எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 6

This entry is part [part not set] of 34 in the series 20070621_Issue

சி. ஜெயபாரதன், கனடா

புனித நிலவே ! நீ சாட்சியாய் நில் எனக்கு !
மனிதரின் புரட்சியில் வெறுப்பான
நினைவுகளே மேலெழும் !
(தளபதி ஆண்டனியைப் புறக்கணித்த தற்கு)
மடத்தனமாய் எனோபர்பஸ் நேரே நின்முன்
மனம் வருந்து கின்றான் ! … (எனோபர்பஸ்)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

மனச் சோர்வின் எதேச்சைக் காதலியே !
நச்சிரவின் ஈரம் பொழியட்டும் என்மேல் !
விருப்பத்துக் கெதிராகப்
புரட்சி செய்திடும் வாழ்வு !
வருத்துவ தில்லை அது ! தீப்பொறி யான
கொடூரத் தவறுகள் முன்னே
எறிந்திடு என் னிதயத்தை !
நொருங்கிடும் அது தூளாய்த்
துயரில் காய்ந்து போய் விட்டால் !
பாழான எண்ணம் அனைத்தையும்
மீளாமல் தடுத்திடும் ! அந்தோ ஆண்டனி !
புறக்கணிக்கும் தலைவ னென,
ஓடுகாலி நானென
முதலிடத்தில் என்னைப்
பதிவு செய்யட்டும் உலகம் !
ஓ ஆண்டனி ! ஓ ஆண்டனி ! … (எனோபர்பஸ்)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

இந்தப் போக்கிரி எகிப்தியன் எனக்கு
இழைத்து விட்டான் துரோகம் !
எனது கடற்படை அணியும்
அடி பணியும் தோற்றுப் போய் !
குடித்துக் கும்மாளம் அடித்துக் கூடி
தொப்பியைத் தூக்கி மேலெறிந்து வெற்றி
ஆரவாரம் எழுந்திடும் ஆங்கே !
மும்முறை மாறிய வேசி ! உன் மீதுதான்
வெம்போர் புரியும் என்னிதயம் !
வெளியே அனைவரும் ஒழிவீர் !
ஓடிப் போவீர். .. (ஆண்டனி)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்

நாடகப் பாத்திரங்கள்:
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கிளியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்

ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ்: ரோமின் மூன்றாம் தளபதி
எனோபர்பாஸ்: ஆண்டனியின் ஆலோசகன், பாதுகாவலன்
கானிடியஸ்: ஆண்டனியின் போர்த் தளபதி
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
•பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன், இளைய பாம்ப்பி)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)

கிளியோபாத்ரா
அங்கம்: 8 காட்சி: 6

ரோமா புரியின் நிலைமை: •பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி •புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள்.

எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனியை மைத்துனன் ஆக்கிக் கொள்கிறான். திருமணத்தைக் கேள்விப்பட்ட கிளியோபாத்ரா வெகுண்டெழுகிறாள். ஆண்டனி எகிப்துக்கு மீண்டு மனைவியை மறந்து கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்து மயங்கிக் கிடக்கிறான். ஆண்டனியைத் தண்டிக்க அக்டேவியஸ் ரோமானியப் படையுடன் ஆக்டியக் கடற் பகுதியில் போரிட்டு வெற்றி அடைகிறான். தோற்றுப் போன ஆண்டனி ஆக்டேவியஸ் தூதரை விட்டு அனுப்பிய நிபந்தனைகளில் கையொப்பமிடுகிறான். ஆயினும் இருவருக்குள்ளும் நிரந்தரப் பகை உண்டாகி, ஆண்டனி எகிப்தில் அடைபட்டுப் போகிறான். அவனைக் கைது செய்ய அக்டேவியஸ் எகிப்துக்குத் துரத்திச் செல்கிறான்.

++++++++++++++++++

கிளியோபாத்ரா
அங்கம்: 8 காட்சி: 6

நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியா அரண்மனையில் ஆண்டனியின் மாளிகை. பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்: ஆண்டனி, புதிய தளபதி ஸ்காரஸ், ஈராஸ், கிளியோபாத்ரா, பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.

காட்சி அமைப்பு: இரண்டாவது தளப்போரில் வெற்றி பெற்ற ஆண்டனியை அக்டேவியஸ் மீண்டும் கடற் போருக்கு அழைக்கிறான். ஆண்டனி வருத்தமோடு கடற்போருக்குத் தயாராகிறான்.

ஆண்டனி [சினத்துடன்] சிறுவன் அக்டேவியஸ் மறுபடிப் போருக்கு அழைக்கிறான் ! மூடன் ! முரடன் ! மூர்க்கன் ! நேற்று நான் கொடுத்த அடியில் பீறிட்ட குருதிகூட இன்னும் காயவில்லை ! போருக்கு மீண்டும் வருகிறான் பொடியன் ! அதுவும் கடற்போருக்கு ! முதல் முறியடிப்பில் மூழ்கிப் போன என் கப்பல்கள் மூச்சிழந்து கடலுக்குள் துருப்பிடித்துக் கிடக்கின்றன ! உடைந்து முடங்கிப் போன கப்பல்களை துறைமுகத்தில் செப்பமிட நேரமில்லை, கப்பல் துறை நிபுணரில்லை ! எப்படிக் கடற்போரில் இறங்குவது ? ஸ்காரஸ் நீ சொல் ! எத்தனை மணிநேரத்தில் கப்பலைச் செப்பமிடலாம் ? பராமரிப்புக் குழுவில் இன்னும் எத்தனை பேர் கைவசம் உள்ளார் ?

ஸ்கார்ஸ்: ஆண்டனி ! எத்தனை மணிநேரத்தில் என்று கேட்காதீர், எத்தனை நாட்களில் என்றால் நான் பதில் சொல்ல முடியும். பராமரிப்புத் துறையாளரில் பாதிப் பேர் எனாபர்பஸ் நீங்கிய போது கூடச் சென்று அக்டேவியஸ் படையில் சேர்ந்து கொண்டார் ! அவருக்கு நாமளித்த ஊதியப் பணம் போதாதாம் ! இப்போது நம் கைவசம் உள்ள பராமரிப்பாளர் ஐம்பது அல்லது அறுபது பேர்தான் ! முடங்கிக் கிடக்கும் படகுகளை ஒரு வாரத்தில் செம்மைப் படுத்தலாம் ! கடற்கரையில் தொய்ந்து கிடக்கும் கப்பல்களைச் சீர்ப்படுத்த பல மாதங்கள் ஆகலாம் !

ஆண்டனி: அதை நான் ஏற்க முடியாது, வாரங்களும் மாதங்களும், நாட்களாய் குறைய என்ன வழிகள் உள்ளன ? அதைக் கூறு. பராமரிப்புப் பணிகளுக்கு எகிப்தியர் உதவியை நாடிப் பயன்படுத்திக் கொள் !

[கிளியோபாத்ரா சேடிகள், பாதுகாவலருடன் நுழைகிறாள்]

கிளியோபாத்ரா: [புன்னகையுடன்] ஆண்டனி, கவலை வேண்டாம். என்னிடம் 75 படகுகளும், 25 கப்பல்களும் எஞ்சி உள்ளன ! கடற்படை வீரர்கள் பத்தாயிரம் பேர் இருக்கிறார், அவர்களில் ஐநூறு பேர் பராமரிப்பு வேலை செய்யத் தகுதி யுள்ளவர்.

ஆண்டனி: [கனிவுடன்] நல்ல நேரத்தில் வந்தாய் கிளியோபாத்ரா ! கடற் போருக்கு நான் தாயாராக இருக்கிறேன். உன் உதவி எனக்குத் தேவை, கடற் போருக்குத் தேவை. [ஆங்காரமாக] நீரிலும் போரிடுவேன் ! நெருப்பிலும் போர் புரிவேன் ! முடிந்தால் நீல வானிலும் போரிடுவேன் ! [ஸ்காரஸைப் பார்த்து] நாம் குன்றின் சிகரத்தில் உள்ளோம், அது தளப்போருக்கு மட்டும் தகுந்தது ! கடற்போருக்குத் தகாதது ! முதலில் நமது கப்பல்கள் தயாராக வேண்டும் ! பிறகு கூடாரங்கள் துறைமுகத்தின் அருகே அமைக்கப் பட வேண்டும். அக்டேவியஸ் படையினர் என்ன செய்கிறார் என்று முன்கூட்டி நமது ஒற்றர் குழு உளவித் தகவல் அனுப்ப வேண்டும். முதலில் அவரை மாறு வேடத்தில் அனுப்பு.

ஸ்காரஸ்: அப்படியே செய்கிறேன் ஆண்டனி ! மகாராணி ! உங்கள் கடற்போர்த் தளபதியை அழைத்து என்னைக் காணும்படி ஏற்பாடு கொடுங்கள்.

கிளியோபாத்ரா: உடனே செய்கிறேன். [பெல்லோடோரஸைப் பார்த்து] பெல்லோடோரஸ் ! நமது கடற்படைத் தளபதியை என்னிடம் அழைத்து வா

[அருகில் நிற்கும் பெல்லோடோரஸை அனுப்பிப் பின்னால் கிளியோபாத்ராவும் வெளியே செல்கிறாள் ]

ஸ்காரஸ்: ஆண்டனி ! மகாராணி முன்னால் பேச முடியவில்லை என்னால் ! கிளியோபாத்ராவின் படகுகளில் புறாக்கள் கூடுகட்டி உள்ளன. கப்பல்களின் திசை திருப்பிகள் துருப்பிடித்துப் போயுள்ளன. கப்பலோட்ட அடிமைப் படையினர் மட்டும் ஆயிரக் கணக்கில் உள்ளார் ! கடற்தகுதி பெற்ற கப்பல்கள்தான் எகிப்தில் அதிகமாக இல்லை ! அக்டேவியஸின் பயங்கர ரோமானியக் கப்பல்கள் முன்பு, எகிப்தின் கப்பல்கள் எதிர்த்து மிதக்க முடியாது.

ஆண்டனி: அப்படியா ? அந்த போக்கிரி எகிப்தியன் கிளியோபாத்ராவின் கடற்படைத் தளபதி எனக்குத் துரோகம் செய்து விட்டான். முதல் போரில் என்னை வஞ்சித்து விட்டான். பகைவர் வெற்றி பெற அவருக்குப் பாதை காட்டினான். நமது கப்பல்கள் முன்னேறிச் செல்ல முடியாது முடக்கி மூழ்கிப் போக வழி வகுத்தான். அவன் கிளியோபாத்ரா சொற்படிக் கேட்பவன். உன்னுடன் ஒத்துப் போரிடுபவன் என்று மட்டும் எண்ணாதே ! [கடுஞ் சினத்துடன்] கிளியோபாத்ரா முதற் கடற்போரில் என்னை நடுக்கடலில் விட்டுவிட்டு ஓடிப் போனவள் ! மும்முறை வேசி அவள் ! முதற் கணவன் தம்பி டாலமி ! இரண்டாம் கணவர் ஜூலியஸ் சீஸர். மூன்றாவது பதி முதுகெலும்பு ஒடிந்த ஆண்டனி ! அடுத்து அவள் கண்ணோட்டம் அக்டேவியஸ் மீதுள்ளது ! அதனால்தான் நான் தோற்றுப் போனாதாய் எண்ணி என்னைப் போர்க்களத்தில் விட்டுவிட்டு ஓடிப் போய் விட்டாள் ! யாரையும் நான் நம்ப முடியவில்லை ! ராணி உட்பட எகிப்த் நாட்டவர் அனைவரும் வஞ்சகர் ! அவளது வலையில் அடைபட்டுப் போனவன் அப்பாவி ஆண்டனி !

ஸ்காரஸ்: தளபதி இந்த இக்கட்டு நிலைமையிலிருந்து எப்படித் தப்புவது என்று நாம் முதலில் திட்ட மிடுவோம். இல்லாவிட்டால் நாமெல்லாரும் அக்டேவியஸால் கொல்லப் படுவோம்.

ஆண்டனி: அதிர்ஷ்டம் ஆண்டனியை விட்டுப் போய் நாட்கள் ஆகிவிட்டன. மரணத்தின் நிழல் என்னைத் தொடர ஆரம்பித்து விட்டது. நான் எனது நிழலை அழிக்க முனைகிறேன். நான் அழிந்த பின் அது என்னைத் தொடராது ! என்மீது கிளியோபாத்ராவுக்கு நம்பிக்கை போய்விட்டது. நானினி வெல்ல மாட்டேன் என்றவள் உள்ளத்திலே வேரூன்றி விட்டது. அவர் பார்வை எல்லாம் இப்போது அக்டேவியஸ் மீது விழுந்து விட்டது. நான் எப்போது வீழ்ந்து மடிவேன் என்று நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறாள்.

[அப்போது கிளியோபாத்ரா பெல்லோடோரஸ், கடற்படைத் தளபதி சூழ வருகிறாள்]

கிளியோபாத்ரா: [ஆச்சரியமாக ஆண்டனியை நோக்கி] ஏன் என்னினிய நேசர் ஆண்டனி ஒரு மாதிரி பேசுகிறார் ? என்ன நிகழ்ந்து விட்டது இப்போது ? ஈதோ என் கடற்படைத் தளபதி ! உங்கள் போர்த் திட்டத்தை அவரிடம் விளக்கிக் கூறுங்கள்.

ஆண்டனி: [சற்று கடுமையாக] கிளியோபாத்ரா ! உன்னினிய நேசன் நானில்லை ! அந்தக் காலம் போய்விட்டது. உனக்கொரு புது நேசன் உன்னை ஆட்கொள்ளக் காத்திருக்கிறான். என் வாழ்வு சீஸர் போல் முடியப் போகிறது. கண்ணே கிளியோபாத்ரா ! என்னுயிரைப் போக்க அக்டேவியஸ் தன் வாளைக் கூர்மைப் படுத்திக் கொண்டிருக்கிறான். என் கதை முடியும் ! உன் கதை தொடரும் ! கவலைப் படாதே ! உன்னை மீண்டும் எகிப்த் ராணியாக்கி முடி சூட்டி வைப்பான் அக்டேவியஸ் ! உன் காதல் வரிகளை இனி நீ அவனுக்குப் பாடிப் பரவசப்படுத்து ! ஒழிந்து போ கிளியோபாத்ரா ! நானினி உன் நேசனில்லை ! மோசடியில் மூழ்கி வரும் மூடன் நான் ! நீயோ உன் கடற்படையோ இனி என்னைப் பாதுகாக்க முடியாது. போ கிளியோபாத்ரா போ ! என் முன் நிற்காதே ! [கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறான்]

கிளியோபாத்ரா: [மனம் நொந்து] ஏனிப்படி என்னை அவமானப் படுத்துகிறீர் ஆண்டனி ! இனிதாகப் பேசும் உங்கள் நாக்கு இன்று நஞ்சாகக் கொட்டுகிறதே ஏன் ? ஏன் ? ஏன் ? அப்பாவி ராணியைத் தப்பாகப் பேச எப்படித் துணிந்தீர் ? அத்தனை கீழாகப் பேச நான் என்ன தவறிழைத்தேன் ஆண்டனி ? என்னை ஏன் வெறுக்கிறீர் ? உங்களைத் தவிர எவரையும் நான் மனதில் நினைத்ததில்லை ! அக்டேவியஸ் உங்களுக்கு மட்டும் பகைவன் அல்லன். எனக்கும் பகைவனே ! அந்தப் பொடியனையா நான் நேசிப்பேன் ?

[கிளியோபாத்ரா அழுகிறாள்]

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

9. Shakespeare’s Antony & Cleopatra Edited By: David Bevington [1988]

10 Shakespeare’s Antony & Cleopatra Edited By: M.R. Ridly [1993]

11 Life of Antony & Fulvia Wikipedia the Free Encyclopedia [http://en.wikipedia.org/wiki/Fulvia]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (June 20, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 5

This entry is part [part not set] of 29 in the series 20070614_Issue

சி. ஜெயபாரதன், கனடா

போ ஈராஸ் போ ! கொண்டுபோ !
இந்த சொத்துக்களை எடுத்து,
எனோபர் பஸ்ஸிடம் கொடுத்திடு.
கையெழுத் திடுவேன். வாழ்த்தைத் தெரிவித்திடு.
தலைவரை மாற்றிக் கொள்ள, அந்தோ,
அவருக்குக் காரணங்கள் கிடைக்குமா !
உத்தமர் உள்ளத்தைச் சீரழிக்கும்
என் அதிர்ஷ்ட வினைகள் ! போ ஈராஸ் ! (ஆண்டனி)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

பாதகன் பூமியில் நானொருவன் மட்டுமே
வேதனை அடைவது நானொருவன் மட்டுமே,
எத்தகைப் பரிவு கொண்டவர் ஆண்டனி ?
வெடித்திடும் என் மனது ! …. (எனோபர்பஸ்)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

விரட்டி அடித்தோம் அவன் கூடாரத் துக்கு !
அறியட்டும் ராணி நமது அதிசயச் செயலை !
நாளை சூரிய உதயம் நமைக் காணும்முன்
இன்று வெளிவரும் குருதியைத் தெளிப்போம் !
என் நன்றி உமக்கு, உம்தீரச் செயலுக்கு,
உம் மனைவியர் ஆனந்தக் கண்ணீர்
உமது குருதியைக் கழுவிட
உரைப்பீர் அடைந்த வெற்றியை ! …. (ஆண்டனி)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்

நாடகப் பாத்திரங்கள்:
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கிளியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்

ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ்: ரோமின் மூன்றாம் தளபதி
எனோபர்பாஸ்: ஆண்டனியின் ஆலோசகன், பாதுகாவலன்
கானிடியஸ்: ஆண்டனியின் போர்த் தளபதி
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
•பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன், இளைய பாம்ப்பி)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)

கிளியோபாத்ரா
அங்கம்: 8 காட்சி: 5

ரோமா புரியின் நிலைமை: •பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி •புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள். எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனியை மைத்துனன் ஆக்கிக் கொள்கிறான். திருமணத்தைக் கேள்விப்பட்ட கிளியோபாத்ரா வெகுண்டெழுகிறாள். ஆண்டனி எகிப்துக்கு மீண்டு மனைவியை மறந்து கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்து மயங்கிக் கிடக்கிறான். ஆண்டனியைத் தண்டிக்க அக்டேவியஸ் ரோமானியப் படையுடன் ஆக்டியக் கடற் பகுதியில் போரிட்டு வெற்றி அடைகிறான். தோற்றுப் போன ஆண்டனி ஆக்டேவியஸ் தூதரை விட்டு அனுப்பிய நிபந்தனைகளில் கையொப்பமிடுகிறான். ஆயினும் இருவருக்குள்ளும் நிரந்தரப் பகை உண்டாகி, ஆண்டனி எகிப்தில் அடைபட்டுப் போகிறான். அவனைக் கைது செய்ய அக்டேவியஸ் எகிப்துக்குத் துரத்திச் செல்கிறான்.

++++++++++++++++++

கிளியோபாத்ரா
அங்கம்: 8 காட்சி: 5

நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் அரண்மனை. மாலை வேளை.

நாடகப் பாத்திரங்கள்: ஆண்டனி, ஈராஸ், கிளியோபாத்ரா மற்றும் ஆண்டனியிக்குக் கீழிருக்கும் ரோமானியப் படையினர்.

காட்சி அமைப்பு: தளப்போரில் வெற்றி பெற்று, அக்டேவியஸை விரட்டிய ஆண்டனி மகிழ்ச்சியில் அங்குமிங்கும் குதித்து உல்லாசமாகப் படைவீரரிடம் பேசிக் கொண்டுள்ளார். அப்போது கிளியோபாத்ரா நுழைகிறாள்.

ஆண்டனி: ஈராஸ் ! ஈராஸ் ! நமது வெற்றியைக் கொண்டாட வேண்டும் நாமெல்லாம். முதலில் மகாராணிக்குச் சொல் நமது பராக்கிரமச் செயலை ! அக்டேவியஸ் குதிரை என்ன வேகாய் ஓடியது கூடாரத்தைத் தேடி ! பொடியன் அக்டேவியஸ் குதிரை ஏறப் பழகியது நேற்று ! சிறுவன் அக்டேவியஸ் வாளேந்தக் கற்றது நேற்று. யாரென்று நினைத்தான் என்னை அந்தப் போக்கிரி ! அவன் அப்பாவித் தங்கையை விற்று என்னை எளிதாக விலைக்கு வாங்கி விடாலாம் என்று கனாக் கண்டவன் !

[ஆண்டனிக்கும் அவரது படை வீரருக்கும் சேடிகள் மதுபானம் அளிக்கிறார்.]

ஈராஸ்: இதோ போகிறேன் தளபதி ! பாருங்கள், அதோ மகாராணியே செய்தி அறிந்து ஓடி வருகிறார்.

[கிளியோபாத்ரா உள்ளே நுழைகிறாள்]

ஆண்டனி: [மகிழ்ச்சியுடன் மதுவைக் குடித்தபடி] கண்ணே கிளியோபாத்ரா ! கேட்டாயா செய்தியை ? அற்பன் அக்டேவியஸை அடித்துத் துரத்தி விட்டேன் அவனது கூடாரத்துக்கு. தளப்போரில் நான் வீரன் என்பது அவனுக்குத் தெரியாது. எகிப்தில் கால்வைக்க அக்டேவியஸ் இனிச் சிந்திப்பான். [குதித்துக் கொண்டு] எங்கே உன் ஆட்டக்காரிகளை என்முன் ஆடவிடு ! அவரது அழகிய உடம்புகளை கண்முன் ஓடவிடு ! அறுசுவை விருந்தை என் படை வீரருக்குப் படைத்திடு. கிளியோபாத்ரா ! வா என்னருகில் வந்து அமர்ந்திடு ! உனது காந்த விழிகளில் என்னை விழுங்கிடு. உன் மேனியின் கனலில் என்னைச் எரித்துச் சாம்பலாக்கு..

கிளியோபாத்ரா: [புன்னகை மின்ன] சார்மியான் ! போ நாட்டியக்காரிகளை அழைத்துவா ! வாத்தியக் கலைஞரை அழைத்துவா ! ரோமானியப் படைக்குப் பெரு விருந்தை அளித்திடு ! போ, [ஆண்டனியைப் பார்த்து] உங்கள் வீரப் படைக்கு மட்டும் விருந்தளிப்புப் போதுமா ? வெற்றிப் பாதையில் செலுத்திய வீரத் தளபதிக்கு எப்படி விருந்தளிக்க வேண்டும் கிளியோபாத்ரா ? சொல்வீர் ஆண்டனி ! இத்தகைய பூரிப்பு பொங்க உங்களை நான் இதுவரைக் கண்டதில்லை.

ஆண்டனி: [படை வீரரைப் பார்த்து] நாளை சூரிய உதயத்தை நீங்கள் காணும் முன்பு இன்று வெளியேறிய குருதியை எகிப்தின் மண்ணிலே தெளிப்பீர். எனது நன்றி உமக்கு. எனது நன்றி உமது தீரச் செயலுக்கு. என்னைப் போலவே நீவீர் யாவரும் போரிட்டீர். நகரத்துள் சென்று உங்கள் மனைவியரைத் தழுவிக் கொள்வீர். அவர்கள் விடும் ஆனந்தக் கண்ணீர் உங்கள் குருதியைக் கழுவட்டும் ! அப்போது உமது வீரச் செயல்களைப் பூரிப்புடன் அவரது செவிகளில் உரைப்பீர். [படைவீரர் போகிறார்கள்] [கிளியோபாத்ராவை நெருங்கி] கண்ணே கிளியோபாத்ரா ! வா, அருகில் வா. உன் மலர்க் கரங்களால் என் கழுத்தைச் சுற்றி அணைத்துக் கொள். என் வேர்வைத் துளிகள் உன் அணைப்புக் கனலில் ஆவியாகட்டும். உன்னினிய முத்தங்களால் என் போர்ப் புண்களின் வேதனையைப் போக்கிவிடு ! கொந்தளிக்கும் என்னிதயத் துடிப்புகளை உன் கனிவு நெருக்கம் தணித்துக் குறைக்கட்டும் [கிளியோபாத்ராவை அணைத்துக் கொள்கிறான்]

கிளியோபாத்ரா: [அணைப்பிலிருந்து விடுவித்துக் கொண்டு] பிரபுக்களின் அதிபதியே ! மேன்மை மிக்க ஆண்டனி ! எகிப்து ராணியின் பாராட்டுகள். கடல் முதலையைக் களத்தில் போட்டு மிதித்ததற்கு மெச்சுகிறேன். ஐயமின்றி நீவீர் தளப்போர் தளபதியே ! பெருமைப்படுகிறேன் பாராக்கிரமப் பிரபு !

ஆண்டனி: என்னிதயக் குயிலே ! உன்னினிய பாராட்டுகள் எல்லாம் பேரீச்சம் பழமாய்ச் சுவை அளிக்கின்றன. நானின்று பெற்ற வெற்றிக்கு நீதான் காரணம் ! நீ எனக்கு ஊக்க மது அளிப்பதுதான் காரணம். நீ என் நெஞ்சுக்குக் கனல் மூட்டுவதுதான் காரணம் ! எகிப்து ராணி எனக்கும் ராணியே ! நான் உன் தலைவனா ? இல்லை ! நான் உன் அடிமை ! யாருக்கும் அடங்காத இந்த ஆண்டனி, உன் கண்ணசைவுக்குக் கட்டுப்பட்ட வேங்கை ! பெண்டிரை எல்லாம் மிஞ்சிய நீதான் என் தேவதை ! [மண்டியிட்டு மரியாதை செலுத்துகிறான்]

கிளியோபாத்ரா: [புன்னகை பூண்டு] யாரும் எனக்கு இத்தகைய உன்னத மதிப்பளித்ததில்லை ! மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் பிறந்தவள் நான் ! மாவீரர் ஜூலியஸ் சீஸர் மரபிலே உதித்தவர் நீவீர் ! அந்த சீஸர் கூட என்னைத் தேவதையாய்ப் போற்ற வில்லை. வீரர்தான் வீராங்கனையைப் பாராட்டுவார், போற்றுவார், வணங்குவார், வழிபடுவார். அதுபோல் உங்களை நானும் மதிக்கிறேன், துதிக்கிறேன்,

ஆண்டனி: கிளியோபாத்ரா ! சீஸர் உன்னைக் காதலிக்க வில்லை, தெரியுமா ? சீஸர் உன்னை மணந்து கொண்டது உன் மீதிருந்த காதலால் என்று எண்ணாதே ! அது ஓர் அரசியல் திருமணம் ! எகிப்துக்கும், ரோமுக்கும் நடந்த கலப்புத் திருமணம் ! காதல் திருமணமாக நினைத்துக் கனவு காணாதே ! போர் வீரர் சீஸருக்கு வாள்மீதுதான் காதல் ! வனிதையர் மீது எழுவது காதலில்லை, அது காமம் ! காதல் வளர்ச்சி பெறுவது ! பின்னால் தளர்ச்சி அடைவது ! காமம் ஒரு கனல் பொறி! கணப் பொழுதில் தூண்டப்பட்டு மறைந்து போவது. நீயெனக்கு ஒரு காதல் சுடரொளி ! அணைந்து போகாத விண்ணொளி !

கிளியோபாத்ரா: [பூரித்துப் போய்] இந்தச் சுடர் விளக்கிற்கு ஒளி ஏற்றிய சூரியன்தான் ஆண்டனி ! சீஸர் செத்தபின் அணைந்து போன இந்த விளக்கில் ஒளியைத் தூண்டி விட்டவர் ஆண்டனி ! அதை என்றைக்கும் அணையா ஒளியாய் ஆக்கி வைப்பவரும் ஆண்டனி ஒருவரே. ஆனால் வெற்றி வாடாத மலரில்லை. விழித்திருக்க வேண்டும் நாமெல்லாம் ! தோல்விப் புண் ஆறியதும் மீண்டும் ஓநாய்கள் விரட்ட வந்துவிடும்.

ஆண்டனி: கண்ணே கிளியோபாத்ரா ! எனக்குப் புத்துயிர் அளிப்பவை உன் காதல் விழிகள் ! எனக்கினித் தோல்வியே கிடையாது. ஆனால் தோல்விப் போர்வைக்குள் தூங்காமல் விழித்திருக்கும் அக்டேவியஸ்
மீண்டும் எழுந்து வருவான். பன்மடங்கு போர்ப் படைகளைத் திரட்டிக் கொண்டு அடுத்தும் வருவான் ! எனக்குத் தெரியும் கிளியோபாத்ரா ! ஆயினும் நினைவூட்டிய உனக்கு நான் நன்றி கூறுகிறேன்.

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

9. Shakespeare’s Antony & Cleopatra Edited By: David Bevington [1988]

10 Shakespeare’s Antony & Cleopatra Edited By: M.R. Ridly [1993]

11 Life of Antony & Fulvia Wikipedia the Free Encyclopedia [http://en.wikipedia.org/wiki/Fulvia]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (June 12, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 4

This entry is part [part not set] of 32 in the series 20070607_Issue

சி. ஜெயபாரதன், கனடா

வா, அருகில் வா அந்த வாளைக் கொடு !
விடை பெறுகிறேன், கண்மணியே
விடை கொடு எனக்கு !
நடக்கப் போவது என்ன வாயினும்,
படை வீரன் நான்தரும் முத்தம் உனக்கு,
இகழத் தக்கது வரட்டு வாழ்த்துதான்,
இரும்புக் கவச உடை யோடு
உன்னை விட்டு நான் அகல்கிறேன்
போரிடும் நீயும் என் பின்னே வந்திடு … (ஆண்டனி)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

நானொரு வஞ்சகன் இந்த மண்ணிலே !
வீணாய் மனது அடித்துக் கொள்ளுது !
அந்தோ ஆண்டனி !
எத்தகை ஊதியம் என்பணிக் களித்தாய்,
பொன் மகுடம் சூட்ட உனக்கு ?
என்னிதயம் நொறுங்கிடும், ஆயினும்.
உன்னை எதிர்த்துப் போரிடேன் நானினி.
ஒரு புதைகுழி தேடுவேன்
என்னுடலை மூடிட,
இறுதிக் காலம் கேவல மானது ! [எனோபர்பஸ்]

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்

நாடகப் பாத்திரங்கள்:
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கிளியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்

ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ்: ரோமின் மூன்றாம் தளபதி
எனோபர்பாஸ்: ஆண்டனியின் ஆலோசகன், பாதுகாவலன்
கானிடியஸ்: ஆண்டனியின் போர்த் தளபதி
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
•பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன், இளைய பாம்ப்பி)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)

கிளியோபாத்ரா
அங்கம்: 8 காட்சி: 4

ரோமா புரியின் நிலைமை: •பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி •புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள். எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனியை மைத்துனன் ஆக்கிக் கொள்கிறான். திருமணத்தைக் கேள்விப்பட்ட கிளியோபாத்ரா வெகுண்டெழுகிறாள். ஆண்டனி எகிப்துக்கு மீண்டு மனைவியை மறந்து கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்து மயங்கிக் கிடக்கிறான். ஆண்டனியைத் தண்டிக்க அக்டேவியஸ் ரோமானியப் படையுடன் ஆக்டியக் கடற் பகுதியில் போரிட்டு வெற்றி அடைகிறான். தோற்றுப் போன ஆண்டனி ஆக்டேவியஸ் தூதரை விட்டு அனுப்பிய நிபந்தனைகளில் கையொப்பமிடுகிறான். ஆயினும் இருவருக்குள்ளும் நிரந்தரப் பகை உண்டாகி, ஆண்டனி எகிப்தில் அடைபட்டுப் போகிறான். அவனைக் கைது செய்ய அக்டேவியஸ் எகிப்துக்குத் துரத்திச் செல்கிறான்.

++++++++++++++++++

கிளியோபாத்ரா
அங்கம்: 8 காட்சி: 4

நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் அரண்மனைக்கு வெளியே ஓரிடம். இரவு வேளை.

நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, அண்டனி, ஈராஸ் மற்றும் ஆண்டனியிக்குக் கீழிருக்கும் ரோமானியப் படையினர்.

காட்சி அமைப்பு: ஆண்டனியின் போர்க் கூடாரங்கள். ரோமானியப் படையினர் கூட்டமாகப் பேசிக் கொண்டிருக்கிறார். வேறிடத்தில் ஆண்டனி போருக்குத் தயாராகிறான்.

முதல் சேனாபதி: போய் வா, நல்லது இன்று நாம் உயிரோடிருக்கிறோம். நாளைக்கு மறுபடியும் போர். நாமெல்லாம் இதே வேளையில் நாளை உயிருடன் இருப்போமா என்பதை அறியோம். போய்த் தூங்கு ! பொல்லாத கனவுகள் வந்தால் என்னைத் திட்டாதே ! நல்ல கனவுகள் வந்தால் என்னைப் பாராட்டு. நாளைப் போரில் நீ பிழைத்தால் அது மறுபிறப்பாய் எண்ணிக்கொள். போய்வா.

இரண்டாவது சேனாபதி: [போகாமல் நின்று] யுத்தகளம் நமக்குச் செத்தகளம் ! போனவர் மீளார் ! மீண்டவர் வாழார் ! யுத்தகளம் படைக்கு ஒருபோக்குப் பாதை !

முதல் சேனாபதி: சேதி கேட்டாயா? நமது தளபதி எனோபர்பஸ் ஆண்டனியை விட்டுவிட்டு அக்டேவியஸிடம் சேர்ந்து கொண்டார்! நம்மை நடத்திச் செல்ல நமக்கு இப்போது யார் போர்த் தளபதி ?

இரண்டாம் சேனாபதி: என்ன ? என்னால் நம்ப முடியவில்லையே ! எனோபர்பஸ் பகைவருடன் சேர்ந்து கொண்டாரா? அது ராஜ துரோகம் ஆயிற்றே ! ஆண்டனிக்குச் செய்யும் வஞ்சகம். போர் நடுவே தோளுக்குத் தோள் கொடுத்துப் போரிட்ட நம்மை யெல்லாம் விட்டுப் போய்விட்டாரா? புதுத் தளபதி வேறு யாராக இருக்க முடியும் ? தளபதி ஆண்டனி ஒருவர்தான் அதற்குத் தகுதி உடையவர்.

முதல் சேனாபதி: என்னுடைய அச்சம் மிகையானது. ஆண்டனி வணங்கிவரும் தெய்வம் ஹெர்குலிஸ் அவரை விட்டு நீங்கிச் செல்வதாக உணர்கிறேன்.

[ஆண்டனி, கிளியோபாத்ரா, ஈராஸ், சார்மியான் நுழைகிறார்கள்]

ஆண்டனி: [ஆங்காரமாக] ஈராஸ் ! கொண்டுவா எனது போர்க் கவசவ உடைகளை ! எங்கே என் உடைவாள் ? எடுத்துவா அதனையும் ! சீக்கிரம் !

கிளியோபாத்ரா: [கவலையுடன் நெருங்கி] இந்த அகால வேளையிலா போருக்குப் போக வேண்டும் ? சிறிது நேரம் தூங்கி அதிகாலையில் போரைத் துவக்கலாமே !

ஆண்டனி: எனக்கு இன்று தூக்கம் வராது ! திடீரென்று அக்டேவியஸைத் தாக்க வேண்டும். இரவு முழுதும் விழித்திருப்பதை விடப் போரிட்டு அக்டேவியஸின் மார்பைக் கிழிக்கலாம் ! ஒன்று அவன் சாக வேண்டும் அல்லது நான் சாக வேண்டும், கிளியோபாத்ரா, நாங்கள் இருவரும் இனிமேல் தனித்தனியாக வாழ முடியாது என்றாகி விட்டது. உன்னைப் பிரியப் போகும் காலம் வந்து விட்டது. ஆனால் நான் அத்தனை எளிதாய் உன்னை விட்டுப் பிரிய மாட்டேன். அழாதே கிளியோபாத்ரா [கண்ணீரைத் துடைக்கிறான்]

[ஈராஸ் போர்க் கவசங்களைக் கொண்டு வருகிறான். கிளியோபாத்ராவும், ஈராசும் ஆண்டனிக்குக் கவசம் அணிகிறார்கள்]

கிளியோபாத்ரா: ஆண்டனி, இந்த முறை தளப்போர்தானே நடக்கப் போகிறது ? கடற் போரென்றால் இரவில் நடத்த முடியாதே. நீங்கள் தளப்போர் வீரராயிற்றே. வெற்றி உங்களுக்கே !

ஆண்டனி: ஆம் இம்முறை தரைப்போருக்குத்தான் தயார் செய்கிறோம். ஆம் வெற்றி எனக்குத்தான், கிளியோபாத்ரா. ஈராஸ் ! ஈராஸ் ! எங்கே எனோபர்பஸ் ? என்னருகில் சில மணிநேரத்துக்கு முன் இருந்தாரே. கூப்பிடு அவரை.

[அப்போது படைவீரன் ஒருவன் விரைவாகக் கையில் கடிதமுடன் வருகிறான்]

படைவீரன்: [வந்தனம் செய்து] வந்தனம் தளபதி ! எனோபர்பஸ் கடிதம் இது. [கையில் கொடுக்கிறான்]

ஆண்டனி: [கடிதத்தைப் படித்துக் கோபத்துடன்] கிளியோபாத்ரா ! எனது வலது கை போய் விட்டது. எனோபர்பஸ் என்னைப் புறக்கணித்துப் போய்விட்டான். அக்டேவியஸ் படையுடன் சேர்ந்து கொண்டாராம். என்ன வஞ்சகச் செயல் இது ? வஞ்சகம் மட்டுமில்லை ! என்னைக் கொல்லச் செய்த சதி ! நானென்ன தவறு செய்தேன் ? அக்டேவியஸ் செய்த சூழ்ச்சியா ? அல்லது எனோபர்பஸ் செய்த தந்திரமா ? என்னைக் கைப்பற்ற என் தளபதியே தயாராகி விட்டானா ? அக்டேவியஸ் பணம் கொடுத்து எனேபர்பஸை வாங்கியதாகத் தெரியுது எனக்கு. கிளியோபாத்ரா ! ஏன் என்னைப் பிடிக்க உன்னைக் கூட விலைக்கு வாங்கி விடுவான் அந்த அயோக்கிய அக்டேவியஸ் !

கிளியோபாத்ரா: [கவலையுடன்] என்னை அப்படி எந்தப் பகைவனும் எளிதாக வாங்கிவிட முடியாது, ஆண்டனி ! .. சரி …. யார் இப்போது போரை முன்னின்று நடத்துவது ?

ஆண்டனி: இந்தப் போர் என்னிறுதிப் போர் ! நான் என்னைக் காப்பாற்றப் போராடும் போர். நான்தான் முன்னிற்பேன் ! நானிருக்கும் போது வேறு யாரும் நடத்தத் தேவை யில்லை. அக்டேவியஸை நேருக்கு நேர் எதிர்க்கும் நேரம் வந்து விட்டது! எங்கள் இருவரில் ஒருவருக்கு முடிவு காலம் நெருங்கி விட்டது. எனொபர்பஸ் என்னை விட்டு நீங்கிய பின் அவனோடு என் பாதி பலம் போனது. இழந்த அந்த பாதிப் பலத்தை நீ எனக்குத் தா ! என்னிழலில் நின்று நீயும் போரிட நேரிடலாம் ! போருனக்குப் புதியதில்லை ! நீ யெனக்கு அருகில் நின்றாலே பலமெனக்குப் பெருகும், கிளியோபாத்ரா !

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

9. Shakespeare’s Antony & Cleopatra Edited By: David Bevington [1988]

10 Shakespeare’s Antony & Cleopatra Edited By: M.R. Ridly [1993]

11 Life of Antony & Fulvia Wikipedia the Free Encyclopedia [http://en.wikipedia.org/wiki/Fulvia]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (June 6, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 3 பாகம்: 1-2)

This entry is part [part not set] of 32 in the series 20070531_Issue

சி. ஜெயபாரதன், கனடா

ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்
(அக்டேவியஸ், ஆண்டனி ஒப்பந்தப் போர்கள் )

(ரோமானிய வீரர்களைப் பார்த்து)
பரிவு காட்டுவீர் எனக்கு இந்த இரவில் !
உங்கள் கடமை நிழலான என்னை
இனிக் காணா திருப்பது !
வேறொரு தலைவருக் குழைக்கச் செல்வீர் !
உங்களைப் பார்த்தால் என்னிட மிருந்து
விடை பெறும் நபராய்த் தெரியு தெனக்கு.
விரட்ட வில்லை இன்றுநான் உங்களை !
மரணம் வரும்வரை கடமையை விட்டுப்
பிரிந்து செல்லேன், பரிவு காட்டுவீர்,
உத்தமப் படை வீரரே!
இரண்டு மணி நேரம் மட்டும்
இன்றைய இரவில் உடனிருப்பீர்
வேறெதுவும் வேண்டேன். (ஆண்டனி)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

ஈதோ இங்குள நான்தான் ஆண்டனி !
மூர்க்கனே,
எனது இந்த தோற்றதை
இனிக் காட்ட இயலாது ஆயினும் !
போர்கள் புரிந்தது நான் எகிப்துக் காக !
எகிப்த் ராணிக்காக ! அவள்
இதயம் கவர்ந்தாய் எண்ணினேன், !
ஏனெனில் அவள்
என்னுளத்தைப் பிடித்துக் கொண்டவள் !
என்னுடைய தாயினும்
அவள் நெஞ்சமதை இழந்தோன்,
அத்துடன் ஆயிரம் ஆயிரம்
நெஞ்சங்களும் இழந்து போயின !
அழாதே கனிவு ஈராஸ் !
நமது முடிவுகளை நாமே முடித்திட
நாமெல்லாம் விடப் பட்டிருக்கிறோம் ! (ஆண்டனி)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

Fig. 1
Defeated Antony walking alone

ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்

நாடகப் பாத்திரங்கள்:
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கிளியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்

ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ்: ரோமின் மூன்றாம் தளபதி
எனோபர்பாஸ்: ஆண்டனியின் ஆலோசகன், பாதுகாவலன்
கானிடியஸ்: ஆண்டனியின் போர்த் தளபதி
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
·பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன், இளைய பாம்ப்பி)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)

கிளியோபாத்ரா
அங்கம்:8 காட்சி:3

ரோமா புரியின் நிலைமை: ·பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி ·புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள். எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனியை மைத்துனன் ஆக்கிக் கொள்கிறான். திருமணத்தைக் கேள்விப்பட்ட கிளியோபாத்ரா வெகுண்டெழுகிறாள். ஆண்டனி எகிப்துக்கு மீண்டு மனைவியை மறந்து கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்து மயங்கிக் கிடக்கிறான். ஆண்டனியைத் தண்டிக்க அக்டேவியஸ் ரோமானியப் படையுடன் ஆக்டியக் கடற் பகுதியில் போரிட்டு வெற்றி அடைகிறான். தோற்றுப் போன ஆண்டனி ஆக்டேவியஸ் தூதரை விட்டு அனுப்பிய நிபந்தனைகளில் கையொப்பமிடுகிறான். ஆயினும் இருவருக்குள்ளும் நிரந்தரப் பகை உண்டாகி, ஆண்டனி எகிப்தில் அடைபட்டுப் போகிறான். அவனைக் கைது செய்ய அக்டேவியஸ் எகிப்துக்குத் துரத்திச் செல்கிறான்.

++++++++++++++++++
Fig. 2
Angry Cleopatra

கிளியோபாத்ரா
அங்கம்: 8 காட்சி: 3 பாகம் -1

நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவுக்கு அருகில் உள்ள ஓரிடத்தில் அக்டேவியஸின் ரோமானியக் கூடாரங்கள், பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்: ரோம் தளப்தி அக்டேவியஸ், அக்கிரிப்பா, மேஸனெஸ், ரோமானியக் காவலர், படைகள்.

காட்சி அமைப்பு: அக்டேவியஸ் தன் கூடாரத்தில் நின்று கொண்டு கடிதம் ஒன்றை வாசிக்கிறான்.

அக்டேவியஸ்: [கோபத்துடன்] மகா பெரிய ஆண்டனி என்னைச் சின்னப் பையா என்று விளித்திருக்கிறார் ! என்ன திமிர் அவருக்கு! சீஸருக்குப் பிறகு ரோமாபுரிக்கு நான்தான் சீஸரின் வாரிசு! துரோகிகள், காஸியஸ், புரூட்டஸ் ஆகியோரைத் தோற்கடித்த தீரன் நான்! ஆண்டனி திட்டமிட்டாலும் முன்னின்று போரிட்டுச் சதிகாரரைச் சரணடைய வைத்தவன் நான். வேசி கிளியோபாத்ரா மடிமேல் தலைவைத்துக் கொண்டு, ஆண்டனி என்னைப் பொடியன் என்று கேலி செய்கிறார். எனது தூதனைச் சவுக்கால் அடித்திருக்கிறார் ஒற்றைக்கு ஒற்றை எனச் சவால் விட்டு எனைச் சண்டைக்கு அழைக்கிறார். வயதான மூர்க்கன் ஆண்டனி அறியட்டும். பலவழிகள் உள்ளன நான் சாவதற்கு! போயும், போயும் அவர் கையில் நான் ஏன் சாக வேண்டும்? எல்லாரும் சிரிக்க வேண்டும் அவரது சவாலைப் பார்த்து!
Fig. 3
Disappointed Cleopatra

மேஸனெஸ்: சிந்திக்க வேண்டும் அக்டேவியஸ்! மகா பெரிய ஆண்டனி அப்படி ஆத்திரமாக உங்களைக் கடிந்தால் அவரை விரட்டி வேட்டையாடுவோம். மூச்சு விட முடியாதபடி அவரை நசுக்க வேண்டும். கோபப்பட வேண்டாம் நீங்கள்! ஆண்டனியைப் பிடித்து உங்கள் காலில் விழ வைக்கிறோம்.

அக்டேவியஸ்: படை வீரர் அனைவருக்கும் தெரியட்டும். நாளை நமது இறுதிப் போர்! நாமெல்லாம் வல்லமையோடு போரிட வேண்டும். நமது படைக்குழுவில் ஆண்டனியிடம் பணிசெய்த வீரர் உள்ளார், நினைவில் இருக்கட்டும். நீங்கள் அவரைப் பின்னால் தள்ளிவிட்டு, ஆண்டனியை முற்றுகை செய்வீர்! உயிரோடு ஆண்டனியைப் பிடித்துக் கொண்டு வாருங்கள்! அக்கிரிப்பா! முதலில் அனைத்து வீரருக்கும் பெரு விருத்து அளித்திடு! வயிறு புடைக்க உண்ணட்டும்! பட்டினிப் படைத் தட்டி விழுந்திடும் என்பது பழமொழி! நடக்கட்டும் நல்விருந்து! நாமும் கலந்து கொள்வோம்.

[எல்லாரும் போகிறார்கள்]

+++++++++++++++++++

கிளியோபாத்ரா
அங்கம்: 8 காட்சி: 3 பாகம் -2

நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் கிளியோபாத்ராவின் அரண்மனை, பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, ஆண்டனி, சார்மியான், ஈராஸ், அலெக்ஸாஸ், போர்த் தளபதி எனோபர்பஸ்,

காட்சி அமைப்பு: தோற்றுப் போன ஆண்டனிக்கும், ரோமாபுரியின் தளபதிக்கு அக்டேவியசுக்கும் பகைமை அதிகரித்து அவரிடையே மறுபடியும் போர் மூளும் பிரச்சனைகள் எழுகின்றன. ஆண்டனி, எனோபர்பஸ் இருவரும் அக்டேவியஸை எதிர்த்து மீண்டும் தளப்போருக்குப் போகத் தயாராகிறார்கள்.

ஆண்டனி: எனோபர்பஸ், என்ன சொன்னாய் ? அக்டேவியஸ் என்னுடன் ஏன் போரிட வரமாட்டான்?

எனோபர்பஸ்: அவரினி உங்களுடன் போரிட மாட்டார்.

ஆண்டனி: ஏன் போரிடப் போவதில்லை?

எனோபர்பஸ்: அக்டேவியஸ் உங்களை விடத் தன்னிடம் இருபது மடங்கு படைப்பலம் உள்ளதாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறார். உங்களிடம் உள்ள ஒவ்வொரு ரோமானிய வீரனுக்கும் அவரிடம் இருபது போர் வீரர் இருக்கிறாராம்.

ஆண்டனி: திடீரென நாம் தாக்க வேண்டும். நாளைக்கே நாம் போருக்கு போவோம். கடற் போராயினும் சரி, தளப் போராயினும் சரி, நான் தயார். அல்லாவிடில் நான் உயிர்வாழ்ந்து என் குருதியிலே குளித்துச் செத்து விடுவேன். எகிப்து ரோமானியருக்கும், இத்தாலிய ரோமானியருக்கும் நடக்கும் போரில் நீ என்னுடன் சேர்ந்து போரிடுவாயா? இறுதிவரை சேர்ந்து போர் புரிவாயா?

எனோபர்பஸ்: நிச்சயம் சேர்ந்து போரிடுவேன். ஏனப்படிக் கேட்கிறீர்? உமக்காகப் போரிட்டு என்னுயிரை இழக்கத் தயார். ஆனால் முடிவில் மடிபவர் அனைவரும் ரோமானியர்! ரோமானியரே ரோமானியரைக் கொல்லும் ரோமானிப் போர்! எந்த ரோமானியன் யார் பக்கம் சேர்வதென்று எங்களிடையே குழப்பம் உண்டாகி விட்டது, ஆண்டனி! நானே குழம்பிக் போயுள்ளேன்.

[அப்போது காயப்பட்டு நொண்டிக் கொண்டு நான்கு படைவீரர் நுழைகிறார்)
Fig. 4
The Collapsed Antony

ஆண்டனி: [எழுந்து வரவேற்று கைகுலுக்கக் கையை நீட்டி] கொடுங்கள் உமது கரங்களை. உத்தரவுக்குப் பணிந்து மெய்வருத்திப் போரிட்ட நீவீர் யாவரும் உத்தமர். செம்மையாகப் போரிட்டீர். புகழ் பெற்றீர். ஆனால் நீங்கள் தோற்றது என்னால். தவறு என்மீதுதான். கடற்போர் வேண்டமென என்னைத் தடுத்த போர் ஆலோசகரை எல்லாம் புறக்கணித்தேன். உன்னத வீரர் நீவீர்! உமக்குத் தலை வணங்குகிறேன்! உம்மைப் போல் ஓராயிரம் வீரர் இருந்தால் போதும்.

கிளியோபாத்ரா: (எனோபர்பசுடன் மெதுவாகப் பேசி) ஈதென்ன பேசுகிறார் ஆண்டனி? எனக்கொன்றும் புரிய வில்லையே. படைவீரருடன் என்ன பரிவாகப் பேசுகிறார்?

எனோபர்பஸ்: [மெதுவாக] இது பழைய சாதுரியம் ! மன வேதனையில் கொட்டும் சோக வரிகள்! உண்மையான ஆண்டனி மாதிரி அவர் பேசவில்லை.

ஆண்டனி: [சோகக் கண்ணீருடன்] சேனை வீரர்களே ! நீவீர் உண்மையாய்ப் போரிட்ட வீரர்கள்! தீரர்கள்! உத்தமர்கள்! ஆனால் நீங்கிச் செல்வீர் என்னை விட்டு! என் ஆதிக்கம் முடிவடைந்தது! வேறொரு தளபதிக்கு வேலை செய்யப் போவீர்! உங்கள் கண் என்னை நோக்கினாலும், உங்கள் கால்கள் உங்களை வாசலுக்குத் திருப்புகின்றன! நீங்கிச் செல்வீர் என்னை விட்டு! மரணம் வரும்வரை என் வாள் உயிருடன் என் கரத்தில் நிற்கும். என்னைக் காப்பதினி உங்கள் பொறுப்பில்லை! நீங்கிச் செல்வீர்! நான் என்னைக் காப்பாற்றிக் கொள்கிறேன்.

எனோபர்பஸ்: [வெறுப்புடன்] போதும், போதும் ஆண்டனி! போர் வீரர் விழிகளில் கண்ணீர் விழுவதைப் பாருங்கள்! ஆடவரைப் பெண்களாய் மாற்றிக் கோழைகளாய் அழவிடாதீர்!

ஆண்டனி: என் கண்ணில் நீர் வடிந்தால், அவர் கண்ணிலும் நீர் வழியும்! ஆண்டனி அழவில்லை! தோற்காத ஆண்மை வீரன் ஆண்டனி அன்றே செத்து விட்டான்! பிழைத்திருக்கும் இந்த ஆண்டனி அவனுடைய நிழல். கோழை ரோமன்! ஆன்மா பறந்துபோய் வெற்றுக் கூடாக உலவி வரும் நான் உண்மையாக ஆண்டனி அல்லன். நீங்கிச் செல்வீர் என்னை விட்டு!
Fig. 5
Cleopatra in her Ship

கிளியோபாத்ரா: [கோபமாக] அப்படிச் சொல்லாதீர் ஆண்டனி! ரோமானியச் சேனை நமக்குத் தேவை. தோற்றுக் கீழே விழுவது தவறாகாது. ஆனால் விழுந்து கிடப்பவர் எழுந்து நிற்காதுதான் தவறு. எழுந்து நில் ஆண்டனி! நிமிர்ந்து செல் ஆண்டனி! போரிட்டு வெல் ஆண்டனி! இன்னும் சூரியன் அத்தமிக்க வில்லை! நானிருக்கிறேன் உமக்கு! எகிப்த் படை உள்ளது உங்கள் உதவிக்கு.

ஆண்டனி: கிளியோபாத்ரா! போதும் உன் உதவி! ஆனால் போதாது உன் உதவி! உன்னுரைகள் உறுதி அளித்த அந்த ஆண்டனி உன்முன் னில்லை ! அவன் ஆக்டியம் கடற்போரில் என்றோ மூழ்கி விட்டான். மீண்டும் எழ முடியாத ஆழத்தில் அடங்கி விட்டான்! உன் காதல் மூச்சு அவனை உயிர்ப்பித்து எழுப்பாது! உங்கள் பிரமிட் கோபுரத்தில் எனக்கு ஓரிடம் ஒதுக்கு! மன்னனில்லாத ரோமானியனை பிரமிட் கோபுரம் ஏற்றுக் கொள்ளுமா?

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

9. Shakespeare’s Antony & Cleopatra Edited By: David Bevington [1988]

10 Shakespeare’s Antony & Cleopatra Edited By: M.R. Ridly [1993]

11 Life of Antony & Fulvia Wikipedia the Free Encyclopedia [http://en.wikipedia.org/wiki/Fulvia]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (May 30, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்: 8 காட்சி: 2 பாகம்: 2)

This entry is part [part not set] of 31 in the series 20070524_Issue

சி. ஜெயபாரதன், கனடா

என் செவிகள் கேளா, ஆண்டனி இச்சைகளை
ஏற்றுக் கொள்வேன் எகிப்தரசி வேண்டுகோள்
அவமானப் பட்ட ஆண்டனியை விரட்ட வேண்டும்
அன்றி அவனைக் கொன்றிட வேண்டும்
அப்படிச் செய்தால் மன்னிப் பளிப்பேன்!
அதுவே என்பதில் அவரிருவ ருக்கும். (அக்டேவியஸ் அம்பாசிடரிடம் கூறியது)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

வாக்குத் திறமை காட்டும் தருண மிதுதான்!
கிளியோ பாத்ராவைக் கவர்ந்து பிரித்திடு அவனை!
பெருத்த அதிர்ஷ்டம் மாதர் உறுதி கலைத்திடும்!
விருப்புடன் முயன்றிடு! தந்திரம் கைக்கொள்!
நமது சட்ட மூலம் பதில் அளிப்போம். ……
காண்பாய் நீயே! தனது தவறுக்குள்
ஆண்டனி குப்புற வீழ்வதை!
அவரது மோகம் அவர் நடத்தையில் காணும்! …. (அக்டேவியஸ்)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

கனிவுத் தூதனே! அக்டே வியஸிடம் சொல்லிடு
வெற்றிக் கையை முத்தமிடு கிறேன்!
பொற் கிரீடமதை அவர் பாதத்தில் வைப்பேன்!
மண்டி யிடுவேன்! உரைத்திடு அவரிடம்,
முழு மூச்சாய் அவர் கட்டளை முழக்கும்,
முடிவுக் காலம் எகிப்தில் நெருங்கு தென்று! (கிளியோபாத்ரா)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்

நாடகப் பாத்திரங்கள்:
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கிளியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்

ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ்: ரோமின் மூன்றாம் தளபதி
எனோபர்பாஸ்: ஆண்டனியின் ஆலோசகன், பாதுகாவலன்
கானிடியஸ்: ஆண்டனியின் போர்த் தளபதி
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
•பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன், இளைய பாம்ப்பி)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)

கிளியோபாத்ரா
அங்கம்:8 காட்சி:2 பாகம்:2

ரோமா புரியின் நிலைமை: •பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி •புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள். எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனியை மைத்துனன் ஆக்கிக் கொள்கிறான். திருமணத்தைக் கேள்விப்பட்ட கிளியோபாத்ரா வெகுண்டெழுகிறாள். ஆண்டனி எகிப்துக்கு மீண்டு மனைவியை மறந்து கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்து மயங்கிக் கிடக்கிறான். ஆண்டனியைத் தண்டிக்க அக்டேவியஸ் ரோமானியப் படையுடன் ஆக்டியக் கடற் பகுதியில் போரிட்டு வெற்றி அடைகிறான். தோற்றுப் போன ஆண்டனிக்கு ஆக்டேவியஸ் தூதரை அனுப்பி நிபந்தனைகளில் கையொப்பமிடச் சொல்கிறான்.

++++++++++++++++++

கிளியோபாத்ரா
அங்கம்: 8 காட்சி: 2 பாகம்: 2

நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் கிளியோபாத்ராவின் அரண்மனை, பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, சார்மியான், ஈராஸ், ஆண்டனி, போர்த் தளபதி எனோபர்பஸ், அக்டேவியஸின் அம்பாசிடர், தூதுவன் திடயாஸ்.

காட்சி அமைப்பு: கிளியோபாத்ரா ஆண்டனியின் போர்த் தளபதியுடன் வாதாடுகிறாள். ஆக்டியப் போரில் வெற்றி பெற்ற அக்டேவியஸ் நிபந்தனைகளை நிறைவேற்ற தனது அம்பாசிடரை எகிப்துக்கு அனுப்புகிறான். அந்த நிபந்தனைகள் ஆண்டனி, கிளியோபாத்ரா இருவரையும் பெருமளவில் பாதிக்கின்றன.

ஆண்டனி: [கோபத்துடன்] திடயாஸ், மடையா ! உன்னைச் சவுக்கால் அடிக்க வேண்டும்! உன் வாயைக் கிழிக்க வேண்டும். அந்தச் சிறுவன் அக்டேவியஸ் ஆத்திரத்தில் கொட்டிய வார்த்தைகளை என்னிடம் முதலில் சொல்லாமல், எப்படி நீ மகாராணியிடம் கூறலாம் ? என்னை அவமதித்து எகிப்த் ராணியையும் எப்படி நீ அவமதிக்கலாம்? யாரங்கே ? இழுத்துச் செல்லுங்கள் இவனை, சவுக்கால் அடித்து இரத்தம் சொட்டுச் சொட்டாய் ஒழுக வேண்டும் !

[எனோபர்பஸ் வாயில் முணுமுணுத்துக் கொண்டு தூதுவனை இழுத்துச் செல்கிறான்.]

எனோபர்பஸ்: [திரும்பி ஆண்டனியைப் பார்த்து மௌனமாக] பல்போன கிழட்டுச் சிங்கத்துக்குப் பணி செய்வதை விட பல் முளைக்கும் சிங்கக் குட்டிக்கு வேலை செய்யலாம்.

ஆண்டனி: சவுக்கால் அடியுங்கள், ஆனால் சாகக் கூடாது அவன் ! அது கொலை ஆகும், வேண்டாம். சவுக்கடியை அவன் ஆத்மா அணு அணுவாய்ச் சுவைக்க வேண்டும். தான் சொல்லியது தவறு தவறு என்று சிந்தும் செங்குருதித் துளிகள் அனைத்தும் அலற வேண்டும்! சவுக்கடி விழட்டும், மின்னல் அடிப்பது போல்! இடியாய் வெடிக்கட்டும் அவன் விடும் அழுகுரல்.

திடயாஸ்: (திரும்பிப் பார்த்து) தளபதியாரே! நான் தூதுவன்! … என்ன பதில் சொல்ல வேண்டும் அக்டேவியசுக்கு?

ஆண்டனி: சவுக்கடி வாங்கிய பின் திரும்பி வா! அக்டேவியசுக்குப் பதில் தருகிறேன். [திடயாஸ் இழுத்துச் செல்லப் படுகிறான்] [கிளியோபாத்ராவைப் பார்த்து] கண்ணே கிளியோபாத்ரா, நீ ஒரு நவரத்தினக் கல்! மாதருள் மாணிக்கம்! மங்கையர்க்கரசி! நான் திரும்பி வருவதற்குள் உன்னைக் காயப்படுத்தி விட்டானே அந்த உலுத்தன் !

கிளியோபாத்ரா: [புன்முறுவல் பூத்து, ஆண்டனியை நெருங்கி] உங்களை அவமதித்தவன் என்னை அவமதிதவனே! நீங்கள் நிறுத்தாவிட்டால் அவனது தலையைச் சீவி இருப்பேன். பிழைத்துக் கொண்டான்.

ஆண்டனி: [கோபத்துடன்] ஆனால் கிளியோபாத்ரா! உன் மனம் அலைமோதுதே ஏன் ? என்னை நீ வெளியே தள்ள வேண்டும் என்று அக்டேவியஸ் ஆணையிட்ட போது, அதை நிறைவேற்ற இசைபவள் போல் ஏன் பாசாங்கு செய்தாய் ? அது உண்மையா? அல்லது நடிப்பா? வெளியே முறுவல் பூக்கும் நீ உள்மனதில் கள்ளமுடன் உள்ளாய்! ஆக்டியப் போர் முடிவதற்குள் என்னைத் தனியே விட்டுவிட்டு ஏனிங்கு ஓடிவந்தாய்?

கிளியோபாத்ரா: [கவலையுடன்] என்மீது சந்தேகப் படாதீர். நீங்கள் யுத்த களத்தில் மாண்டு விட்டதாக புரளியைக் கிளப்பி விட்டார்கள்? என்னைப் பயம் பற்றிக் கொண்டது! அதனால்தான் ஓடிவந்தேன்.
நீங்கள் போன பின் என்னைக் காப்பவர் யார்? அக்டேவியசின் மூர்க்கக் கரங்களில் சிக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை. சீஸர் மாண்டதும் என்கதி அப்படித்தான் ஆனது. அலெக்ஸாண்டிரியாவுக்கு ஓடி வந்து விட்டேன், நினைவிருக்கிறதா?

ஆண்டனி: [கேலியாக] சீஸர் செத்தபின் ஆண்டனி! ஆண்டனி செத்தபின் அக்டேவியஸைப் பிடித்துக் கொள்ளலாம் என்று தானே ஓடிவந்தாய்?

கிளியோபாத்ரா: [அருவருப்பாக] என்ன கீழ்த்தரமாகப் பேசுகிறீர்? போர்களத்தில் காணாமல் போன் உங்களைத் தேடி எகிப்த் ராணி சென்றால் என்ன ஆகியிருக்கும் தெரியாதா? நானும் அக்டேவியஸின் சிறைக் கைதியாய் அடைக்கப்பட்டு இப்போது உங்கள் முன் நிற்க மாட்டேன்.. தனிப்பட்டுப் போன நான் வேறென்ன செய்வேன் ? இங்கு எனக்குப் பாதுகாப்பு உள்ளது. நடுக்கடலில் என்ன இருக்கிறது ?

[அப்போது சவுக்கடி வாங்கித் தொய்ந்து வரும் திடயாஸை இழுத்து வருகிறார்கள்]

திடயாஸ்: [ஆண்டனி காலில் விழுந்து] தளபதி, அறிவு வந்தது எனக்கு ! உங்கள் பாதங்களை என் குருதி கழுவுகிறது. நான் சாவதற்குள் சீக்கிரம் உங்கள் பதிலை அக்டேவியசுக்குக் கொண்டு செல்ல வேண்டும். எகிப்திலே என்னுடல் புதைக்கப் படக் கூடாது.

ஆண்டனி: அந்தப் பொடியன் அக்டேவியஸிடம் இந்தச் செய்தியைக் கொடு! என் கோபத்தைக் கிளறினார் என்று சொல்! கிளியோபாத்ராவின் மனத்தைக் கீறினார் என்று சொல்! எகிப்தை விட்டு நான் நீங்க மாட்டேன் என்று சொல்! கிளியோபாத்ரா என்னை மணந்து கொண்டாள் என்று சொல். ஆயினும் அவன் அருமைத் தங்கை அக்டேவியாவை விலக்கிட வில்லை என்று சொல்! போ நான் சொன்னதை எல்லாம் விடாமல் சொல்!

கிளியோபாத்ரா: [ஆங்காரமாக] ஆண்டனி என் கணவர் என்று அக்டேவியஸிடம் சொல்! அவரது குழந்தை என் வயிற்றில் வளர்ந்து வருகிற தென்று சொல்! ரோமாபுரியில் அவருக்கு இடமில்லை என்றால்
எகிப்தில் அவர் நிரந்தரமாக என்னுடன் வாழ்வார் என்று சொல். நீ போகலாம் இப்போது.

[திடயாஸ் வணக்கம் செய்து போகிறான்]

ஆண்டனி: (கிளியோபாத்ரா நெருங்கி அணைத்துக் கொண்டு) அக்டேவியஸ்! ரோமை நீயே ஆட்சி செய், ஆனால் எங்களை வாழ விடு! நாங்கள் மகிழ்ச்சியோடு இங்கே வாழ்கிறோம். …… கிளியோபாரா, உன்னை நான் சந்தேகப்பட்டதற்கு என்னை மன்னித்து விடு. தோற்றுப் போன என்மனம் திசை தெரியாமல் அலைகிறது. யாரையும் என்னால் நம்ப முடிய வில்லை.

கிளியோபாத்ரா: (ஆண்டனியை நெருங்கி) என்னருமை ஆண்டனி! என்னை நம்புங்கள். எனக்கு நீங்கள்தான் துணை. என் மனதில் உங்களைத் தவிர வேறு யாருமில்லை! உங்களுக்குப் பிறகு இனி என்னுள்ளத்தில் வேறு யாரும் நுழைய முடியாது. … ஓ, இன்று எனது பிறந்த நாள்! கோலாகலப் பிறந்தநாள் கொண்டாட்டம் உள்ளது! மன்னர்களுக்கு விருந்தும் கன்னியர்கள் ஆட்டமும் உள்ளது. எனது பிறந்தநாள் பரிசு நீங்கள்! நான் அதற்கு பிரதி உபகாரம் அளிக்க வேண்டும்.

[இருவரும் போகிறார்கள்]

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

9. Shakespeare’s Antony & Cleopatra Edited By: David Bevington [1988]

10 Shakespeare’s Antony & Cleopatra Edited By: M.R. Ridly [1993]

11 Life of Antony & Fulvia Wikipedia the Free Encyclopedia [http://en.wikipedia.org/wiki/Fulvia]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (May 23, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:8 காட்சி:2)

This entry is part [part not set] of 34 in the series 20070517_Issue

சி. ஜெயபாரதன், கனடா

ஆண்டனியின் சொத்துக்குரிய அதிபதி!
அவர் வந்தனம் தெரிவிக்கிறார் உமக்கு!
எகிப்தில் வாழ விருப்பமாம்! இல்லை யெனின்,
பூமிக்கும் வானுக்கும் இடையே மூச்சு விட்டு
ஏதென்ஸில் தனித்திருக்க வேண்டுகிறார்.
கிளியோ பாத்ரா அடிபணிவாள் உம் ஆணைக்கு! (அக்டேவியஸின் அம்பாசிடர்)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

என் செவிகள் கேளா, ஆண்டனியின் இச்சைகளை!
ஏற்றுக் கொள்வேன் எகிப்த் ராணி வேண்டுகோள்!
அவமானப் பட்ட ஆண்டனியை விரட்டு வாளா?
அன்றி அவனைக் கொன்றிடு வாளா?
அப்படிச் செய்தால் மன்னிப் பளிப்பேன்!
அதுவே எனது பதில் அவரிருவ ருக்கும். (அக்டேவியஸ் அம்பாசிடரிடம் கூறியது)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

வாக்குத் திறமையைக் காட்டு, தருண மிதுதான்!
கிளியோ பாத்ராவைக் கவர்ந்து பிரித்திடு அவனை!
பெருத்த அதிர்ஷ்டம் மாதர் உறுதியைக் கலைத்திடும்!
விருப்புடன் முயன்றிடு! தந்திரம் கைக்கொள்!
நமது சட்டம் மூலம் பதில் அளிப்போம். ……
காண்பாய் நீயே! தனது தவறுக்குள்
ஆண்டனி குப்புற வீழ்வதை!
அவரது மோகம் அவர் நடத்தையில் தெரியும்! …. (அக்டேவியஸ்)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

கனிவுத் தூதனே! மகா அக்டேவியஸிடம் சொல், அவர்
வெற்றிக் கையை முத்தமிடு கிறேன்!
பொற் கிரீடத்தை அவர் பாதத்தில் வைப்பேன்!
மண்டி யிடுகிறேன்! உரைத்திடு அவரிடம்,
முழு மூச்சாய் அவர் கட்டளை முழக்கும்,
முடிவுக் காலம் எகிப்தில் நெருங்கு தென்று!

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்

நாடகப் பாத்திரங்கள்:
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கிளியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்

ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ்: ரோமின் மூன்றாம் தளபதி
எனோபர்பாஸ்: ஆண்டனியின் ஆலோசகன், பாதுகாவலன்
கானிடியஸ்: ஆண்டனியின் போர்த் தளபதி
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
•பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன், இளைய பாம்ப்பி)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)

கிளியோபாத்ரா
அங்கம்:8 காட்சி:2

ரோமா புரியின் நிலைமை: •பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி •புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள். எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனியை மைத்துனன் ஆக்கிக் கொள்கிறான். திருமணத்தைக் கேள்விப்பட்ட கிளியோபாத்ரா வெகுண்டெழுகிறாள். ஆண்டனி எகிப்துக்கு மீண்டு மனைவியை மறந்து கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்து மயங்கிக் கிடக்கிறான். ஆண்டனியைத் தண்டிக்க அக்டேவியஸ் ரோமானியப் படையுடன் ஆக்டியக் கடற் பகுதியில் தாக்க வருகிறான்.

++++++++++++++++++

கிளியோபாத்ரா
அங்கம்:8 காட்சி:2

நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் கிளியோபாத்ராவின் அரண்மனை, பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, சார்மியான், ஈராஸ், ஆண்டனி, போர்த் தளபதி எனோபர்பஸ், அக்டேவியஸின் அம்பாசிடர், தூதுவன் திடயாஸ்.

காட்சி அமைப்பு: கிளியோபாத்ரா ஆண்டனியின் போர்த் தளபதியுடன் வாதாடுகிறாள். ஆக்டியப் போரில் வெற்றி பெற்ற அக்டேவியஸ் நிபந்தனைகளை நிறைவேற்ற தனது அம்பாசிடரை எகிப்துக்கு அனுப்புகிறான். அந்த நிபந்தனைகள் ஆண்டனி, கிளியோபாத்ரா இருவரையும் பெருமளவில் பாதிக்கின்றன.

கிளியோபாத்ரா: (மன வருத்தமுடன்) இப்போது என்ன செய்வது எனோபர்பஸ் ? எனது முப்பது கப்பல்கள் மூழ்கிப் போயின! மூவாயிரம் எகிப்தியர் செத்துக் கடலில் மூழ்கினார்! இதுவரை எகிப்த் இப்படித் தோற்றுப் போனதில்லை! என்ன செய்வது? இத்தோல்விக்கு யார் காரணம் நாங்களா அல்லது ஆண்டனியா?

எனோபர்பஸ்: மகாராணி! தோற்றுப் போனதற்கு நீங்கள் காரணமில்லை! ரோமானியருடன் ரோமானிர் போரிட்டால் தோற்பதும் ரோமானியர், வெற்றி பெறுவதும் ரோமானியர்! அக்டேவியஸ் வெற்றி பெற்ற ரோமானியர்! ஆண்டனி தோற்றப் போன ரோமானியர்! ஆண்டனிதான் தோல்விக்குக் காரணம்! வேறெவரும் இல்லை. கடற்போர் வேண்டா மென்று தடுத்தும் ஆண்டனி கேட்கவில்லை. தரைப் போருக்கு அக்டேவியஸை அழைப்போம் என்று கூறிய ஆலோசனையைக் கேட்கவில்லை, ஆண்டனி. அவர் செய்த தவறுகளால் அவரே அவமானப் பட்டார். … ஈதோ, வருகிறார் ஆண்டனி, அக்டேவியஸின் அம்பாசிடருடன்!

[அப்போது அக்டேவியஸ் அனுப்பிய அம்பாசிடருடன், ஆண்டனி வருகிறார்]

ஆண்டனி: அதுதான் அக்டேவியஸின் முடிவான பதிலா?

அம்பாசிடர்: ஆமாம் பிரபு! அவரது அழுத்தமான பதில் அதுதான்!

ஆண்டனி: எகிப்த் மகாராணி நமது மதிப்புக்குரியர், அவரை விட்டுவிட வேண்டும். நமது வீட்டுச் சண்டைக்குள் கிளியோபாத்ராவை இழுத்து வர வேண்டாம்! போர் எனக்கும் அக்டேவியசுக்கும்தான்!

அம்பாசிடர்: போருக்கு மூலமாக இருப்பது எகிப்த் மகாராணி என்பது அக்டேவியஸ் எண்ணம்! அது அக்டேவியஸ் பிரபுவின் முடிவு, நான் வெறும் தூதுவன்! துங்களுக்கு ஆலோசனை சொல்லும் அமைச்சன் அல்லன்!

ஆண்டனி: [கோபமாக] சிறுவன் அக்டேவியஸின் செவியில் விழும்படிச் செய்! அவரது ஆணையை நிறைவேற்றுவேன் என்று சொல்! அவரது நிபந்தனைப் பத்திரத்தைக் காட்டு! ஆனால் இனிப் போரிட்டால் வாளுக்கு வாள் தனிப்போர் என்று சொல்! கடற் போரல்ல! கப்பல் போர் அல்ல! தரைப் போரல்ல! என் வாளுக்கும், அவர் வாளுக்கு மட்டுமே சண்டை! அதற்கு அக்டேவியஸ் உடன்பாடா என்று கேட்டுவா!

கிளியோபாத்ரா: என்னினிய ஆண்டனி! தனித்தனி வாட்போர் எதற்கினி ? அக்டேவியஸ் ரோமாபுரியின் வெற்றித் தளபதி! நாமறிவோம் அதை. சிறுவன் என்று சொல்லாதீர்! ஏகாதிபதியாக மாறிய புதிய சீஸர் அவர்! அவருக்குத் தலை வணங்குவது உங்கள் கடமை! எங்கள் கடமை! நிபந்தனைகளைக் கேட்போம்.

(அப்போது அக்டேவியஸின் அடுத்த தூதுவன் திடயாஸ் வருகிறான். ஆண்டனிக்கும், கிளியோபாத்ராவுக்கும் வணக்கம் செய்கிறான்)

கிளியோபாத்ரா: தூதனே! முதலில் நீ யாரென்று சொல்? எதற்காக வந்திருக்கிறாய் என்று சொல்!

திடயாஸ்: வணக்கம் மகாராணி, என் பெயர் திடயாஸ். என்னை அனுப்பியர் ரோமாபுரித் தளபதி மகா அக்டேவியஸ்.

கிளியோபாத்ரா: மகா அக்டேவியஸ் ஒரு கடவுள்! அலெக்ஸாண்டர் போல் பேரதிபதி அவர். ஆண்டனியை வென்றிருக்கிறார். எனினும் எனது மதிப்பு தணியாமல் உள்ளது. ஆனால் அவர் ஆணைக்குக் கீழ்ப்படுவோம்! சொல், அவர் உன்னை அனுப்பியதன் காரணம் என்ன?

திடயாஸ்: அக்டேவியஸை நீங்கள் பூரிக்கச் செய்ய வேண்டும். இரண்டு நிபந்தனைகள்! அவைதான் அவர் வேண்டுபவை!

கிளியோபாத்ரா: அவரை எப்படி மகிழச் செய்ய வேண்டும் சொல் ?

திடயாஸ்: மகாராணி! அது அக்டேவியஸின் பெரிய நிபந்தனை! ஆண்டனி உங்களுக்கு வெகுமதியாக அளித்த நாடுகளை அக்டேவியஸின் அதிகாரி வசம் ஒப்புவிக்க வேண்டும்! அதன் பின் எகிப்த் படை அந்நாடுகளை விட்டு நீங்க வேண்டும்.

கிளியோபாத்ரா: [ஆங்காரமாக] ஒப்புக்கொள்ள மாட்டேன். வெகுமதி நாடுகள் என்னைச் சேர்ந்தவை! தோற்றது கிளியோபாத்ராவா இல்லை ? ஆண்டனி. அந்த நிபந்தனைக்கு நான் உடன்பட மாட்டேன்.

திடயாஸ்: மன்னிக்க வேண்டும் மகாராணி ! தோற்றது ஆண்டனி என்பதை ஒப்புக் கொள்கிறீர். ஆகவே அவர் வென்ற நாடுகள் உங்களைச் சேரா! அவை அனைத்தும் அக்டேவியஸைச் சேர வேண்டும். ஈதோ இந்த உரிமைப் பத்திரத்தில் ஆண்டனியும், நீங்களும் கையெழுத்திட வேண்டும். (பத்திரத்தை நீட்டுகிறான்)

கிளியோபாத்ரா: [கவலையுடன்] ஆண்டனி! சொல்லுங்கள் அது நியாமாகுமா? அது போர் நெறியா? நீங்கள் அளித்த நாடுகளை நானிழக்க வேண்டுமா?

ஆண்டனி: (தலைகுனிந்து) ஆமாம் கிளியோபாத்ரா! அந்த நாடுகளை நானும் இழந்து விட்டேன். நீயும் இழந்து விட்டாய். திடயாஸ் கொண்டு வந்திருக்கும் உரிமைப் பத்திரத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்துவிடு.

கிளியோபாத்ரா: [மிடுக்குடன்] ஈராஸ்! எடுத்துவா மையும் எழுத்துத் தோகையும். திடயாஸ்! பத்திரத்தை எடுத்துக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் போய்விடு! இனிமேல் நீ இங்கு நிற்கக் கூடாது!

திடயாஸ்: போய் விடுகிறேன், மகாராணி! ஆனால் இன்னுமோர் சிறிய நிபந்தனை!

கிளியோபாத்ரா: [வெறுப்புடன்] சிறிய நிபந்தனையா? சொல்லித் தொலை!

திடயாஸ்: அக்டேவியஸ் பூரிப்படைவார் அதை நீங்கள் நிறைவேற்றினால்! மகாராணி! அவமானப்பட்ட ஆண்டனியை நீங்கள் வெளியேற்ற வேண்டுமாம்! உங்கள் அரண்மனையில் அவர் தங்கக் கூடாது! எகிப்தை விட்டு நீங்க வேண்டும் ஆண்டனி நிரந்தரமாக! அவரது சிறிய நிபந்தனை அதுதான்!

கிளியோபாத்ரா: [மிடுக்குடன்] கனிவு பொங்கும் தூதனே! மகா அக்டேவியஸிடம் சொல்! வெற்றி மகுடம் சூடிய அவரது வீரக் கரங்களை முத்தமிடுகிறேன், மண்டியிட்டு மரியாதை செலுத்துவேன்! என் பொன் மகுடத்தை அவரது பாதங்களில் சமர்ப்பணம் செய்கிறேன். அறிவு கெட்ட தூதனே! அவரது கடுமையான கட்டளைகள் எகிப்தின் முடிவுக் காலச் சங்கை காதிலே ஊதுகின்றன! எகிப்த் நாட்டின் சொந்தம் வேறு! என் உடற் பந்தம் வேறு! என் மகுடம் வேறு. என் மனம் வேறு! என் சொத்து வேறு! என் ஆத்மா வேறு! என் உள்ளம் வேறு! என் உயிர் வேறு! ஆனால் நான் வேறில்லை, ஆண்டனி வேறில்லை! என் உள்ளத்தின் உள்ளே ஆணிவேர் ஆனவர் ஆண்டனி! எப்படி அந்த ஆணி வேரை என்னால் பிடுங்கி எறிய முடியும்? என் ஆத்மாவின் சிதைவல்லவா அது! கனிவாகப் பேசி கள்வனாய் வந்த தூதுவனே! நில்லாதே! ஓடிப் போ, என் வாளால் துண்டாகும் முன்பு! [வாளை உருவி தூதனை விரட்டுகிறாள்]

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

9. Shakespeare’s Antony & Cleopatra Edited By: David Bevington [1988]

10 Shakespeare’s Antony & Cleopatra Edited By: M.R. Ridly [1993]

11 Life of Antony & Fulvia Wikipedia the Free Encyclopedia [http://en.wikipedia.org/wiki/Fulvia]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (May 16, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:8 காட்சி:1)

This entry is part [part not set] of 29 in the series 20070510_Issue

சி. ஜெயபாரதன், கனடா

நடக்காதே என்மீதெனப் பூமி சொல்லும் அந்தோ!
நண்பர்கள்! அவமானப் படும் என்னைச் சுமக்க!
தவறிப் பாதையை விட்டு விட்டேன் நிரந்தரமாய்!
தாமத மாகி விட்டேன் தரணியில்!
பொன் நிறைந்த கப்பல் ஒன்றுளது!
பங்கிட் டளித்து அக்டேவிய ஸோடு
சமாதானம் செய்ய விரைந்து செல்! … (போரில் தோற்ற ஆண்டனி)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

(போர்க்களம்) விட்டு ஓடினேன்! கோழைகளை
புற முதுகு காட்ட ஆணை யிட்டேன்!
போவீர் தோழரே! நானோர் போக்கில் மாறியுளேன்!
நீவீர் தேவை யில்லை எனக்கு! போவீர்!
துறைமுகக் கப்பலில் உளதுபொன் களஞ்சியம்!
விரைவாய்ச் சென்றதை அளித்திடு!
என்தலை மயிர்கூட எதிர்க்குது என்னை! … (போரில் தோற்ற ஆண்டனி)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

பிரார்த்தனை செய்வீர்! வருத்தப் படாதீர்! …
நினைப்பேன் சிறப்பாய் உம்மையும் கப்பலையும்!
எனைவிட் டகல்வீர்! வேண்டிக் கொள்கிறேன்!
பிரார்த்தனை செய்வீர், இச்சம யத்தில்!
இழந்தேன் இப்போது என் ஆணைத் திறமையை!
உமக்குநான் பிரார்த்தனை செய்வேன்! போவீர் … (போரில் தோற்ற ஆண்டனி)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்

நாடகப் பாத்திரங்கள்:
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கிளியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்

ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ்: ரோமின் மூன்றாம் தளபதி
எனோபர்பாஸ்: ஆண்டனியின் ஆலோசகன், பாதுகாவலன்
கானிடியஸ்: ஆண்டனியின் போர்த் தளபதி
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
•பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன், இளைய பாம்ப்பி)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)

கிளியோபாத்ரா
அங்கம்:8 காட்சி:1

ரோமா புரியின் நிலைமை: •பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி •புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள். எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனியை மைத்துனன் ஆக்கிக் கொள்கிறான். திருமணத்தைக் கேள்விப்பட்ட கிளியோபாத்ரா வெகுண்டெழுகிறாள். ஆண்டனி எகிப்துக்கு மீண்டு மனைவியை மறந்து கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்து மயங்கிக் கிடக்கிறான். ஆண்டனியைத் தண்டிக்க அக்டேவியஸ் ரோமானியப் படையுடன் ஆக்டியக் கடற் பகுதியில் தாக்க வருகிறான்.

++++++++++++++++++

கிளியோபாத்ரா
அங்கம்:8 காட்சி:1

நேரம், இடம்: ஆக்டியம் கடற்போர் முனை, பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்: ஆண்டனி, போர்த் தளபதி எனோபரஸ், கான்டிடஸ், கிளியோபாத்ரா, சார்மியான், ஈராஸ், ஆண்டனியின் கப்பல் போர்ப் படையினர், கிளியோபாத்ராவின் கப்பற்படை வீரர்கள், தளபதி அக்டேவியஸ், போர் அட்மிரல் அக்கிரிப்பா, ரோமானியக் கடற்படை வீரர்கள், டாரஸ்

காட்சி அமைப்பு: கீரிஸின் அருகில் ஆக்டியம் பகுதியில் ஆண்டனி அக்டேவியஸைக் கடற்போருக்கு அழைத்துப் போரிடுகிறான். கிளியோபாத்ராவும் தனது 60 போர்க்கப்பலுடன் ஆண்டனிக்கு உதவியாகப் போர்க்களத்துக்கு வருகிறாள். அக்டேவியஸ் 230 கப்பல்களுடன் கடற்போருக்குத் தயாராகிறார். கடற்போர் பீரங்கிக் கனல்வெடிகளுடன் துவங்கிறது. அக்டேவியஸின் போர் அட்மிரல் அக்கிரிப்பா சாமர்த்தியமாக ஊடே புகுந்து, ஆண்டனியின் கடற்படை ஓட்டத்தைத் தடுத்து, உணவு, போர்த் தளவாடச் சாதனங்களின் அனுப்புதலைத் துண்டிக்கிறான். போர் தோற்காத போது போர் தோற்று விட்டதாய் எண்ணி, கிளியோபாத்ரா, ஆண்டனியை விட்டுவிட்டு அலெக்ஸாண்டிரியாவுக்கு மீள்கிறாள். ஆண்டனி தன் போர்ப் படையினரை விட்டுவிட்டு, கிளியோபாத்ரா பின்னால் போகிறான். ஆண்டனியின் படையினர் பட்டினியால் வாடிப் போரிட இயலாது முடிவில் அக்டேவியஸ் ஆண்டனியைத் தோற்கடிக்கிறான். முதன்முதல் தனக்கிளைய தளபதியிடம் தோற்று அவமானப்பட்ட ஆண்டனி, போர்க் களத்தை விட்டு ஓடுகிறான். பின்தங்கிய ஆண்டனியின் படையினரை அக்கிரிப்பா போர்க்கைதிகளாகச் சிறைப்படுத்துகிறான்.

கடற்போரில் தோற்றோடும் ஆண்டனி முதன்முறையாகச் சுயமதிப்பிழந்து சோகமாக துணைக்காவலர் கூட உரையாடுகிறார்.

ஆண்டனி: [மனம் நொந்துபோய்த் தடுமாறிய குரலில்] மானம், மதிப்பெல்லாம் போய்விட்டது! உயிர் போன வெற்றுக் கூடாய் அலைகிறேன்! சீஸருக்கு வாரீசுத் தீரனாய் வலு படைத்தவன், போரை விட்டு ஓடிவந்து புலம்பிக் கொண்டிருக்கிறேன். வெட்கப்படுகிறேன்! எப்படி ரோமாபுரி முகத்தில் தலை நிமிர்ந்து விழிக்கப் போகிறேன்? செவில் படுகிறதா? என் மீது நடக்காதே என்று நான் நிற்கும் பூமியும் கட்டளை யிடுகிறது! என்னைத் தாங்கிக் கொள்ள அது அவமானப் படுகிறது. என் நண்பர்களே! சொல்வதைக் கேளுங்கள். நான் தாமதித்து விட்டேன் போரில். அதனால் மோதி மிதிக்கப் பட்டேன். பாதை தவறி விட்டேன்! படைப்பல மிழந்து விட்டேன். பழி வாங்கப் பட்டேன். முதல் வீரனாய்த் திகழ்ந்தவன், மூன்றாம் நிலைக்குத் தள்ளப் பட்டேன். என் உன்னத தோள்கள் தாழ்ந்து விட்டன. இந்த அவமானத்தைத் தாங்கிக் கொண்டு வாழ முடியுமா நான்? காவலனே! என் பொற்களஞ்சிய கப்பல் அதோ அங்கே நிற்கிறது. அதிலிருக்கும் பொன் நாணயங்களை அக்டேவியஸ் கைகளில் அளித்து சரண் அடைந்தேன் என்று தகவலைத் தெரிவித்திடு! என் சமாதானச் செய்தியைக் கொண்டு போ! பறந்து போ!

காவலன்: எப்படிப் பறப்பது? விரைந்து செல்கிறேன் பிரபு.

ஆண்டனி: போ! விரைந்து போ! நான் வெகுதூரம் ஓடி வந்து விட்டேன்! என் படை வீரர்களையும் ஓடச் சொல்லி உத்தரவு செய்தேன்! புற முதுகு காட்ட வைத்துத் தீரர்களைக் கோழைகள் ஆக்கினேன்! போய் விடுவீர், இனித் தேவை யில்லை நீவிர்! துறைமுகத்துக்கு அருகில் களஞ்சியக் கப்பல் நங்கூரத்தில் நிற்கிறது. பொன் நாணயங்களைக் கொடுத்து அக்டேவியஸை விரட்டுங்கள்! நமது பீரங்கிகளின் மூச்சு நின்று விட்டது. என் தலை மயிர் கூட எதிர்க்கிறது என்னை!

காவலன்: ஈதோ போகிறேன் பிரபு.

ஆண்டனி: பிரார்த்தனை செய்! மனம் நோகாதே! உங்கள் யாவரையும் நான் மறக்க மாட்டேன். உங்களைச் சுமந்த கப்பலையும் மறக்க மாட்டேன். எனக்கு இப்போது தனிமை தேவை! என்னைத் தனியே விட்டுப் போவீர்! பிரார்த்தனை புரிவேன் நானும்! என் மானமிழந்தேன்! என் மதிப்பிழந்தேன்! என் படைகளை ஆணையிடும் வல்லமை யிழந்தேன்! என்னை விட்டுச் செல்வீர். [மன வேதனையுடன் பாறை மீது அமர்கிறார்]

[அப்போது கிளியோபாத்ரா, சார்மியான், ஈராஸ் சூழ நுழைகிறாள்]

ஈராஸ்: [கவலையுடன் உள்ள ஆண்டனியை நோக்கி] மகாராணி! மாண்புமிகு தளபதி மனவருந்திக் காணப்படுகிறார். ஆறுதல் கூறுவீர் அவருக்கு! பராக்கிரமசாலி பரிதாப நிலையில் தலை குனிந்திருக்கிறார்.

சார்மியான்: ஆமாம் மகாராணி! நீங்கள்தான் ஆறுதல் கூற வேண்டும். வேறு யாரும் நெருங்க முடியாது.

கிளியோபாத்ரா: [பரிவுடன் நெருங்கி, அருகில் அமர்ந்து] மனம் நோகாதீர்! தோல்வி வெற்றியின் முதற்படி! அக்டேவியஸ் வெற்றி ஆக்டியத்துடன் முடிந்தது! அலெக்ஸாண்டிரியாவுக்குள் அவர் நுழைய முடியாது! அங்கே கால்வைத்தால் என் படையினர் அவரது கால்களைத் துண்டித்து விடுவார். [தலையைக் கோதி விடுகிறாள்]

ஆண்டனி: [புலம்பிய வண்ணம்] பில்லிப்பி போர்க்களத்தில் தன்னை மாய்த்துக் கொண்ட புரூட்டஸ் இப்போது என்னைப் பழி வாங்கி விட்டார். என் போர் அனுபவம் என்ன? என் வயதென்ன? என் திறமை என்ன? அனைத்தும் ஒரு நாளில் பயனற்றுப் போயின! நான் துணையற்றுப் போனேன்! நான் தனித்துப் போனேன்! எனக்கும் ரோமுக்கும் உள்ள பந்தம் அறுந்து போனதே!

கிளியோபாத்ரா: [கலக்கமுடன்] அப்படிச் சொல்லாதீர் ஆண்டனி! நானிருக்கும் போது துணையில்லை என்று சொல்லாதீர்! தனித்துப் போனதாக வருத்தப் படாதீர். நானிருக்கிறேன், என் எகிப்த் உள்ளது! ரோமாபுரி கைவிட்டாலும், எகிப்த் நாடு உங்களை விட்டுவிடாது. உங்களுக்குத் தோள் கொடுக்கும், துணை யிருக்கும், படை கொடுக்கும்.

ஆண்டனி: கிளியோபாத்ரா! எகிப்த் துணையால் நான் ரோமை யிழந்தேன்! அக்டேவியஸ் என்னைத் தோற்கடித்து என்னிட மிருந்து ரோம் சாம்ராஜியத்தைப் பிடுங்கிக் கொண்டான்! அத்துடன் என் மானம், என் மதிப்பு, என் மகிமை அனைத்தும் போயின.

கிளியோபாத்ரா: எனது சொற்பப் படகுகள், ரோமின் அற்பக் கப்பல்கள் முன்பு முன்னேற முடியவில்லை.

ஆண்டனி: [தனிமொழியில்] எகிப்தே! உன் திசைதிருப்பியுடன் என்னிதயத்தைக் கயிற்றில் கட்டி யிழுக்கிறாய்! உன் பராக்கிரமத்தில் என் ஆத்மாவைப் பறித்துக் கொண்டாய்!

கிளியோபாத்ரா: அப்படி நினைக்காதீர் ஆண்டனி! உங்களுக்கு அடைக்கலம் தந்துள்ளது எகிப்த் நாடு! உங்கள் ஆத்மாவுக்கு உறுதி கொடுக்கும் எமது எகிப்த் நாடு! நீங்கள் அப்படி நினைப்பது வருத்தம் அளிக்கிறது எனக்கு.

ஆண்டனி: நான் தணிந்து போய் அக்டேவியஸோடு உடன்படிக்கை செய்ய வேண்டும். நான் பிடித்த நாடுகளை எல்லாம் உன்னிடமிருத்து பிரித்து அக்டேவியஸின் வசம் ஒப்படைக்க வேண்டும். வருந்த வேண்டியவள் நீயும்தான்! நீ அறிய மாட்டாய், என்னைக் கைப்பற்றி வைத்திருக்கும் மோகினி நீ யென்று! என் பராக்கிரம வாள் உன் முன் பலமிழந்து போய்க் கிடக்கிறது! என்ன காரணம் இருப்பினும், என் வாள் உனக்கு வணக்கம் செய்கிறது.

கிளியோபாத்ரா: [கண்ணீர் கலங்க] அப்படியா? நீங்கள் எனக்கு வெகுமதியாக அளித்த நாடுகளை அக்டேவியஸ் எடுத்துக் கொள்வாரா? வேதனைப் படுகிறேன் நானும்.

ஆண்டனி: [கிளியோபாத்ரா கண்ணீரைத் துடைத்து] எளிதாகக் கிடைத்தவை எளிதாக நீங்கின! அதிர்ஷ்ட தேவதைக்கு க் கண்கள் குருடு! யாரிடம் எடுத்து யாருக்குக் கொடுக்கும் என்பது தெரியாது. என்னிடம் உள்ளது ஒன்றுமில்லை இப்போது, என் முத்தத்தைத் தவிர! [கெஞ்சியபடி] முத்தமிடு என்னை கிளியோபாத்ரா! உன் கனல் முத்தம் என் இதயக் கனலைத் தணிக்கட்டும். உள்ளம் குளிர என்னை உன் உடற்கனலால் சுற்றிக்கொள். என் பசிக்கும் உடலுக்கு உன் அ¨ணைப்பு விருந்தளி! எனக்கு ரோமாபுரி ஆட்சி, ரோமானியரின் ஆதரவு எதுவும் வேண்டாம்! நீ தான் எனக்குத் துணைவி. நீதான் எனக்கு மனைவி! நானினி ரோமுக்கு மீளப் போவதில்லை! வாழ்நாள் முழுதும் உன் நிழலிலே கிடப்பேன்! எகிப்தின் நைல் நதி நீரே என் தாகத்தைத் தீர்க்க வல்லது.

[கிளியோபாத்ரா ஆண்டனியை முத்தமிடுகிறாள்]

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

9. Shakespeare’s Antony & Cleopatra Edited By: David Bevington [1988]

10 Shakespeare’s Antony & Cleopatra Edited By: M.R. Ridly [1993]

11 Life of Antony & Fulvia Wikipedia the Free Encyclopedia [http://en.wikipedia.org/wiki/Fulvia]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (May 9, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்:7 காட்சி:10)

This entry is part [part not set] of 24 in the series 20070503_Issue

சி. ஜெயபாரதன், கனடா

ரோமைப் புறக்கணித்தார் ஆண்டனி!
அதற்கு மேலும் அடாதன செய்தார்
அலெக் ஸாண்டிரியா விலே!
அவரது பண்பாடே அப்படித்தான்!
அங்காடித் தளத்து வெள்ளி மேடையில்
ஆண்டனியும், கிளியோ பாத்ராவும்
பொன்னா சனத்தில் அமர்ந்து
எல்லோருக்கும் தெரியு மாறு
அரசன், அரசியென அறிவித்தார்!
அவரது காலடியில் சீஸரின் புதல்வன்!
காம மோகத்தில் சட்டம் மீறிய போக்கு!
சிரியா, ஸைப்பிரஸ், லிடியா நாடுகளை
பரிசாக அளித்து அவளை
ஏகாதி பத்திய ராணி ஆக்கினார்! … (தளபதி அக்டேவியஸ்)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

கள்ளத் தனமாய் உள்ளே வந்ததும் ஏனோ?
ஆண்டனியின் மனைவிக்குக் காவலர் தேவை,
உள்ளே நுழையுமுன் வருகையை அறிவிக்க!
ரோமின் சந்தைப் பெண்போல் நுழைகிறாய்!
நமது செல்வந்தப் பந்தத்தைச் சிதைத்தாய்!
அதனை இ ழப்பின் அன்பின் பிணைப்பறு படும்!
கடற்படை யுடன் நாட்டில் உன்னை
வாழ்த்தி வரவேற்க நாங்கள் வர வேண்டும். … [தளபதி அக்டேவியஸ்]

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

ஏமாந்த என்னரும் சகோதரி! கிளியோபாத்ரா
உன்பதியைத் தன்வசப் படுத்தினாள்! ஆண்டனி
தன் நாடுகளை வேசிக்குத் தானம் செய்தார்!
கப்பப் பணத்தை அரசரிடம் கறந்து,
இன்று போருக்கு அழைக்கிறாள் எம்மை! … [தளபதி அக்டேவியஸ்]

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

ஒவ்வொரு ரோமானிய இதயமும்
உன்னை நேசிக்கும்.
உன் மீது அனுதாபம் காட்டும்.
பிற மனையாள் பின்னே சென்றுனை
மறந்த ஆண்டனி மேல் வெறுப்படைவர்!

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

கதைச் சுருக்கம்: கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்!

முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் ஆண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த ஆண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. ஆண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் ஆண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை ஆண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன ஆண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.

ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்

நாடகப் பாத்திரங்கள்:
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கிளியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்

ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ்: ரோமின் மூன்றாம் தளபதி
எனோபர்பாஸ்: ஆண்டனியின் ஆலோசகன், பாதுகாவலன்
கானிடியஸ்: ஆண்டனியின் போர்த் தளபதி
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
•பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன், இளைய பாம்ப்பி)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)

கிளியோபாத்ரா
அங்கம்:7 காட்சி:10

ரோமா புரியின் நிலைமை: •பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி •புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள். எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனியை மைத்துனன் ஆக்கிக் கொள்கிறான். திருமணத்தைக் கேள்விப்பட்ட கிளியோபாத்ரா வெகுண்டெழுகிறாள். ஆண்டனி எகிப்துக்கு மீள்கிறான்.

++++++++++++++++++

கிளியோபாத்ரா
அங்கம்:7 காட்சி:10

நேரம், இடம்: போர் முனையில் ஓரிடம், பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்: தளபதி அக்டேவியஸ், தங்கை அக்டேவியா, போர்த் தளபதி அக்கிரிப்பா, மெஸ்ஸேனஸ்

காட்சி அமைப்பு: ஆண்டனி மனைவி அக்டேவியாவை மறந்து எகிப்தில் நிரந்தரமாகக் கிளியோபாத்ராவுடன் அரண்மனையில் தங்கிக் கிடப்பது ரோமானியத் தளபதி அக்டேவியஸின் சினத்தைக் கிளப்புகிறது. தங்கையிடம் கூறித் தன் வெறுப்பைக் காட்டி எகிப்துக்குச் செல்ல முற்படுகிறான்.

அக்டேவியஸ்: அக்கிரிப்பா! பாரிந்த அநியாயத்தை! பரிதாபப் படுகிறேன் பரிவுள்ள என் சகோதரிக்கு! படுதுயரில் அவளைத் தனியே தவிக்க விட்டு, ஆண்டனி பரத்தையின் காலடியில் கிடக்கிறார்! ரோமாபுரியின் பாராக்கிரச் சிங்கம் காமாந்தகியின் காந்த விழிகளால் சுடப்பட்டு வீழ்ந்து கிடக்கிறது. சீஸரும் அப்படித்தான் மோசக்காரியின் தாசரானார்! அவள் ஒரு வேசி! கப்பம் கட்டி நமக்குக் கும்பிடு போட வேண்டிய மோகினி, ஒப்பற்ற ஆண்டனியைப் பெட்டிப் பாம்பாய் ஆக்கி விட்டாள்! அதற்குக் காரணி கிளியோபாத்ராவா? இல்லை, இல்லை! ஆண்டனிதான்! அக்கிரிப்பா! பார்! எகிப்துக்குச் சென்று ஆண்டனியைக் கைது செய்து, நான் அக்டேவியாவின் காலடியில் விழ வைப்பேன்! என் உறுதி மொழி யிது!

அக்கிரிப்பா: சீஸரும் அப்படித்தான் சினத்துடன் எகிப்துக்குச் சென்றார்! அப்புறம் என்ன ஆனது? ஆண்டனியும் அவரைப் போல் கிளியோபாத்ராவை அடக்கத்தான் போனார்! அத்தனை பேரும் அப்புறம் அவளுக்கு அடிமை யானார்! அவளது கைப் பொம்மையாய் அடங்கிப் போனார்! இப்போது நீங்கள் அவரைப் பின்பற்றி எகிப்துக்குப் போகிறேன் என்று உறுதி கூறுகிறீர்! கிளியோபாத்ரா ஒரு சிலந்தி பூச்சி! அவளது வலையில் சிக்கினால் நீங்களும் விழுங்கப் படுவீர்! அவளது மேனியின் தீக்கனலில் நீங்களும் மெழுகாய் உருகிப் போவீர்!

அக்டேவியஸ்: அலெக்ஸாண்டிரியாவுக்கு நான் செல்வது கிளியோபாத்ராவை அடக்குவதற்கு அல்ல, ஆண்டனியைப் பிடிப்பதற்கு. ரோமானிய செனட்டரைத் திட்டி யிருக்கிறார் ஆண்டனி! அலெக்ஸாண்டிரியா அங்காடி வீதிப் பீடத்தில் அகங்காரியுடன் பொன்னாசனத்தில் அமர்ந்து, தன்னை எகிப்தின் சக்கிரவர்த்தி என்று அறிவித்திருக்கிறார்! அருகில் சீஸரின் மகன் சிஸேரியன் அமர்ந்திருந்தானாம்! சிரியா, சைப்பிரஸ், லிதியா நாடுகளைக் கிளியோபாத்ராவுக்கு வெகுமதியாக அளித்திருக்கிறார் ஆண்டனி! அது ஒப்பந்த துரோகம்! என்னைக் கேளாமல், லெப்பிடஸ் அறியாமல் ரோம் சாம்ராஜியத்தின் மூன்று நாடுகளைக் காமக் கிழத்திக்குத் தானம் கொடுத்துள்ளார்? கிழக்காசிய நாடுகளுக்கு கிளியோபாத்ராவை முழு ஆதிக்க மகாராணியாக ஆக்கியுள்ளார். அனைத்தும் எங்களுக்குத் தெரியாமல்! அனைத்தும் ரோமுக்கு எதிராகச் செய்த ராஜதுரோகம்! என்னால் தாங்க முடியவில்லை! வேசிக்கு பொன்னும் பொருளும் கொடுக்கலாம்! தேசங்களை யார் வேசிக்கு கொடுப்பார்? காமப் பித்தன்தான் அப்படித் தானம் செய்வான்!

மெஸ்ஸேனஸ்: மாளிகை விருந்துகளில் சிற்றரசருடன் கலந்து உரையாடும் போது கிளியோபாத்ராவின் கணவனாகக் காட்டிக் கொள்கிறாராம் ஆண்டனி! எப்போது அவரது ரகசியத் திருமணம் நடந்தது என்பது தெரியவில்லை?

[அப்போது திடீரென அக்டேவியா தலைவிரி கோலமாய் ஆவேசமுடன் நுழைகிறாள்]

அக்டேவியா: [வேதனையுடன்] என்ன, என் கணவருக்கு அடுத்தொரு திருமணமா? நானிருக்க எப்படி வேறொருத்தியை மனைவியின் பீடத்தில் அவர் வைக்கலாம்?

மெஸ்ஸேனஸ்: அக்டேவியா! கிளியோபாத்ராதான் ஆண்டனிக்கு முதல் மனைவி! நீங்கள் அவருக்கு இரண்டாம் … மனைவிதான்!

அக்டேவியா: [சினத்துடன், கண்ணீர் கலங்க] மூடு வாயை! அப்படிச் சொல்லாதே. என் நெஞ்சம் கொதிக்கிறது! கிளியோபாத்ராவை அவர் மணக்க வில்லை என்று என் மனம் சொல்கிறது. அதுதான் உண்மை.

அக்டேவியஸ்: [கேலியாக] அந்த பாலைவன மோகினி உன் கணவரின் ஆசை நாயகி என்று உன் மனம் சொல்கிறதா? அந்த ஆசை நாயகி ஒர் வேசி என்று உன் மனம் சொல்கிறதா? அந்த வேசிக்கு உன் கணவர் ஒரு தாசன் என்று உன் மனம் சொல்கிறா? [சிரிக்கிறான்]

அக்டேவியா: [முகத்தை மூடிக் கொண்டு] சகோதரா, போதும் அவரைக் குத்தி பேசி என்னைக் கொல்லாதே! … அந்த உத்தம ரோமனை நீதான் என் கழுத்தில் கட்டினாய்! அதைத்தான் என் மனம் சொல்கிறது.

அக்டேவியஸ்: அருமைச் சகோதரி! தலை விரிகோலத்தோடு அரசி உடைகளை அணியாது ரோமாபுரி வேலைக்காரி போல் காட்சி தருகிறாய்! உன்னைக் கண்டால் ஆணழகன் ஆண்டனி மயங்க வேண்டாமா? கிளியோபாத்ராபோல் ஒப்பனையாக அணிந்து வாலிப மாதான நீ ஆடவனைக் கவர வேண்டாமா? சகோதரி! முத்தளபதிகளில் மூத்தவரை நீ மணந்தவள்! மறந்து விடாதே! உனக்கெனச் சில பாதுகாப்பாளர் தேவை. நீ வரும் முன்பு உன் வருகை அறிவிக்க ஒரு காவலன் தேவை. எப்போது நீ ராஜ பரம்பரையில் வந்ததாகக் காட்டிக் கொள்ளப் போகிறாய்?

அக்டேவியா: [கண்ணீருடன்] நான் திடீரென ஏன் ஓடி வந்தேன் என்று தெரிந்து கொள் சகோதரா! என் கணவர் மீது கோபங் கொண்டு, எனக்காகப் போர் தொடுக்க நீ புறப்பட்ட செய்தி கேட்டு அவர் வருந்துகிறார். என் கடித்ததில் நமக்குள் போர் வேண்டாம் என்று சொல்ல உன்னிடம் என்னைத் தூதாக அனுப்பி யிருக்கிறார். சகோதரா! என்னிரு கண்களான நீங்கள் இருவரும் சண்டை யிட்டுத்தான் சாக வேண்டுமா? ஆண்டனி மாண்டால் என் கதி என்னவாகும்? மீண்டும் விதவையாக வேதனைப் பட வேண்டுமா? அல்லது என்னுறவுச் சகோதரனை நானிழக்க வேண்டுமா? ஒருவேளை நானிருவரையும் இழக்க நேர்ந்தால் முற்றிலும் தனித்துப் போவேன்.

அக்டேவியஸ்: அக்டேவியா! உன்னை மட்டும் ஆண்டனி புறக்கணிக்க வில்லை! ரோமாபுரி கைப்பற்றிய நாடுகளைத் தன் காமக் கிழத்திக்கு தானமாகக் கொடுத்தது மன்னிக்க முடியாத குற்றம்! நாட்டுத் துரோகம்! உனக்காகப் போரிட வேண்டாம் என்றாலும், ரோமுக்காக நான் ஆண்டனியுடன் போரிடத்தான் வேண்டும்! என்னைத் தடுக்காதே! நான் உனக்குச் சகோதரன்! ஆனால் ரோம் சாம்ராஜியத்துக்கு நான் முதன்மைக் காவலன்! போரை நிறுத்த முடியாதென்று உன் கணவனுக்குக் கடிதம் எழுது!

அக்டேவியா: [கண்ணீர் கலங்கி] சகோதரா! போரை நிறுத்த வேண்டுமானால் நீ விடும் நிபந்தனைகள் என்ன? அதை நான் என் கணவருக்கு முதலில் எழுத வேண்டும். எப்படியாவது நான் போரை நிறுத்த வேண்டும்.

அக்டேவியஸ்: என் நிபந்தனைகள் இவைதான்! முதல் நிபந்தனை: கிளியோபாத்ராவுக்குத் தானம் வார்த்த நாடுகளை, மீட்டு ரோமாபுரிக்கு மாற்ற வேண்டும். இரண்டாம் நிபந்தனை: கிளியோபாத்ராவைக் கைவிட்டு உன்னிடம் மீள வேண்டும் ஆண்டனி. மூன்றாம் நிபந்தனை: எகிப்த் நாட்டை ரோமாபுரியிலிருந்து ஆட்சி செய்ய, ஆண்டனி எங்களுடன் ஒன்றாய்ச் சேர வேண்டும்.

அக்டேவியா: முதல் நிபந்தனையும், மூன்றாம் நிபந்தனையும் ஒப்புக் கொள்ளப் படலாம்; ஆனால் இரண்டாம் நிபந்தனை நிறைவேறுமா என்று தெரியாது எனக்கு! கிளியோபாத்ரா என் கணவரின் மனத்தைக் கட்டிப் போட்டிருக்கிறாள். என்னால் அந்த முடிச்சை அவிழ்க்க முடியவில்லை.

அக்டேவியஸ்: அக்டேவியா! அதைச் செய்யத்தான் நான் எகிப்துக்குப் போகிறேன். உன்னால் செய்ய முடியாததை என்வாள் சாதிக்கும் பார்! கிளியோபாத்ராவின் காலடியில் அடிமையாய்க் கிடக்கிறார் ஆண்டனி! அவருக்கு விடுதலை அளிக்கத்தான் நான் அலெக்ஸாண்டிரியாவுக்குப் போகிறேன்.

அக்டேவியா: சகோதரனுக்கும், கணவனுக்கு மிடையே நசுக்கப் படுவது நான்! யார் பக்கம் சேர்வது நான்? யார் பக்கம் சேரக் கூடாது நான்? தெரியவில்லை எனக்கு! தெளிவான பாதை எது? சிந்தை குழப்பம் அடைகிறது. தலை சுற்றுகிறது. [களைப்பு மிகுந்து ஆசனத்தில் சாய்கிறாள்] யாரை நானிழக்கப் போகிறேன்?

மெஸ்ஸேனஸ்: [பரிதாபப்பட்டு] அம்மையாரே! மனத்தளர்ச்சி அடையாதீர். ரோமானியர் ஒவ்வொருவரும் உங்களை நேசிக்கிறார்! உங்கள் மீது பரிவு கொள்கிறார். கிளியோபாத்ராவை மனதாரத் திட்டுகிறார். வஞ்சகம் செய்யும் ஆண்டனி மீது ஆத்திரம் கொள்கிறார். அவரது மனத்தில் குடிகொண்டவர் நீங்கள்.

அக்டேவியா: [மன வேதனையுடன்] அப்படியா ரோமானியர் வருத்தப் படுகிறார்! .. ஆனால் ரோமானியர் போரை நிறுத்துவாரா? …. என் கணவரும் வாழ வேண்டும். என் சகோதரனும் வாழ வேண்டும். …. மயக்கமாக உள்ளது எனக்கு!

அக்டேவியஸ்: அருமைச் சகோதரி! ஓய்வெடுத்துக் கொள்! ஆண்டனியைக் கைது செய்து உன்வசம் ஒப்படைப்பது என் கடமை! நானோர் உத்தம ரோமன்! ரோமா புரியின் துரோகிகளை ஒழிப்பது என் கடமை! என்னுயிரும் போகாது! ஆண்டனி உயிரும் போகாது! உன் கணவரைக் கொல்வதற்கு நான் போரிட வில்லை! உயிருடன் அவரை ரோமுக்கு இழுத்து வருவேன். என் கடமை அது! உனக்கு நான் அளிக்கும் ஓர் உறுதி மொழி!

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

9. Shakespeare’s Antony & Cleopatra Edited By: David Bevington [1988]

10 Shakespeare’s Antony & Cleopatra Edited By: M.R. Ridly [1993]

11 Life of Antony & Fulvia Wikipedia the Free Encyclopedia [http://en.wikipedia.org/wiki/Fulvia]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (May 2, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:7 காட்சி:9)

This entry is part [part not set] of 32 in the series 20070426_Issue

சி. ஜெயபாரதன், கனடா

உங்கள் இருக்கை வியப்புண் டாக்கும் ஆண்டனிக்கு.
எவற்றை விட்டு வைக்கக் கூடாதோ
அவற்றை எல்லாம் நீக்கிடு,
அவரது இதயத்தி லிருந்து!
அவரது மூளையி லிருந்து!
அவரது ஆயுட் காலத்தி லிருந்து!
எளிய போக்கில் நழுவிச் செல்பவர் ஆண்டனி
என்னும் தாக்குதல் முன்பே உள்ளது!
உன்னடிமைப் பெண்டிரும் அலிகளும்
முன்னடத்தும் போரென ரோமில் பேச்சாம்! … (எனோபார்பஸ்)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

ரோமாபுரி மூழ்கிப் போகட்டும்!
நம்மை எதிர்த்துப் பேசுவோரின்
நாக்குகள் அழுகிப் போகட்டும்!
போரைப் பற்றிப் புகார் வந்துளது நம்மேல்!
ஆடவனைப் போல் நாட்டரசி நான்
அங்குமுன் நிற்பேன்! அதை எதிர்த்துப்
பேசா தே! பின்தங்கி நில்லேன்! …. (கிளியோபாத்ரா).

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

ஆண்குதிரையும் பெண்குதிரையும்
அணியில் சேர்ந்து போருக்குப் போனால்
கவனம் திரும்பிப் போர்க் களத்தில்
காணாமல் போகும் ஆண்குதிரை!
பெண்குதிரை வீரரைச் சுமந்து
ஆண்குதிரை தன்னையும் ஏற்றித்
தனியே செல்லும். …(எனோபார்பஸ்)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

கதைச் சுருக்கம்: கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்!

முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் ஆண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த ஆண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. ஆண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் ஆண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை ஆண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன ஆண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.

ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்

நாடகப் பாத்திரங்கள்:
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கிளியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்

ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ்: ரோமின் மூன்றாம் தளபதி
எனோபர்பாஸ்: ஆண்டனியின் ஆலோசகன், பாதுகாவலன்
கானிடியஸ்: ஆண்டனியின் போர்த் தளபதி
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
•பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன், இளைய பாம்ப்பி)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)

கிளியோபாத்ரா
அங்கம்:7 காட்சி:9

ரோமா புரியின் நிலைமை: •பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி •புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள். எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனியை மைத்துனன் ஆக்கிக் கொள்கிறான். திருமணத்தைக் கேள்விப்பட்ட கிளியோபாத்ரா வெகுண்டெழுகிறாள். ஆண்டனி எகிப்துக்கு மீள்கிறான்.

++++++++++++++++++

கிளியோபாத்ரா
அங்கம்:7 காட்சி:9

நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் கிளியோபாத்ராவின் அரண்மனை. காலை வேளை.

நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, ஆண்டனி, ஐரிஸ், எனோபார்பஸ் (ஆண்டனியின் ஆலோசகர்). கனிடியஸ் (ஆண்டனியின் போர்த் தளபதி)

காட்சி அமைப்பு: ஆண்டனி தன் மனைவியை மறந்து எகிப்தில் நிரந்தரமாகத் தங்கிக் கிடப்பது ரோமானியத் தளபதி அக்டேவியஸின் சினத்தைக் கிளப்புகிறது. படை திரட்டிக் கொண்டு அக்டேவியஸ் எகிப்த் நோக்கி வருகிறான். கிளியோபாத்ரா, எனோபார்பஸ் இருவரும் வரப் போகும் போரைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஆண்டனி விருந்தினர் அறையிலிருந்து வருகிறார். பின்னால் அவரது படைத் தளபதி கனிடியஸ் வருகிறான்.

கிளியோபாத்ரா: [ஆங்காரமாக] எனக்குத் தெரியும். அக்டேவியஸ் எகிப்த் நோக்கி ஒருநாள் படையுடன் வருவார் என்று. எகிப்த் அவரை எதிர்க்கத் தயாராக உள்ளது! நானும் போர் முனைக்குச் செல்வேன்! அதில் எந்த ஐயப்பாடும் கொள்ளாதே.

எனோபார்பஸ்: ஏன் மகாராணி? நீங்கள் ஏன் போரை முன்னடத்திச் செல்ல வேண்டும்?

கிளியோபாத்ரா: ஆண்டனியுடன் சேர்ந்து போரிடுவேன் எகிப்துக்காக. என்னை யாரென்று நினைத்தாய்? நான் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்தவள். என்னுடலில் ஓடுவது போர்க்குருதி, வெறும் நீர்க்குருதி யில்லை! எங்கள் நாட்டெல்லையில் கால்வைக்கும் எந்தப் பகைவரும் உயிருடன் மீள்வதில்லை! தெரிந்துகொள்.

எனோபர்பஸ்: [தலையைத் திருப்பி தனக்குள் முணுமுணுத்து] ஆண்குதிரைகளோடுப் பெண்குதிரைகளும் சேர்ந்து போருக்குப் போனால், ஆண்குதிரைகளின் கவனம் திரும்பிக் காணாமல் போகும். பெண்குதிரைகள் படைவீரரைக் கீழே தள்ளிவிட்டு, ஆண்குதிரைகளை நாடிச் செல்லும். குதிரைகளுக்குக் கொண்டாட்டம்! படைவீரருக்குத் திண்டாட்டம்.

கிளியோபாத்ரா: [கவனத்துடன்] என்ன முணுமுணுக்கிறாய் நீ? முகத்தை பார்த்து விளக்கமாகப் பேசு.

எனோபர்பாஸ்: மகாராணி! மன்னிக்க வேண்டும் என்னை! போரில் உங்கள் இருக்கை ஆண்டனிக்கு வியப்பூட்டும்! வேதனை யாக இருக்கும்! உங்களுக்கு எந்த விதக் காயமும் பட்டுவிடக் கூடாது என்று கவலைப் படுவார். அழகில் மயங்கிடும் ஆடவர் மனது எதிரிகளை முறியடிப்பதை மறந்து போகும். வனிதயரைப் பல மாதங்கள் பார்க்காத படைவீரர் பெண்ணைக் கண்டால் பித்தராய் ஆவார். அவரது கவனம் போரை மறந்து அழகைப் பார்க்கும். அதனால் படை வீரர் உயிருக்கே ஆபத்து வரலாம்! வாளேந்திய வீரர் மோகக் கனலில் மூழ்கிப் போவார். வனப்பு போர் வாள்களை மடக்கி விடும். கடைசியில் வாளுக்கும், வனப்புக்கும் ஏற்படும் போரில் மடிவது ஆடவர். ஆண்டனியின் எ•கு இதயம் உங்கள் இருக்கையால் உருகி விடும். ஏற்கனவே ரோமில் ஆண்டனி கோழையாக மெலிந்து விட்டார் என்ற புகார் எழுந்து விட்டது. அதனால் அவரது பெயர் தேய்ந்து வருகிறது. எகிப்தில் அலிகளும், அரசியின் அடிமைகளும் மேற்பார்வை செய்து புரியும் போரிது என்று ரோமானியர் எள்ளி நகையாடுகிறார்.

கிளியோபாத்ரா: [வெகுண்டெழுந்து] ரோமாபுரி மூழ்கிப் போகட்டும்! எம்மைக் கேலி செய்பவர் நாக்குகள் அழுகிப் போகட்டும்! அடிமைகளும், அலிகளும் நடத்தும் போர் என்று கிண்டல் செய்வோரை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். என்னைக் குறை கூறியது மகா அலெக்ஸாண்டரை அவமதித்ததாகும். ஐயாயிரம் மைல்கள் நடந்து ஆயிரக் கணக்கான படைவீரர்களை வழிநடத்தி மூன்றாண்டுகள் ஆசியாவைக் கலக்கியவர் அலெக்ஸாண்டர்! எகிப்தின் எல்லையைக் கூடத் தொடாத ரோமானியர் அலெக்ஸாண்டர் பரம்பரைப் படையினரை எள்ளி நகையாடுவதா? நான் போருக்கஞ்சி ஒளிந்து கொள்ள மாட்டேன்! முன்னின்று நடத்தி வெற்றிமாலை சூடுவேன்! தெரிந்து கொள்.

எனோபர்பாஸ்: மகாராணி! அடியேனின் கோரிக்கை! ரோமின் படைப்பலம் வலிமை மிக்கது! அவரது கப்பலிருந்து ஏவப்படும் தீக்கனல் ஏவுகணைகள் தாக்கி உங்கள் அழகிய மேனியில் கறைபட்டுவிடக் கூடாது. அதுதான் எனது அச்சம்! … அதோ! தளபதி ஆண்டனி வருகிறார்.

[ஆண்டனி அவரது படைத்தலை அதிபதி கனிடியஸ்யுடன் நுழைகிறார்]

ஆண்டனி: [சிந்தனையுடன்] அது எப்படி முடிந்தது? ஓரிரு நாட்களில் கடற்படை கொண்டு டோரின் நாட்டைக் கைப்பற்றினார் அக்டேவியஸ் என்பது வியப்பாக உள்ளது! மின்னடித் தாக்கல் போல் தெரிகிறது கானிடியஸ்!

கிளியோபாத்ரா: வேகத் தாக்குதலைப் பற்றி வியப்புறுவர் யார்? கண்காணிப்பற்ற, கவனமற்ற, கண்விழிப்பில்லா மனிதர்கள்தான்!

ஆண்டனி: நன்றாகத் திட்டுகிறாய் கிளியோபாத்ரா! பாராட்டுகிறேன் கண்ணே! … கானிடியஸ்! கடற்படை மூலமாகவே நாம் அக்டேவியஸைக் கலக்கி அடிப்போம்.

கிளியோபாத்ரா: வேறெந்த முறையில் அவரை விரட்ட முடியும்?

கானிடியஸ்: தளபதியாரே! ஏன் கடற்படை மூலமென்று எண்ணுகிறீர்? எனக்கு அப்படித் தோன்றவில்லை.

ஆண்டனி: அப்படித்தானே போரிட வருகிறார் அக்டேவியஸ்!

கானிடியஸ்: ஆண்டனி! சீஸரும், பெரிய பாம்ப்பியும் போரிட்ட அதே பார்ஸாலியா என்னும் தளத்தில் நாமும் கடல்யுத்தம் புரிவதா?

எனோபார்பஸ்: உங்கள் கடற்படைக்கு அத்தகைய வலுவில்லை ஆண்டனி! உங்கள் கப்பலைச் செலுத்த தகுந்த ஓட்டுநரில்லை! உங்கள் கடற்படை வீரர்கள் கழுதை மேய்ப்பவர்கள்! குடியானவராய் ரோமில் ஏர் உழுதவர்! அவர்கள் கடல் நீரை உழுது கப்பலை இயக்க அருகதை அற்றவர்! அக்டேவியஸ் கடற் போருக்கு அழைத்தால், நீங்கள் மறுப்பதில் அவமானமில்லை. அவசியம் மறுப்புக் கூறுங்கள்! பாம்ப்பியின் கப்பல் எடை குறைந்தது! எளிதில் செலுத்தப் படுவது! வேகமாய்ச் செல்வது! உங்களுடைய கப்பல் கனத்தது! மெதுவாய் ஊர்ந்து செல்வது. எதிரிகள் தாக்கிட வசதி அளிப்பது! தயது செய்து மறுப்பெழுதி அனுப்புங்கள் அக்டேவியஸ் தளபதிக்கு. தரைப் போரே நமக்குத் தகுந்தது!

ஆண்டனி: எனது ஒரே முடிவு கடற்போர்! கடற்போர்! கடற்போர்! எமது கப்பல் மெதுவாகச் சென்றாலும், எண்ணிக்கை மிக்கக் கனல் பீரங்கிகள் தாக்கிட உள்ளன. தகர்த்துவிடும் அவை எதிரிகளின் கப்பல்களை.

எனோபர்பாஸ்: மதிப்புக்குரிய தளபதி! உங்கள் தரைப்போர் யுக்தியைக் கைவிடுகிறீர்! உங்கள் தனித்துவப் படைத் தாக்கத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பிழக்கிறீர்! வெற்றிதரும் மலைர்ப் பாதையை விட்டுவிட்டு தோல்வி தரும் முட்பாதையைத் தேர்ந்தெடுக்கிறீர்!

ஆண்டனி: என் ஒரே முடிவு, கடற்போர்தான். அதில் எந்த மாற்றமுமில்லை எனக்கு.

கிளியோபாத்ரா: எங்களிடம் அறுபது போர்ப் படகுகள் உள்ளன. அக்டேவியஸ் கப்பலுக்கு எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல அவை.

ஆண்டனி: வேண்டாத கப்பல்களை எரிப்போம். அவற்றின் கப்பல் ஓட்டிநர் மற்ற கப்பல்களை நிரப்பட்டும். ஆக்டியம் நோக்கி நமது கடற்படை ஏகி அக்டேவியஸ் கடற்படையைத் தாக்க வேண்டும். ஒருவேளை நாம் தோற்றால் தளப்போரில் மீண்டும் தாக்கலாம். கனிடியஸ்! நமது பத்தொன்பது அணிப் படைகளைக் கப்பல்களில் ஏற்று! பன்னிரண்டாயிரம் குதிரைகளைப் பிரித்து ஒவ்வொரு கப்பலுக்கும் அனுப்பு.

[கனிடியஸ் போகிறான். அடுத்தொரு படை வீரன் வருகிறான்]

படைவீரன்: மேன்மைமிகு தளபதி! கடல் வழிப்போர் வேண்டாம். கீறல் விழுந்த நமது கப்பல்களை நம்பிக் கடற் போருக்குப் போக வேண்டாம். எகிப்தியரும், அந்நாட்டு அலிகளும் மீன் பிடிக்கப் போகட்டும்! தரையில் காலூன்றி ஒருவனுக்கு ஒருவனாய் எதிர் நின்று போரிடுவோம். அதில்தான் நமக்கு வெற்றி கிடைக்கும்.

ஆண்டனி: போதும் நிறுத்து! போ, போ உன் வேலையைச் செய்.

[ஆண்டனி கிளியோபாத்ரா, எனோபர்பாஸ் அடிமைகள் யாவரும் போகிறார்கள்]

படைவீரன்: [தனியாக] எது நடக்கக் கூடாது என்று எதிர்க்கிறோமோ, அதுதான் நடக்கிறது! தவிர்க்க வேண்டியது எதுவோ, அதுவே தலை விரித்தாடுகிறது! நாமெல்லாம் ஆடவர் ஆணைக்குக் கீழ் வேலை புரிய வில்லை! பெண்ணுக்குப் பணி புரியும், படை வீரராய் மாறி விட்டோம்! ஆண்டனி கிளியோபாத்ராவின் மீன் படகுகளை நம்பி ரோமுடன் போருக்குப் போகிறார். ரோமாபுரியின் கரடிக் கப்பல்கள் ஒரே பாய்ச்சலில் மீன் படகுகளைப் பற்றி விழுங்கி விடும்! பாவம் ஆண்டனி!

[போகிறான்]

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

9. Shakespeare’s Antony & Cleopatra Edited By: David Bevington [1988]

10 Shakespeare’s Antony & Cleopatra Edited By: M.R. Ridly [1993]

11 Life of Antony & Fulvia Wikipedia the Free Encyclopedia [http://en.wikipedia.org/wiki/Fulvia]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (April 25, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:7 காட்சி:8)

This entry is part [part not set] of 34 in the series 20070419_Issue

சி. ஜெயபாரதன், கனடா

எனது அங்கியைக் கொண்டுவா!
எனது மகுடத்தைச் சூட்டு!
என்னுள் எழும்பிடும் அழியா ஆசைகள்!
எகிப்தின் திராட்சைகள் இனி
என்னுதடை நனைக்கா! வேண்டாம்!
அதோ கேள் ஈராஸ்! ஆண்டனி
அழைக்கும் குரல் கேட்கும் எனக்கு!
அவரை நோக்கினால் என்மீது ஆசை எழும்!
உன்னத மானதென் செய்கை எனப் புகழ்வார்!
நான் புரிவதைக் கண்டு அவர்
நகைப்பது என் செவியில் கேட்கும்!
அக்கினி நான்! காற்றும் நான்! மற்ற
ஐம்புல உணர்வை விடுப்பேன் பிற
அடிப்படை வாழ்வின் தேவைக்கு! … கிளியோபாத்ரா

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

கதைச் சுருக்கம்: கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்!

முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் ஆண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த ஆண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. ஆண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் ஆண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை ஆண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன ஆண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.

ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்

நாடகப் பாத்திரங்கள்:
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:

கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கிளியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்

ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ், ரோமின் மூன்றாம் தளபதி
எனோபரஸ் (ஆண்டனியின் பாதுகாவலன்),
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
·பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன்)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)

கிளியோபாத்ரா
அங்கம்:7 காட்சி:8

ரோமா புரியின் நிலைமை: ·பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி ·புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள். எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனியை மைத்துனன் ஆக்கிக் கொள்கிறான். திருமணத்தைக் கேள்விப்பட்ட கிளியோபாத்ரா வெகுண்டெழுகிறாள். ஆண்டனி எகிப்துக்கு மீள்கிறான்.

++++++++++++++++++

கிளியோபாத்ரா
அங்கம்:7 காட்சி:8

நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் கிளியோபாத்ராவின் அரண்மனை. காலை வேளை.

நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, ஆண்டனி, அலெக்ஸாஸ், ஐரிஸ்

காட்சி அமைப்பு: அரண்மனைச் சிம்மாசனத்தில் கிளியோபாத்ரா சோகமாக அமர்ந்திருக்கிறாள். அலெக்ஸாஸ் ஆண்டனி வருகையை அறிவிக்கிறான்.

கிளியோபாத்ரா: ஐரிஸ்! எங்கே என்னருமை ஆண்டனி? காத்துக் காத்துக் கண்கள் களைத்து விட்டன. ஏன் இத்தனை நாட்கள் என்னைக் காண விரும்பாமல் ஒளிந்து கொண்டார்? எப்படி என்னை மறந்தார்? வந்தால் நான் அவரைக் காண விரும்பவில்லை என்று சொல். வந்த வழியே திரும்பிச் செல்லும்படிச் என்று சொல்! எனக்கும் அவருக்கும் என்ன உறவு?

ஐரிஸ்: மகாராணி! அதோ அலெக்ஸாஸ் முறுவலோடு வருகிறார். நல்ல செய்தி கொண்டு வருவது அவரது நடையிலே தெரிகிறது!

[அலெக்ஸாஸ் நுழைகிறான்]

அலெக்ஸாஸ்: மேன்மை மிகு மகாராணி! ரோமாபுரியின் முத்தலைவர்களில் மூத்தோரான ஆண்டனி வருகிறார்.

[ஆண்டனி மெய்க்காவலர் பின்னால் தொடரக் கிளியோபாத்ராவை நோக்கி வருகிறார். கிளியோபாத்ரா சட்டென எழுந்து விரைந்து சென்று ஆண்டனியைத் தழுவிக் கொள்கிறாள்]

கிளியோபாத்ரா: [மகிழ்ச்சியுடன் கண்களில் நீர் பொங்க] ஆண்டனி! என்னை எப்படி மறந்தீர்? என்னை ஒதுக்கி விட்டு வேறொருத்தியை மணந்து கொண்டீர்! எனது தூக்கத்தைக் கெடுத்து மன ஊக்கத்தை அழித்தீர்! எனது உணவை வெறுக்க வைத்தீர்! மதுவைக் குடிக்க விட்டு மயக்கத்தில் படுக்க வைத்தீர்! என் மன வேதனை அறியாமல் மரணத்தைத் தேட வைத்தீர்!

ஆண்டனி: [மனமுருகி] கண்ணே கிளியோபாத்ரா! உன்னை எப்போது காண்பேன் என்றுதான் நானும் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தேன். உன்னை என்றுமினிப் பிரிய மாட்டேன்! நானுன்னைப் பிரிந்தது தவிர்க்க முடியாதது! கண்ணே உன் மடியில்தான் நானினித் தலைவைத்து உறங்குவேன்! நீதான் எனக்கு! நீதான் எனக்கு ஆத்மா! நீயின்றி நான் வெறும் எலும்புக் கூடுதான்!

கிளியோபாத்ரா: [மனம் தெளிவுற்று] உண்மையாகவா? அப்படியானால் ஏன் அக்டேவியாவை எனக்குத் தெரியாமல் உடனே திருமணம் செய்து கொண்டீர்? அவளுக்கு என்னைப் போல் அழகிருக்கா? என்னைப் போல் அறிவிருக்கா? என்னைப் போல் ஆழ்ந்த அன்பிருக்கா? ஆட்சி புரிய என்னைப் போல் ஆண்மை யிருக்கா? என்ன உள்ளது அவளுக்கு? என்னை விட அக்டேவியா எந்த விதத்தில் உன்னத மானவள்? ஏனொரு விதவையை மணந்தீர்? அக்டேவியா உங்களுக்கு மனைவி! கிளியோபாத்ரா ஓர் ஆசைக் கிழத்தியா?

ஆண்டனி: [சிரித்துக் கொண்ட்] கண்ணே கிளியோபாத்ரா! எங்கள் திருமணம் ஒரு பொம்மைத் திருமணம்! உண்மையாக அக்டேவியா மீது எனக்கு விருப்போ, வெறுப்போ கிடையாது. அக்டேவியாவைத் தேடி நான் போகவில்லை! அவள் அழகில் நான் மயங்க வில்லை! விருப்பம் மாறி என்னை வெறுத்த தளபதி அக்டேவியஸ் எனக்களித்த தண்டனை அது! “ஒன்று, என் தங்கை அக்டேவியாவை மணந்து எனக்கு மைத்துனன் ஆகு! அல்லது எனக்குப் பகைவனாய் மாறி நீ தனித்துப் போ”, என்று அவன் போட்ட நிபந்தனையில் சிக்கிக் கொண்டேன். பாவம், பதியை இழந்த அந்தப் பெண்! அவள் மனதைக் கெடுத்தவன் அவள் ஒன்றுவிட்ட அண்ணன் அக்டேவியன். வேண்டா வெறுப்பாகத்தான் அவளை நான் ஏற்றுக் கொண்டேன்.

கிளியோபாத்ரா: [கண்களைக் கூர்ந்து நோக்கி] விருப்போ அல்லது வெறுப்போ கிடையா தென்றால், இப்போதே அக்டேவியாவை மணவிலக்கு செய்வீரா? அப்போதுதான் என் மனம் குளிரும்! இரவில் என்னருகில் படுத்துள்ள ஆண்டனி எனக்குரியவர் என்னும் உணர்ச்சி என்னுள் பொங்க வேண்டும். வேறொருத்தியின் பதி என்னருகில் படுத்துள்ளார் என்றால் எனக்கு நிம்மதி யில்லை! என்னுயிரான ஆண்டனியை வேறு எந்தப் பெண்ணும் பகிர்ந்து கொள்ள விடமாட்டேன்! அவளை மணவிலக்கு செய்வீரா? அதுவும் உடனே செய்வீரா ஆண்டனி!

ஆண்டனி: [கவனமாக] கண்ணே கிளியோபாத்ரா! அக்டேவியாவை மணமுறிவு செய்து முத்தளபதிகளில் ஒருவரை நான் இப்போது பகைத்துக் கொள்வது அறிவுள்ள செயலாகாது! நான் அக்டேவியஸின் எதிரியானால், ரோமானியரின் கோபத்துக்கு ஆளாவேன். ரோமானிய செனட்டருக்கு என்னைப் பிடிக்கும்! ஆனால் உன்னை பிடிக்காது! அக்டேவியாவை மணவிலக்கு செய்து விட்டால், செனட்டாரும் என்னை வெறுப்பார். என் தளபதி பதவி போய்விடும்! எனக்கு நீயும் வேண்டும்! செனட்டாரின் ஆதரவும் வேண்டும்! அல்லாவிடில் சீஸரின் முடிவுதான் எனக்கும் கிடைக்கும்!

கிளியோபாத்ரா: [கண்ணீர் பொங்கி] வேண்டாம், சீஸரின் முடிவு உங்களுக்கு வர வேண்டாம்! ரோமில் அன்று நான் பட்ட வேதனை போதும். அந்த கோர முடிவு உங்களுக்கு நேர வேண்டாம். பிறகு என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்?

ஆண்டனி: கண்ணே கிளியோபாத்ரா! கட்டிய மனைவியை விட்டு நான் ஏனிங்கு வந்தேன்? அக்டேவியாவைத் திருமணம் செய்தாலும், என்னிதயத்தில் ஒளிந்திருந்தவள் கிளியோபாத்ரா ஒருத்திதான்! அக்டேவியா என் அரசியல் மனைவி! எனது பொம்மை ராணி! நீதான் எனக்கு உண்மை ராணி! எப்படி அதை நான் நிரூபிக்க முடியும் உனக்கு?

கிளியோபாத்ரா: [அழுத்தமாக] ஏன் முடியாது? வாருங்கள், உறுதி மொழி கூறுங்கள், எங்கள் குல தெய்வம் முன்பாக! நான்தான் உங்கள் மனைவி என்று மெய்யாக தெய்வத்தின் முன்பு அறிவிப்பு செய்யுங்கள். எகிப்தின் காதிலும் விழட்டும்! ரோமின் செவிகளும் கேட்க வேண்டும்!

ஆண்டனி: கண்ணே, கிளியோபாத்ரா! அப்படி உடனே நான் அறிவிப்பது நமக்கு அபாயம் விளைவிக்கும். அக்டேவியாவை மணவிலக்கு செய்வதும் அப்படிச் சொல்வதும் ஒன்றுதான். சொல்லாமல் செய்ய வேண்டும். நமக்குள்ள உறவு யாருக்கும் தெரியக் கூடாது. நாம் கணவன் மனைவி போல் வாழப் போவதை எவரும் அறியக் கூடாது.

கிளியோபாத்ரா: [வெறுப்புடன்] ஆண்டனியின் கள்ளக் காதலியாக நானிருக்க விரும்ப வில்லை. எகிப்துக்கு ராணி நான்! எப்படிக் கள்ளக் காதலியாய் நான் அரசாள முடியும்? எகிப்த் மக்களுக்கு நான் எப்படி ஒரு வழிகாட்டியாக, மாதிரி ராணியாக சிம்மாசனத்தில் உட்காருவது? கிளியோபாத்ரா ·பாரோ பரம்பரையில் வந்தவள்! மகா அலெக்ஸாண்டர் வம்ச மரபில் பிறந்தவள்! எகிப்த் வரலாற்றில் ரோமானிய மகாவீரரின் மனைவி கிளியோபாத்ரா என்னும் உன்னத மதிப்பை நீங்கள் அளிக்க வேண்டும் எனக்கு!

ஆண்டனி: [சிரித்துக் கொண்டு] உன்னை மணந்து கொள்கிறேன் கிளியோபாத்ரா! ஆனால் ஒரு நிபந்தனை, அக்டேவியாவை நான் மணவிலக்கு செய்ய முடியாது. உனக்கு என்னிலையைப் புரிய வைக்கிறேன். ஒருபுறம் இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தாக்கத் தயாராக வாசலில் நிற்கிறான். மறுபுறம் அக்டேவியஸ் என்னை வெட்டி விட வாய்ப்பை எதிர்நோக்கி யுள்ளான். நான் தனித்து விடப் படுவேன். என்னை வேட்டையாட ரோமாபுரி வேங்கைகள் எகிப்தை நோக்கிப் பாய்ந்து வரும்!

கிளியோபாத்ரா: [ஆங்காரமாக] கவலைப் படாதீர் ஆண்டனி! அக்டேவியஸ் உங்களை வேட்டையாட வந்தால், எகிப்த் உங்களைப் பாதுகாக்கும். உங்களை எதிர்ப்பவர் எவரும் எகிப்தின் எதிரியாக எண்ணப்படுவார். எங்கள் படைவீரர் உங்கள் ஆணைக்குப் பணிவார். உங்களுக்காகப் போரிடுவார். நான் உங்களுடன் சேர்ந்து போரிடுவேன்.

ஆண்டனி: [மகிழ்ச்சியுடன்] மெச்சுகிறேன் கிளியோபாத்ரா! எகிப்த் படையினர் என் ஆணைக்குப் படிந்து போரிட்டால், அக்டேவியஸை நான் நசுக்கி விட முடியும்.

கிளியோபாத்ரா: எகிப்து எப்போதும் உங்கள் நாடு. நீங்கள் கப்பலில் நெடுந்தூரம் பயணம் செய்துள்ளீர்! ஓய்வெடுக்க வேண்டும். விருந்தினர் அறை உங்களுக்காக அலங்கரிக்கப் பட்டிருக்கிறது. நிம்மதியாகத் தூங்கிடுவீர்.

[கிளியோபாத்ராவை முத்தமிட்டு ஆண்டனி விருந்தினர் அறைக்குச் செல்கிறார்]

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

9. Shakespeare’s Antony & Cleopatra Edited By: David Bevington [1988]

10 Shakespeare’s Antony & Cleopatra Edited By: M.R. Ridly [1993]

11 Life of Antony & Fulvia Wikipedia the Free Encyclopedia [http://en.wikipedia.org/wiki/Fulvia]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (April 18, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்:7 காட்சி:7)

This entry is part [part not set] of 33 in the series 20070405_Issue

சி. ஜெயபாரதன், கனடா

எல்லா வற்றையும் நம்ப வேண்டாம்!
அவ்விதம் நீவீர் நம்பினால்
எல்லா வற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டாம்!
உங்களுக்கும் என் சகோதர னுக்கும்
பிளவு ஏற்பட்டால், வேதனைப் பட்டு
பேரளவு வருத்தம் அடைபவள் நான்! … (அக்டேவியா)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

நல்ல தெய்வங்கள் எள்ளி நகையாடும் என்னை!
கணவர் வெற்றி பெற வேண்டு மென்று
கடவுளை நான் வேண்டிக் கொண்டால்
தமையன் தோல்வி அடைவார்!
உடனே அவ்விதம் வேண்டாம் என்றலறித்
தமையன் வெல்லட்டும் என்று விழைகிறேன்!
கணவன் வெல்க! தமையன் வெல்க!
என மாறி, மாறி நான் வேண்டினால்
என் துதிப்பே அடுத்த துதிப்பை அழித்திடும்!
நடுவழி யில்லை இச்சையின் எல்லை இரண்டில்!

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

Fig. 1
Antony & Octavia

கதைச் சுருக்கம்: கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்!

முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் ஆண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த ஆண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. ஆண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் ஆண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை ஆண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன ஆண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.

ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்

நாடகப் பாத்திரங்கள்:
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:

கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கிளியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்

ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ், ரோமின் மூன்றாம் தளபதி
எனோபரஸ் (ஆண்டனியின் பாதுகாவலன்),
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
·பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன்)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)

Fig. 2
Octavia Going as a Messenger

கிளியோபாத்ரா
அங்கம்:7 காட்சி:7

ரோமா புரியின் நிலைமை: ·பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி ·புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள். எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனியை மைத்துனன் ஆக்கிக் கொள்கிறான். திருமணத்தைக் கேள்விப்பட்ட கிளியோபாத்ரா வெகுண்டெழுகிறாள். ஆண்டனி எகிப்துக்கு மீள்கிறான்.

++++++++++++++++++

கிளியோபாத்ரா
அங்கம்:7 காட்சி:7

நேரம், இடம்: ரோமிலே ஆண்டனியின் அரண்மனை. காலை வேளை.

நாடகப் பாத்திரங்கள்: ஆண்டனி, புது மனைவி அக்டேவியா

காட்சி அமைப்பு: அக்டேவியஸ் தளபதி மீது புகார்களைக் கூறிக் கொண்டு ஆண்டனி கோபத்தோடு அங்குமிங்கும் நடமாடுகிறார். அக்டேவியா தன் சகோதரன் செய்த குற்றங்களைத் தெரியாதவள் போன்று காட்டிக் கொள்கிறாள்.

ஆண்டனி: அவை மட்டுமல்ல கண்ணே அக்டேவியா! உன்னருமைச் சகோதரன் அக்டேவியஸ் என்னை அவமதித்துச் செய்த அற்ப வினைகள் ஆயிரக் கணக்கானவை! எதை மன்னிப்பது, எதைத் தண்டிப்பது என்று உறுதிப் படுத்த முடியாது. அவர் செய்த பெரும் தவறு இளைய பாம்ப்பியின் மீது புதிய போர்களைத் துவக்கியது, எனக்கு அறிவிக்காமல்! நம்முடன் போரிடப் போவதில்லை என்று பாம்ப்பி என்னிடம் கூறியதை அவர் நம்பவில்லை. ரோம் போரிடப் போவதாகக் கூறி நகரெங்கும் முரசடித்து விட்டார்! என்னப் பற்றி அவதூறாகப் பேசி யிருக்கிறார்! அதுவும் என் காதில் எட்டி விட்டது. என் தங்கையின் கணவர் நீ, என்னருமை மைத்துனர் நீ என்று என் முன்னால் காது குளிரப் பேசுகிறார், உன் சகோதரன். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் உத்தமரை என்ன செய்வது, அக்டேவியா! சொல். என்னுடன் கைகுலுக்கும் போது அவர் கைதான் சூடாக உள்ளது! ஆனால் உள்ளத்தில் வீசுவது குளிர் காற்று! நொய்ந்து நோய்ப்பட்டு ஈரம் வற்றிப் போன நெஞ்சம். நான் நல்ல ஒத்துழைப்பைக் கொடுத்தாலும், உள்ளத்திலிருந்து நன்றி பிறக்காமல், அவரது கோரப் பற்கள்தான் பதில் உரைக்கின்றன.

அக்டேவியா: என்னருமைப் பிரபு! எல்லாவற்றையும் நம்ப வேண்டாம்! அப்படி நம்பினால் நீங்கள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டாம்! உங்களுக்கும் சகோதனுக்கும் பிளவு ஏற்பட்டால், வேதனைப்படும் அபாக்கியவதி நான்தான்! சகோதரனை நீங்கள் வெறுக்கலாம். ஆனால் அக்டேவியஸை என்னால் வெறுக்க முடியாது. அவரை நீங்கள் திட்டும் போதெல்லாம், அந்த அடி என் நெஞ்சில் படுகிறது. உங்கள் இருவரிடையே நின்று இருபுறமும் அடி வாங்கிக் கொள்கிறேன். அப்போது உங்களுக்கும், சகோதரனுக்கும் பிரார்த்தனை செய்கிறேன். நீங்கள் போடும் ஊமைச் சண்டையில் பாதிக்கப் பட்டு மனமுடைந்து போவது நான்!

Fig. 3
Octavia Leaving Antony

ஆண்டனி: உன் தமையனுக்கு என்னை எப்போதுமே பிடிக்காது! உன்னை மணந்த பின் அவர் மாறுவார் என்றெண்ணி ஏமாந்தேன்! எனக்குத் தெரியாமல் போருக்கு மறுபடியும் ஏற்பாடு செய்கிறார்! அது எனக்குப் பிடிக்க வில்லை! ரோமுக்கும் அது உகந்ததல்ல.

அக்டேவியா: நல்ல தெய்வங்கள் எள்ளி நகையாடும் என்னை! கணவர் வெற்றி பெறச் செய்யென்று, கடவுளைத் துதித்தால் தமையன் தோல்வி அடைவார்! உடனே அவ்விதம் வேண்டாம் என்று அலறி தமையன் வெல்லட்டும் என்று நான் விழைகிறேன்! கணவன் வெல்க, தமையன் வெல்க என்று மாறி, மாறி நான் வேண்டினால் என் துதிப்பே என் துதிப்பினை அழித்திடும்! நடுவழி யில்லை எல்லை கடந்த எனது இச்சை இரண்டுக்கும்!

ஆண்டனி: கண்ணே, அக்டேவியா! ஒருவரை ஒருவர் பல்லாண்டுகள் வெறுக்கும் தளபதிகள் இருவரை ஒரே சமயத்தில் ஒரே தன்மையில் நீ நேசிக்கிறாய்! யாராவது ஒருவர் பக்கம் சேர்ந்து கொள்! எனக்குக் கவலை யில்லை நீ உன் தமையன் பக்கம் சேர்ந்தால். என் தன்மானம்தான் எனக்குப் பெரியது! அது அழிந்து போனால் நானோர் ஆண்மகனில்லை! உனக்காகவோ, உன் தமையனுக்காகவோ நான் என் சுயமதிப்பை இழக்க மாட்டேன்! உன் சகோதரனுக்காக நான் உன்னை இழக்க நேர்ந்தாலும், கவலைப் படமாட்டேன்.

அக்டேவியா: என்னருமை ஆண்டனி! அப்படி எல்லாம் சொல்லாதீர். நீங்கள்தான் முதலில் எனக்கு முக்கிய நபர்! ஆனால் பாசம் சகோதரர் மீது பாய்வதை என்னால் தடுக்க முடியவில்லை. … நானொன்று செய்ய விரும்புகிறேன். உங்களுக்காக, நான் தூது செல்கிறேன். தமையனை உங்களுடன் பிணைப்பதற்காக நான் தூது செல்கிறேன். அதை என் விருப்பம் ஆண்டனி.

ஆண்டனி: அப்படி நீ பிணைக்க முனைவதை நான் தடுக்க மாட்டேன்! ஆனால் அக்டேவியஸ் கடுஞ்சினம் கொண்டவர்! எளிதாக எதனையும் நம்பாதவர். நல்லது. நீ தூது செல்! அவர் வெறுப்பு தணிந்து என்னுடன் நட்பு கொண்டால் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் அது நடக்குமா?

அக்டேவியா: நிச்சயம் நான் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பேன். என் உறவுத் தூது வெற்றியடைய வாழ்த்துவீர், என்னருமை ஆண்டனி!

ஆண்டனி: போய்வா கண்மணி! உன் தூது எமக்குள் மீண்டும் உறவை உண்டாகட்டும்! அக்டேவியஸை மீண்டும் எனது மைத்துனன் ஆக்கு! உன் பிரார்த்தனையால் எங்கள் உறவு உறுதியாகட்டும். நீ தூது செல்! நான் எகிப்துக்குச் செல்ல வேண்டும். நான் விட்டு வந்த பணிகளை முடிக்க வேண்டும்.

அக்டேவியா: நன்றி ஆண்டனி. தூது செல்கிறேன். நல்ல செய்தியுடன் உங்களை எகிப்தில் சந்திப்பேன். விடை பெறுகிறேன்.

Fig. 4
Mark Antony Leaving to
Egypt

ஆண்டனி: போய்வா கண்ணே, போய்வா! நிச்சயம் எகிப்தில் சந்திப்போம், கிளியோபாத்ரா அரண்மனையில்.

அக்டேவியா: கிளியோபாத்ராவின் மயக்க மாளிகையில் என்னை மறக்காமல் தினமும் நினைப்பீரா ? எனக்குக் கடிதம் எழுதுவீர், வாரம் ஒருமுறை. அப்படி நீங்கள் எழுதா விட்டால், எகிப்துக்கு நான் முன்பாகவே புறப்பட்டு விடுவேன். [ஆண்டனியை முத்தமிட்டுப் போகிறாள்]

ஆண்டனி: கவலைப் படாதே கண்மணி! வாரமொரு கடிதம் உனக்கு வரும். நல்ல செய்தி எனக்குக் கொண்டுவா. … மதி எங்களைச் சேர்க்க நினைத்தாலும், விதி உறவை அறுத்து விடுகிறது. உறவு ஒரு முட்டை போன்றது. ஒருமுறை கீறல் உண்டாகி அது பிளந்து விட்டால், அதை ஒட்டி வைக்க முடியாது. கிளியோபாத்ராவை நான் உடனே காண வேண்டும். அவளுடன் ஒட்டிக் கொண்ட என் உறவை விதி வெட்ட முடியாது. ஆயிரம் மாதர் என்னைத் தேடினாலும், என் மனம் நாடுவது கிளியோபாத்ராவை! அக்டேவியாவின் பிரிவு என்னை உறுத்தாமல் இருக்க நான் எகிப்துக்குச் செல்ல வேண்டும். என் உடல் உள்ளது ரோமில்! ஆனால் என் ஆத்மா உள்ளது எகிப்தில்! ரோமாபுரி சாம்ராஜியத்தில் அடங்கியது எகிப்தின் ஆத்மா! ரோமும், எகிப்தும் சேரும் போதுதான் உடலும், உயிரும் கூடி இன்பம் அடைகிறது. [போகிறான்]

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

9. Shakespeare’s Antony & Cleopatra Edited By: David Bevington [1988]

10 Shakespeare’s Antony & Cleopatra Edited By: M.R. Ridly [1993]

11 Life of Antony & Fulvia Wikipedia the Free Encyclopedia [http://en.wikipedia.org/wiki/Fulvia]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (April 4, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:7 காட்சி:6)

This entry is part [part not set] of 37 in the series 20070329_Issue

சி. ஜெயபாரதன், கனடா

மேதகு மாண்புடை ராணி! உங்களை
யூத மன்னன் ஏரோத் கூட
கண்முன் காண அஞ்சுவான், சினத்துடன்
களிப்பு மாறிக் கடுகடுக்கும் போது! …. (அலெக்ஸாஸ்)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

அந்த ஏரோத் மன்னன் தலையை வாங்குவேன்!
ஆண்டனி முன்னின்றி ஆணையிட் டவரைத்
தூண்ட முடியாது எப்படித் தலை அறுப்பேன்? …. (கிளியோபாத்ரா)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

(அக்டேவியா) என்னை விட உயரமா? …
அவள் பேசக் கேட்டாயா? வாய்க்குரல் கீச்சலா? …
கோழை மனதா? குள்ள மாதா?
நீண்ட காலம் அவளுடன்
ஆண்டனி வாழ மாட்டார்!
மந்த புத்திக் காரி! குள்ளி! ….
கம்பீரத் தோற்றம் கொண்டவளா? … (கிளியோபாத்ரா)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

Fig. 1
Antony & Octavia

கதைச் சுருக்கம்: கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்!

முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் ஆண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த ஆண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. ஆண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் ஆண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை ஆண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன ஆண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.

Fig. 1A
Octavia under Stress

ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்

நாடகப் பாத்திரங்கள்:
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:

கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கிளியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்

ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ், ரோமின் மூன்றாம் தளபதி
எனோபரஸ் (ஆண்டனியின் பாதுகாவலன்),
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
·பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன்)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)

கிளியோபாத்ரா
அங்கம்:7 காட்சி:6

ரோமா புரியின் நிலைமை: ·பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி ·புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள். எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனியை மைத்துனன் ஆக்கிக் கொள்கிறான். திருமணத்தைக் கேள்விப்பட்ட கிளியோபாத்ரா வெகுண்டெழுகிறாள். ஆண்டனி எகிப்துக்கு மீள்கிறான்.

++++++++++++++++++

Fig. 1B
Cleopatra, Alexsas &
Messenger

கிளியோபாத்ரா
அங்கம்:7 காட்சி:6

கிளியோபாத்ரா
அங்கம்:7 காட்சி:6

நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் கிளியோபாத்ராவின் அரண்மனை. பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, தோழிகள்: ஈராஸ், சார்மியான், பணியாள் அலெக்ஸாஸ், தூதுவன்

காட்சி அமைப்பு: அலெக்ஸஸ் ரோமுக்குப் போக முடியாமல் ரோமுக்கு அனுப்பிய தூதுவன் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான். அப்போது கிளியோபாத்ரா நுழைகிறாள்.

கிளியோபாத்ரா: அலெக்ஸாஸ்! நீதான் ரோமுக்குப் போக வில்லை. யாரை அனுப்பினாய் ரோமுக்கு? ஆண்டனி எப்போது அலெக்ஸாண்டியாவுக்கு வருகிறார்? அக்டேவியா எப்படி இருக்கிறாள் நான் என்று தெரிய வேண்டும்.

அலெக்ஸாஸ்: உங்களிடம் போன தடவை உதை வாங்கினானே, அதே தூதுவன்தான் போயிருக்கிறான். வந்து விட்டான் இப்போது.

கிளியோபாத்ரா: எங்கே அந்தத் தூதுவன்?

அலெக்ஸாஸ்: மகாராணி! உங்கள் முன்வரப் பயந்து போய் ஒளிந்து நிற்கிறான்.

Fig. 2
Cleopatra Ridiculing
Octavia

கிளியோபாத்ரா: [கோபமாக] வரச் சொல் அவனை! போன தடவை என்முன் வந்ததால் அடி வாங்கினான்! இந்த தடவை என்முன் வராததால் அடி வாங்கப் போகிறான்! உடனே அழைத்து வா அவனை!

அலெக்ஸாஸ்: மேதகு மகாராணி! உங்கள் முகம் கடுகடுப்பாய் உள்ள போது, யூதர்களின் அந்த கோர மன்னன் ஏரோத் கூட உங்களுக்கு நேரே நிற்கப் பயப்படுவான். உங்கள் சினத்துக்கு அஞ்சாத ஆண் புலிகள் அலெக்ஸாண்டிரியாவில் கிடையாது.

கிளியோபாத்ரா: போதும் நிறுத்து, அலெக்ஸாஸ்! ஏரோத் எதிரே என்முன் நின்றால், நானே அவன் தலையை வாளால் சீவி விடுவேன்! அந்த பாப வேலையை ஆண்டனி வாளால் செய்ய ஆணை யிடுவேன். ஆனால் ஆண்டனி அருகிலில்லை! ரோமில் அக்டேவியாயை முத்தமிட்டுக் கொண்டிருக்கிறார்! தூதுவனை அழைத்து வா என் கோபம் எரிமலையாய் வெடிக்கும் முன்பு!

[அலெக்ஸாஸ் வெளியே போய் தூதுவனை அழைத்து வருகிறான். அஞ்சி நடுங்கிய வண்ணம் அலெக்ஸாஸ் பின்னால் நடந்து வருகிறான். அடி வாங்கினாலும் தாங்கிக் கொள்ள, எ·குக் கவசம் அணிந்துள்ளான்.]

அலெக்ஸாஸ்: வா, பயப்படாமல் வா. உனக்கு ஒன்றும் நேராது. அடி விழுந்தாலும், உனக்குக் கவசம் உள்ளது.

கிளியோபாத்ரா: நீ பயந்து கொண்டு வருவதைப் பார்த்தால், பாதகச் செய்தி கொண்டு வருவது போல் தோன்றுகிறது எனக்கு!
ஆண்டனியிடம் என் கடிதத்தைக் கொடுத்தாயா? அக்டேவியாவைப் பார்த்தாயா?

தூதுவன்: [மண்டியிட்டு வணங்கித் தழுதழுத்த குரலில்] மகாராணி! தங்கள் கடிதம் கண்டு ஆண்டனி களிப்படைந்தார். இதோ அவரது பதில் கடிதம் தங்களுக்கு. [கடிதத்தைக் கொடுகிறான்]. ஆம் அக்டேவியாவைப் பார்த்தேன்.

கிளியோபாத்ரா: [கடிதத்தை வாங்கிக் கொண்டு] எங்கே பார்த்தாய் அக்டேவியாவை?

Fig. 3
Cleopatra in Her Palace

தூதுவன்: மகாராணி, ரோமில் பார்த்தேன். திருமணம் ஆயினும், அக்டேவியாவின் முகத்தில் நான் மகிழ்ச்சியைக் கணவில்லை! திருமணம் நடந்தாலும், ஆண்டனிக்கும் அவளுடைய சகோதரர் அக்டேவியஸ¤க்கும் மனப்பிளவு மறுபடியும் உண்டாவதாகக் கேள்விப்பட்டேன். ஒரு பக்கம் அன்புக் கணவர் ஆண்டனி! மறு பக்கம் ஆற்றல் மிக்க சகோதரர் அக்டேவியஸ்! இரண்டுக்கும் இடையில் அக்டேவியா நசுக்கப் படுகிறாள்.

கிளியோபாத்ரா: [சிரிக்கிறாள்] நல்ல செய்தி அல்லவா அது? நசுங்கிச் கசங்கட்டும் அவள்! என் நெஞ்சை வெந்து போக வைத்தவள்! உன் தகவல் என் நெஞ்சைக் குளிரச் செய்கிறது. ஆண்டனியின் பக்கம் அவள் சேர்ந்தால், அக்டேவியஸ் அவளை ஒதுக்கி விடுவார். அக்டேவியஸின் பக்கம் அவள் சேர்ந்தால் ஆண்டனி அவளைப் புறக்கணிப்பார்! .. ஆமாம், என்னைப் போல் அவள் உயரமா?

தூதுவன்: இல்லை மகாராணி! அக்டேவியா குட்டை! மிகவும் குட்டை! ஆண்டனியின் மார்பு உயரம் கூட இல்லை. முத்தம் கொடுக்க வேண்டு மென்றால், அக்டேவியாவைத் தூக்கித்தான் அவர் முத்தமிட வேண்டும்.

கிளியோபாத்ரா: [சிரித்துக் கொண்டு] அவள் குள்ளச்சியா? அப்படித்தான் இருப்பாள் என்று நினைத்தேன். குட்டை மாதையும், நெட்டை ஆணையும் பார்த்தால் தந்தை, மகளைப் போல் தெரிவார்கள். ஆண்டனி நடக்கும் போது அவளைப் பின்னே விட்டுத் தான் முன்னே வருவார். யாரும் சிரிக்காமல் இருக்க வேண்டுமே! அவள் குரல் எப்படி உள்ளது? குருவி போல் கீச்சுக் குரலா?

தூதுவன்: ஆமாம் மகாராணி! தாங்கள் சொல்வது சரியே! தாழ்வான குரல், மேலான குடும்பத்தில் பிறந்தாலும்! கிணற்றுக் குள்ளிருந்து பேசுவது போல் தணிந்த குரல்! கேட்போருக்குக் காதுதான் நீள வேண்டும்!

கிளியோபாத்ரா: என்னை மாதிரிப் பரம்பரை ராஜ வம்சத்தில் பிறந்தவள் ரோமில் எங்கே கிடைப்பாள்? ஆண்டனிக்கு ஏற்ற அரசிளங் குமரி எகிப்தில் காத்திருக்க, வேண்டாத குள்ளியை எப்படி அவர் ஏற்றுக் கொள்ளலாம்? எனக்குள்ள வீரம், கம்பீரம், ஆடம்பரம் அக்டேவியாவுக்கு உள்ளதா? ஆண்டனி என்னை மணந்தால், எகிப்த் நாட்டையே அவருக்குச் சீராக அளிப்பேன்! அக்டேவியாவை மணந்த ஆண்டனிக்குப் படுத்துக் கொள்ள ஓர் அரண்மனை கூடக் கிடைக்காது! வேறென்ன விகாரங்கள் அக்டேவியாவுக்கு? சொல்!

Fig. 4
Cleopatra thinks of Anthony

தூதுவன்: நடக்கும் போது நண்டு போல் ஊர்ந்து செல்கிறாள்! நடப்பதும் நிற்பதும் ஒரே மாதிரி! அக்டேவியாவைப் பார்த்தால் உடல்தான் தெரிகிறது! உயிரோட்டமே தெரியவில்லை! நட்ட சிலைப் போல் உள்ளாள்! சுவாசிக்கும் ஓர் உயிர்ப் பிறவியாகக் காணப்பட வில்லை அவள்!

கிளியோபாத்ரா: [வெடிப்புச் சிரிப்புடன்] உண்மையாகவா? குட்டைப் பெண்ணை அக்டேவியஸ் ஆண்டனியின் தோளில் சுமக்க வைத்தது வெகு சாமர்த்தியம்! ஆண்டனியை மைத்துனனாய் வாங்கியது ஒரு பெரும் ராஜ தந்திரம்! அடுத்து என்ன சொல்ல வைத்திருக்கிறாய்?

தூதுவன்: மகாராணி! முக்கியமான தகவலிது! சொல்ல மறந்துவிட்டேன்! நினைவில் இப்போதுதான் வந்தது! அக்டேவியா ஒரு விதவைப் பெண்! கணவனை இழந்தது சமீபத்தில்தான்! அவளுக்கு முப்பது வயதிருக்கலாம் என்று கேள்விப்பட்டேன்!

கிளியோபாத்ரா: [கண்களில் கனல் பறக்க] விதவைப் பெண்ணா அவள்? மெச்சுகிறேன் அக்டேவியஸ் திறமையை! அவள் ஒரு விதவையா? ஆண்டனியை ஏமாற்றி விலை போகாத குதிரையை எப்படி வாங்க வைத்தார்? நேற்றுக் கணவனைப் பறிகொடுத்தவள் எப்படி யின்று ஒருவரை ஏற்றுக் கொண்டாள்? வியப்பாக உள்ளதே! நானும் விதவை மாதுதான்! ஆனால் சீஸர் மாண்ட பத்தாவது நாளே நான் திருமணம் செய்ய வில்லை! … அவள் முகம் வட்டமாக உள்ளதா? கோழி முட்டை மாதிரி உள்ளதா?

தூதுவன்: வட்ட முகம்தான் மகாராணி! அதிலும் கோண வட்டம்தான்! முழுமதி போலில்லை! பதிமூன்றாம் நாள் பிறை போல் முகம்! பார்க்கச் சகிக்க வில்லை!

Fig. 5
The Unhappy Cleopatra

கிளியோபாத்ரா: பதிமூன்றாம் நாள் பிறையா? நல்ல உதாரணம்தான்! அக்டேவியாவுக்குச் சட்டி மூஞ்சி நேராகச் சொல்! முக அம்சம் கூட இல்லையா? கூந்தல் என்ன நிறம்? கூந்தல் நீளமாகத் தொங்குதா?

தூதுவன்: கூந்தல் பழுப்பு நிறம்! நீளமான கூந்தல்தான்! பொய் முடியாக இருக்குமோ என்று சந்தேகப் படுகிறேன்! நெற்றி சிறியது!

கிளியோபாதரா: [புன்னகையுடன்] ஈதோ, வாங்கிக் கொள் பொற்காசுகளை. நல்ல தகவல் இம்முறை கொண்டு வந்திருக்கிறாய்! சரி, போய் வா! [தூதுவன் போகிறான். சார்மியானைப் பார்த்து] சார்மியான்! ஆண்டனி புது மணப்பெண் மோகத்தில் மயங்கிக் கிடக்கிறார்! ஆசை அறுபது நாள்! மோகம் முப்பது நாள்! காமம் சொற்ப நாழி! ரோமின் தைபர் நதி ஆண்டனியின் தாகத்தைத் தீர்க்காது! தாகம் தீராத ஆண்டனி நைல் நதியைத் தேடித்தான் வருவார்! எப்போது வருவார் என்பதுதான் தெரிய வேண்டும் எனக்கு. எகிப்துக்கு ஆண்டனியைக் கவர்ந்து வர என்ன தந்திரம் செய்யலாம்? வந்து என் கண்வலையில் மாட்டிக் கொண்ட ஆண்டனியை அரண்மனையில் கட்டிப் போட என்ன செய்யலாம்? சொல் சார்மியான்! சொல்!

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

9. Shakespeare’s Antony & Cleopatra Edited By: David Bevington [1988]

10 Shakespeare’s Antony & Cleopatra Edited By: M.R. Ridly [1993]

11 Life of Antony & Fulvia Wikipedia the Free Encyclopedia [http://en.wikipedia.org/wiki/Fulvia]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (March 28, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:7 காட்சி:5)

This entry is part [part not set] of 32 in the series 20070322_Issue

சி. ஜெயபாரதன், கனடா

என் தூண்டிலை எடுத்து வா!
நைல் நதியில் மீன் பிடிக்கப் போவோம்!
இன்னிசை அங்கே பின்னணியில் கேட்க
வஞ்சிப்பேன் செதில் முளைத்த மீன் குழுவை!
வளைந்த கொக்கி வாயைக் குத்தி
இழுத்திடும் போது அவை அனைத்தும்
ஆண்டனி என நினத்துக் கூறுவேன்:
“ஆகா! நீ அகப்பட்டுக் கொண்டாய்” …. கிளியோபாத்ரா

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

அந்தக் காலமது! அப்போது ஒருநாள்
ஆண்டனி பொறுமையைச் சோதிக்க
அவரை எள்ளி நகை யாடினேன்!
அன்றிரவு அமைதிப் படுத்தி
முன்னே புன்முறுவல் புரிந்தேன்!
அடுத்த நாள் காலை அவரை
படுக்கையில் தள்ளினேன்,
மதுவினைக் கொடுத்து!
முகத்திரை அங்கியால் மூடி அவரது
வெற்றி வாளை உருவிக்
பற்றினேன் என் கையில்! …. கிளியோபாத்ரா

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

“ஆண்டனி செத்தார்” என்று நீ சொன்னால்
மாண்டு போவாள் உன்னாசை ராணி!
உயிருடன் சுகமாய் உள்ளார் என்றால்
உனக்கு ஈதோ பொற் காசுகள்!
மன்னர் நக்கி முத்தமிட நடுங்கும்
என் கரங்கள் ஈதோ நீ முத்தமிட! …. கிளியோபாத்ரா

வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]

பேசு முன்னே உன்னை அடித்திட
என் மனம் துடிக்கும்.
ஆண்டனி நலமென்றால்
அது போது மெனக்கு!
அக்டே வியாக்கு நண்பன்,
ஆண்டனி போரில் பிடிபட வில்லை
என்றால் பொழிவேன் பொற்காசு பரிசு!
செல்வ முத்துக்கள் அள்ளித் தருவேன். …. கிளியோபாத்ரா

வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]

ஆண்டனியை நான் புகழ்வதால்
அக்டேவியஸின் பகை யானேன் …. கிளியோபாத்ரா

வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]

கதைச் சுருக்கம்: கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்!

முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் ஆண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த ஆண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. ஆண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் ஆண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை ஆண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன ஆண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.

ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்

நாடகப் பாத்திரங்கள்:
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:

கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கிளியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்

ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ், ரோமின் மூன்றாம் தளபதி
எனோபரஸ் (ஆண்டனியின் பாதுகாவலன்),
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
•பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன்)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)

கிளியோபாத்ரா
அங்கம்:7 காட்சி:5

ரோமா புரியின் நிலைமை: •பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி •புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள். எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனியை மைத்துனன் ஆக்கிக் கொள்கிறான். திருமணத்தைக் கேள்விப்பட்ட கிளியோபாத்ரா வெகுண்டெழுகிறாள். ஆண்டனி எகிப்துக்கு மீள்கிறான்.

++++++++++++++++++

கிளியோபாத்ரா
அங்கம்:7 காட்சி:5

நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் கிளியோபாத்ராவின் அரண்மனை. பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, தோழிகள்: ஐரீஸ், ஈராஸ், சார்மியான், மர்டியான் [அலி], பணியாள் அலெக்ஸாஸ்.

காட்சி அமைப்பு: கிளியோபாத்ரா ஆண்டனி எகிப்துக்கு மீண்ட செய்தியைக் கேள்விப்பட்டுப் பரபரப்புடன் இருக்கிறாள். ரோமுக்கு அனுப்பிய தூதுவன் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

கிளியோபாத்ரா: [மனக் கவலையுடன்] ஐரீஸ்! வாத்திய இசைக் குழுவை அழைத்துவா! துயர்க்கடலில் மூழ்கிப் போன என்னை இன்னிசைதான் கரை சேர்க்க வேண்டும்! என் மன வேதனை தீருவது எப்போது? மதுவும் கசந்தது! படுக்கையும் முள்ளானது! நேற்றிரவில் எனக்குத் தூக்க மில்லை! ஏன், நிற்கிறாய் போ அழைத்துவா! [ஐரீஸ் போகிறாள்] சார்மியான், வா நாம் பில்லியர்டு விளையாடுவோம்.

சார்மியான்: மகாராணி! என் கையில் காயம் பட்டு விட்டது. என்னால் விளையாட முடியாது. மர்டியான் கூட விளையாடுங்கள்.

கிளியோபாத்ரா: மர்டியான் ஓர் அலி! அது ஆணுமில்லை! பெண்ணுமில்லை! மரப் பொம்மை அது! மரப்பாச்சிப் பொம்மையோடு குழந்தைதான் விளையாடும். பெண்ணோடு பெண் விளையாடுவதில் பேரின்பம்! சார்மியான் வா! உன்னோடுதான் நான் விளையாடுவேன்! நீதான் எனக்கு அருமைத் தோழி!

[அப்போது வாத்திய இசைக்குழு நுழைகிறது]

சார்மியான்: ஈதோ, வாத்தியக் குழு வந்து விட்டது. மகாராணி கான வெள்ளத்தின் பின்னணியில் பில்லியர்டு விளையாடலாம்.

கிளியோபாத்ரா: [மனம் மாறி] வேண்டாம், நாமெல்லாம் நைல் நதிக்குப் போவோம்! எனது தூண்டிலை எடுத்துவா. மீன் பிடிக்கலாம். வாத்தியக் குழுவின் இசைப் பின்னணியில், நான் வஞ்சிப்பேன் செதில் முளைத்த மீன் குழுவை. தூண்டில் கொக்கி பிடித்து வாய் கிழியும் ஒவ்வொரு மீனையும் ஆண்டனி என்று நினைத்துச் சொல்வேன், “ஆஹா, என்னிடம் பிடிபட்டுக் கொண்டாய் ஆண்டனி.” என்று.

சார்மியான்: மகாராணி! ஆண்டனி ஒரு விநோத மீன்! அந்த மீனுக்கு இரட்டைத் தலை! அது முன்னும் போகும், திரும்பாமல் பின்னும் போகும்! ஒருமுகம் எகிப்தைப் பார்க்கும்! மறுமுகம் ரோமை நோக்கும்! அந்த இரண்டு வாயில் ஒரு வாயைத்தான் உங்கள் தூண்டில் கிழிக்கும்! அது எந்த வாய் என்று சொல்வீர்?

கிளியோபாத்ரா: நல்ல உவமை! ரோமைப் பார்க்கும் அந்த கோர முகத்தைக் கிழிக்கும் என் தூண்டில்! இரண்டு முகமும் என்னை நோக்க வேண்டும்! என்னைத்தான் தேட வேண்டும்! என்ன செய்யலாம் அதற்கு? எங்கே அந்த தூதுவன்? வந்து விட்டானா? ரோமில் ஆண்டனி என்ன செய்கிறார் என்று உளவு செய்யப் போனான்! … [சிரித்துக் கொண்டு] கால தேவன் அறிவான்! அன்றொரு நாள் நான் நகையாடிக் கேலி செய்து, ஆண்டனியின் பொறுமையைச் சோதித்தேன்! அன்றிரவு முறுவல் பூண்டு அவரை அமைதிப் படுத்தினேன்! அடுத்த நாள் காலையில் ஆண்டனியைக் குடிபோதையில் தள்ளிப் படுக்கையில் கிடத்தினேன். அதன் பிறகு என் முகத் துண்டையும், அங்கியையும் அவர் மீது போர்த்தி, அவரது உடை வாளைக் கைப்பற்றினேன்!

சார்மியான்: அப்படியா? அத்தனை பெரிய தளபதி ஆண்டனியை மடக்கிச் சிறைக்குள்ளே தள்ளிவிட்டீர்! வீரமும் வசீகரமும் சண்டை யிட்டால், வசீகரந்தான் வெல்லுகிறது! பெண்ணின் வசீகரமே ஆணின் வாளைவிடக் கூரியது!

[அப்போது ஒரு தூதுவன் வருகிறான். வணங்குகிறான்.]

கிளியோபாத்ரா: [கோபமுடன்] எங்கிருந்து வருகிறாய் ? இத்தாலியிருந்தா வருகிறாய்? நல்ல செய்தியா? அல்லது கெட்ட செய்தியா? செவிக் கினிய செய்தியைச் சொல்! நாட்கள் ஆகிவிட்டன நல்ல செய்தியைக் கேட்டு! சொல் என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறாய்?

தூதுவன்: [மண்டியிட்டு] வணக்கம், மகாராணி! … நான் சொல்ல வருவது…. என்ன வென்றால்..!

கிளியோபாத்ரா: [பொறுமையின்றி] செத்து விட்டார் ஆண்டனி என்றால் கொன்று விடுவாய் உன் ஆசை ராணியை! நலமுடன் உள்ளார், யாருடனும் இல்லாமல் தனியாக உள்ளார் என்றால், உனக்குப் பொற்காசு வெகுமதி கிடைக்கும். பேரரசர் நக்கி முத்தமிட நடுங்கும் என் கையை முத்தமிடத் தருவேன் உனக்கு!

[பொற்காசுகளைத் தந்து தன் கரத்தை நீட்டுகிறாள்]

தூதுவன்: [தயக்கமுடன், பயமுடன்] மகாராணி! முதல் செய்தி. … ஆண்டனி நலமாக உள்ளார்.

கிளியோபாத்ரா: [மகிழ்ச்சியுடன்] ஈதோ இன்னும் தருகிறேன் பொற்காசுகள்! அப்படி நல்ல செய்தியாகச் சொல். போருக்குப் போனவர் உயிரோடு உள்ளார்! அவர் சாகவில்லை! அது போதும். என் நெஞ்சில் தேன் ஊறுகிறது! அடுத்த நல்ல செய்தி என்ன?

தூதுவன்: ஆமாம், மகாராணி, அவர் உயிருக்கு ஒன்றும் நேரவில்லை. ஏனென்றால் எதிர்பார்த்தபடி போர் எதுவும் நிகழ வில்லை! ஆனால் மேலும் நான் சொல்லப் போவது ….. கோபம் ஊட்டலாம் உங்களுக்கு! … கேளுங்கள் மகாராணி!

கிளியோபாத்ரா: [கோபத்துடன்] என்ன ஆனால் ஆனால் …! எனக்குப் பிடிக்காது அந்த ஆனால்! நீ வாயைத் திறப்பதற்கு முன் உன்னை உதைக்க வேண்டும்! ஆண்டனி நலமாய் உள்ளார் என்றாய், நல்லது. அக்டேவியஸ் கையில் பிடிபடாமல் அவருக்கு நண்பராகி விட்டார் என்றால் நல்லது!

தூதுவன்: ஆமாம், ஆண்டனி அக்டேவியஸின் நண்பர் ஆகிவிட்டார். அக்டேவியஸின் மைத்துனர் ஆகிவிட்டார்! …. ஆனால் … !

கிளியோபாத்ரா: ஆனால், ஆனால் என்று நீ சொல்வது எனக்குப் பிடிக்காதது! மைத்துனர் ஆகிவிட்டார் என்றால் …எனக்குப் புரிய வில்லை. மார்தட்டிப் போரிட்டவர் எப்படி மைத்துனர் ஆகிவிட்டார்?

தூதுவன்: மகாராணி! மகாராணி! அடிக்காதீர் என்னை! நானிதைச் சொல்லத்தான் வேண்டும்! அக்டேவியாவை மணந்து கொண்டார் ஆண்டனி! அக்டேவியஸின் ஒன்றுவிட்ட தங்கை அவள்.

கிளியோபாத்ரா: [பக்கத்தில் இருந்த மதுக் கிண்ணத்தை தூதுவன் மீது விட்டெறிகிறாள். கைவாளை உருவி எடுத்து] முட்டாள்! என்ன சொன்னாய்? என்ன சொன்னாய்? ஆண்டனிக்குத் திருமணமா? நானிருக்க வேறு மணமா? அழைப்பிதழ் எனக்கு வரவில்லை! பொய்! பொய்! பொய்! பொய் சொல்லாதே! நீ யுருடன் உலவக் கூடாது! [விரட்டி விரட்டித் தூதுவனைக் குத்தப் போகிறாள்]

தூதுவன்: மகாராணி! நான் தூதுவன்! நான் ஏழை! என்னைக் கொல்லாதீர். எனக்கு மனைவி, மக்கள் உள்ளார். ஆண்டனியின் திருமணத்தால் என்னுயிரை வாங்காதீர். [ஓடுகிறான்]

கிளியோபாத்ரா: [ஆங்காரமாகக் கூச்சலிட்டு, விரட்டிக் கொண்டு] அயோக்கியப் பயலே! உன் கண்ணைக் குடைந்து எடுக்கிறேன், பார்! என்ன சொன்னாய்? திருமணம் செய்து கொண்டாரா? நானிருக்க அக்டேவியா சிறுக்கியை ஆண்டனி எப்படித் திருமணம் செய்யலாம்? காதல் சல்லாபத்துக்குக் கிளியோபாத்ரா! கல்யாணத்துக்கு அக்டேவியா? அந்த செய்தியை ஏன் கொண்டு வந்தாய்? அதை ஏன் எனக்குச் சொன்னாய்? [மறுபடியும் விரட்டுகிறாள்] ஆண்டனிக்குத் திருமணமா?

சார்மியான்: மகாராணி, பாபம் தூதுவன், தயவு செய்து விட்டுவிடுவீர்! தகவல் கொண்டுவந்த தூதுவனைக் கொலை பண்ணுவது பாபம்! மகாப் பாபம்! உங்கள் கோபம் ஆண்டனி மீது! தூதுவன் மீதல்ல!

தூதுவன்: [ஓடிக் கொண்டே] நான் செத்தாலும் உண்மையைச் சொல்கிறேன்! மகாராணி! அக்டேவியாவை மணந்து கொண்டார் ஆண்டனி.

கிளியோபாத்ரா: [நின்று ஆனால் ஆங்காரம் அடங்காமல்] நாசமாய் போகட்டும் ரோமாபுரி! பேரிடி விழட்டும் அக்டேவியா மீது! பெரு மின்னல் அக்டேவியஸ் கண்களை எரிக்கட்டும்! நைல் நதி பொங்கி பாலை வனத்தில் பாயட்டும்! என் ஆண்டனி திருமணம் செய்து கொண்டாரா? எவர் உண்மையான ஆண்டனி? என்னை நேசித்த ஆண்டனியா? அக்டேவியாவை மணந்த ஆண்டனியா?

சார்மியான்: உங்களை நேசித்த ஆண்டனிதான் மெய்யானவர் மகாராணி!

கிளியோபாத்ரா: [தளர்ந்து போய்] ஐரிஸ்! சார்மியான்! அருகில் வாருங்கள், மயக்கம் வருகுது எனக்கு! பிடித்துக் கொள்வீர் என்னை! தாங்க முடியாது இந்த வேதனையை! … அலெக்ஸாஸ்! போ ரோமுக்கு! அக்டேவியாவைப் பற்றி எனக்குத் தகவல் வேண்டும்! அவள் வயதென்ன? அவள் குட்டையா? நெட்டையா? முகம் எப்படி என்று கண்டு வா! எடுப்பான உடம்பா? அல்லது எலும்புக் கூடா? எனக்குத் தெரிய வேண்டும்! கூந்தலின் நிறமென்ன? கண் பூனைக் கண்ணா? அல்லது என்னைப் போல் புலிக் கண்ணா? பார்த்து வா! போ அலெக்ஸெஸ் போ! சீக்கிரம் செல்! உடனே தெரிந்து வா!

[அலெக்ஸெஸ் போகிறான்]

கிளியோபாத்ரா: ஐரிஸ்! சார்மியான்! படுக்கை அறைக்கு என்னைக் கொண்டு செல்வீர். [இருவரும் கிளியோபாத்ராவைத் தாங்கிக் கொண்டு போகிறார்]

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

9. Shakespeare’s Antony & Cleopatra Edited By: David Bevington [1988]

10 Shakespeare’s Antony & Cleopatra Edited By: M.R. Ridly [1993]

11 Life of Antony & Fulvia Wikipedia the Free Encyclopedia [http://en.wikipedia.org/wiki/Fulvia]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (March 21, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்:7 காட்சி:4

This entry is part [part not set] of 28 in the series 20070315_Issue

சி. ஜெயபாரதன், கனடா

(கிளியோபத்ரா) அரசிளங் குமரி!
மாவீரர் சீஸரின் கை வாளையும்
படுக்கை மீது விழ வைத்தவள்!
உடலுறவு கொண்ட சீஸருக் கொரு
மகவினைப் பெற்ற மங்கை அவள்!

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

அந்தோ ஆண்டனி! நில்லாதே
அக்டேவியஸ் அருகில்! உன்னைக் காக்கும்
ஆத்ம தேவதை உன்னத மானது!
அஞ்சாதது! ஈடிணை யற்றது!
அவ்வித மல்ல அக்டேவியஸ் ஆத்மா!
ஆக்கிர மிக்கும், அச்ச மூட்டும்!
ஆதலால் நீ தூர விலகி நில்! …. [ஜோதிடன் எச்சரிக்கை]

வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]

அக்டேவியஸ் உன்னுடன் போட்டி யிட்டால்
நிச்சயம் தோற்பாய் ஆண்டனி!
அதிர்ஷ்ட வாதி அக்டே வியஸ்
எவ்வித இடுக்கையும் நீக்கி உம்மை வெல்வார்!
உனது ஒளி மங்கிடும், அவரது அருகிலே!
மீண்டும் சொல்வேன், ஆண்டனி ஆத்மா
அஞ்சி ஒடுங்கும் அக்டேவியஸ் அருகிலே!

வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]

Fig. 1
Antony & Octavia

கதைச் சுருக்கம்: கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்!

முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் ஆண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த ஆண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. ஆண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் ஆண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை ஆண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன ஆண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.

ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்

நாடகப் பாத்திரங்கள்:

எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:

கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கிளியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்

ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ், ரோமின் மூன்றாம் தளபதி
எனோபரஸ் (ஆண்டனியின் பாதுகாவலன்),
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
·பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன்)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)

Fig. 2
Cleopatra near Nile Resort

கிளியோபாத்ரா
அங்கம்:7 காட்சி:4

ரோமா புரியின் நிலைமை: ·பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி ·புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள். எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனியை மைத்துனன் ஆக்கிக் கொள்கிறான். திருமணத்தைக் கேள்விப்பட்ட கிளியோபாத்ரா வெகுண்டெழுகிறாள்.

++++++++++++++++++

கிளியோபாத்ரா
அங்கம்:7 காட்சி:4

நேரம், இடம்: ரோமாபுரி அரண்மனை. பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்: ஆண்டனி, அக்டேவியா, ஜோதிடர்.

காட்சி அமைப்பு: திருமணம் முடிந்த பிறகு புதுமணத் தம்பதிகள் ஆண்டனி, அக்டேவியா உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். சிறிது நேரத்தில் ஜோதிடர் வருகிறார்.

ஆண்டனி: [ஒரு கையில் மதுக் கிண்ணமும், மறு கையில் அக்டேவியாவை அணைத்துக் கொண்டு] கண்ணே அக்டேவியா! இன்று நமது பொன்னாள்! எனக்கினி மதுக்கிண்ணம் நீதான்! நீ அருகே உள்ள போது, ஸிஸிலி மதுவும் சுவை அளிப்பதில்லை! புல்வியா காலி செய்த உள்ளத்தை நிரப்பி விட்டாய் நீ! காய்ந்து போன என் நெஞ்சத்தில் மீண்டும் காதல் தேனாறு ஓடுகிறது! நீ வாலிப மாது! உன்னை விட நான் வயோதிகன்! உன்னால் எனக்கு வாலிபம் மீள்கிறது! ஆயினும் என்னால் உனக்கு வயோதிகம் வரக் கூடாது.

அக்டேவியா: இந்த நாளுக்கு நான் காத்திருந்தேன். என் கணவர் மாண்டதும் தனித்துப் போனேன் மீண்டும் நான்! தனிமையில் வாடினேன், வதங்கினேன், வாழ்வதை வெறுத்தேன். அப்போது போர்க்களத்தில் புல்வியா செத்த செய்தி வந்தது! உடனே என்னைப் போல் தனித்துப் போன உங்கள் மீது அனுதாபம் கொண்டேன்! எகிப்திலே ஒட்டிக் கொண்ட ஆண்டனியை எப்படி வெட்டிக் கொண்டு வருவது என்று சிந்தித்தேன்! நண்பன் அக்கிரிப்பா, தமையன் அக்டேவியஸ் உதவியை நாடினேன். தமையன் உங்களை ரோமுக்கு இழுத்து வந்தார்! அக்கிரிப்பா நம்மைப் பிணைத்து வைத்தார்! நாமின்று புதுமணத் தம்பதிகள். ரோமுக்கு மீண்டும் நீங்கள் திரும்பிப் போவீரா? என்னைத் தனியே விட்டுவிட்டு போவீரா?

Fig. 3
Octavius with Lepitus &
Agrippa

ஆண்டனி: கண்ணே அக்டேவியா! நானொரு நாடோடி! என் மனம் போல் மாறுவது நான் வாழுமிடம்! வாழ்க்கை முழுதும் நான் ரோமிலே அடைபட்டுக் கிடக்க மாட்டேன். எகிப்துக்கு நான் மீண்டும் போக வேண்டிய திருக்கும்! நான் ஆரம்பித்த சில பணிகள் இன்னும் முடியவில்லை! என்னிதயத்தில் பாதியிடம் ரோமுக்கும், மீதியிடம் எகிப்துக்கும் உள்ளதை நான் தவிர்க்க முடியாது!

அக்டேவியா: [மிக்க கவலையுடன்] அப்படியானால் உங்கள் பாதி உள்ளம் கிளியோபாத்ராவுக்கு என்று சொல்கிறீரா? எனக்குப் பாதியிடம் போதாது ஆண்டனி! உங்கள் உள்ளமும், உடலும் எனக்கு வேண்டும்! கிளியோபாத்ரா செத்துப் போன சீஸரின் மனைவி! சீஸருக்கு ஆண் மகனை அளித்தாலும், மெய்யாக வேசி அவள்! நேற்று சீஸர்! இன்று நீங்கள்! நாளை யாரோ? யாருக்குத் தெரியும்? எனக்கீடாக உங்களை உரிமை யாக்கத் தகுதி அற்றவள் அந்த மந்திரக்காரி!

ஆண்டனி: பாவம் கிளியோபாத்ரா! சீஸரை இழந்து உன்னைப் போல் தனித்துப் போனவள். என்னை நம்பிக் கொண்டிருக்கிறாள்! அவளை வேசி என்று திட்டாதே! அவள் ·பாரோ மன்னர் பரம்பரையில் வந்தவள்! மகா வீரர் அலெக்ஸாண்டர் வம்சா வழியில் உதித்தவள். பல மொழிகள் தெரிந்த, பராக்கிரப் பாவை அவள்! எகிப்தைச் சீரிய முறையில் ஆண்டு வருபவள் அவள்! அவள் என்னாசைத் தோழி! ஆனால் நீ என்னாசை மனைவி! உனக்கீடாக மாட்டாள்!

அக்டேவியா: [ஆண்டனி கைகளைப் பற்றிக் கொண்டு, கவலையுடன்] நீங்கள் ரோமுக்குப் போகும் போது நானும் உடன் வருவேன்! நீங்கள் எகிப்திலும், நான் ரோமிலும் தனித்திருக்கக் கூடாது! எகிப்த் ரோமுக்குச் சொந்தம்! உங்களுக்குச் சொந்தமில்லை! நீங்கள் எனக்குரிமை யானவர்! ஆனால் கிளியோபாத்ரா உங்களுக் குரியவள் அல்ல. நீங்கள் எகிப்துக்குத் தனியே போகக் கூடாது! கிளியோபாத்ரா உங்களைச் சிறைப் படுத்தி விடுவாள்! சீஸரும் அப்படித்தான் அவளிடம் சிறைப்பட்டுப் போனாள்! வாக்குறுதி அளிப்பீரா?

[அப்போது ஜோதிடர் நுழைகிறார்]

ஜோதிடர்: மாண்புமிகு தளபதியாரே! மாதரசி அக்டேவியா! வந்தனம் உங்களுக்கு! அழைத்தீராமே!

ஆண்டனி: [கேலியாக] ஜோதிடரே, சொல்வீர்! எகிப்தில் குடியிருக்க விரும்புவீரா?

ஜோதிடர்: நான் அந்த நாட்டில் பிறந்தவன் அல்லன். நீங்களும் அங்கே பிறந்தவர் அல்லர். எதற்காகக் கேட்கிறீர் என்னை? கிளியோபாத்ராவின் அரண்மனையில் ஜோதிடருக்கு வேலை கிடைக்குமா? எகிப்த் மொழி தெரியாது எனக்கு! மேலும் எகிப்த் ஜோதிட நிபுணர்கள் என்னை விட சாமர்த்தியசாலிகள்! வேலை தேடிப் போனாலும் நிராகரிக்கப் படுவேன்!

ஆண்டனி: [கையைக் காட்டி] சொல்லப்பா ஜோதிடம்! யாருடைய அதிஷ்டம் உயர்ந்தது? என் அதிர்ஷ்டமா? அல்லது அக்டேவியஸ் அதிர்ஷ்டமா?

அக்டேவியா: [கையைக் காட்டி] ஜோதிடரே! முதலில் எனக்குச் சொல்லுங்கள். நான் எகிப்துக்குச் செல்வேனா?

ஜோதிடர்: மன்னிக்க வேண்டும். முதலில் ஆண்டனிக்குச் சொல்கிறேன்! உங்கள் அதிர்ஷ்டம் தாழ்ந்து போனது! அக்டேவியஸ் அதிர்ஷ்டம் கொடிகட்டிப் பறக்கப் போகிறது!

ஆண்டனி: எப்படி அதைச் சொல்வீர்? என் கையில் அக்டேவியஸ் ரேகை கிடையாது!

ஜோதிடர்: அக்டேவியஸ் கையை நான் பார்த்திருக்கிறேன். ஆண்டனி! அக்டேவியஸ் அருகில் நில்லாதீர்! அவரது ஆத்மா வலிமை மிக்கது! அச்சம் உண்டாக்குவது! ஆக்கிரமித்து அடிமை ஆக்குவது! உங்களின் ஆத்மா உன்னத மானது! அச்சமில்லாதது! ஈடிணை அற்றது. அவரை விட்டுத் தள்ளியே நில்லுங்கள்! அவரை எதிர்த்துச் செல்லாதீர்!

ஆண்டனி: [கவனமுடன்] யாரிடமும் அதைச் சொல்லாதே!

Fig. 4
Antony Leaving Octavia

ஜோதிடர்: யாரிடமும் சொல்ல மாட்டேன், உங்களைத் தவிர. இனிமேலும் சொல்ல மாட்டேன், உங்களுக்குத் தேவையான வேளை தவிர. எதிலும் போட்டி என்று வந்தால் நீங்கள் அவரிடம் நிச்சயம் தோற்றுப் போவீர்! அக்டேவியஸின் அதிர்ஷ்ட தேவதை எந்த எதிர்பாரா விளைவிலிருந்தும் விடுவித்து அவருக்கு வெற்றியைத் தருவாள்! உங்களுடைய ஒளி அக்டேவியஸ் அருகிலே மங்கித்தான் போகும்! உங்களுடைய ஆத்மா அவர் அருகில் ஆட்சி செய்ய அஞ்சி ஒதுங்கி விடும்!

ஆண்டனி: [கோபத்துடன்] வாயை மூடிக் கொண்டு வெளியேறு! உன் வாக்குகள் யாவும் அர்த்த மற்றவை.

ஜோதிடர்: ஆண்டனி, மன்னித்து விடுங்கள். அக்டேவியா என்னிடம் கேட்டதைச் சொல்லி விட்டுப் போகிறேன். [அக்டேவியாவைப் பார்த்து] ஆமாம் என்ன கேட்டீர்? எகிப்துக்குப் போவேனா என்று கேட்டீர். காட்டுங்கள் கையை. [அக்டேவியா கையை நீட்டுகிறாள்] போவீர் நிச்சயம் எகிப்துக்கு! நிரம்ப பேரீச்சம் பழங்கள் தின்னுங்கள்! ஆண்டனி எகிப்துக்குப் போவார்! அவரோடு நீங்களும் போகலாம்.

அக்டேவியா: [கெஞ்சலாக] எகிப்தில் நானும் ஆண்டனியும் சேர்ந்து வாழ்வோமா? அல்லது பிரிந்து போவோமா? எனக்குப் பயமாய் இருக்கிறது ஆண்டனி எகிப்த் போவதற்கு!

ஆண்டனி: ஜோதிடரே! உமது வாயிலின்று வருவதெல்லாம் பொய்கள். உமது எச்சரிக்கையில் என்னை மட்டும் குழப்பியது போதும். எதையாவது தப்பாகச் சொல்லி அக்டேவியா தூக்கத்தைக் கெடுக்க வேண்டாம். போ, சீக்கிரம் போ! திரும்பிப் பாராமல் போ! [ஜோதிடர் விரைந்து வெளியேறுகிறார்] எகிப்த் நாடுதான் எனக்கு ஏற்றது! மனச் சாந்திக்கு என் திருமணம்! ஆனால் எகிப்தில்தான் என் சொர்க்கம் உள்ளது. நான் எகிப்துக்குப் போகத் தயார் செய். முதலில் நான் மட்டும் தனியே போவேன்! கிளியோபாத்ரா உன்னைக் கண்டால் என்ன செய்வாளோ, எனக்குத் தெரியாது. அவள் மனத்தைப் பக்குவப் படுத்தி உன்னை ஏற்றுக் கொள்ள ஒப்ப வைப்பேன்! அதுவரை அக்டேவியா, நீ பொறுமையாக இருக்க வேண்டும்.

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

9. Shakespeare’s Antony & Cleopatra Edited By: David Bevington [1988]

10 Shakespeare’s Antony & Cleopatra Edited By: M.R. Ridly [1993]

11 Life of Antony & Fulvia Wikipedia the Free Encyclopedia [http://en.wikipedia.org/wiki/Fulvia]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (March 14, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா

This entry is part [part not set] of 35 in the series 20070308_Issue

சி. ஜெயபாரதன், கனடா

அழகு, ஞானம், பணிவு
ஆண்டனியின் இதயத்தில்
நிலைத்து விட்டால்
அவருக்கு (மணப்பெண்)
அக்டேவியா ஓர் அதிர்ஷ்டப் பரிசு! …. மேஸினாஸ்

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

உன்னைப் பரம்பரை உறவினன் ஆக்கும்!
உன்னைச் சகோதரன் ஆக்கும் (அக்டேவியஸ்)!
அவிழ்க்க முடியாத முடிச்சில்
ஒன்றாய்ப் பிணைக்கும் உங்கள் இதயங்களை!
அக்டேவியாவை மனைவியாய் ஏற்றுக்கொள் ஆண்டனி!
உயர்ந்த பண்பும், பரிவும் தானே பேசும்,
அரிய கணவர்க் குகந்த எழிற் பெண்மணி!
வேறு எவையும் அவரைப் பற்றி விளக்கா!
ஆண்டனி அக்டேவியா திரும ணத்தால்
பெரிதாய்த் தெரியும் பொறாமை நீங்கும்! அஞ்சும்
பெரும் அபாயப் பிளவுகள் ஒழியும்! … அக்கிரிப்பா

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

அற்பச் சிறு போரில் கலப்ப தில்லை ஆண்டனி!
அவரது அரிய போர்த் திறன் மற்ற
இருவரை விட இரட்டிப் பானது!
நம் ஆழ்ந்த ஊகிப்பைத் தொடர்வோம்!
எகிப்தின் எழில் விதவை மடியை விட்டு
கடத்தி வருவது மிகக் கடினம்,
மோகக் களைப் பில்லா ஆண்டனியை ! … இளைய பாம்ப்பி

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

Fig. 1
The Lonely Cleopatra

கதைச் சுருக்கம்: கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்!

முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் ஆண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த ஆண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. ஆண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் ஆண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை ஆண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன ஆண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.

ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்

நாடகப் பாத்திரங்கள்:

எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:

கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கிளியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்

ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ், ரோமின் மூன்றாம் தளபதி
எனோபரஸ் (ஆண்டனியின் பாதுகாவலன்),
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
·பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன்)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)

Fig. 2
Where is Antony ?

கிளியோபாத்ரா
அங்கம்:7 காட்சி:3

ரோமா புரியின் நிலைமை: ·பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி ·புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள். எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனி ரோமுக்கு வரத் தந்திரம் செய்கிறான்.

++++++++++++++++++

கிளியோபாத்ரா
அங்கம்:7 காட்சி:3

நேரம், இடம்: ரோமாபுரி அரண்மனை. பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்: போர்த் தளபதிகள் ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ், அக்கிரிப்பா பாதுகாவலர்.

காட்சி அமைப்பு: அக்டேவியஸ், லெப்பிடஸ், அக்கிரிப்பா ஆகிய மூவரும் கூடிப் பேசிக் கொண்டுள்ள போது ஆண்டனி நுழைகிறார்.

லெப்பிடஸ்: அக்டேவியஸ், எனக்குத் தெரியும். நிச்சயம் ரோமுக்கு வருவார் ஆண்டனி! நம்மைத் தனியே போரில் தடுமாற விட்டுவிட்டு அவர் கிளியோபாத்ராவின் அணைப்பிலே கிடக்க மாட்டார். வருவேன் என்று தகவல் அனுப்பியவர் வராமல் எப்படிப் போவார்?

Fig. 3
Lepidus & Octavius

அக்டேவியஸ்: நீ ஏமாறப் போகிறாய் லெப்பிடஸ்! எனக்கு நம்பிக்கை இல்லை. ஆண்டனி வரமாட்டார், பார். எகிப்தா, ரோமா என்று நாணயத்தைச் சுண்டி விட்டால், ஆண்டனிக்கு எகிப்துதான் விழும்! போர், போகம் என்று நாணயத்தைச் சுண்டி விட்டால், போகம் என்றுதான் ஆண்டனிக்கு விழும்! ஏனென்றால் ஆண்டனியின் நாணயத்தின் இருபுறத்திலும் அச்சாகி யிருப்பது ஒன்றேதான் போகம், போகம்! கிளியோபாத்ரா ஒரு மோகினிப் பிசாசு! ஆண்டனி ஒரு போகப் பிரியர்! புல்வியா செத்ததும் தனித்து விட்ட ஆண்டனிக்கு கிளியோபாத்ராவின் இதழ்கள் ஏன் இனிப்பாக இருக்காது? ஆண்டனியை விடச் செத்துப் போன அவரது மனைவி புல்வியா உண்மையில் ஒரு வீர மாது! என்னுடன் போரிட்ட புல்வியா மெய்யாக ஒரு தீர மங்கை! ஆண்டனி போல் அவள் மோகத் தீயில் மூழ்க வில்லை! ரோமைப் புறக்கணிக்க வில்லை! நாட்டுப் பாதுகாப்பை மறந்து காதலுக்காக மனதைப் பறிகொடுக்க வில்லை!

[அப்போது காவலன் ஒருவன் வந்து ஆண்டனி வருவதை அறிவிக்கிறான். சிறிது வினாடிகள் கழித்து நுழைகிறார் ஆண்டனி]

லெப்பிடஸ்: [மகிழ்ச்சியுடன்] நான் சொன்னதுதான் உண்மையானது. [வணக்கம் செய்து] வாருங்கள் ரோமாபுரித் தளபதியாரே! உங்கள் வருகைக்கு நாங்கள் காத்திருக்கிறோம்.

[ஆண்டனி முதலில் லெப்பிடஸின் கை, பிறகு அடேவியஸின் கையைக் குலுக்குகிறான்]

அக்டேவியஸ்: [சற்று கடுமையுடன்] வருக, வருக ஆண்டனி! எனது ஆழ்ந்த அனுதாபம், புல்வியாவின் அகால மரணத்துக்கு! நீ வருவாய் என்று அவள் உயிர் உனக்காகக் காத்திருந்தது! நீ வரவில்லை என்று தெரிந்ததும் அவள் உயிர் உடனே நீங்கியது! எகிப்தை வீட்டு ஏன் நீ உடனே வரவில்லை! புல்வியா அடக்கத்தின் போது ரோமாபுரி நகரே நீ வருவாய் என்று காத்துக் கிடந்தது! உன்னை வரவிடாமல் எகிப்தில் எந்த பிசாசு தடுத்தது? உன்னைப் பிடித்த வைத்த மந்திரக்காரியை உதறி விட்டு நீ வந்திருக்கலாம்! அப்படி நீ செய்ய வில்லை! ஏன்? ஏன்? ஏன்? சொல் ஆண்டனி!

லெப்பிடஸ்: கோபப்படாதீர் அக்டேவியஸ்! குற்றம் பார்க்கின் சுற்றமில்லை! பாம்ப்பியை நாம் மூவரும் சேர்ந்து தோற்கடிக்க வேண்டும்! நமது பகைவன் நமக்குள் இல்லை. நமக்குள் சண்டை என்று தெரிந்தால் பாம்ப்பி அதைக் கொண்டாடுவான்! நமது பிரச்சனை சிறியது! ஆனால் நமது மனது பெரியது! போரை எவ்விதம் நடத்திச் செல்ல வேண்டும் என்று நாம் சிந்திப்போம்! பாம்ப்பியின் கடற்படை வலுவாகி விட்டது! அதனை வெல்வது சிரமம். அதற்குரிய வழிகளைத் திட்டமிடுவோம்.

ஆண்டனி: [சினத்துடன்] எகிப்தில் நான் ஏன் ஒதுங்கிக் கிடந்தேன் என்று அக்டேவியஸ் ஏன் கேட்கிறார்? அக்டேவியஸ் ரோம் சாம்ராஜியத்தைச் சுற்றிப் பார்வை யிடாது, ரோமிலே ஏன் பதுங்கிக் கிடந்தார் என்று நான் கேட்கிறேனா? கப்பம் கட்டாத எகிப்த் தேசம் ஒப்பிய நிதியைத் திரட்டப் போனது என் தப்பா? படை வீரர்கள் மாதச் சம்பளம் தரப்படாமல் கும்பி குலைவதை அறிவீரா? கிளியோபாத்ரா ரோமுக்கு வாரிசு அளித்த சீஸரின் மனைவி! சீஸர் மாண்டதும் அவளது சிநேகத்தை அற்றுவிட வேண்டுமா? எகிப்த் ரோமாபுரின் ஆக்கிரமிப்பு நாடு! ஆம், கிளியோபாத்ரா என்னினிய காதல் தோழிதான்! என் காதலை இல்லை என்று நான் மறுக்க வில்லை! நாட்டுப் பற்று என்னை ரோமுக்குப் போகச் சொன்னாலும், ஏதோ ஒரு பாசம் என்னை எகிப்தில் கட்டிப் போட்டது!

அக்டேவியஸ்: உனது மனைவி புல்வியாவும், சகோதரனும் சேர்ந்து கொண்டு, என்னை எதிர்த்துப் போர் புரிந்தார். உனக்கு அது தெரியாதா? நீ ஏன் அவர்களைத் தடுத்து நிறுத்த வில்லை? நான் மடிய வேண்டும் என்று நினைத்தாயா? அல்லது அவர்கள் போரில் கொல்லப் படட்டும் என்று விட்டு விட்டாயா?

Fig. 4
Antony & His Bride

ஆண்டனி: அப்படி யில்லை அக்டேவியஸ். தப்பான எண்ணம் அது! உன்னுடன் போரிட என் மனைவியை நான் ஏன் அனுப்ப வேண்டும்? என் சொற்படிக் கேட்பவன் அல்லன் என் சகோதரன். அது உனக்கும் தெரியும்! என்னை எகிப்திலிருந்து இழுத்துவர புல்வியா செய்த புரட்சி அது! அதில் அவள் வெற்றி பெறவில்லை. என் சகோதரன் உன்னுடன் போரிட்டதற்கு நான் பொறுப்பாளி அல்லன்.

அக்டேவியஸ்: அலெக்ஸாண்டிரியாவில் கலகம் நேர்ந்த போது, மூன்று முறை நானுனக்குக் கடிதம் எழுதினேன்! அவற்றைப் பையிக்குள் போட்டு விட்டு நீ பதில் போடாமல் பதுங்கிக் கொண்டாய்! ஏன்?

ஆண்டனி: முப்பெரும் அரசர்களுக்கு கிளியோபாத்ரா அளித்த விருந்தில் அப்போது கலந்து கொண்டிருந்தேன்! அச்சமயம் வந்தது முதல் கடிதம். மற்ற கடிதங்களை நான் பெற்றுக் கொள்ள வில்லை!

அக்டேவியஸ்: ஒப்புக்கொள் ஆண்டனி! நமது கூட்டு ஒப்பந்தத்தை நீ முறித்தாய்! பகைவன் ரோமாபுரியின் வாசலில் நின்ற போது நீ கிளியோபாத்ராவின் மாளிகை வாசலில் மயங்கிக் கிடந்தாய்! நாட்டுப் பாதுகாப்பு உன் நாட்குறிப்பில் இடம் பெறவில்லை! நாட்டைத் துறந்து, நட்பைத் துறந்து, நம்பிய மனைவியைத் துறந்து நாசக்காரியின் மடியில் நீ மயங்கிக் கிடந்தாய்!

லெப்பிடஸ்: நமது வீட்டுப் போரை முதலில் நிறுத்தி, வெளி நாட்டு போரைப் பற்றி சற்றுப் பேசுவோமா?

அக்கிரிப்பா: எனக்கோர் நல்ல யோசனை உதயமாகி உள்ளது! ஆண்டனி தற்போது தனிமையாய்ப் போனவர்! அக்டேவியஸ்! உங்கள் தாய் வழிப் பிறந்த சித்தியின் புதல்வி அழகி அக்டேவியாவை …. ஆண்டனிக்கு …

அக்டேவியஸ்: போதும், நிறுத்திக் கொள்! உன் யோசனையைக் கிளியோபாத்ரா கேள்விப் பட்டால், உன் கழுத்தை அறுத்து விடுவாள்! தடாலென மயக்கமுற்று விழுந்திடுவாள்! அக்டேவியா வாலிப மங்கை! ஆண்டனி வயோதிகத் தளபதி! முதலில் அக்டேவியா ஆண்டனியை ஏற்றுக் கொள்வாளா? வயதுப் பொருத்தம் இல்லையே! மனப் பொருத்தம் உள்ளதா? எனக்குத் தெரியாது.

ஆண்டனி: நல்ல யோசனை அக்கிரிப்பா! நீ சொல்ல வந்ததைச் சொல்லி முடி! நான் இப்போது மணமாகாதவன். அக்டேவியா எப்படி இருப்பாள் சொல்? அழகாய் இருப்பாளா? எடுப்பான உடம்பா? ஒடுங்கிய இடுப்பா? எத்தனை வயதிருக்கும்? நானவளைப் பார்த்தில்லை!

அக்கிரிப்பா: ஆனால் அக்டேவியா உங்களைப் பார்த்திருக்கிறாள் ஆண்டனி! இருபத்தியைந்து வயது! பேரழகி! குதிரை போல மதமதத்த தோற்றம்! உங்களுக்கு ஏற்றவள்!

ஆண்டனி: நான் கண்டு பேச வேண்டுமே முதலில்! என்னைப் பற்றி அக்டேவியா என்ன நினைப்பாள்?

அக்கிரிப்பா: கவலைப் படாதீர்! புல்வியா செத்த பின் அக்டேவியா உங்களைப் பற்றித்தான் கனவு காண்கிறாள். உங்களைக் காணத் துடித்துக் கொண்டிருக்கிறாள். அவளது விருப்பத்தை உங்களுக்குச் சொல்லும் வேளை வந்ததால் சொல்கிறேன். கிளியோபாத்ரா உணர்ச்சியைப் பற்றி நான் கவலைப் படவில்லை! ஆனால் …… அவள் ஒரு ….!

அக்டேவியஸ்: ஆண்டனி! அவள் ஒரு விதவை, தெரியுமா? சமீபத்தில் அவள் கணவர் காலமாகி விட்டார்! அவள் கணவன் செத்த கவலையில் உண்ணாமல், உறங்காமல், ஓடாய்ப் போய் விட்டாள்!

ஆண்டனி: ஆகா! என்ன பொருத்தம்? இப்படி அமைவது எனக்கு ஓர் அதிர்ஷ்டம்! நானும் மனைவி இழந்தவன்! புல்வியா சமீபத்தில் செத்தது அவளுக்குத் தெரிந்திருக்கிறது! நானும் புல்வியா போன துக்கத்தில்தான் மன வேதனை அடைகிறேன்! மனப் பொருத்தம் உள்ளது எங்கள் இருவருக்கும். புல்வியாயை இழந்த எனக்கு ஆறுதல் அளிப்பாள் அக்டேவியா! கணவனை இழந்த அக்டேவியாவுக்கு ஆதராவாய் இருப்பேன் நான்!

அக்டேவியஸ்: ஆண்டனி! கவனகாகக் கேள்! அக்டேவியாவின் கணவன் ஏகதார விரதன்! அவனுக்கு ஒரே ஒரு மனைவி அக்டேவியா! அவனுக்கு ரோமில் ஒரு மனைவியும், எகிப்தில் ஒரு காதலியும் கிடையாது! அவன் விட்டுப் போன இடத்தை நீ நிரப்புவாய் என்று எனக்கு நம்பிக்கை யில்லை!

Fig. 5
Antony & Octavia

ஆண்டனி: கிளியோபாத்ராவை நீ நேராகப் பார்த்தால் அப்படிச் சொல்ல மாட்டாய்! கிளியோபாத்ரா என் காதலி யில்லை! கிளியோபாத்ரா என் மனைவி யில்லை! அவள் எனக்கு வெறும் தோழி மட்டுமே! என்னைப் பார்க்கும் போதெல்லாம் அவள் சீஸரைப் பற்றித்தான் பேசுவாள்! நான் அவளிடம் கொண்டிருப்பது வெறும் நட்பு! ஆனால் அது கள்ள நட்பில்லை! அவளைக் காதல் தோழி என்று நான் சொல்லியது தப்பு!

அக்டேவியஸ்: நல்ல நட்பு என்று சொல்ல வருகிறாய்! எனக்குத் தெரியும்! உன்னிதயக் கோட்டையில் வசந்த மாளிகை இரண்டு உள்ளன. ஒன்றில் எப்போதும் கிளியோபாத்ராதான் குடியிருப்பாள்! அவளை உன்னால் வெளியேற்ற முடியாது! அடுத்த மாளிகை ஒரு சத்திரம் போன்றது! யாரும் வரலாம், போகலாம், அடிக்கடி மாற்றிக் கொள்ளலாம்! அந்த மாளிகைக்கு அக்டேவியா வரமாட்டாள்!

ஆண்டனி: அப்படிக் கேலி செய்யாதே அக்டேவியஸ்! இப்போதே நான் அக்டேவியாவைப் பார்க்க வேண்டும்! ஏற்பாடு செய்வாயா? அவளை நான் மணந்து கொள்கிறேன். என்னால் தனிமையில் நோக முடியாது!

அக்டேவியஸ்: அக்டேவியா ஒரு நற்குண மாது! புல்வியாவை விட்டுவிட்டு நீ எகிப்துக்குப் போனது போல் செய்தால், அவள் தாங்கிக் கொள்ள மாட்டாள்! அவள் மென்மையான இதயத்தை உடைத்து விடுவாய்!

அக்கிரிப்பா: ஆண்டனி, நான் நினைத்தபடி செய்து விட்டேன்! முக்கியமான இந்த திருமணத்தால் அக்டேவியஸின் மைத்துனன் ஆகிவிட்டாய் நீ! அதனால் அக்டேவியஸின் பராக்கிரமம் இரட்டிப்பாகிறது! உங்கள் பழைய வெறுப்புகள் கரைந்து போகின்றன! உங்கள் பொறாமைக் குணங்கள் மறைந்து விடுகின்றன.
நீங்கள் மூவரும் பகைவன் பாம்ப்பியை விரட்ட ஒன்றுபடுகிறீர்! இந்த திருமணம் அதை நிறைவேற்றி விடும்.

ஆண்டனி: கேளுங்கள்! பாம்ப்பி நமக்குப் பகைவன் அல்லன்! சமீபத்தில் அவன் எனக்கு எழுதிய கடிதத்தில் மதிப்புடன் நடந்து மன்றாடி யிருக்கிறான்! போர் வேண்டாம் என்று என் காலில் விழுகிறான்! நான் போரை முன்னின்று நடத்தில் தான் வெல்ல முடியாது என்று தாழ்ச்சியுடன் முறையிட்டுள்ளான். ஆகவே அவனுக்கு எதிராக நான் வாளுயர்த்த மாட்டேன்!

அக்டேவியஸ்: [அதிர்ச்சி அடைந்து] என்னால் இதை நம்ப முடியவில்லை! பாம்ப்பி ஏமாற்றுகிறானா என்று தெரியவில்லை! ஆண்டனி! நீ சொல்வது உண்மை என்றால், பல மாதங்களாக அவன் ஏன் தன் கடற் படையைப் பலப்படுத்தி வந்தான் என்று விளக்கு! உனக்கும், எனக்கும் பகை உண்டாக்க வழி செய்கிறான்!

ஆண்டனி: காரணம் சொல்கிறேன்! போரை நிறுத்த பாம்ப்பி முயல்வது எனக்கு நன்றாகத் தெரிகிறது. பொறுங்கள் நமது ஒற்றரை அனுப்பி பாம்ப்பியின் மனதை அறிந்து வருகிறேன். நல்ல சமயத்தில்தான் அக்டேவியாவைத் திருமணம் செய்கிறேன். போருக்கு நான் செல்வதைப் புதுமணப் பெண் அக்டேவியா எப்படிப் பொறுத்துக் கொள்வாள்? அக்டேவியஸ், போரை நான் நிறுத்த முடியும்! புதுமணப் பெண்ணை நான் முதலில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்! திருமணத்துக்கு ஏற்பாடு செய்வீர் என் புது மைத்துனரே!

[சிரித்துக் கொண்டு அக்டேவியஸின் கைகளைக் குலுக்குகிறான்]

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

9. Shakespeare’s Antony & Cleopatra Edited By: David Bevington [1988]

10 Shakespeare’s Antony & Cleopatra Edited By: M.R. Ridly [1993]

11 Life of Antony & Fulvia Wikipedia the Free Encyclopedia [http://en.wikipedia.org/wiki/Fulvia]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (March 7, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:7 காட்சி:2)

This entry is part [part not set] of 35 in the series 20070301_Issue

சி. ஜெயபாரதன், கனடா

செம்மைப் போர் புரிவேன்! கடற்படை என் கைப்பலம்!
எம்மை ரோம் மிகவே நேசிக்கும்!
எனது பராக்கிரமம் பெருகும்! ஜோதிட
முன்னறிப்பு மெய்யாகும்! என்னாசை நிறைவேறும்!
வெளிப்புற விருந்தில் எகிப்தி லிருப்பார் ஆண்டனி!
போர் புரிய ரோமுக்குப் போக மாட்டார்.
எகிப்தின் நிதிதனை விழைபவர் அக்டேவியஸ்!
முகத்துதி பாடுவார் லெப்பிடஸ் இரு நபர்க்கும்!
மெய்யாய் நேசிப் பில்லை! லெப்பிடஸ் மீது
மதிப்பு மில்லை அவரி ருவர்க்கும். …. இளைய பாம்ப்பி

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

அக்டேவியஸ், லெப்பிடஸ் எகிப்தி லிருப்பார்,
ஆண்டனி எங்குளார் எனத் தேடிய வண்ணம்!
மையல் மோகினி கிளியோ பாத்ராவின்
மந்திரக் கவர்ச்சியில் மயங்கிக் கிடப்பார்! … இளைய பாம்ப்பி

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

கதைச் சுருக்கம்: கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்!

முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் ஆண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த ஆண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. ஆண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் ஆண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை ஆண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன ஆண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.

Fig. 1
First Day Attraction

ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்

நாடகப் பாத்திரங்கள்:

எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:

கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கிளியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்

ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ், ரோமின் மூன்றாம் தளபதி
எனோபரஸ் (ஆண்டனியின் பாதுகாவலன்),
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
·பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன்)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)

கிளியோபாத்ரா
அங்கம்:7 காட்சி:2

ரோமா புரியின் நிலைமை: ·பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி ·புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள். எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனி ரோமுக்கு வரத் தந்திரம் செய்கிறான்.

++++++++++++++++++

Fig. 2
First Day Union

கிளியோபாத்ரா
அங்கம்:7 காட்சி:2

நேரம், இடம்: ஸிசிலித் தீவின் மெஸ்ஸினா முனையில் இளைய பாம்பியின் போர்க் கூடாரம்.

நாடகப் பாத்திரங்கள்: போர்த் தளபதி பாம்ப்பி, படை வீரர்கள் மெனாஸ், மெனிகிரேட்ஸ்

காட்சி அமைப்பு: பாம்ப்பி, மேனாஸ், மெனிகிரேடஸ் போருடையில் உள்ளார்கள். போர்முகாமில் போர் செய்யும் முறைகள், பாதைகள் ஆராயப் படுகின்றன.

பாம்ப்பி: தெய்வங்கள் நியாயமாக நடந்தால், நியாயவாதிகளுக்கு வெற்றியைத் தரவேண்டும். தெய்வங்கள் எப்போதும் நியாயமற்ற அயோக்கியருக்குத்தான் உதவி செய்கின்றன! என் தந்தைக்கும் அப்படித்தான் ஆனது. எல்லா தெய்வங்களும் அவரைக் கடைசியில் கைவிட்டன! எகிப்தில் தணித்து விடப்பட்டு அவரது தலையை எகிப்தியர் துண்டாக்கினர்! ஜூலியஸ் சீஸர் அதிர்ஷ்டக்காரர். சென்ற விட மெல்லாம் சீஸருக்குத்தான் வெற்றி மேல் வெற்றிகள்! சீஸரை வரவேற்க, சீஸரை மகிழ்விக்க தந்தையின் தலை காணிக்கையாக தரப்பட்டது! சீஸரை என்னால் கொல்ல முடியவில்லை! அதற்குள் அவரது செனட்டர்களே அவரைக் குத்திக் கொன்றார்! சீஸரைப் பலிவாங்கா விட்டாலும், நான் சீஸரின் சீடர்களைப் பலிவாங்க வேண்டும்.

மேனாஸ்: உங்கள் கொள்கைப்படி பார்த்தால், வெற்றி வீரர் சீஸர் பக்கம்தான் நியாயம் இருந்ததாகத் தெரிகிறது. உங்கள் தந்தையின் பரம எதிரி சீஸர் அல்லவா? உங்கள் தந்தையை விரட்டிச் சென்றவர் சீஸர் அல்லவா?

பாம்ப்பி: உண்மைதான்! எகிப்தில் என் தந்தை தலை துண்டிப்புக்குக் காரணமானவர் சீஸர்! அந்த அநியாயத் தளபதிக்கு தெய்வங்கள் உதவி செய்தன! நியாதிபதியான என் தந்தைக்குக் கிடைத்த பரிசு மரணம்! நமது பிரார்த்தனைகள் தெய்வத்தின் செவியில் கேட்பதில்லை. இம்ம்முறை நான் முழு ஆற்றலுடன் போரிடப் போகிறேன். ரோமாபுரியை மீட்பதில் வெற்றி பெற்றே தீருவேன்! இதுதான் தக்க தருணம்! நம் கடற்படை பெரியது! நமது கப்பல்கள் ஏவுகணைகள் கொண்டவை! நாம் வெல்ல வேண்டுமென்று ரோமானியர் விரும்புகிறார்! நமது படை வீரர்கள் பகைவர் எண்ணிக்கையை விட அதிகம். நல்ல நேரமிது! ஆண்டனி ரோமில் கிடையாது! சுகவாசி எகிப்தில் கிளியோபாத்ராவின் மோக மயக்கத்தில் கிடக்கிறார். கவர்ச்சி மாது கிளியோபாத்ராவின் மடியில் தலைவைத்து மதுவைக் குடித்துக் கொண்டிருக்கிறார். தக்க தருணம் இதுவே!

மேனாஸ்: பாம்ப்பி! ஆண்டனி எகிப்தில் இல்லை! அக்டேவியஸ் அவரை வரும்படி அழைத்திருக்கிறார். ரோமை நோக்கி ஆண்டனி வருவதாக அறிந்தேன். அவரில்லாமல் அக்டேவியஸ், லெப்பிடஸ் இருவருமே நமக்கு இணையாகப் போரிடுவர் அல்லவா?

பாம்ப்பி: அப்படியில்லை மேனாஸ்! ஆண்டனிக்குள்ள போர்த் திறமை கோழையான அக்டேவியஸ், லெப்பிடஸ் இருவருக்கும் கிடையாது. ஆண்டனி எகிப்தை விட்டு எப்போது புறப்பட்டார்? மையல் மோகினியின் மந்திர வலையில் சிக்கிய ஆண்டனி மதி மயங்கிக் கிடப்பதாகத்தான் நான் அறிந்தேன். யார் சொன்னது ஆண்டனி ரோமுக்கு வருவதாக?

மேனாஸ்: கழுதை கண்ணுக்குத் தெரியும்படி காரெட்டைக் காட்டி, அக்டேவியஸ் ஒரு தந்திரம் செய்தார். மனைவி புல்வியா மாண்டு போனதும் ஆண்டனி மனநிலை சரியில்லை. தங்கை அக்டேவியாவை மண முடித்துத் தருவதாக ஆண்டனி அழைக்கப் பட்டிருக்கிறார்! எகிப்தில் காதல் மோகினி இருந்தாலும், ரோமில் ஆண்டனிக்கு ஒரு ராணி வேண்டுமல்லவா? அதனால் அவர் ரோமுக்கு வருவதாக நான் அறிந்தேன்.

Fig. 3
Antony & His New Bride

பாம்ப்பி: பயங்கரத் திட்டமாகத் தெரிகிறது எனக்கு. பால்யத் திருமணம் போலத் தெரிகிறது எனக்கு. ஆண்டனி அதற்கு உடன்படுவாரா என்பது தெரியாது எனக்கு. நம்மைத் தோற்கடிக்க அக்டேவியஸ் செய்யும் மாபெரும் சதியாகத் தெரிகிறது எனக்கு! ஆண்டனியும் அக்டேவியஸ¤ம் ஒட்டிய நண்பர் அல்லர்! வெட்டிக் கொள்ளும் விரோதியர் அல்லர்! உள்ளார ஒருவர் மீது ஒருவருக்கு எதிர்ப்பாடு ஒளிந்துள்ளது. அந்த ஊமைப் போரை முறிக்க அக்டேவியஸின் யுக்தி உன்னதமானது. வெல்ல முடியாவிட்டால் பகவனை நண்பனாக்கிக் கொள் என்பது பழமொழி! ஆண்டனியை ஒருபடி மேலாக மைத்துனன் ஆக்கிக் கொள்கிறார் அக்டேவியஸ்! எல்லாம் நம்மை முறியடிக்கச் செய்யும் அக்டேவியஸ் தந்திரம்!

மேனாஸ்: அக்டேவியஸ் தங்கையை மணந்து கொண்டாலும், ஆண்டனிக்கு எகிப்த் ராணி மீதுதான் கண்ணோட்டம் இருக்கும். மைத்துனர் ஆண்டனி மந்திர வசீகரியின் மையலில் விழாதபடித் தடுக்க முனைகிறார். அது நடக்காது பாம்ப்பி! முதல் நாளே கிளியோபாத்ரா ஆண்டனியைத் தன்னவன் ஆக்கிக் கொண்டாள்! [மெதுவாக] முதல் நாளே ஆண்டனியும், கிளியோபாத்ராவும் மதுவருந்திக் காதல் மயக்கத்தில் ஒரே அறையில்தான் உறங்கினாராம்! முதல் நாளே …. காதலனைக் கணவனாக்கிக் கொண்டாள் அந்த மோக மாது! கிளியோபாத்ரா … இப்போது … கர்ப்பவதி … என்று கேள்விப்பட்டேன்!

பாம்ப்பி: [அதிர்ச்சியுடன்] என்ன? கிளியோபாத்ரா கர்ப்பவதியா? ஆண்டனியின் மகவு கிளியோபாத்ராவின் வயிற்றில் வளர்ந்து வருகிறதா? அப்படியானால் ஆண்டனியின் திருமணத்தைக் கேள்விப்படும் கிளியோபாத்ரா ஆங்காரியாக மாறிவிடுவாளே! ஆண்டனியின் கழுத்தைத் துண்டித்து விடுவாளே! இந்த அதிர்ச்சி செய்தி அக்டேவியஸ¤க்குத் தெரியுமா? சீஸரின் மகனை கிளியோபாத்ரா பெற்றதும் அக்டேவிஸ் சீறி எழுந்தார்! சீஸரின் வாரிசு ஓர் எகிப்த் ஜிப்ஸியின் பிள்ளை என்றதும், ரோமாபுரியின் தூய கலாச்சாரம் போனது என்று வெகுண்டு எழுந்தார்! ஆண்டனியை வெறுக்கும் அக்டேவியஸ், கிளியோபாத்ராவை வேசியெனத் திட்டும் அக்டேவியஸ் எத்தகைய அதிர்ச்சி அடைவார் என்று எண்ணிப் பார்க்க முடியவில்லை!

மேனாஸ்: அவருக்குத் தெரிந்தால் தங்கை திருமணத்தை ஏற்பாடு செய்வாரா? கிளியோபாத்ராவைப் பற்றி சரியாகச் சொல்கிறேன்! வயிற்றில் வளரும் மகவுக்குத் தந்தையான ஆண்டனி என்ன செய்தாலும் பொறுத்துக் கொள்வாள் கிளியோபாத்ரா! ஆனால் நிச்சயம் அதிர்ச்சி அடைவாள், திருமணத்தைப் பற்றி அறிந்தால்! கவலைப் படாதீர்! அக்டேவியாவைப் பிரித்து ஆண்டனியை மீண்டும் பிடித்து விடுவாள், கிளியோபாத்ரா! இந்த திருமணச் சதித் திட்டத்தில் வெல்லப் போவது கிளியோபாத்ரா! தோற்கப் போவது அக்டேவியஸ்!

பாம்ப்பி: அதே போல் பார், நமது ரோமாபுரிப் போரிலும் தோற்கப் போவது அக்டேவியஸ்தான்! ஆண்டனியைப் போல் அக்டேவியஸ¤க்கு அனுபவம் போதாது! கிளியோபாத்ராவுக்கு உள்ள அறிவுக் கூர்மை புது மணப்பெண் அக்டேவியாவுக்குக் கிடையாது! ஆண்டனி கிளியோபாத்ராவின் மடியில் கிடந்தால் என்ன? புது மணப்பெண் அணைப்பில் கிடந்தால் என்ன? எனக்குக் கவலை யில்லை! ஆண்டனி போரை நடத்துவதற்கு முன்பு, நாம் போரை நடத்திச் செல்வோம்! ஒன்றாய் அக்டேவியஸையும், லெப்பிடஸையும் முறியடிப்போம். ரோமைக் கைப்பற்றுவோம்! போர் முரசம் தட்டுவோம். புறப்படு ரோமாபுரி நோக்கி! ஆண்டனி கால் வைப்பதற்கு முன்பு நாம் தடம் வைக்க வேண்டும் ரோமில்!

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

9. Shakespeare’s Antony & Cleopatra Edited By: David Bevington [1988]

10 Shakespeare’s Antony & Cleopatra Edited By: M.R. Ridly [1993]

11 Life of Antony & Fulvia Wikipedia the Free Encyclopedia [http://en.wikipedia.org/wiki/Fulvia]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (Feb 27, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:7 காட்சி:1)

This entry is part [part not set] of 35 in the series 20070222_Issue

சி. ஜெயபாரதன், கனடா

அவள் ஒரு தர்க்க ராணி! வாயாடி மாது!
அவளைப் பற்றி அனைத்தும் இவற்றுள் அடங்கும்:
திட்டுவாள்! சிரிப்பாள்! அழுவாள்!
ஆழமாய் எழும் ஆவேசம், ஆத்திர உணர்ச்சி,
உன் கவனம் கவரும்! பாராட்ட விழைவாய்!
உண்மை யாய்த் தோன்றும் உனக்கு! ….. ஆண்டனி

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

பனித்த குருதியில் என்னறியாப் பருவத்தில்,
நல்லது, கெட்டது புரியாத் தருணத்தில்,
தனித்து அப்பாவி போல் சொல்கிறேன்,
கொண்டுவா தாளையும், மையையும். எகிப்த்
குடியினர் அனைவரும் அனுதினம் எழுதிக்
கடிதம் போகும் ஆண்டனி அவர்க்கு! … கிளியோபாத்ரா

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

கதைச் சுருக்கம்: கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்!

முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் ஆண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த ஆண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. ஆண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் ஆண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை ஆண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன ஆண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.

ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்

நாடகப் பாத்திரங்கள்:

எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:

கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கிளியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்

ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ், ரோமின் மூன்றாம் தளபதி
எனோபரஸ் (ஆண்டனியின் பாதுகாவலன்),
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
·பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன்)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)

கிளியோபாத்ரா
அங்கம்:7 காட்சி:1

ரோமா புரியின் நிலைமை: ·பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி ·புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள். எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனி ரோமுக்கு வரத் தந்திரம் செய்கிறான்.

++++++++++++++++++

கிளியோபாத்ரா
அங்கம்:7 காட்சி:1

நேரம், இடம்: அலெக்ஸாண்டியா, கிளியோபாத்ராவின் மாளிகை. பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, சேடிகள், அடிமைகள், ஐரிஸ், அலெக்ஸாஸ், சார்மியான்.

காட்சி அமைப்பு: ஆண்டனியைக் காணாமல் கிளியோபாத்ரா கவலையுடன் அலைமோதிக் கொண்டிருக்கிறாள்.

அலெக்ஸாஸ்: மகாராணி! ஒரு முக்கியமான செய்தி! ஆண்டனி எகிப்திலில்லை! தளபதி ஆண்டனி ரோமாபுரிக்குப் போயிருப்பாதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.

கிளியோபாத்ரா: [கவலையுடன்] எப்போது போனார்? எதற்காகப் போனார்? நமது ஒற்றர் படை அறியாமல் எப்படிப் போனர்? என்னிடம் சொல்லாமல் போனாரே!

அலெக்ஸாஸ்: ரோமுக்கு வரும்படி ஆண்டனிக்கு அவசரச் செய்தி வந்திருக்கிறது! பாம்ப்பியின் போர்ப்பலம் அதிகமென்று தெரிந்ததால் அக்டேவியஸ் அவசரத் தூதரை அனுப்பி யுள்ளார். ஆண்டனி போகாவிட்டால், பாம்ப்பியின் படையினர் ரோமாபுரியைப் பிடித்து விடுவார் என்னும் பயம் உண்டாகி விட்டது. போரை முன்னின்று நடத்தி, பாம்ப்பியை முறியடிக்க ஆண்டனி ஒருவரால்தான் முடியும் என்பது அக்டேவியஸ் முடிவு. அதன் விளைவு ஆண்டனி மறைவு!

கிளியோபாத்ரா: [மன வேதனையுடன்] அப்படியானல் ரோமில் போர் நிகழப் போவது உண்மைதானா? போர்க்களத்தின் முன்னணியில் நின்று போரிடும் ஆண்டனிக்கு ஏதாவது நிகழ்ந்தால் என்கதி என்னவாகும்? சீஸர் கொல்லப் பட்டதும் என்மனம் இப்படித்தான் அலைமோதியது. சீஸர் மாண்ட பிறகு எகிப்தின் ஆதரவாய் ஆண்டனி இருப்பார் என்று ஆனந்தமாய் இருந்தேன். சீஸர் போனதும் எனக்கு ஆண்டனி உதவியாக இருப்பார் என்று மகிழ்ச்சியாக இருந்தேன். ஆண்டனிக்கு எந்த ஆபத்தும் வந்தால் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. சீஸர் காலிசெய்த என்னிதயத்தில் ஆண்டனிக்கு ஓரிடம் வைத்திருந்தேன்! ஆனால் அவரது மனம் வேறிடம் தேடிப் போகிறதே!

அலெக்ஸாஸ்: மகாராணி! ஆண்டனிக்குப் போரில் ஒன்றும் நிகழாது. அவர் மகா வீரர்! அப்படி அவருக்கு ஏதேனும் ஆனால் அக்டேவியஸ் உள்ளார். அவர் எகிப்தின் ஆதரவாளர் அல்லவா?

கிளியோபாத்ரா: [சினத்துடன்] இல்லை! சீஸரையும் அப்படித்தான் நினைத்தேன். அவருடைய நண்பன் புரூட்டஸே சீஸர் வயிற்றில் குத்தினார்! அக்டேவியஸ் எகிப்தின் ஆதரவாளி அல்லர்! எகிப்தை உரிமை நாடாகக் கருதாமல், அடிமை நாடாக மிதிக்க எண்ணுபவர் அவர். எகிப்தின் மீது அவருக்குப் பரிவுமில்லை! பகையுமில்லை! ஆனால் சீஸரை நான் மணந்தது அவரது வாரீசான அக்டேவியஸ¤க்குப் பிடிக்க வில்லை! எனக்கும் சீஸருக்கும் ஆண் மகவு பிறந்ததும் அக்டேவியஸ¤க்குப் பிடிக்க வில்லை! நான் ரோமாபுரிக்குச் சென்ற போது, அக்டேவியஸ் என்னைப் பார்த்த அந்த அடாத பார்வை என் நினைவில் பதிந்து போயுள்ளது. என் மகனைப் பார்த்த அவரது கழுகுப் பார்வையை நான் மறக்கவில்லை. அக்டேவியஸ் மெய்யாக என் பகைவர்! அதனால் எகிப்துக்கும் பகைவர்! அக்டேவியஸை நான் நம்ப மாட்டேன்.

அலெக்ஸாஸ்: மகாராணி! நீங்கள் சொல்வதில் ஓர் உண்மை யிருக்கிறது. அக்டேவியஸ் ஆண்டனியை உங்களிடமிருந்து பிரிக்க வழி செய்வதாகத் தெரிகிறது.

கிளியோபாத்ரா: [ஆர்வமோடு] எதை வைத்து அப்படிச் சொல்கிறாய்? எனக்குப் புரிய வில்லை! எகிப்தின் நண்பரை என்னிட மிருந்து பிரிப்பதால் அவருக்கென்ன அனுகூலம்?

அலெக்ஸாஸ்: மகாராணி! ஆண்டனிக்கு மறுமணம் செய்து வைக்க அக்டேவியஸ் முற்படுவதாகக் கேள்விப் பட்டேன்!

கிளியோபாத்ரா: [கையிலிருந்த மதுக் கிண்ணத்தை வீசி எறிந்து] என்ன? ஆண்டனிக்கு அடுத்தோர் திருமணமா? மனைவி புல்வியா செத்தின்னும் பத்து நாட்கள் கூட ஆகவில்லை! அவளைப் புதைத்த பூமியில் இன்னும் புல் கூட முளைக்க வில்லை! புல்வியாவுக்கு வடித்த கண்ணீர் ஆண்டனிக் கின்னும் வற்றி உலரவில்லை! அதற்குள் அடுத்தோர் திருமணமா? நம்ப முடிய வில்லை! யாரந்த புதுப்பெண்?

அலெக்ஸாஸ்: அவள் பெயர் அக்டேவியா!

கிளியோபாத்ரா: [கோபத்தில் அலறி] யாரந்த சிறுக்கி? அவளுக்கு ஆண்டனி மேல் காதலா? அல்லது ஆண்டனிக்கு அவள் மீது மோகமா? புல்வியா போனதும் புதுப் பெண் மீது கண் விழுந்து விட்டதா?

அலெக்ஸாஸ்: அக்டேவியஸின் தங்கை அவள்! அக்டேவியா ஓர் அழகியாம்! பதினாறு வயதாம்! பார்த்தவர் மயங்கிப் போகும் பாவையாம்! ஆண்டனிக்கு அவள் மீது ஆசையாம்!

கிளியோபாத்ரா: [ஆத்திரமோடு] அப்படி நிச்சயம் இருக்க முடியாது. அக்டேவியஸே ஆண்டனிக்கு வயதில் சிறியவர்! அவருடைய தங்கை எப்படி யிருப்பாள்? ஆண்டனிக்கு அருமை மகளைப் போலிருப்பாள்! மனைவியாக உடம்பு இருக்காது. அந்த சிறுக்கியை மணந்து கொள்ள ஆண்டனி சம்மதம் தந்து விட்டாரா?

அலெக்ஸாஸ்: [மிக்க பயமுடன்] மகாராணி! நானொரு தூதுவன். என் மேல் கோபப் படாதீர்கள்! எப்படிச் சொல்வது என்று தயங்கினேன். ஆண்டனி ஒப்புக்கொண்டு விட்டார் என்று அறிந்தேன், மகாராணி!

கிளியோபாத்ரா: [கண்களில் கோபக்கனல் பறக்க] என்னை வஞ்சித்து அவளை மணக்க ஆண்டனி சம்மதித்து விட்டாரா? என்னை நோக வைக்க ஆண்டனி செய்வதாக நான் உணர்கிறேன்! ரோமானியர் அனைவரும் வஞ்சகர், சீஸரைத் தவிர! அலெக்ஸாஸ்! உடனே நமது ஒற்றனை ரோமாபுரிக்கு அனுப்பு! அங்கே என்ன நடக்கிற தென்று நான் அறிய வேண்டும். ஒருத்தன் அல்ல ஒன்பது பேரை அனுப்பு. அனுதினமும் எனக்குச் செய்தி கிடைக்க வேண்டும். போ அலெக்ஸாஸ் போ! [அலெக்ஸாஸ் போகிறான். முகத்தைத் திருப்பிக் கொண்டு அழுகிறாள்] ஐரிஸ்! மதுபானம் கொண்டுவா! [மதுபானத்தைக் கிண்ணத்தில் ஊற்றித் தருகிறாள்] ஐரிஸ்! இப்போது ரோமில் என்ன நடக்கும்? எப்படி இருப்பாள் அந்தக் குமரி அக்டேவியா? என்னை விட அழகானவளா? என்னை விட அறிவானவளா? என்னை விட உயரமாக இருப்பாளா? அல்லது குட்டையாக இருப்பாளா? என்னைப் போல் வெள்ளையாக இருப்பாளா?

ஐரிஸ்: மகாராணி! பதினாறு வயதுப் பேதை எப்படி யிருப்பாள்? பிரபு ஆண்டனிக்கு அவளைப் போல் மூன்று மடங்கு வயது! மகளும், தந்தையும் மணமேடையில் அமர்ந்தால் எப்படி யிருக்கும்? பார்க்கச் சகிக்காது! பல்லாங்குழி விளையாடும் பாவையைப் பைத்தியகாரர் தளபதிக்கு மணமுடிக்கிறார்!

கிளியோபாத்ரா: ஐரிஸ்! ஆண்டனி திருமணத்தை நிறுத்த வேண்டுமே, எப்படிச் செய்வது?

ஐரிஸ்: மகாராணி! திருமணத்தைத் தடுக்க முடியாது! ஆனால் ஆண்டனியின் புதுப் பெண்ணைப் பிரித்து விடலாம். அதைச் செய்வது எளிது! கவலைப் படாதீர்கள், மகாராணி! நான் ஏற்பாடு செய்கிறேன்.

கிளியோபாத்ரா: [தனக்குள் மெதுவாக] வரட்டும் ஆண்டனி! அவரை மயக்க வேண்டும் மதுவைக் கொடுத்து! அவரை மணக்க வேண்டும் நான் மணாளனாக! அக்டேவியா ஆண்டனியின் மனைவியா? கிளியோபாத்ரா உள்ளவரை அது நிகழாது! ரோமுக்கு ஆண்டனி மீளாதபடிச் செய்வது என் கடமை! பார்க்கிறேன், யார் பெரியவள் என்று? வாலிபக் குமரி கிளியோபாத்ராவா? அல்லது இளங்குமரி அக்டேவியா? [ஆங்காரமாக] அக்டேவியா ஆண்டனியின் மனைவியாக எகிப்த் மண்ணில் கால் வைத்தால், தடம்பட்ட தளமெல்லாம் நாகப் பாம்புகளை நடமாட விடுவேன்! அவளை நான் உயிரோட வாழ விடமாட்டேன்! ஆண்டனி எனக்குச் சொந்தம்! அவரை வேறெந்த மாதும் என் முன்பாக முத்தமிடப் பொறுக்க மாட்டேன்!

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

9. Shakespeare’s Antony & Cleopatra Edited By: David Bevington [1988]

10 Shakespeare’s Antony & Cleopatra Edited By: M.R. Ridly [1993]

11 Life of Antony & Fulvia Wikipedia the Free Encyclopedia [http://en.wikipedia.org/wiki/Fulvia]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (Feb 21, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:6 காட்சி:5&6)

This entry is part [part not set] of 24 in the series 20070215_Issue

சி. ஜெயபாரதன், கனடா

தூக்க பானத்தைக் கொடுத்திடு!
காலப் பெரு இடைப்வெளி தனைக் கடந்திட!
எனை விட்டேகினார் என்னினிய ஆண்டனி! … கிளியோபாத்ரா

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

எங்குள்ளார் ஆண்டனி? நிற்கிறாரா? குந்தியுள்ளாரா?
நடக்கிறாரா? அன்றிக் குதிரைமேல் சவாரியா?
ஆண்டனி பளுவைச் சுமந்து மகிழும் குதிரையே!
எவரைச் சுமக்கிறாய் எனும் தீரப் பெருமையில் செல்! … (கிளியோபாத்ரா)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

என்னரும் அரசி! இது அவர் இறுதியாய்ச் செய்தது!
முத்த மிட்டார் இவ்வாசிய முத்தை இருமுறை!
அப்பிக் கொண்டன நெஞ்சை அவர் மொழிகள்!
“அருமை நண்பா! நிமிர்ந்த ரோமன்
எகிப்து அழகிக்குச் சிப்பிக் களஞ்சியம்
அனுப்பிய தாக உரைத்திடு” என்பார்.
பிணைப்பேன் அவள் செல்வ ஆசனத் தோடு,
பிடித்த எனது நாடுகள் எல்லாம். பிறகு
ஆசிய நாடுகள் அனைத்தும் அவளை
ஆசை நாயகி யாக அழைக்கும் எனச்சொல்! … (அலெக்ஸாஸ்)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

பனித்த குருதியில் என்னறியாப் பருவத்திலே,
நல்லது, கெட்டது புரியாத் தருணத்திலே,
தனித்து அப்பாவி போல் சொல்லியது,
கொண்டுவா தாளையும், மையையும். எகிப்தின்
குடியினர் அனைவரும் அனுதினம் எழுதிக்
கடிதம் போகும் ஆண்டனி அவர்க்கு! … கிளியோபாத்ரா

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

கதைச் சுருக்கம்: கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்!

முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் ஆண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த ஆண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. ஆண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் ஆண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை ஆண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன ஆண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.

ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்

நாடகப் பாத்திரங்கள்:

எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:

கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்

ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ், ரோமின் மூன்றாம் தளபதி
எனோபரஸ் (ஆண்டனியின் பாதுகாவலன்),
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
•பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன்)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)

கிளியோபாத்ரா
அங்கம்:6 காட்சி:5

ரோமா புரியின் நிலைமை: •பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி •புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள். எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி.

நேரம், இடம்: ரோமாபுரி. பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்: ரோமாபுரித் தளபதிகள் அக்டேவியஸ், லெப்பிடஸ் அவரது படைக் காவலளர்.

காட்சி அமைப்பு: ரோமாபுரி அரண்மனையில் தளபதி அக்டேவியஸ் எகிப்திலிருந்து ஆண்டனி போரில் கலந்து கொள்ள வரவில்லை என்று செய்தி கொண்டுவந்த கடிதத்தைக் கையில் பார்த்துக் கொண்டு ஆத்திரமோடு உள்ளார். கொல்லப்பட்ட பாம்ப்பியின் மகன் ஸெக்டஸ் பாம்ப்பி தனது படைகளுடன் ரோமைக் கைப்பற்ற வந்து கொண்டிருக்கிறான்.

அக்டேவியஸ்: பார் லெப்பிடஸ்! ஆண்டனி வரவில்லை! எகிப்தில் கட்டாய வேலை யிருப்பதால், ஆண்டனி போரில் கலந்த கொள்ள முடியாதாம். ஸெக்டஸ் பாம்ப்பி ரோமின் எல்லையில் உள்ளதாய் அறிந்தேன்! லெப்பிடஸ்! நீ ஒருவன் மட்டும் பாம்ப்பியை எதிர்க்க முடியாது! ஆண்டனி முன்போல் படை வீரரை நடத்திச் செல்ல வேண்டும். ஆனால் கிளியோபாத்ரா கவர்ச்சி வலையில் மிதந்து கொண்டிருக்கிறார் ஆண்டனி! என்ன கட்டாய வேலை எகிப்தில் உள்ளது ஆண்டனிக்கு? கிளியோபாத்ரா கண்சிமிட்டும் போது முத்தமிடுவதைத் தவிரக் கட்டாய வேலை வேறு என்ன ஆண்டனிக்கு?

லெப்பிடஸ்: நமது நிதிக் களஞ்சியம் வற்றிப் போனதை மறந்து விட்டாயா, அக்டேவியஸ்! நமது படையாட்கள் பல மாதங்கள் சம்பளம் தரப்படாமல் முணங்குவது உன் காதில் கேட்க வில்லையா? கிளியோபாத்ராவை ஆசை ராணியாக வைத்துக் கொண்டால்தானே பொன் நாணயங்களை ஆண்டனி கறந்து கொண்டு வரலாம். என்னாற்றல் மீது அவருக்கு உறுதி உள்ளது. அதனால்தான் அவர் வரவில்லை! நான் உள்ள போது நீயேன் கலங்க வேண்டும்?

அக்டேவியஸ்: சீஸருக்குப் பிறகு ரோமாபுரியின் பராக்கிரமத் தளபதியாய், ஆண்டனி தனித்து நிற்கிறார். அவரிடம் நாம் குற்றம் காணக் கூடாது! ஆனால் மாவீரர் ஆண்டனி யில்லாமலே நான் பாம்ப்பியின் படைகளை நசுக்க முடியும். எனக்கு நம்பிக்கை உள்ளது!

அக்டேவியஸ்: உன் நம்பிக்கை மட்டும் போதாது லெப்பிடஸ்! நமது ரோமானியப் படைகள் சாதாரண மனிதர். அவரைப் புலிகளாகப் பாய வைக்க ஒரு தளபதியால் முடியும்! அதே புலிகளைப் பூனைகளாகவும் ஒரு தளபதி ஆக்கிவிட முடியும். ஆண்டனி சாதாரணப் படை வீரரை ஆவேசப் புலிகளாக ஆக்க வல்லவர்! நமது பொறுப்பில் விட்டுவிட்டு ஆண்டனி கிளியோபாத்ரா மடியில் படுத்துக் கிடப்பது எனக்கு வேதனை தருகிறது. பாம்ப்பியை நாமிருவரும் தோற்கடித்தால் அவர் தன் முதுகில்தான் தட்டிக் கொள்வார். மாறாக நாமிருவரும் தோற்றுப் போனால், உன்னையும் என்னையும் திட்டி ஊரெங்கும் முரசடிப்பார்!

லெப்பிடஸ்: ஈதோ போர் முனையிலிருந்து நமக்கு முதல் தகவல் வருகிறது.

[அப்போது ஒரு படைத் தூதுவன் வருகிறான்]

முதல் தூதுவன்: மாண்புமிகு தளபதி அவர்களே! ஒவ்வொரு மணிக்கும் தகவல் வருமினி உங்களுக்கு. வெளி நாட்டுப் போர்க்களம் எப்படி உள்ள தென்று சொல்லவா? பாம்ப்பியின் கடற் படைப்பலம் வல்லமை உள்ளது. அக்டேவியஸ் தீரருக்கு அஞ்சியவர் அனைவரும் பாம்ப்பியின் பக்கம் போய்ச் சேர்ந்திருக்கிறார். அவரது ஒற்றர் அவருக்குத் தவறான தகவலைக் கொடுக்க வழி செய்தோம் நாங்கள்!

அக்டேவியஸ்: மெச்சினேன் உன்னை! தப்பான தகவல் கொடுங்கள்! தவறான பாதையைக் காட்டுங்கள்! மாட்டிக் கொண்டதும் அவரைச் சுற்றித் தாக்கி ஈட்டியால் குத்துங்கள்!

[முதல் தூதுவன் போகிறான். அடுத்த தூதுவன் நுழைகிறான்]

இரண்டாம் தூதுவன்: மாபெரும் கடற் கொள்ளைக்காரர் பலரைப் பாம்ப்பி படைவீரராய்ச் சேர்த்திருக்கிறார். அந்த பயங்கர வாதிகள் பரிவுள்ள மனிதர் அல்லர். வன விலங்குகள்! நாம் மிகக் கவனமாகப் போரிட வேண்டும்.

அக்டேவியஸ்: முன்பே அறிவித்ததற்கு நன்றி. போய் வா [தூதுவன் போகிறான்] லெப்பிடஸ்! புதிதாகப் பயிற்சி பெற்ற அந்த வாலிப படைகளை அனுப்பி வை! வாலிபர் நெஞ்சம் வைரம் போன்றது. கடற் கொள்ளைக்காரர் ஓய்வெடுக்கும் நேரம் பார்த்துக் கப்பலுக்குள் அவர் நுழைய வேண்டும். திடீரெனத் தாக்கி அவருக்கு மரண அதிர்ச்சி கொடுக்க வேண்டும். ஆண்டனி யிருந்தால் அவரது ஆலோசனை பயன்படும். அவர் கடற்போர் புரியும் நேரத்தில் கிளியோபாத்ராவுடன் குளத்தில் நீராடிக் கொண்டிருப்பார்.

லெப்பிடஸ்: ஆண்டனியால் நமக்கும் அவமானம்!, அவருக்கும் அவமானம்! தன்மான மின்றி அடிமையாய்ப் பெண்மானின் காலை வருடிக் கொண்டிருக்கிறார்! ஆண்டனி கிளியோபாத்ராவுக்கு அடிமையா? அல்லது கிளியோபாத்ரா ஆண்டனிக்கு அடிமையா? .. நான் கவலைப் படவில்லை. நமது படைகள் கூடட்டும்! நமது கலப்பு யோசனைகள் சேரட்டும்! நாம் எதிர்த்து முன்னேறா விட்டால், பாம்ப்பி நமது சோம்பலில் பலப் பெறுவார்! நாளை நமது கடற்படையைத் திரட்டித் தயார் செய்கிறேன்! நான் போகட்டுமா? விடை பெறுகிறேன். [வெளியேறுகிறான்]

அக்டேவியஸ்: போய்வா லெப்பிடஸ்! … ஆண்டனி! உனக்கு அழிவு காலம் உதய மாகி விட்டது. அறிவை அடகு வைத்து அணங்கின் பிடியில் வீரன் நீ அகப்பட்டுக் கிடக்கிறாய்! உன் கண்கள் காதலில் மூழ்கி ஒளியிழந்து குருடாகி விட்டன! நீ கண்ணை மூடினால் ரோமாபுரி இருட்டாகி விடாது! [போகிறான்]

கிளியோபாத்ரா
அங்கம்:6 காட்சி:6

நேரம், இடம்: அலெக்ஸாண்டியா, கிளியோபாத்ராவின் மாளிகை. பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, சேடிகள், அடிமைகள்

காட்சி அமைப்பு: கிளியோபாத்ராவின் மாளிகைப் பொய்கையில் நீராடிய பிறகு ஐரிஸ், சார்மியான், அலெக்ஸாஸ், மார்டியன் ஆகியோரோடு உரையாடிக் கொண்டிருக்கிறாள்.

கிளியோபாத்ரா: [மனம் நொந்துபோய்] ஐரிஸ்! அந்த மயக்க பானத்தை எனக்கு எடுத்து வா! [ஐரிஸ் போகிறாள்] நான் மறக்க வேண்டும் என் மன வேதனையை! நான் தூங்க வேண்டும், கால இடைவெளியைக் கடக்க! தூங்கி விழிக்கும் போது ஆண்டனி என் கண் முன்னே நிற்க வேண்டும்! அதுவரை எனக்கு உணவில்லை! கனவில்லை! நினைவில்லை! எதுவுமில்லை! ஆண்டனி விழிமுன் நின்றால், கண்ணிமைகள் தானாகவே திறக்கும். சார்மியான்! வாசலில் போய் நில், வருகிறாரா என்று பார்த்துச் சொல்! [சார்மியான் போகிறான்]. அலெக்ஸாஸ்! எனக்குத் தெரியாமல், எனக்குச் சொல்லாமல் ஆண்டனி ரோமாபுரிக்குப் போய் விட்டாரா என்று அறிந்து வா! போனால் எப்போது திரும்பி எகிப்துக்கு வருவாரெனத் தெரிந்து வா! [அலெக்ஸாஸ் போகிறான்]

[ஐரிஸ் கொண்டு வரும் தூக்க பானத்தை அருந்திப் படுக்கையில் சாய்கிறாள்]

கிளியோபாத்ரா: [எழுந்து] மார்டியான்! ஆண்டனி எங்கே போயிருக்க முடியும் என்று உன்னால் ஊகிக்க முடியுதா? எங்காவது காத்துக் கொண்டு நிற்கிறாரா? கவலையுடன் நெற்றியில் கைவைத்து எங்காவது உட்கார்ந் திருப்பாரா? ரோமுக்குப் போவதா, வேண்டாமா வென்று திக்குமுக்காடி அங்குமிங்கும் நடக்கிறாரா? அல்லது குதிரை மீதேறிச் சவாரியில் அப்பால் போய்க் கொண்டிருக்கிறாரா? அப்படியானல் அவரது பளுவைத் தாங்கும் அந்த குதிரை ஓர் அதிர்ஷ்டக் குதிரை! எத்தகைய கோமானைச் சுமக்கிற தென்று அக்குதிரை பெருமைப் பட்டுக் கொள்ளலாம்!

[அப்போது கையில் சிறு பேழையோடு அலெக்ஸாஸ் நுழைகிறான்]

அலெக்ஸாஸ்: மகாராணி! ஈதோ ஒரு பரிசை ஆண்டனி அனுப்பி யிருக்கிறார்! உள்ளிருப்பது நல்முத்து ! மூன்று முறை முத்தமிட்டு ஆண்டனி அளித்ததாகத் தூதர் சொல்கிறார். இது ஆசிய முத்து! ஆண்டனியின் இனிய அதரங்கள் அன்புடன் முத்தமிட்டு அளித்த முத்து ஈதோ! [கையில் கொடுக்கிறான்]

கிளியோபாத்ரா: ஆண்டனி முத்தமிட்ட முத்தென்றால் அதன் மதிப்பு ஆயிரம் மடங்கு! அடுத்தொரு முத்து வந்தால் காதணியாக மாட்டிக் கொள்வேன். என் தலையணைக் கடியில் வைத்துக் கொள்கிறேன். எனக்கினிய கனவுகள் வரும்! அக்கனவுகளில் முத்தை முத்தமிட்ட ஆண்டனி என்னை முத்தமிட வருவார்!

அலெக்ஸாஸ்: மகாராணி! ஆண்டனி தூதர் மூலம் ஒரு கடிதமும் அனுப்பியுள்ளார் உங்களுக்கு. ஈதோ கடிதம் [கடித்ததைக் கொடுக்கிறான்]

கிளியோபாத்ரா: [கடித்தை வாசிக்கிறாள்] “ஆசியச் சிப்பியின் முத்தை உனக்கு அனுப்பியிருக்கிறேன். அது தனித்துவம் படைத்தது. ஏனெனில் எனதினிய முத்தங்களைச் சுமந்து கொண்டு வருகிறது. கண்ணே கிளியோபாத்ரா! ஈதோ என் மாபெரும் பரிசு! நான் கைப்பற்றிய நாடுகளை எல்லாம், உனது எகிப்திய அரசுடன் இணைப்பேன். கிழக்காசிய நாடுகளும் உன்னைத் தம் ஆசை ராணியாகப் போற்றும்!” [பூரித்து எழுகிறாள்] யாரங்கே! அலெக்ஸாஸ்! தாளும், மையும் கொண்டுவா! நான் ஆண்டனிக்குக் கடிதம் எழுத வேண்டும். எகிப்தில் எழுதத் தெரிந்த அத்தனை பேரையும் தினமொரு முறை எழுத வைத்து, ஆண்டனிக்குக் கடிதம் அனுப்புவேன். முதல் கடிதம் என் கடிதம் என்னாசைக் காதலருக்கு!

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

9. Shakespeare’s Antony & Cleopatra Edited By: David Bevington [1988]

10 Shakespeare’s Antony & Cleopatra Edited By: M.R. Ridly [1993]

11 Life of Antony & Fulvia Wikipedia the Free Encyclopedia [http://en.wikipedia.org/wiki/Fulvia]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (Feb 14, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:6 காட்சி:4)

This entry is part [part not set] of 37 in the series 20070208_Issue

சி. ஜெயபாரதன், கனடா

உண்மை யான உலோக வடிவங்களை
உருவாக் குபவர், கிரேக்கர்!
சுவாசிப் பவை அவை எல்லாம்!
செதுக்குவர் அவற்றைப் பளிங்குக் கற்களில்,
உயிர் பெற்று எழுவது போல்!
பேருரை ஆற்றுவர் அரங்கத்தில்!
பேரண்ட நகர்ச்சியைக் கணிப்பர்,
விண்மீன் உதிப்பதைச் சொல்வர்!
ரோமானியர் அப்படி அல்லர், அவர்
உன்னத கலைகளைச் சிந்திப்பவர்!
ஆதிக்க முடன் நாட்டை ஆள்பவர்!
அமைதி நாட்டுவர் சட்டத்தின் கீழே!
வல்லவரை வெல்வர்! வெற்றி பெற்றபின்
நல்லவராய் நடத்துவர் நட்புடன்!

வெர்ஜிலின் ஆறாம் ஏனீத் [Virgil’s Aeneid VI (B.C. 70-19)]

எங்கே ஆண்டனி? எவருடன் உள்ளார்?
என்ன செய்கிறார்? என்னைக் கூறாய்
உன்னை அனுப்பிய தென்று! ஆண்டனி
சோகமா யிருந்தால், சொல்வாய் அவரிடம்,
ஆடிப் பாடி உள்ளேன் என்று! அவர்
பூரித்தி ருந்தால், நான் நோயில் துடிப்பதாய்க்
கூறிடு! போய்வா சீக்கிரம்! … (கிளியோபாத்ரா)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

கண்ணியப் பிரபு! ஒரு வார்த்தை புகல்வேன்!
பிரியத்தான் வேண்டும் நீங்களும் நானும்!
அது மட்டு மில்லை!
நேசிப்ப துண்மை நீங்களும், நானும் !
அது மட்டு மில்லை!
நிச்சயம் அறிவீர் நீவீர்! சொல்கிறேன்,
மறக்கும் என் நினைவு, என்னைத்
துறக்கும் ஆண்டனி போன்றது! … (கிளியோபாத்ரா)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

என்னை மறந்து ஆண்டனி ஒதுங்கினால்
முன்னமே பீடிக்கும் மனநோய் என்னை!
மின்னலாய் நீங்கிப் பொங்கும் உடல்நலம்,
அன்புக் காதலை ஆண்டனி காட்டினால்! … (கிளியோபாத்ரா)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

முகத்தைத் திருப்பி அழுவாய் அப்புறம்
அவளுக் காக நீ ஆண்டனி!
என்னிடம் விடைபெற்று ஏகுவாய், இப்புறம்
எகிப்துக்குக் கண்ணீர் விடுவதாய்க் கூறி ! … (கிளியோபாத்ரா)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

கதைச் சுருக்கம்: கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்!

முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் ஆண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த ஆண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. ஆண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் ஆண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை ஆண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன ஆண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.

ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்

நாடகப் பாத்திரங்கள்:

எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:

கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்

ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ், ரோமின் மூன்றாம் தளபதி
எனோபரஸ் (ஆண்டனியின் பாதுகாவலன்),
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
•பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன்)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)

கிளியோபாத்ரா
அங்கம்:6 காட்சி:4

ரோமா புரியின் நிலைமை: •பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி •புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள்.

நேரம், இடம்: அலெக்ஸாண்டியா, கிளியோபாத்ராவின் மாளிகை. பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, சேடிகள், ஆண்டனி, ஆண்டனியின், பாதுகாவலர், படையாட்கள்

காட்சி அமைப்பு: கிளியோபாத்ராவின் மாளிகையில் ரோமானிய படையினர் ஆண்டனியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார். போர்க்களத்தில் தனித்துப் போய் மரணம் அடைந்த மனைவி புல்வியாவை எண்ணிக் கலங்கிய வண்ணம் ஆண்டனி ரோமாபுரிக்கு மீள வேண்டும் என்று அலை மோதிய நிலையில் இருக்கிறான். அப்போது கிளியோபாத்ரா ஐரிஸ், சார்மியான், அலெக்ஸாஸ் சகாக்களோடு வருகிறாள்.

கிளியோபாத்ரா: [ஆத்திரமுடன்] அலெக்ஸாஸ்! சார்மியான்! எங்கே ஆண்டனி? யாரோ டிருக்கிறார்? தேடிப் பாருங்கள். எகிப்தில் நடமாடிக் கொண்டு என் கண்களில் படாமல் என்ன செய்கிறார் என்று தெரிந்து வாருங்கள். என்னை விட்டுப் போக அவரைக் கவர்ச்சி செய்வது எது?

சார்மியான்: மகாராணி! நாலைந்து நாட்களாக நானும் ஆண்டனியைப் பார்க்க வில்லை.

அலெக்ஸாஸ்: மகாராணி! அவரது மனைவி புல்வியாவை நினைத்துப் புலம்பிக் கொண்டிருந்தார்.

கிளியோபாத்ரா: [சினத்துடன்] உயிரோடு கிளியோபாத்ரா உள்ள போது, செத்துப் போன புல்வியாவை நினைத்தா புலம்பிக் கொண்டிருக்கிறார்? அவளைத் தனியாகப் போர்க்களத்தில் விட்டு வந்த ஆண்டனிக்கு, அவள் மீது எப்படி அனுதாபம் வந்தது?

அலெக்ஸாஸ்: அவள் தனியே நோயில் சாகட்டும் என்று ஆண்டனிதான் காத்திருந்தார்.

கிளியோபாத்ரா: அப்படி என்றால் அவள் செத்துவிட்டாள் என்று ஆண்டனி ஆனந்தமாகத்தான் இருப்பார்! போய்ப் பார்த்து வா அலெக்ஸாஸ்! அவர் ஆனந்தமாக இருந்தால், கிளியோபாத்ரா திடீரொன நோயால் தாக்கப் பட்டுப் படுக்கையில் கிடக்கிறாள் என்று சொல்.

சார்மியான்: அப்படி யில்லை மகாராணி! அலெக்ஸாஸ் சொல்வது தவறு. ஆண்டனி மனக் கவலையில் வாடுகிறார் என்பது நானறிந்த உண்மை.

கிளியோபாத்ரா: [ஆர்வமோடு] அப்படியா? போய்ப் பார்த்து வா, சார்மியான்! ஆண்டனி மனக் கவலையில் இருந்தால், கிளியோபாத்ரா ஆடிப் பாடி ஆனந்தமாய் இருக்கிறாள் என்று சொல்.

ஐரிஸ்: மகாராணி, நீங்கள் ஆண்டனி பிரபுவை நேசிப்பது போல், உங்கள் மீது அவர் தீராக் காதல் கொள்ளும்படிச் செய்ய வேண்டும்.

கிளியோபாத்ரா: எப்படிச் செய்வது சொல் ஐரிஸ். நான் என்ன செய்யாமல் தவறுகிறேன்?

ஐரிஸ்: அவர் கேட்பதை எல்லாம் அளித்து விடுங்கள். எதையும் குறுக்கிட்டு மாட்டேன் என்று எதிர்க்காதீர்கள்.

கிளியோபாத்ரா: முட்டாளைப் போல் பேசுகிறாய் ஐரிஸ்! அவரை இழக்கும் முறைகளைச் சொல்லிக் கொடுக்கிறாய்.

ஐரிஸ்: கவர்ச்சியாகப் பேசுங்கள், கனிவாகப் பேசுங்கள், காரமாய்ப் பேசினால் பாராமல் போவார். அதோ அங்கே, ஆண்டனி கோமான் வருகிறார். [ஆண்டனி சோகமாய் நுழைகிறார்]

கிளியோபாத்ரா: [தலையில் கைவைத்து ஆண்டனியைப் பார்க்காது] எனக்குத் தலைவலி! மனவலி! உடல் வலி! ஐரிஸ்! மதுபானம் கொண்டுவா! மருந்தைக் கொண்டுவா! அலெக்ஸாஸ், நீ போய் மருத்துவரை அழைத்து வா! வரும் போது ஜோதிடரைக் கண்டு என்னைப் பார்க்க வரச் சொல். ஏன் என்னை நோய் தாக்குது என்று கேட்க வேண்டும். [ஐரிஸ், அலெக்ஸாஸ் வெளியேறுகிறார்கள்]

ஆண்டனி: [வருத்தமுடன்] அன்பே! கிளியோபாத்ரா! என்ன செய்கிறது உடம்புக்கு? சொல்லி விடக் கூடாதா எனக்கு? நானிங்கே வந்திருப்பது உனக்காக! ரோமை விட்டு வந்திருப்பது உனக்காக! நாட்டை ஆளாது நானிங்கு வந்திருப்பது உனக்காக! வீட்டை, மனைவியை விட்டு வந்திருப்பது உனக்காக!

[ஐரிஸ் மதுக் கிண்ணமுடன் மருந்தைக் கொண்டு வந்து கிளியோபாத்ராவுக்குத் தருகிறாள்]

கிளியோபாத்ரா: ஐரிஸ்! பிடித்துக் கொள் என்னை! தலை சுற்றுகிறது. [ஆண்டனி ஓடி வந்து கிளியோபாத்ராவைப் பிடித்துக் கொள்கிறான்]

ஆண்டனி: நான் உன்னருகில் இருக்கிறேன், கிளியோபாத்ரா! உன் தலை சுற்றாமல் நான் பிடித்துக் கொள்கிறேன். [கிளியோபாத்ராவை மெதுவாக மெத்தையில் படுக்க வைக்கிறான்] ஐரிஸ்! மருந்தை என்னிடம் கொடு! எனக்கும் மது பானம் கொண்டு வா!

கிளியோபாத்ரா: ஐரிஸ்! மருந்தை என் கையில் கொடு. தன் வேளையில் மும்முரமாய் உள்ளவர் எனக்கு உதவி செய்ய வேண்டாம்! பாரா முகமாய்க் காணாமல் போனவர் பரிவு எனக்கு வேண்டாம். [ஆண்டனியைப் பார்த்து] புல்வியாவின் ஈமக் கிரியைக்குப் போக வில்லையா?

ஆண்டனி: போவதா, கூடாதா என்று அலைமோதும் என் இதயம்! போக நினைத்துப் படகில் ஏறி நான் அமர்ந்தேன்! உன் நினைவு வந்தது! கீழே இறங்கி வந்து விட்டேன்! கவலப் படாதே கிளியோபாத்ரா! உன்னை விட்டு ஒருபோதும் நீங்க மாட்டேன்!

கிளியோபாத்ரா: நீங்கள் சொல்வது உண்மையா? உங்கள் புல்வியாவை விட முக்கியமானவளா நான்? முறைப்படி உங்களை மணந்தவள் அவள்! எனக்கென்ன பிடியுள்ளது? உங்களை உரிமையாக பிணைத்துக் கொள்ள என்னிடம் என்ன உள்ளது? நீங்கள் நினைத்தால் வருவீர்; நினைத்தால் போவீர்! அலெக்ஸாண்டிரியா அரண்மனை ரோமானியரின் சத்திரமாகி விட்டது! சாவடியாகி விட்டது!

ஆண்டனி: கண்ணே, கிளியோபாத்ரா! அப்படிச் சொல்லாதே! ஆண்டனிக்கு ரோமாபுரிதான் ஒரு சத்திரமாகி விட்டது. அலெக்ஸாண்டிரியா சொந்த பூமியாகி விட்டது! கிளியோபாரா எனக்குச் சொந்தமாகப் போகிறாள்.

கிளியோபாத்ரா: எகிப்த் எப்படி உங்களுக்குச் சொந்த பூமியானது! செத்துப் போன சீஸரின் மனைவி என்றுதான் எல்லாரும் என்னை நினைக்கிறார்கள். எப்போது நீங்கள் என்னைச் சொந்த மாக்கப் போகிறீர்?

ஆண்டனி: [வருத்தமுடன்] புல்வியா செத்து அவள் ஆத்மா போய் விட்டாலும், அது என்னைச் சுற்றிக் கொண்டுள்ளது இப்போது! அவள் போய்விட்டாலும் அவளது நிழல் என்னைப் பின்பற்றி வருகிறது. அந்த மனக் கனவுகள் என்னை விட்டு அகல வேண்டும். உன்னை நான் ஏற்றுக் கொள்ளும் போது, என்மனம் உன்னைத்தான் முற்றுகையிட வேண்டும். புல்வியாவின் ஆவி என்னைச் சுற்றி வரும்போது, நான் எப்படி உன்னைப் பற்றிக் கொள்வது?

கிளியோபாத்ரா: [ஆத்திரமாக] ஆண்டனி! ரோமுக்குப் போங்கள்! புல்வியா புதைக்கப் பட்ட பூமியில் உங்கள் கண்ணீரைக் கொட்டுங்கள்! எகிப்தில் உங்கள் கண்ணீர் ஒருதுளி சிந்தக் கூடாது! உங்கள் உடல் எகிப்தில் இருந்தாலும் உள்ளம் ரோமில்தான் உலவிக் கொண்டு வருகிறது! புல்வியாவுக்கு புனிதக் கண்ணீரும், கிளியோபாத்ராவுக்கு முதலைக் கண்ணீரும் விட வேண்டாம். அப்புறம் திரும்பி அவளுக்காக அழுவீர் ஆண்டனி! இப்புறம் என்னிடம் விடைபெற்று ஏகுவீர், கண்ணீரை எகிப்துக்கு விடுவதாய்க் கூறி!

ஆண்டனி: [கோபமாக] கிளியோபாத்ரா! என் குருதியைக் கொதிக்க வைக்கிறாய்! போதும் நிறுத்து உன் புலம்பலை!

கிளியோபாத்ரா: [கனிவுடன்] ஆண்டனி! ஒரு வார்த்தை சொல்கிறேன்! நீங்களும் நானும் பிரிய வேண்டும்! அது மட்டு மில்லை! நீங்களும் நானும் ஒருவரை ஒருவர் நேசித்தோம். அது போகட்டும்! உங்களைப் போல் எனக்கும் மறதி வரட்டும்! நிம்மதியாக மறந்து நான் தனியாகக் கிடக்கலாம். நீங்கள் என்னருகில் இருந்தாலும், நான் தனிமையில்தான் நோகிறேன். உங்கள் அரசாங்கப் பணிகள் உங்களை அழைக்கின்றன! எனது கனிவு மொழிகளைக் காதில் போட்டுக் கொள்ள வேண்டாம். போங்கள்! வெற்றி உங்களுக்குத்தான்! தோல்வி எனக்குத்தான்! பிரிவு எனக்குத்தான்! வேதனை எனக்குத்தான்!

ஆண்டனி: சரி போகிறேன், கிளியோபாத்ரா! போனதும் வந்து விடுகிறேன்! கண நேரப் பிரிவு! கண நேரப் பிணைப்பு! பிணைப்பும், பிரிவும் மாறி மாறி வரும் பகலிரவு போல! கண்ணிமைப் பொழுதில் சேர்கிறோம்! கண்ணிமைப் பொழுதில் பிரிகிறோம்! பிணைப்பு பிரிவுக்கு வழி யிடுகிறது! பிரிவு பிணைப்புக்கு முயல்கிறது! பிணைப்பும், பிரிவும் ஒரு நாணயத்தின் இரண்டு முகங்கள்! ஒருமுக நாணயத்தை எங்காவது கண்டிருக்கிறாயா? போய் வருகிறேன், கிளியோபாத்ரா!

[ஆண்டனி வெளியேறுகிறார். கிளியோபாத்ரா கண்ணீருடன் ஆண்டனி போகும் திசையை நோக்குகிறாள்]

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

9. Shakespeare’s Antony & Cleopatra Edited By: David Bevington [1988]

10 Shakespeare’s Antony & Cleopatra Edited By: M.R. Ridly [1993]

11 Life of Antony & Fulvia Wikipedia the Free Encyclopedia [http://en.wikipedia.org/wiki/Fulvia]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (Feb 7, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:6 காட்சி:3)

This entry is part [part not set] of 29 in the series 20070201_Issue

சி. ஜெயபாரதன், கனடா

ஒருபெரும் ஆத்மா பிரிந்து போனது!
ஒழியட்டும் அப்படி என விழைந்தேன்!
நாமே கக்குவோம் நம்முடை வெறுப்பை!
நம்மதாய்ப் பெற்றிட வேண்டுவோம் மீண்டும்!
இப்போதைய இன்பம் மாறிடும் துன்பமாய்க்,
காலச் சக்கரம் கீழ் சுற்றி எதிராய்!
நல்ல பெண்மணி அவள்! போன பின்பு
தள்ளிய கையே நீளும் தழுவிட மீண்டும்!
ஒதுக்கிட வேண்டும், கவர்ச்சி ராணியை!
ஓய்வாய்ச் சோம்பிக் கிடந்தால்
ஓராயிரம் இடர்கள் உதித்து விடும்! … புல்வியாவைப் பற்றி ஆண்டனி

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

(ஆண்டனி, பிரிந்து செல்லும்)
மெல்லோசை கேட்டால்
அக்கணமே உயிரை விடுவாள்!
ஒன்று மில்லா சிறு நிகழ்ச் சிக்கும்
பன்முறை அப்படிச் சாவதை
கண்டுளேன் நான்; மரணம் மீதவள்
கொண்டுள்ள மோகம் மிகையே! ….எனோபரஸ்

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

கதைச் சுருக்கம்: கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்!

முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் ஆண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த ஆண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. ஆண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் ஆண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை ஆண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன ஆண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.

ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்

நாடகப் பாத்திரங்கள்:

எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:

கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்

ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ், ரோமின் மூன்றாம் தளபதி
எனோபரஸ் (ஆண்டனியின் பாதுகாவலன்),
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
•பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன்)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)

கிளியோபாத்ரா
அங்கம்:6 காட்சி:3

ரோமா புரியின் நிலைமை: •பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி •புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள்.

நேரம், இடம்: அலெக்ஸாண்டியா, கிளியோபாத்ராவின் மாளிகை. பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, சேடிகள், ஆண்டனி, ஆண்டனியின், பாதுகாவலர், படையாட்கள்

காட்சி அமைப்பு: கிளியோபாத்ராவின் மாளிகையில் ரோமானிய படையினர் •பிலோ, டெமிடிரியஸ் இருவரும் தமது தளபதி ஆண்டனியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கிளியோபாத்ராவும், ஆண்டனியும் தம் சகாக்களோடு நிற்கும் போது, எனோபரஸ், சார்மியான், அலெக்ஸாஸ், ஜோதிடர் உள்ளே நுழைகிறார்கள்.

சார்மியான்: அலெக்ஸாஸ் பிரபு! என்னருமைப் பிரபு! அன்றைக்கு மகாராணி கிளியோபாத்ராவிடம் நீங்கள் புகழ்ந்த அந்தப் பெயர் போன ஜோதிடரை எங்கே? என் கையைக் காட்ட வேண்டும். என் திருமணத்தைப் பற்றிக் கேட்க வேண்டும். எத்தனை மனைவிகள் என்றும் தெரிந்து கொள்ள வேண்டும்? செல்வந்த மாதரா அல்லது சிங்கார மாதரா என்று அறியவும் ஆசை!

அலெக்ஸாஸ்: நம்மை நோக்கி அந்த ஜோதிட மேதை அதோ வருகிறார்!

ஜோதிடர்: [சிரித்துக் கொண்டு] மாளிகை ராணி, மன்னர் தேடும் என்னை எந்த வழிப்போக்கனும் காண முடியாது! யார் நீங்கள்? பொற் காசுகள் உள்ளனவா?

சார்மியான்: இவரா அந்த ஜோதிடர்? ஏதோ வட்டிக் கடைக்காரர் போலிருக்கிறது! இவரா புகழ்பெற்ற ஜோதிடர்? ஜோதிட சிகாமணியே! உங்களுக்கு மட்டும் எப்படி எதிர்காலம் தெரிகிறது? கடந்த காலம் தெரிகிறது! உங்களுக்கு நிகழ் காலம் தெரியுமா?

ஜோதிடர்: [சினத்துடன்] எக்காலமும் அறிந்தவன் நான்! உங்களுக்கு வேண்டியது போனதா? வருவாதா? அல்லது நிகழ்வதா? இயற்கையின் முடிவில்லா மர்ம, மாய நூலில் அடியேன் அறியாதன எதுவு மில்லை!

அலெக்ஸாஸ்: சார்மியான்! உன் கையைக் காட்டு, ஜோதிடர் என்ன சொல்கிறார் பார்க்கலாம்.

சார்மியான்: [கையை நீட்டி] ஜோதிட சிகாமணி! எனக்கு நல்ல சேதிகளைக் கொடுங்கள்! எனக்குத் திருமணம் எப்போது? செல்வப் பெண்ணா? அல்லது சிங்காரப் பெண்ணா?

ஜோதிடர்: அட, கடவுளே! என்னால் கொடுக்க முடியாது! செல்வப் பெண்ணைத் தேடிப் போனால் சிங்காரப் பெண் கிடைப்பாள்! சிங்காரப் பெண்ணைத் தேடிப் போனால், செல்வப் பெண் கிடைப்பாள்! சிங்காரப் பெண் உன் பையில் கையை விடுவாள்! செல்வப் பெண் பார்க்க அசிங்கமாய் இருப்பாள்! கடந்த காலம் ஓர் சதுராட்டம்! எதிர்காலம் ஒரு புதிராட்டம்! நிகழ் காலம் ஓர் அரங்கேற்றம்! எதைப் பற்றியும் நான் சொல்வேன்!

சார்மியான்: சொல்லுங்கள், சொல்லுங்கள்! எனக்கு நல்லதாகப் பார்த்துச் சொல்லுங்கள்.

ஜோதிடர்: இப்போது இருப்பதை விட நீ வெள்ளையாக இருக்க வேண்டியவன்.

சார்மியான்: [முகத்தைச் சுருக்கி] என் தோலின் நிறத்தைச் சொல்கிறீரா? யாரதை உம்மிடம் கேட்டது? வெள்ளையாக இருந்தால் என்ன? கருப்பாக இருந்தால் என்ன? காசு நிரம்பச் சம்பாதிப்பேனா? பணமில்லாமல் இருந்தால், மனைவியாவது கொண்டு வருவாளா?

ஜோதிடர்: [கைரேகையை உற்று நோக்கி] முகத்தில் சுருக்கு விழாமல் பார்த்துக் கொள்.

சார்மியான்: ஜோதிடரே! நீர் என் முகத்தைப் பார்த்தா சொல்கிறீர். கைரேகையைப் பார்க்கப் பணம் கொடுத்தால் முகரேகையைப் பார்ப்பதா?

அலெக்ஸாஸ்: அவமரியாதை செய்யாதே அவரை! ஜோதிடர் மகாராணிக்கு ஜோதிடம் சொல்பவர். கோபம் உண்டாக்கினல் எதுவும் சொல்லாமலே போய்விடுவார். அவர் சொல்வதைக் கேட்டுக் கொள்.

ஜோதிடர்: உன் காதலி மீது நீ அன்பைச் சொரிய வேண்டும். மனைவி இருந்தால் அவளை மிகவும் நேசிக்க வேண்டும் நீ.

சார்மியான்: [சிரித்துக் கொண்டு] மதுபானம் குடித்து என் கல்லீரலைச் சூடாக்கலாம் காதல் புரிய. எனக்கு மனைவியு மில்லை, காதலியு மில்லை! நல்ல ஜோதிடமிது. பேரதிர்ஷ்டம் வருவதுபோல் தெரியுது! மூன்று அரசிளங் குமரிகளைக் காலையில் மணந்து மாலையில் விதவை ஆக்க வேண்டும்!

அலெக்ஸாஸ்: மனைவி எப்படி விதவை ஆவாள், நீ சாகாமல்? அதுவும் மூன்று தரம் எப்படிச் சாவாய் நீ? கொஞ்சம் யோசித்துப் பேசு!

ஜோதிடர்: [கூர்மையாக நோக்கி] நீ எந்த ராணிக்குப் பணிபுரிகிறாயோ, அவளை விட நீண்ட ஆயுளோடு வாழ்வாய்!

சார்மியான்: [சிரித்துக் கொண்டு] ஓ! எனக்கு நீண்ட ஆயுளா? பெருமகிழ்ச்சி! இரண்டு அல்லது மூன்று தரம் திருமணம் செய்து கொள்ளலாம்.

அலெக்ஸாஸ்: ஜோதிட சிகாமணி! என்ன சொல்கிறீர்? அப்படியானால் கிளியோபாத்ராவுக்குக் குறைந்த ஆயுளா? சார்மியான் ஆயுளைப் பற்றி யார் கவலைப் படுகிறார்? கிளியோபாத்ரா ஆயுளைப் பற்றி சார்மியான் கைரேகை எப்படிக் காட்டும்? ஜோதிடரே! நீவீர் சொல்வது உண்மைதானா?

சார்மியான்: சத்தமாகப் பேசலாமா பிரபு! அரண்மனைக்குச் சுவரிலும் காது! தரையிலும் காது! ராணியின் காதில் விழுந்தால், உங்கள் கழுத்தல்லவா துண்டிக்கப்படும்! மகாராணியைப் பற்றி நாம் பேச வேண்டாம்.

அலெக்ஸாஸ்: ஐரிஸ் சீமாட்டி! வா, வந்து உன் கையை ஜோதிட சிகாமணியிடம் காட்டு!

ஐரிஸ் சீமாட்டி: [ஜோதிடரிடம் கையைக் காட்டி] எனக்கு எத்தனை கணவர் சொல்லுங்கள்?

சார்மியான்: [வியப்புடன்] ஐரிஸ் கண்மணி! எப்போது நீ உன் கணவனை விலக்கப் போகிறாய்?

ஐரிஸ்: அதை எல்லாம் நான் சொல்ல மாட்டேன்! என் வீட்டு ரகசியம் கூரையைத் தாண்டி வராது.

சார்மியான்: அந்த ரகசியம்தான் உன் வாயிலிருந்து உதிர்ந்து விட்டதே! எத்தனை திருமணம் என்று கேட்பதின் அர்த்தம் என்ன? …. இப்போதே என் பெயரைப் போடுகிறேன், அடுத்த கணவன் பட்டியலில்! உன்மீது எனக்கு மோகம் உண்டு சிறு வயது முதலே! எனக்கு வீடு, வாசல்