வட அமெரிக்க தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு ஒரு வேண்டுகோள்

This entry is part [part not set] of 64 in the series 20050113_Issue

மு. சுந்தரமூர்த்தி


பத்தாண்டுகளுக்கு முன் வட அமெரிக்க வாழ் தமிழ் இலக்கிய ஆர்வலர்களால் தொடங்கப்பட்ட ‘விளக்கு ‘ இலக்கிய அமைப்பு நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான புதுமைப்பித்தன் பெயரில் விருது ஒன்றை நிறுவி பெரும் இலக்கிய ஆளுமைகளை அடையாளம் கண்டு கடந்த எட்டாண்டுகளாக கெளரவித்து வருகிறது. இன்றைய தமிழ் இலக்கியச் சூழலில் விளக்கின் புதுமைப்பித்தன் விருது மிகுந்த கவனத்தைப் பெற முக்கிய காரணங்களாக இருப்பது பரிசு பெற்றவர்ளும், அவர்களை அடையாளம் காட்டிய தேர்வுக் குழுவினரும், பரிசுத் தொகை வழங்கிட பொருளுதவி அளித்துவரும் உறுப்பினர்களும் ஆவர். இதில் பிரபலப்படுத்தப்படுவது பரிசு பெற்றவர்கள். அதனால் பெருமைப்படுத்தப்படுவது விளக்கு அமைப்பு. இந்தப் பெருமையில் பங்கு பெற்று விளக்கின் செயல்பாடுகளை விரிவுபடுத்த வட அமெரிக்காவில் வாழும் அனைத்து தமிழ் இலக்கிய ஆர்வலர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.

இதுவரை பரிசு பெற்றவர்கள்: சி. சு. செல்லப்பா (1996), பிரமீள் (1997), கோவை ஞானி (1998), நகுலன் (1999), பூமணி (2000), ஹெப்சிபா ஜேசுதாசன் (2001), சி. மணி (2002), செ. ராமனுஜம் (2003). இவர்களைத் தேர்ந்தெடுத்த தேர்வுக்குழு உறுப்பினர்கள் தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த அறிவு உடையவர்கள். விளக்கு அமைப்பாளர்கள், உறுப்பினர்களின் பங்கு தேர்வுக்குழுவின் முடிவை ஆமோதித்து, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை கெளரவிப்பது மட்டுமே. இவ்வமைப்புக்கு வெளியே இலக்கிய ஆர்வலர்கள் மற்றெந்த தேர்வுகளைப் போலவே இத்தேர்வுகளையும் அறிவுப்பூர்வமான முறையில் விமர்சிக்கலாம். ஆனால் பரிசுகள் வழங்கும் பிற நிறுவனங்களைப் போலவே விளக்கு அமைப்பும் பதிலோ, விளக்கமோ அளிக்காது.

விளக்கு உறுப்பினர்களின் ஆதரவுக்கு நன்றி கூறும் வகையில் கடந்த ஆண்டிலிருந்து பரிசு பெற்ற எழுத்தாளரின் கையொப்பமிட்ட நூல்கள் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டின் பரிசு பெற்ற சி. மணி அவர்கள் விளக்கு உறுப்பினர்களுக்கென்று தனிப்பட்ட முறையில் கையெழுத்திட்ட அவருடைய ‘தாவோ தே ஜிங் ‘ (சீன தாவோ தத்துவ மொழிபெயர்ப்பு நூல், இயான் லாக்வுட் இன் புகைப்படங்களுடன்), ‘இதுவரை ‘ (முழு கவிதை தொகுப்பு) வழங்கப்பட்டன. புதிதாக சேரும் முதல் மூன்று உறுப்பினர்களுக்கும் இந்நூல்கள் உடனடியாக வழங்கப்படும். இவ்வாண்டின் பரிசுபெற்ற செ. ராமனுஜம் அவர்கள் கையொப்பமிட்ட நூல்களும் அனைத்து உறுப்பினர்களுக்கும் விரைவில் வழங்கப்படும். விளக்கு உறுப்பினர்களுக்கென மட்டும் சிறப்பு அரையாண்டு செய்திமடலும் அனுப்பப்படுகிறது.

ஆண்டு உறுப்பினர் தொகை US $100

ஆயுள் உறுப்பினர் தொகை US $1,000

‘விளக்கு ‘ அமெரிக்க வருமான வரி விலக்கு பெற்ற நிறுவனம்.

உறுப்பினர் தொகை அனுப்ப வேண்டிய முகவரி:

N. Gopalaswamy

Vilakku Literary Society, Inc.

11205 Greenwatch Way

North Potomac MD 20878

Email: vilakku@yahoo.com

munirathinam_ayyasamy@yahoo.com

Series Navigation

மு. சுந்தரமூர்த்தி

மு. சுந்தரமூர்த்தி