This entry is in the series 20080828_Issue

கே.பாலமுருகன்


நெளிந்து
கரையொட்டி
நர்கிறது
பால்யம்

எப்பொழுதோ
விட்டுச்சென்ற
பால்யத்தைத்
தேடிச் சென்றபோது
அது
ஆறாக மாறியிருந்தது

20 வருடத்திற்கு முன்
ஆற்றில்
எகிறி குதித்தப்போது
ஆற்றின் மேற்பரப்பிலிருந்து
சிந்திய
ஒரு துளி
நீரைச் சேகரிக்கத்
தவறியிருந்தது குறித்து
அப்பொழுதுதான்
ஞாபகம் தட்டியது

ஆறு
மௌனமாக
நெளிந்து கொண்டிருந்தது


கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com

Series Navigation