This entry is in the series 20061102_Issue

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)



இது என்ன
திடீரென்று இப்படி…

அதன் வருகையைத்தான்
இது சொல்கிறது

அது
வருமென்பதின் அடையாளந்தான்
இது

இவ்வளவுச் சுள்ளென்றிருப்பதே
அதன் வருகைக்காகத்தான்

அது
அப்படி இருக்குமென்பதும்
இப்படி இருக்காதென்பதும்
தெரிந்ததுதான்

ஆனால்
அதுவரைக்கும்
பொறுத்துக்கொண்டு இருக்கவெண்டுமே!

ஆண்டாண்டுகாலமாக
அதன் வருகையை
இப்படியே சொல்கிறது பகல்.


பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)

pichinikkaduelango@yahoo.com

Series Navigation