சென்னை புத்தக கண்காட்சியில் உயிர்மையின் நூல்கள்

This entry is part [part not set] of 64 in the series 20050113_Issue

அறிவிப்பு


28ஆவது சென்னை புத்தக கண்காட்சி ஜனவரி 7-17 சென்னை காயிதே மில்லத கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. உயிர்மை இக்கண்காட்சியை முன்னிட்டு கீழ்கண்ட நூல்களை பதிப்பிக்கிறது.

1. ஜெயமோகன் சிறுகதைகள் (முழுத் தொகுப்பு)….ரூ.280

2. ஜெயமோகன் குறுநாவல்கள் (முழுத் தொகுப்பு)….ரூ.170

3. தேர்ந்தெடுத்த சிறுகதைகள்- (முதல் தொகுதி). சுஜாதா…. ரூ.275

4. தேர்ந்தெடுத்த சிறுகதைகள்- (இரண்டாம் தொகுதி). சுஜாதா….ரூ.300

5. ஸ்ரீரங்கத்துக் கதைகள்.- சுஜாதா…. ரூ.200

6. பேசும் பொம்மைகள் (நாவல்)-சுஜாதா….ரூ.125

7. கடவுள்களின் பள்ளத்தாக்கு( கட்டுரைகள்)-சுஜாதா…. ரூ.120

8. தமிழ் அன்றும் இன்றும்( கட்டுரைகள்)-சுஜாதா….ரூ. 90

9. கடைசி டினோசார் (கவிதைகள்)-தேவ தச்சன்….ரூ. 85

10. பாப்லோ நெரூதா கவிதைகள்(தமிழில்:சுகுமாரன்)….ரூ.120

11. காகித மலர்கள்(நாவல்)-ஆதவன்….ரூ.190

12. எம் தமிழர் செய்த படம் (சினிமா கட்டுரைகள்)-சு.தியடோர் பாஸ்கரன்….ரூ.100

13. அது அந்தக் காலம்(கட்டுரைகள்)-எஸ்.வி.ராமகிருஷ்ணன்….ரூ. 60

14. தளும்பல்(கட்டுரைகள்)-சு.கி.ஜெயகரன்….ரூ. 60

15. பூமித் தின்னிகள்(கட்டுரைகள்)-காஞ்சனா தாமோதரன்….ரூ.125

16. நதிமூலம்(கட்டுரைகள்)-மணா….ரூ. 90

17. தவளை வீடு(கவிதைகள்)- பழனிவேள்….ரூ. 40

18. நாக திசை(கவிதைகள்) -ராணி திலக்….ரூ. 40

19. மணலின் கதை(கவிதைகள்)-மனுஷ்ய புத்திரன்….ரூ. 30

20. ஒற்றனைத் தொலைத்த செய்தியிலிருந்து(கவிதைகள்)- முனியப்பராஜ்….ரூ. 40

கண்காட்சியில் உயிர்மை விற்பனை மையத்தில் பத்து சதவிகித தள்ளுபடியில் (கடை எண் 135)பெற்றுக் கொள்ளலாம். இந்தியாவில் உள்ள நண்பர்கள் புத்தகவிலையுடன் ரூ.10 சேர்த்து காசோலை அல்லது வரைவோலையை uyirmmai pathippagam என்ற பெயரில் அனுப்புங்கள். அயலில் இருக்கும் நண்பர்கள் தேவைப்படும் நூல்கள் குறித்து மின்னஞ்சலில் தெரிவித்தால் தபால் செலவு உட்பட் செலுத்த வேண்டிய தொகை தெரிவிக்கப்படும்.

அனைத்து தொடர்புகளுக்கும்:

Uyirmmai

11/29 Subramaniam Street, Abiramapuram, Chennai – 600 018, INDIA

Tele/Fax : 91-44-2493448, 91-44-52074030, Mobile : 9444366704

e-mail : uyirmmai@yahoo.co.in

—-

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு

சென்னை புத்தக கண்காட்சியில்….

This entry is part [part not set] of 64 in the series 20050113_Issue

வா.மணிகண்டன்


சென்னை புத்தக கண்காட்சி,வழக்கம் போலவெ களை கட்டிவிட்டது.

புத்தகங்களின் தீவிரப்பிரியர்களும்,கூட்டத்தினை ரசிப்பவர்களும் எள் விழும் இடத்தினையும் தனதாக்கி,வெய்யில் போல மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.

மக்களின் ஆர்வம் மனதில் ஒரு இனிய தளத்தினை உண்டாக்குகிறது.

பெரும்பாலானோர்,ஒரு சில குறிப்பிட்ட எழுத்தாளர்களின் புத்தகங்களை வாங்கி விட வேண்டும் என வருகின்றனர்.

அதுவும் பொது ஜன ஊடகங்களில் முன் நிறுத்தப்படும் ஒரு சில எழுத்தாளர்களை மட்டுமே.

நான் இங்கு நல்ல எழுத்தாளர் என குறிபிடவில்லை என்பதனை நினைவில் கொள்க.

சிறு பத்திரிக்கைகளில் தொடர்ந்து எழுதி வரும் சில நல்ல படைப்பாளிகளின் புததகங்கள் மார்கழி குளிருக்கு இதமாக குப்பையினை போர்த்தி உறங்கி கிடக்கின்றன.

வாரசஞ்ஞிகைகளின் மூலம் அறிய படுவோர் மட்டுமே நல்ல படைப்பாளிகள் என்ற ஆரோக்கியமற்ற எண்ணத்தினால் இது நிகழ்கின்றது.

இத்தகைய ஒரு ஊக்குவிப்பு,சில நல்ல படைப்பாளிகளையும் விளம்பரம் தேட வேண்டிய கட்டாயச்சூழலுக்கு அழைத்துச்செல்லக்கூடும்.

இது தமிழ் இலக்கிய உலகிற்கே ஒரு இழப்பாக அமையும்.அது வாசகனுக்கும் சேர்த்துத்தான்.

இதில் புத்தகம் வாங்கும் வாசகனை மட்டும் குறை சொல்லி பயனில்லை.

அவனுக்கு எல்லா படைப்புகளையும் படிக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

நாளையோ அல்லது நாளை மறுநாளோ,வாசகனின் நண்பன் ‘புகழ் பெற்ற ‘எழுத்தாளர்களை பற்றி பேசும்போது இவனும் ஏதாவது பேசவேண்டும்.

இது சராசரி மனிதனின் மனோநிலைதான்.

இத்தகைய ஆரோக்கியமான சூழலில்(வாசிப்பாளர்கள் பெருகி வருதல்)வாசிப்பாளர்களை நல்ல புத்தக்களை தேடிச்செல்லும் வாசகர்களாகவும்,நல்ல,அறிமுகப்படுத்தப்படாத படை986 ? ?பாளிகளை அறிமுகப்படுத்தும் கடமையும் வெகுஜன ஊடகங்களை சார்கின்றது.

படைபாளிகளை வேண்டாம்,படைப்புகளை அறிமுகப்படுத்தினால் போதும்.

தமிழ் இலக்கிய உலகில்,வெகுஜன ஊடகங்களின் பங்களிப்பை மறுக்க இயலாது.அது இன்று இணையம் வரையிலும் வந்திருக்கிறது.

அதன் பங்களிப்பில் இது,மிகப்பெரும் கடமை.

அடுத்த கண்காட்சியில் இந்த நிலை மாறக்கூடும்.

வா.மணிகண்டன்.

kvmanikandan1@yahoo.co.in

Series Navigation

வா.மணிகண்டன்

வா.மணிகண்டன்