கடிதம் ஜனவரி 13,2005

This entry is part [part not set] of 64 in the series 20050113_Issue

ரஹ்மத் கபீர்


ஆசிரியருக்கு,

உங்கள் இணையதளத்தில் இஸ்லாம் குறித்து ஒரு ஆரோக்கியமான விவாதம் தொடங்கியுள்ளது.

திரு.நேசகுமார் நன்றாக ஒரு வாதத்தைத் தொடங்கியுள்ளார். எனது மார்க்க சகோதரர்கள் வசைபாடாது அவரை எதிர்கொள்ள வேண்டும். ஆனால் unfortunately ஒருவர் இஸ்லாம் விலக்கக் கூடிய ஒரு வழிமுறையை பின்பற்றி நேசகுமாரின் நம்பிக்கையில் உள்ள குறைகளை பட்டியல் போட்டுள்ளார். விளைவு நேசகுமாரும் அவர் மார்க்கத்தில் காணும் குறைகள் என சிலவற்றைப்பட்டியல் போட்டுள்ளார். ஒரு காலத்தில் இஸ்லாம் கேள்விகளுக்கு வசை அளிக்காமல் பதிலளிக்கும் மார்க்கமாக விளங்கியது. ஆனால் இன்றோ வசைபாடுவதை தமது கடமையாக கருதும் எனது சகோதரர்களுக்காக நான் வருந்துகிறேன். நேசகுமார் இஸ்லாமை வெறுப்பவர் என தோன்றவில்லை. எனவே அவருக்கு பொறுப்புடன் பதிலளிப்பது நமது மார்க்கக் கடமை.

அன்புடன்

ரஹ்மத் கபீர்

rahmatkabir2004@rediffmail.com

Series Navigation

ரஹ்மத் கபீர்

ரஹ்மத் கபீர்

கடிதம் ஜனவரி 13,2005

This entry is part [part not set] of 64 in the series 20050113_Issue

ராதா


திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு

சுனாமியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்யவும்,நிதி திரட்டி இந்தியாவிற்கு அனுப்பவும்,

மற்றும் தேவையான உதவிகளைச் செய்யவும் பல அமைப்புகள் முனைந்துள்ளன. இவற்றில் சில அமைப்புகள் மிகப் பெருமளவு பல்கலைகழக மற்றும் கல்வித்துறை சார்ந்தவை.ஏற்கனவே இந்தியாவின் பல மாநிலங்களில் குறிப்பிட்ட திட்டங்களுக்கு உதவி செய்து வருகின்றன. அவற்றின் மீது ?ிந்த்துவ அமைப்புகள் காட்டும் காழ்ப்பும்,குரோதமும் எல்லை கடந்தவை. ஒரு உதாரணம்

http://p081.ezboard.com/fhinduunityhinduismhottopics.showMessage ?topicID=22496.topic

AID அமைப்பில் நான் உறுப்பினர் அல்ல.ஆனால் AID எப்படி செயல்படுகிறது, எப்படி நிதி திரட்டுகிறார்கள்

என்பதை கவனித்திருக்கிறேன். போபால் பிரச்சினையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் இவ்வமைப்பு பெரு முயற்சிகள் மேற்கொண்டது. இதன் உறுப்பினர்கள் பெரும்பான்மையாக மாணவர்கள். ASHA என்ற அமைப்பும் இது போல் சமூக அக்கறை கொண்ட அமைப்பு. இவ்வமைப்புகளில் உள்ள பலர் வெறும் நிதி திரட்டிக் கொடுத்தால் போதும் என்று கருதுவதில்லை. தொடர்ந்து படிப்பது,விவாதிப்பது போன்றவையும் முக்கியம் என்று கருதுபவர்கள், வெகு ?ன மக்கள் இயக்கங்களுடன் தொடர்பு கொண்டு இந்தியாவில் நடப்பது என்ன என்பதை அறிந்து கொள்வதில் அக்கறை காட்டுபவர்கள். மகாசே விருது பெற்ற சந்தீப் பாண்டே ASHA அமைப்பினை தோற்றுவித்ததில் முக்கிய பங்காற்றியவர்.அவரும் ஹிந்த்துவ அமைப்புகளினால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார்.இந்திய அரசின் அணு ஆயுதக் கொள்கையை விமர்சித்தற்காக அவரை ஹிந்த்துவ அமைப்புகள் வசைபாடின. இயற்கைச் சீற்றத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிடும் மதம்சாரா அமைப்புகள்,கிறிஸ்துவ அமைப்புகள் மீது அவதூறு பரப்புவதன் மூல ஹிந்த்துவ அமைப்புகள் தங்கள் கண்ணோட்டம் எத்தகையது என்பதை மீண்டும் நிரூபித்து வருகின்றன.

ஜெயமோகன் கட்டுரையிலிருந்து அவரது விருப்பு வெறுப்புகள், மற்றும் பிரச்சாரத் திறன் குறித்து அறிந்து கொள்ள முடிகிறது. ஆன்மிக அமைப்புகள் எங்கு உதவும், எப்படி உதவும், எங்கு உதவாது என்பதை தெரிந்து வைத்திருப்பவர்களுக்கு அவரது பிரச்சாரத்தின் நோக்கத்தினை இனம் காண்பது கடினமல்ல. வாழ்வாதார பிரச்சினைகளின் போது மக்களுக்கு பெருமளவு துணை நிற்கும் இயக்கங்கள் எவை என்ற கேள்விக்கு

விடை காண்பது கடினமல்ல.கடந்த சிலபல ஆண்டுகளில் பல நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை

செய்து கொண்டுள்ளனர். கைத்தறித் தொழிலாளர்கள் தொழில் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு எந்த ஆன்மிக அமைப்பு உதவியது, குரல் கொடுத்தது என்பதை நான் அறிய விரும்புகிறேன்.

கேரளாவில் ஒரு ஆறே தொழிற்சாலை வெளியிடும் கழிவால் பாழாக்கப்பட்ட போதும், நர்மதை அணைத்திட்டத்தினால் ஆயிரணக்கானோர் பாதிக்கப்பட்ட போதும் எத்தனை ஆன்மிகவாதிகள் குரல் கொடுத்தனர்.

எங்கே போனது அவர்களது கருணை. ஆன்மிகவாதிகள் வாயே திறக்காத,அக்கறையே காட்டாத ஆயிரம் பிரச்சினைகளை, விஷயங்களை காட்ட முடியும். இன்று மீனவர்களுக்கு அமிர்தானந்தா மாயியின் அமைப்பு வீடு கட்டிக் கொடுக்கலாம். ஆனால் வாழ்வாதாரப் பிரச்சினைகளின் போது குரல் கொடுப்பது தாமஸ் கொச்சேரி போன்றவர்களும், மீனவர்கள் கூட்டமைப்பும்தான் அல்லது அது போன்ற அமைப்புகள்தான். அரசியல்வாதிகளை மிஞ்சும் வகையில் ஆன்மிகவாதிகள் சுயப் பிரச்சாரத்தில் திளைப்பவர்கள். எர்ணாக்குளத்தில் அமிர்தானந்தா மாயின் பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு செலவு எத்தனை கோடி. ஒவ்வொரு சாமியாரும்,சாமியாரினிகளும் விஜயம் செய்யும் போது பெரிய சுவரொட்டிகள், அலங்கார வளைவுகள் வைக்கப்படுவதில்லையா.கனகாபிஷேகங்கள், பாதபூஜைகள், மலர்க்கீரிடங்கள் இவையெல்லாம் எந்த ஆன்மிகத்தின் வெளிப்பாடு. ரவி ?ங்கர் உட்பட இன்றுள்ள பல ஆன்மிகவாதிகள், மடாதிபதிகள் ஹிந்த்துவத்தின் நேரடி, மறைமுக ஆதரளவார்களாக உள்ளனர். இதையெல்லாம் மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு ஆன்மிக வாதிகளுக்கு மிகவும் ஆதரவாக பேச ஜெயமோகன் போன்றவர்களால் முடியும். இங்கு இன்னொரு கேள்வியையும் எழுப்பலாம் – விடுதலை இறையியல் போன்ற ஒன்று ஏன் ஹிந்து மதத்தில் உருவாகவில்லை. விதிவிலக்காக இது போன்ற கண்ணோட்டம் உள்ள ஒரு துறவி அக்னிவேஷ். ஆன்மிகவாதிகளின் உதவி என்பது விக்ஸ் போன்றது. விக்ஸை சர்வரோக நிவாரணி என்றா கொள்ள முடியும். மேலும் விக்ஸிற்கும் மாற்றுகள் உண்டு. ஆன்மிக இயக்கங்களை விட மீட்பு பணிகளில் இன்னும் தீவிரமாகவும், தொடர்ந்து ஈடுபடுவது மட்டுமின்றி வளர்ச்சிக் கொள்கை, கடன் சுமை உட்பட பலவற்றில் அக்கறை காட்டுபவை ஆக் ?பாம் (oxfam),ஆக்ஷன் எய்ட் (action aid), மெடிசன் சான்ஸ் பிராண்டியர்ஸ்(MSF) போன்றவை. வெறும் கஞ்சியை ஊற்றுவதே கருணை, அது போதும் என்று அவை நினைப்பதில்லை. மேம்போக்கான, பகட்டு ஆன்மிகத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கும், அத்தகைய ஆன்மிகத்தினை ஏதோ பெரிய நம்பிக்கைத் தரும் விஷயமாக முன் வைப்பவர்களுக்கும் இவற்றின் செயல்பாடு உவப்பாக இராது.

வணக்கத்துடன்

ராதா

radha100@rediffmail.com

Series Navigation

ராதா

ராதா

கடிதம் ஜனவரி 13,2005

This entry is part [part not set] of 64 in the series 20050113_Issue

பூவண்ணண்


அன்பின் ஆசாரகீனன்…

இஸ்லாமிய நாட்டில் (ஈரானில்) ‘ஷரியத் ‘ பெயரால் பெண்களை கல்லால்

அடிப்பதைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள்.

வட இந்தியாவில் தலித் பெண்கள் கோயிலுள்ள தெருவில் நுழைந்ததற்காக

நிர்வாணமாக்கப்பட்டு கல்லால் அடித்து துன்புறுத்தினார்களே அந்தக் கல் ஒருவேளை

ஈரானில் இருந்து வந்ததோ ?

—-

poovannan2@yahoo.com

Series Navigation

பூவண்ணண்

பூவண்ணண்

கடிதம் ஜனவரி 13,2005

This entry is part [part not set] of 64 in the series 20050113_Issue

கோவிந்த்


அன்புள்ள மீனவர்களுக்கு,

கோவிந்த் ( கோச்சா ) எழுதுவது.

தொலைக்காட்சியில் உங்கள் பேட்டிக் கண்டேன். அதில் கடல் மேல் நீ கொண்டுள்ள பயத்தையும் , இதுவரை கடல் எங்களுக்கு தாயாகத் தெரிந்தாள், ஆனால் இனி அவள் எங்கள் எதிரி என்று சொன்னது கண்டே இக்கடிதம்.

ஒரு வேளை இதை நீ படிக்காவிட்டாலும், உன்னருகே வந்து பேச வாய்ப்பு உள்ள ஜெயமோகன் போன்றவர்கள், என் கடிதக் கருத்தை இன்னும் வலிமையாக எடுத்துச் சொல்வார்கள் எனும் நம்பிக்கையுடன் எழுதுகிறேன்.

ஏன் கடலை எதிரி என்று சொன்னாய்.. ?

சுனாமி தந்த அழிவிலா.. ?

அப்படியெனில், உன்னை விட இந்தோனேஷியாக்காரன் தான் அதிகக் கோபம் கொண்டிருக்க வேண்டும்.

ஏன் … ?

இந்திய வாழ் உனக்கு ஒன்றரை மணிநேரம் தப்பிக்க வாய்ப்பிருந்தது.

ஆனால், அவர்களுக்கோ, சுனாமி சுதாரிப்பு நேரம் இன்றித் தாக்கியது.

அழிவும் நம்மைவிட அவனுக்கு அதிகம்.

ஆனால், அங்கு நடந்தது நீ கண்டாயா.. ?

முதலில் அவர்தம் சீரமைப்புப் பணிபற்றிக் காண்:

– சேதமடைந்த நிமிடம் முதல் அரசும் , இராணுவமும் சீரமைப்பு பணி தொடங்கியது.

– இறந்தவர்கள் உடல்களைத் தங்கள் உற்றார் உறவினர் உடல் போல் கருதி மரியாதை காட்டி அடக்கம் செய்தனர்.

– எந்த மொழி வல்லுனரும் கேவலமாக கடலைத் திட்டி கவிதை வடிக்கவில்லை.

– பின் ஒருபக்கம் சீரமைப்புப் பணி தொடர, சுற்றலா பயணிகள் மீண்டும் கடற்கரையோரம் சூரியக் குளியல் தொடர ஏற்பாடுகளும் செய்தனர்.

– அரசும் , மனிதர்களும் உலகளாவிய முறையில் வந்த உதவியை தம் மக்களுக்கு சேர்ப்பது மற்றும் கருத்தரங்கம், எதிர்கால சுனாமித் தடுப்புத் திட்டமென வேலைத் தொடர்ந்தார்கள்.

ஆனால், உன் பகுதியில் நடந்தது என்ன… ?

– அந்தமான் நிக்கோபார் தீவுகள் பாதிக்கப்பட்டவுடனே, உனது நாட்டின் அமைச்சருக்கு உதவி போய் உள்ளது. அவரோ, டில்லி அன்னை களைப்புடன் உறங்கும் நேரம் என்று தூங்கிப்போனார்.

இது தெரிந்தும் அரசிலிருந்து அவர் ராஜினாமா செய்யவில்லை. அன்னையும் அவரை தண்டிக்கவில்லை.

நீயோ அன்னை உன்னைப் பார்க்க வந்த போது யாசகம் செய்தாயே தவிர கேள்வி கேட்கவில்லை.

– சரி, இறந்தவர் நிலை. கொத்துக் கொத்தாய் குப்பைகள் போல் குழியில் தூக்கியெறிப்பட்டு…. நினைக்கவே நெஞ்சு துடிக்கவில்லை.. ? உனக்கு… ?

இதற்கு முன்னர் இந்த மாதிரி பிணக்குவியல் குழி தோண்டிப் புதைக்கப்பட்ட காட்சி, ஹிட்லர் காலப் புகைப்படத்தில் தான் உண்டு.

ஜெர்மனியின் ஒரு ஹிட்லர், ஆனால் காந்தி தேசமான உன் ஊரிலோ, பல ஹிட்லர்கள்.

ஹிட்லருக்கு ஏற்பட்ட கதி தானே அவர்களுக்கு ஏற்பட வேண்டும். பின் நீ ஏன்.. புலம்பிக் கொண்டு.

– சரி, எத்தனை பேர் வாய்ச்சவடால் விட்டு உன்னை சுரண்டி கொழுத்தனர். அவர்கள் யாராவது உன்னுடன் தங்கி உனக்காய் பாடுபடுகிறார்களா.. ?

உன்னச் சுற்றி நடப்பது பற்றி நீ கவலைப்படாமல், கடலைக் கோபித்தால் என்ன அர்த்தம்.

– இதில், இந்தக் கவிஞர்கள் எனும் ஒரு கோஷ்டி வேறு. உன் மனோ தைரியத்தைச் சிதைத்து, கடலில் மேலான உன் பார்வையை நாசம் செய்து கொண்டு.

நேற்று தீயைத் திட்டி கவிதை என்று கதற்றியவர்கள், இன்று கடலை, ‘நாசமாய்ப் போய்.. கடலா பேயா.. ? ‘ என்று சகட்டு மேனிக்கு பாடியவாறு. இதில் சாகத்ய அகாடம்மி கவிஞர் முதற்கொண்டு, படிக்கவிதை புனைவோர் வரை. தமிழ் தெரிந்த யாரும் மிச்சமில்லை எனும் படி.

இந்தக் கருப்புக் கவிஞர்கள், சாவே உனக்கொரு நாள் சாவு வராதா.. என்று கவிதை பாடுபவர்கள். இவர்களுக்குத் தேவை கைத்தட்டு. தனக்கு விருப்பமான தலைவர்களுக்கு கூட அஞ்சலிக் கவிதை ரெடி பண்ணி வைத்து விட்டே, அவர்தம் பிறந்த நாளுக்கு வருடா வருடம் போபவர்கள்.

அரம் பாடி அழித்தல் போல், இந்த மாதிரி கவிதை எழுதினாலே …. ‘

இந்தக் ‘கருப்புக் கவிஞர்கள் ‘ தான் உன் எதிரிகளில் தலையானவர்கள்.

உனக்கு விழுந்த அடி பலமானது தான். நீ உயிருடன் இருப்பதே பெரிது தான். அதற்காக நீ உடைந்து போனால், யாருக்கு லாபம். கருப்புக் கவிஞர்களுக்கும், செய்தி போடுபவர்களுக்கும் வேண்டுமானல் வியாபாரம் நடக்கும். ஆனால் உனக்கு.

அது மட்டுமல்ல, உள் புகுந்த கடல் மீனவர்கள் எங்கே என்று தேடவில்லை. எந்த வித்தியாசமும் பாராமல் தான் சேதம் நிகழ்ந்தது.

இது இயற்கையின் நிகழ்வு. யாருக்கும் வரும்.

அதனால் மனம் தளராதே.

உனக்கு மீண்டு வர சிந்தனைகள் ,யோசனைகள்:

– ஜப்பானில் எரிமலையும், சுனாமியும் எப்போதும் ஆபத்து விளைவிக்கும் என்று தெரிந்தும் அதனுடன் வாழக்கற்று கொண்டவர்கள். அது எப்படி என அறிய வேண்டும்.

– அமெரிக்காவில், WTC , விபத்திற்குப் பின் யாரும் அடுக்கு மாடியில் வேலை பார்க்க மாட்டேன் என்று சொல்லவில்லை.

– குஜராத்தில் யாரும் நிலத்தில் நடக்க மாட்டேன் என்று சொல்லவில்லை.

– பல விமானம் விபத்து பார்த்த பின்னும் பயணிகள் யாரும் விமானத்தில் போவதில்லை என்று முடிவெடுக்கவில்லை.

– அரியலூர் ரயில் விபத்துக்குப் பின், திருச்சிக்காரர்கள், ரயில் பயணம் நிறுத்தி விட வில்லை.

இன்று, கடலை விரோதி என்று மனநிலை கொண்டால், நாளை பூகம்பம் வந்து நம்மில் பலரை நிலம் விழுங்கினால், கடல் நிலம் இரண்டும் விடுத்து எங்கு நாம் போவது.

அதனால், சற்று நிதானி,

1. தற்போது உனக்குத் தேவை மாற்று சிந்தனை வேண்டிய ஒரு முகாம்.

2. மூன்று மாதங்களுக்கு உன்னைத் தயார்படுத்த , நல்லவர்கள் தரும் உதவியை பயன் படுத்து.

3. உன்னைப் பார்க்க வரும் படித்த மற்றும் அனுபவம் உள்ளவர்களிடமிருந்து, வெளிநாடுகளில் கரைகளை சுனாமித் தாக்கி உள்ளதா எனக் கேள்

4. சுனாமித் தடுப்பிற்ற்கு என்ன முன் ஏற்பாடு அங்கெல்லாம் செய்யப்பட்டுள்ளது என்று கேள்.. ?

5. சுனாமி உணரல் குழுவில் நாம் ஏன் பங்கெடுக்கவில்லை இதுவரை எனக் கேட்டு, இனியாவது பங்கெடுப்பார்களா எனக் கேள்..

6. வெளிநாடுகளில், மீனவர்கள் இப்படிதான் வேட்டி மட்டும் கட்டி கட்டுமரத்துடன் கடலுக்குச் செல்கிறார்களா எனக் கேள்.

7. மேலும், பெரிய தவறு, சாமான்ய மக்கள் பலரும் தாங்கள் வாழும் முறை மற்றும் சுழலின் மேம்பாட்டுக்கு உலகில் மற்றப் பகுதிகளின் கண்டுபிடிப்புக்கள் பற்றிய செய்திகளை பற்றிக் கண்டு கொள்ளாததே.

மெட்டி ஒலி பார்த்து ஒப்பாரி வைக்கத் தயாராக இருக்கும் பலரில் எத்தனை பேர், சன் டிவி-யில் வரும் ‘உடலே நலமா ‘ ‘சன்ற வார உலகம் ‘ போன்ற தொடர் பார்க்கிறீர்கள்.. ?

இனியாவது நாளுக்கு ஒரு மணிநேரம் உங்கள் வாழ்வு மேம்பாடு காண உதவும் செய்திகள் அறிய முயலுங்கள்.

இது மாதிரி நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தந்தால், தொலைக்காட்சி நிறுவனத்தினரும் இது போன்ற தொடர்களைக் கூட்டுவார்கள்.

மேலும் நீ உருப்படியான நிகழ்ச்சியையும் பார்த்தால், உதவும் கரங்கள், ஆர்.எஸ்.எஸ், சேவா மையம், இராமகிருஷ்ண மடம், எய்ட் இந்தியா, எம்ஸ் இந்தியா சார்ந்தவர்கள் தோன்றாமல், குஷ்பூ, விஜய், விவேக் தோன்றி, சுனாமி நிதி பற்றி ஏன் பேசப் போகிறார்கள்.

இதுவும் ஏன் என்று சிந்தி.

8. நீ கோஷமிட்டு கொடி பிடித்தவர்கள் மாத்திரம் அல்ல, மன்றம் வைத்து ‘நாளைய முதல்வர் ‘ என்று சொன்னவர்கள் கூட காணமல் போய்விட எங்கிருந்தோ வந்த விவேக் ஓபராய் களமிரங்கினார்.

தொண்டுள்ளங்களும், சேவை அமைப்புகளும் தானே உன் வாழ்வு சீர் செய்ய போராடுகின்றன.

இது ஒருசில கேள்விகள் தான். உன் மனதில் இதை விட பல கேள்விகள் இருக்கும்.

ஆனால், நீ தான் கேட்காமலே, உனக்கு வாழ்வாய் இருந்த கடலை ஒரு நிமிடத்தில் எதிரி என்று சொல்லி விட்டாய்.

கடலை, நீ அம்மாவாகவும் பார்க்க வேண்டாம், தெய்வமாகவும் பார்க்க வேண்டாம் . கடலை கடலாகப் பார்.

நீ நீயாகத் தெரிவாய்.

கடலை நீ வெறுப்பாகப் பார்க்க வேண்டாம். உனக்கு மன தைரியமின்றி போய் விட்டால் அரசிடம் வேறு மாற்று வழிக்கு உதவி கேள்.

பல வருடம் முன்னர், குற்றப் பரம்பரை என்று கூறப்பட்டவரும், தீண்டத்தகாதவர் என்று கூறப்பட்டவரும் இன்று அரசின் உதவியுடன் காவலராகவும், ஆள்பவராகவும் மாறிவிட்டனர்.

உன் வாரிசுகள் படிக்க முழு உதவியை அரசிடம் கேள். மனோதைரியத்துடன் முனைப்பாக முயற்சி.

பிரதிபலன் பாராமல், உலகின் பல பகுதிகளிலிருந்தும் வரும் உதவிகளை நீ சரியாக பயன்படுத்தி இந்த சிக்கலில் இருந்து மீண்டு வா…

சிந்தித்தால் கடலை நீ வெல்வாய். இல்லை, கடலில் உப்பு போல் நீ வாழ்வில் கரைந்து போய் விடுவாய்.

கடலை ஜெயித்து நீ கரை சேர வேண்டுமா, இல்லை கருப்புக் கவிஞர்களுக்கு நான்கு வரியாக வேண்டுமா என முடிவு செய்.

சரியான கேள்விகளும் , கோரிக்கைகளும் தான் உன்னை உன்னிடமிருந்துக் காப்பாற்றும்

கோவிந்த்

—-

gocha2004@yahoo.com

Series Navigation

கோவிந்த்

கோவிந்த்

கடிதம் ஜனவரி 13,2005

This entry is part [part not set] of 64 in the series 20050113_Issue

மாயவரத்தான்


வணக்கம்..

ஞானம் கெட்டவர்களின் கோணல் பார்வை என்ற தலைப்பில் நான் எழுதியிருந்த கடிதத்திற்கான பதில் கடிதம் திரு. ஞாநி அவர்களிடமிருந்து வந்ததை படித்தேன்.

தனிப்பட்ட முறையில் அவரை தாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை! ஆனால் எதற்கெடுத்தாலும் பார்ப்பனியத்தை அவர் தாக்கி எழுதுவது தான் வேதனையைத் தருகிறது.

பொதுவாக வெகுஜனப்பத்திரிகைகளில் எழுதி அதை வாசகர்களிடத்தில் கொண்டு செல்ல இயலாமல் தோற்கிறவர்களும், அப்படியே சென்றாலும் அதையும் சிற்றிதழ்களைப் போல் நடத்தி தோற்கச் செய்கிறவர்களும் என்ற நோக்கில் எழுதப் போய் அது வேறு மாதிரியான அர்த்தத்தை உண்டு செய்து விட்டது. தன்னை நேரடியாக இந்த வரிகள் தாக்கி விட்டதாக ஞாநி நினைப்பதால் அதற்காக நான் வருந்துகிறேன். இது ஏதோ அவர் வழக்கு தொடர்ந்து விடுவார் என்று மிரட்டியதற்கான வருத்தமல்ல. தனிப்பட்ட முறையில் தாக்கியதைப் போன்று வரிகள் அமைந்து விட்டதால் தான் வருத்தம் தெரிவிக்கிறேன்.

அதே சமயத்தில், அதிரடியாக அவதூறுகளை வீசி தப்பிக்க முயற்சிப்பது பார்ப்பனீய உத்திகளில் ஒன்று என்று ஒட்டு மொத்தமாக குற்றம் சாட்டுவது எந்த விதத்தில் நியாயம் என்று ‘எல்லாம் புரிந்த ‘ ஞாநி விளக்கட்டுமே!

– மாயவரத்தான் (info@mayiladuthurai.net)

Series Navigation

மாயவரத்தான்

மாயவரத்தான்