சாகாத கருப்பு யானை
Published September 25, 2008 • By
வஹ்ஹாபி
வஹ்ஹாபி
முறம் போலென்றார் – இல்லை
முற்றிய வாழைத் தாரென்றார்
உரல் போலென்றார் – இல்லையில்லை
உதிர்ந்த வாருகோலென்றார்
அண்ணலார் வழங்கிய உன்னதப் பதவியால்
வல்லானை வணங்க இந்நேரம் விடுக்கும்
“அல்லாஹு அக்பர்”அழைப்போசையின்
அடிநாதமாய் உயிர் வாழும் நான்,
சாட்சியாளர்களான ஆட்சியாளர்கள்
“சய்யிதுனா”என விளித்த
பிலால் என்ற கறுப்பு யானை
பாவம்,குருடர்கள்!
to.wahhabi@gmail.com