பாரதி உன்னைப் பாரினில்
சக்தி சக்திதாசன்

பாட்டுடைத் தலைவன் பிறந்ததால் இந்நாள்
பாரினில் என்றும் சிறந்ததே இந்நாள்
பாரதி என்றோர் முத்து பூமியில் முகிழ்ந்த நாள்
பாவலர் அனைவர்க்கும் புதுவழி பிறந்தநாள்
தமிழன்னை முகத்தில் பெருமிதம் தவழ்ந்த நாள்
தமிழர்கள் வாழ்வில் விடிவெள்ளி உதித்தநாள்
புரட்சிக் கொள்கைகளைப் புவியில் விதைத்தநாள்
புதுக்கவிதை தமிழில் புயலாய் எழுந்தநாள்
சாதிகளை யழிக்கும் வழிகளை வரைந்த நாள்
சாதனைக் கவிஞன் சேயாய் புவியில் விழுந்தநாள்
பார் புகழும் தீரக் கவிஞனாம் அவன் பிறந்தநாள்
பாரதியே உன்னை நினைந்து வணங்கும் நாள்