திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

சுனாமி

This entry is in the series 20050113_Issue

ரஜித்


சாது மிரண்டது

கொலைக் கரங்களாகின
அலைக் கரங்கள்

காக்கை குருவிகள்
கூடு கட்டிய
நெடிய மரங்களெல்லாம்
நெடுஞ்சாண் கிடையாக

கும்மியாடிய
குப்பங்க ளெல்லாம
குப்பைக் கழிவாக

கரை கண்ட
இட மெல்லாம்
மனிதக் கருவாடுகள்

அன்றாடம்
பொருக்கப் படுகின்றன
ஆயிர மாயிரம்
பிணச் சிப்பிகள்

சுனாமிகளின் முற்றுகை
ஒரு பிரளயத்தின் ஒத்திகை

ரஜித்
senni@streamyx.com

Series Navigation

About ரஜித்

ரஜித்

View all 54 articles →

சுனாமி

This entry is in the series 20041230_Issue

திருமாவளவன்


பேரிருளில்

மூடுண்டு கிடக்கிறேன்

காற்றின் திசையெல்லாம் ஒப்பாரி

தொண்டைக்குள் சிக்குண்டு போயிற்று

வார்த்தைகள்

அச்சத்தில் உறைந்து இறுகிப் போயிற்று

விழிகள்

பெரு மலையை

என் நெஞ்சுக் குழிக்குள் திணித்த துயரை

எப்படிச் சொல்வேன்

கடலோடி வந்து

மீன் குவித்த கரையெல்லாம்

பிஞ்சுக் குழந்தைகளின் பினம்

குவிந்து கிடக்கிறது

புரட்டிப் புரட்டி தேடுகிறோம்

யாரை யார் தேடுவது ?

போருக்குள் பொத்தி எஞ்சியதை எல்லாம்

கணப்பொழுதில்;

கடலுக்கு காவு கொடுத்தாயிற்று

இன்னும்

கரையெல்லாம் எதைத் தேடுகிறய் ?

யாரோ அழைப்பது போலிருக்கிறது

பதில்

கடலிடமும்; இல்லை – என்னிடமும் இல்லை.

யாரிடமும் இல்லை.

*
koolam@hotmail.com

Series Navigation

About திருமாவளவன்

திருமாவளவன்

View all 8 articles →

சுனாமி

This entry is in the series 20041230_Issue

ரஜித்


சாது மிரண்டது

கொலைக் கரங்களாகின
அலைக் கரங்கள்

காக்கை குருவிகள்
கூடு கட்டிய
நெடிய மரங்களெல்லாம்
நெடுஞ்சாண் கிடையாக

கும்மியாடிய
குப்பங்க ளெல்லாம
குப்பைக் கழிவாக

கரை கண்ட
இட மெல்லாம்
மனிதக் கருவாடுகள்

அன்றாடம்
பொருக்கப் படுகின்றன
ஆயிர மாயிரம்
பிணச் சிப்பிகள்

சுனாமிகளின் முற்றுகை
ஒரு பிரளயத்தின் ஒத்திகை

ரஜித்

rajid_ahamed@yahoo.com.sg

Series Navigation

About ரஜித்

ரஜித்

View all 54 articles →