இரண்டு கவிதைகள்

This entry is part [part not set] of 42 in the series 20110327_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்


அட்ச ரேகை தீர்க்க ரேகை
******************************
ஊர் ஊராய்
நகரும் வெய்யில்..
எல்லா காலத்திலும்
என்று அஷ்டமி.,
எது பௌர்ணமி…
ஹோரைகளும்
சகட யோகங்களும்
ராகுவாய் கடித்து
கேதுவாய் ஞானமூட்டி
ராஜயோகமும் விபரீதமாய்.
உறைந்துள்ளிருக்கும்
கடலிலிருந்து பெருகி
கூர் பற்களில் உலகமாகவோ
போதனைகள் நிறைந்த
புத்தகமாகவோ ஏந்த
நிர்ணயங்களற்ற
சமூகவெளியில்.
நிலைப்பாடற்ற
பிரதிமைகளுக்கு
நாளானால் என்ன
கோளானால் என்ன..
அட்சரேகை தீர்க்க ரேகையாய்
கற்பனைக் கோடுகள்.

*******************************************************

குறுந்தொ…கை…
**********************

பொதி சுமந்த கழுதையாய்
திணறிய உள்டப்பியில்
வேண்டாத குறுந்தகவலெல்லாம்
விரைந்து குப்பையிலிட்ட கை..
உன் பெயர் சுமந்த தகவல் மட்டும்
உன் வாசம் சுமந்த உடுப்பாய் முகர்ந்து
உள் சேமிக்கிறது திரும்ப….முகர.

Series Navigation

தேனம்மை லெக்ஷ்மணன்

தேனம்மை லெக்ஷ்மணன்

இரண்டு கவிதைகள்

This entry is part [part not set] of 49 in the series 20110320_Issue

வெலிகம ரிம்ஸா முஹம்மத், இலங்கை


புதிய சட்டங்கள்!

வன்னி நகரில் நடந்த
வன்செயல்களின் கொடூரத்தில்…
இடம்பெயர்ந்தலைந்தேன்
தாங்காத சோகத்தில்!

போர் மேகங்கள் ஒன்றுசூழ்ந்து
பொழிந்தன அன்று
குண்டு மழைகள்..
ஈவிரக்கம் துளியுமின்றி
துண்டாடப்பட்டன
அப்பாவிகளின் தலைகள்!

தடுப்புக்காவலில்
தாளாத
சோகம் கண்டவர்கள்
இன்றும் கூட
என்ன ஆனார்களோ?

பதுங்குக் குழிக்குள்
பதுங்கியே
பாதி வாழ்க்கை முடிந்தாச்சு..
பயத்துடன் வாழ்ந்த காலம்
இப்போதுகளில் தான் முடிவாச்சு!

புருஷனையும்
புள்ளைகளையும் இழந்து
இந்த ஏழை படும் பாட்டை
யாரறிவார்…
எங்களைப் போன்றே வாழ்விழந்த
அனைவரும் தான்
இதை அறிவார்…

வேதனை வாழ்வு
வெறுத்த நிலையில்
கூடி வந்தன
மீள்குடியேற்றும் திட்டங்கள்…

சொல்லுங்கள் ஐயா!
எதுவென்றாலும்
என் குடும்பத்தை மீட்டித்தருமா
இந்த புதிய சட்டங்கள்???

வெலிகம ரிம்ஸா முஹம்மத், இலங்கை
(poetrimza@yahoo.com)

சங்கீதமிசைக்கும் சமாதானப் புறா!

அண்ணார்ந்து பார்த்தேன்..
அழுதபடி காட்சியளித்தது
அகல விரிந்த வானம்!

தினமொன்றிலே
பலதடவை கேட்கும்
வெடிகுண்டுச் சத்தத்தால்
அன்றெல்லாம்
ஊர்க்குருவிகளும்
உல்லாசம் மறந்தபடி!

ஷெல்வீச்சைக் கேட்டே
பழகிப்போயிருந்தாலும்
எங்கள் உயிர்மூச்சு
ஸ்தம்பித்துப்போனது
உண்மை தான்!

நாலாபுறமும் நோக்கினேன்
திட்டுத்திட்டாக
இரத்தம் உறைந்து
படிந்து கிடந்தது!

முட்டிமோதின
எதிலோ என் கால்கள்!
ஓ.. துண்டாடப்பட்ட யாரோ ஓர்
அப்பாவியின்
பாதங்கள் அவை!

அகோரமான இந்தக்காட்சியை
படமெடுத்திட இயலாமல்
ஒழிந்து கொண்டது
அப்போது என் இதயம்!

உயிர்பிழைத்த
அந்த சம்பவங்கள்
தற்போது இல்லாமல்
சங்கீதமிசைக்கிறது
சமாதான வெண்புறா!!!

வெலிகம ரிம்ஸா முஹம்மத், இலங்கை
(poetrimza@yahoo.com)

Series Navigation

வெலிகம ரிம்ஸா முஹம்மத், இலங்கை

வெலிகம ரிம்ஸா முஹம்மத், இலங்கை

இரண்டு கவிதைகள்

This entry is part [part not set] of 40 in the series 20110206_Issue

ராஜா


விழிமூடாதிருந்தால்

நெகிழ்ந்துபோய் நாயகன் நின்றிருந்தான்.
படியேறி வந்துகொண்டிருந்தது நாயொன்று.
நெருங்கி வந்ததும்-
நாயின் கண்களில்
ஒரு நுண்மாறுதலை கவனித்ததில்
வெளிறிவிட்டது நாயகன் முகம்.
விபரீதம் நிகழப் போகிறது
என்ற அனுமானத்தில்
விழிகளை இறுக்கி மூடிக்கொண்டேன்.
ஆர்வம் மேலிட
வீரம் வரவழைத்து
வெகு பிரயத்தனத்தில்
விழி திறந்தேன்.
அறைக்குள் ஊடுருவிய வெளிச்சத்தில்
கண்கள் கூசின.
விரையும் வாகன இரைச்சல்கள்
செவிப்பறைகளை அறைந்தன.

_____________________________________________________

பெயர் சொல்

அம்மா அப்பா இட்டபெயர் ராஜசேகர்
ஜெயந்தி மிஸ் இடிச்சதில் மிஞ்சியது ராஜா.

அன்றைக்கு பள்ளி நண்பர்களுக்கு ராசுக்குட்டி
இன்றைக்கும் மாமாவுக்கு பாசமாய் ராசு.

தமிழன்னை திருத்தி தமிழாக்கியதில் ராசா
திட்டித் தீர்த்த தோழிக்கு மாவுராசா.

அம்மாவுக்கு அஃறிணையாகி தங்கம்
அப்பாவுக்கு உயர்திணையாகி ராஜாங்க.

வயதொத்த நண்பனும் ராஜா.
வித்தியாசம் வேண்டி நான் இளையராஜா.

வசதிக்கேற்ப கசக்கியதில்
காட்டன் துணியாய் சுருங்கிப் போனேன்.
சுடிதார் காந்தமே! என்னெதிர் அமர்ந்ததில்
இரும்புத் துண்டாய் நெருங்கி வந்தேன்.

பாதிமுகம் திருப்பி என்னைப் பார்த்ததில்
இடது பக்கம் வேகமாய் துடித்ததடி.
பெயர்சொல்லி என்னை அழைத்ததில்
காதுப் பக்கம் வெடி வெடித்ததடி.

உன் உதடு பிரித்த என்பெயர்
கவிதையாய் காதில் விழுந்ததடி
உன் நினைவு சுமந்த என்மனம்
கழுதையாய் நீட்டிப் படுத்ததடி.

குழந்தை பிறந்தபின்னே பேர் வைப்பாங்க
இன்னும் அதானே உலக வழக்கம்
எம்பேர் கேட்டு புதுசா பிறந்தேங்க
ஒண்ணும் புரியல இதென்ன கலக்கம்.

என்னை புதிதாய் படைத்தாயே நீ பிரம்மாவா
பெயர்சொல்லி முதலில் அழைத்தாயே நீயென் அம்மாவா

பேரென்ன? உறவென்ன? ஒத்தி வைப்போம்
ஊரென்ன? உலகென்ன? காதலில் களிப்போம்.

____________________________________________

Series Navigation

ராஜா

ராஜா

இரண்டு கவிதைகள்

This entry is part [part not set] of 35 in the series 20100905_Issue

ஸ்ருதி ரமணி


; விரட்டி விடுவேனோ என்கிற அச்சம்

பார்வையில் படபடக்க – வால் உதறி உதறிப் பருக்கைகளைப் பொறுக்குகிறது அது! ஓடி விடுமோ என்கிற ஐயம் என்னுள் ஊற்றெடுக்க தயக்கமாய் ஒதுங்கிச் சிலையாய்ச் சமைகிறேன் நான் என்னின் சிறு அசைவும் அதன் நிம்மதியைக் குலைக்கும் உணவுக்காக – இந்தப் போராட்டம் நிகழலாமா? அணிலே! பயப்படாதே! உன்னை இன்று காலையில் பார்க்கலாம் என்ற ஆசையில்தான் நேற்றிரவு படுக்கைக்குப் போனேன் நான்! இரவு முழுக்க உன் நினைப்பில்தான் பொழுதை உதைத்து விரட்டினேன்! என்னைப் போலத்தான் நீயும் இருந்திருக்க வேண்டும் இல்லையென்றால் புலர்காலையில் கணம் தப்பாமல் கிளை தாவி இப்படி ஓடி வருவாயா? பருக்கையாய்ப் பிரித்து பரவலாய்த் தூவியுள்ளேன் பரபரப்பின்றி பக்குவமாய்ப் பசி போக்கு! உனக்கு நான் – எனக்கு நீ பரஸ்பர நேயத்தில்தான் வாழ்க்கையே நகர்கிறது!! ———————
பயணம்

தவறாமல் வருகிறான் ஒருவன் ஞாயிறன்று அவன் நம்பிக்கை தளராத நயமான ஓசை ஏற்ற இறக்கத்தோடு நீள் தெருவில் நெடுக மோதி அலைகிறது அவன் குரல்! எல்லோருக்கும் வாழ்க்கை ஏதோவோர் நம்பிக்கையின்பாற்பட்டு! தவறாமல் வருகிறான் ஒருவன் ஞாயிறன்று அவன்! செருப்ப+! பழைய செருப்ப+!! காலனி ஓசை கானலாய்க் கரைய கலங்கிப் போகிறது மனசு! இன்னும் அவன் போக வேண்டிய தொலைவு எவ்வளவோ? எப்பொழுது முடியுமோ அவனின் இன்றைய பொழுது? ———————————-

Series Navigation

ஸ்ருதி ரமணி

ஸ்ருதி ரமணி

இரண்டு கவிதைகள்

This entry is part [part not set] of 29 in the series 20091225_Issue

ஏ.தேவராஜன்,மலேசியா


1
வானம் பிளந்து கொண்டது
யாரும் எதிர்பார்த்திடாத் தருணத்தில்

நட்சத்திரங்களோ இராட்சசக் கற்களோ
உதிர்வதற்குப் பதிலாக
மனித சாயலில் சதைப் பிண்டங்களாகப்
பெருத்த கவிச்சியுடன் விழுந்தன

மனிதர்கள் அவற்றைப் பெறுக்கி
ஒவ்வொன்றாய் இணைக்கத் தொடங்கினர்

மொட்டை மரத்து உச்சாணிக் கொம்பில்
கழுகொன்று வெகு நேரமாய்
உன்னித்தபடியிருந்தது

இணைக்கப்பட்ட சதைப் பிண்டங்கள் குறித்து
மனிதர்களுக்குள் மோதல் வலுத்துச்
சாத்தான் எனவும்
கடவுள் எனவும்
சாத்தானின் வகைகளுள் ஒன்றெனவும்
கடவுளின் அவதாரத்தில் ஒன்றெனவும்
மனிதர்கள் கைகலப்பில் இறங்கினர்

கழுகொன்று முடிவெடுக்க நேர்ந்தது

சட்டெனக் கீழ் நோக்கிப் பறந்து
திகட்டத் திகட்டக்
கொத்தித் தின்றது
சிதறு தேங்காய்களாய்க் கிடந்த
மனித உடலங்களை

2

ஒரு நாள் முழுக்க
உடம்பில் மேய்ந்து
அடங்குகின்றன
பிராணிகள்

பிராணிகளைக் கொல்வது
பாவமென்றாலும்
அவற்றின் அசூசையில்
எனக்குக்
குமட்டிக்கொண்டு வருகிறது

நிர்வாணமாய்க் கிடக்கிறேன்
நான் விரும்பும் பிராணியொன்று
என்னில் மேய்ந்ததே கிடையாது

நானும் மேய்வதறியாது
அப்பிராணியாய்க் கிடப்பதாக
என்னில் மேய்ந்த பிராணிகள்
பகடி செய்கின்றன

மேய்ச்சலுக்குச் செல்வதாய்
வீராப்புக் காட்டி
கொட்டிலுக்குள் அடங்கிவிடுகிறேன்
ஒவ்வோர் இரவும்

சில மாமாங்கங்கள் கழித்து
எனக்கு விடுதலை தருவதாக
மேய் பிராணிகள்
இரக்கப்படுகின்றன

அதற்குப் பின்னான வாழ்வு பற்றி
எண்ணிப் பார்க்க
அவை எனக்குச்
சொல்லித் தரவில்லை

ஏ.தேவராஜன்,மலேசியா
ovilak@yahoo.com

Series Navigation

ஏ.தேவராஜன்

ஏ.தேவராஜன்

இரண்டு கவிதைகள்

This entry is part [part not set] of 45 in the series 20090731_Issue

ப.மதியழகன்


பிறழ்வு

எனது சுய ஒழுக்கம்
பிறழ்வை சந்திக்கும் வேளைகளில்
எனது செயலுக்காக
நான்கு சுவர்களுக்குள்
நானே வெட்கப்படும் தருணங்களில்
வார்த்தைகளால் மனிதர்களை
கொள்ளி வைக்கும் கணங்களில்
ஒருவரது மனதில்
ஆழ்ந்த நம்பிக்கையால்
எழும்பிய அடித்தளத்தை
வாதத்தால் உடைத்தெறியும்
நாழிகையில்
எனது சவப்பெட்டியில் அறைய
பைநிறைய ஆணிகளை
நானே சேகரிக்கின்றேன்!

———————

கேள்விக்குறி

எல்லா மனிதர்கள் முன்பும்
ஒரு கேள்விக்குறி
விடை தெரியாத புதிராகத்தான்
விடிகிறது பொழுதுகள்
ஆங்காங்கே ஆச்சர்யக்குறி
தோன்றத்தான் செய்கிறது
ஆனால் கேள்விக்குறியின்
விஸ்வரூபம் முன்பு
ஆச்சர்யக்குறி சுவடற்றுப் போகிறது
வினாக்களுக்கு விடைகாண நேரமின்றி
விரைந்தோடுகிறது நாட்கள்
சற்றே அயர்வுற்று
இளைப்பாறும் தருணங்களில்
இதற்கென்ன தீர்வென்று
எல்லார் சிக்கல்களும்
கேள்வி்க்குறியோடு மனத்திரையில்
தோன்றி மறைகின்றன
கேடயம் கூட கையில் ஏந்தாத என்னை
கூர் வாளால் குத்திக் கிழிக்கின்றன
உதிரம் வழிந்த பின்னர் கூட
உணராதா நான் சாதாரண மானிடனென்று!

mathi2k9@gmail.com

Series Navigation

ப.மதியழகன்

ப.மதியழகன்

இரண்டு கவிதைகள்

This entry is part [part not set] of 28 in the series 20081127_Issue

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி


எப்படி இருந்திருக்கக்கூடும்?…

ஜன்னலோரப் புறாக்களின்
சிறகடிப்போடு
புலர்ந்ததந்த காலைப் பொழுது.

முதல் அழைப்பிலேயே
கண்விழித்து
முகம் பார்த்து சிரித்த மகன்.

பையனை ஏற்றிவிட்டுவந்த
பள்ளிக்கூடப் பேருந்தில்
சிரித்த முகங்களோடு
சீருடைச் செல்லங்கள்.

எப்போதும் போலன்றி
இவளும்
இன்முகம் கொண்டொரு சிரிப்புடன்.

வழியெங்கும் நெரிசலின்றி
வரவேற்ற வழக்கமான சாலை.

அவனது அலுவலக
அடுக்குமாடி கட்டிடத்தின்
அடுத்தொரு மாடியில் நிகழ்ந்த
இவன்வயது இளைஞன் ஒருவனின்
மாரடைப்பு பற்றிய செய்தி
வந்து சேர்ந்ததும்
அந்த ஒரு காலைப் பொழுதில்தான்.

எப்படி இருந்திருக்கக்கூடும்
அவனின் காலைப்பொழுது?


தானாய் விழும் அருவி…

கண்கூசும் வண்ண ஒளி மேடையில்
களைகட்டத் தொடங்கி இருந்தது கச்சேரி.

நெடுநாள் கழித்துப் பார்க்கும்
நண்பர்களின் நலம் விசாரிப்புகள்.

புடவை நகை பற்றிப் பேசவென்றே
புறப்பட்டு வந்திருந்த பெண்கள்.

நாற்காலிகளுக்கு இடைப்பட்ட
நடைபாதைப் பாய்விரிப்பில்
உறங்கிப்போன மகனை கிடத்திவிட்டு
உள்வரிசை நாற்காலி ஒன்றிலிருந்து
மகன்மேல் ஒரு கண்ணோடு
மடிமேல் தாளமிட்ட மங்கை.

குளிர்சாதனங்களின் அளவை குறைத்தபடி
அரங்கெங்கும் நடந்தபடி இருந்த
அவனது இசைகேட்டல் எப்படி இருக்கும்?

ஆரம்பமுதலே அடிக்கடி கைபேசியில்
கைதட்டல் சத்தத்தை யாருக்கோ
கேட்கச் செய்துகொண்டிருந்தவனின்
இசையார்வத்தை எதில் சேர்க்க?

எப்பொழுதும் நிகழக்கூடும்
இவளின் அழைப்பை எண்ணி
கைப்பேசியைப் பார்த்தபடி இவனும்.

தன்னளவில் எதற்கும் பொதுவாய்
தானாய் விழும் அருவியென
ததும்பிக்கொண்டிருந்தது இசையெங்கும்.


Series Navigation

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

இரண்டு கவிதைகள்

This entry is part [part not set] of 28 in the series 20081127_Issue

வே பிச்சுமணி


இன்னொரு மழை நாளில்

உன் வருகை
தொடர் மழை
நாட்களுக்குப்பின்
இளம் சூரியன்

உன் பார்வை
என் மனஅழுக்கை
துவைத்து காயவைக்கும்
ஒளிக்கதிர்

உன் அருகாமை
துன்ப பாம்புகளை
மீண்டும் புத்துக்குள்
விரட்டும்
உனது வெப்பம்

நீ வாராததால்
சத்தமிட்ட தவளை
நண்பர்கள் கொட்டம்
அடங்கினர்
உன்னை பார்த்து

இன்னொரு
மழை நாளில்
மேககுடை பிடித்து வந்து
இடை இடையே
ஒளிமுகம் காட்டு



நடுசாமம்

யாருக்கோ திடீரென
சாமிவந்தது போல்
நடுசாமத்தில் விழிப்பு வந்தது

பின்னிரவு முழுவதும்
இருமல் காரனின்
இரவு போல் நீண்டது

மாந்திரிகன் குரளிக்கு விடாது
ஏவலிட வேன்டியது போல்
முன்னாள் நினைவுகள்
படுக்கையில் புரள வைத்தன

வெளியில் வந்து விண்நோக்கினால்
முற்றத்தில் இட்ட நட்சத்திர கோலங்கள்
நடுவீட்டுக்கு வந்திருந்தது

மனிதர்கள் நடமாட்டமில்லாததால்
தெருவிளக்குகள் வெளிச்சத்தை
தனது அடியெலயெ வட்டமிட்டது

தலைவன் கோஷத்திற்கு ஏற்ப
கோஷமிடம் தொண்டர்களாய்
ஒரு நாயினை தொடர்ந்து
பல நாய்கள் தொடர் ஓலமிட்டன

ஊரில் தனியே இருக்கும் அம்மாவின் நினைவு
அலுவலகத்தில் தேங்கியிருக்கும் கோப்புகள்
மகளின் நாளையே பரீட்சை என
வால்பிடித்து வந்த நிகழ்காலத்தை
தொடர்ந்து

மேய்ச்சலுக்கு சென்ற மாடு
தன்னாகவே வீடு வந்தது போல்
தூக்கம் வந்தது


Series Navigation

வே பிச்சுமணி

வே பிச்சுமணி

இரண்டு கவிதைகள்

This entry is part [part not set] of 34 in the series 20080911_Issue

ஹெச்.ஜி.ரசூல்



இலைப் பூ

பூவின் இதழ் நிரப்பிய தேன்மணம்
வழிமூடிக் கிடந்த முட்காட்டின்
உள்நுழைய எத்தனித்த பட்டாம்பூச்சியொன்று.
கூர் நுனிகள் எகிற
பிய்த்தெறிய முனைந்த விரல்களில்
ரத்தகிரீடம் சூட்டிப்பார்க்க முயலும்
கவிந்த இருளின் மெளனம்.
வெள்ளைப்பகல் உடைபட்டுச் சிதற
கையளவு கனவு ஏந்தி
ராப்பிச்சை கேட்கும்
தாடிக்காரனின் மடியில்
ஒரு ஜோடிக் கிளிகள்
பட்டாம்பூச்சி உட்கார நினைத்த இலைப் பூவின் மீது
வானயோனிவிரிய விழும் பனித்துளி



சீறும்பாம்பு

சீறும் பாம்பின் ஓசையில்
நடுநடுங்கும் சிறுமழலை.
துரத்தப்பட்ட மேகங்கள்
திரள மறுக்கின்றன
ஒடிந்த விழுதென்றும்
துண்டித்துவீசப்பட்ட வடமென்றும் ஏமாந்தவர்கள்
இன்னும் நெருங்கி பரவசப் புணர்ச்சி செய்கிறார்கள்.
மகுடி கேட்ட மயக்கத்தில் ஆட்டம் தொடர்கிறது.
இதயங்கிழித்து
கண்கள் கொத்தி
படம்விரித்தாடும்
நூறுதலைகளுள்ள நாகப்பாம்பு.
வெறி கொண்டு ஒருதலையை
வெட்டுகையில்
இரண்டு தலைகள் முளைக்கின்றன.


mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்

இரண்டு கவிதைகள்

This entry is part [part not set] of 35 in the series 20080904_Issue

துவாரகன்


1. என்னை நானே சொறிந்து கொள்ளல்

என் உடம்பை நானே சொறிந்து கொள்ளல்

மிகச் சுகமாக இருக்கிறது

மற்றவரின் முதுகு சொறிந்து கொள்ளலிலும் பார்க்க

இது மிக நல்லது

நாகரிகமானது

மற்றவரின் முதுகு சொறியும்போது

அருவருப்பாக இருக்கும்

தேமல் படர்ந்த தோல்;களும்

ஊத்தை நிரம்பிய உடம்புமாக இருக்கும்

மற்றவரின் முதுகை

இவர்கள் எப்படித்தான்

முகம் சுழிக்காமல்

சொறிந்து கொள்கிறார்களோ?


2. உருமாற்றம்

குரங்கு தன் உடம்பைச்

சொறிந்து கொள்கிறது.

என்னைப் பார்த்துப் பல்லிளிக்கிறது.

நானும் என் உடம்பைச்

சொறிந்து கொள்கிறேன்.

பல்லிளி;த்துக் கொள்கிறேன்.

பல்லிளிப்பதாலும் சொறிந்து கொள்வதாலும்

நானும் குரங்காகிட முடியுமா?

நான் நானேதான்.


mskwaran@yahoo.com

Series Navigation

துவாரகன்

துவாரகன்

இரண்டு கவிதைகள்

This entry is part [part not set] of 34 in the series 20060428_Issue

வெங்கடேஷ் வரதராஜன்


காத்திருத்தல்

நீ வரும் பாதையில்
காத்திருந்த காலங்கள்
நீ கடந்து சென்ற பின்னர்
நகரவிடாத பொழுதுகளாய்
மாறி இம்சைதரும் கணங்கள்.

இப்போதெல்லாம் அப்பாதையில்
நீ வருவதில்லை.
நானும் காத்திருப்பதில்லை..

எனினும், காத்திருத்தல் நிகழாமலில்லை.
யாரோ யாருக்காகவோ
காத்திருக்கத்தான் செய்கிறார்கள்
பாதை நெடுகிலும்.

நிறுத்தமில்லாப் பயணம்

நீ இருக்கும் பேருந்தில்
இறைச்சல் இம்சைகள் தெரிவதில்லை.
ஆள்கூட்ட நெரிசல்
பழகிப்போயிருக்கும் உனக்கும்.

இருந்தும்,
எல்லாமே தீர்மானிக்கப்பட்ட பொழுதுகளாய்
இறங்கிச்செல்வாய் உன் நிறுத்தம் வந்ததும்.
எப்போதோ நிகழப்போகும்
நம் சந்திப்புகளிற்கு
ஒத்திகை பார்த்துக் கொள்பவனாய் நான்.
——————————————–
vencut_v@yahoo.com

Series Navigation

வெங்கடேஷ் வரதராஜன்

வெங்கடேஷ் வரதராஜன்

இரண்டு கவிதைகள்

This entry is part [part not set] of 60 in the series 20040429_Issue

கி. சீராளன்.


ஒரு கவிஞனின் அகராதி

‘ ‘கவிதை ‘ ‘ என்பது காதல் வந்ததும்

தடுமாறும் வாக்கிய கோர்ப்பு

‘ ‘காதல் ‘ ‘ என்பது

கவிதை எனும் உளறலை

தூண்டிவிடும் மதுக்கஷாயம்.

‘ ‘நிலா ‘ ‘ எனப்படுவது

எல்லா கவிஞர்களுக்குமான

ஒரே காதலி;

எல்லா காதலிகளுக்குமான

ஒரே உதாரணம்;

எல்லா காதலிகளைப் போலவும்

மாதத்தில் ஒரேநாள்

சிரிக்கவைக்கும் பெளர்ணமி.

‘ ‘அழகு ‘ ‘ – காதல் குடிகொண்டபின்

எல்லாப் பெண்ணும், பொருளும்

காட்டும் பொலிவு.

‘ ‘முத்தம் ‘ ‘ – நிறைய நெருப்பை

உள்ளடக்கி

உரசிப் பார்க்கும் தீக்குச்சி.

‘ ‘ஊடல் ‘ ‘ – ஒருநாள் சந்தோஷ விளைச்சலுக்காய்

வருடமெல்லாம் காய்ந்து கிடக்கும்

வறட்சி.

‘ ‘காமம் ‘ ‘ – கரையேறியதும்

காணாமல் போகும் கானல் நீர்.

‘ ‘பயம் ‘ ‘ – எல்லாமும் முடிந்தபின்

தேவையின்றி உதிப்பது.

‘ ‘ஏமாற்றம் ‘ ‘ – எல்லாமும் முடிந்தபின்

மிஞ்சியிருப்பது.

‘ ‘கடற்கரை ‘ ‘ – ஜனசமுத்திரத்தின் நடுவே

தனிமையை அடையாளம் காட்டும்

மாயக் கம்பளம்.

‘ ‘தனிமை ‘ ‘ – என்பதொரு மாயை.

‘ ‘காத்திருப்பு ‘ ‘ – ஏமாற்றத்தை

உறுதி செய்துகொள்வதற்கான

கால அவகாசம்.

‘ ‘கண்கள் ‘ ‘ – செய்தி ஒளிபரப்பு

சாதனம்;

விட்டில்கள் வந்து மோதி

உயிரை மாய்க்கும் விளக்கு;

சிரித்தால் பல பாலைவனங்கள்

பூத்துக்குலுங்கும்;

நீர் சுரந்தால்

பல சாம்ராஜ்யங்கள்

மாண்டு போகும்.

‘ ‘சிரிப்பு ‘ ‘ – சின்னச்சின்ன

இடைவேளைகள்,

மூச்சுவாங்க.

‘ ‘அன்பு ‘ ‘ – மனிதக் கால்களில்

நங்கூரம்.

‘ ‘பூக்கள் ‘ ‘ – தனியே இருந்தால்

சுகந்தம்

தலையேறினால் விண்மீன்கள்.

‘ ‘திருமணம் ‘ ‘ – வாழ்வின்

மின்சாரம் பறிக்கப்படுவதற்கான

முகூர்த்தம்.

‘ ‘வாழ்க்கை ‘ ‘ – நிலக்கரி தீர்ந்துபோன

நெய்வேலி.

‘ ‘கனவு ‘ ‘ – திருமணமானவனுக்கு

மலரும் நினைவுகள்

காதலனுக்கு தடுமாறும் நினைவுகள்.

‘ ‘தபால்காரன் ‘ ‘ – மின்னஞ்சலில்

காணாமல் போன,

போன நூற்றாண்டின்

காதல் தூதன்.

‘ ‘மரணம் ‘ ‘ – எல்லா சாகசங்களையும்

தவிடுபொடியாக்கி

மனிதனை வெல்லும் நிஜம்.

எல்லா நிஜங்களையும்

பொய்யாக்கும் சூனியக்காரன்.

‘ ‘அகராதி ‘ ‘ – வார்த்தைகளுக்கு

பொருள் சொல்லி,

வாழ்க்கையை தொலைக்கும்.

‘ ‘நான் ‘ ‘ – நீ, நீங்கள், அவர்கள்,

இவர்கள், அது, இது, அவைகள்,

எல்லாற்றுக்கும் எதிரி.

….

(2)

.. சுவர்கள் – சித்திரமின்றி ..

பெரியப்பா வீடுமட்டும்

இன்னும் மாறவில்லை,

அவர் விட்டுச்சென்ற

தலைவர்களின் படங்கள்

சுவரெங்கும்,

அவர்களின் பெயரை

பிள்ளைகளுக்கும் இட்டிருந்தார்.

நீதிக்கதைகள்

நிறைய சொல்லுவார்,

லட்சியப் பாத்திரங்கள்

உதாரணம் காட்டுவார்,

வாழ்க்கைநெறி ஒன்றை

வாழ்ந்து காட்டினார்.

என்பிள்ளை தன்பெயருக்கு

காரணம் கேட்டால்

என்னசொல்வேன்!

வாழ்ந்தவர் யாரைச்சொல்லி

திசை காட்டுவேன்!

வாழ்ந்து காட்டும்

பாத்திரங்கள் தான் உண்டா

படைப்புகளில், திரைகளில்!

என் சுவரெல்லாம் வெறுமை.

—-
punnagaithozhan@yahoo.com

Series Navigation

கி.சீராளன்

கி.சீராளன்

இரண்டு கவிதைகள்

This entry is part [part not set] of 48 in the series 20040311_Issue

கவிநயா


அன்புதான் காரணம்…

அரிதான செடி இதென்று
அருகினில் சென்றேன்
தொடும் முன்னே துவண்டது
அந்த தொட்டாற் சுருங்கி

அழகான மலர் இதென்று
அதிசயித்தேன்
ஸ்பரிசிக்கையில் குத்தியது
ரோஜாவின் முள்

பஞ்சு போல் மென்மையென்று
பக்கத்தில் போனேன்
பாய்ந் தென்னைக் கடித்தது
சின்ன வெள்ளை நாய்க்குட்டி

அன்பென்னும் ஈர்ப்பால்தான்
உன்னிடம் வந்தேன்
நீயேனும் புரிந்து கொள்
விலக்கி விடாதே

—-
பயணம்

செல்லும் தூரம் நினைத்தால் இனிமை
பார்க்கப் பார்க்க எல்லாம் புதுமை
மலையும் மடுவும் இயற்கைத் தன்மை
இடர்கள் மீறித் தொடர்தல் திறமை
நண்பர் குடும்பம் சேரப் பெருமை
திரும்பிப் பார்த்தேன் தொலைவில் இளமை


meenavr@hotmail.com

Series Navigation

கவிநயா

கவிநயா

இரண்டு கவிதைகள்

This entry is part [part not set] of 48 in the series 20040311_Issue

சத்தி சக்திதாசன்


சுதந்திரத்தின் விலை என்ன ?

சுதந்திரமான மனிதனே
விடையொன்று
பகர்வாய் !

சுதந்திரத்தின் விலை என்ன ?

அடுப்பங்கரையினில்
பானைகள் வெறுமையாய்
ஆத்தங்கரையினில் வயிறுகள் வெறுமையாய்
வெறுமைகள் இன்று
வறுமைகளின் வாழ்க்கையாய்
வாடித்துடிக்கையில்
சொல்லிச் செல்வாய்

சுதந்திரத்தின் விலை என்ன ?

படித்துப்பெற்ற அரும்பெரும்
பட்டத்தை
பத்து ரூபாய்க்கு அடகு வைத்து
பசியடக்கும் இந்த
பாவிகள் வாழும் உலகில்
சொல்லாயோ ?

சுதந்திரத்தின் விலை என்ன ?

சுந்தர வதனமும்
சுவீகர வார்த்தையும்
சங்கமித்த இந்த
சுந்தரியை வாழைவைக்க
சுளையாய் லட்சம் இல்லாமல்
சூனியமாய் வாழ்க்கை ஆகி
சுபீட்சமற்ற நிலை கண்டு
சுகம் மறந்த பெற்றோர் நிலை ?
ஒன்று சொல்

சுதந்திரத்தின் விலை என்ன ?

பள்ளி செல்ல வழியின்றி
தள்ளி நின்றழும்
கள்ளமில்லா குழந்தைகளின் மனதை
கிள்ளியதே! சொல்

சுதந்திரத்தின் விலை என்ன ?

தேசியக்கொடி
தேசமெங்கும் பறக்கும் அந்த
தேசியதினம்
தாங்கிய கொடியின்றி
தெருக்களில் கம்பங்களேயிருக்காது !
தேகத்தில் துணியின்றி
தேம்பியழும் சிறார்கள்
தேங்கிய எமது தேசங்களில்
சொல்லிவிட்டே செல்

சுதந்திரத்தின் விலை என்ன ?

உண்மைச் சுதந்திரத்தை
உள்ளத்தில் மறைத்துக் கொண்டாரே !

ஏழ்மை என்றெம் நாட்டில்
ஏற்கப்படாததது என்றொரு சட்டம்
ஏறும் வரை
என்றுமே சுதந்திரத்தின் விலை
எனக்குப் புரியாத ஒன்றேதான் !
—-

பெண்ணைப் பெண்ணாக

பெண்ணில் பெருமை காண மறுக்கும் மனங்களே
பெண்ணே உம்ம ன்னை எனும் உண்மை மறந்தீரோ ?

மண்ணில் விழுந்த நாள் முதல் அவள் படும் அல்லல்கள்
மறந்தே தயை ஏன் மறந்தீர் இத் தரணியிலே ?

கண்ணில் இமை போலே தன் சொந்தம் காத்திடுவாள்
கருணை சிறிதுமின்றி கடும் வார்த்தை ஏன் சொன்னீர் ?

தன்னில் துன்பமு ழுவதையும் தாங்கிக் கொண்டேயவள்
தவறாமல் பொழிந்திடுவள் அன்பு எனும் கருணைமழை

விண்ணில் ஏகும்வரை மண்ணில் ஓய்விலாது உழைப்பவளே
வீணர் உனை வீண் செய்தாரென வீணே வருந்தாதே

பண்ணில் உன்னை வைத்தே உயர்த்திக் கவி செய்தான்
பாரதி தமிழ்ப்புலவனவன் புதுமைப் பெண்ணைப் படைத்தான்

உன்னில் நீ உண்மையைக் கண்டு கொண்டு வரும் காலமதில்
உலகில் பெண்ணைப் பெண்ணாக மதித்திடுவாய் மனிதா !

—-
sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்

இரண்டு கவிதைகள்

This entry is part [part not set] of 36 in the series 20030911_Issue

செம்மல்.க


உயிர் முளைத்தல்
———————–
* எனக்கும் கவிதை எழுதிடத் தோன்றியது
தேங்க்கிடந்த உன் நினைப்புகளை எடுத்து வைத்தேன் தாளில்
கவிதைகொண்டும் உன்னை மொழி பெயர்க்க முடியவில்லை

* தற்செயலாக எட்டிப்பார்க்கிறேன் ஜன்னல்வழி
இன்று ஏனோ என் தோட்டத்தில்
சற்று கூடுதலாக பட்டாம்பூச்சிகள்…

* உயிர் முளைத்த உன் நினைப்புகளாக.


இன்னொருமுறை.
————————
*நாளை உனக்குப் பிறந்த நாள்
உனக்காக எழுதப்பட்ட வாழ்த்துமடல்
எங்கோ என் புத்தகங்களுக்குள்
தேடுகையில் தோன்றியது,
உனக்கு எழுதியவை
எழுதப்பட்ட நிமித்தத்தின் உயிர்ப்புடனே
என்றைக்காவது எனக்குச் சொல்லிப்போகட்டுமே
உன் நினைப்பை
இன்னொரு முறை…

செம்மல்.க
moongilkaadu@yahoo.co.in

Series Navigation

செம்மல்.க

செம்மல்.க

இரண்டு கவிதைகள்

This entry is part [part not set] of 57 in the series 20030717_Issue

ஷோபனா


கவிதை 01

என்றும் வேண்டாம்.

புன்னகையிலே என்றும்
கபடம் வேண்டாம்
வாhடித்தையிலே என்றும்
வஞ்சனை வேண்டாம்
பாhடிவையிலே என்றும்
பாpகாசம் வேண்டாம்
உள்ளத்திலே என்றும்
ஊனம் வேண்டாம்
பேச்சிலே என்றும்
போலித்தனம் வேண்டாம்
செயலிலே என்றும்
சுயநலம் வேண்டாம்
எழுத்திலே என்றும்
எண்ணியதெல்லாம் வேண்டாம்
எண்ணத்திலே என்றும்
கயமை வேண்டாம்
பாசத்திலே என்றும்
பாசாங்கு வேண்டாம்
கருணையிலே என்றும்
கலப்படம் வேண்டாம்
இவை என்றும்,
எதுவும் வேண்டாம்
இவை வேண்டுமெனும் போது,
நானே வேண்டாம்…

கவிதை 02

அன்பே…..

உயிhடி வேண்டாம் அன்பே – உன்
உள்ளம் மட்டும் தா…
உருமாறும் உள்ளங்களின்
உன்னத நாடகம் நமக்கெதற்கு
உணாடிச்சிகளின் உறவுகளெல்லாம்
உணாடிச்சியற்று மரத்துப்போகும்
நெஞ்சங்களின் நெருக்கமெல்லாம்
நெருப்புக்காடாய் மாறக்கூடும்

மன உறுதியை மாற்றி விடு
உன் மடியில் நான்
உறங்க வேண்டும்
உன் உயிhடி காற்றை எனக்கு
உணர தந்து மீண்டும் எனை
உயிhடிப்பித்தால்…
நான் என்றும் உன் காதலன்.

shobana100@hotmail.com

Series Navigation

ஷோபனா

ஷோபனா

இரண்டு கவிதைகள்

This entry is part [part not set] of 45 in the series 20030703_Issue

ராமலக்ஷ்மி.


எல்லார்க்கும் இனியவராய்……

மண்ணிலே பிறந்திட்ட மனிதர்களே! இதில்
ஒரு பிடியும் நமக்குச் சொந்தமில்லை.
விண்ணுலகம் செல்லுகையில் நாம் வாரிக்
கொண்டு போவது எதுவுமில்லை!
தண்ணீரில் எழுதுகின்ற எழுத்தன்றோ இத்
தரையினிலே நாம் வாழும் நல்வாழ்வு.
கண்ணிலே எண்ணெய் விட்டுக் காத்ததெல்லாம்
கரையேரும் நாளினிலே கூட வருமோ ?
எண்ணி எண்ணிக் கொடுத்திடுவோம்
எண்ணியே வாழ்ந்திடுவோம்; அதையே
என்னாளும் எண்ணிப் புழுங்டுவோம்-ஆபத்திலும்
அடுத்தவனுக்குத் தரும் எண்ணம் இருப்பதில்லை!
எண்ணுகின்ற கத்தைகளிலே ஓர்
எள்ளளவும் நம்மோடு நிச்சயமாய்
பின்னாளில் வாராது என்பதனை
பின்னும் ஏனோ நாம் உணர்வதில்லை!
நேசமானவரும் மிகப் பாசமானவரும்
மோசமானவரும் பார்த்தே யிராதவருமாய்
எத்தனையோ பேரினை-எமன்
நித்தம் சொடக்கிடும் நேரத்துள்
சொர்க்கமோ நரகமோ சுருட்டிக்
கொண்டு போகிறான்; விரட்டி
வரும் காலனின் சுருக்கு விழும்
நேரமோ எவருக்கும் நிச்சயமில்லை!
அத்தனையும் தெரிந்திருந்தும்
அடுத்தவரை மதிப்பதில்லை
அன்பை நாம் கொடுப்பதில்லை
கடமை நாம் செய்வதில்லை-கூட
வாராத சொத்துக்கு வாழ்நாளெல்லாம்
பித்தராய் சண்டையிட்டுத்
தீராத பிரச்சனை செய்து-உற்றாரை
வீட்டுக்கே வாராதிருக்கச் செய்கின்றோம்.
வேதங்கள் வாசிக்கின்றோம் ஆனால்
வேறு விதமாய் நடக்கின்றோம்.
கீதைதனைப் படிக்கின்றோம்;
ஆயினும் கீழ்த்தரமாய் நடக்கின்றோம்!
குர்ரான் ஓதுகின்றோம்;நற்
குண நலன்கள் கொண்டிரோம்!
ஏனிந்த முரண்பாடு-அன்பரே
என்று நாம் திருந்திடுவோம் ?
புதியவராய் மாறீடுவோம்
புனர் ஜென்மம் எடுத்திடுவோம்
கண்ணியமாய் நடந்திடுவோம்
புண்ணியங்கள் சேர்த்திடுவோம்!
இப்பூவுலகில் வாழ்ந்திருக்கப்
போகின்ற சொற்பநாளில்
எல்லார்க்கும் இனியவராய்
இருந்து விட்டுப் போவோமே!
===========================
– ‘நண்பர் வட்டம் ‘ மே 1989 இதழில் வெளியான
கவிதை.


‘மெகா முதலைகள் ‘

தொலைக்காட்சித் தொடர்களிலே
தொலைந்து போகும் மணித்துளிகள்!
தொடருகின்ற இப்பேரவலம் கண்டு
திறந்திடுவோமா கண்கள்தனை ?
அரை மணிதான் அரை மணிதான்-என
அடுத்தடுத்துப் பார்க்கையிலே
நித்தம் நித்தம் செலவாவது
எத்தனை அரை மணிகள் ?
கூட்டிதான் பாருங்களேன்
வெட்டியாக வீணாகும்-தங்கக்
கட்டியான மணித் துளிகள்
ஆண்டொன்றுக்கு எத்தனை என ?
பொன்னான நம் காலம்
பொசுங்கிப் போவது புரிந்திடுவோம்!
வீணாகிப் போகாமல்
விழித்திடுவோம் விரைவாக!
‘ரிலாக்ஸ் ‘ செய்ய-காண்பது போய்
தொடர் பார்ப்பதே தொழிலாகி,
அன்றாட வேலைகள்தான் ‘ரிலாக்ஸ் ‘
என ஆகலாமா ?
கவலை மறக்கக் காட்சித் தொடர்
என்பது போய்
கதா பாத்திரங்களுக்காகக்
கவலைப் படுவது முறைதானா ?
சாபமிடும் சத்தங்களும்
ஓலமிடும் ஒலிகளும்-நாம்
வாழுகின்ற இல்லங்களில்
ஒலிப்பதும் நல்லதல்ல!
மெல்ல மெல்ல நமை விழுங்கும்
மெகாத் தொடர் முதலைகளிடம்
முழுதாக பலியாகும் முன்
வெல்வதற்கு வழியாது ?
தேர்ந்தெடுத்துப் பார்க்கையிலே
தேங்கி நிற்கும் பல வேலைகளைத்
தேனீ போல முடித்திடத்தான்
தேவையான நேரம் கிடைத்திடுமே!
மேலும் சேருகின்ற நேரத்தில்
நல்ல இசை கேட்டிடலாம்,
புத்தகங்களைத் துணையாக்கிப்
புத்துணர்ச்சி பெற்றிடலாம்!
முத்தான மணித்துளிகளைக்
கொத்தாகக் கையில் ஏந்தி
சத்தான எதிர் காலத்துக்கு
வித்திடுவோம் விரைவாக!

***
*ramalakshmi_rajan@yahoo.co.in

Series Navigation

ராமலக்ஷ்மி

ராமலக்ஷ்மி

இரண்டு கவிதைகள்

This entry is part [part not set] of 45 in the series 20030703_Issue

பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை.


கிராமத்து காதல்…

களத்து மேட்டினிலே
கயசைத்து போனவளே…
குறுக்கு சிரித்தவளே
கொஞ்ச நேரம் பாரடியோ…

அரைத்து வச்ச மஞ்ச பூசி
அய்த்தனையும் சேத்து பூசி
அரைநொடி நீ ஊறுப்புள்ள
அப்புறமா பாருபுள்ள…

தெக்கே காத்தடிக்கும்
தெருவெல்லாம் ஊத்தடிக்கும்
நிக்காம ஓடி வாடி…
புடிக்கிறேன் உடும்பு புடி…

பாத்துபுட்டேன் மேடுபள்ளம்
தாவட்டுமா லாவகமா…
மாட்டிகிடேன் நான் வசமா
மச்சான விட்டுடுமா…

ஆச வச்சன் உன் மேலே
பூச எப்போ வச்சுக்கலாம்…
தேதி பாத்து நீ சொன்ன
மீதி கூத்த கத்துக்கலாம்…

அட..போ மச்சானே
ஆகட்டும் பாத்துகலாம்
அரைச்சு விட்ட மீன் கொழம்பு
அள்ளி அள்ளி திண்ணுக்கலாம்…


நீயே கதியனக்கு…

என்
இதயத்தில் பூகம்பம்
எதனால் பெண்ணே ?
இடிந்தது உள்ளம்
உன்னால் தானே!

ஏக்கம் நிறைந்த கண்ணில்
தூக்கம் பறித்தவள் நீ…
சோகம் வளர்ந்தது என்னில்
சுகமாய் ரசித்தவள் நீ…

ஏனடி என்னை பார்த்தாய்
எதுவுமே பிடிப்படவில்லை…
பாரடி இதயம் இன்று
பாவம் துடிக்கவேயில்லை…

உன்னை நினைக்கும் போது
உலகம் கூட கடுகு…
உள்ளம் கொடுத்த பின்பு
உண்மையாய் என்னுடன் பழகு…

ஆயிரம் முறை நான் அழுதேன்
ஆயினும் உன்னையே தொழுதேன் – உன்
உள்ளத்தை நானே உழுதேன்
காதலை அதனில் விதைத்தேன்.

பா.ஸ்ரீராம்
மயிலாடுதுறை

balageethan@rediffmail.com

Series Navigation

பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை.

பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை.

இரண்டு கவிதைகள்

This entry is part [part not set] of 42 in the series 20030626_Issue

த. ஆரோக்கிய சேவியர், சிங்கப்பூர்.


**
மீண்டும் மீண்டும்…
**
என் பெயரை நீ
உச்சரிக்கும்
ஒவ்வொரு
முறையும்
நான்
மீண்டும் மீண்டும்…

பிறக்கிறேன்!!!

***
உடனடி கவிதை
***
உடனடியாக ஒரு கவிதை
கேட்ட கள்ளியிடம்….

ஒரு கவிதையே கவிதை கேட்கின்றது…..
என்றேன்.

***
த. ஆரோக்கிய சேவியர்,
சிங்கப்பூர்.

saxsun76@yahoo.com

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

இரண்டு கவிதைகள்

This entry is part [part not set] of 42 in the series 20030626_Issue

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி


1. ஒரு கடத்தல் கதை

முதன் முதலில்
இந்த ஆற்றைக் கடந்தபோது
அம்மாவின் இடுப்பில் இருந்தேன்

புத்தகப் பையோடு
கால்சட்டையையும்
தலையில் சுமந்தவாறு
நடந்து கடந்திருக்கிறேன்

நீர்ப்பெருக்கில்
இளமை முறுக்கில்
நண்பர்சூழ
நீந்திக்கடந்திருக்கிறேன்

மணல் ஓடிய ஆற்றில்
பாதுகை இல்லாத
இரு அழகான பாதங்களை
சுமந்து கடந்திருக்கிறேன்

அக்கரை நாணல் புதரில்
அழகிய பாதங்களை
முத்தமிட்ட பிறகு
என்ன நடந்தது என்பதை
இருவர் மட்டுமே
அறிந்திருந்தோம் –
ஊரார் அறியும் வரை.

அழகிய பாதங்களுக்குச்
சொந்தக்காரி
இப்போது என் அம்மாவைப்போல்
ஆற்றைக் கடக்கிறாள்
என்னைப்போல் ஒருவனை
இடுப்பில் சுமந்து.

2. தொலைந்தது

தேடினாலும் கிடைக்காது
தொலைந்து போனது
பூமியைவிடப் பெரியது

புதைந்து போயிருக்கலாம்
தோண்டினாலும்
எடுக்கமுடியாது
புதைந்து போனது
பூமியைவிடப் பெரியது

gk_aazhi@rediffmail.com

Series Navigation

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி

இரண்டு கவிதைகள்

This entry is part [part not set] of 34 in the series 20030607_Issue

தமிழ்மணவாளன்


குப்பை

கீழ்வீட்டில் குடியிருந்தவர்கள்

காலி செய்து

வேறு வீடு போகிறார்கள்.

காலையிலிருந்தே சின்ன சின்னப்

பொருட்களாய்

ஆட்டோவில் கொண்டு

போனவர்கள் இப்போது தான் ஒரு

டெம்போவில் ஏற்றுகிறார்கள்

கட்டில் பீரோவை.

வீடு மாற்றுவதொரு

சங்கடமான வேலை தான்.

செருப்பிலிருந்து நகை வரை

ஒன்றுவிடாது கொண்டு சேர்க்க

வேண்டும்

புது இடத்துக்கு.

பழகியவரை விட்டுப்

பிரிய வேண்டும்.

சில வேளைகளில்

மாறுதல் நன்மைகளைச்

செய்யக்கூடும்.

உறவுக்காரர்களெல்லாம்

வந்திருக்கிறார்கள்

உதவிக்கு, பரவாயில்லை.

காலி செய்பவர்கள்

எதை எடுத்துக்கொண்டு

போனாலும்

குப்பையை மட்டும் அப்படியே

போட்டுப் போக

வேண்டுமாம்.

அப்படி ஒரு ஐதீகம்.

எப்படியோ,

குப்பைக்கும் ஒரு கெளரவம்

நல்குமிந்த நம்பிக்கை

நன்றாகவே இருக்கிறது.

கணம்

தேவையின் உக்கிரம் மிகுந்த அழுத்தத்தை

உள்ளிருந்து உருவாக்க

வெளிச்சமாய் பிரவகித்த பெருநம்பிக்கை

கணப்பொழுதில் காணாமற்

இருட்டுப் போர்வையாய்

எங்குகிட்டுமினி வாய்த்திருந்தது

உதிரும் அலைந்தோய்ந்த

மனத்தின் விரிசல்கள் வழியே.

tamilmanavalan@yahoo.co.in

Series Navigation

தமிழ்மணவாளன்

தமிழ்மணவாளன்

இரண்டு கவிதைகள்

This entry is part [part not set] of 34 in the series 20030607_Issue

புதியமாதவி, மும்பை


நான் கணினியல்ல

நினக்காமல் இருப்பதற்கும்
நீ நினைத்தால் அழிப்பதற்கும்
என் இதயம்
உன் கணினியல்ல!!!

பார்க்காமல் இருப்பதற்கும்
அணைக்காமல் தொடுவதற்கும்
என் கண்கள்
உன் காமிராவல்ல!

பேசாமல் இருப்பதற்கும்
பேசியதை மறப்பதற்கும்
என் உள்ளம்
உன் தொலைபேசியல்ல!

அழாமல் இருப்பதற்கும்
அழுதுகொண்டே சிரிப்பதற்கும்
என் வாழ்க்கை
உன் மேடையல்ல.!!


உயிர்க்காதலி

மெளனம்-
உன்னதமான மொழி
மனிதன் படைத்த
அத்தனை மொழிகளும்
அர்த்தமிழக்கும்
சத்திய தவத்தில்
மெளனமே
நீதான் –
உண்மையின் மொழி
ஆனால்-
உண்மைகள் என்றும்
ஊமையுடன் வாழ்ந்தால்
ஊமையின் அர்த்தம்கூட
உண்மையிழந்து போய்விடுமே.!

உண்மைகளை
மெளனத்தில்
அடைகாத்தது போதும்.!
இனி-
சத்தியக் குஞ்சுகள்
உன் ஓடுகளை
உடைக்கட்டும்.!
பிறக்கும்
புதிய குஞ்சுகளின்
புதியராகம்
உனக்குச் சொல்லும்..
உன் –
உயிரின் காதலி
யாரென்று.

puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை

இரண்டு கவிதைகள்

This entry is part [part not set] of 47 in the series 20030510_Issue

புதியமாதவி, மும்பை 42.


ஆகாயக்கோட்டை
————–
ஆகாயமே-
உன் கதவுகளை
எனக்காக
ஏன் திறந்துவிட்டாய் ?

உன் வாசலில்
ஆயிரம் நிலவுகள்
ஆனாலும்-
பூமியின் நிலவுக்கு மட்டும்
ஏன் பொட்டு வைத்தாய் ?

உன் பிரபஞ்சத்தில்
கோடி சூரியன்கள்
ஆனாலும்-
உன் மனத்தேரில்
மண்ணின் சூரியனுக்கு
ஏன் மாலையிட்டாய் ?

ஆகாயமே..
ஓடும் மேகங்கள்
உறங்கட்டும் என்றா
என் சின்ன இலைகளில்
கூடு கட்டினாய் ?

இன்று-
மலைமுகடாய்
நான் தொட நினைக்கையில்
எட்டாத கனவோடு
எங்கே ஓடினாய் ?

பருவ மழையாய்
பிறந்த போதெல்லாம்
உறவு வயல்களுக்கே
உயிர்ப் பாய்ச்சினாய்

இன்று-
உனக்காக
பதியம் போட்ட
முல்லைப் பந்தலை
பார்க்காமலேயே
ஏன் பாலையாக்கினாய் ?

உன்னை-
தொட்டுவிடுவேன் என்றா
என் இமைகளில்
தூங்க மறுத்தாய் ?

என் இதழ்கள்
பட்டுவிடும் என்றா
உன் பாடலை
எழுதாமல் முடித்தாய் ?

**

காற்றே..வீசாதே..!!
——————

காற்றே..
கதவுகளில்லாத என் தோட்டத்து
காவலுக்கு வந்தக் காற்றே..!

என் பூக்களைத்
தொட்டுவிடாதே..!
சூரியதேவனை
மணப்பதற்காக
சூடிக்கொடுத்த பூமாலை
உன் கைப்பட்டால்
பட்டுவிடும்!
வாசனைத் தொட்டால்
வாடிவிடும்!

காற்றே.. அசையாதே!
பூவின் அந்தரங்கம்
உடைந்துவிடும்

காற்றே..வீசாதே!
பூவின் விதிவிளக்கு
அணைந்துவிடும்.

>>>>>>>>>>>>>>புதியமாதவி,
மும்பை 400 042.

puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை

இரண்டு கவிதைகள்

This entry is part [part not set] of 37 in the series 20030202_Issue

புதியமாதவி, மும்பை.


குடும்ப விளக்கு

சூரிய வெளிச்சத்தை
கடன் வாங்காத
மின்மினிகள்!

விளக்கு மாடத்தை விட்டு
வெளியில் வராத
வெண்ணிலவுகள்..!!

மின்சார யுகத்தில்கூட
மண்ணெண்ணெய் ஊற்றி
எரிந்து போகும்
நட்சத்திரங்கள்…..!!!!

***

மின்னல் இருட்டு

தாயே –
உன் கர்ப்பகிரஹம்
இருட்டாக இருக்கிறது..
என்னை-
அணைத்துக்கொள்!

என்னைச்
சுமந்து கொண்டு
எங்கே ஓடுகின்றாய்.. ?

உன் சூரிய விளக்குகள்
அணைந்த போது
பூமியின் கருவறையைத்
தீண்டிய
மின்னல் இருட்டு நான்..

இந்த இருட்டுக்குள்
என் வாசம்
தொடரும்வரைதான்
நீயும் நானும்
தாயும் பிள்ளையும்..
இந்த இருட்டை
உடைக்கும்
என் –
பிரசவ வெளிச்சத்தில்
நீ யாரோ .. ?
நான் யாரோ… ?

puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை

இரண்டு கவிதைகள்

This entry is part [part not set] of 29 in the series 20030112_Issue

– ஜடாயு


நீ
இன்று
வருவாய்
என்ற எதிர்பார்ப்பில்
ஏறி இறங்கும் இந்த ஏணிப் படிகள்
உனக்காக மலர்ந்த
ஒற்றை
ரோஜாப்
பூ

*********************

உன்னை விட்டுப் பிரிந்திருந்தால்
ஒவ்வொரு கணமும் ஒரு யுகமாகிறது எனக்கு
நீ உடன் இருந்தாலோ
ஒரு யுகமும்
கணப்போதில் காணாமல் போய்விடுகிறது

இப்பொழுது புரிகிறது
என்னை விட்டு ன் விலகிச் செல்கிறாய் என்று
நிலவே
நெடுநாள் வாழ நீ
நிச்சயித்து விட்டாய்
உன் உயிரல்லவோ நான் ?

(c) ஜடாயு (jataayu@hotmail.com)

Series Navigation

ஜடாயு

ஜடாயு

இரண்டு கவிதைகள்

This entry is part [part not set] of 35 in the series 20021207_Issue

ரவி, சுவிஸ்


நீள நட குறுகல் அகல


எனது வீட்டுக் கதவு தட்டப்படும்போது
நண்பன்தான் என
இயல்பாய் மனசு
எண்ணுவது எப்போது ?
வாள்களும் பொல்லுகளும் – ஏன்
உணவில் நஞ்சூட்டலும்கூட
துப்பாக்கிகளின் வேலையைச் செய்யும்போது
நான் சமாதானத்துக்காய்
அழ மட்டுமே முடிகிறது.

பனைவேர்ச்சல்லி மண்ணில்
புதைந்திருந்த நுாற்றாண்டு வேரை
இரவோடு பிணைத்த ஒரு பகல்பொழுதுக்குள்
அறுத்தெறிந்த இனத்துயரம் இன்னும்.
நினைவிறக்கப்பட முடியாத
இந்தத் துயாிடை நான்
சமாதானத்தைக் கனவுகாண்பதாயில்லை.

ஆயிரம் பூக்களென்ன
நாலு பூக்கள்தன்னும் மலரவிடா
மலட்டுப் பூங்காவினிடை
விடப்பட்டவர்கள் நாம்.
பூத்தல்களுக்காய் நாம் வியர்வைகளை
இறைக்கும்வரை – ஏன்
எமது முளைமடிப்புகளை குலைத்துப் போடும்வரை
சமாதானத்துக்காய் நாம்
நீளமாய்ப் பயணிக்கத்தான் வேண்டியிருக்கும்.

மீண்டும் ஒரு சில்வாவின் பேக்காியையும்
காதாின் துணிக்கடையையும் காண
விழைகிறது மனம்.
மந்திாியின் வரவேற்பும்
எம்பிக்களின் சுற்றுலாவும்
சமாதானப் பிரமாண்டங்களாய் வெளிவருகிறது
கமராக்களுக்குள்ளிருந்து.
சமாதானக் கனவுகளை நாம்
உற்பத்திசெய்து தள்ள
அப்பாவித்தனம் மலிந்ததா எமது தேசம் ?
வியர்க்கிறது தேகம்
குரல்வளையை நினைத்து!

-ரவி (சுவிஸ்,நவம்பர்2002)



துயரங்களின் பின்னான நாட்களில்…

உலகின் அதிஅழகு
சமாதானம் என
படுகிறது எனக்கு.
அதனால்தானோ என்னவோ
அவ்வளவு இலகுவாய் அது
கிட்டுவதில்லை.
எனவே நான்
சமாதானத்தை சந்தேகிக்கிறேன் – அதன்
அர்த்தங்கள் களையப்படும்போது.

வாழ்வின் ஒவ்வொரு இழைகளும்
சிலந்திவலையாய்ப் பின்னப்பட்டபின்
இன்னொரு புயலை நினைக்க
உடல் நடுங்குகிறது.
மண்ணைப் பெயர்த்துத்
திாிந்த துயரங்களின் பின்னான
ஓய்ச்சலின் நடுவே
எதிாியுடனான கைகுலுக்கலில்
ஆழம்கொள்கிறது சந்தோசம்.
ஆனாலும்
இந்த விரல்களினுாடு பகிரப்படுவது
அதிகாரம் மட்டும்தான் என்றால்
சந்தேகம் கொள்வதிலிருந்து என்னால்
தப்பிக்க முடியவில்லை.

நடுநிசியில் விளக்குவைத்த
வெளிச்சத்தில் ஓர் உருவத்தைச்
சுற்றிச் சுற்றி குரைக்கிறது எனது
வீட்டு நாய்…
இன்னும் நெருங்குவதாயில்லை

புயல்பூத்த மையங்களைத்
தொடும் அதிர்வுகளின் பின்னால்
வெடிக்கப்போவது போரா
தலைநிமிரும் சமாதானமா என்பதாய்க்
காத்திருப்பதைத் தவிர நான்
கொள்ள எதுவுமில்லை –
இப்போதைக்கு!

– ரவி (சுவிஸ்,நவம்பர்2002)

rran@bluewin.ch

Series Navigation

ரவி, சுவிஸ்

ரவி, சுவிஸ்