திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 37

This entry is in the series 20110522_Issue

ரேவதி மணியன்


சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 37 பிடிஎஃப் கோப்பு

இந்த வாரம் तृतीया विभक्तिः (tṛtīyā vibhaktiḥ) Instrumental Case மூன்றாவது வேற்றுமை உருபு (ஆல்) பற்றி அறிந்து கொள்வோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள விதிகளை மனனம் செய்து கொள்ளவும்.

तृतीया विभक्तिः (tṛtīyā vibhaktiḥ) – விதிகள்

1. வினைச்சொல்லுடன் எதனால் / எதை உபயோகித்து என்ற கேள்வியின் பதில் மூன்றாவது வேற்றுமையில் அமையும். (The answer to the question ‘by / with what?’ put on the verb will be in the Instrumental Case.)

उदा – सः हस्तेन कार्यं करोति। ( saḥ hastena kāryaṁ karoti |)
அவன் கையினால் வேலை செய்கிறான்.

सः केन कार्यं करोति ? (saḥ kena kāryaṁ karoti ?)
அவன் எதனால் வேலை செய்கிறான் ?

2. सह , साकं , सार्धम् – these words mean ‘ along with’ or together with’ . (The answer to the question ‘ together with whom? or ‘ along with what?’ will be in the Instrumental case.)

இதுபற்றிப் பிறகு விரிவாகப் படிக்கலாம்.

3. ஒரு வாக்கியத்தில் கோபம் , வருத்தம், சந்தோஷம் போன்ற பண்புப் பெயர்கள் மூன்றாம் வேற்றுமையில் அமையும்.
(We have to use the abstract nouns in Instrumental case if they are adverbs.)

उदा – 1. सः सन्तोषेण कार्यं करोति। (saḥ santoṣeṇa kāryaṁ karoti |)
அவன் மகிழ்ச்சியுடன் வேலை செய்கிறான்.

2. पिता प्रीत्या वदति। (pitā prītyā vadati |)
தந்தை பாசத்துடன் (பாசத்தினால் ) பேசுகிறார்.

கீழே உள்ள உரையாடலை உரத்துப் படிப்போமா ?

छात्राः – नमस्ते श्रीमन्।
chātrāḥ – namaste śrīman |
மாணவர்கள் – வணக்கம் சார் !

अध्यापकः नमस्ते। वयं अद्य चित्रं लिखामः वा ?
adhyāpakaḥ namaste | vayaṁ adya citraṁ likhāmaḥ vā ?
ஆசிரியர் – வணக்கம் . நாம் இன்று சித்திரம் வரைவோமா ?

शिवशङ्करः – अहं सुधाखण्डेन लिखामि श्रीमन्।
śivaśaṅkaraḥ – ahaṁ sudhākhaṇḍena likhāmi śrīman |
சிவசங்கரன் – நான் சுண்ணக்கட்டியால் எழுதுகிறேன் சார்.

अध्यापकः – हरि ॐ। भवान् किं वदति ? सुधाखण्डेन कागदे कथं चित्रं लिखति ?
adhyāpakaḥ – hari om | bhavān kiṁ vadati? sudhākhaṇḍena kāgade kathaṁ citraṁ likhati ?
ஆசிரியர் – வணக்கம் . நீர் என்ன சொன்னீர் ? சுண்ணக்கட்டியால் பேப்பரில் எப்படி படம் வரைகிறாய் ?

रविकुमारः – श्रीमन्। अहं लेखन्या एव लिखामि।
ravikumāraḥ – śrīman | ahaṁ lekhanyā eva likhāmi |
ரவிகுமார் – சார் ! நான் பேனானால் தான் வரைகிறேன் (எழுதுகிறேன்).

अध्यापकः – मास्तु भोः। सर्वे अङ्कन्या एव लिखन्तु। श्रीनाथ। भवतः चित्रलिखने दोषाः सन्ति।
adhyāpakaḥ – māstu bhoḥ | sarve aṅkanyā eva likhantu | śrīnātha | bhavataḥ citralikhane doṣāḥ santi |
ஆசிரியர் – வேண்டாம் ! அனைவரும் பென்சிலால் மட்டுமே வரையுங்கள். ஸ்ரீநாத், உன்னுடைய படங்களில் தவறுகள் இருக்கின்றன.

स्वामिनाथः – श्रीमम्। सः अङ्गुल्या मार्जयति।
svāmināthaḥ – śrīmam | saḥ aṅgulyā mārjayati |
சுவாமிநாதன் – சார் ! அவன் விரலினால் அழிக்கிறான்.

अध्यापकः – मास्तु भोः मार्जकेण मार्जयतु। सर्वे पश्यन्तु। चित्रे बालकः द्विचक्रिकया गच्छति॥ वयं कथं विद्यालयम् आगच्छामः ?
adhyāpakaḥ – māstu bhoḥ mārjakeṇa mārjayatu | sarve paśyantu | citre bālakaḥ dvicakrikayā gacchati || vayaṁ kathaṁ vidyālayam āgacchāmaḥ ?
ஆசிரியர் – வேண்டாம்பா ! அழிப்பானால் அழி. அனைவரும் பாருங்கள். படத்தில் சிறுவன் இருசக்கர வாகனத்தில் (சைக்கிளில்) செல்கிறான். நாம் எப்படி பள்ளிக்கு வருகிறோம் ?

शिवशङ्करः – अहं त्रिचक्रिकया आगच्छामि श्रीमन्।
śivaśaṅkaraḥ – ahaṁ tricakrikayā āgacchāmi śrīman |
சிவசங்கர் – நான் மூன்றுசக்கரவாகனத்தில் வருகிறேன் சார்.

रविकुमारः – अहं लोकयानेन आगच्छामि।
ravikumāraḥ – ahaṁ lokayānena āgacchāmi |
ரவிகுமார் – நான் பேருந்தில் வருகிறேன்.

स्वामिनाथः – मम गृहं समीपे एव अस्ति। अतः अहं पादाभ्याम् एव आगच्छामि।
svāmināthaḥ – mama gṛhaṁ samīpe eva asti | ataḥ ahaṁ pādābhyām eva āgacchāmi |
சுவாமிநாதன் – என்னுடைய வீடு அருகில் தான் இருக்கிறது. அதனால் நான் நடந்து (இரு கால்களை உபயோகித்து) தான் வருகிறேன்.

उच्चैः पठन्तु।
uccaiḥ paṭhantu !
உரத்துப் படியுங்கள் ; –

1. शिक्षकः सुधाखण्डेन लिखति।
śikṣakaḥ sudhākhaṇḍena likhati |
ஆசிரியர் சுண்ணக்கட்டியினால் எழுதுகிறார்.

2. महिला मालया अलङ्करोति।
mahilā mālayā alaṅkaroti |
பெண் மாலையினால் அலங்கரிக்கிறாள்

3. गणेशः मूषकेण गच्छति।
gaṇeśaḥ mūṣakeṇa gacchati |
கணேஷக்கடவுள் எலிவாகனத்தை உபயோகித்து (எலி வாகனத்தினால்) செல்கிறார்.

4. जनाः दुग्धेन शिवं पूजयन्ति।
janāḥ dugdhena śivaṁ pūjayanti |
மக்கள் பாலினால் சிவனை பூஜை செய்கிறார்கள்.

5. सः छुरिकया शाकं कर्तयति।
saḥ churikayā śākaṁ kartayati |
அவன் கத்தியால் காயை வெட்டுகிறான்.

6. अहं कुञ्चिकया तालम् उद्घाटयामि।
ahaṁ kuñcikayā tālam udghāṭayāmi |
நான் சாவியால் பூட்டைத் திறக்கிறேன்.

7. सौचिकः कर्तर्या वस्त्रं कर्तयति।
saucikaḥ kartaryā vastraṁ kartayati |
தையல்காரர் கத்தரியால் துணியை கத்தரிக்கிறார்.

8. बालिका लेखन्या लिखति।
bālikā lekhanyā likhati |
சிறுமி பேனாவால் எழுதுகிறாள்.

கீழே உள்ள அட்டவணையை உரத்துப் படிக்கவும்.

तृतीया विभक्तिः
tṛtīyā vibhaktiḥ

पुंल्लिङ्गे (pullige)

प्रथमा

(prathamā)

तृतीया (ttīyā ) ए .व. तृतीया (ttīyā ) ब .व.
बालकः (bālaka)

बालकेन (bālakena) बालकैः (bālakai)
हस्तः (hasta)

हस्तेन (hastena) हस्तैः (hastai

)

सः (sa)

तेन (tena) तैः(tai )
एषः (ea)

एतेन (etena)

एतैः(etai)
कः (ka)

केन (kena)

कैः(kai )
भवान् (bhavān)

भवता (bhavatā)

भवद्भिः(bhavadbhi)

स्त्रीलिङ्गे (strīlige)

प्रथमा

(prathamā)

तृतीया (ttīyā ) ए .व. तृतीया (ttīyā ) ब .व.
महिला (mahilā)

महिलया (mahilayā)

महिलाभिः (mahilābhi)
लेखनी (lekhanī) लेखन्या (lekhanyā)

लेखनीभिः(lekhanībhi)
सा (sā)

तया (tayā) ताभिः(tābhi)
एषा (eā)

एतया (etayā)

एताभिः(etābhi)
का (kā)

कया (kayā) काभिः(kābhi)
भवती (bhavatī) भवत्या (bhavatyā) भवतीभिः(bhavatībhi

)

नपुंसकलिङ्गे (napusakalige)

प्रथमा

(prathamā)

तृतीया (ttīyā ) ए .व. तृतीया (ttīyā ) ब .व.
चित्रं

(citra)

चित्रेण (citrea)

चित्रैः(citrai)
नपुंसकलिङ्गे

तृतिया विभक्तितः पुंल्लिङ्गवत्

एव रूपाणि !

napusakalige ttiyā vibhaktita pulligavat eva rūpāi !

ஒன்றன்பால் (பலவின்பால்)

மூன்றாம் வேற்றுமையில் இருந்து

ஆண்பால் விகுதிகளைப் போலவேதான்

இருக்கிறது.

रिक्तस्थानानि पूरयतु
riktasthānāni pūrayatu
கோடிட்ட இடங்களை நிரப்பவும்.

उदा – पुरुषः ————– कार्यं करोति। ( हस्तः)
udā – puruṣaḥ ————– kāryaṁ karoti | (hastaḥ)

1. शिशुः —————— दुग्धं पिबति। (चमसः)
śiśuḥ —————— dugdhaṁ pibati | (camasaḥ)
குழந்தை ———— பால் குடிக்கிறது.

2. सौचिकः —————- सीवनं करोति। (सीवनयन्त्रम्)
saucikaḥ —————- sīvanaṁ karoti | (sīvanayantram)
தையல்காரர் ————— தைக்கிறார்.

3. भगिनी ————- अलङ्कारं करोति। (आभूषणम् )
bhaginī ————- alaṅkāraṁ karoti | (ābhūṣaṇam)
சகோதரி ————- அலங்கரித்துக் கொள்கிறாள்.

4. ललिता —————- दीपं प्रज्वालयति। (अग्निशालका )
lalitā —————- dīpaṁ prajvālayati | (agniśālakā)
லலிதா ————- விளக்கை ஏற்றுகிறாள்.

5. श्रीनिवासः ————– मार्जनं करोति। (मार्जनी)
śrīnivāsaḥ ————– mārjanaṁ karoti| (mārjanī)
ஸ்ரீநிவாசன் ————– சுத்தம் செய்கிறார்.

அடுத்த வாரம் மூன்றாம் வேற்றுமை உருபு ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால் ஒருமை பன்மைகளில் எப்படி அமைகிறது என்பது பற்றி மேலும் சில பயிற்சிகளைச் செய்து அறிந்து கொள்வோம்.

Series Navigation

About ரேவதி மணியன்

ரேவதி மணியன்

View all 22 articles →

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 36

This entry is in the series 20110515_Issue

ரேவதி மணியன்




சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 36 பிடிஎஃப் கோப்பு

Series Navigation

About ரேவதி மணியன்

ரேவதி மணியன்

View all 22 articles →

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 35

This entry is in the series 20110508_Issue

ரேவதி மணியன்




இந்த வாரம் यदा – तदा (yadā – tadā) when – then என்பதைப் பற்றி அறிந்துகொள்வோம். வாக்கியம் எக்காலத்தில் இருந்தாலும் यदा – तदा என்பது உருமாற்றம் பெறாது (Indeclinable).

‘ यदा ‘ इति यत्र प्रयुज्यते तत्र ‘ तदा ‘ इति शब्दः अपि प्रयोक्तव्यः। (‘ yadā ‘ iti yatra prayujyate tatra ‘ tadā ‘ iti śabdaḥ api prayoktavyaḥ |) ஒரு வாக்கியத்தில் ‘ यदा ‘ என்ற வார்த்தையை உபயோகித்தால் ‘ तदा ‘ என்ற வார்த்தையையும் உபயோகிக்க வேண்டும்.

उदा :
यदा वसन्तकालः तदा कोकिलः कूजति।
yadā vasantakālaḥ tadā kokilaḥ kūjati |
எப்போது வசந்தகாலமோ அப்போது குயில் கூவுகிறது.

यदा सूर्यास्तः भवति तदा पक्षिणः नीडं प्रविशन्ति।
yadā sūryāstaḥ bhavati tadā pakṣiṇaḥ nīḍaṁ praviśanti |
எப்போது அந்திநேரமாகிறதோ அப்போது பறவைகள் கூட்டில் நுழைகின்றன.

अभ्यासः (abhyāsaḥ) பயிற்சி
1. यदा अहं तत्र गतवान् तदा सः पठति स्म।
yadā ahaṁ tatra gatavān tadā saḥ paṭhati sma |
எப்போது நான் அங்கு சென்றேனோ அப்போது அவன் படித்துக் கொண்டிருந்தான்.

2. यदा भवान् बेङ्गलूरु आगमिष्यति तदा मम गृहे एव वासं करोतु।
yadā bhavān beṅgalūru āgamiṣyati tadā mama gṛhe eva vāsaṁ karotu |
எப்போது நீங்கள் பெங்களூர் வருகிறீர்களோ அப்போது என்னுடைய வீட்டிலே தங்கவும்.

3. अहं सज्जः भवामि। यदा भवान् आगच्छति तदा गच्छामः।
ahaṁ sajjaḥ bhavāmi | yadā bhavān āgacchati tadā gacchāmaḥ |
நான் தயாராக இருப்பேன். எப்போது நீங்கள் வருகிறீர்களோ அப்போது போகலாம்.

4. यदा वयं काश्मीरं गतवन्तः तदा तत्र बहु शैत्यम् आसीत्।
yadā vayaṁ kāśmīraṁ gatavantaḥ tadā tatra bahu śaityam āsīt |
எப்போது நாங்கள் காஷ்மீர் சென்றோமோ அப்போது அங்கு குளிராக இருந்தது.

5. यदा अहं भवतः गृहम् आगतवान् तदा भवान् कुत्र गतवान् आसीत् !
yadā ahaṁ bhavataḥ gṛham āgatavān tadā bhavān kutra gatavān āsīt !
எப்போது நான் உங்களுடைய வீட்டிற்கு வந்திருந்தேனோ அப்போது நீங்கள் எங்கே சென்றிருந்தீர்கள்.

6. यदा अहं विद्यार्थिनि आसं तदा संस्कृतं पठितवती।
yadā ahaṁ vidyārthini āsaṁ tadā saṁskṛtaṁ paṭhitavatī |
எப்போது நான் மாணவியாக இருந்தேனோ அப்போது சமஸ்கிருதம் படித்தேன்.

एतं श्लोकम् उच्चैः पठन्तु –
etaṁ ślokam uccaiḥ paṭhantu –
இந்த ஸ்லோகத்தை உரத்துப் படிக்கவும்.

यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत।
अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्॥
yadā yadā hi dharmasya glānirbhavati bhārata |
abhyutthānamadharmasya tadātmānaṁ sṛjāmyaham ||

( ‘यदा यदा धर्मस्य ग्लानिः भवति अधर्मस्य च उत्कर्षः भवति , तदा अहम् अवतारं करोमि ‘ इति श्रीकृष्णः वदति !)
( ‘ yadā yadā dharmasya glāniḥ bhavati adharmasya ca utkarṣaḥ bhavati , tadā aham avatāraṁ karomi’ iti śrīkṛṣṇaḥ vadati !)

‘ எப்போதெல்லாம் தர்மம் வீழ்ச்சியடைந்து அதர்மம் தலைதூக்குகிறதோ , அப்போது நான் அவதரிப்பேன் ‘ என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.

कथा (kathā ) கதை

कृष्णः गोपी च (kṛṣṇaḥ gopī ca)
கிருஷ்ணரும் கோபியும்

कृष्णः गोकुले वसति। प्रतिदिनं गोप्यः तेने सह नृत्यन्ति।
कृष्णः वेणुगानम् अपि करोति। तदा मृगाः पक्षिणः च तत् मधुरं गानं श्रोतुम् आगच्छति।
कृष्णः गोकुलस्य प्रियः। सर्वे तस्मै क्षीरं दधि च ददाति।
एका गोपी सर्वदा कृष्णम् एव स्मरति।
सा प्रतिदिनं क्षीरं दधि च विक्रेतुं वीथ्यां गच्छति।
यदा सा वीथ्यां गच्छति तदा सा कृष्णम् एव स्मरति स्वकार्यं विस्मरति।
एकदा सा क्षीरं दधि इति न क्रन्दति। परन्तु गोविन्द दामोदर माधव इति एव सा उच्चैः घोषयति।
तस्याः सख्यः तदा हसन्ति। सा गोपी लज्जिता भवति।
परन्तु कृष्णः तत्र आगच्छति। तं दृष्ट्वा सा सन्तुष्टा भवति।

kṛṣṇaḥ gokule vasati | pratidinaṁ gopyaḥ tene saha nṛtyanti |
kṛṣṇaḥ veṇugānam api karoti | tadā mṛgāḥ pakṣiṇaḥ ca tat madhuraṁ gānaṁ śrotum āgacchati |
kṛṣṇaḥ gokulasya priyaḥ | sarve tasmai kṣīraṁ dadhi ca dadāti |
ekā gopī sarvadā kṛṣṇam eva smarati |
sā pratidinaṁ kṣīraṁ dadhi ca vikretuṁ vīthyāṁ gacchati |
yadā sā vīthyāṁ gacchati tadā sā kṛṣṇam eva smarati svakāryaṁ vismarati |
ekadā sā kṣīraṁ dadhi iti na krandati | parantu govinda dāmodara mādhava iti eva sā uccaiḥ ghoṣayati |
tasyāḥ sakhyaḥ tadā hasanti| sā gopī lajjitā bhavati |
parantu kṛṣṇaḥ tatra āgacchati | taṁ dṛṣṭvā sā santuṣṭā bhavati |

கிருஷ்ணர் கோகுலத்தில் இருக்கிறார். தினமும் கோபியர்கள் அவருடன் நடனம் செய்கின்றனர்.
கிருஷ்ணர் புல்லாங்குழலும் வாசிக்கிறார். அப்போது மிருகங்கள் மற்றும் பறவைகள் அந்த இசையைக் கேட்பதற்காக வருகின்றன.
கிருஷ்ணர் கோகுலத்தில் எல்லோருக்கும் பிரியமானவர். அனைவரும் அவருக்கு பால் மற்றும் தயிர் ஆகியவைகளை சமர்ப்பிக்கின்றனர்.
ஒரு கோபி எப்போதும் கிருஷ்ணனை மட்டுமே நினைவுகொண்டிருந்தாள்.
அவள் தினமும் பால் மற்றும் தயிர் விற்பதற்காக வீதியில் செல்வாள்.
எப்போது அவள் வீதியில் செல்கிறாளோ அப்போது கிருஷ்ணரையே நினைத்துக்கொண்டு தன்னுடைய வேலையை மறந்துவிடுவாள்.
ஒருமுறை பால் தயிர் என்று கூவவில்லை. பதிலாக கோவிந்த , தாமோதர, மாதவ என்று மட்டும் சத்தமாக கூவிச் செல்கிறாள்.
அவளுடைய தோழிகள் அப்போது சிரிக்கின்றார்கள். அந்த கோபி வெட்கமடைகிறாள்.
ஆனால் கிருஷ்ணர் அங்கு வருகிறார். அவரைப் பார்த்ததும் அவள் ஆனந்தம் அடைகிறாள்.

अभ्यासः (abhyāsaḥ) பயிற்சி

‘ यदा – तदा ‘ अव्यययोः योजनेन वाक्यानि रचयन्तु –
‘ yadā – tadā ‘ avyayayoḥ yojanena vākyāni racayantu –

उदा – अध्यापकः आगच्छति – छात्राः उत्तिष्ठन्ति।
adhyāpakaḥ āgacchati – chātrāḥ uttiṣṭhanti |

यदा अध्यापकः आगच्छति तदा छात्राः उत्तिष्ठन्ति।
yadā adhyāpakaḥ āgacchati tadā chātrāḥ uttiṣṭhanti |

1. सूर्योदयः भवति – कमलं विकसति।
sūryodayaḥ bhavati – kamalaṁ vikasati |
சூரியோதயம் ஆகிறது – தாமரை மலர்கிறது

2. रात्रिः भवति – चन्द्रोदयः भवति।
rātriḥ bhavati – candrodayaḥ bhavati |
இரவாகிறது – சந்திரன் உதயம் ஆகிறது

3. पञ्चवादनम् भवति – बालकः उत्तिष्ठति।
pañcavādanam bhavati – bālakaḥ uttiṣṭhati |
ஐந்து மணியாகிறது – சிறுவன் எழுகிறான்

4. सिंहः आगच्छति – मृगः धावति।
siṁhaḥ āgacchati – mṛgaḥ dhāvati |
சிங்கம் வருகிறது – மிருகம் ஓடுகிறது

5. मम जन्मदिनम् अस्ति – अन्नदानं करोमि।
mama janmadinam asti – annadānaṁ karomi |
என்னுடைய பிறந்தநாளாக இருக்கிறது – அன்னதானம் செய்கிறேன்

Series Navigation

About ரேவதி மணியன்

ரேவதி மணியன்

View all 22 articles →

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 34

This entry is in the series 20110430_Issue

ரேவதி மணியன்




சென்ற வாரம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஆரம்பித்து ஒரு குறிப்பிட்ட காலம் வரை அதாவது காலம், எல்லை , மற்றும் அளவு பற்றிக் குறிப்பிடும்போது तः …. पर्यन्तम् (taḥ… paryantam) உபயோகப் படுத்தவேண்டும் என்று அறிந்துகொண்டோம்.

இந்த வாரம் आरभ्य (ārabhya) ’ஆரம்பித்து’ (முதல்) என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம். ஒரு செயலை ஒரு குறிப்பிட்ட காலத்திலிருந்து செய்யத் தொடங்கும்போது आरभ्य என்ற சொல்லை உபயோகிக்கவேண்டும்.

उदा –
अद्य आरभ्य (adya ārabhya) இன்று முதல்
श्वः आरभ्य (śvaḥ ārabhya) நாளை முதல்

கீழே கொடுக்கபபட்டுள்ள உரையாலை உரத்துப் படிக்கவும்.

माला – गोपाल ! भवतः परीक्षा समीपम् आगता अस्ति ! अद्य आरभ्य प्रतिदिनं पठतु !
mālā – gopāla | bhavataḥ parīkṣā samīpam āgatā asti |
மாலா – கோபால ! உங்களுடைய தேர்வு நெருங்கிக்கொண்டு இருக்கிறது. இன்று முதல் தினமும் படி .

गोपालः – अद्य अहं मित्रस्य (1) गृहं गच्छामि ! श्वः आरभ्य पठिष्यामि भगिनि !
gopālaḥ – adya ahaṁ mitrasya gṛhaṁ gacchāmi | śvaḥ ārabhya paṭhiṣyāmi bhagini |
கோபால் – இன்று நான் நண்பனுடைய வீட்டிற்குச் செல்கிறேன். அக்கா , நாளை முதல் படிக்கிறேன் .

माला – भवतु ! गोपाल ! विद्यालये योगासनकक्षा (2) कदा आरभ्य भविष्यति ?
mālā – bhavatu | gopāla | vidyālaye yogāsanakakṣyā kadā ārabhya bhaviṣyati ?
மாலா – சரி . கோபால! பள்ளியில் யோகாசன வகுப்பு எப்போது முதல் தொடங்கும்?

गोपालः – परश्वः आरभ्य भविष्यति !
gopālaḥ – paraśvaḥ ārabhya bhaviṣyati |
கோபால் – நாளை மறுநாளிலிருந்து தொடங்கும்.

माला – परश्वः मम अवकाशः न भविष्यति ! प्रपरश्वः आरभ्य अहमपि योगासनकक्ष्याम् (3) आगमिष्यामि !
mālā – paraśvaḥ mama avakāśaḥ na bhaviṣyati | praparaśvaḥ ārabhya ahamapi yogāsanakakṣyām āgamiṣyāmi |
மாலா – நாளை மறுநாள் எனக்கு நேரம் இருக்காது. நாளை மறுநாளுக்கு அடுத்த நாள் முதல் நானும் யோகாசன வகுப்பிற்கு வருவேன்.

गोपालः – भगिनि ! मातुलस्य (4) पत्रम् आगतं वा ?
gopālaḥ – bhagini | mātulasya patram āgataṁ vā ?
கோபால் – சகோதரி ! மாமாவின் கடிதம் வந்ததா?

माला – नैव भोः ! अहं परह्यः आरभ्य तस्य प्रतीक्षां कृतवती ! परन्तु न आगतम् एव !
mālā – naiva bhoḥ | ahaṁ parahyaḥ ārabhya tasya pratīkṣāṁ kṛtavatī | parantu na āgatam eva |
மாலா – இல்லை ! நான் நேற்று முன்தினம் முதல் கடிதத்தை எதிர்நோக்கினேன். ஆனால் வரவில்லை.

एतस्मिन् सम्भाषणे 1,2,3,4 अत्र रमेशस्य, सङ्गीतकक्ष्या, सङ्गीतकक्ष्याम् , पितृव्यस्य – इति परिवर्तनं कृत्वा सम्भाषणं पुनः लिखतु !
etasmim sambhāṣaṇe 1 2 3 4 atra rameśasya saṅgītakakṣyā saṅgītakakṣyām pitṛvyasya iti parivartanaṁ kṛtvā sambhāṣaṇaṁ punaḥ likhatu |
இந்த உரையாடலில் 1, 2, 3, 4 ஆகிய இடங்களில் ரமேஷினுடைய , பாட்டு வகுப்பு , பாட்டு வகுப்பிற்கு , சித்தப்பாவின் – என்று மாற்றி அமைத்து உரையாடலை மீண்டும் எழுதவும்.

माला – ————————————————- !
गोपालः – ———————————————–!
माला – ————————————————-!
गोपालः – ————————————————-!
माला – —————————————————- !
गोपालः – ————————————————– !

இனி एक वारम् (eka vāram) ஒரு முறை , प्रथमवारम् (prathamavāram) முதல் முறை , द्विवारम् (dvivāram) இருமுறை , त्रिवारम् (trivāram) மூன்று முறை,
वारं वारम् (vāraṁ vāram)திரும்பத் திரும்ப (பலமுறை) ஆகியவற்றின் உபயோகத்தைப் பற்றி அறிந்து கொள்வோம். இவை அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தைகள். எனவே இவற்றை நினைவு வைத்துக்கொண்டு பேச்சு வழக்கில் உபயோகிக்கவும்.

கீழேயுள்ள உரையாடலை கவனிப்போமா ?

रविः – मित्र। अहं पाठं पठितवान् , किन्तु स्मरणं न भवति।
raviḥ – mitra | ahaṁ pāṭhaṁ paṭhitavān kintu smaraṇaṁ na bhavati |
ரவி – நண்ப ! நான் பாடம் படித்தேன். ஆனால் மனப்பாடம் ஆகவில்லை.

कार्तिकेयः – भवान् कतिवारं पठितवान् ?
kārtikeyaḥ – bhavān kativāraṁ paṭhitavān ?
கார்திகேயன் – நீங்கள் எத்தனை முறை படித்தீர்கள் ?

रविः – एकवारं पठितवान्।
raviḥ – ekavāraṁ paṭhitavān |
ரவி – ஒருமுறை படித்தேன்.

कार्तिकेयः – मित्र। एकवारं न पर्याप्तम्। अद्य आरभ्य भवान् द्विवारं त्रिवारं वा पठतु।
kārtikeyaḥ – mitra | ekavāraṁ na paryāptam | adya ārabhya bhavān dvivāraṁ trivāraṁ vā paṭhatu |
கார்த்திகேயன் – நண்ப ! ஒருமுறை படித்தால் போதாது. இன்று முதல் நீங்கள் இருமுறை அல்லது மூன்றுமுறை படிக்கவும்.

सन्तोषः – ( प्रविश्य ) हरिः ओम्। कार्तिकेयः अस्ति किम् ?
santoṣaḥ – (praviśya) hariḥ om | kārtikeyaḥ asti kim ?
சந்தோஷ் – (வீட்டில் நுழைந்து) வணக்கம் . கார்த்திகேயன் இருக்கிறாரா ?

कार्तिकेयः – अहो। सन्तोषः। स्वागतम्।
kārtikeyaḥ – aho| santoṣaḥ | svāgatam |
கார்த்திகேயன் – வணக்கம் சந்தோஷ் . வருக.

सन्तोषः – किं भोः। प्रातःकालात् आरभ्य बहुवारं भवते दूरभाषाम् अकरवं किन्तु कोऽपि न स्वीकरोति।
santoṣaḥ – kiṁ bhoḥ | prātaḥkālāt ārabhya bahuvāraṁ bhavate dūrabhāṣām akaravaṁ kintu ko’pi na svīkaroti |
சந்தோஷ் – காலை முதல் பலமுறை உங்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன், ஆனால் ஒருவரும் பேசவில்லை.

कार्तिकेयः – ह्यः आरभ्य एव दूरभाषा सम्यक् नास्ति। पञ्चवारं षड्वारं वा दूरभाषाकेन्द्राय सूचनां दत्तवान् अस्मि।
kārtikeyaḥ – hyaḥ ārabhya eva dūrabhāṣā samyak nāsti | pañcavāraṁ ṣaḍvāraṁ vā dūrabhāṣākendrāya sūcanāṁ dattavān asmi |
கார்த்திகேயன் – நேற்று முதல் தொலைபேசி வேலை செய்யவில்லை. நான்கு அல்லது ஐந்து முறை தொலைபேசி நிலையத்திற்கு புகார் செய்துள்ளேன்.

रविः – अस्तु अहं गच्छामि। श्वः आरभ्य परीक्षा भविष्यति।
raviḥ – astu ahaṁ gacchāmi | śvaḥ ārabhya parīkṣā bhaviṣyati |
ரவி – சரி , நான் செல்கிறேன். நாளை முதல் தேர்வு தொடங்கும்.

कार्तिकेयः – चायं स्वीकरोतु भोः। भ्वान् प्रथमवारं मम गृहम् आगतवान् अस्ति।
kārtikeyaḥ – cāyaṁ svīkarotu bhoḥ | bhvān prathamavāraṁ mama gṛham āgatavān asti |
கார்த்திகேயன் – தேநீர் அருந்துங்கள் . நீங்கள் முதல்முறையாக என்னுடைய வீட்டிற்கு வந்திருக்கிறீர்கள்.

रविः – मास्तु भोः। सप्ताहे एकवारं मङ्गलवासरे व्रतम् आचरामि। अतः इदानीं मन्दिरं गच्छामि।
raviḥ – māstu bhoḥ | saptāhe ekavāraṁ maṅgalavāsare vratam ācarāmi | ataḥ idānīṁ mandiraṁ gacchāmi |
ரவி – வேண்டாம் . வாரத்தில் ஒருமுறை செவ்வாய்கிழமையில் நோன்பு அனுசரிக்கிறேன். அதனால் இப்போது கோவிலுக்குச் செல்கிறேன்.

कार्तिकेयः -अस्तु धन्यवादः रवे। पुनः मिलामः।
kārtikeyaḥ -astu dhanyavādaḥ rave | punaḥ milāmaḥ |
கார்த்திகேயன் – சரி. நன்றி ரவி. மீண்டும் சந்திப்போம்.

अभ्यासः (abhyāsaḥ) பயிற்சி
एतेषु उचितशभ्देन रिक्तस्थानानि पूरयन्तु।
eteṣu ucitaśabhdena riktasthānāni pūrayantu |
சரியான வார்த்தைகளை உபயோகித்து கோடிட்ட இடங்களை நிரப்பவும்.

(एकवारम् , बहुवारम् , कदा आरभ्य , एकवारम् , वारं वारम् , अद्य आरभ्य )
( ekavāram , bahuvāram , kadā ārabhya , ekavāram , vāraṁ vāram , adya ārabhya )
(ஒருமுறை, பலமுறை , எப்போது முதல் , ஒருமுறை, பலமுறை (திரும்பத் திரும்ப) , இன்று முதல்)
उदा – दीपावली वर्षे एकवारं भवति।
udā – dīpāvalī varṣe ekavāraṁ bhavati |
உதா – தீபாவளி வருடத்தில் ஒருமுறை வருகிறது.

१. गुरुः छात्रान् ———— पाठयति।
guruḥ chātrān ———— pāṭhayati |
குரு மாணவர்களுக்கு ———– கற்பிக்கிறார்.

२ भवान् ——— पठिष्यति।
bhavān ——— paṭhiṣyati |
நீங்கள் ———- படிக்கிறீர்கள்.

३ वर्षे ——- वयं नवरात्रोत्सवम् आचरामः।
varṣe ——- vayaṁ navarātrotsavam ācarāmaḥ |
வருடத்தில் ———– நாம் நவராத்திரி பண்டிகை கொண்டாடுகிறோம்.

४. शिशुः दिने ——– दुग्धं पिबति।
śiśuḥ dine ——– dugdhaṁ pibati |
குழந்தை ஒருநாளில் ————– பால் குடிக்கிறது.

५ अहम् ——- सत्यं वदामि।
aham ——- satyaṁ vadāmi |
நான் ———– உண்மையைச் சொல்கிறேன்.

இன்று கற்றுக்கொண்ட புதிய வார்த்தைகளை வீட்டிலும் மற்றும் நண்பர்களுடன் பேசும்போதும் உபயோகிக்கவும் .

Series Navigation

About ரேவதி மணியன்

ரேவதி மணியன்

View all 22 articles →

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 33

This entry is in the series 20110424_Issue

ரேவதி மணியன்



சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் பகுதி 33

இந்த வாரம் तः …. पर्यन्तम् அதாவது இருந்து ….வரை என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

तः என்பதைப் பற்றி ஏற்கனவே सप्त ‘क’काराः வில் படித்திருக்கிறோம். சற்று நினைவுபடுத்திக்கொள்வோமா?

उदा 1 – एतत् लोकयानं कुतः आगतम् ?

एतत् लोकयानं मैसूरुतः आगतम् !

உதா 1 – இந்த பேருந்து எங்கிருந்து வந்துள்ளது ?

இந்தப் பேருந்து மைசூரிலிருந்து வந்துள்ளது.

उदा 2. – रामः बेङ्गलूरुतः शृङ्गेरी गतवान् !
ராமன் பெங்களூரிலிருந்து சிருங்கேரி சென்றான்.

ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஆரம்பித்து ஒரு குறிப்பிட்ட காலம் வரை அதாவது காலம், எல்லை , மற்றும் அளவு பற்றிக் குறிப்பிடும்போது तः …. पर्यन्तम् (taḥ… paryantam) உபயோகப் படுத்த வேண்டும்.

उदा – 1. १ : ०० तः २ : ०० पर्यन्तं मम विरामः। – कालः
1 : 00 taḥ 2 : 00 paryantaṁ mama virāmaḥ | – kālaḥ
1 : 00 மணி முதல் 2 :00 மணிவரை எனக்கு ஓய்வு நேரம் – காலம்
2. कन्याकुमारीतः हिमालयपर्यन्तं भारतम् ! – विस्तारः
kanyākumārītaḥ himālayaparyantaṁ bhāratam | – vistāraḥ
கன்யாகுமரிமுதல் இமாலயம் வரை பாரதம் உள்ளது – எல்லை

अभ्यासः 1 (abhyāsaḥ 1)

अत्र नारायणस्य दिनचर्या लिखिता अस्ति ! तां दृष्ट्वा वाक्यानि लिखतु !
கீழே நாராயணனுடைய தினசரி வேலைகள் எழுதப்பட்டு இருக்கிறது. அவைகளைப் பார்த்து வாக்கியங்களை அமைக்கவும்.

६ : ०० – ७ : ०० योगासनम्
6 : 00 – 7 : 00 yogāsanam (யோகாசனம்)

७ :१५ – ८ : १५ गृहपाठः
7 : 15 – 8 : 15 gṛhapāṭhaḥ (வீட்டுப்பாடம்)

१० : ०० – ५ :०० विद्यालयः
10 : 00 – 5 : 00 vidyālayaḥ (பள்ளி)

५ : ०० – ६ : ०० क्रीडा
5 : 00 – 6 : 00 krīḍā (விளையாட்டு)

६ : ३० – ७ : ३० अध्ययनम्
6 : 30 – 7 : 30 adhyayanam (படிப்பு)

१० : ०० – ५ : ०० निद्रा
10 : 00 – 5 : 00 nidrā (தூக்கம்)

1. नारायणः ६ : ०० तः ७ : ०० पर्यन्तं योगासनं करोति !
nārāyaṇaḥ 6 : 00 taḥ 7 : 00 paryantaṁ yogasanaṁ karoti |
நாராயணன் 6 : 00 லிருந்து 7 : 00 வரை யோகாசனம் செய்கிறான்.

2. नारायणः ——- ——– ———- ———– गृहपाठं लिखति !
nārāyaṇaḥ ——— ——– ——– ——— gṛhapāṭhaṁ likhati |
நாராயணன் ——– ——- ——— ——— வீட்டுப்பாடம் எழுதுகிறான்.

3. ———- ———— ———- ———— ———- विद्यालये पठति !
———- ———– ———– ———– ———– vidyālaye paṭhati !
——– ———– ———– ———- ——— பள்ளியில் படிக்கிறான்.

4. ———– ——– ———- ———- ———– क्रीडति !
——— ———- ——— ——— ———- krīḍati !
——— ———- ——— ———- ——– விளையாடுகிறான்.

5. ———- ———– ——— ———- ——— अध्ययनं करोति !
———- ——– ———- ———- ——— adhyananaṁ karoti !
———- ———- ——— ——– ——— படிக்கிறான்.

6. ——— ——— ——— ——— ———– निद्रां करोति !
——— ——— ———- ——– ——— nidrāṁ karoti |
——— ——— ——— ———– ——— தூங்குகிறான்.

கீழேயுள்ள உரையாடலை கவனிப்போமா?

पतिः – अद्य प्रातः कालतः वृष्टिः। रात्रिपर्यन्तम् अपि एवम् एव इति भाति।
adya prātaḥ kālataḥ vṛṣṭiḥ | rātriparyantam api evam eva iti bhāti|
கணவன் – இன்று அதிகாலையிலிருந்து மழை. இரவுவரை கூட இப்படித்தான் இருக்கும் போல் தெரிகிறது.

पत्नि – आम्। मद्याह्ने गोपालः आगतवान् आसीत्।
patni – ām | madyāhne gopālaḥ āgatavān āsīt |
மனைவி – ஆம் ! மதியம் கோபாலன் வந்து இருந்தார்.
पतिः – किम् उक्तवान् सः ?
patiḥ – kim uktavān saḥ
கணவன் – அவன் என்ன சொன்னான் ?

पत्नी – ’सायं षड्वादननन्तरम् आगमिष्यामि ’ इति उक्त्वा गतवान्। सः द्विवादने भवतः कार्यालयं प्रति दूरवाणीं कृतवान् आसीत्।
patnī – sāyaṁ ṣaḍvādananantaram āgamiṣyāmi iti uktvā gatavān | saḥ dvivādane bhavataḥ kāryālayaṁ prati dūravāṇīṁ kṛtavān āsīt |
மனைவி – ’ மாலை ஆறு மணிக்குப்பிறகு வருகிறேன்’ என்று கூறிவிட்டுச் சென்றார். அவர் இரண்டு மணிக்கு உங்களுடைய அலுவலகத்திற்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டதாகக் கூறினார்.

पतिः – सार्धेकवादनतः सार्धद्विवादनपर्यन्तम् अस्माकं भोजनविरामः।
patiḥ – sārdhekavādanataḥ sārdhadvivādanaparyantam asmākaṁ bhojanavirāmaḥ |
கணவன் – ஒன்றரை மணிமுதல் இரண்டரை மணிவரை எங்களுக்கு சாப்பாட்டு நேரம்.

पत्नी – पादोनचतुर्वादने भवान् कुत्र गतवान् आसीत् ?
patnī – pādonacaturvādane bhavān kutra gatavān āsīt ?
மனைவி – ஐந்து மணிக்கு நீங்கள் எங்கே போயிருந்தீர்கள் ?

पतिः – सार्धत्रिवादनतः चतुर्वादनपर्यन्तम् अहम् अधिकारिणः प्रकोष्ठे आसम्। किमर्थं प्रुष्टवती भवती ?
patiḥ – sārdhatrivādanataḥ caturvādanaparyantam aham adhikāriṇaḥ prakoṣṭhe āsam | kimarthaṁ pruṣṭavatī bhavatī ?
கணவன் – மூன்றரை மணியிலிருந்து நான்கு மணிவரை நான் மேலதிகாரியின் அறையில் இருந்தேன். எதற்காக கேட்டாய் ?

पत्नी – गोपालः उक्तवान् – ‘पादोनचतुर्वादने अपि दूरवाणिं कृतवान् आसम् ‘ इति। सः एकं शीतकं क्रेतुम् इच्छाति इति भाति।
patnī – gopālaḥ uktavān – pādonacaturvādane api dūravāṇiṁ kṛtavān āsam iti | saḥ ekaṁ śītakaṁ kretum icchati iti bhāti |
மனைவி – கோபாலன் சொன்னார் , ’’ ஐந்து மணிக்குக்கூட தொலைபேசியில் கூப்பிட்டிருந்தேன் ‘ என்று. அவன் ஒரு குளிர்சாதனப்பெட்டி வாங்க விரும்புகிறார் என்று எண்ணுகிறேன்.

पतिः – तर्हि सः ऋणरूपेण धनम् इच्छति इति भाति। कियत् धनम् आवश्यकम् इति किमपि उक्तवान् वा सः ?
patiḥ – tarhi saḥ ṛṇarūpeṇa dhanam icchati iti bhāti | kiyat dhanam āvaśyakam iti kimapi uktavān vā saḥ ?
கணவன் – அப்படியானால் அவர் கடனாக பணத்தைப் பெற விரும்பிகிறார் என்று நினைக்கிறேன். எத்தனை பணம் தேவை என்று அவர் கூறினாரா ?

पत्नी – न। ‘सायं मेलिष्यमि ‘ इति उक्रवान् सः। ‘अस्तु ‘इति अहम् उक्तवती।
patnī – na| ‘sāyaṁ meliṣyami’ iti ukravān saḥ | ‘astu’ iti aham uktavatī|
மனைவி – இல்லை . ‘மாலையில் சந்திப்பேன் ‘ என்று கூறினார். ‘சரி’ என்று நான் கூறினேன்.

एतां विनोदकथां पठन्तु :- (etāṁ vinodakathāṁ paṭhantu )
இந்த சிறுகதையை படிக்கவும்.

कश्चन ग्रामीणः नगरदर्शनार्थं महानगरं गतवान्। यदा बुभुक्षा आसीत् तदा सः एकं भोजनालयं गत्वा पृष्टवान् – ”अत्र भोजनस्य अल्पाहारस्य च समयः कः ?” इति।
तदा भोजनालयस्वामी उक्तवान् – ” प्रातः सप्तवादनतः एकादशवादनपर्यन्तम् अल्पाहारः। मध्याह्ने द्वादशवादनतः त्रिवादनपर्यन्तं भोजनम् , सायं पञ्चवादनतः रात्रौ दशवादनपर्यन्तं
रात्रिभोजनम् “ इति।
एतस्य श्रवणानन्तरं सः ग्रामीणः पृष्टवान् – ” महाशय। यदि एतावान् कालः अल्पाहारार्थं मध्याह्ने भोजनार्थं रात्रिभोजनार्थं च भवति तर्हि मम नगरदर्शनं कदा भविष्यति “ इति।

kaścana grāmīṇaḥ nagaradarśanārthaṁ mahānagaraṁ gatavān | yadā bubhukṣā āsīt tadā saḥ ekaṁ bhojanālayaṁ gatvā pṛṣṭavān – atra bhojanasya alpāhārasya ca samayaḥ kaḥ iti |

tadā bhojanālayasvāmī uktavān – prātaḥ saptavādanataḥ ekādaśavādanaparyantam alpāhāraḥ | madhyāhne dvādaśavādanataḥ trivādanaparyantaṁ bhojanam sāyaṁ pañcavādanataḥ rātrau daśavādanaparyantaṁ rātribhojanam iti |

etasya śravaṇānantaraṁ saḥ grāmīṇaḥ pṛṣṭavān -mahāśaya | yadi etāvān kālaḥ alpāhārārthaṁ madhyāhne bhojanārthaṁ rātribhojanārthaṁ ca bhavati tarhi mama nagaradarśanaṁ kadā bhaviṣyati iti|

ஒரு கிராமத்துக்காரர் நகரத்தைப் பார்ப்பதாக பெரிய நகரத்திற்குச் சென்றார். எப்போது பசி எடுத்ததோ அப்போது உணவு விடுதிக்குச் சென்று ,
” இங்கு சாப்பாடு மற்றும் சிற்றுண்டி எந்த சமயத்தில் கிடைக்கும் ? ” என்று கேட்டார்.

அப்போது உணவுவிடுதியாளர் , “ காலையில் ஏழுமணியிலிருந்து பதினோரு மணிவரை சிற்றுண்டி கிடைக்கும். மதியம் பனிரெண்டு மணி முதல் மூன்று மணி வரை மதிய உணவு , மாலை ஐந்து மணியிலிருந்து இரவு பத்து மணிவரை இரவுச் சாப்பாடு “ என்று கூறினார்.

அவருடைய பேச்சைக் கேட்டபின் அந்த கிராமத்துக்காரர் ,” மதிப்பிற்குறியவரே ! இப்படி எல்லா நேரமும் சிற்றுண்டி, மதிய உணவு மற்றும் இரவு உணவு இருக்கும் என்றால் நகரத்தை நான் எப்போது சுற்றிப் பார்ப்பேன் ? “ என்று கேட்டார்.

अभ्यासः 2 (abhyāsaḥ 2)
अत्र प्रधानमन्त्रिणः कार्यक्रमस्य विवरणम् अस्ति। तत् दृष्ट्वा सः कदा कुत्र तिष्ठति इति लिखन्तु !
atra pradhānamantriṇaḥ kāryakramasya vivaraṇam asti | tat dṛṣṭvā saḥ kadā kutra tiṣṭhati iti likhantu !

இங்கு முதலமைச்சரின் காரியத்திட்டம் உள்ளது. அதைப் பார்த்து அவர் எப்போது , எங்கே இருக்கிறார் என்று எழுதுங்கள்.

जनवरी १(1) ७ (7) मुम्बयी (mumbayī )
janavarī
८ ( 8) १३ (13) चेन्नै (cennai)
१४ (15) १७ (17) कोल्कत्ता (kolkattā)
१८ (18) २० (20) देहली (dehalī)

उदा –
1. जनवरी १ तः ७ पर्यन्तं प्राधानमन्त्री मुम्बयीनगरे तिष्ठति।
janavarī 1 taḥ 7 paryantaṁ prādhānamantrī mumbayīnagare tiṣṭhati |
ஜனவரி 1 முதல் 7 வரை முதலமைச்சர் மும்பையில் இருக்கிறார்.

2. —————————————————————– !

3. ——————————————————————- !

4. —————————————————————– !

5. —————————————————————— !

Series Navigation

About ரேவதி மணியன்

ரேவதி மணியன்

View all 22 articles →

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 32

This entry is in the series 20110410_Issue

ரேவதி மணியன்



சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் பகுதி 32

இந்த வாரம் च, एव, इति மற்றும் अपि ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

கீழே உள்ள உரையாடலை கவனிப்போமா ?

वरुणः – ” भोः मित्र ! कुत्र गच्छति भवान ?” (“bhoḥ mitra kutra gacchati bhavān ?” )
வருண் – “ ஓ நண்ப ! நீங்கள் எங்கே செல்கிறீர் ?”

कुमारः – “प्रवासार्थं गच्छामि !” (” pravāsārthaṁ gacchāmi |”)
குமார் – “ பயணம் செல்கிறேன் “

वरुणः – ” के के गच्छन्ति ?” (” ke ke gacchanti ?”)
வருண் – “யார் யார் செல்கிறார்கள் ?”

कुमारः – “अहं , श्रीनिधिः , भास्करः , विमला च गच्छामः ! मेखला अपि आगच्छामि इति उक्तवती ! सा आगच्छति वा न वा इति न जानामि !”
(” ahaṁ śrīnidhiḥ bhāskaraḥ vimalā ca gacchāmaḥ | mekhalā api āgacchāmi iti uktavatī | sā āgacchati vā na vā iti na jānāmi |”)

குமார் – “ நான், ஸ்ரீநிதி, பாஸ்கர் மற்றும் விமலா செல்கிறோம். மேகலா கூட வருகிறேன் என்று சொன்னாள். அவள் வருகிறாளா வரவில்லையா என்று எனக்குத் தெரியாது.”

वरुणः – ” सा न आगच्छति एव ! ” (“sā na āgacchati eva |”)
வருண் – “அவள் வரமாட்டாள்”

कुमारः – ” भवान् कथं जानाति ?” (” bhavān kathaṁ jānāti ?”)
குமார் – “ உங்களுக்கு எப்படித் தெரியும் ?”

वरुणः – ” तस्याः गृहे कोऽपि कार्यक्रमः अस्ति ! अतः सा प्रवासार्थम् आगन्तुं न शक्नोति !”
(” tasyāḥ gṛhe ko’pi kāryakramaḥ asti | ataḥ sā pravāsārthaṁ āgantuṁ na śaknoti |”)

வருண் – “ அவளுடைய வீட்டில் ஏதோ விஷேசம் இருக்கிறது. அதனால் அவள் பயணத்திற்கு வர முடியாது. “

कुमारः – “एवं वा ? कः कार्यक्रमः ? (” evaṁ vā kaḥ kāryakramaḥ ? “)
குமார் – “ அப்படியா ? என்ன விஷேசம் ?”

वरुणः – ” तस्याः भ्रातुः जन्मदिनम् ! ” (” tasyāḥ bhrātuḥ janmadinam |” )
வருண் – “அவளுடைய சகோதரனின் பிறந்தநாள். “

कुमारः – “तर्हि सा न आगच्छति एव ! वयं गच्छामः !” (” tarhi sā na āgacchati eva | vayaṁ gacchāmaḥ |” )
குமார் – “ அப்படியானால் அவள் வரமாட்டாள். நாம் செல்வோம்.”

च (ca ) மற்றும்

1. रामः कृष्णः गोविन्दः च गच्छन्ति ! (rāmaḥ kṛṣṇaḥ govindaḥ ca gacchanti |)
ராமன், கிருஷ்ணன் மற்றும் கோவிந்தன் செல்கிறார்கள்.
2. बालकः संस्कृतं गणितं विज्ञानं च पठति ! (bālakaḥ saṁskṛtaṁ gaṇitaṁ vijñānaṁ ca paṭhati |)
சிறுவன் சமஸ்கிருதம், கணிதம் மற்றும் விஞ்ஞானம் படிக்கிறான்.

च (ca ) அதாவது ’மற்றும்’ என்பது முதல் வாக்கியத்தில் எழுவாயின் இறுதியிலும் , இரண்டாவது வாக்கியத்தில் செயப்படுபொருள்களின் இறுதியில் இருப்பதையும் காணலாம். ‘रामः कृष्णः च गोविन्दः गच्छन्ति ! ’ என்பது தவறான வாக்கியம். தமிழ் ,கன்னட, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் ’மற்றும்’ என்பது வாக்கியத்தின் மத்தியில் வருவதை கவனிக்கவும்

एव (eva) மட்டும்
1. रामः अन्नम् एव खादति ! (rāmaḥ annam eva khādati |) ( फलं रोटिकां वा रामः न खादति इत्यर्थः !)
ராமன் சாதம் மட்டும் சாப்பிடுகிறான். (ராமன் பழமோ ரொட்டியோ சாப்பிடவில்லை என்று பொருள்.)

2. रामः एव फलं खादति ! (rāmaḥ eva phalam khādati |) ( कृष्णः गोविन्दः वा फलं न खादति इत्यर्थः ! )
ராமன் மட்டும் பழம் சாப்பிடுகிறான். (கிருஷ்ணனோ, கோவிந்தனோ பழம் சாப்பிடவில்லை என்று பொருள். )

3. रामः फलं खादति एव ! (rāmaḥ phalam khādati eva |) ( रामः न पश्यति, न ददाति , अपि तु खादति एव इति अर्थः !)
ராமன் பழத்தை உண்ணும் செயல் மட்டும் தான் செய்கிறான். (ராமன் பார்க்கவில்லை, கொடுக்கவில்லை ஆனால் சாப்பிடுகிறான்தான் என்று பொருள்)

மேலே உள்ள உதாரணங்களில் இருந்து ‘एव’ (eva) என்பதை வாக்கியத்தில் எங்கு சேர்க்கிறோமோ அதற்குத் தகுந்தாற்போல் வாக்கியத்தின் அர்த்தம் மாறுவதை கவனிக்கவும்.

इति (iti )என்று

1. ‘ सत्यं वद ! धर्मं चर ! ‘ इति तैत्तिरियोपनिषत् वदति ! (‘ satyaṁ vada | dharmaṁ cara |’ iti taittiriyopaṇiṣat vadati |)
“உண்மை பேசு ! தர்மத்தை பின்பற்று !’ என்று தைத்திரிய உபநிடதம் சொல்கிறது.

2. ‘उत्तिष्ठत जाग्रत’ इति स्वामी विवेकानन्दः वदति ! (‘ uttiṣṭhata jāgrata ‘ iti svāmī vivekānandaḥ vadati |)
“எழுமின் , விழிமின்” என்று சுவாமி விவேகானந்தர் சொல்கிறார்.

अपि (api) கூட

1. रामः अपि फलं खादति ! (rāmaḥ api phalaṁ khādati |)
ராமன் கூட பழம் சாப்பிடுகிறான்.

2. रामः फलं अपि खादति ! (rāmaḥ phalam api khādati |)
ராமன் பழம் கூட சாப்பிடுகிறான்.

3. रामः फलं खादति अपि ! (rāmaḥ phalaṁ khādati api |)
(रामः फलं पश्यति, ददाति, सङ्गृह्णाति ! तथैव खादति अपि इत्यर्थः)
(rāmaḥ phalaṁ paśyati dadāti aṅgṛhṇāti | tathaiva khādati ityarthaḥ)
(ராமன் பழத்தை பார்க்கிறான், கொடுக்கிறான், சேகரிக்கிறான். அதுபோல சாப்பிடுகிறான். )
ராமன் பழம் சாப்பிடுகிறான் கூட .

4. कृष्णः फलं खादति ! रामः अपि फलं खादति ! (kṛṣṇaḥ phalaṁ khādati | rāmaḥ api phalaṁ khādati |)
கிருஷ்ணன் பழம் சாப்பிடுகிறான் . ராமன் கூட பழம் சாப்பிடுகிறான்.

5. सः कथां पठति ! सः कविताम् अपि पठति ! (saḥ kathāṁ paṭhati | saḥ kavitām api paṭhati |)
அவன் கதை படிக்கிறான். அவன் காவியம் கூட படிக்கிறான்.

अभ्यासः 1 (abhyāsaḥ 1) பயிற்சி 1

अधः लघुवाक्यानि सन्ति ! ‘च’कारं प्रयुज्य तानि एकवाक्यत्वेन लिखन्तु ! (adhaḥ laghuvākyāni santi | ca kāraṁ prayujya tāni ekavākyatvena likhantu |)
கீழே சுலபமான வாக்கியங்கள் இருக்கின்றன. ‘மற்றும்’ என்பதை உபயோகித்து ஒரே வாக்கியமாக எழுதுங்கள்.

उदा – विष्णुः गच्छति ! श्रीधरः गच्छति ! श्रीशः गच्छति ! (viṣṇuḥ gacchati | śrīdharaḥ gacchati | śrīśaḥ gacchati |)
विष्णुः श्रीधरः श्रीशः च गच्छन्ति ! (viṣṇuḥ śrīdharaḥ śrīśaḥ ca gacchanti |)

உதா – விஷ்ணு செல்கிறான் . ஸ்ரீதர் செல்கிறான். ஸ்ரீஷ் செல்கிறான்.
விஷ்ணு ஸ்ரீதர் மற்றும் ஸ்ரீஷ் செல்கிறார்கள்.

1. सीता पठति ! गीता पठति ! लता पठति ! (sītā paṭhati | gītā paṭhati | latā paṭhati |)
சீதா படிக்கிறாள். கீதா படிக்கிறாள். லதா படிக்கிறாள்.

2. अहं फलं खादामि ! मधुरं खादामि ! रोटिकां खादामि ! (ahaṁ phalaṁ khādāmi | madhuraṁ khādāmi | roṭikāṁ khādāmi |)
நான் பழம் சாப்பிடுகிறேன். இனிப்பு சாப்பிடுகிறேன். ரொட்டி சாப்பிடுகிறேன்.

3. बालकाः क्रीडन्ति ! बालिकाः क्रीडन्ति ! तरुणाः क्रीडन्ति ! (bālakāḥ krīḍanti | bālikāḥ kriḍanti | taruṇāḥ krīḍanti |
சிறுவர்கள் விளையாடுகிறார்கள்.சிறுமிகள் விளையாடுகிறார்கள். இளவயதினர்கள் விளையாடுகிறார்கள்.
4. बान्धवाः मैसूरुतः आगताः ! मद्रास्तः आगताः ! देहलीतः आगताः ! ( bāndhavāḥ maisūrutaḥ āgatāḥ | madrāstaḥ āgatāḥ | dehalītaḥ āgatāḥ )
சொந்தக்காரர்கள் மைசூரிலிருந்து வந்திருக்கிறார்கள். மதராஸிலிருந்து வந்திருக்கிறார்கள். டெல்லியிலிருந்து வந்திருக்கிறார்கள்.

5. भवान तस्य कार्यं करोतु, मम कार्यं करोतु, एतस्य कार्यं करोतु ! (bhavān tasya kāryaṁ karotu, mama kāryaṁ karotu , etasya kāryaṁ karotu !)
நீங்கள் அவனுடைய வேலையை செய்யுங்கள், என்னுடைய வேலையை செய்யுங்கள், இவனுடைய வேலையை செய்யுங்கள்.

अभ्यासः 2 (abhyāsaḥ 2) பயிற்சி 2

उदारणानुसारं वाक्यानि रचयन्तु ! (udāraṇānusāraṁ vākyāni racayantu |)
உதாரணத்தைப் பார்த்து வாக்கியங்களை அமைக்கவும்.

उदा – रामः गच्छति ! कृष्णः गच्छति ! (rāmaḥ gacchati | kṛṣṇaḥ gacchati |)
रामः गच्छति ! कृष्णः अपि गच्छति ! (rāmaḥ gacchati kṛṣṇaḥ api gacchati |)

உதா – ராமன் செல்கிறான். கிருஷ்ணன் செல்கிறான்.
ராமன் செல்கிறான். கிருஷ்ணன் கூட செல்கிறான்.

1. बालिकाः क्रीडन्ति ! बालकाः क्रीडन्ति ! (bālikāḥ krīḍanti | bālakāḥ krīḍanti |)
சிறுமிகள் விளையாடுகிறார்கள். சிறுவர்கள் விளையாடுகிறார்கள்.

2. अहम् इतिहासं पठामि ! विज्ञानं पठामि ! (aham itihāsaṁ paṭhāmi | vijñānaṁ paṭhāmi |)
நான் இதிகாசம் படிக்கிறேன். விஞ்ஞானம் படிக்கிறேன்.

3. सः द्विचक्रिकया गच्छति ! कार्यानेन गच्छति ! (saḥ dvicakrikayā gacchati | kāryānena gacchati |)
அவன் சைக்கிளில் செல்கிறான். காரில் செல்கிறான்.

4. कुटुम्बस्य पोषणं करोतु ! समाजस्य पोषणं करोतु ! (kuṭumbasya poṣaṇaṁ karotu | samājasya poṣaṇaṁ karotu |)
குடும்பத்தை பேணி வளர். சமூகத்தைப் பேணி வளர்.
5. सः पठनं जानाति ! सम्भाषणं जानाति ! (saḥ paṭhanaṁ jānāti | sambhāṣaṇaṁ jānāti |)
அவனுக்குப் படிக்கத் தெரியும். பேசவும் தெரியும்.

कथा (kathā)
गणेशः (gaṇeśaḥ)
गणेशः गुहः च परमेश्वरस्य पार्वत्याः च पुत्रद्वयम् ! एकदा नारदः कैलासपर्वतम् आगतवान् ! सः एकम् उत्तमं फलं परमेश्वराय दत्तवान् ! ‘फलं एकम् एव! मम तु पुत्रद्वयम् ! किं करोमि ?’ इति शिवः चिन्तितवान् ! अन्ते सः ‘एकां परीक्षां करोमि ‘ इति निश्चितवान् ! पुत्रद्वयम् आहूय – ‘ यः एतस्य लोकस्य प्रदक्षिणं प्रथमं करोति , तस्मै एव फलं ददामि ‘ इति उक्तवान् !
सुब्रह्मण्यः मयूरम् आरूह्य लोकस्य प्रदक्षिणं कर्तुम् उद्युक्तः अभवत् !
विघ्नेश्वरः तथा कर्तुं न शक्तः , यतः तस्य शरीरं स्थूलम् आसीत् , तस्य वाहनं तु मन्दं गच्छति ! क्षणं चिन्तयित्वा सः जनकं पृष्टवान् , “हे जनक! एतस्मात् लोकात श्रेष्ठतरः कः ?” इति ! शिवः उत्तरं दत्तवान् – “पिता माता इति द्वयम् एव लोकात् श्रेष्ठतरम् ” इति ! ‘मातापितृप्रदक्षिणं करोमि चेत् , तत् कार्यं लोकप्रदक्षिणस्य समम् एव ‘ इति चिन्तयित्वा गणेशः तथा कृतवान् ! सन्तुष्टः शिवः तस्मै एव फलं दत्तवान् !

gaṇeśaḥ guhaḥ ca parameśvarasya pārvatyāḥ ca putradvayam| ekadā nāradaḥ kailāsaparvatam āgatavān | saḥ ekam uttamaṁ phalaṁ parameśvarāya dattavān | phalaṁ ekam eva | mama tu putradvayam| kiṁ karomi iti śivaḥ cintitavān| ante saḥ ekāḥ parīkṣāṁ karomi iti niścitavān | putradvayam āhūya – ‘ yaḥ etasya lokasya pradakṣiṇaṁ prathamaṁ karoti tasmai eva phalaṁ dadāmi’ iti uktavān|

subrahmaṇyaḥ mayūram ārūhya lokasya pradakṣiṇaṁ kartum udyuktaḥ abhavat |

vighneśvaraḥ tathā kartuṁ na śaktaḥ yataḥ tasya śarīraṁ sthūlam āsīt tasya vāhanaṁ tu mandaṁ gacchati | kṣaṇaṁ cintayitvā saḥ janakaṁ pṛṣṭavān ”he janka| etasmāt lokāt śreṣṭhataraḥ kaḥ” iti | śivaḥ uttaraṁ dattavān ”pitā mātā iti dvayam ev lokāt śreṣṭhataram” iti |”matāpitṛpradakṣiṇaṁ karomi cet tat kāryaṁ lokapradakṣiṇasya samam eva” iti cintayitvā gaṇeśaḥ tathā kṛtavān | santuṣṭaḥ śivaḥ tasmai eva palaṁ dattavān |

கணேசன் மற்றும் குகன் பார்வதி பரமேஸ்வரனுடைய இரு குழந்தைகள். ஒருமுறை நாரதர் கைலாசம் வந்தார். அவர் ஒரு நல்ல பழம் பரமேஸ்வரனுக்குக் கொடுத்தார். ‘பழம் ஒன்று மட்டுமே உள்ளது. எனக்கு இரு புத்திரர்கள் இருக்கிறார்கள் , என்ன செய்வேன் ?” என்று சிவன் யோசித்தார். இறுதியில் அவர், “ஒரு தேர்வு செய்கிறேன் ‘ என்று நிச்சயம் செய்தார். புதல்வர்கள் இருவரையும் அழைத்து ,’ யார் இந்த உலகத்தை முதலில் வலம் வருகிறீர்களோ அவர்களுக்குத்தான் பழம் கிடைக்கும்’ என்று கூறினார்.

சுப்பிரமணியன் மயில் மேல் அமர்ந்து உலகத்தை சுற்றிவர ஆயத்தமானார்.

விக்னேஷ்வரர் அப்படிச் செய்ய முடியாது ஏனெனில் அவருடைய சரீரம் பெரியதாக இருந்தது , அவருடைய வாஹமோ மெதுவாக செல்லக்கூடியது. ஒரு கணம் சிந்தித்துவிட்டு அவர் அப்பாவிடம் , ”அப்பா ! இந்த உலகத்தைவிட மேன்மை உடையவர்கள் யார் ?” என்று கேட்டார். சிவன் , ”அப்பா அம்மா இருவர்தான் உலகத்தைவிட மேன்மை உடையவர்கள்” என்று பதில் அளித்தார். தாய்தந்தையரை வலம் வந்தால் அந்த காரியம் உலகத்தை வலம் வந்ததற்குச் சமம் “ என்று நினைத்து கணேசன் அதுபோலவே செய்தார். மகிழ்ச்சியடைந்த சிவன் அவருக்கு பழத்தைக் கொடுத்தார்.

Series Navigation

About ரேவதி மணியன்

ரேவதி மணியன்

View all 22 articles →

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 31

This entry is in the series 20110327_Issue

ரேவதி மணியன்



இந்த வாரம் यदि – तर्हि ( yadi – tarhi)அதாவது If – then (ஆல் – பிறகு) என்ற நிபந்தனைக்கு உட்பட்ட (Conditional) வாக்கியங்களைப் பற்றிப் பார்ப்போம். உதாரணமாக “यदि समयः अस्ति तर्हि अहम् आगच्छामि ! ” (yadi samayaḥ asti tarhi aham āgacchāmi |) ” நேரம் இருந்தால் பிறகு நான் வருகிறேன் “ என்ற வாக்கியத்தை எடுத்துக்கொள்வோம். இதில் இரண்டு பாகங்கள் இருக்கின்றன.

1. समयः अस्ति ! (samayaḥ asti ) – कारणवाक्यम् (kāraṇavākyam)
2. अहम् आगच्छामि ! (aham āgacchāmi ) – कार्यवाक्यम् (kāryavākyam)

இதுபோல ஒரு வாக்கியத்தில் காரணம் மற்றும் செயல் இரண்டும் இருக்குமேயானால் ”यदि – तर्हि” (yadi – tarhi)உபயோகிக்கவேண்டும்.
’यदि – तर्हि’ க்கு பதிலாக ‘चेत् , नोचेत्’ (இருந்தால், இல்லையென்றால் )உபயோகப்படுத்தலாம். அர்த்தம் மாறாது. எப்போதும் வாக்கியத்தில் ‘यदि’ என்பதை உபயோகித்தால் கண்டிப்பாக ‘तर्हि’உபயோகிக்க வேண்டும். அதே வாக்கியத்தில் ‘चेत्’ என்பதை உபயோகிக்கக்கூடாது. இதுபற்றிப் பிறகு விரிவாகப் படிப்போம்.

अभ्यासः 1 (abhyāsaḥ 1) பயிற்சி 1

अत्र वाक्यद्वयं लिखितम् अस्ति ! ‘यदि – तर्हि’ इति योजयित्वा एकं वाक्यं कृत्वा लिखतु : – (atra vākyadvayaṁ likhitam asti | yadi – tarhi iti yojayitvā ekaṁ vākyaṁ kṛtvā likhatu !)
இங்கு இரண்டு வாக்கியங்கள் எழுதப்பட்டு இருக்கிறது. ‘ஆல் – பிறகு’ என்பதுடன் இணைத்து ஒரே வாக்கியமாக எழுதவும்.

उदा : (udā) உதாரணம் –

विद्युत अस्ति ! दीपः ज्वलति ! (vidyut asti | dīpaḥ jvalati |)
மின்சாரம் இருக்கிறது . விளக்கு எரிகிறது.

यदि विद्युत अस्ति तर्हि दीपः ज्वलति ! (yadi vidyut asti tarhi dīpaḥ jvalati |)
மின்சாரம் இருப்பதால்(இருந்தால்) விளக்கு எரிகிறது.

1. स्नानं न करोति ! शरीरं मलिनं भवति ! (snānaṁ na karoti | śarīraṁ malinaṁ bhavati |)
குளிக்கவில்லை. உடல் அழுக்கடையும்.

2. कार्यालयस्य विरामः अस्ति ! चलनचित्रं पश्यामि ! (kāryālayasya virāmaḥ asti | calanacitraṁ paśyāmi |)
அலுவலக விடுமுறை. திரைப்படம் பார்க்கிறேன்.

3. आत्मविश्वासः अस्ति ! सर्वं सुलभं भवति ! (ātmaviśvāsaḥ asti | sarvaṁ sulabhaṁ bhavati |)
தன்னம்பிக்கை இருக்கிறது. அனைத்தும் சுலபமாக அமையும்.

4. सर्वे सत्कार्यँ कुर्वन्ति ! देशस्य उन्नतिः भवति ! (sarve satkāryaṁ kurvanti | deśasya unnatiḥ bhavati |)
அனைவரும் நல்ல காரியங்களைச் செய்கிறார்கள். நாட்டின் முன்னேற்றம் ஏற்படும்.

5. मूल्यं न्यूनम् अस्ति ! फलानि क्रीणामि ! (mūlyaṁ nyūnam asti | phalāni krīṇāmi |
விலை குறைவாக இருக்கிறது. பழங்கள் வாங்குகிறேன்.

6. भवति विपणिं गच्छति ! अहमपि आगच्छामि ! (bhavati vipaṇiṁ gacchati | ahamapi āgacchāmi |)
நீங்கள்(பெண்பால்) கடைக்குச் செல்கிறீர். நானும் கூட வருகிறேன்.

7. भवान् न पठति ! परीक्षायाम् उत्तीर्णः न भवति ! (bhavān na paṭhati | parīkṣāyām uttīrṇaḥ na bhavati |)
நீங்கள் (ஆண்பால்) படிக்கவில்லை. தேர்வில் வெற்றியடைய முடியாது.

8. छात्राः न सन्ति ! कथं पाठं करोमि ? (chātrāḥ na santi | kathaṁ pāṭhaṁ karomi ?)
மாணவர்கள் இல்லை. எப்படி பாடம் எடுப்பேன் ?

9. लोकयानं वेगेन न गच्छति ! समये तत्र न प्राप्नुमः ! (lokayānaṁ vegena na gacchati | samaye tatra na prāpnumaḥ |)
பேருந்து விரைவாகச் செல்லவில்லை. சரியான சமயத்தில் அங்கு சென்றடையமாட்டோம்.

अभ्यासः 2 (abhyāsaḥ 2) பயிற்சி 2

अधः शब्दद्वयं निर्दिष्टम् अस्ति ! पूर्वार्ध प्रथमशब्दम् , उत्तरार्ध द्वितीयशब्दं च प्रयुज्य ‘यदि – तर्हि’ युक्तानि लिखन्तु !
adhaḥ śabdadvayaṁ nirdiṣṭam asti | pūrvārdha prathamaśabdam uttarārdha dvitīyaśabdaṁ ca prayujya ’yadi -tarhi’ yuktāni likhantu |
கீழே இரண்டு வார்த்தைகள் உள்ளன. முதல் வார்த்தை, இரண்டாவது வார்த்தை இரண்டையும் ‘ஆல் – பிறகு’என்பதுடன் இணைத்து வாக்கியங்களை அமைக்கவும்.

उदा – निद्रा – शयनम् (nidrā – śayanam)

यदि निद्रा आगच्छति तर्हि शयनं करोतु ! (yadi nidrā āgacchati tarhi śayanam karotu |)
தூக்கம் வந்தால் படுத்துறங்கு.

1. ज्वरः – औषधम् (jvaraḥ – auṣadham) காய்ச்சல் – மருந்து
———- ———— अस्ति ———— ————– पिबतु !

2. बुभुक्षा – भोजनम् (bubhukṣā – bhojanam) பசி – சாப்பாடு
———- ———— ———- —————– ————— करोतु !

3. पिपासा – जलम् (pipāsā – jalam) தாகம் – தண்ணீர்

—————– —————– ————— ————- ———— पिबतु!

4. धनम् – उद्योगः (dhanam – udyogaḥ) பணம் – வேலை
———— —————- आवश्यकं ———— ————- करोतु !

5. शान्तिः – आश्रमः (śantiḥ – āśramaḥ) மன அமைதி – ஆசிரமம்

———– ————— आवश्यकी ——— ————– गच्छतु !

6. चाकलेहः – आपणः (cākalehaḥ – āpaṇaḥ) சாக்கலேட் – கடை
————- ———— आवश्यकः ——– ————– गच्छतु !

7. तृप्तिः – समाजसेवा (tṛptiḥ – samājasevā) மனநிறைவு – சமூக சேவை
————– ———— आवश्यकी ———– —————- करोतु !

அடுத்த வாரம் சமஸ்கிருதத்தில் சாதாரணமாக பேச்சு வழக்கில் உபயோகப்படுத்தக்கூடிய ‘ च, एव, इति, अपि’ ஆகியவைகளைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

Series Navigation

About ரேவதி மணியன்

ரேவதி மணியன்

View all 22 articles →

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 30

This entry is in the series 20110320_Issue

ரேவதி மணியன்


सम्बोधनरूपाणि ( sambodhanarūpāṇi) விளி வேற்றுமை (எட்டாம் வேற்றுமை)பற்றி இந்த வாரம் அறிந்து கொள்வோம். ’விளித்தல்” என்றால் ‘அழைத்தல்’ என்று பொருள். இதற்கு தனியாக வேற்றுமை உருபு கிடையாது. இது முதல் வேற்றுமையின் (प्रथमा विभक्तिः)சிறிய மாறுபாடு மட்டுமே. இது सम्बोधनाविभक्तिः (sambodhanāvibhaktiḥ )என்றும் அழைக்கப்படுகிறது.

ஒருவரை அழைக்கும்போது सम्बोधनाविभक्तिः (sambodhanāvibhaktiḥ )அதாவது விளி வேற்றுமையை உபயோகிக்கிறோம். ’கந்தன்’ என்ற பெயர் கொண்டவரை ‘கந்தா’ என்று விளிக்கிறோம். இது ’எட்டாம் வேற்றுமை’ ஆகும்.

उदा – हे राम ! (he rāma) O ! Rama

भोः ( bhoḥ) , हे (he) , अये (aye) , अयि (ayi) , अरे(are) , रे (re) ஆகியவை सम्बोधनाविभक्तिः (sambodhanāvibhaktiḥ )யில் உள்ளது என்பதற்கான குறிப்புகள்.

இதைத் தவிர ஆண்களைக் குறிப்பிட்டு அழைக்கும்போது मान्य (mānya ), महोदय (mahodaya) , श्रीमन् (śrīman) , आर्य (ārya ) போன்ற மதிப்பிற்குரிய சொற்களும், பெண்களைக் குறிப்பிட்டு அழைக்கும்போது मान्ये (mānye) , आर्ये (ārye) , मातः (māraḥ) , भगिनि
( bhagini) போன்ற மதிப்பிற்குரிய சொற்களும் உபயோகப்படுத்தப் படுகின்றன.

கீழே கொடுக்கப்பட்டுள்ள प्रथमा विभक्तिः ( prathamā vibhaktiḥ) முதல் வேற்றுமை மற்றும் அதன் सम्बोधनरूपाणि ( sambodhanarūpāṇi) எடுத்துக்காட்டுகளை கூர்ந்து கவனித்து உரத்துப் படிக்கவும்.

प्रथमािभक्तिः

( prathamā

vibhaktiḥ)

सम्बोधनरूपाणि ( sambodhanarūpāṇi)

रामः

(rāmaḥ

)

राम ! ( rāma

!)

कृष्णः (

kṛṣṇaḥ)

कृष्ण ! (kṛṣṇa

!)

गोविन्दः

(govindaḥ)

गोविन्द ! (govinda

!)

हरिः (hariḥ

)

हरे ! (hare !)
गुरुः (guruḥ) गुरो ! (guro !)
राजा (rājā) राजन् ! (rājan

!)

महाराजः

(mahārājaḥ)

महाराज ! (mahārāja

!)

महोदयः

(mahodayaḥ)

महोदय ! (mahodaya

!)

पिता (pitā) पितः ! (pitaḥ)
सीता (sītā) सीते ! (sīte

!)

रमा (ramā ) रमे ! (rame !)
मान्या (mānyā ) मान्ये ! (mānye

!)

गौरी (gaurī ) गौरि ! (gauri !)
भगिनी (bhaginī ) भगिनि ! (bhagini

!)

लक्ष्मीः (lakṣmī

)

लक्ष्मि ! (lakṣmi

!)

अम्बा (ambā ) अम्ब ! (amba !)
माता

(mātā)

मातः ( mātaḥ

!)

अभ्यासः (abhyāsaḥ ) பயிற்சி :

एतस्मिन् सम्भाषणे रिक्तानि स्थलानि आवरणे द्त्तानां शब्दानां सम्बोधनरूपैः पूरयतु !
etasmin sambhāṣaṇe riktāni sthalāni āvaraṇe dattānāṁ śabdānāṁ samdodhanarūpaiḥ pūrayatu |

यथा (yathā ) –
1. मित्र ! भवान् कुत्र गच्छति ? (मित्रम्) mitra | bhavān kutra gacchati ? ( mitram)
நண்பா ! நீங்கள்(நீர்) எங்கு செல்கிறீர் ? (நண்பன்)

2. हे ——- ! अत्र आगच्छतु ! (भगिनी) ———- ! atra āgacchatu! ( bhaginī )
_______ ! இங்கு வா ! (சகோதரி)

3. ——– ! कृपया एतत पाठयतु ! (मान्या) ——— ! kṛpayā etat pāṭhayatu ! (mānyā )
________ ! தயைகூர்ந்து இதை சொல்லிக்கொடு. (மதிப்பிற்குரியவர்)

4.हे ———- ! कोलाहलं मा करोतु ! ( कृष्णः ) ———- ! kolāhalaṁ mā karotu ! (kṛṣṇaḥ )
_______ ! சப்தம் செய்யாதே ! (கிருஷ்ணன்)

5. ———- ! भवती अपि आगच्छति वा ? (लक्ष्मीः)
———- ! bhavatī api āgacchati vā ? ( lakṣmīḥ)
_______ ! நீங்கள் கூட வருகிறீர்களா ? ( லக்ஷ்மீ)

6. ——— ! आगच्छतु , आपणं गच्छाम ! (गौरी) ———- ! āgacchatu āpaṇaṁ gacchāma | (gaūrī )
______ ! வா , கடைக்குச் செல்வோம். (கௌரி)

7. ———– ! किञ्चित् सारं परिवेषयतु ! (अम्बा) ——— ! kiñcit sāraṁ parideṣayatu | ( ambā )
¬¬¬¬¬¬¬¬¬¬¬______ ! கொஞ்சம் ரசம் பரிமாறு ! (அம்மா)

8. ———- ! भवती किमर्थं किमपि न वदति ? ( राधा ) ———- ! bhavatī kimarthaṁ kimapi na vadati ! (rādhā)
______ ! நீங்கள் எதனால் (எதற்காக) ஒன்றுமே பேசவில்லை ? (ராதா)

9. ———– ! दूरे उपविश्य दूरदर्शनं पश्यतु ! ( लता)
———- ! dūre upaviśya dūradarśanaṁ paśyatu | ( latā )
_______ ! தொலைவில் அமர்ந்து தொலைகாட்சியைப் பார் ! (லதா)

10. ———— ! किमर्थं रोदिति भवती ? ( नलिनी) ———– ! kimarthaṁ roditi bhavatī ! ( nalinī )
______ ! நீங்கள் எதற்காக அழுகிறீர்கள் ? (நளினி)

விடைகளை சரிபார்த்துக் கொள்ளவும்.

2. भगिनि !
3. मान्ये !
4. कृष्ण !
5. लक्ष्मि !
6. गौरि !
7. अम्ब !
8. राधे !
9. लते !
10. नलिनि !

இதுபோன்ற सम्बोधनरूपाणि ( sambodhanarūpāṇi) விளி வேற்றுமையை நாம் தினசரி சொல்லும் ஸ்லோகங்களில் அதாவது கடவுளிடம் நேரடியாக முறையிடும்போது காணலாம்.

உதாரணமாக

सरस्वति नमस्तुभ्यं वरदे कामरूपिणि !
विद्यारम्भं करिष्यामि सिद्धिर्भवतु मे सदा !!
sarasvati namastubhyaṁ varade kāmarūpiṇi |
vidyārambhaṁ kariṣyāmi siddhirbhavatu me sadā ||

ஓ ! மாதா ! சரஸ்வதி ! நான் உன்னை வணங்குகிறேன் . நீ வரங்களை கொடுப்பவளும் , வேண்டிய வடிவத்தை எடுத்திக்கொள்வபவளும் ஆவாய்.
நான் என்னுடைய படிப்பைத் தொடங்கப்போகிறேன். எப்போதும் வெற்றி பெற ஆசிர்வாதம் செய். (O! Goddess ! Sarasvati ! Salutations to you. You grant boons and you can take any desired forms. I am commencing my studies. Bless me with success. (May I always be successful).

மேலே உள்ள பிரார்த்தனையில் सरस्वती (‘ई’ कारान्त स्त्रीलिङ्गे) என்ற प्रथमा विभक्तिः
( prathamā vibhaktiḥ) முதல் வேற்றுமை பெயர்ச்சொல் सरस्वति ! என்று सम्बोधनरूपाणि ( sambodhanarūpāṇi) அமைந்திருப்பதைக் காணலாம்.

महालक्ष्म्यष्टकम् (mahālakṣmyaṣṭakam) முழுவதும் மஹாலக்ஷ்மியிடம் நேரடியாக முறையிடுவதுபோல் அதாவது सम्बोधनरूपाणि ( sambodhanarūpāṇi) ல் இருப்பதை கவனிக்கவும்.

1 namaste'stu mahāmāye

śrīpīṭhe

surapūjite

śaṅkacakragadāhaste

mahālakṣmi namo'stu te

नमस्तेऽस्तु

महामाये श्रीपीठे सुरपूजिते

शङ्गचक्रगदाहस्ते

महालक्ष्मि नमोऽस्तु ते ॥

Salutations to You, Goddess,

Abode of wealth, revered by

gods.

You bear the discus, conch,

and mace,

Our salutations unto You.

2 namaste garuḍārūhe

kolāsura-bhayaṅkari

sarvapāpahare devī

mahālakṣmi namo'stu te

नमस्ते गरुडारूढे

कोलासुरभयङ्करि ।

सर्वपापहरे

देवि महालक्ष्मि नमोऽस्तु

ते ॥

Upon the garuḍāYou

ride,

And strike great fear in demons’

hearts.

O Devi, You remove all sins,

Our salutations unto You.

3 sarvajñe sarva-varade

sarva-duṣṭa-bhayaṅkari

sarvaduḥkha-hare devi

mahālakṣmi namo'stu te

सर्वज्ञे

सर्ववरदे

र्वदुष्टभयङ्करि

सर्वदुःखहरे

देवि महालक्ष्मि नमोऽस्तु

ते ॥

All-knowing source of every

boon,

The wicked ones You strike

with fear.

O Devi, You remove all pain,

Our salutations unto You.

4 sidhdi-budhdi-prade devi

bhukti-mukti-pradāyini

mantra mūrte sadā devi

mahālakṣmi namo'stu te

सिद्धिबुद्धिप्रदे

देवि भुक्तिमुक्तिप्रदायिनि ।

मन्त्रमूर्ते

सदा देवि महालक्ष्मि नमोऽस्तु

ते ॥

Success and wisdom You bestow,

Pleasure and liberation, too.

With mantras we invoke Your

grace,

Our salutations unto You.

5 ādhyantarahite

devi

ādya-śakti-maheśvari

yogaje yogasambhūte

mahālakṣmi namo'stu te

आद्यन्तरहिते

देवि आद्यशक्तिमहेश्वरि ।

योगजे योगसम्भूते

महालक्ष्मि नमोऽस्तु ते ॥

No beginning or end have You

Foremost power and Lord of

all.

Through yoga You can be attained,

Our salutations unto You.

6 sthūla-sūkṣma-mahāraudre

mahāśakti-mahodare

mahā-pāpa-hare devi

mahālakṣmi namo'stu te

स्थूलसूक्ष्ममहारौद्रे

महाशक्तिमहोदरे ।

महापापहरे देवि महालक्ष्मि

नमोऽस्तु ते ॥

Both gross and subtle, awesome

Lord,

Greatest power and source of

wealth.

O Devi, You remove all sins,

Our salutations unto You.

7 padmāsanasthite devi

parabrahma svarūpiṇi

parameśi jaganmātaḥ

mahālakṣmi namo'stu te

पद्मासनस्थिते

देवि परब्रह्मस्वरूपिणि ।

परमेशि जगन्मातः

महालक्ष्मि नमोऽस्तु ते ॥

Seated upon a lotus flower,

Your essence is Lord God, supreme.

Almighty Mother of the worlds,

Our salutations unto You.

8 śvetāmbaradharedevi

nānālaṅkārabhūite

jagatsthite jaganmātaḥ

mahālakṣmi namo'stu te

श्वेताम्बरधरे

देवि नानालङ्कारभूषिते ।

जगत्स्थिते

जगन्मातः महालक्ष्मि नमोऽस्तु

ते ॥

O Devi, dressed in purest

white,

Adorned with gleaming ornaments,

Pervading all the universe,

Our salutations unto You.

9 mahālakṣmyaṣṭakaṁ stotraṁ

yaḥ paṭhed bhaktimān

naraḥ

sarvasidhdim-avāpnoti

rājyaṁ prāpnoti sarvadā

महालक्ष्म्यष्टकं

स्तोत्रं यः पठेद् भक्तिमान्

नरः ।

सर्वसिद्धिम्अवाप्नोति

राज्यं प्राप्नोति सर्वदा

This hymn to the great goddess

of wealth,

If read with devotion,

Will bestow all success,

Will grant all worldly position.

10 ekakāle paṭhennityaṁ

mahāpāpa-vināśanaṁ

dvikālaṁ yaḥ paṭhennityaṁ

dhana-dhānya-samanvitaḥ

एककाले पठेन्नित्यं

महापापविनाशनं ।

द्विकालं

यः पठेन्नित्यं धनधान्यसमन्वितः ॥

If you read once a day,

Great sins will be destroyed.

If you read twice a day,

Wealth and prosperity will

ensure.

11 trikālaṁ yaḥ paṭhennityaṁ

mahāśatru-vināśanaṁ

mahālakṣmī-rbhaven-nityaṁ

prasanna varadā śubhā

त्रिकालं

यः पठेन्नित्यं महाशत्रुविनाशनं

महालक्ष्मीर्भवेन्नित्यं

प्रसन्ना वरदा शुभा ॥

If you read three times a

day,

The great enemy (ego) will

be destroyed.

mahālakṣmī will be ever pleased with that auspicious

one.

Series Navigation

About ரேவதி மணியன்

ரேவதி மணியன்

View all 22 articles →

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 29

This entry is in the series 20110306_Issue

ரேவதி மணியன்




சென்றவாரம் எதிர்காலத்தில் வாக்கியங்களை அமைக்கும்போது வினைச்சொற்கள் எப்படி மாறுகின்றன என்பதைப்பற்றி விரிவாகப்பார்த்தோம். இந்தவாரம் மேலும் சில பயிற்சிகளைச் செய்வோம். இதுவரை நிகழ்காலம், இறந்தகாலம் மற்றும் எதிர்காலத்தில் வாக்கியங்களை அமைப்பதுபற்றி படித்தோம். இனி ஒரு காலத்திலிருந்து மற்றொரு காலத்திற்கு வாக்கியங்களை மாற்றி அமைக்கும் பயிற்களையும் செய்வோம்.

இம்மூன்று காலங்களுக்கும் உள்ள வினைச்சொற்களின் அட்டவணையை மனனம் செய்துகொண்டு பிறகு பயிற்சியைத் தொடரவும்.
अभ्यासः 1 (abhyāsaḥ 1 ) பயிற்சி 1:
सीता वित्तकोषे कार्यं करोति ! ‘श्वः कार्यालयं न गमिष्यामि’ इति निश्चितवती सा! श्वः किं किं करिष्यति इति योजनां कृतवती सा ! सा योजना अधः सूचिता अस्ति ! रिक्तस्थानं योग्येन भविष्यत्कालसूचकपदेन पूरयन्तु !

sītā vittakoṣe kāryaṁ karoti | śvaḥ kāryālayaṁ na gamiṣyāmi iti niścitavatī sā| śvaḥ kiṁ kiṁ kariṣyati iti yojanaṁ kṛravatī sā| sāyojanāa adhaḥ sūcitā asti | riktasthānāṁ yogyena bhaviṣyatkālasūcakapadena pūrayantu |

சீதா வங்கியில் வேலை செய்கிறாள். ‘நாளை வேலைக்கு செல்லமாட்டேன்’ என்று உறுதி செய்திருந்தாள் அவள். நாளை என்னென்ன செய்யப் போகிறாள் என்று திட்டமிட்டிருந்தாள் அவள். அவளுடைய திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கோடிட்ட இடங்களில் கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் சரியான எதிர்கால வினைச்சொல்லை நிரப்பவும்.
(गमिष्यामि, क्रेष्यामि, स्वीकरिष्यामि, श्रोष्यामि, प्रक्षालयिष्यामि, खादिष्यामि, पठिष्यामि, करिष्यामि, द्रक्ष्यामि, प्रत्यागमिष्यामि)

(gamiṣyāmi, kreṣyāmi, svīkariṣyāmi, śroṣyāmi , prakṣālayiṣyāmi , khādiṣyāmi , paṭhiṣyāmi, kariṣyāmi, drakṣyāmi, pratyāgamiṣyāmi )

(செல்வேன், வாங்குவேன், பெறுவேன், கேட்பேன், தூய்மைசெய்வேன், சாப்பிடுவேன், படிப்பேன், செய்வேன், பார்ப்பேன், திரும்பிவருவேன்)
1. श्वः अहं विरामं —————————— ! (śvaḥ ahaṁ virāmaṁ ————–)

நாளை நான் விடுப்பு ———————– !

2. प्रातः उत्थाय वस्त्राणि —————————– ! (prātaḥ utthāya vastrāṇi ———- )

காலையில் எழுந்து துணிகளை —————————- !
3. प्रातः नववादने विद्यारण्यपुरं ————————– ! (prātaḥ navavādane vidyāraṇyapuraṁ ———– )

காலை ஒன்பது மணிக்கு வித்யாரண்யபுரம் ————– !

4. तत्र एकां नूतनां शाटिकां ————–! (tatra ekāṁ nūtanāṁ śāṭikāṁ ——— )

அங்கு ஒரு புதிய புடவை ——————————— !
5. सख्या सह भोजनं ———————————— ! (sakhyā saha bhojanaṁ ————— )

தோழியுடன் உணவு ————————- !

6. सायं पुष्पोद्याने विहारं ————————– ! (sāyaṁ puṣpodyāne vihāraṁ ————— )

சாயங்காலம் மலர்பூங்காவில் நடந்து ———————- !

7. सप्तवादने गायनसभाभवने सङ्गीतं ————————— ! (saptavādane gāyanasabhābhavane saṅgītaṁ ————- )

ஏழுமணிக்கு பாட்டுக்கச்சேரி நடைபெறும் சபாவில் பாட்டு ——————- !
8. अष्टवादने गृहं ———————————— ! (aṣṭavādane gṛhaṁ ————– )

எட்டுமணிக்கு வீட்டிற்கு ——————– !
9. भोजनानन्तरं दूरदर्शने चित्रं ———————– ! (bhojanānantaraṁ dūradarśane citraṁ————– )

சாப்பிட்டபின் தொலைகாட்சியில் படம் —————————- !

10. सखीगृहतः आनीतं कथापुस्तकं ———————————– ! (sakhīgṛhataḥ ānītaṁ kathāpustakaṁ

————- )

தோழிவீட்டிலிருந்து கொண்டுவந்த கதை புத்தகத்தை ————————- !

उत्तराणि (uttarāṇi) விடைகள் :
1. स्वीकरिष्यामि (svīkariṣyāmi)

2. प्रक्षालयिष्यामि (prakṣālayiṣyāmi)

3. गमिष्यामि (gamiṣyāmi )

4. क्रेष्यामि (kreṣyāmi)

5. खादिष्यामि (khādiṣyāmi )

6. करिष्यामि (kariṣyāmi)

7. श्रोष्यामि (śroṣyāmi )

8. प्रत्यागमिष्यामि (pratyāgamiṣyāmi)

9. द्रक्ष्यामि (drakṣyāmi)

10. पठिष्यामि (paṭhiṣyāmi)

अभ्यासः 2 (abhyāsaḥ 1 ) பயிற்சி 2:

भविष्यत्काले वाक्यपरिवर्तनं करोतु ! (bhaviṣyatkāle vākyaparivartanaṁ karotu |)

வாக்கியங்களை எதிர்காலத்தில் மாற்றி அமைக்கவும்.
1. विष्णुः विद्यालयं गच्छति ! (viṣṇuḥ vidyālayaṁ gacchati |)

விஷ்ணு பள்ளி செல்கிறான்.

2. दिव्या वस्त्रं प्रक्षालयति ! (divyā vastraṁ prakṣālayati |)

திவ்யா துணியைத் தூய்மை செய்கிறாள்.
3. पाचकः तण्डुलं पचति ! (pācakaḥ taṇḍulaṁ pacati |)

சமையல்காரர் அரிசியை சமைக்கிறார்.
4. अहं जलं पिबामि ! (ahaṁ jalaṁ pibāmi |)

நான் நீர் அருந்துகிறேன்.

5. छात्राः श्लोकं वदन्ति ! (chātrāḥ ślokaṁ vadanti |

மாணவர்கள் ஸ்லோகம் சொல்கிறார்கள்.
6. बालिकाः गीतं गायन्ति ! (bālikāḥ gītaṁ gāyanti |)

மாணவிகள் பாட்டு பாடுகின்றார்கள்.

7. वयं कथां पठामः ! (vayaṁ kathāṁ paṭhāmaḥ |)

நாங்கள் கதை படிக்கிறோம்.

8. गुरुः व्याकरणं पाठयति ! (guruḥ vyākaraṇaṁ pāṭhayati |)

குரு இலக்கணம் சொல்லிக்கொடுக்கிறார்.
9. देवः दुष्टान् दण्डयति ! (devaḥ duṣṭān daṇḍayati |)

கடவுள் தீயவர்களை தண்டிக்கிறார்.

10. अहं पुस्तकं प्रतिददामि ! (ahaṁ pustakaṁ pratidadāmi |)

நான் புத்தகத்தை திருப்பித்தருகிறேன்.
11. रजकाः वस्त्राणि क्षालयन्ति ! (rajakāḥ vastrāṇi kṣālayanti |

சலவைக்காரர்கள் துணிகளை தூய்மை செய்கிறார்கள்.
12. चित्रकाराः चित्रं लिखन्ति ! (citrakārāḥ citraṁ likhanti |)

ஓவியர்கள் ஓவியம் வரைகிறார்கள்.
13. भक्ताः देवं नमन्ति ! (bhaktāḥ devaṁ namanti |)

பக்தர்கள் கடவுளை வணங்குகிறார்கள்.
14. कला फलं खादति ! (kalā phalaṁ khādati |)

கலா பழம் சாப்பிடுகிறாள்.
15. बालः पुस्तकं नयति ! (bālaḥ pustakaṁ nayati |)

சிறுவன் புத்தகம் எடுத்துச்செல்கிறான்.
उत्तराणि (uttarāṇi) விடைகள்

1. गमिष्यति ( gamiṣyati)

2. प्रक्षालयिष्यति (prakṣālayiṣyati)

3. पक्ष्यति (pakṣyati)

4. पास्यामि (pāsyāmi)

5. वदिष्यन्ति (vadiṣyanti)

6. गास्यन्ति (gāsyanti)

7. पठिष्यामः (paṭhiṣyāmaḥ)

8. पाठयिष्यति (pāṭhayiṣyati)

9. दण्डयिष्यति (daṇḍayiṣyati)

10. प्रतिदास्यामि (pratidāsyāmi)

11. क्षालयिष्यन्ति (kṣālayiṣyanti)

12. लेखिष्यन्ति (lekhiṣyanti)

13. नम्स्यन्ति (namsyanti)

14. खादिष्यति (khādiṣyati)

14. नेष्यति (neṣyati)

अभ्यासः 3 ( abhyāsaḥ 1 ) பயிற்சி 3:

कथायां स्थूलाक्षरैः दृश्यमानानि क्रियापदानि भूतकालरूपेण परिवर्तयतु ! (kathāyāṁ sthūlākṣaraiḥ dṛśyamānāni kriyāpadāni bhūtakālarūpeṇa parivartayatu !)

கதையில் அழுத்தமான(பெரிய) எழுத்துக்களில் கொடுக்கப்பட்டுள்ள வினைச்சொற்களை இறந்தகாலத்தில் மாற்றவும்.

श्रीरामः (śrīrāmaḥ)
रामः अयोध्यायाः राजकुमारः अस्ति ! तस्य गुरुः वसिष्ठः अस्ति! एकदा विश्वामित्रः अयोध्याम् आगच्छति ! रामं यज्ञरक्षणार्थम् आह्वयति ! रामः विश्वामित्रेण सह वनं गच्छति ! तदा यज्ञस्य नाशाय ताटका आगच्छति !रामेण सह युद्धं करोति !रामः ताटकायाः वधं करोति ! राक्षसाणाम् अपि वधं करोति ! यज्ञं रक्षति !

rāmaḥ ayodhyāyāḥ rājakumāraḥ asti| tasya guruḥ vasiṣṭhaḥ asti | ekadā viśvāmitraḥ ayodhyām āgacchati |rāmaṁ yajñarakṣaṇārtham āhvayati |rāmaḥ viśvāmitreṇa saha vanaṁ gacchati | tadā yajñasya nāśāya tāṭakā āgacchati | rāmeṇa saha yuddhaṁ karoti | rāmaḥ tāṭakāyāḥ vadaṁ karoti | rākṣasāṇām api vadaṁ karoti | yajñaṁ rakṣati |

ராமர் அயோத்தியாவினுடைய ராஜகுமாரனாக இருக்கிறார். அவருடைய குரு வசிஷ்டர் . ஒருமுறை விசுவாமித்திரர் அயோத்தியாவிற்கு வருகிறார். ராமரை யக்ஞத்தை காப்பதற்காக அழைக்கிறார். ராமர் விசுவாமித்திரருடன் வனம் செல்கிறார். அப்போது யக்ஞத்தை நாசம் செய்வதற்காக தாடகா வருகிறாள். ராமருடன் போர் புரிகிறாள். ராமர் தாடகாவை வதம் செய்கிறார். ராக்ஷசர்களையும் கூட வதம் செய்கிறார். யக்ஞத்தைக் காக்கிறார்.

उत्तराणि (uttarāṇi) விடைகள்

रामः अयोध्यायाः राजकुमारः आसीत् ! तस्य गुरुः वसिष्ठः आसीत् ! एकदा विश्वामित्रः अयोध्याम् आगतवान् ! रामं यज्ञरक्षणार्थम् आहूतवान् ! रामः विश्वामित्रेण सह वनं गतवान् ! तदा यज्ञस्य नाशाय ताटका आगतवती ! रामेण सह युद्धं कृतवती ! रामः ताटकायाः वधं कृतवान् ! राक्षसाणाम् अपि वधं कृतवान् ! यज्ञं रक्षितवान् !

rāmaḥ ayodhyāyāḥ rājakumāraḥ āsīt| tasya guruḥ vasiṣṭhaḥ āsīt | ekadā viśvāmitraḥ ayodhyām āgatavān |rāmaṁ yajñarakṣaṇārtham āhūtavān |rāmaḥ viśvāmitreṇa saha vanaṁ gatavān | tadā yajñasya nāśāya tāṭakā āgatavatī | rāmeṇa saha yuddhaṁ kṛtavatī | rāmaḥ tāṭakāyāḥ vadaṁ kṛtavān | rākṣasāṇām api vadaṁ kṛtavān | yajñaṁ rakṣitavān |

ராமர் அயோத்தியாவினுடைய ராஜகுமாரனாக இருந்தார். அவருடைய குரு வசிஷ்டர் இருந்தார். ஒருமுறை விசுவாமித்திரர் அயோத்தியாவிற்கு வந்தார். ராமரை யக்ஞத்தை காப்பதற்காக அழைத்தார். ராமர் விசுவாமித்திரருடன் வனம் சென்றார். அப்போது யக்ஞத்தை நாசம் செய்வதற்காக தாடகா வந்தாள். ராமருடன் போர் புரிந்தாள். ராமர் தாடகாவை வதம் செய்தார். ராக்ஷசர்களையும் கூட வதம் செய்தார். யக்ஞத்தைக் காத்தார்.

.

अभ्यासः 4 (abhyāsaḥ 1 ) பயிற்சி 4:

कथायां स्थूलाक्षरैः दृश्यमानानि क्रियापदानि भविष्यत्कालरूपेण परिवर्तयतु ! (kathāyāṁ sthūlākṣaraiḥ dṛśyamānāni kriyāpadāni bhaviṣyatkālarūpeṇa parivartayatu |)

கதையில் அழுத்தமான(பெரிய) எழுத்துக்களில் கொடுக்கப்பட்டுள்ள வினைச்சொற்களை எதிர்காலத்தில் மாற்றவும்.

कुशलः वृद्धः (kuśalaḥ vṛddhaḥ)
एकः वृद्धः आसीत ! सः क्षुधितः अभवत् ! समीपे एकः आम्रवृक्षः आसीत् ! वृद्धः आम्रवृक्षस्य समीपम् गतवान् ! वृक्षे बहूनि फलानि दृश्टवान् ! सः चिन्तितवान् ,” अहं वृद्धः ! मम शरीरे शक्तिः नास्ति ! वृक्षः उन्नतः अस्ति ! कथम् उपरि गच्छामि? कथं फलं प्राप्नोमि ? “इति ! वृक्षस्य उपरि वानराः आसन् ! वृद्धः एकम् उपायं कृतवान् ! सः पाषाणखण्डान् स्वीकृत्य क्षिप्तवान् ! वानराः कुपिताः अभवन् ! ते फलानि क्षिप्तवन्तः ! वृद्धः तानि फलानि स्वीकृत्य सन्तोषेण खादितवान् !
ekaḥ vṛddhaḥ āsīt| saḥ kṣudhitaḥ abhavat| samīpe ekaḥ āmravṛkṣaḥ āsīt| vṛddhaḥ āmravṛkṣasya smīpaṁ gatavān |vṛkṣe bahūni phalāni dṛśṭavān | saḥ cintitavān, “ ahaṁ vṛddhaḥ| mama śarīre śaktiḥ nāsti | vṛkṣaḥ unnataḥ asti | katham upari gacchāmi kathaṁ phalaṁ prāpnoti ?” iti |vṛkṣasya upari vānarāḥ āsan | vṛddhaḥ ekam upāyaṁ kṛtavān | saḥ pāṣāṇakhaṇḍān svīkṛtya kṣiptavān | vānarāḥ kupitāḥ abhavan | te phalāni kṣiptavantaḥ | vṛddhaḥ tāni phalāni svīkṛtya santoṣeṇa khāditavān |

ஒரு முதியவர் இருந்தார். அவர் மிகுந்த பசியுடன் இருந்தார். அருகில் ஒரு மாமரம் இருந்தது. முதியவர் மாமரத்தின் அருகில் சென்றார். மரத்தில் நிறைய பழங்களைப் பார்த்தார். அவர் , “ நான் வயதானவன். என்னுடைய உடம்பில் சக்தி இல்லை. மரம் உயரமாக இருக்கிறது. எப்படி மரத்தின் மேலே செல்வேன்? எப்படி பழத்தைப் பெறுவேன்?” என்று நினைத்தார். மரத்தின் மேலே குரங்குகள் இருந்தன. முதியவர் ஒரு யோசனை செய்தார். அவர் கற்களை எடுத்து எறிந்தார். குரங்குகள் கோபம் அடைந்தன. அவைகள் பழங்களை எறிந்தன. முதியவர் அந்த பழங்களை எடுத்து சந்தோஷமாக சாப்பிட்டார்.

उत्तराणि (uttarāṇi) விடைகள்

एकः वृद्धः भविष्यति ! सः क्षुधितः भविष्यति ! समीपे एकः आम्रवृक्षः भविष्यति ! वृद्धः आम्रवृक्षस्य समीपम् गमिष्यति ! वृक्षे बहूनि फलानि द्रक्ष्यति ! सः चिन्तयिष्यति ,” अहं वृद्धः ! मम शरीरे शक्तिः नास्ति ! वृक्षः उन्नतः अस्ति ! कथम् उपरि गच्छामि? कथं फलं प्राप्नोमि ? “इति ! वृक्षस्य उपरि वानराः भविष्यन्ति ! वृद्धः एकम् उपायम् करिष्यति ! सः पाषाणखण्डान् स्वीकृत्य क्षेप्स्यति! वानराः कुपिताः भविष्यन्ति ! ते फलानि क्षेप्स्यन्ति ! वृद्धः तानि फलानि स्वीकृत्य सन्तोषेण खादिष्यति !
ekaḥ vṛddhaḥ bhaviṣyati| saḥ kṣudhitaḥ bhaviṣyati| samīpe ekaḥ āmravṛkṣaḥ bhaviṣyati| vṛddhaḥ āmravṛkṣasya smīpaṁ gamiṣyati |vṛkṣe bahūni phalāni drakṣyati| saḥ cintayiṣyati, “ ahaṁ vṛddhaḥ| mama śarīre śaktiḥ nāsti | vṛkṣaḥ unnataḥ asti | katham upari gacchāmi kathaṁ phalaṁ prāpnoti ? “ iti |vṛkṣasya upari vānarāḥ bhaviṣyanti | vṛddhaḥ ekam upāyaṁ kariṣyati | saḥ pāṣāṇakhaṇḍān svīkṛtya kṣepsyati | vānarāḥ kupitāḥ bhaviṣyanti | te phalāni kṣepsyanti | vṛddhaḥ tāni phalāni svīkṛtya santoṣeṇa khādiṣyati |

ஒரு முதியவர் இருப்பார். அவர் மிகுந்த பசியுடன் இருப்பார். அருகில் ஒரு மாமரம் இருக்கும். முதியவர் மாமரத்தின் அருகில் செல்வார். மரத்தில் நிறைய பழங்களைப் பார்ப்பார். அவர் , “ நான் வயதானவன். என்னுடைய உடம்பில் சக்தி இல்லை. மரம் உயரமாக இருக்கிறது. எப்படி மரத்தின் மேலே செல்வேன்? எப்படி பழத்தைப் பெறுவேன்?” என்று நினைப்பார். மரத்தின் மேலே குரங்குகள் இருக்கும். முதியவர் ஒரு யோசனை செய்வார். அவர் கற்களை எடுத்து எறிவார். குரங்குகள் கோபம் அடையும். அவைகள் பழங்களை எறியும். முதியவர் அந்த பழங்களை எடுத்து சந்தோஷமாக சாப்பிடுவார்.
அடுத்த வாரம் सम्बोधनरूपाणि பற்றித் தெரிந்துகொள்வோம்.

Series Navigation

About ரேவதி மணியன்

ரேவதி மணியன்

View all 22 articles →

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 28

This entry is in the series 20110220_Issue

ரேவதி மணியன்




இந்த வாரம் எதிர்காலத்தில் (भविष्यत्काल: – Future Tense ) வினைச்சொற்களை (क्रियापदानि – Verb) உபயோகித்து வாக்கியங்களை அமைப்பது பற்றி பார்ப்போம்.
கீழே மூன்று காலங்களிலும் தன்மையிலும் , படர்க்கையிலும், ஒருமை , மற்றும் பன்மையில் கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை கூர்ந்து கவனிக்கவும்.
वर्तमानकालः
सः / सा /तत् विद्यालयं गच्छति ! (वर्तमानकाले – पुं / स्त्री / नपुंसके (प्र.पु) – एकवचने ) saḥ / sā / tat vidyālayaṁ gacchati | ( vartamānakāle – pu/ strī /napuṁsake – ekavacane)

அவன் /அவள்/அது பள்ளி செல்கிறான்/செல்கிறாள்/செல்கிறது.
ते /ताः /तानि विद्यालयं गच्छन्ति ! (वर्तमानकाले – पुं / स्त्री / नपुंसके – (प्र.पु) – बहुवचने )

te / tāḥ / tāni vidyālayaṁ gacchanti |(vartamānakāle – pu / strī /napuṁsake – bahuvacane )

அவர்கள் /அவைகள் பள்ளி செல்கிறார்கள்/ செல்கின்றன.
अहं विद्यालयं गच्छामि ! (वर्तमानकाले – (उ.पु) एकवचने) ahaṁ vidyālayaṁ gacchāmi | (vartamānakāle – triliṅgeṣu ekavacane)

நான் பள்ளி செல்கிறேன்.

वयं विद्यालयं गच्छामः (वर्तमानकाले – (उ.पु) बहुवचने ) vayaṁ vidyālayaṁ gacchāmaḥ |(vartamānakāle – triliṅgeṣu bahuvacane )

நாங்கள் பள்ளி செல்கிறோம்.

भूतकाल:

सः/अहं विद्यालयं गतवान् ! (भूतकाले – पुंल्लिङ्गे एकवचने) saḥ/ahaṁ vidyālayaṁ gatavān |( bhūtakāle – puṁlliṅge ekavacane)

அவன்/நான்( ஆண்பால்) பள்ளி சென்றான்/சென்றேன்.
सा/अहं विद्यालयं गतवती ! ( भूतकाले – स्त्रीलिङ्गे एकवचने) sā / ahaṁ vidyālayaṁ gatavatī | (bhūtakāle – strīliṅge ekavacane)

அவள்/நான் ( பெண்பால்) பள்ளி சென்றாள்/ சென்றேன்.
ते /वयं विद्यालयं गतवन्तः ! ( भूतकाले – पुंल्लिङ्गे बहुवचने ) te /vayaṁ vidyālayaṁ gatavantaḥ |(bhūtakāle – puṁlliṅge bahuvacane )

அவர்கள்/நாங்கள் ( ஆண்பால்) பள்ளி சென்றார்கள்/ சென்றோம்.

ताः /वयं विद्यालयं गतवत्यः ( भूतकाले – स्त्रीलिङ्गे बहुवचने ) tāḥ/vayaṁ vidyālayaṁ gatavatyaḥ |(bhūtakāle – strīliṅge bahuvacane )

அவர்கள்/நாங்கள் ( பெண்பால்) பள்ளி சென்றார்கள்/ சென்றோம்.

भविष्यत्कालः
सः / सा /तत् विद्यालयं गमिष्यति ! (भविष्यत्काले – पुं. लि / स्त्री / नपुंसके – (प्र.पु) एकवचने ) saḥ /sā / tat vidyālayaṁ gamiṣyati | (bhaviṣyatkāle – pu / strī /napuṁsake – ekavacane)

அவன் /அவள்/அது பள்ளி செல்வான்/செல்வாள்/செல்லும்.
ते / ताः / तानि विद्यालयं गमिष्यन्ति ! (भविष्यत्काले – पुं. लि / स्त्री / नपुंसके – (प्र.पु) बहुवचने ) saḥ /sā / tat vidyālayaṁ gamiṣyanti |(bhaviṣyatkāle – pu / strī /napuṁsake – bahuvacane )

அவர்கள் /அவைகள் பள்ளி செல்வார்கள்/ செல்லும்.
अहं विद्यालयं गमिष्यामि ! (भविष्यत्काले – (उ.पु) एकवचने ) ahaṁ vidyālayaṁ gamiṣyāmi|( bhaviṣyatkāle – ekavacane )

நான் பள்ளி செல்வேன்.

वयं विद्यालयं गमिष्यामः ! (भविष्यत्काले – (उ.पु) बहुवचने) vayaṁ vidyālayaṁ gamiṣyāmaḥ ! (bhaviṣyatkāle – बहुवचने )

நாங்கள் பள்ளி செல்வோம்.

இனி எதிர்கால வினைச்சொற்களைப் பற்றி விரிவாகப் படிப்போம். நிகழ்கால வினைச்சொற்களை நினைவுவைத்துக்கொண்டால் எதிகாலவினைச்சொற்களை (சில சிறப்பு வினைச்சொற்களைத் தவிர) சுலபமாக கூறிவிடலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை மனனம் செய்துகொள்ளவும்.

वर्तमानकाले Meaning in

Present Tense

भविष्यत्काले

एकवचने

भविष्यत्काले

बहुवचने

विकसति

vikasati

Blossoms विकसिष्यति

vikasiṣyati

विकसिष्यन्ति

vikasiṣyanti

आगच्छति

āgacchati

Comes आगमिष्यति

āgamiṣyati

आगमिष्यन्ति

āgamiṣyanti

पृच्छति

pṛcchati

Asks प्रक्ष्यति

prakṣyati

प्रक्ष्यन्ति

prakṣyanti

कर्तयति

kartayati

Cuts कर्तयिष्यति

kartayiṣyati

कर्तयिष्यन्ति

kartayiṣyanti

रोदिति

roditi

Cries रोदिष्यति

rodiṣyati

रोदिष्यन्ति

rodiṣyanti

निन्दति

nindati

Accuses निन्दिष्यति

nidiṣyati

निन्दिष्यन्ति

nindiṣyanti

क्रीणाति

krīṇāti

Buys क्रेष्यति

kreṣyati

क्रेष्यन्ति

kreṣyanti

प्रक्षालयति

prakṣālayati

Cleans प्रक्षालयिष्यति

prakṣālayiṣyati

प्रक्षालयिष्यन्ति

prakṣālayiṣyanti

नृत्यति

nṛtyati

Dances नर्तिष्यति

nartiṣyati

नर्तिष्यन्ति

nartiṣyanti

करोति

karoti

Does करिष्यति

kariṣyati

करिष्यन्ति

kariṣyanti

पिबति

pibati

Drinks पास्यति

pāsyati

पास्यन्ति

pāsyanti

सम्पादयति

sampādayati

Earns सम्पादिष्यति

sampādiṣyati

सम्पादिष्यन्ति

sampādiṣyanti

खादति

khādati

Eats खादिष्यति

khādiṣyati

खादिष्यन्ति

khādiṣyanti

पतति

patati

Falls पतिष्यति

patiṣyati

पतिष्यन्ति

patiṣyanti

प्राप्नोति

prāpnoti

Gets प्राप्स्यति

prāpsyati

प्राप्स्यन्ति

prāpsyanti

ददाति

dadāti

Gives दास्यति

dāṣyati

दास्यन्ति

dāsyanti

गच्छति

gacchati

Goes गमिष्यति

gamiṣyati

गमिष्यन्ति

gamiṣyanti

शृणोति

sṛṇoti

Hears श्रोष्यति

śroṣyati

श्रोष्यन्ति

śroṣyanti

गृह्णाति

gṛhṇati

Holds ग्रहीष्यति

gṛhīṣyati

ग्रहीष्यन्ति

gṛhīiṣyanti

आह्वयति

āhvayati

Invites आह्वास्यति

āhvāsyati

आह्वास्यन्ति

āhvāiṣyanti

भवति

bhavati

Is भविष्यति

bhaviṣyati

भविष्यन्ति

bhaviṣyanti

अस्ति

asti

Is भविष्यति

Bhaviṣyati

भविष्यन्ति

Bhaviṣyanti

हसति

hasati

Laughs हसिष्यति

hasiṣyati

हसिष्यन्ति

hasiṣyanti

त्यजति

tyajati

Leaves त्यक्ष्यति

tyakṣyati

त्यक्ष्यन्ति

tyakṣyanti

ज्वलति

jvalati

Lights ज्वलिष्यति

jvaliṣyati

ज्वलिष्यन्ति

jvaliṣyanti

इच्छति

icchati

Likes एषिष्यति

etiṣyati

एषिष्यन्ति

esiṣyanti

मिलति

milati

Meets मेलिष्यति

meliṣyati

मेलिष्यन्ति

meliṣyanti

निवेदयति

nivedayati

Offers निवेदिष्यति

nivediṣyati

निवेदिष्यन्ति

nivediṣyanti

अद्घाटयति

udgātayati

Opens उद्घाटिष्यति

udgātiṣyati

उद्घाटिष्यन्ति

udgātiṣyanti

स्थापयति

stāpayati

Places स्थापयिष्यति

stāpayiṣyati

स्थापयिष्यन्ति

stāpayiṣyanti

क्रीडति

krīḍati

Plays क्रीडिष्यति

krīḍiṣyati

क्रीडिष्यन्ति

krīḍiṣyanti

प्रकाशयति

prakāśayati

Publishes प्रकाशयिष्यति

prakāśayiṣyati

प्रकाशयिष्यन्ति

prakāśayiṣyanti

पठति

paṭhati

Reads पठिष्यति

paṭhiṣyati

पठिष्यन्ति

paṭhiṣyanti

स्वीकरोति

svīkaroti

Receives स्वीकरिष्यति

svīkariṣyati

स्वीकरिष्यन्ति

svīkariṣyanti

स्मरति

smarati

Remembers स्मरिष्यति

smariṣyati

स्मरिष्यन्ति

smariṣyanti

गर्जति

garjati

Roars गर्जिष्यति

garjayiṣyati

गर्जिष्यन्ति

garjiṣyanti

धावति

dhāvati

Runs धाविष्यति

dhāviṣyati

धाविष्यन्ति

dhāviṣyanti

रक्षति

rakṣati

Protects रक्षिष्यति

rakṣiṣyati

रक्षिष्यन्ति

rakṣiṣyanti

पश्यति

paśyati

Sees द्रक्ष्यति

drakṣyati

द्रक्ष्यन्ति

drakṣyanti

परिवेशयति

pariveśayati

Serves परिवेशयिष्यति

pariveśiṣyati

परिवेशयिष्यन्ति

pariveśiṣyanti

दर्शयति

darśayati

Shows दर्शयिष्यति

darśayiṣyati

दर्शयिष्यन्ति

darśayiṣyanti

गायति

gāyati

Sings गास्यति

gāsyati

गास्यन्ति

Gāsyanti

उपविशति

upaviśati

Sits उपवेक्ष्यति

upavekṣyati

उपवेक्ष्यन्ति

upavekṣyanti

वदति

vadati

Speaks वदिष्यति

vadiṣyati

वदिष्यन्ति

vadiṣyanti

उत्तिष्ठति

uttiṣṭhati

Stands उत्थास्यति

utthāṣyati

उत्थास्यन्ति

utthāṣyanti

वसति

vasati

Stays वत्स्यति

vatṣyati

वत्स्यन्ति

vatṣyanti

सीव्यति

sīvyati

Stitches सीविष्यति

sīviṣyati

सीविष्यन्ति

sīviṣyanti

सूचयति

sūcayati

Suggests सूचयिष्यति

sūcayiṣyati

सूचयिष्यन्ति

sūcayiṣyanti

पाठयति

pāṭhayati

Teaches पाठयिष्यति

pāṭhayiṣyati

पाठयिष्यन्ति

pāṭhayiṣyanti

धारयति

dhārayati

Wears धारयिष्यति

dhārayiṣyati

धारयिष्यन्ति

dhārayiṣyanti

लिखति

likhati

Writes लेखिष्यति

lekhiṣyati

लेखिष्यन्ति

lekhiṣyanti

कवचनम्

हुवचनम्
प्रथमपुरुषः गमिष्यति

(सः /सा /तत्)

गमिष्यन्ति

((ते /तः /तानि)

उत्तमपुरुषः

गमिष्यामि

(अहम्)

गमिष्यामः

(वयम्)

दीपावलिः (dīpāvaliḥ) தீபாவளி

सुधा – सीते, श्वः दीपावलिः किल? भवती किं करिष्यति ?

sudhā – sīte śvaḥ dīpāvami kila? bhavatī kiṁ kariṣyati ?

சுதா – சீதா , நாளை தீபாவளி அல்லவா ? நீர் என்ன செய்யப்போகிறீர்கள் ?

सीता – अहं प्रातः पूजां करिष्यामि ! देवालयं गमिष्यामि !

sītā – ahaṁ prātaḥ pūjāṁ kariṣyāmi | devālayaṁ gamiṣyāmi |

சீதா – நான் காலையில் பூஜை செய்வேன். கோவிலுக்குச் செல்வேன்.

सुधा – मम अग्रजः नगरात् आगमिष्यति !

sudhā – mama agrajaḥ nagarāt āgamiṣyati |

சுதா – என்னுடைய மூத்த சகோதரன் நகரத்திலிருந்து வருவார்.

सीता – अहं नूतनं वस्त्रं स्वीकरिष्यामि ! मधुरं खादिष्यामि !

sītā – ahaṁ nūtanaṁ vastraṁ svīkariṣyāmi | madhuraṁ khādiṣyāmi |

சீதா – நான் புதிய உடை வாங்குவேன். இனிப்பு சாப்பிடுவேன்.
सुधा – क्रीडाङ्गणे सर्वे क्रीडिष्यन्ति !

sudhā – krīḍāṅgaṇe sarve krīḍiṣyanti |

சுதா – விளையாட்டுத்திடலில் எல்லோரும் விளையாடுவார்கள்.
अभ्यासः (abhyāsaḥ) பயிற்சி

एतेषु वाक्येषु वर्तमानकालरूपाणां स्थाने भविष्यत्कालरूपाणि उपयुज्य वाक्यानि पुनः लिखन्तु ! (eteṣu vākyeṣu vartamānakālarūpāṇāṁ sthāne bhaviṣyatkālarūpāṇi upayujya vākyāni punaḥ likhantu |)

இங்குள்ள வாக்கியங்களில் நிகழ்காலவினைச்சொற்களின் இடத்தில் எதிர்காலவினைச்சொற்களை உபயோகித்து வாக்கியங்களை மீண்டும் எழுதவும்.

1 ते फलरसं पिबन्ति

!

te phalarasaṁ pibanti

|

அவர்கள் (ஆண்கள்)

பழரசம் குடிக்கிறார்கள்.

ते फलरसं पास्यन्ति

!

te phalarasaṁ pāsyanti

|

2 ताः तत्र पश्यन्ति

!

tāḥ tatra paśyanti |

அவர்கள் (பெண்கள்)

அங்கு பார்க்கின்றார்கள்.

——————————

!

3 सः कदा आगच्छति

?

saḥ kadā āgacchati

?

அவன் எப்போது

வருகிறான் ?

————————————-

!

4 सा वार्त्तां

शृणोति !

sā vārttāśṛṇoti !

அவள்

செய்தி(news) கேட்கிறாள்

——————————

!

5 वयम् अपि तत्र

पश्यामः !

vayam api tatra paśyāmaḥ

!

நாங்கள்/நாம்

கூட அங்கு பார்க்கிறோம்.

———————————–

!

6 बालाः प्रश्नं

पृच्छन्ति !

bālāḥ praśnaṁ pṛcchanti |

சிறுவர்கள்

கேள்வி கேட்கிறார்கள்.

————————————-

!

7 ताः पुस्तकम्

इच्छन्ति !

tāḥ pustakam icchanti |

பெண்கள்

புத்தகம் விரும்புகிறார்கள்.

—————————————-

!

8 वयं श्लोकं

लिखामः!

vayaṁ ślokaṁ

likhāmaḥ

|

நாங்கள்

ஸ்லோகம் எழுதுகிறோம்.

——————————-!
9 देवी अन्नं

खादति!

devī annaṁ khādati !

தேவீ சாதம்

சாப்பிடுகிறாள்.

——————————

!

10 रामः पाठं

पठति !

rāmaḥ pāṭhaṁ paṭhati |

ராமன் பாடம்

படிக்கிறான்.

—————————

!

விடைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. சரிபார்த்துக் கொள்ளவும்.

2. ताः तत्र द्रक्ष्यन्ति ! (tāḥ tatra drakṣyanti |)

3. सः कदा आगमिष्यति ? (saḥ kadā āgamiṣyati !)

4. सा वार्त्तां श्रोष्यति ! (sā vārttāṁ śroṣyati |)

5. वयम् अपि तत्र द्रक्ष्यामः ! (vayam api tatra drakṣyāmaḥ !)

6. बालाः प्रश्नं प्रक्ष्यन्ति ! (bālāḥ praśnaṁ prakṣyanti |)

7. ताः पुस्तकम् एषिष्यन्ति ! (tāḥ pustakam eṣiṣyanti |)

8. वयं श्लोकं लेखिष्यामः ! (vayaṁ ślokaṁ lekhiṣyāmaḥ |)

9. देवी अन्नं खादिष्यति! (devī annaṁ khādiṣyati !)

10. रामः पाठं पठिष्यति ! (rāmaḥ pāṭhaṁ paṭhiṣyati|)
கீழே சுப்பிரமணியன் என்ற சிறுவன் நாளை என்ன செய்யப் போகிறான் என்று கொடுக்கப்பட்டுள்ளது. உரத்துப் படிக்கவும்.
सुब्रह्मण्यः श्वः विद्यालयं न गमिष्यति ! सः चिकित्सालयं गमिष्यति ! तत्र वैद्यं द्रक्ष्यति ! तेन सह सम्भाषणं करिष्यति ! स्वस्य अनारोग्यं निवेदयिष्यति ! सः श्वः न क्रीडिष्यति ! गृहे उपविश्य पाठं पठिष्यति !

subrahmaṇyaḥ śvaḥ vidyālayaṁ na gamiṣyati | saḥ cikitsālayaṁ gamiṣyati | tatra vaidyaṁ drakṣyati | tena saha sambhāṣaṇaṁ kariṣyati | svasya anārogyaṁ nivedayiṣyati | saḥ śvaḥ na krīḍiṣyati | gṛhe upaviśya pāṭhaṁ paṭhiṣyati |

சுப்பிரமணியன் நாளை பள்ளி செல்ல மாட்டான். அவன் வைத்தியசாலை செல்வான். அங்கு வைத்தியரைப் பார்ப்பான். அவருடன் உரையாடுவான். தன்னுடைய உடல் நலக்குறைவு பற்றி முறையிடுவான். அவன் நாளை விளையாடமாட்டான். வீட்டில் அமர்ந்து பாடம் படிப்பான்.

सुब्रह्मण्यः श्वः किं किं करिष्यति इति तत्र लिखितम् अस्ति ! भवान् / भवती श्वः किं करिष्यति इति लिखतु ! (subrahmanyaḥ śvaḥ kiṁ kiṁ kariṣyati iti tatra likhitam asti | bhavān bhavatī śvaḥ kiṁ kariṣyati iti likhatu |)

சுப்பிரமணியன் நாளை என்னென்ன செய்வான் என்று அங்கு (மேலே) எழுதப்பட்டு இருக்கிறது. நீங்கள் நாளை என்னென்ன செய்யப்போகிறீர்கள் என்று எழுதவும்.

1. अहं श्वः आपणम् —————————- !

2. अहं प्रातः पूजां ————————- !

3. अहं श्वः पाठं ———————— !

4. अहं श्वः धनं ————————- !

5. अहं श्वः गीतम् ———————- !

விடைகள்
1. गमिष्यामि

2. करिष्यामि

3. पठिष्यामि

4. सम्पादिष्यामि

5. गास्यामि
அடுத்த வாரம் भविष्यत्कालरूपाणि பயிற்சியை தொடருவோம்.

Series Navigation

About ரேவதி மணியன்

ரேவதி மணியன்

View all 22 articles →

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 27

This entry is in the series 20110213_Issue

ரேவதி மணியன்




சென்ற வாரம் கொடுக்கப்பட்டிருந்த भूतकालः (bhūtakālaḥ) Past Tense அட்டவணையை ஒருமுறை உரத்துப் படித்துக் கொள்ளவும். பிறகு கீழேயுள்ள உரையாடலைப் படித்தால் நன்கு புரிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறேன்.

இப்போது இரு நண்பர்களுக்கிடையே நிகழும் உரையாடலை கவனிப்போமா?
रामः – “रङ्गनाथ ! ह्यः भवान कुत्र आसीत् ?

rāmaḥ – ” raṅganātha yaḥ bhavān kutra āsīt ?”

ராம் – “ரங்கநாத ! நேற்று நீங்கள் (நீர்) எங்கே இருந்தீர்கள் ?”

रङ्गनाथः – ” अहं मित्रस्य गृहे आसम् ! ”

raṅganāthaḥ – “ahaṁ mitrasya gṛhe āsam |”

ரங்கநாத் – “ நான் நண்பருடைய வீட்டில் இருந்தேன் ! “

रामः – ” तत्र कः विशेषः आसीत् ?”

rāmaḥ – ” tatra kaḥ viśeṣaḥ āsīt !”

ராம் – “ அங்கே என்ன விசேஷம் இருந்தது ?”
रङ्गनाथः – ” मित्रस्य जन्मदिनम् आसीत् !”

raṅganāthaḥ – “mitrasya janmadinam āsīt |”

ரங்கநாத் – “நண்பருடைய பிறந்தநாள் விழா இருந்தது !”

रामः – ” तत्र जयरामः , अनन्तः , रामकृष्णः इत्यादयः आसन् वा ?”

rāmaḥ – ” tatra jayarāmaḥ anantaḥ rāmakṛṣṇaḥ ityādayaḥ āsan vā ?”

ராம் – “அங்கு ஜெயராம் , அனந்தன் , ராமகிருஷ்ணன் ஆகியோரும் இருந்தார்களா?”
रङ्गनाथः – ” आम् , सर्वे अपि आसन् !”

raṅganāthaḥ – “ām sarve api āsan !”

ரங்கநாத் – “ஆம் , அனைவரும் இருந்தார்கள் !”

रामः – ” भवतः गृह्तः के के तत्र गतवन्तः ?”

rāmaḥ – “bhavataḥ gṛhataḥ ke ke tatra gatavantaḥ ?”

ராம் – “உங்களுடைய வீட்டிலிருந்து யார் யார் அங்கு சென்றீர்கள் ?”
रङ्गनाथः – ” वयं सर्वे अपि गतवन्तः आस्म !”

raṅganāthaḥ – “vayaṁ sarve api gatavantaḥ āsma !”

ரங்கநாத் – “ நாங்கள் அனைவருமே சென்று இருந்தோம் !”
இந்த உரையாடலில் मित्रस्य , जयरामः, अनन्तः, रामकृष्णः என்பதற்கு பதிலாக सुरेशस्य, गोविन्दः , मोहनः , राजीवः ஆகிய பெயர்களை உபயோகித்து மறுபடியும் உரையாடலை உரத்துப் படிக்கவும்.

இனி கீழேயுள்ள கதையைப் படிப்போமா ?

कश्चित् बालकः अस्ति ! तस्य नाम सुधीरः ! एकदा सुधीरः नगरं गच्छति ! शिरस्त्राणि क्रीणाति ! तेषां विक्रयणार्थं ग्रामं गच्छति !

kaścit bālakaḥ asti | tasya nāma sudhīraḥ | ekadā sudhīraḥ nagaraṁ gacchati | śirastrāṇi krīṇāti | teṣāṁ vikrayaṇārthaṁ grāmaṁ gacchāti |

ஒரு சிறுவன் இருந்தான். அவனுடைய பெயர் சுதீர். ஒருமுறை சுதீர் நகரத்திற்குச் செல்கிறான். தொப்பிகளை வாங்குகிறான் . அவைகளை விற்பதற்காக கிராமம் செல்கிறான்.
मार्गे अरण्यम् अस्ति ! सुधीरः श्रान्तः भवति ! सः वृक्षस्य अधः उपविशति ! शिरस्त्रपेटिकां पार्श्वे स्थापयति ! तत्र एव निद्रां करोति !

mārge araṇyam asti | sudhīraḥ śrāntaḥ bhavati | saḥ vṛkṣasya adhaḥ upaviśati | śirastrapeṭikāṁ pārśve sthāpayati | tatra eva nidrāṁ karoti |

வழியில் வனம் இருக்கிறது. சுதீர் களைப்பாக இருக்கிறான். அவன் மரத்திற்கு கீழே உட்காருகிறான். தொப்பிப்பெட்டியை அருகில் வைக்கிறான். அங்கேயே தூங்குகிறான்.
तत्र केचन वानराः सन्ति ! एकः वानरः सुधीरस्य समीपम् आगच्छति ! सः पेटिकां पश्यति ! उद्घाटयति ! एकं शिरस्त्रं गृह्णाति ! शिरसि धारयति ! पुनः वृक्षस्य उपरि गच्छति, उपविशति !

tatra kecana vānarāḥ santi | ekaḥ vānaraḥ sudhīrasya samīpam āgacchati | saḥ peṭikāṁ paśyati | udghāṭayati | ekaṁ śirastraṁ gṛhṇāti | śirasi dhārayati | punaḥ vṛkṣasya upari gacchati , upaviśati |

அங்கு சில குரங்குகள் இருக்கின்றன. ஒரு குரங்கு சுதீருக்குப் பக்கத்தில் வருகிறது. அது பெட்டியைப் பார்க்கிறது. திறக்கிறது. ஒரு தொப்பியை பிடிக்கிறது. தலையில் அணிகிறது. மறுபடியும் மரத்திற்கு மேலே செல்கிறது, உட்காருகிறது.
अन्ये अपि वानराः एतत् पश्यन्ति ! ते अपि शिरस्त्रम् इच्छन्ति ! अतः अधः आगच्छन्ति , शिरस्त्राणि धारयन्ति , वृक्षे उपविशन्ति !

anye api vānarāḥ etat paśyanti | te api śirastram icchanti | ataḥ adhaḥ āgacchanti śirastrāṇi dhārayanti vṛkṣe upaviśanti |

மற்ற குரங்குகளும் கூட இதைப் பார்க்கின்றன. அவைகளும் கூட தொப்பியை விரும்புகின்றன. அதனால் கீழே வருகின்றன, தொப்பிகளை அணிகின்றன, மரத்தில் அமர்கின்றன.
सुधीरः जागरितः भवति ! पुरतः पश्यति ! एकम् अपि शिरस्त्रं नास्ति ! सः वानरान् पश्यति ! शिरस्त्राणि तत्र सन्ति ! सः दण्डं दर्शयति ! वानराः वृक्षशाखाः दर्शयन्ति ! सुधीरः शिलाखण्डं क्षिपति ! वानराः फलानि क्षिपन्ति !

sudhīraḥ jāgaritaḥ bhavati | purataḥ paśyati | ekam api śirastraṁ nāsti | saḥ vānarān paśyati | śirastrāṇi tatra santi| saḥ daṇḍaṁ darśayati | vānarāḥ vṛkṣaśākhāḥ darśayanti | sudhīraḥ śilākhaṇḍaṁ kṣipati | vānarāḥ phalāni kṣipanti |

சுதீர் விழித்துக் கொள்கிறான். அருகில் பார்க்கிறான். தொப்பி ஒன்று கூட இல்லை. அவன் குரங்குகளைப் பார்க்கிறான், தொப்பிகள் அங்கு இருக்கின்றன. அவன் குச்சியைக் காட்டுகிறான். குரங்குகள் மரக்கிளைகளைக் காட்டுகின்றன. சுதீர் கற்களை வீசுகிறான். குரங்குகள் பழங்களை வீசுகின்றன.

सुधीरः उपायं करोति ! वानराः अनुकरणशीलाः इति सः जानाति ! सः स्वकीयं शिरस्त्रं भूमौ क्षिपति ! सर्वे अपि वानराः शिरस्त्राणि क्षिपन्ति ! सुधीरः सर्वाणि सङ्गृह्णाति ! शीघ्रम् अन्यत्र गच्छति !

sudhīraḥ upāyaṁ karoti | vānarāḥ anukaraṇaśīlāḥ iti saḥ jānāti | saḥ svakīyaṁ śirastraṁ bhūmau kṣipati | sarve api vānarāḥ śirastrāṇi kṣipanti | sudhīraḥ sarvāṇi saṅgṛhṇāti |śīghraṁ anyatra gacchati |

சுதீர் ஒரு திட்டம் செய்கிறான். குரங்குகள் மற்றவரைப்போல செய்பவைகள் என்று அவன் தெரிந்துகொள்கிறான். அவன் தன்னுடைய தொப்பியை பூமியில் வீசுகிறான். அனைத்துக் குரங்குகளும் கூட தொப்பிகளை வீசுகின்றன. சுதீர் அனைத்தையும் திரட்டுகிறான். விரைவாக வேறு இடத்திற்குச் செல்கிறான்.

மேலே உள்ள கதையில் பச்சை நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ள वर्तमानकाले (நிகழ்காலத்தில்) வினைச்சொற்களை भूतकाले (இறந்த காலத்தில்) மாற்றி அமைக்கவும்.
उदा –

अस्ति – आसीत् गच्छति —————

asti —- āsīt gacchati ———–

क्रीणाति ————– भवति ————-

krīṇāti bhavati

उपविशति ————– स्थापयति ————–

upaviśati sthāpayati

करोति ————– सन्ति ————–

karoti santi

आगच्छति ————– पश्यति ————–

āgacchati paśyati
उद्घाटयति —————- गृह्णाति ————-

udghāṭayati gṛhṇāti

धारयति ————- गच्छन्ति ———-

dhārayati gacchanti

उपविशन्ति ———– पश्यन्ति —————-

upaviśanti paśyanti

इच्छन्ति ————- आगच्छन्ति ——————

icchanti āgacchanti
धारयन्ति —————— दर्शयन्ति—————–

darśayanti dhārayanti

जानाति —————- क्षिपति ————–

jānāti kṣipati

क्षिपन्ति ——————— सङ्गृह्णाति ———–

kṣipanti saṅgṛhṇāti

इदानीं क्रीयापदानां भूतकालरूपाणि उपयुज्य कथां पनः पठतु ! (idānīṁ krīyāpadānāṁ bhūtakālarūpāṇi upayujya kathāṁ punaḥ paṭhatu |)

இறந்த கால வினைச்சொற்களை உபயோகித்து மீண்டும் கதையைப் படிக்கவும்.

விடைகளை சரிபார்த்துக் கொள்ளவும்.

अस्ति – आसीत् धारयति – धारितवान्
गच्छति
– गतवान्
गच्छन्ति – गतवन्तः
क्रीणाति
– क्रीतवान्
उपविशन्ति – उपविष्टवन्तः
भवति
– अभवत्
पश्यन्ति – दृष्टवन्तः
उपविशति
– उपविष्टवान्
इच्छन्ति – इष्टवन्तः
स्थापयति
– स्थापितवान्
आगच्छन्ति -आगतवन्तः
करोति – कृतवान् धारयन्ति – धारितवन्तः
सन्ति
– आसन्
दर्शयन्ति – दर्शितवन्तः
आगच्छति
– आगतवान्
जानाति – ज्ञातवान्
पश्यति
-दृष्टवान्
क्षिपति – क्षिप्तवान्
उद्घाटयति – उद्घाटितवान् क्षिपन्ति – क्षिप्तवन्तः
गृह्णाति
– गृहीतवान्
सङ्गृह्णाति –
सङ्गृहीतवान्


இனி அடைமொழியில் கொடுக்கப்பட்டுள்ள वर्तमानरूपाणां ( vartamānarūpāṇāṁ ) நிகழ்காலரூபத்தில் बहुवचने (பன்மையில்) உள்ளவைகளின் भूतकालरूपाणि (bhūtakālarūpāṇi ) बहुवचने இறந்தகாலரூபத்தில் (பன்மையில்) எழுதவும்.
குறிப்பு – எழுவாய் ஆண்பால் ,பெண்பால், பலர்பால் பன்மையில் உள்ளதா என்பதை கூர்ந்து கவனித்து விடைகளை எழுதவும்.
उदा –
बालकाः पाठं (पठन्ति) ————— !

bālakāḥ pāṭhaṁ (paṭhanti)

சிறுவர்கள் பாடம் (படிக்கிறார்கள்)

बालकाः पाठं पठितवन्तः !

bālakāḥ pāṭhaṁ paṭhitavantaḥ

சிறுவர்கள் பாடம் படித்தார்கள்.

1. छात्राः कोलाहलं (कुर्वन्ति)————— !

chātrāḥ kolāhalaṁ (kurvanti)————– !

மாணவர்கள் அதிக சப்தம் (செய்கிறார்கள்) ————–!

2. ते वाक्यानि (वदन्ति) —————-!

te vākyāni (vadanti) —————- !

அவர்கள் வாக்கியங்கள் (சொல்கிறார்கள்) ———- !

3. भवत्यः कथां (लिखन्ति ) —————- !

bhavatyaḥ kathāṁ (likhanti) ————— !

(பெண்கள்) கதை (எழுதுகிறார்கள்) ———— !

4. बालिकाः पत्रं (प्रेषयन्ति) ————-!

bālikāḥ patraṁ (preṣayanti) ————— !

சிறுமிகள் கடிதம் (அனுப்புகிறார்கள்) ———— !

5. सैनिकाः देशं (रक्षयन्ति)—————- !

sainikāḥ deśaṁ (rakṣayanti) ————– !

படைவீரர்கள் நாட்டை (பாதுகாக்கிறார்கள்) ————– !

6. शिक्षिकाः पाठं (पाठयन्ति) ————- !

śikṣikāḥ pāṭhaṁ (pāṭhayanti ) —————— !

ஆசிரியைகள் பாடம் (கற்பிக்கிறார்கள்) ———– !

7. वयं मिष्ठान्नं (खादामः) (पु.) ——– !

vayaṁ miṣṭhānnaṁ (khādāmaḥ) ————— !

நாங்கள் இனிப்பு (சாப்பிடுகிறோம்) ———- !

8. वयं प्रातःकाले (उत्तिष्ठामः ) (स्त्री.) ———— !

vayaṁ prātaḥkāle (uttiṣṭhāmaḥ) —————- !

நாங்கள் அதிகாலையில் ( எழுகிறோம்) ———- !

उत्तराणि (uttarāṇi) விடைகள்

1. कृतवन्तः (kṛtavantaḥ ) செய்தார்கள்

2. उक्तवन्तः (uktavantaḥ ) சொன்னார்கள்

3. लिखितवत्यः (likhitavatyaḥ) எழுதினார்கள்

4. प्रेषितवत्यः (preṣitavatyaḥ ) அனுப்பினார்கள்

5. रक्षितवन्तः (rakṣitavantaḥ) பாதுகாத்தார்கள்

6. पाठितवत्यः (pāṭhitavatyaḥ) கற்பித்தார்கள்

7. खादितवन्तः (khāditavantaḥ) சாப்பிட்டோம்

8. उत्थितवत्यः (utthitavatyaḥ ) எழுந்தோம்

कोष्टकं दृष्ट्वा कः कदा कुत्र आसीत् इति लिखतु : –

கீழேயுள்ள அட்டவணையைப் பார்த்து யார், எப்போது , எங்கே இருந்தார்கள் என்று உதாரணத்தைப் பார்த்து எழுதவும்.

सुरेश्वरः

sureśvaraḥ

१०: ०० (10 : 00) विद्यालयः

vidyālayaḥ

दिव्या

divyā

११
:
००
(11: 00)
क्रीडाङ्गणम्

krīāḍgaṇam

कृष्णः

kṛṣṇaḥ

१२
:
००
(
12 : 00)
गृहम्

gṛham

अहम्

aham

: ०० (7
: 00)
ग्रन्थालयः

granthālayaḥ

वयम्

vayam


:
००
( 8 : 00 )
वित्तकोषः

vittakoṣaḥ

महिलाः

mahilā


:
००
(
3 : 00 )
उद्यानम्

udyānam

उदा –
1. सुरेश्वरः दशवादने विद्यालये आसीत् !

sureśvaraḥ daśavādane vidyālaye āsīt |

சுரேஷ்வர் பத்துமணிக்கு பள்ளியில் இருந்தார்.
2. _________ ______________ ____________ ________ !

3. ________ ___________ _______________ _______ !

4. _________ _____________ _____________ ____________ !

5. ____________ _____________ _____________ ___________ !

6. __________ ______________ _______________ ____________ !

उत्तराणि (uttarāṇi) விடைகள்

2. दिव्या एकादशवादने क्रीडाङ्गणे आसीत्।

divyā ekādaśavādane krīḍāṅgaṇe āsīt |

திவ்யா பதினோறுமணிக்கு விளையாட்டுத்திடலில் இருந்தாள்.

3. कृष्णः द्वादशवादने गृहे आसीत्।

kṛṣṇaḥ dvādaśavādane gṛhe āsīt |

கிருஷணன் பனிரெண்டுமணிக்கு வீட்டில் இருந்தார்.

4. अहं सप्तवादने ग्रन्थालये आसम्।

ahaṁ saptavādane granthālaye āsam |

நான் ஏழுமணிக்கு நூல் நிலையத்தில் இருந்தேன்.

5. वयम् अष्टवादने वित्तकोषे आस्म।

vayam aṣṭavādane vittakoṣe āsma |

நாங்கள் எட்டுமணிக்கு வங்கியில் இருந்தோம்.

6. महिलाः त्रिवादने उद्याने आसन्।

mahilāḥ trivādane udyāne āsan |

பெண்கள் மூன்று மணிக்கு பூங்காவில் இருந்தார்கள்.

உடனுக்குடன் பாடங்களைப் படித்துப் பயன் பெறவும். அடுத்த வாரம் भविष्यत्कालरूपाणि (bhaviṣyatkālarūpāṇi )எதிர்காலத்தில் வாக்கியங்களை அமைக்கக் கற்றுக்கொள்வோம்.

Series Navigation

About ரேவதி மணியன்

ரேவதி மணியன்

View all 22 articles →

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 26

This entry is in the series 20110206_Issue

ரேவதி மணியன்


இந்த வாரம் ஏற்கனவே நடந்து முடிந்த விஷயங்களை அதாவது இறந்த காலத்தில்( भूतकालः) Past Tense எப்படிச் சொல்வது என்று விரிவாகக் காண்போம். இதுவரை நிகழ்காலத்தில் (Present Tense) வினைச்சொற்களை எப்படிச் சொல்வது என்று பார்த்தோம். ஒருமுறை ஞாபகப்படுத்திக் கொள்வோமா ?

स: / सा / तत् / भवान् / भवती – गच्छति ( அவன் / அவள் / அது – ஒருமை)

ते / ताः / तानि/ भवन्तः / भवत्यः – गच्छन्ति (அவர்கள் /அவைகள் – பன்மை)

अहम् – गच्छामि (நான்)

वयम् – गच्छामः (நாங்கள்)

கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை மனனம் செய்து கொள்ளவும். गच्छति, पठति, वदति இவையெல்லாம் வினைச்சொற்கள். ஆனால் गतवान् , पठितवान् , उक्तवान् இவையனைத்தும் भुतकृदन्तरूपाणि ( bhūtakṛdantarūpāṇi )என்று அழைக்கப்படுகின்றது. இவை வினைச்சொற்கள் அல்ல. ஆனால் வினைச்சொற்களின் அர்த்தத்தைத் தான் கொடுக்கிறது.

पुंल्लिङ्गे स्त्रीलिङ्गे
वर्तमानकाले Meaning in

Present Tense

कवचनम् हुवचनम् कवचनम् हुवचनम्
पठति

paṭhati

reads पठितवान्

paṭhitavān

पठितवन्तः

paṭhitavantaḥ

पठितवती

paṭhitavatī

पठितवत्यः

paṭhitavatyaḥ

पतति

patati

falls पतितवान्

patitavān

पतितवन्तः

Patitavatī

पतितवती

patitavantaḥ

पतितवत्यः

patitavatyaḥ

वदति

vadati

speaks उक्तवान्

uktavān

उक्तवन्तः

uktavantaḥ

उक्तवती

uktavatī

उक्तवत्यः

uktavatyaḥ

पिबति

pibati

drinks पीतवान्

pītavān

पीतवन्तः

pītavatī

पीतवती

pītavantaḥ

पीतवत्यः

pītavatyaḥ

लिखति

likhati

writes लिखितवान्

likhitavān

लिखितवन्तः

likhitavantaḥ

लिखितवती

likhitavatī

लिखितवत्यः

likhitavatyaḥ

नयति

nayati

carries नीतवान्

nītavān

नीतवन्तः

nītavantaḥ

नीतवती

nītavatī

नीतवत्यः

nītavatyaḥ

पश्यति

paśyati

sees दृष्टवान

dṛṣṭavān

दृष्टवन्तः

dṛṣṭavantaḥ

दृष्टवती

dṛṣṭavatī

दृष्टवत्यः

dṛṣṭavatyaḥ

पृच्छति

pṛcchati

asks पृष्टवान्

pṛṣṭavān

पृष्टवन्तः

pṛṣṭavantaḥ

पृष्टवती

pṛṣṭavatī

पृष्टवत्यः

pṛṣṭavatyaḥ

त्यजति

tyajati

leaves त्यक्तवान्

tyaktavān

त्यक्तवन्तः

tyaktavantaḥ

त्यक्तवती

tyaktavatī

त्यक्तवत्यः

tyaktavatyaḥ

खादति

khādati

eats खादितवान्

khāditavān

खादितवन्तः

khāditavantaḥ

खादितवती

khāditavatī

खातिदवत्यः

khāditavatyaḥ

करोति

karoti

does कृतवान्

kṛitavān

कृतवन्तः

kṛitavantaḥ

कृतवती

kṛitavatī

कृतवत्यः

kṛtavatyaḥ

शृणोति

śṛṇoti

hears शृतवान्

śrutavān

शृतवन्तः

śrutavantaḥ

शृतवती

śrutavatī

शृतवत्यः

śrutavatyaḥ

ददाति

dadāti

gives दत्तवान्

dattavān

दत्तवन्तः

dattavantaḥ

दत्तवती

dattavatī

दत्तवत्यः

dattavatyaḥ

उत्तिष्ठति

uttiṣṭhati

stands उत्थितवान् utthitavān उत्थितवन्तः

utthitavantaḥ

उत्थितवती

utthitavatī

उत्थितवत्यः

utthitavatyaḥ

उपविशति

upaviśati

sits उपविष्टवान् upaviṣṭavān उपविष्टव्न्तः

upaviṣṭavantaḥ

उपविष्टवती

upaviṣṭavatī

उपविष्टवत्यः

upaviṣṭavatyaḥ

स्थापयति

sthāpayati

places स्थापितवान्

sthāpitavān

स्थापितवन्तः

sthāpitavantaḥ

स्थापितवती

sthāpitavatī

स्थापितवत्यः

sthāpitavatyaḥ

गृह्णाति

gṛhṇāti

holds गृहीतवान्

gṛhītavān

गृहीतवन्तः

gṛhītavantaḥ

गृहीतवती

gṛhītavatī

गृहीतवत्यः

gṛhītavatyaḥ

रोदिति

roditi

cries रुदितवान्

ruditavān

रुदितवन्तः

ruditavantaḥ

रुदितवती

ruditavatī

रुदितवत्यः

ruditavatyaḥ

शक्नोति

śaknoti

able to do शक्तवान्

śaktavān

शक्तवन्तः

śaktavantaḥ

शक्तवती

śaktavatī

शक्तवत्यः

śaktavatyaḥ

गच्छति

gacchati

goes गतवान्

gatavān

गतवन्तः

gatavantaḥ

गतवती

gatavatī

गतवत्यः

gatavatyaḥ

प्राप्नोति

prāpnoti

gets, acquires प्राप्तवान्

prāptavān

प्राप्तवन्तः

prāptavantaḥ

प्राप्तवती

prāptavatī

प्राप्तवत्यः

prāptavatyaḥ

कर्तयति

kartayati

cuts कर्तितवान्

kartitavān

कर्तितवन्तः

kartitavantaḥ

कर्तितवती

kartitavatī

कर्तितवत्यः

kartitavatyaḥ

भवति

bhavati

is अभवत्

abhavat

अभवन्

abhavan

अभवत्

abhavat

अभवन्

Abhavan

हसति

hasati

laughs हसितवान्

hasitavān

हसितवन्तः

hasitavantaḥ

हसितवती

hasitavatī

हसितवत्यः

hasitavatyaḥ

ज्वलति

jvalati

lights ज्वलितवान्

jvalitavān

ज्वलितवन्तः

jvalitavantaḥ

ज्वलितवती

jvalitavatī

ज्वलितवत्यः

jvalitavatyaḥ

सम्पादयति

sampādayati

earns सम्पादितवान्

sampāditavān

सम्पादितवन्तः

sampāditavantaḥ

सम्पादितवती

sampāditavatī

सम्पादितवत्यः

sampāditavatyaḥ

आगच्छति

āgacchati

comes आगतवान्

āgatavān

आगतवन्तः

āgatavantaḥ

आगतवती

āgatavatī

आगतवत्यः

āgatavatyaḥ

क्रीणाति

krīāti

buys क्रीतवान्

krītavān

क्रीतवन्तः

krītavantaḥ

क्रीतवती

krītavatī

क्रीतवत्यः

krītavatyaḥ

इच्छति

icchati

likes इष्टवान्

iṣṭavān

इष्टवन्तः

iṣṭavantaḥ

इष्टवती

iṣṭavatī

इष्टवत्यः

iṣṭavatyaḥ

मिलति

milati

meets मिलितवान्

militavān

मिलितवन्तः

militavantaḥ

मिलितवती

militavatī

मिलितवत्यः

militavatyaḥ

निवेदयति

nivedayati

offers निवेदितवान्

niveditavān

निवेदितवन्तः

niveditavantaḥ

निवेदितवती

niveditavatī

निवेदितवत्यः

niveditavatyaḥ

क्रीडति

krīḍati

plays क्रीडितवान्

krīḍitavān

क्रीडितवन्तः

krīḍitavantaḥ

क्रीडितवती

krīḍitavatī

क्रीडितवत्यः

krīḍitavatyaḥ

धावति

dhāvati

runs धावितवान्

dhāvitavān

धावितवन्तः

dhāvitavantaḥ

धावितवती

dhāvitavatī

धावितवत्यः

dhāvitavatyaḥ

पाठयति

pāṭhayati

teaches पाठितवान्

pāṭhitavān

पाठितवन्तः

pāṭhitavantaḥ

पाठितवती

pāṭhitavatī

पाठितवत्यः

pāṭhitavatyaḥ

கீழே உள்ள இறந்தகால வினைச்சொல் ( verb) அட்டவணையையும் மனனம் செய்து கொள்ளவும். பின்னர் இவைகளை உபயோகித்து வாக்கியங்களை அமைப்போம்.

वर्तमानकालः भूतकाल:
एकवचनम् बहुवचनम् एकवचनम् बहुवचनम्
प्रथमपुरुषः अस्ति सन्ति आसीत् आसन्
उत्तमपुरुषः अस्मि स्मः आसम् आस्म

अभ्यासः (abhyāsaḥ) பயிற்சி

கீழே वर्तमानकाले (நிகழ்காலத்தில்) கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்கள் भूतकाले (இறந்தகாலத்தில்) மாற்றப்பட்டுள்ளதை நன்கு கவனித்து உரத்துப் படிக்கவும்.

वर्तमानकाले भूतकाले
एकः बालकः अस्ति !

ekaḥ bālakaḥ asti |

ஒரு சிறுவன் இருக்கிறான்.

1एकः बालकः आसीत् !

ekaḥ bālakaḥ āsīt |

ஒரு சிறுவன் இருந்தான்.

सः वनं गच्छति !

saḥ vanaṁ gacchati |

அவன் வனம் செல்கிறான்.

सः वनं गतवान !

saḥ vanaṁ gatavān |

அவன் வனம் சென்றான்.

तस्य स्नेहिताः अपि सन्ति !

tasya snehitāḥ api santi |

அவனுடைய நண்பர்கள் கூட இருக்கிறார்கள்

तस्य स्नेहिताः अपि आसन् !

tasya snehitāḥ api āsan|

. அவனுடைய நண்பர்கள் கூட இருந்தார்கள்.

वने ते एकं वानरं पश्यन्ति !

vane te ekaṁ vānaraṁ paśyanti

வனத்தில் அவர்கள் ஒரு குரங்கைப் பார்க்கிறார்கள்

वने ते एकं वानरं दृष्टवन्तः !

| vane te ekaṁ vānaraṁ dṛṣṭavantaḥ |

. வனத்தில் அவர்கள் ஒரு குரங்கைப் பார்த்தார்கள்.

सः वानरः पिपासितः अस्ति !

saḥ vānaraḥ pipāsitaḥ asti |

அந்தக்குரங்கு தாகமாக இருக்கிறது.

सः वानरः पिपासितः आसीत् !

saḥ vānaraḥ pipāsitaḥ āsīt |

அந்தக்குரங்கு தாகமாக இருந்தது.

स्नेहिताः जलकूपीं तत्र स्थापयन्ति !

snehitāḥ jalakūpīṁ tatra sthāpayanti |

நண்பர்கள் குடிநீர்புட்டியை அங்கு வைக்கிறார்கள்

स्नेहिताः जलकूपीं तत्र स्थापितवन्तः

snehitāḥ jalakūpīṁ tatra sthāpitavantaḥ !

. நண்பர்கள் குடிநீர்புட்டியை அங்கு வைத்தார்கள்.

वानरः शीघ्रं शीघ्रं जलं पिबति !

vānaraḥ śīghraṁ śīghraṁ jalaṁ pibati |

குரங்கு வேகம் வேகமாக குடிநீரைக் குடிக்கிறது.

वानरः शीघ्रं शीघ्रं जलं पीतवान् !

vānaraḥ śīghraṁ śīghraṁ jalaṁ pītavān !

குரங்கு வேகம் வேகமாக குடிநீரைக் குடித்தது.

वानरः अन्यत्र गच्छति !

vānaraḥ anyatra gacchati |

குரங்கு வேறு இடத்திற்குச் செல்கிறது.

वानरः अन्यत्र गतवान् !

vānaraḥ anyatra gatavān |

குரங்கு வேறு இடத்திற்குச் சென்றது.

2. एका बालिका अस्ति !

ekā bālikā asti |

ஒரு சிறுமி இருக்கிறாள்.

एका बालिका आसीत् !

ekā bālikā āsīt |

ஒரு சிறுமி இருந்தாள்.

सा बालकेन्द्रे संस्कृतं पठति !

sā bālakendre saṁskṛtaṁ paṭhati |

அவள் குழந்தைகள்மையத்தில் சமஸ்கிருதம் படிக்கிறாள்

सा बालकेन्द्रे संस्कृतं पठितवती !

sā bālakendre saṁskṛtaṁ paṭhitavatī |

அவள் குழந்தைகள்மையத்தில் சமஸ்கிருதம்

. படித்தாள்.

सा मधुरं गायति !

sā madhuraṁ gāyati |

அவள் இனிமையாகப் பாடுகிறாள்.

सा मधुरं गीतवती !

sā madhuraṁ gītavatī |

அவள் இனிமையாகப் பாடினாள்.

सा प्रतिस्पर्धायां पुरस्कारं प्राप्नोति !

sā ptatispardhāyāṁ puraskāraṁ prapnoti

அவள் ஒவ்வொரு போட்டியிலும் பரிசு பெறுகிறாள்

सा प्रतिस्पर्धायां पुरस्कारं प्राप्तवती !

| sā ptatispardhāyāṁ puraskāraṁ prāptavatī !

அவள் ஒவ்வொரு போட்டியிலும் பரிசு

. பெற்றாள்.

सा प्रसन्ना भवति !

sā prasannā bhavati |

அவள் சந்தோஷம் அடைகிறாள்.

सा प्रसन्ना अभवत् !

sā prasannā abhavat|

அவள் சந்தோஷம் அடைந்தாள்.

सा श्लोकं लिखति !

sā ślokaṁ likhati |

அவள் ஸ்லோகம் எழுதுகிறாள்.

सा श्लोकं लिखितवती !

sā ślokaṁ likhitavatī !

அவள் ஸ்லோகம் எழுதினாள்.

वयं पुस्तकानि नयामः !

vayaṁ pustakāni nayāmaḥ |

நாங்கள் புத்தகங்கள் எடுத்துச் செல்கிறோம்

वयं पुस्तकानि नीतवत्यः !

vayaṁ pustakāni nītavatyaḥ

. நாங்கள் புத்தகங்கள் எடுத்துச் சென்றோம்

.

உதாரணத்தைப் போலவே கோடிட்ட இடங்களை இறந்தகால வடிவத்தில் நிரப்பவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள விடைகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கவும்.

उदा – बालकः फलं ——— (खादित- )

बालकः फलं खादितवान् !

1. सेवकः कार्यं ——– (कृत –)

sevakaḥ kāryaṁ ——– (kṛta – )

2. आचार्यः कथाम् ——– ( उक्त -)

ācāryaḥ kathām —– (ukta- )

3. अहं चित्रं ——– (दृष्ट -)

ahaṁ citraṁ —— (dṛṣṭa- )

4. छात्रः प्रश्नं —– (पृष्ट-)

chātraḥ praśnaṁ —— (pṛṣṭa- )

5. अहं पुस्तकं ——— (क्रीत -)

ahaṁ pustakaṁ ——– (krīta- )

6. धनिकः दानं ——— (दत्त – )

dhanikaḥ dānaṁ ——- (datta- )

7. अनुजा उत्तराणि ——— (लिखित -)

anujā uttarāṇi ——– (likhita- )

8. सखी फलं ——— (खादित -)

sakhī phalaṁ ——— (khādita -)

9. माधवी श्लोकं ——- (पठित- )

mādhavī slokaṁ ——– (paṭhita- )

10. बालकाः पाठं —– (पठित -)

bālakāḥ pāṭhaṁ ——– (paṭhita- )

11.वयं प्रातःकाले —- (उत्थित – )

vayaṁ prātaḥkāle ——- (utthita- )

விடைகள் (उत्तराणि – )

1. कृतवान्

2. उक्तवान्

3. दृष्टवती

4. पृष्टवान्

5. क्रीतवती

6. दत्तवान्

7. लिखितवती

8. खादितवती

9. पठितवती

10. पठितवन्तः

11. उत्थितवत्यः / उत्थितवन्तः

அடுத்த வாரம் भूतकालः பற்றி இன்னும் சற்று விரிவாகப் படிப்போம்.

Series Navigation

About ரேவதி மணியன்

ரேவதி மணியன்

View all 22 articles →

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 25

This entry is in the series 20110123_Issue

ரேவதி மணியன்


இந்த வாரம் வினாச் சொல்லின் ( Interrogative word) இறுதிச் சொல்லான किमर्थम् ? (kimartham ) “Why?” or “What for ?” ( “ஏன் ?” , “எதற்காக ?”)என்பதைப்பற்றி விரிவாகக் கற்றுக்கொள்வோம். எந்த ஒரு செயலும் எதற்காக அல்லது எந்த காரணத்திற்காக செய்யப்படுகிறது என்பதை விரிவாக சொல்லும்போது किमर्थम् ? என்ற வினாவின் விடை கிடைக்கிறது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டை உரத்துப் படிக்கவும்.

उदा 1 – सः किमर्थं विद्यालयं गच्छति ? (saḥ kimarthaṁ vidyālayaṁ gacchati ?)

सः पठनार्थं विद्यालयं गच्छति ! (saḥ paṭhanārthaṁ vidyālayaṁ gacchati !)

உதா 1 – அவன் எதற்காக பள்ளி செல்கிறான் ?

அவன் படிப்பதற்காக பள்ளி செல்கிறான் .

उदा 2 – सा किमर्थं योगासनं करोति ? (sā kimarthaṁ yogāsanaṁ karoti ?)
सा आरोग्यार्थं योगासनं करोति ! (sā ārogyārthaṁ yogāsanaṁ karoti !)

உதா 2 – அவள் எதற்காக யோகாசனம் செய்கிறாள் ?
அவள் ஆரோகியத்திற்காக யோகாசனம் செய்கிறாள்.

उदा 3 – वेङ्कटेशः प्रवासार्थं विदेशं गच्छति ! (veṅkaṭeśaḥ pravāsārthaṁ videśaṁ gacchati !)

वेङ्कटेशः किमर्थं विदेशं गच्छति ? (veṅkaṭeśaḥ kimarthaṁ videśaṁ gacchati ?)

உதா 3 – வேங்கடேஷ் சுற்றுப்பயணத்திற்காக வெளிநாடு செல்கிறார்
வேங்கடேஷ் எதற்காக வெளிநாடு செல்கிறார் ?

उदा 4 – सः ध्यानार्थं तत्र उपविष्टवान ! (saḥ dhyānārthaṁ tatra upaviṣṭavān |)
सः किमर्थं तत्र उपविष्टवान ? (saḥ kimarthaṁ tatra upaviṣṭavān ?)

உதா 4 – அவன் தியானத்திற்காக அங்கு உட்கார்ந்தான்.
அவன் எதற்காக அங்கு உட்கார்ந்தான் ?

மேலே உள்ள முதல் இரண்டு உதாரணங்களில் किमर्थम् ? என்ற வினா எழுப்பப்பட்டு அதற்கான விடை கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு உதாரணங்களில் பதில் கொடுக்கப்பட்டு பின்னர் किमर्थम् ? என்ற வினா தொடுத்துள்ளோம்.

अभ्यासः (abhyāsaḥ ) பயிற்சி

கீழேயுள்ள உதாரணத்தைப் பார்த்து மற்ற வினாக்களுக்கு விடை அமைக்கவும்.

उदा – सः किमर्थं ग्रन्थालयं गच्छति ? (पठनम्) (saḥ kimarthaṁ granthālayaṁ gacchati ? (paṭhanam) )
सः पठनार्थं ग्रन्थालयं गच्छति ! (saḥ paṭhanārthaṁ granthālayaṁ gacchati !)

உதா – அவன் எதற்காக நூலகம் செல்கிறான் ? (படிப்பு)
அவன் படிப்பதற்காக நூலகம் செல்கிறான்.

1. रोगी किमर्थम् औषधं पिबति ? (आरोग्यम्) (rogī kimartham auṣadhaṁ pibati ? (ārogyam)
———————————————————- !

1. நோயாளி எதற்காக மருந்து குடிக்கிறார் ? (உடல்நலம்)
————————————————— !

2. एषः किमर्थम् आपणं गच्छति ? ( क्रयणम् ) (eṣaḥ kimartham āpaṇam gacchāti ? ( krayaṇam) )

——————————————————– !
2. இவன் எதற்காக கடைக்குச் செல்கிறான் ?(வாங்க)
———————————————- !

3. सः किमर्थं पुस्तकं क्रीणाति ? (अध्ययनम्) (saḥ kimarthaṁ pustakaṁ krīṇāti ? (adhyayanam) )

——————————————————– !

3. அவன் எதற்காக புத்தகம் வாங்குகிறான் ? (படிக்க)
————————————————- !

4. सा किमर्थं शीघ्रं गच्छति ? ( सखीदर्शनम्) (sā kimarthaṁ śīghraṁ gacchati ? (sakhīdarśanam) )

————————————————– !

4. அவள் எதற்காக வேகமாகச் செல்கிறாள்? (தோழியைப்பார்க்க)

—————————————————– !

5. चित्रकारः किमर्थं नदीतीरं गतवान् ? (चित्रलेखनम् ) (citrakāraḥ kimarthaṁ nadītīraṁ gatavān ?
( citralekhanam) )
———————————————- !

5. ஓவியர் எதற்காக கடற்கரைக்குச் சென்றார் ? ( ஓவியம்வரைய)
————————————————— !

விடைகள்

1. आरोग्यार्थम्

2. क्रयणार्थम्

3. अध्ययनार्थम्

4. सखीदर्शनार्थम्

5. चित्रलेकनार्थम्

இதுவரை ஏழுவிதமான வினாச் சொற்களையும் (सप्त ककाराः) விரிவாகக் கற்றுக்கொண்டுள்ளோம். அவைகளை மறுபடியும் ஞாபகப்படுத்திக் கொள்வோமா ? அனைத்து வினாச்சொற்களும் “க” என்ற எழுத்தில் ஆரம்பிப்பதால் இவை सप्त ककाराः என்று அழைக்கப்படுகின்றது.

1. कः / का / किम ? யார் ? எது?

2. कुत्र ? எங்கு ?

3. कति ? எத்தனை ?

4. कदा ? எப்போது ?

5. कुतः ? எங்கிருந்து ?

6. कथम् ? எப்படி ?

7. किमर्थम् ? எதற்காக ?

கீழே கொடுக்கப்பட்டுள்ள கோடிட்ட இடங்களை कः / का / किम , कुत्र , कति , कदा , कुतः , कथम् , किमर्थम् என்ற ஏழுவிதமான வினாச் சொற்களில் பொறுத்தமானதைக் கொண்டு நிரப்பவும்.

1. दशरथस्य —————————– पुत्रा? दशरथस्य चत्वारः पुत्राः ! (daśarathasya ——– putrāḥ ? daśarathasya catvāraḥ putrāḥ ! )
1. தசரதருக்கு ———————- புதல்வர்கள் ? தசரதருக்கு நான்கு புதல்வர்கள்.

2. भवन्तः —————————- तत्र गतवन्तः ? वयं पठनार्थं तत्र गतवन्तः ! (bhavantaḥ ——— tatra gatavantaḥ ? vayaṁ paṭhanārthaṁ tatra gatavantaḥ !)
2. நீங்கள் —————————– அங்கு சென்றீர்கள் ? நாங்கள் படிப்பதற்காக அங்கு சென்றோம்.

3. भवत्याः विरामः ———————- ? मम विरामः सोमवासरः ! (bhavatyāḥ virāmaḥ ———- ? mama virāmaḥ somavāsaraḥ !)

3. உன்னுடைய விடுமுறை ——————— ? என்னுடைய விடுமுறை திங்கட்கிழமை.

4. एषा शाटिका ———————- अस्ति ? शाटिका बहु सम्यक् अस्ति ! (eṣā śāṭikā ——— asti ? śāṭikā bahu samyak asti ! )
4. இந்தப் புடவை ——————— இருக்கிறது ? புடவை மிக நன்றாக இருக்கிறது.

5. भवान् इदानीम् ————————– करोति ? अहं पाठं पठामि ! (bhavān idānīm ——– karoti ? ahaṁ pāṭhaṁ paṭhāmi |)
5. நீங்கள் இப்போது ——————— செய்கிறீர் ? நான் பாடம் படிக்கிறேன்.

6. बालकः ——————– अस्ति ? बालकः बहिः अस्ति ! (bālakaḥ ——– asti ? bālakaḥ bahiḥ asti ! )
6. சிறுவன் —————— இருக்கிறது ? சிறுவன் வெளியே இருக்கிறான்.

7. भवतः मातुलः ————————- आगतवान् ? मम मातुलः रामेश्वरतः आगतवान् ! ( bhavataḥ mātulaḥ —– āgatavān ? mama mātulaḥ rāmeśvarataḥ āgatavān ! )
7. உங்களுடைய மாமா —————– வந்தார் ? என்னுடைய மாமா ராமேஸ்வரத்திலிருந்து வந்தார் .

8. भवतः गृहे ————————- जनाः सन्ति ? मम गृहे दश जनाः सन्ति ! (bhavataḥ gṛhe ——— janāḥ santi ? mama gṛhe daśa janāḥ santi ! )
8. உங்களுடைய வீட்டில் ————————- ஜனங்கள் இருக்கிறார்கள் ? என்னுடைய வீட்டில் பத்து ஜனங்கள் இருக்கிறார்கள்.

9. ———– विद्यालयं गच्छति ? कमला विद्यालयं गच्छति ! (———– vidyālayaṁ gacchati ? kamalā vidyālayaṁ gacchati ! )
9. ———————- பள்ளி செல்கிறாள் ? கமலா பள்ளி செல்கிறாள் .

10. ——————— फलं खादति ? गणेशः फलं खादति ! (———– phalaṁ khādati ? gaṇeśaḥ phalaṁ khādati ! )
10. ——————— பழம் சாப்பிடுகிறான் ? கணேஷ் பழம் சாப்பிடுகிறான்.

விடைகளை கீழே சரிபார்த்துக் கொள்ளவும்.

1. कति

2. किमर्थम्

3. कदा

4. कथम्

5. किम्

6. कुत्र

7. कुतः

8. कति

9. का

10. कः

அடுத்த வாரம் இறந்த கால நிகழ்ச்சிகளை ஆண்பால் மற்றும் பெண்பாலில் ஒருமை ,பன்மையில் எப்படிச் சொல்வது என்பதைப் பற்றி விரிவாகக் காண்போம். அந்தந்த வாரப் பாடங்களை உடனுக்குடன் படித்துப் பயன் பெறவும்.

Series Navigation

About ரேவதி மணியன்

ரேவதி மணியன்

View all 22 articles →

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 24

This entry is in the series 20110117_Issue

ரேவதி மணியன்


இந்த வாரம் कथम् ? (katham ?) எப்படி ? (How ?)என்ற வினாச்சொல்லை எப்படி உபயோகிக்கவேண்டும் என்பதைப்பற்றி விரிவாகக் காண்போம்.

उदा – अश्वः कथं गच्छति ? (aśvaḥ katham gacchati ?)

अश्वः शीघ्रं गच्छति ! (aśvaḥ śīghraṁ gacchati !)

உதா – குதிரை எப்படிச் செல்கிறது ?

குதிரை வேகமாகச் செல்கிறது.

उदा – कूर्मः कथं गच्छति ? (kūrmaḥ kathaṁ gacchati ?)
कूर्मः मन्दं गच्छति ! (kūrmaḥ mandaṁ gacchati !)

உதா – ஆமை எப்படிச் செல்கிறது ?

ஆமை மெதுவாகச் செல்கிறது.

उदा – सिंहः कथं गर्जति ? (siṁhaḥ katham garjati ?)
सिंहः उच्चैः गर्जति ! ( siṁhaḥ uccaiḥ garjati !)

உதா – சிங்கம் எப்படி கர்ஜிக்கிறது ?
சிங்கம் சத்தமாக கர்ஜிக்கிறது.

उदा – बालिका कथं गायति ? (bālikā katham gāyati ?)
बालिका शनैः गायति ! (bālikā śanaiḥ gāyati !)

உதா – சிறுமி எப்படிப் பாடுகிறாள் ?
சிறுமி மெதுவாக (சப்தம் குறைவாக)ப் பாடுகிறாள்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள உதாரணங்களை உரத்துப் படிக்கவும். பின்னர் शीघ्रं , मन्दं , उच्चैः , शनैः ஆகியவைகளை உபயோகித்து கீழேயுள்ள கோடிட்ட இடங்களை பூர்த்தி செய்யவும்.

1. सः ———————- भोजनं करोति ? (saḥ ———– bhojanaṁ karoti |)
அவன் ————– சாப்பிடுகிறான்.

2. गोपालः ———— गायति ! (gopālaḥ ———— gāyati!)
கோபால் —————- பாடுகிறார்.

3. मम माता —————– कार्यं करोति ! (mama mātā ————- kāryaṁ karoti|)
என்னுடைய அம்மா ———— வேலை செய்கிறார்.

4. भवती ———————- सम्भाषणं करोतु ! (bhavatī ———– sambhāṣaṇaṁ karotu |)
நீர் (நீங்கள்) ———— பேசவும்.

5. न शृणोमि, कृपया किञ्चित् ———— वदतु ! (na śṛṇomi kṛpayā kiñcit ———— vadatu |)
எனக்குக் கேட்கவில்லை, ————- பேசு !

6. ————– प्रस्थानं करोतु , विलम्बः भवति ! (———- prasthānaṁ karotu vilambaḥ bhavati |)
—————– புறப்படு. தாமதம் ஆகிவிடும்.

7. इतोऽपि समयः अस्ति , ————- भोजनं करोतु ! (ito’pi samayaḥ asti —————– bhojanaṁ karotu |)
இன்னும் நேரம் இருக்கிறது. —————- சாப்பிடு.

8. एतत् लोकयानं सर्वदा ———– गच्छति ! (etat lokayānaṁ sarvadā ————- gacchati |)
இந்தப் பேருந்து எப்போதும் ————- செல்கிறது.

9. अत्र शिशु: निद्रां करोति , कृपया —————– वदतु ! (atra śiśuḥ nidrāṁ karoti , kṛpayā
————- vadatu |)

இங்கு குழந்தை தூங்குகிறது. ———— பேசு !

சாதாரணமாக நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் ? (भवान् कथम् अस्ति ?)என்று கேட்டால் நன்றாக , மிக நன்றாக இருப்பதாக பதில் சொல்கிறோம் அல்லவா. இதுபோல कथम् ? என்ற வினாச் சொல்லுக்கு கேள்வியின் தன்மையைப் பொறுத்து எவ்வாறெல்லாம் பதில் அமையும் என்று பார்ப்போம்.

उदा – आरोग्यं कथम् अस्ति ? (ārogyam katham asti ?)
आरोग्यं सम्यक् अस्ति ! (ārogyam samyak asti |)

உதா – ஆரோக்கியம் எப்படி இருக்கிறது ?

ஆரோக்கியம் நன்றாக இருக்கிறது.

उदा – वातावरणं कथम् अस्ति ? (vātāvaraṇaṁ katham asti ?)
वातावरणं समीचीनम् अस्ति ! ( vātāvaraṇaṁ samīcīnam asti !)

உதா – வானிலை எப்படி இருக்கிறது ?
வானிலை நன்றாக இருக்கிறது.

उदा – बालकः कथं धावति ? (bālakaḥ kathaṁ dhāvati ?)
बालकः सम्यक् धावति ! (bālakaḥ samyak dhāvati |)

உதா – சிறுவன் எப்படி ஓடுகிறான்?
சிறுவன் நன்றாக ஓடுகிறான்.

उदा – एतत् वस्त्रं कथम् अस्ति ? (etat vastraṁ katham asti ?)
एतत् वस्त्रं उत्तमम् अस्ति ! (etat vastraṁ uttamam asti ! )

உதா – இந்த துணி எப்படி இருக்கிறது ?

இந்த துணி நன்றாக இருக்கிறது .

उदा – भीमसेनजोशी कथं गायति ? (bhīmasenajośī kathaṁ gāyati ?)
भीमसेनजोशी सम्यक् गायति ! (bhīmasenajośī samyak gāyati !)

உதா – பீமசேனஜோஷீ எப்படிப் பாடுகிறார் ?

பீமசேனஜோஷீ நன்றாகப் பாடுகிறார்.

उदा – तेण्डुल्कर् कथं क्रीडति ? (teṇḍulkar kathaṁ krīḍati ?

तेण्डुल्कर् सम्यक् क्रीडति ! (teṇḍulkar samyak krīḍati !)

உதா – டெண்டுல்கர் எப்படி விளையாடுகிறார்?
டெண்டுல்கர் நன்றாக விளையாடுகிறார்.

இனி கீழே கொடுக்கப்பட்டுள்ள விடைக்கு வினாவைத் தொடுப்போமா?

उदा – उद्यानं सुन्दरम् अस्ति ! (udyānaṁ sundaram asti |)
उद्यानं कथम् अस्ति ? (udyānaṁ katham asti ?)

உதா – பூங்கா அழகாக இருக்கிறது .

பூங்கா எப்படி இருக்கிறது ?

இதுபோலவே மற்ற பதில்களுக்கும் கேள்வியை அமைத்து உரத்துப் படிக்கவும்.

1. भोजनम उत्तमम् अस्ति ! (bhojanam uttamam asti |) ———————————————————— ?
சாப்பாடு நன்றாக இருக்கிறது.

2. एतत् चलनचित्रं सम्यक् अस्ति ! ( etat calanacitraṁ samyak asti |) ———————————————–?
இந்த திரைப்படம் நன்றாக உள்ளது.

3. तत पुस्तकम् उत्तमम् अस्ति ! ( tat pustakam uttamam asti |) ———————————————–?
அந்த புத்தகம் நன்றாக உள்ளது.

4. सः सर्वं कार्यं सम्यक् करोति ! ( saḥ sarvaṁ kāryaṁ samyak karoti |) ———————————————-?
அவன் அனைத்துக் காரியங்களையும் நன்றாக செய்கிறான்.

5. रामायणं बहु विस्तृतम् अस्ति ! ( rāmāyaṇaṁ bahu visṛtam asti |) ————————————————-?
ராமாயணம் மிகவும் விரிவாக இருக்கிறது.

மீண்டும் இந்த வாரத்தின் புதிய வார்த்தைகளை நினைவுபடுத்திக் கொள்வோமா?

शीघ्रं (śīghraṁ) – விரைவாக
मन्दं (mandaṁ) – வேகம் குறைவாக
उच्चैः (uccaiḥ) – சத்தமாக
शनैः (śanaiḥ) – மெதுவாக
सम्यक् (samyak) – நலமாக, நன்றாக
समीचीनम् (samīcīnam) – நலமாக, மிகநன்றாக
उत्तमम् (uttamam) – சிறப்பாக, நன்றாக
सुन्दरम् (sundaram) – அழகாக

இவைகளை அன்றாட வாழ்வில் வீட்டிலும், நண்பர்களிடம் பேசும்போதும் உபயோகப்படுத்தக் கற்றுக்கொள்ளவும்.

Series Navigation

About ரேவதி மணியன்

ரேவதி மணியன்

View all 22 articles →

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 15

This entry is in the series 20101101_Issue

ராமச்சந்திர கோபால்



சென்றவாரம் சில விசேஷ வினைச்சொற்களை பார்த்தோம்

அவற்றை இங்கே தொடர்வோம்

रामः करोति – बालकाः कुर्वन्ति

गजः शृणोति – गजाः शॄण्वन्ति

रामः ददाति – बालकाः ददति

जानाति – जानन्ति
शक्नोति – शक्नुवन्ति

करोमि कुर्मः
शॄणोमि शृणुमः
जनामि जानीमः
शक्नोमि शक्नुमः

இவற்றை வைத்து வாக்கியங்களை அமையுங்கள்

இப்போது அடுத்து ஒரு கேள்வியை பற்றி தெரிந்துகொள்வோம்.

கதி என்றால் எத்தனை?

ஐந்து பைகள் இருக்கின்றன
எத்தனை பைகள் இருக்கின்றன?

पञ्च स्यूताः सन्ति
कति स्यूताः सन्ति?

कति என்றால் எத்தனை?

இப்போது கேள்விகளை அமையுங்கள்.

षट् फलानि सन्ति

____________

अष्ट पर्णानि सन्ति பர்ணானி என்றால் இலைகள்

________

षट् वातायनानि सन्ति

__________

____ गजाः सन्ति

__________

_____ कुञ्चिकाः सन्ति

_________

இந்த் வாக்கியங்களை எழுதி அவற்றை உரத்து கூறுங்கள். பிறகு மறைத்துவிட்டு
பொருளை மனதில் கொண்டு மனப்பாடமாக உரத்து கூறுங்கள்

எப்போதுமே कति अस्ति என்று கேட்கலாகாது. எப்போதுமே कति सन्ति?
என்றுதான் கேட்கவேண்டும்.

குத்ர कुत्र என்றால் எங்கே. இது நினைவிலிருக்கும். இப்போது அவற்றை
பொருளுடன் சேர்த்து சொல்லுவோம்

அது அடுத்தவாரம்

Series Navigation

About ராமச்சந்திர கோபால்

ராமச்சந்திர கோபால்

View all 17 articles →

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 14

This entry is in the series 20101024_Issue

ராமச்சந்திர கோபால்


ஏற்கெனவே வினைச்சொற்களை பார்த்திருக்கிறோம்.
அவை अस्ति स‌न्ति पठति ஆகிய‌வை
இவ‌ற்றை க்ரியாப‌தானி என்று அழைப்பார்க‌ள்
क्रियाप‌दानि

सः विद्यालये पठति ते विद्यालये पठन्ति
அவர் பள்ளியில் படிக்கிறார்
அவர்கள் பள்ளியில் படிக்கிறார்கள்

க்ருஹம் என்றால் வீடு
க்ருஹே என்றால் வீட்டில்

வித்யாலயே என்றால் பள்ளியில்
க்ரீடாங்கனே என்றால் விளையாடுமிடத்தில்
கார்யாலயே என்றால் அலுவலகத்தில்

ஏ விகுதி இல் என்று பொருள் படும்

படதி என்றால் படிக்கிறான் (ஒருமை)
படந்தி என்றால் படிக்கிறார்கள். (ப‌ன்மை)
இதே போல‌
கீழே க‌ண்ட‌ வாக்கிய‌ங்க‌ளை பன்மையில் அமைத்து உர‌க்க‌ சொல்லுங்க‌ள்

பிற‌கு இந்த‌ வாக்கிய‌ங்க‌ளை பார்க்காம‌ல் திருப்பி சொல்லுங்க‌ள்.

सा गृहे वसति

सः कार्यालये तिष्ठति

भवान् क्रिदाङ्गने क्रीडति

सिंहः वने गर्जति
சிம்ஹஹ வனே கர்ஜதி (சிங்கம் வனத்தில் கர்ஜிக்கிறது)

वानरः फलम् खादति
बालः शालाम् गच्छति
एषा चित्रम्-पश्यति

भवती प्रतिदिनम्-नृत्यति


ஆணை அல்லது வேண்டுகோளை சொல்லும்போது

படது என்று சொல்லவேண்டும். படது என்றால் படி (அல்லது படிக்கட்டும்)
(ஒருமை)
படந்து என்றால் படியுங்கள் (பன்மை)
இரண்டுமே மரியாதைக்குரிய வேண்டுகோள்கள்தான். ஆகையால் படி என்பதை மரியாதை
அற்ற வார்த்தை என்று எடுத்துகொள்ளவேண்டாம்.

பட என்றால் ஒருமை மரியாதை அற்ற வார்த்தை. படது என்றால் மரியாதைக்குறிய
வார்த்தை.

இவற்றுக்கு பன்மை எழுதுங்கள் பிறகு உரத்து படியுங்கள்.
भवान्-पठतु —— भवन्तः पठन्तु
बालिका नृत्यतु – பாலிகா நிருத்யது – சிறுமி நடனமாடட்டும்
भवती लिखतु
अम्बा गच्छतु
अनुजः क्रिडतु

இப்போது தன்னை பற்றி சொல்லும்போது என்ன சொல்லுவோம் என்று பார்ப்போம்

अहम् खादामि அஹம் காதாமி நான் சாப்பிடுகிறேன்

वयम् खादामः வயம் காதாமஹ நாங்கள் சாப்பிடுகிறோம்

இதே போல கீழ்க்கண்ட வாக்கியங்களையும் பன்மையில் அமைத்து உரத்து
சொல்லுங்கள்

अहम् हसामि
अहम् इच्छामि
अहम् पिबामि

எல்லா வினைச்சொற்களும் இதே போல மாற்றமடையாது.
ஒரு சில விசேஷ சொற்கள் இருக்கின்றன
உதாரணமாக கரோதி என்றால் செய்கிறான் குர்வந்தி என்றால் செய்கிறார்கள்
ஷுர்னோதி என்றால் கேட்கிறான் ஷ்ருன்வந்தி என்றால் கேட்கிறார்கள்
ததாதி என்றால் கொடுக்கிறான் தததி என்றால் கொடுக்கிறார்கள்

அதே போல
கரோமி என்றால் செய்கிறேன் குர்மஹ என்றால் செய்கிறோம்

இவற்றை பிறகு பார்ப்போம்

Series Navigation

About ராமச்சந்திர கோபால்

ராமச்சந்திர கோபால்

View all 17 articles →

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 13

This entry is in the series 20100926_Issue

ராமச்சந்திர கோபால்


இப்போது வாக்கியங்களில் இந்த பன்மை என்னும் பஹுவசனம் बहुवचनम्-பார்ப்போம்

चषकः अस्ति அஸ்தி இருக்கிறது

चषकाः सन्ति (சந்தி – இருக்கின்றன)

இதே மாதிரி எல்லா ஒருமை பன்மையையும் வாக்கியங்களாக சொல்லுங்கள்

चमसः

घटः

मन्थानः

पात्रम्-

मिश्रकम्-

पेषकम्-

स्थालिका

छुरिका

अग्निपेटिका

दोणी

दर्वि

कूपी

वेल्लनी

बालकः

शिक्षकः

चमसः

रामः

घटः

बालका:

शिक्षकाः

चमसाः

रामाः

घटा:

पत्रम्-

फलम्-

वनम्-

गृहम्-

वस्त्रम्-

पत्रानि-

फलानि-

वनानि-

गृहानि-

वस्त्रानि-

वालिका

छुरिका

स्थालिका

अग्निपेटिका

वालिका:

छुरिकाः

स्थालिकाः

अग्निपेटिकाः

लेखनी –

द्रोणी –

कूपी

लेखन्यः

द्रोण्यः

कूप्यः

இவை அனைத்துக்கும் अस्ति அல்லது सन्ति சரியாக சேர்த்து வாக்கியங்கள்
அமையுங்கள்.
உரத்து சொல்லிப்பழகுங்கள்.

தற்போது அவர் அவை போன்றவற்றில் बहुवचनम्- பார்ப்போம்

ஆண்பால் -पु
सः ते அவர் அவர்கள்
एषः – एते இவர் இவர்கள்
कः के யார் யார்கள்?

பெண்பால் स्त्रि
सा ताः அவர் அவர்கள்
एषा एताः இவர் இவர்கள்
का काः யார் யார்கள்?

அஃறிணை न
तत्- तानि அது அவைகள்
एतत्-एतानि இது இவைகள்
किम्-कानि எது? எவைகள்?

இப்போது மேற்கண்ட வார்த்தைகளை சேர்த்து இவைகளையும் சேர்த்து வாக்கியங்களை
அமையுங்கள்.

एते बालकाः
एता द्रोण्यः
போன்று கீழ்க்கண்ட வாக்கியங்களையும் சரியாக அமையுங்கள்

___ चषका:
___ पुस्तकानि
_____ स्थालिकाः
_____बाष्पस्थाल्यः?
_____अग्निपेटिकाः
_____घटा:
_____वस्त्राणि?

கேள்விக்குறியை பார்த்து அதற்கு தகுந்தாற்போல பஹுவசன வார்த்தையை
சேருங்கள்.

बहुवचनरूपाणि लिखतु

एषः जनः -) एते जनाः -) कः जनः -) के जनाः

एषा महिला

सा स्थालिका
तत्- उपनेत्रम्-
सः चमसः
किं फलम्?
का भगिनि?
एतत्- गृहम्-
एषः सैनिकः

சில வித்தியாசமான பஹுவசனங்கள்.

भवान्- भवन्तः
भवति -भवत्यः
अहम्-वयम्- (वयम्- என்றால் நாம்)

இவற்றை வைத்தும் பஹுவசனம் எழுதுங்கள்.

உதாரணமாக
भवान्-बालकः -) भवन्तः बालकाः
___ युवकः -)
____ बालिका -)
अहम्-महिला -)

Series Navigation

About ராமச்சந்திர கோபால்

ராமச்சந்திர கோபால்

View all 17 articles →

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 12

This entry is in the series 20100919_Issue

ராமச்சந்திர கோபால்



चषकः டம்பள் அல்லது கோப்பை சஷகஹ

चमसः ஸ்பூன் சமஸஹ

घटः பானை கடஹ

मन्थानः மத்து மந்தானஹ

पात्रम्- பாத்திரம் பாத்ரம்

मिश्रकम्- மிக்ஸி மிஷ்ரகம்

पेषकम्- கிரைண்டர் பேஷகம்

स्थालिका தட்டு ஸ்தாலிகா

छुरिका கத்தி சூரிகா

अग्निपेटिका தீக்குச்சிபெட்டி அக்னிபேடிகா

दोणी வாளி த்ரோணி

दर्वि கரண்டி தர்வி

कूपी பாட்டில் கூபி

वेल्लनी சப்பாத்திகட்டை வெல்லனீ

மேற்கண்ட வார்த்தைகளை எழுத்துக்கூட்டி படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்

இப்போது ஒருமை பன்மை வார்த்தைகளை பார்ப்போம்

தமிழில்

பழம் – பழங்கள் என்று சொல்கிறோம் அல்லவா? இது ஒருமை பன்மை
பெரும்பாலான மொழிகளில் singular plural என்று இரண்டுதான் இருக்கும்.

அது மாதிரி சமஸ்கிருதத்தில் ஒருமை பன்மை உண்டு.
சமஸ்கிருதத்தில் கூடவே இருமையும் உண்டு.

இருமையை பின்னொரு பாடத்தில் படிப்போம். எளிமையாக சமஸ்கிருதத்தை தொடர தற்போது ஒருமை பன்மை

மட்டும் பார்ப்போம்.

एकवचनम्- बहुवचनम्-
ஏகவசனம் – பஹுவசனம்

பெயர்ச்சொற்கள் பொதுவாக நான்கு விதமாக முடிவடைவதை நீங்கள் கவனித்திருக்கலாம்

ஒன்று பெரும்பாலான ஆண்பால் வார்த்தைகள் இவை அஹ என்று முடிவடையும்
உதாரணம்
बालकः
शिक्षकः
चमसः
रामः
घटः

இவை அனைத்தும் பன்மையாக ஆகும்போது ஆஹா என்று ஆகும் 🙂

உதாரணம்
बालका: பாலகாஹா
शिक्षकाः ஷிக்‌ஷகாஹா
चमसाः சமஸாஹா
रामाः ராமாஹா
घटा: கடாஹா


அடுத்தது
ம் என்று முடியும் அஃறிணை சொற்கள்.
पत्रम्-
फलम्-
वनम्-
गृहम्- க்ருஹம் வீடு
वस्त्रम्- வஸ்த்ரம் ஆடை

இவை அனைத்தும் ஆனி என்று பன்மையாக ஆகும்

पत्रानि- பத்ரானி
फलानि- பலானி
वनानि- வனானி
गृहानि- க்ருஹானி வீடு
वस्त्रानि- வஸ்த்ரானி ஆடை
கவனியுங்கள் முடிவது னி என்று. னீ அல்ல

பெண்பாற் சொற்களில் இரண்டு வகையாக முடிவதை கவனித்திருப்பீர்கள்
ஆ என்று முடியும் பெண்பாற் பெயர்கள் – ரம்பா, ஊர்மிளா போன்று 🙂

वालिका பாலிகா
छुरिका சூரிகா
स्थालिका ஸ்தாலிகா
अग्निपेटिका அக்னிபேடிகா

இவை அனைத்தும்
ஆஹா என்று பெண்பால் பன்மையாக ஆகும் (ஆண் பெயர் பன்மையும் பெண்பெயர் பன்மையும் ஒன்றாகவே

தோன்றுவதை கவனியுங்கள்)

वालिका: பாலிகாஹா
छुरिकाः சூரிகாஹா
स्थालिकाः ஸ்தாலிகாஹா
अग्निपेटिकाः அக்னிபேடிகாஹா

பெண்பால் பெயர்களில் பல ஈ என்று முடிவடையுமல்லவா?
அவற்றை பார்ப்போம்

लेखनी – லேகனீ – பேனா
द्रोणी –
कूपी

இவை அனைத்தும் ந்யஹ என்று பன்மையாகும்

लेखन्यः லேகன்யஹ
द्रोण्यः த்ரோண்யஹ
कूप्यः கூப்யஹ

இவற்றை நன்றாக புரிந்துகொள்ளுங்கள்.

அடுத்த வாரம் சந்திப்போம்

Series Navigation

About ராமச்சந்திர கோபால்

ராமச்சந்திர கோபால்

View all 17 articles →

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 11

This entry is in the series 20100905_Issue

ராமச்சந்திர கோபால்


இப்போது சில வார்த்தைகளை அறிந்துகொள்வோம்.

एकम् – ஏகம் – ஒன்று – ஏகாம்பரம் போன்ற வார்த்தைகளில் வரும் ஏகம்

द्वे – த்வே – இரண்டு

त्रीणि த்ரீணி – மூன்று

चव्वारि சத்வாரி – நான்கு

पञ्च பஞ்ச – ஐந்து பஞ்சசீலம் போன்ற வார்த்தைகளில் வருவது

षड ஷட – ஆறு ஷண்மத – ஆறு மதங்கள்

सप्त ஸப்த = ஏழு- ஸப்தரிஷி

अष्ट அஷ்ட – எட்டு – அஷ்டதிக்கு – எட்டு திசைகள்

नव நவ – ஒன்பது – நவ தான்யங்கள்..

दश தஷ – பத்து – தஷரத போன்ற வார்த்தைகளில் இது வருகிறதை கவனிக்கலாம்.

एकादश ஏகாதஷ பதினொன்று
द्वादश த்வாதஷ பன்னிரண்டு
त्र्योदश த்ரயோதஷ பதின்மூன்று
चतुर्दश சதுர்தஷ பதின்நான்கு
पञ्चदश பஞ்சதஷ பதினைந்து
षोडश ஷோடஷ பதினாறு
सप्तदश சப்ததஷ பதினேழு
अष्टादश அஷ்டதஷ பதினெட்டு
नवदश நவதஷ பத்தொன்பது
विम्शति: விம்ஷதிஹி இருபது

இப்போது எப்படி நேரத்தை சொல்லுவது என்று பார்க்கலாம்.

समय:

एकवादनम्- எகவாதனம் – ஒரு மணி
द्विवादनम्- த்விவாதனம்
त्रिवादनम्-த்ரிவாதனம்
चतुर्वादनम्-சதுர்வாதனம்
पञ्चवादनम्-பஞ்சவாதனம்
सप्तवादनम्-சப்தவாதனம்
अष्टवादनम्-அஷ்டவாதனம்
नववादनम्-னவவாதனம்
दशवादनम्-தஷவாதனம்
एकादशवादनम्-எகாதஷவாதனம்
द्वादशवादनम्-த்வாதஷவாதனம்

அர்த अर्ध – என்றால் அரை
பாத – पाद – என்றால் கால்

स – என்றால் கூட

पञ्चवादनम्- என்றால் ஐந்து மணி

सार्धपञ्चवादनम् என்றால் ஐந்தரை மணி
सपादपञ्चवादनम् – என்றால் ஐந்தேகால் மணி

உன – उन – என்றால் குறைவு
ஆகவே
पादोन-नववादनम्- பாதோன நவவாதனம் என்றால் ஒன்பதாக கால்மணி குறைவு (எட்டேமுக்கால்)


அதிக – अधिक – என்றால் அதிகம்
அன்யூன – अन्यून – என்றால் குறைவு
இந்த இரண்டையும் முழு மணிக்கு எத்தனை நிமிடங்கள் குறைவு அல்லது அதிகம் என்று சொல்ல உபயோகப்படுத்துவார்கள்.

உதாரணமாக दशाधिक-नववादनम्- தஷாதிக-நவவாதனம் என்றால் ஒன்பது- பத்து – 9:10
पञ्चन्यून-दशवादनम्- என்றால் பத்தாக ஐந்து நிமிடங்கள் உள்ளன என்று பொருள் – 9:55

இப்போது சில பொருட்களது சமஸ்கிருத வார்த்தைகளை அறிந்துகொள்வோம்.

चषकः டம்பள் அல்லது கோப்பை
चमसः ஸ்பூன்
घटः பானை
मन्थानः மத்து
पात्रम्- பாத்திரம்
मिश्रकम्- மிக்ஸி
पेषकम्- கிரைண்டர்
स्थालिका தட்டு
छुरिका கத்தி
अग्निपेटिका தீக்குச்சிபெட்டி
दोणी வாளி
दर्वि கரண்டி
कूपी பாட்டில்
वेल्लनी சப்பாத்திகட்டை

மேற்கண்ட வார்த்தைகளை எழுத்துக்கூட்டி படியுங்கள்.
அடுத்த வாரம் பார்ப்போம்

पुनर्मिलामः

Series Navigation

About ராமச்சந்திர கோபால்

ராமச்சந்திர கோபால்

View all 17 articles →

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 9

This entry is in the series 20100822_Issue

ராமச்சந்திர கோபால்


இப்போது சில வார்த்தைகளை அறிந்துகொள்வோம்.

दर्पण: – தர்ப்பணஹ – கண்ணாடி
करदीपः – கரதீபஹ – கையில் வைத்திருக்கும் டார்ச்லைட்
मण्डपः – மண்டபஹ – மண்டபம்
पादत्राणम्- பாதத்ராணம் – செருப்பு
सीवनयत्रम्- ஸீவனயந்த்ரம் – தையல் மெஷின்
वातायनम्- வாதாயனம் – ஜன்னல்
यानपेटिका – யானபேடிகா – சூட்கேஸ்
द्विचक्रिका – த்விசக்ரிகா – இரண்டுசக்கரசைக்கிள்
मापिका – மாபிகா – ஸ்கேல்
माला – மாலா – மாலை
पुष्पाधानी – புஷ்பாதானீ – பூச்சட்டி
दूरवाणी – தூரவாணீ – தொலைபேசி
कर्तरी – கர்தரீ – கத்திரிக்கோல்
पुस्तकम्- புஸ்தகம்- புத்தகம்
उपनेत्रम्- உபநேத்ரம் – மூக்குக்கண்ணாடி
लेखनी – லேகனீ- பேனா
पत्रिका – பத்ரிகா – பத்திரிக்கை

இப்போது உங்கள் அறையில் இருக்கும் பொருட்களையும் இல்லாத பொருட்களையும்
अस्ति नास्ति ஆகிய வார்த்தைகளை சேர்த்து சொல்லுங்கள்

உதாரணமாக

पुस्तकम् अस्ति

द्विचक्रिका नास्ति

மேலே இருக்கும் ஒவ்வொரு பொருட்களையும் இவ்வாறே சொல்லிப்பழகுங்கள்.

இப்போது அந்த சொற்களோடு अत्र तत्र सर्वत्र अन्यत्र कुत्र ஆகிய சொற்களை சேர்த்து பயன்படுத்துங்கள்.

இன்னும் தெரிந்த சொற்களையும் சேர்த்து சொல்லிப்பழகுங்கள்.

உதாரணமாக
मम मित्रम्- अन्यत्र अस्ति

தற்போது சில வினைச்சொற்களை அறிந்துகொள்வோம்.

गच्छति – கச்சதி – செல்கிறார்(ள்)(ன்)
लिखति – லிகதி – எழுதுகிறார்(
आगच्छति – ஆகச்சதி – வருகிறார்
पठति – படதி – படிக்கிறார்
क्रीडति -க்ரிடதி – விளையாடுகிறார்
पिबति – பிபதி – குடிக்கிறார்
खादति – காததி – சாப்பிடுகிறார்
पश्यति – பஷ்யதி – பார்க்கிறார்
हसति – ஹஸதி – சிரிக்கிறார்
नयति – நயதி – கொண்டுசெல்கிறார் (carries)

இப்போது
स:
सा
एषा
एष:

ஆகிய சொற்களை மேற்கண்ட வினைச்சொற்களுடன் சேர்த்து சொல்லுங்கள்.

உதாரணமாக
स: पठति

மறுபடியும் உங்கள் நினைவுக்கு स: एष: என்பன வந்தால் ஆண்

सा एषा ஆகியவை பெண்

மேலே சொன்ன வினைச்சொற்கள் அதி என்று முடிவதை பாருங்கள். அதன் இறுதியை ஆமி என்று மாற்றினால், தன்மை வினைச்சொல் வரும்

– गच्छामि – கச்சாமி – செல்கிறேன்
– लिखामि – லிகாமி – எழுதுகிறேன்
– आगच्छामि -ஆகச்சாமி – வருகிறேன்
– पठामि – படாமி – படிக்கிறேன்
– क्रीडामि – க்ரீடாமி – விளையாடுகிறேன்
– पिबामि – பிபாமி – குடிக்கிறேன்
– खादामि – காதாமி சாப்பிடுகிறேன்
– पश्यामि – பஷ்யாமி – பார்க்கிறேன்
– हसामि – ஹஸாமி – சிரிக்கிறேன்
– नयामि – நயாமி – கொண்டுசெல்கிறேன்

இப்போது
நான் अहम्- என்பதை சேர்த்து மேற்கண்ட வாக்கியங்களை அமையுங்கள்

மீண்டும் அடுத்த வாரம் பார்ப்போம்

Series Navigation

About ராமச்சந்திர கோபால்

ராமச்சந்திர கோபால்

View all 17 articles →

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 8

This entry is in the series 20100815_Issue

ராமச்சந்திர கோபால்


சமஸ்கிருதத்தில் அதற்கேயான ஒரு ஒழுங்கு அமைந்திருப்பதை இதுவரை படித்ததில்
நீங்கள் கவனித்திருக்கலாம். உதாரணமாக
रामः – ராமர்
शेखरः – சேகர்
ஆகிய ஆண்பெயர்கள் முடிவது போலவே
एषः – எஷஹ, இவர்
सः – ஸஹ, அவர்
ஆகியவையும் அமைகின்றன

அதே போல
सीता, उमा, போன்ற பெண்பால் பெயர்கள் முடிவது போலவே
एषा – எஷா, இவர்
सा – ஸா, அவர்
ஆகியவையும் அமைகின்றன. இந்த ஒழுங்கை நினைவில் கொண்டுவிட்டால் சரியாக
நினைவிலிருந்து பேசிவிடலாம்.

तत् आभरणम् என்று பார்த்தோம்

சரி இப்போது முந்தைய பாடத்தின் இறுதியில் இருந்த வீட்டுப்பாடங்களை செய்து
முடித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
அவற்றின் விடைகளை தருகிறேன். சரி பார்த்துகொள்ளுங்கள்.

இவர் ராம – एषः रामः
இவர் சீதா – एषा सीता
இது கமலம் – एतत् कमलम्

அது யானை सः गजः
அது மாலை सा माला
அது வாகனம் तत् वाहनम्

இது என்னுடைய யானை एषः मम गजः
இவர் என்னுடைய மனைவி एषा मम भार्या
இது என்னுடைய ஆபரணம் एतत् मम आभरणम्

அது உங்களுடைய யானை सः भवतः गजः
அவர் உங்களுடைய மனைவி सा भवतः भार्या
அது உங்களுடைய ஆபரணம் तत् भवत्याः आभरणम्

अस्ति – அஸ்தி என்றால் இருக்கிறது/இருக்கிறார் என்று பொருள்
नास्ति – நாஸ்தி என்றால் இல்லை என்று பொருள்

अत्र – அத்ர இங்கே

तत्र – தத்ர – அங்கே (தத் என்றால் அது ஆகவே தத்ர என்றால் அங்கே)

कुत्र – குத்ர என்றால் எங்கே?

सर्वत्र – சர்வத்ர என்றால் எல்லாவிடத்திலும்

एकत्र – ஏகத்ர ஓரிடத்தில்

अन्यत्र – அன்யத்ர – வேறிடத்தில்


இப்போது சில வாக்கியங்களை அமைப்போம்

ராமர் எங்கே இருக்கிறார்?

சீதா எங்கே இருக்கிறார்?

சீதா அங்கே இல்லை.
சீதா இங்கே இருக்கிறார்.

ராமர் இங்கே இல்லை
ராமர் அங்கே இருக்கிறார்

யானை எங்கே இருக்கிறது?
யானை அங்கே இருக்கிறது.

மனைவி வேறிடத்தில் இருக்கிறார்

ஆபரணம் எங்கே இருக்கிறது?

ஆபரணம் ஓரிடத்தில் இருக்கிறது.

என்னுடைய மனைவி அங்கே இருக்கிறார்.

அவருடைய மனைவி இங்கே இல்லை.

வாயு எல்லாவிடத்திலும் இருக்கிறது.

சமஸ்கிருத செய்திகள்

Series Navigation

About ராமச்சந்திர கோபால்

ராமச்சந்திர கோபால்

View all 17 articles →

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 7

This entry is in the series 20100807_Issue

ராமச்சந்திர கோபால்



முந்தைய பாடத்தில் எளிய வாக்கியங்களை படித்தீர்கள். சொன்னீர்கள். ஒரு வாரம் முழுவதும் படிக்க அது மிகவும் குறைவு என்பது தெரியும். ஆகவே இந்த வாரம் சற்று நிறைய கற்றுக்கொள்வதற்கு முயற்சி செய்வோம்

किम् கிம்,என்றால் ”என்ன” என்று பொருளாகும்.

இது என்ன அது என்ன என்று கேட்பதற்கு किम् என்ற வார்த்தையை உபயோகிக்க வேண்டும்.

யார்? என்று கேட்க कः என்று கேட்க வேண்டும். ஆனால் முக்கியம், கேட்கப்படுபவர் ஆணாக இருந்தால் மட்டுமே कः என்று

கேட்கவேண்டும்.

அது பெண்ணாக இருந்தால் का என்று கேட்கவேண்டும்.

கவனியுங்கள். பெயர் என்ன என்று கேட்டால் नाम किम् . ஆனால், ராமர் யார்? என்று கேட்கவேண்டுமானால், राम: कः?

என்று கேட்கவேண்டும். சீதா யார் என்று கேட்க सीता का? என்று கேட்கவேண்டும்.

சில வார்த்தைகளை தெரிந்துகொள்வோம்.
अहम – அஹம், என்றால் நான்
भवान – ப்வான்,நீங்கள் (ஆண்)
भवत: பவதஹ, உங்களுடைய (ஆண்)

भवती – பவதி, நீங்கள்(பெண்)
भवत्‍या: பவத்யாஹா, உங்களுடைய (பெண்)

नमस्ते நமஸ்தெ,வணக்கம்
सुप्रभातम्-ஸுப்ரபாதம்,காலைவணக்கம்
कुशलम्-குஷலம்,நலம்
आम्- ஆம்

(तव தவ என்றால் உன்னுடைய என்று பொருள், ஆண் பெண் இரண்டுக்கும் ஒன்றே)

கீழ்க்கண்ட உரையாடலை உரத்து படியுங்கள். அல்லது யாருடனாவது உரையாடுங்கள்.

பெண் – नमस्ते , भवत: नाम किम् ?
ஆண் – नमस्ते , मम नाम रामः
भवत्‍या: नाम किम् ?
பெண் – सुप्रभातम्, मम नाम सीता
ஆண் – कुशलम्,वा?
பெண் – आम्, भवान क:?
ஆண் – अहम्, रामः
भवती का?
பெண் – अहम सीता


ஆகவே ஆண்பால் பெயர்கள் रामः, शेखरः, देवः, पुत्रः, शिवः, माधवः, विजयः, पिता, भ्राता , काकः (காகம்), गजः(யானை),

உபயோகிக்கும்போது அதன் தொடர்பான क: யார் என்பதை உபயோகிக்க வேண்டும்.

பெண்பால் பெயர்களான सीता, उमा, पार्वती(பார்வதீ), देवी (தேவீ), पुत्री (புத்ரீ), भार्या, माला(மாலை), माता, पद्मा (பத்மா – த் द् எழுத்தும் ம எழுத்தும் இணைந்து இருப்பதை கவனியுங்கள்), सुभ्रद्रा (சுபத்ரா) ஆகிய பெண்களை பேசும்போது का உபயோகிக்க வேண்டும்.

அஃறிணையாக இருக்கும் வார்த்தைகளை உபயோகிக்கும்போது கிம் किम्-உபயோகிக்க வேண்டும்.

मित्रम्, वाहनम्, नाम, धनम्, जलम्, कमलम्, आभरणम्- ஆகியவற்றை பேசும்போது அஃறிணைக்காக किम् உபயோகிக்கவேண்டும்.

மித்ரம் என்றால் நண்பன், நண்பி எல்லாம்தான். ஆனால், மித்ரம் என்ற இந்த வார்த்தை அஃறிணை. அதுதான் முக்கியம்.

இந்த வார்த்தை அஃறிணையாக இருப்பதால்தான் இதன் தொடர்பாக கேள்வியோ பேச்சோ இருந்தால் அது அஃறிணைக்கான அனைத்து உப வார்த்தைகளையும் கொண்டு பேசப்படவேண்டும்.

உதாரணமாக

நண்பர் யார்?

என்பதை

मित्रम् किम्-என்றுதான் எழுதவோ பேசவோ வேண்டும். நண்பர் ஆணாக இருந்தால் மித்ரம் கஹ? என்று கேட்கக்கூடாது.

மித்ரம் கிம் என்றுதான் கேட்கவேண்டும்.


சரி இப்போது இவர் அவர் இது அது ஆகியவற்றை பார்க்கலாம்

ஆண்
एषः – எஷஹ, இவர் (இவன் மாதிரி)
सः – ஸஹ, அவர் (அவன் மாதிரி)


பெண்
एषा – எஷா, இவர் (இவள் போல)
सा – ஸா, அவர் (அவள் போல)

एतत्- எதத், இது
तत्- தத், அது


एषः विजयः (கையை அருகாமையில் காட்டி)
सः रामः (கையை தொலைதூரத்தில் காட்டி)

एषा उमा (கையை அருகாமையில் காட்டி)
सा सीता (கையை தொலைதூரத்தில் காட்டி)

एतत् वाहनम् (கையை அருகாமையில் காட்டி)
तत् आभरणम् (கையை தொலைதூரத்தில் காட்டி)

சொல்லிப்பழகுங்கள்.
இங்கே வேறு பெயர்களையும் போட்டு சொல்லிப்பழகினால் இவை மனதில் ஏறும்

இப்போது சில வாக்கியங்களை எழுதுகிறேன்.
இவற்றை சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்து சொல்லிப்பழகுங்கள்.

இவர் ராம
இவர் சீதா
இது கமலம்

அது யானை
அது மாலை
அது வாகனம்

இது என்னுடைய யானை
இது என்னுடைய மனைவி
இது என்னுடைய ஆபரணம்

அது உங்களுடைய யானை
அது உங்களுடைய மனைவி
அது உங்களுடைய ஆபரணம்

இப்போது சில சொற்களை கற்றுக்கொள்வோம். பேசும்போது இவை உபயோகப்படும்

धन्यवादा: தன்யவாதாஹா = நன்றி

स्वागतम्- ஸ்வாகதம் – நல்வரவு

धन्योस्मि – தன்யோஸ்மி – நன்றி(யுடன் இருக்கிறேன்)

पुनर्मिलामः – புனர்மிலாமஹ – மீண்டும் சந்திப்போம்.

क्ष्म्यताम्- க்‌ஷம்யதாம் – மன்னியுங்கள் (excuse me என்று சொல்வதுபோல)

शुभमस्तु – ஷுபமஸ்து – நல்லதே இருக்கட்டும் – best wishes என்று சொல்வது போல


இப்போது
पुनर्मिलामः

Series Navigation

About ராமச்சந்திர கோபால்

ராமச்சந்திர கோபால்

View all 17 articles →

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – தொடர்பாக

This entry is in the series 20100801_Issue

ஹரன் பிரசன்னா


* கணினியின் ஒரு ஸ்கிரீனுக்குள் நிற்காமல், கர்சரை அங்கும் இங்கும் செலுத்திப் படிக்க கடினமாக உள்ளது.

* முந்தைய பாகங்களின் சுட்டிகளை தொடர்ந்து தருவது நல்லது. ஏனென்றால், திண்ணையில் பழைய கட்டுரைகளைத் தேடிக் கண்டடையவே முடிவதில்லை. (ஜெயமோகன் வெகு முன்பு அழகி திரைப்படம் குறித்து எழுதிய கட்டுரை ஒன்றைத் தேடி, அலுத்துப் போய், அப்படியே விட்டுவிட்டேன்.) எனவே பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | எனத் தரலாம்.

–பிரசன்னா

திண்ணை இணைய நிர்வாகி குறிப்பு:
இடதுபுறம் கலைகள் சமையல் என்ற இணைப்பை கிளிக் செய்தால், இந்த வாரத்து அனைத்து கலைகள் சமையல் பக்கங்களும் வரும். அதன் இறுதியில் அனைத்து கலைகள் சமையல் பக்கங்களையும் பார்க்க என்ற இணைப்பை அழுத்தினால், இதுவரை இந்த பகுதியில் வந்துள்ள அனைத்து கட்டுரைகளையும் காணலாம். சமீபத்தியது, வரிசையின் இறுதியில் இருக்கும்.

ராமச்சந்திர கோபால் குறிப்பு:
சமஸ்கிருதம் கற்றுகொள்வதை வாராவாரம் செய்ய முயற்சி செய்வதுநலன். ஒருவாரம் விட்டுவிட்டு மறுவாரம் பிடித்துகொள்ளலாம் என்று வைத்தால் பொதுவாக அப்படியே விட்டுப்போய்விடும். அதனால் அந்த வாரம் படிப்பது நலம். பழைய அத்தியாயங்களை பகுதியின் முடிவில் ஒரே இணைப்பாக தர முயற்சி செய்கிறேன்.

Series Navigation

About ஹரன் பிரசன்னா

ஹரன் பிரசன்னா

View all 8 articles →

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 6

This entry is in the series 20100801_Issue

ராமச்சந்திர கோபால்


இந்த பாடங்களில் இலக்கணத்தையோ அல்லது படிப்பதையோ நான் முக்கியத்துவம் கொடுத்து எழுதப்போவதில்லை. இந்த சமஸ்கிருத பாடங்களில் சமஸ்கிருதத்தில் பேசுவதையும் கேட்பதையுமே முக்கியத்துவம் கொடுக்கபோகிறேன்

ஆகவே நீங்கள் இந்த பாடங்களை கற்றுகொள்ளவேண்டுமென்றால் இரண்டு வேலைகளை செய்யவேண்டும். ஒன்று இந்த வாக்கியங்களை உரத்து படிக்கவேண்டும். மௌனமாக படிக்கக்கூடாது. உரத்து படியுங்கள். நீங்கள் பேசுவது உங்களுக்கு கேட்கவேண்டும். இரண்டாவது யாராவது உங்களுடன் இணைந்துகொண்டால், அவர் பேச நீங்கள் கேட்கவேண்டும். அவர் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் கூற முயற்சி செய்யவேண்டும். அந்த கேள்விகளையும் பதில்களையும் நான் இங்கே எழுதப்போகிறேன். இதில் முக்கியம் இந்த வார பாடத்தை அடுத்த வாரம் படித்துக்கொள்ளலாம் என்று இருக்கக்கூடாது. ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து நிமிடமாவது இதற்காக செலவழித்தால் வெகு விரைவில் பேச ஆரம்பித்துவிடலாம். ஒரு வாரத்தில் குறைந்தது அரை மணிநேரமாவது இதற்கு செலவழியுங்கள். உங்கள் குழந்தைகளுடனோ அல்லது கணவருடனோ இந்த வாக்கியங்களை பேசி சேர்ந்து படித்தால் வெகு விரைவில் உங்களுக்கு சமஸ்கிருதம் எளியதாகும்.

இப்போது சிலவாக்கியங்களை பார்ப்போம்

मम नाम राम:
மம நாம ராமஹ
என்னுடைய பெயர் ராம

எல்லா ஆண்களது பெயர்களும் அஹ என்றுதான் முடியும். உதாரணமாக ராம என்பது ராமஹ என்று முடியும். சிவ என்பது சிவஹ என்று முடியும். தசரதஹ, பீமஹ, பிரசன்னஹ என்றுதான் முடியும்.
பெண்களது பெயர்கள் ஆ எழுத்திலோ அல்லது இ எழுத்திலோ முடியும். சீதா, லதா போன்றவையோ அல்லது பார்வதி, லட்சுமி என்றோ முடியும்.

ஆகவே உங்களது பெயர் உதாரணமாக சுப்ரமணியன் என்று இருந்தால் சமஸ்கிருதத்தில் சுப்ரமண்யஹ என்றுதான் சொல்லவேண்டும். இது விதி. ஆனால், இந்தியரல்லாத பெயர்களை கூறவேண்டுமென்றால் அதற்கு தனி விதி உண்டு. அதனை பிறகு பார்ப்போம்.

முதலில் இந்த வாக்கியங்களை எழுத்து கூட்டி படியுங்கள். பிறகு சத்தமாக பேசுங்கள்.

मम नाम राम:

मम नाम सीता

मम नाम शॅखर:

मम नाम उमा

मम नाम पार्वती


இதே போல உங்கள் பெயரை இவ்வாறு சொல்லுங்கள்.


இப்போது மகன் மகள் ஆகியோரை பார்ப்போம்

मम पुत्र: माधव:
மம புத்ரஹ மாதவஹ
என்னுடைய மகன் மாதவன்

मम पुत्रि विजया
மம புத்ரி விஜயா
என்னுடைய மகள் விஜயா

இதே போல உங்களுடைய மகன் மகள் பெயரை போட்டு இந்த வாக்கியங்களை உரத்து சொல்லுங்கள்.


भर्ता பர்த்தா என்றால் கணவர்

இப்போது வாக்கியமாக பார்ப்போம்

मम भर्ता विष्णु:

என்ன படித்தீர்கள்?

மம பர்த்தா விஷ்ணுஹு என்று படித்திருந்தால் மிகச்சரியாக படித்திருக்கிறீர்கள். : என்ற எழுத்து எந்த எழுத்தின் பின்னால் வருகிறதோ அந்த எழுத்தின் உயிரெழுத்தை தொடரும்.

या: – யாஹா
जि: = ஜிஹி
वासु: – வாஸுஹு

இவ்வாறு கடைசி உயிரெழுத்தின் ஒலியை தொடரும்.

சரி திரும்பவும் வாக்கியங்களுக்கு வருவோம்.

भार्या பார்யா – என்றால் மனைவி

मम भार्या पद्मा

மம பார்யா பத்மா


தந்தை தாயார் பற்றி சொல்லுவோம்.

पिता – பிதா என்றால் தந்தை
माता – மாதா என்றால் தாய்

வாக்கியங்களாக சொல்லுங்கள்

मम पिता विजय:
मम माता मल्लिका


भ्राता – ப்ராதா என்றால் சகோதரர்
स्वसा – ஸ்வஸா என்றால் சகோதரி


मम भ्राता ____
मम स्वसा ____

நீங்களாக வாக்கியம் எழுதி உரத்து சொல்லுங்கள்

அடுத்த வாரம் பார்ப்போம்.

Series Navigation

About ராமச்சந்திர கோபால்

ராமச்சந்திர கோபால்

View all 17 articles →

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 5

This entry is in the series 20100725_Issue

ராமச்சந்திர கோபால்


உயிர்மெய் எழுத்துக்களை கவனமாக கற்றுகொண்டிருக்கிறீர்கள் என்று கருதுகிறேன்.

கூடவே இரண்டு மூன்று எழுத்துக்களை சேர்த்து எழுதும் பழக்கம் சமஸ்கிருதத்தில் உண்டு.
உதாரணமாக க்ர என்ற சொல் அடிக்கடி சமஸ்கிருதத்தில் (உக்ர, சீக்ர) ஆகியவை, த்ர என்ற ஒலி (யந்த்ர, மந்த்ர போன்றவைகளில்) வருவதால் அவற்றை கூட்டாக எழுதும் பழக்கம் உண்டு.

त्+म = त्म
த்+ம = த்ம

ण्+य=ण्य
ண்+ய=ண்ய

न्+त्+य= न्त्य
ன்+த்+ய = ன்த்ய

म्+न = म्न
ம்+ன=ம்ன

ब्+व=ब्व
ப்+வ = ப்வ

மேலே கண்டது போல மேலிருந்து கீழே வரும் கோட்டை நீக்குவது மூலமாக அதன் புள்ளிவடிவத்தை அடையலாம்.

மேலும் சில எழுத்துக்கள் வேறுமாதிரி மாற்றம் அடைகின்றன
र्+प=र्प
ர்+ப=ர்ப

சமஸ்கிருத ப எழுத்தின் மேலே உள்ள சுழியை கவனிக்கவும். இது வந்தால் ர் சொல்லி அதன்பின் அந்த எழுத்தை சொல்லவேண்டும்.

கூட்டெழுத்து எழுதும்போதும் ர் வந்தால் அது மேலே சுழியாக மாறும்
र्+ध्+वा என்று கூட்டினால், र्ध्वा என்று மாறும்.
ர்+த்+வா என்பது ர்த்வா என்று ஒலிக்கும்

ஆனால், சேர்க்கைக்கு பின்னால் ர் வந்தால் எழுத்து வேறுவிதமாக மாற்றமடையும்

உதாரணமாக ப்+ர என்பது ப்ர என்று ஆகும்
இதை சமஸ்கிருதத்தில் प्+र = प्र என்று ஆகும் ப் எழுத்துக்க்கு கீழ் இருக்கும் கோட்டை கவனியுங்கள்.
இதே போல
द्+र = द्र என்று ஆகும்
த்+ர= த்ர

ट्+र = ट्र
ட்+ர = ட்ர

त எழுத்து மட்டும் வேறுவிதமாக மாற்றமடையும்
त्+र = त्र த்ர

இரண்டு எழுத்துக்கள் கூட்டெழுத்தாக ஆகும்போது வித்தியாசமாக ஆகின்றன

க்+ஷ = க்‌ஷ

ज्+ञ= ज्ञ

ஜ்+ஞ =ஜ்ஞ

இவை அனைத்தும் சம்யோக எழுத்துக்கள் என்று அழைக்கப்படும்

கீழ்க்கண்ட அட்டவணையை பார்க்கவும்

Series Navigation

About ராமச்சந்திர கோபால்

ராமச்சந்திர கோபால்

View all 17 articles →

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 4

This entry is in the series 20100718_Issue

ராமச்சந்திர கோபால்


ஆக எல்லா உயிரெழுத்துக்களையும் மெய்யெழுத்துக்களையும் பார்த்தாய்விட்டது.
இனி உயிர்மெய் எழுத்துக்கள்.

தமிழில் இருப்பதுபோலவே உயிரும் மெய்யும் சேர்வது உயிர்மெய் எழுத்தாகும்.

க் + அ = க
க் + ஆ = கா என்று ஆகிறது.

இதே போல சமஸ்கிருதத்திலும் உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் சேர்ந்து உயிர்மெய்யாகும்

இதுவரை க ச ட ய போன்ற எழுத்துக்களை அகரம் சேர்த்து படித்தோம்

தமிழில் மேலே புள்ளி போட்டால் அகரம் அல்லாத மெய்யெழுத்தாகும். அதாவது க் என்று ஆகும்.

இதே போல சமஸ்கிருத எழுத்துக்களை எழுத கீழே கோடு போட வேண்டும்

உதாரணமாக क என்பது க ஆகும். க் எழுத क्என்றாகும்

சமஸ்கிருத க-வின் கீழே இருக்கும் கோட்டை கவனியுங்கள்.

இப்போது எவ்வாறு உயிர்மெய் எழுத்துக்கள் எழுதப்படுகின்றன என்பதற்கு

क्+अ= क – க
क्+आ=का – கா
क्+इ=कि கி
क्+ई=की கீ
क्+उ=कु கு
क्+ऊ=कू கூ
क्+ए=के கெ
क्+ऐ=कै கை
क्+ओ=को கொ
क्+औ=कौ கௌ

கவனியுங்கள். கே கோ ஆகிய எழுத்துக்களை நான் எழுதவில்லை. இந்த எழுத்துக்களை சமஸ்கிருதத்தில் பயன்படுத்துவதில்லை. இரண்டும் கெ கே இரண்டும் ஒரே மாதிரிதான் உச்சரிக்கப்படுகின்றன.

இதே போல மீத எழுத்துக்களையும் வாய்விட்டு சொல்லி எழுதிப்பழகுங்கள்.

Series Navigation

About ராமச்சந்திர கோபால்

ராமச்சந்திர கோபால்

View all 17 articles →

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 3

This entry is in the series 20100711_Issue

ராமச்சந்திர கோபால்


கசடதப ஆகிய எழுத்துக்களின் நான்கு வகைகளை பற்றி பார்த்தோம்

இப்போது மீத மெய்யெழுத்துக்களை பார்ப்போம். மெதுவாக போகிறதற்கு காரணம் உண்டு. இவற்றை எங்கே பார்த்தாலும் உடனே ஞாபகம் வைத்து உச்சரிக்க வேண்டும். அதற்காகத்தான் இவ்வளவு நேரம். ஒவ்வொரு நாளும் குறைந்தது 3 நிமிடமாவது இந்த எழுத்துக்களை சொல்லி எழுதி பழகுங்கள். பிறகு மிக எளிதாக ஆகிவிடும். மராத்தி, சமஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிகள் இந்த எழுதுக்களிலேயே எழுதப்படுகின்றன. இவற்றின் சற்று வேறு வடிவத்தில் குஜராத்தி, வங்காளி ஆகிய மொழிகள் எழுதப்படுகின்றன. ஆகையால் இந்த எழுத்துக்களை எழுதி பழகுவது பல விதங்களில் உதவும்.





ஆகிய எழுத்துக்களோடு கூடவே அந்த ஒலியோடு சம்பந்தப்பட்ட மூக்கு வழியாக வரும் ஒலிக்கான எழுத்து சேர்க்கப்படும்

ஆகவே எழுத்துக்களை சமஸ்கிருத அகரவரிசைப்படி பார்ப்போம்

क ख ग घ ङ
க1 க2 க3 க4 ங
ka kha ga gha nga

ச1 ச2 ஜ1 ஜ2 ஞ
ca cha ja jha nja
च छ ज झ ञ

ட1 ட2 ட3 ட4 ன
Ta Tha Da Dha Na
ट ठ ड ढ न

த1 த2 த3 த4
ta tha da dha na
त थ द ध ण

ப1 ப2 ப3 ப4 ம
pa pha ba bha ma
प फ ब भ म

இதில் மூன்றாவது பவும் மவும் ஏறத்தாழ ஒன்று போல இருப்பதை கவனியுங்கள். பவில் மேலே சுழிக்கப்படும். ஆனால் ம மேலே இருக்கும் கோடோடு இணைந்திருக்கும்.

ஆகவே புதியதாக நாம் பார்த்திருக்கும் நான்கு எழுத்துக்கள்
ङ ங
ञ ஞ
न ன
ण ண
म ம
ஆகியவை.
ந இந்தியில் கிடையாது.

இப்போது மீதமுள்ள எழுத்துக்களை பார்ப்போம்
य ய
र ர
ल ல
व வ
श ஷ (ஷங்கரில் வரும் ஷ)
ष ஷ புஷ்பத்தில் வரும் ஷ
स ஸ
ह ஹ

ஒரு சில உச்சரிப்புகளுக்கு வித்தியாசம் தெரியவில்லை என்றால் கவலைப்படாதீர்கள்.

http://www.avashy.com/hindiscripttutor.htm
இந்த இணைப்பில் ஒரு எழுத்தை எடுத்துகொண்டு அதன் ஒலி வடிவத்தை கேளுங்கள். திரும்பச் சொல்லிப்பாருங்கள். ஒரு ஒலியை நீங்கள் துல்லியமாக கேட்டு மற்றொரு ஒலியுடன் ஒப்பிட்டு பார்த்தால் உங்களால் மிக எளிதாக ஒலியை அடையாளம் கண்டுகொள்ளமுடியும்.

இதனையும் திரும்பித்திரும்பி எழுதி பழகுங்கள்.

இந்த எழுத்துக்களை கணினியில் எழுதுவதற்கு நீங்கள் nhm writer

உபயோகிக்கலாம். ஹிந்தி மராத்தி ஆகிய தேவநாகரியில் எழுதப்படும் மொழிகளை தேர்வு செய்து,

phonetic முறையில் எழுதுவதை தேர்வு செய்துகொள்ளுங்கள். மேலே குறிப்பிட்டுள்ள ஆங்கில

எழுத்துகளை தட்டச்சினால், மேலே குறிப்பிடப்படும் சமஸ்கிருத எழுத்துக்களை எழுதலாம்.

இப்போது ஒரு சில எழுத்துக்கள் ஒரே மாதிரி இருப்பதை கவனிக்கலாம்

இது இ
இது ங
இது ஜ
ஆகவே சற்று கூர்மையாக வித்தியாசங்களை உணர்ந்துகொள்ளுங்கள்.

இது ர
இது வ
रव இது ரவ
ஆனால் இது க

அடுத்து

இது ய
இது த

அடுத்து
இது ப
இது வ

அடுத்து

இது ஷ
இது ஸ

அடுத்து
இது ட
இதுவும் ட
இதுவும் ட
ஆனால் இது த

அடுத்து
இது ஞ
இது ஜ
இது ச

அடுத்து
இது ப
இது ம

அடுத்து
இது க
இது த

இப்போதைக்கு இவற்றை இரண்டு முறை படித்து உருவேற்றிக்கொள்ளுங்கள். இனிமேல் எல்லாம் ஈஸிதான்

20100711_Issue

இவர்களது எழுத்து முறை – 1 – லா.ச.ராமாமிர்தம்

About ராமச்சந்திர கோபால்

ராமச்சந்திர கோபால்

View all 17 articles →

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 2

This entry is in the series 20100704_Issue

ராமச்சந்திர கோபால்


சமஸ்கிருதத்தில் தமிழில் உள்ளதை விட அதிகமான மெய்யெழுத்துக்கள் உள்ளன. உதாரணமாக ஷ, ஸ, ஷ, ஹ, க்‌ஷ் ஆகியவற்றை பற்றி நமக்குத் தெரியும்.

வல்லின எழுத்துக்களான க ச ட த ப ஆகிய ஐந்து எழுத்துக்களுக்கும் அவற்றின் பல வகை உச்சரிப்புகளுக்கு ஏற்ற எழுத்துக்கள் சமஸ்கிருதத்தில் உள்ளன.

உதாரணமாக கட்டி என்ற சொல்லில் க என்ற எழுத்தை தமிழில் அழுத்தி k என்ற ஆங்கில எழுத்து போல உச்சரிப்போம். தங்கம் என்பதில் உள்ள கவை ஆங்கிலத்தில் உள்ள g என்ற எழுத்து போல உச்சரிப்போம். இப்படி க-வின் வகைகளுக்கு என்று சேர்த்து க என்ற உச்சரிப்பில் நான்கு எழுத்துக்கள் உண்டு

அவற்றை இங்கே பார்ப்போம். இந்த எழுத்துக்களை கண்டு அஞ்ச தேவையில்லை. இவற்றை பழகிக்கொண்டால், மிகவும் எளிமையான முறையில் படிக்க ஏதுவாகும்.

க1 – ka – क –
க2 – kha – ख –
க3 – ga – ग –
க4 – gha – घ –

இதே போல ச வின் மாற்றிய ஒலி ஜ என்பது நமக்குத் தெரியும்

च ca – ச1 –
छ cha – ச2 –
ज ja – ஜ1
झ jha -ஜ2

त ta – த1
थ tha – த2
द da – த3
ध dha – த4

ट Ta – ட1
ठ Tha – ட2
ड Da – ட3
ढ Dha -ட4

प pa – ப1
फ pha – ப2
ब ba – ப3
भ bha -ப4

இந்த எழுத்து வகை தெரியாதவர்களுக்கு இந்த எழுத்துக்கள் மிக அதிகம். ஆகவே இந்த வாரத்துக்கு இது போதும். இதனையும் திரும்பித்திரும்பி எழுதி பழகுங்கள்.

இந்த எழுத்துக்களை கணினியில் எழுதுவதற்கு நீங்கள் nhm writer
உபயோகிக்கலாம். ஹிந்தி மராத்தி ஆகிய தேவநாகரியில் எழுதப்படும் மொழிகளை தேர்வு செய்து, phonetic முறையில் எழுதுவதை தேர்வு செய்துகொள்ளுங்கள். மேலே குறிப்பிட்டுள்ள ஆங்கில எழுத்துகளை தட்டச்சினால், மேலே குறிப்பிடப்படும் சமஸ்கிருத எழுத்துக்களை எழுதலாம்.

http://www.avashy.com/hindiscripttutor.htm

Series Navigation

About ராமச்சந்திர கோபால்

ராமச்சந்திர கோபால்

View all 17 articles →

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம்- பாடம் 1

This entry is in the series 20100627_Issue

ராமச்சந்திர கோபால்


சமஸ்கிருதத்தை தேவநாகரி எழுத்தில் எழுதுவதும், கிரந்தத்தில் எழுதுவதும் பழக்கம். கிரந்த எழுத்துக்கள் தமிழ் எழுத்து போலவே இருக்கும். பழைய தமிழ் ஓலைச்சுவடிகளில் கிரந்த எழுத்தில் சமஸ்கிருதம் எழுதப்பட்டிருப்பதை பார்க்கலாம்.

தற்போதைக்கு சமஸ்கிருதத்தை தேவநாகரி எழுத்தில்(லிபி) எழுதுவது பரவலாக இருக்கிறது. ஆகவே சமஸ்கிருதத்தை தேவநாகரி லிபியில் இந்த தொடரில் கற்றுகொள்வோம்


அ अ
ஆ आ
இ इ
ஈ ई
உ उ
ஊ ऊ
எ ए
ஏ ऍ
ஐ ऐ
ஒ ओ
ஓ ऑ
ஔ औ
அம் अँ
அஹ अः

இந்த வரிசையை ஒரு காகிதத்தில் எழுதிப்பழகுங்கள்.
எவ்வாறு தேவநாகரி லிபியை எழுதுவது என்பதை இங்கே ஒரு இணையப்பக்கத்தில் சொல்லித்தருகிறார்கள்.
உயிர் எழுத்துக்களை மட்டும் இந்த வாரம் வாய் விட்டு சொல்லி எழுதி பழகுங்கள்.
http://www.avashy.com/hindiscripttutor.htm

இந்த உயிரெழுத்துக்கள் கூட மூன்று எழுத்துக்கள் இருக்கின்றன. இவை உயிரெழுத்துக்களுடன் சேர்க்கப்படுகின்றன என்றாலும் இவற்றை அதிகம் உபயோகப்படுத்துவதில்லை. எனினும் இவற்றை அறிந்துகொள்வது நல்லது.

அவை

ரு ऋ
று ॠ
லு ऌ

ஆகியவை

இது பற்றிய விக்கி பக்கம் இங்கே

அடுத்த வாரம் சந்திப்போம்

Series Navigation

About ராமச்சந்திர கோபால்

ராமச்சந்திர கோபால்

View all 17 articles →