்கும் எடுத்துக் கொள்ளும் அவகாசம் ஒரே அளவுதான். இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை. அவற்றைப் பொருத்த மட்டில் ஒரு நாள் என்பதும் ஒரு வருடம் என்பதும் ஒரே கால அளவுதான்! ஆக, காலம் என்பது சாசுவதமானது அல்ல , இடத்திற்கு இடம் அவற்றின் தன்மைக்கு ஏற்ப மாறுபடுவதுதான் காலம் என்பது புலப்படுகிறது. இப்படி ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு மாதிரியாக இருப்பது சத்தியமாக இருக்க முடியாது என்பதும் புலனாஅகிறது. ஆனாலும் கால நிர்னயம் நமக்கு அவசியமாகிறது. கணிதத்தில் விடையைக் கண்டுபிடிப்பதற்கு “எக்ஸ்’ என்பதாக ஒன்றை அனுமானித்துக் கொள்வதைப் போல!
கணம், நிமிடம், மணி, நாள், மாதம், ஆண்டு என்றெல்லாம் காலக் கணக்கு வைத்துக் கொள்வது இந்த அடிப்படையில்தான். இப்படி வகுஉத்க் கொள்வதற்கும் கூட, கற்பனையாக க்ரீன்விச் ரேகை என்பதாக ஒன்றை பூமியில் உருவகித்துக் கணக்கிட வேண்டியிருக்கிறது. எதையும் மேற்கொள்ள ஓர் உருவகம் அவசியமாக இருப்பதால்தான் இறைக்கும் ஓர் ருருவம் படைத்து, பின்னர் ஒரே உருவகத்தால் அனைவருள்ளும் ஈடுபாட்டைத் தோற்றுவிக்க இயலாது என்பதால் ஒரே இறைக்கு ஆணும் பெண்ணுமாய், விலங்குகளும் தாவரங்களுமாய்ப் பல்வேறு உருவகங்களையும் இறையின் பல்வேறு லட்சணங்களைப் பிரதிபலிப்பதாய் அமைத்துக் கொண்டோம்.
ஆக, ஒரு காலக் கணக்கை வைத்துக் கொள்வது இன்றியமையாததாக ஆகிப் போனதால் அதனை எதிலிருந்து தொடங்குவது? ஆளாளுக்கு ஓர் இடத்தைத் தேர்ந்தால் மிஞ் சுவது கணக்கல்ல, குழப்பம்தான் அல்லவா?
சிலருக்குச் சந்திரன் பூமியைச் சுற்றி வருவதைக் கணக்கிட்டு, அந்த அடிப்படையில் ஆண்டைக் கணக்கிடுவது சரியாகத் தோன்றியிருக்கிறது. ஆனால் பூமியின் துணைக் கோளான சந்திரனைச் சார்ந்திருப்பதைக் காட்டிலும் நாம் வாழும் கிரகமான பூமியை அடிப்படையாகக் கொள்வதுதான் பொருத்தம் என ப் பெரும்பாலானோர் கருதி பூமி தனது பாதையில் சூரியனை ஒருமுறை சுற்றி வருவதை ஓற் ஆண்டாகக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.
இப்படி மேற்கொள்ளும் ஆண்டை எதிலிருந்து தொடங்குவது? இதுபற்ற்றி முடிவு செய்கையில் சித்திரை மாதம் பிறக்கும் கால கட்டத்தையே அதற்குப் பொருத்த்தமான தருணமெனக் கண்டுள்ளனர். இக்கால கட்டம் தமிழர்களுக்கு மட்டுமல்ல, கேரளத்தவரோடு, வங்காளியர், பஞ்சாபியர் எனப் பலருக்கும் புத்தாண்டுப் பிறப்பாகக் கொள்ளப் படுகிறது.
இரவில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டு கிடந்த யாரோ ஒரு தனி நபரின் யோசனையில் தொடீரென உதித்த யோசனையில் இனிமேல் சித்திரை மாதம் முதல் தேதிதான் தமிழர்களுக்குப் புத்தாண்டு என்று அறிவித்து அதனை நாலைந்து தலையாட்டிகளும் ஆமோதித்துவிட்டதால் அது புத்தாண்டுப் பிறப்பாக ஏற்கப்பட்டது என்று எண்ணிவிட வேண்டாம்.
காலக் கணிப்பில் நமது ஹிந்து சமுதாயம்தான் உலகி லுள்ள மற்ற சமுதாயங்களுக்கெல்லாம் முன்னோடியாக இருந்து வந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பிரபஞ்ச வெளியை அல்சி ஆராய்ந்த பாரம்பரியம் நம்முடையது. தேவர்களின் ஓர் ஆண்டு என்பது பூமியி லுள்ள நமக்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்குச் சமம் என்றெல்லாம் நமது புராணங்கள் சொல்வதை இந்த அடிப்படையில் புரிந்துகொள்ள வேண்டும்.
நமது பூமியானது 360 பாகையில் முட்டை வடிவ நீள் வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகிறது. இந்த முட்டை வடிவப் பாதையைத்தான் பன்னிரண்டு பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதியையும் ஒரு மாதமாகக் கணித்துள்ளனர். பன்னிரண்டு ராசியாகளாகப் பிரித்து வைத்திருப்பதும் இதே அடிப்படையில்தான். உண்மையில் பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது. ஆனால் பூமியில் நாம் இருப்பதால் தன்னிலையாகச் சூரியன் நம்மைச் சுற்றி வருவதாகக் கொள்கிறோம். இதுவும் ஒரு வசதிக்காகத்தான். நமது வசதிக்கு. மற்றபடி பூமிதாஅன் சூரியனைச் சுற்றி வருகிறது என்பதை என்றோ அறிந்துவிட்டவர்கள்தான் நம் முன்னோர். அதனால்தான் கிரகண காலங்களையும், வால் நட்சத்திரங்களின் வருகையையும் முன்னதாகவே அவர்களால் துல்லியமாகக் கணிக்க முடிந்திருக்கிறது. 360 பாகை என்பது எவ்வாறு அமையும் என்பது நமக்குத் தெரியும். இதையொட்டித்தான் நமது புராணம் பூமி பாயாகச் சுருட்டபட்டதாகப் படிமம் செயதது. இது புரியாமல் உருண்டையான பூமியைப் பாயாகச் சுருட்ட முடிந்தது எப்படி என்று கேட்கிற புத்திசாலிகளும் நம்மிடையே காணப் படுகின்றனர். நம் மை நாமே இவ்வாறு ஏளனம் செய்துகொள்வது தாழ்வுமனப் பான்
மையின் வெளிப்பாடு. அது ஒரு நோயின் அடையாளமும்கூட.

சூரியனைச் சுற்றி வரும் நீள் வட்டப் பாதையினைப் பன்னிரண்டு பகுதிகளாகப் பிரித்து ஓர் ஆண்டைப் பன்னிரண்டு மாதங்களாக அமைத்துக் கொண்டது சரி. இவ்வாறு பன்னிரண்டாகப் பிரித்துக் கொண்டதும் குருட்டாம் போக்கில் அல்ல. பூமியின் பயணத்தில் சூரியனின் அருகாமையைக் கணக்கிட்டுப் பொருத்தமாக வகுத்ததால் கிடைத்த எண்தாஅன் இது. சூரியனின் அருகாமையினையொட்டி நிகழும் பருவ மாற்றங்களுக்கேற்பச் செய்த கணக்குதான் இது. இவ்வாறு பூமியின் நீள் வட்டப் பாதையினைப் பன்னிரண்டு பகுதிகளாகப் பிரித்தது சரி, ஆனால் பன்னிரண்டில் எந்தப் பகுதியை முதலாவதாக வைத்து ஆண்டுக் கணக்கைத் தொடங்குவது?

பூமி தனது பயணத்தின் போது சூரியனுக்கு அருகாமையில் செல்கையில் அதன் தொடக்கத்தையே பன்னிரண்டு பகுதிகளின் முதலாவதாகக் கொள்வதுதானே பொருத்தமாக இருக்கும்? இதன்படி பூமி சூரியனுக்கு அருகாமையில் செல்லத் தொடங்கும் ஆரம்ப நிலையினை ஆண்டின் தொடக்கமாக அமைந்தது. அதுவே சித்திரைத் திங்களின் தொடக்கமாகவும் அமைந்தது. சித்திரை முதல் நாள் புத்தாண்டின் தொடக்காமாகவும் அனுசரிக்கப்படலாயிற்று.

பூமி தனது பாதையில் சூரியனுக்கு அருகமையில் வர அடியெடுத்த்து வைக்கும் சமயம் வசந்த காலமாய் அஙைகிறது. பூமியே புத்துயிர் கொண்டு கண் விழிக்கிறது. செடிகளும் கொடிகளும் மரங்களும் பூத்துக் குலுங்குகின்றன. எல்லா உயிர்களுமே சுறுசுறுப்புடன் இயங்கும் தருணம் அது. ஒரு தொடக்கத்தின் அறிகுறியாக விளங்கும் கால கட்டம் அது! எனவேதான் மெய்ஞான அறிவுடன் விஞானத்திலும் மேம்பட்ட நம் முன்னோர் சித்திரை பிறக்கும் நாளையே புத்தாண்டின் தொடக்கமாகவும் நிர்ணயித்தனர். ராஜ்யாதிபதி உறங்கும் வேளையில் அவன் கனவில் எவரோ வந்து உத்தரவிட்டதால் அவன் பிறப்பித்த ஆணை
யாக அல்லவே அல்ல!

உயிர்த் துடிப்பு சிலிர்த்துக் கண் விழிக்கும் தருணம்தான் சித்திரையின் தொடக்கம். புத்தாண்டின் பிறப்பிற்கும் காலங் காலமாக அதனையே அங்கீகரித்து அனுசரித்து வரும் மரபைத் தொடர்வதுதான் அறிவார்ந்த செயலாக இருக்க முடியும்.

தமிழர்களுக்கு மட்டுமல்ல பூமிப் பந்து ஓர் முழு உருண்டையாகத் தன்து பாதையில் செல்வதால் சூரியனுக்கு அருகாமையில் அது செல்லத் தொடங்கும் தருணத்தை அனைத்துலக மொத்த மனித சமுதாயமும் புத்தாண்டாகக் கொள்வது பொருத்தமாக் இருக்கும்.

நமது வசதிக்காகத்தான், கல்வி ஆண்டு, நிதி ஆண்டு என்றெல்லாம் ஓர் ஆண்டின் வெவ்வேறு கால கட்டங்களாகப் பிரித்து வைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் புத்துயிர் துடித்தெழும் தருணமான சித்த்திரையின் தொடக்கமே கொண்டாடி மகிழ்வதற்கான புத்தாண்டுப் பிறப்பாகக் கொள்வதுதான் பொருத்தம்.

அறுபது ஆண்டுகள் என ஒரு நிர்ணயம் செய்து ஒவ்வொரு ஆண்டிற்கும் சமஸ்கிருதத்தில் ஒரு பெயரைச் சூட்டி இந்த அறுபது பெயர்களும் திரும்பத் திரும்பச் சுழன்று வருவது சிலருக்குப் புரிபடுவதில்லை. இவர்கள் ஆண்டுகளை கி.பி. என்கிற இரக்ஞையுடனேயே பார்ப்பதன் விளைவுதான் இது. உண்மையில் அறுபது ஆண்டு சுழற்சியும் வானவியலுக்கு ஏற்ப ஒரு கணிதக் கணிப்புதான். ஒரு நிகழ்ச்சி எப்÷õது சம்பவித்தது என்பதை விளக்குகையில் மொட்டையாக சம்பந்தப்பட்ட ஆண்டின் பெயரைக் குறிப்பிடும் வழக்கம் இல்லை. “இத்தனாவது சாலிவாகன ஆண்டு’ என்றும் சேர்த்துச் சொவதுதான் வழக்கம். நடைமுறையில் எண் அடிப்படையில் உள்ள ஆண்டை குறிப்பிட்டுக் கொண்டு அதற்கு இணையான நமது ஆண்டின் பெயரையும் சேற்த்துக் கொள்ளலாம். பெயர் சமஸ்கிருதத்தில் இருகிறதே என யோசிக்க வேண்டாம். சம்ஸ்கிருதம் எந்தவொரு குறிப்பிட்ட்ட வட்டாரத்திற்கும் உரியது அல்ல. அனைவருக்குமே சொந்தமான மொழி அது. சமஸ்கிருதம்ஜ் என்றால் செம்மைப் படுத்தப்பட்டது என்றுதான் அர்த்தம். அதன் மீது தமிழர்களான நமக்கு உள்ள உரிமையை நாம் எக்காரணம் பற்றியும் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது.


Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்