This entry is in the series 20061214_Issue

சி. ஜெயபாரதன், கனடா



பிறந்த பூமியில்
செய்த வேலை முறிக்கப் பட்டுப்
பறிமுதலாகி,
பையும் பசியாகி,
வயிறும், மனமும் வெந்து போன
தருணத்தில்
தூரத்துப் பச்சைக் கவர்ந்து
வருகவெனக் கொடி காட்டியது!
கைப்பை யோடு
ஓய்வு வருவாயில்
ஊர்தி ஏறி
நிலவில் கால்வைத்த,
நீல்ஸ் ஆம்ஸ்டிராங் போல்
கனடாவில் முதற்தடம் வைத்தேன்!
வட அமெரிக் காவில்
வாலிபரும், வனிதையரும்
வயோதிகரும்,
வரவேற்றார் “ஹலோ” வென்று!
இந்திய நீர் பருகிய என்
சொந்த நாட்டுப் புறாக்கள்,
தொலைநோக்கி போல்,
தலை தூக்கி
அறுபது டிகிரி கோணத்தில்,
துருவ நட்சத்திரம்
தேடின!

*******

S. Jayabarathan [jayabarat@tnt21.com (Dec 14, 2006)]

Series Navigation