This entry is in the series 20070118_Issue

கே. ஆர். மணி



யானை வரும் முன்னே
மணியோசை வந்தது.
பின்னர் தெருப்புழுதி பறக்க யானையும் வந்தது.

பளபளக்கும் கறுப்பு தோல்
வெண்மையான தந்தம்
அழுக்கில்லா கால்நகம்
துப்புரவாய் துடைக்கப்பட்ட பின்புறம்
அழுகையில்லா கண்கள் அழகான அம்பாரி
நீண்ட துதிக்கையில் ஒழுகும் மூச்சு நீர்.
வாழைப்பழத்தை வாயில் போடும்
வாங்கிய துட்டை வாகாய் பாகனிடம் போடும்.
எல்லாம் சரிதான்.

செத்ததன்னவோ யானையின் கம்பீரம் !


mani@techopt.com

Series Navigation