பேரலை

This entry is part [part not set] of 64 in the series 20050113_Issue

காருண்யன்


குழந்தைகள் தம் பொம்மைகளை
சூட்கேசினுள் பத்திரப்படுத்தின
தாய் குழந்தைகளைத் தனக்குள்
பத்திரப்படுத்தினாள் – இரகசியமாய்
புலம்பெயரவேண்டித்
தந்தை குடும்பத்தை
இரவுக்குள் பத்திரப்படுத்தினான்
ஊரோ பல குடும்பங்களைத்
தனக்குள் பத்திரப்படுதியது
எல்லா ஊர்களையும் சுனாமிப்பேரலை
தனக்குள் பத்திரப்படுத்தியது.

====
P.Karunaharamoorthy Berlin
karunaharamoorthy@yahoo.ie

Series Navigation

காருண்யன்

காருண்யன்