மனித இயற்கை குறித்து மூன்றாம் பாலினம் எழுப்பும் புதுக் கேள்வி!

This entry is part [part not set] of 39 in the series 20080612_Issue

எஸ். அர்ஷியா


பெண் உடலில் ஆண் உணர்வுகளைக் கொண்டிருப்பது, யார் தவறு?

முகத்தில் அறையும் இந்தப் புதுக்கேள்வி, கன்னியாகுமா¢யில் நடந்த பேராசி¡¢யர் நா. வானமாமலை நினைவு கலை இலக்கிய 30- வது முகாமின், இரண்டாம் நாளின் முதல் அமர்வின் போது, திருநங்கை ரேவதி வாசித்த, ‘ஆண்மய்ய உலகும்… திருநங்கைகள் குறித்த உரையாடலும்…’ ஆய்வுரை யைத் தொடர்ந்து எழுப்பப்பட்டது.

பெண் உடலும் ஆண் உணர்வும் கொண்டிருக்கும் மிகச் மிகச் சிறுபான்மையினா¢ன் சார்பாக, அனைத்துலகுக்கும் முதல்முறையாக அந்தக் கேள்வியை விடுத்தது, பெங்களூர் சங்கமா அமைப்பின் ஆதரவில் இருந்து வரும் கிறிஸ்து ராஜ் என்பவர். எம்.பி.பி.எஸ்., டாக்டரான இவர், பெண்ணாகப் பிறந்து உணர்வுகளால் ஆணாக மாறியவர்!

கேள்வியில், அரங்கின் வெப்பநிலை ‘சட்’டென்று எகிறி, முகாமில் கலந்து கொண்ட சாமானியர்கள் முதல் பேராசி¡¢யர்கள், சாகித்திய அகாடமி பா¢சு களைப் பெற்ற பெரும் படைப்பாளிகள், மற்றத் துறைகளின் பிரபலங்கள் அனைவரையுமே திகைப்பில் ஆழ்த்திவிட்டது. அவர்களும் முதல் முறையாகத் தான், இந்தக் கேள்வியை சந்தித்தவர்களாக இருந்தனர். அதற்கு முன்புவரை, ஆண் உடலும் பெண் உணர்வுகளும் கொண்ட அரவாணியரைப் பற்றித் தான் எல்லோருமே அறிந்திருந்தனர்.

இயற்கையின் வினோதங்களைப் பு¡¢ந்து கொள்வது, கொஞ்சம் சிரமம் தான். அந்தப் பு¡¢தலையே அறிவு என்கிறோம்!

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி, படிப்படியாக பா¢ணாமம் பெற்று, இன்று ஓர் உன்னத வடிவத்தையும் அறிவாற்றலையும் பெற்றிருக்கும் மனிதன், மனித இயற்கையையே பு¡¢ந்து கொள்ளவில்லை என்பது, மிகவும் கவலையளிக்கக் கூடியதாக இருக்கிறது. அரவாணியர்கள் குறித்து நிலவும் கருத்துகளே அதற்குச் சான்றாக இருக்கின்றன.

‘ஆம்பளப் பொம்பள’ தெய்வமான அர்த்தநா¡£ஸ்வரரைக் கும்பிடும் பெரும்பான்மை மக்கள், அந்தச் சாமி நிலையை ஒத்திருக்கும் மூன்றாம் பாலினத்த வரை கும்பிட வேண்டாம். கொஞ்சம் கெளரவமாக நடத்தலாமல்லவா?

ஆண், பெண் எனும் இரு இனங்களைத் தவிர்த்து, மூன்றாவது பாலினமாக தங்களை அறிவித்துக் கொள்ளும் அரவாணியர், தாங்கள் மற்ற இரு இனங்கள் போல அங்கீகா¢க்கப்பட வேண்டும் என விடுக்கப்பட்டக் கோ¡¢க்கைகளும், நடத்திய தொடர் போராட்டங்களும், எப்போதாவது சட்டசபையில் ஒருசில உறுப்பினர்களால் எழுப்பப்படும் கேள்விகளும், இப்போது தான் அவர்கள் பக்கம் அரசைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

தேசம் முழுவதும் அவர்களின் கோ¡¢க்கைகள் இறைந்து கிடந்தாலும், பரந்துபட்ட தமிழகத்தின் ஒரேயொரு மாவட்டமான வேலூ¡¢ல் மட்டும் அவர்களின் பல்வேறு கோ¡¢க்கைகளில் ஒன்றிரண்டு பா¢சீலிக்கப்பட்டு, முதல் முறையாக ரேஷன் கார்டுக்கும் மருத்துவத்துக்கும் வழி செய்யப் பட்டுள்ளது.

மகாராஷ்டிராவின் ஒருசில பகுதிகளில், அரவாணியர் கெளரவமாகவே நடத்தப்படும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

அலி, பேடி, பொம்பளச் சட்டி, ஒம்போது, ஹிஜ்டா, கட்டை என்றும் இன்னபிற இழிச் சொற்களாலும் மனிதர்களால் (?) விளிக்கப்பட்ட அவர்கள், தற்போதுதான் அரவாணியர் என்றும் திருநங்கையர் என்றும் கொஞ்சமேனும் கெளரவத்துடன் பார்க்கப் படுகின்றனர்.

பாலியல் தொழில், கடைகளில் கைத்தட்டி பிச்சையெடுப்பது போன்ற தொழில்களை விட்டுவிட்டு காய்கறி, மீன் வியாபாரத்திற்கு தங்களை மாற்றிக் கொண்டு விட்டுள்ளனர் என்பது, வாழ்நிலையிலும் பொருளாதாரத்திலும் மேம்பட அவர்கள் எடுத்துவரும் முயற்சியின் அடையாளங்களாகத் தான் பார்க்க வேண்டும்.

அதற்கு அவர்கள் கொடுத்த விலையென்பது, ரொம்பவே அதிகம்!

இது, ஆண் உடலும் பெண் உணர்வுகளும் கொண்டவர்களின் நிலை!

பெண் உடலும் ஆண் உணர்வும் கொண்டவர்களின் நிலை..?

நிச்சயம் கேள்விக் குறியாகத்தான் இருக்கும்!

தக்கப் பாதுகாப்புடன் இருக்கும் ஒரு பெண்ணே, ஆண்மய்ய உலக சமூகத்தின் வக்கிரங்களுக்குத் தப்ப முடிவதில்லை எனும்போது, குடும்பத்திலிருந்து அரவாணியரைப் போலவே வெளியேறிவரும் இவர்களுக்கு, கூடுதல் பிரச்சனைகள் என்பது திண்ணம். ஏனெனில், இவர்கள் பெண் உடலுடன் இருப்பவர்களாக இருக்கிறார்கள்.

ஆண் உடலிலிருக்கும் அரவாணிகள், ரவுடிகள், போக்கி¡¢களின் பாலியல் வன்மத்துக்கும் போலிஸின் சட்டா£தியான… பலநேரங்களில் தவறான நடவடிக்கைகளுக்கும் உள்ளாகித் துன்புறுகின்றனர். மேலும், பலநாடுகளில் காலாவதியாகிப்போன ‘இயற்கைக்கு மாறான உறவு’ எனும் விதி IPC – 377 ன்படி சித்ரவதைக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாகின்றனர். இதைவிட மோசமான நிலைதான், பெண் உடலுடனும் ஆண் உணர்வுடனும் இருக்கும் வகையினருக்கு சமூக விரோதிகளால் பாலியல் துன்புறுத்தலும் போலிஸால் விபச்சார வழக்குகளும் பதியப்படும் சாத்தியங்கள் அதிகமாகவே இருக்கின்றன.

அரவாணியர் அல்லது திருநங்கையர் எனப்படும் பி¡¢வினர், தங்களின் ஆணுறுப்பை தாயம்மா முறையிலோ அல்லது டாக்டா¢டமோ நிர்வாணம் செய்து கொண்டு விடுகின்றனர். வலியும் வேதனையும் நிறைந்த இதற்கான மருத்துவம், தற்போது அரசு மருத்துவமனைகளில் மயக்கமருந்து செலுத்தியும் கூட செய்யப்படுகிறது. இதே சிகிச்சை, தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணத்துடன் செய்யப்படுகிறது.

ஆனால், பெண் உடலுடனும் ஆண் உணர்வுடனும் இருப்பவர்களுக்கு, ஆணுறுப்பை பொருத்திக் கொள்ளும் சிகிச்சை முறைகள் எதுவும், நம் நாட்டில் நடை முறையில் இல்லை. மேலைநாடுகளில் மட்டும்தான் உள்ளது.

பெண் உடலும் ஆண் உணர்வும் கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் இவர்கள் சந்திக்கும் பிரச்சனையை கிறிஸ்து ராஜ், மிகுந்த வலியுடன் விளக்கினார். கவிஞர் கண்ணதாசனின், ‘பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகு கொண்டவள்’ எனும் பாடல் வா¢களுக்கு ஒப்பாகத் திகழும் கிறிஸ்து ராஜ், பெங்களூ¡¢ல் ரவுடிகளாலும், போக்கி¡¢களாலும் பாலியல் வன்மத்துக்காக துரத்தப்பட்ட நிகழ்வையும் அதிலிருந்து தப்பிக்க அவர், நின்றுகொண்டிருந்த பஸ்ஸ¥க்கு அடியில் ஒளிந்து கொண்டு இரவைக் கழித்தக் கதையையும் சொல்லி, பா¢தாபத்தை அள்ளிக் கொண்டது, கூடுதல் பா¢தாபம்!

மாறிவரும் சமூகத்தின் பா¢மாணத்தில், இதுபோன்ற உணர்வு விஷயங்கள் தவிர்க்க இயலாது தான். நமது சட்டம், ‘வாழ்வு¡¢மைக்கான’ அனுமதி அளித் தாலும் நடைமுறையில், ‘அவர்கள் அவர்களாக வாழ்வதென்பது’ அத்தனை உசிதமல்ல என்பது தான் யதார்த்தம்!

உணர்வு என்பது, காசு கொடுத்து வாங்கப்படும் கடைச்சரக்கு அல்ல! மனதுக்குள் முளைவிட்டு, எண்ணத்தில் அலைபாய்ந்து, உடம்பு முழுவதும் உணர்வால் உருப்பெறும் ஒரு அம்சமாகும். இது, அவரவா¢ன் மனம் சம்பந்தப்பட்ட விஷயமன்றி வேறெதுவும் எதுவுமில்லை!

ஆண் ஆணாக உணர்வது போலவும், பெண் பெண்ணாக உணர்வது போலவும், இது மூன்றாம் பாலினத்தினர், அவர்கள் விரும்பும் வாழ்க்கையின் உணர்வாகும்.

இவர்களை பாதுகாக்க, அவர்களின் குடும்பங்களும் அரசும் என்ன செய்யப்போகிறது என்பது, சமுதாயத்தின் முன்பு எழுந்து நிற்கும் புதுக்கேள்வியாக இருக்கிறது!


arshiyaas@rediffmail.com

Series Navigation

எஸ். அர்ஷியா

எஸ். அர்ஷியா