வாழ்க்கை

This entry is part [part not set] of 29 in the series 20091225_Issue

எஸ்ஸார்சி


‘சோலி எல்லாம் முடிஞ்சுட்டுதா வண்டிய பூட்டுலாமா’ என்றான் வலசக்காட்டான். அது என்ன வலசக்காட்டான் என்றால், ஒரே பதில் அவன் வலசக்காடு என்கிற திருநாமம் உடைய கிராமத்துக்காரன் என்பதே.
என்றோ அவனின் முன்னோர்கள் அந்த கிராமத்தில் வாழ்ந்து பின்னர் தருமங்குடிக்குக் குடிபெயர்ந்து வந்திருக்கவேண்டும். தருமங்குடிக்காரர்களுக்கு அவனை வலசக்காட்டான் என்றால்தான் தெரியும்.
‘ எல்லாம் வாங்கியாச்சு நாம கெளம்புலாம்’ நான் தான் பதில் சொன்னேன். வலசக்காட்டானின் கட்டை வண்டியில் நான்கு சிமென்ட் மூட்டைகள் ஏற்றியாயிற்று.
அம்மா வீட்டுக்கு என்ன என்ன வேண்டும் என்று கேட்டார்களோ எல்லாமே வாங்கிமுடித்தாயிற்று.
கட்டை வண்டி முதுகுன்றம் போகிறது என்றால் சும்மா விடுவார்களா என்ன. காடுவெட்டிக்கடிய நிலம் திருத்திய வகையறா நாட்டுகோட்டைச் செட்டியார் கடை குண்டுக்கொட்டை முத்துராம்காபித்தூள் தொடங்கி கொல்லி மலை சரக்கான நடகாய லேகிய டப்பா ஈறாய் என்னை வாங்கிவரச் சொல்லி இருந்ததும் உண்மை.
தருமங்குடி கிராமம் அது பேருந்திலிருந்து இறங்கினால் நான்கு தப்படியில் போய்ச்சேர்ந்துவிடுகிற ஊரா என்ன. ஒரு கிலோ மீட்டருக்கு குறையாமல் நடந்தேதான் வேண்டும்
தருமங்குடி கிராமத்து என் ஔட்டு வீட்டில் தாழ்வார சிமென்ட் எல்லாமே இற்றுக்கொண்டு விட்டது. பொக்கையும் போறையும் என துருத்திக்கொண்டு அருவருப்பாய்க் காட்சி தந்தது. படித்துமுடித்து வேலைக்குப்போனதும் முதல் சம்பளம் வாங்கி இதனை மாற்றி ச்சிவப்புச்சிமென்ட்டாகப் போட வேண்டும் என்று மனதிற்குள் ஒரு சின்னக்கணக்கு போட்டதுண்டு..
தருமங்குடியில் ஆற்று மணல் கிடையாது. பத்து கிலோ மீட்டருக்கு போனால் கம்மாபுரம்
மணிமுத்தாற்றிலிருந்து சத்தவண்டி பிடித்து அள்ளி வரலாம். இதே வலசக்காட்டன்தான் வண்டியில்போய் ஆற்று மணல் அள்ளி வந்துள்ளான். அந்த மணல் அள்ளிவரும் பயணத்திற்கு நான் உடன் செல்லவில்லை.
‘ நீனு வண்டியில குந்திகினு வண்டிக்குப் பாரமா வர்ரதுக்கு நாலு தட்டு மணல் கொண்டாருலாம்’ அவன் தான் சொன்னான்.
முதுகுன்றம் தாண்டி வண்டி வந்துகொண்டிருந்தது.
அர்ரி அர்ரி’ என மாடுகளை முடிக்கினான். வலசக்காட்டன் முடுக்கத்தான் மாட்டுக்கு வால்கள் முளைத்தனவா என்ன. மாடுகளுக்கு வலசக்காட்டான் பாஷை புரிந்தேயிருக்க வேண்டும். அவை அவன் குரலுக்கு ஒரு அடி வேகமாய் எடுத்து வைப்பதும் பின்னர் தமக்கு தோன்றியபடி நடப்பதுமாகப் பழகி இருந்தன.
‘ நீ எண்ணைக்கும் ஒட்டாரம் பண்ணுறவன்தான் நான் தான் பாக்குறேனே’ மாடுகளில் ஒன்றைத்தான் அப்படித் திட்டித்தீர்த்தான் . அவை தம் போக்குக்கு போய்க்கொண்டே
இருந்தன. மாடாய் உழைப்பது என்பது இதுதானோ என்னவோ.
விதை நசுக்கப்பட்ட காளைகளை வைத்து ஒயா வேலை வாங்கும் நாம் என்ன மாட்டுப்பொங்கல் படைப்பதுவோ பசுங்கன்றுகளைக்கொன்றுவிட்டு பாலை மட்டும் கறந்துவிட இயந்திரம் கண்டுபிடித்துவிட்ட நமக்கு இது என்ன தருமமோ.
காளை மாடுகள் மாத்திரம் முன் வைத்த காலை பின் வைக்கவே வைக்கதாம் என்றோ தமிழ் சார் திருக்குறள் நடத்தும் சமயம் சொன்னது நினைவுக்கு வந்துபோனது
‘ செத்த மு¢ன்னால நவுந்து குந்துங்க வண்டியில மும்பாரம் இல்ல . நொ¡வத்தடி மேல தூக்குது’
‘ ஏன் ‘
‘ நவுந்து குந்துங்க இது எல்லாம் என்கிட்ட என்னா கேழ்வின்றேன்’ அவன் எரிந்து விழுந்தான்.
நான் வண்டியில் முன்புபுறம் கொஞ்சம் நகர்ந்து அமர்ந்துகொண்டேன். அந்த சிதம்பரம் செல்லும்
சாலையில் அப்போதைக்கு அப்போது ஒரு வண்டி சென்றுகொண்டிருந்தது. வரிசையாய்ப்புளிய மரங்கள் ஆகாயம் தொட்டுக்கொண்டு நின்றன. தூரத்தில் நெய்வேலி அனல் மின்சார உற்பத்தி ஆலையின் புகை கக்கும் குழாய்கள் ராட்சசர்கள் போலவே தெரிந்தன. நிலக்கரி எடுக்க த்தோண்டிய மண் பெரு மலை எனக்கொட்டிகிடந்தது.
‘ நெய்வேலிக்காரன் நவுந்துகிட்டே வர்ரான் ஆ வந்துப்ட்டானே’
‘ ஆமாம் ‘ என்றேன்.
‘ அவனுக்கும் சோலி இருக்குதுல்ல. நோண்டுனா தானே கரி அப்புறம் கரண்டு காசு எல்லாம்’
‘ இப்ப எங்க குடி இருக்குற நீ’ பேச்சை மடை மாற்றினேன்.
‘ ஏன் தெரியாதா’ என்றான்.
‘ தெரியாமத்தான் கேக்குறேன்’
‘ நொண்டிபுள்ள ஊட்டதான்’
‘ யாரு’
‘ என்னா யாரு எவருன்னுட்டு, அந்த கம்பத்தாரு கட்டிவுட்ட பத்து வூடு இருக்குதுல்ல அதுல மொத வூட்டுல குடியிருக்கறன்’
‘ பெரிய மனுஷனைப்போயி நொண்டி அது இதுன்றே’
‘ என்னா செத்த மருவாதை நாயி நாயி ஈன புத்தி எச்சி நாயி அது’
‘ கேட்டது தப்பா நீ பாட்டுக்கு நீட்டிக்கிட்டே போற’
‘ குடியிருக்கிர வூடு ஒழுவுது ஔடு மாத்துனும்றேன். அவனும் மாத்த மாட்டன்றான் என்னையும் மாத்த உட மாட்டன்றான். தானும் இதுங்கமாட்டான் தள்ளியும் படுக்க மாட்டான் அவன் சரியான வவ்வி’’

‘ என்னா போ’ என்றேன். வவ்வி என்பதற்கு என்ன பொருளோ எப்படிக்கேட்பது. வவ்வால்
என்பதைத்தான் வவ்வி என்கிறான் வலசக்காட்டான் முடிவு செய்தேன்.
மாடுகள் அசைந்து அசைந்து நடந்தன
தருமங்குடிக்கு .சரி பாதி தூரம் வந்தாயிற்று. கம்மாபுரம் கிராமம் நெருங்கிகொண்டிருந்தது. இன்னும் நான்கு ஊர் தாண்டினால் தருமங்குடி வந்துவிடும்.
‘ மானம் கருக்கிட்டு வருது என்னா துன்பம் சிமுட்டு மூட்டல்ல வச்சிருக்கம். கம்மாபுரம்
செயராம செட்டிக்கடயில ஊரியா சாக்குவ ரெண்டு வாங்கி மேல போட்டுக்கிட்டாதான் தேவலாம்’
சொல்லிக்கொண்டே வலசக்காட்டன் வண்டியை ஒட்டிக்கொண்டுபோய் செயராம செட்டியார் கடை முன்பாக நிறுத்தினான்.
‘ எதானா சாக்கு படுதா இருக்குதான்னு பாரு செட்டியாருள்ட என்னா ஜாமான் தான் இருக்காது மனுஷாள்ள செட்டிசனம் கெட்டி சனமாச்சே’
நான் செயராம செட்டியார் கடைக்குச்சென்று யூரியா சாக்கு நான்கு வாங்கி வந்தேன். அதில்
இரண்டை எடுத்து சிமென்ட் மூட்டைக்கு போர்த்திவிட்டான்,
‘ இப்ப எங்கனா அசைக்க முடியுமா மழையாவது ஒண்ணாவது’ சொல்லியபடியே
மாடுகளை விரட்ட ஆரம்பித்தான். அவை தலையை ஆட்டிக்கொண்டு நடந்தன.
‘ எங்க வுட்டன் கதயை’
‘ ஔடு மாத்த வுட மாட்டன்றாரு புள்ளன்னு சொன்னீரு’
‘ என்னா புள்ள செத்த நொள்ள கஞ்ச பிசுநாறி வீரநாரணப்பெருமா கோவிலு தோட்டத்து தேங்கா வித்து முடியுறான் நொண்டி நாம போய் கேட்டா ஒரு தேங்கா ரூபா நாலுன்றான் அஞ்சின்றான் நல்ல கதிக்குப்போறவனா நொண்டி’

வலசக்காட்டன் பேசிக்கொண்டே போனான். மேகங்கள் கலையத்தொடங்கின. யூரியா சாக்கு
வாங்கிய சமாச்சாரம் அவைகட்கும் தெரிந்து இருக்குமோ. என்னவோ. சிதம்பரம் செல்லும்
சாலை கன்னங்கறேல் என்று நாக ராசனாய் ப்படுத்துக்கிடந்தது.
‘ நம்ம ஊரு வந்து போச்சி வண்டி சுழலும் சாக்குறதை’
என்றான் வலசக்காட்டான்.
புளிய மரத்தடியில் இருந்த சுமை தாங்கி க்கல்லில் அமர்ந்திருந்த கருப்பு உருவம் நொண்டி
நொண்டி வண்டியருகே வந்தது.
‘ யாரு வலசக்காட்டானா குரலு வெங்கலமாட்டம் கணீர்னு இருக்கு’
‘ ஆரு பெரிய புள்ள யா என்னா சேதி இந்த கருக்கல்லபோயி எங்க இப்பிடி ’ சொல்லிக்கொண்டே வண்டியை விட்டு இறங்கினான். பிள்ளையக்கைத்தாங்கலாய்ப்பிடித்து அழைத்து வந்தான்.
‘ யாரு ‘ என்றேன்.
‘ யாரு கீரு ங்க்ற பெரிய புள்ள தருமங்குடியில கம்பமாச்சே நீ நவுந்துக அய்யா குந்துட்டும்’
‘ அது வுளுக்கு என்னா தெரியும்ற நம்ப பெரிய புராணங்கதை எல்லாம்,’
இடைமறித்து நியாயம் சொன்னார் பெரிய பிள்ளை.
மாடுகள் அமைதியா நின்று கொண்டிருந்தன. மாடுகளுக்குப்பேச வந்தால்தானே.
நான் ஒரு ஔரமாய் அமர்ந்துகொண்டேன். வண்டி ஆடி ஆடி ச்சென்று பெரிய பிள்ளயின் வீட்டு
வாயிலை அடைந்துநின்றது.
பெரிய பிள்ளையை அழகாய் இறங்கச்சொல்லி அவர் வீட்டு வாயில் வரை கொண்டுபோய் விட்டு.
‘ரா நேரம் பாத்து போங்க பெரிய புள்ள’ பவ்யமாய்ச்சொன்னான் வலசக்காட்டன்.
‘ நீ இருக்ககுள்ள ராவென்னா பகலென்னா’ என்றார் பெரிய பிள்ளை.
நான் ஆகாயத்தையே பார்த்துக்கொண்டு வண்டியில் அமர்ந்திருந்தேன். பிள்ளை வீட்டுக்கதவு
திறந்து பின் தாளிட்டுக்கொண்டது.
‘ வூட்டுக்கு வந்துப்டம்ல இப்புறம் என்னா மழக்கம்’ மாடுகளுக்குச்சொல்லி விரட்டினான் ..
அவை ஊர் வந்துவிட்டமை உணர்ந்து வேகம் கூட்டி நடந்தன.
சிமென்ட் மூட்டைகளை ஒவ்வொன்றாக இறக்கி என் வீட்டுக்குள்ளாக க்கொண்டு போய்வைத்தான் வலசக்காட்டான். என் வீட்டில் தாழ்வார வேலை இன்னும் பாக்கி இருக்கிறது.
———————————————————————————

Series Navigation

வாழ்க்கை

This entry is part [part not set] of 29 in the series 20060303_Issue

கவிஞர் புகாரி


மீன் தொட்டிகள் அழகானவை
அதனுள் நீங்தும் தங்க மீன்
காண்பதற்குக் கொள்ளை அழகு

ஆனால்…
திமிங்கிலங்களுக்கு
மீன் தொட்டிகள் சரிப்படாது
அது சுதந்திரமாய்
நீலக் கடலில் நீளப்பாயும்
இயற்கை அழகோடு
கம்பீரமாய் நீந்தித் திரியும்
.

சிலைகள் அழகானவை
செதுக்கச் செதுக்க அழகு கூடும்
செதுக்குபவன் கைகளில்
சிலிர்ப்போடு பேசும்

ஆனால்…
அந்த நீல மலைத்தொடரை
செதுக்குவதென்பது நடவாது.
அது தானே தடம்போட்டு
தானே நடைபோட்டு
நீண்டு வளர்ந்த நீல மலைகள்
இந்தச் சிலை அதன்
இயற்கை அழகின்முன்
காணாமல் போய்விடும்

.

அந்தக் கூண்டு தங்கத்தால் ஆனது
அதனுள் அந்தக் கிளிக்கு
அத்தனைப் பராமரிப்பும் உண்டு
இறகுகள் நீவிவிடப்படும்
பால்பழம் கொடுக்கப்படும்
பன்னீரில் குளிப்பாட்டப்படும்
நாக்கைச் சுழற்றிப்
பேசக் கற்றுத்தரப் படும்

ஆனால்…
வேடந்தாங்கல் பறவை
சிறகின் சுதந்திரத்தை
அனுபவிக்கிறது
வானவெளியில் சிறகடிக்கிறது
நினைத்ததை உண்கிறது
நினைத்த இடம் பறக்கிறது
அதன் சுதந்திரம்
இந்தக் கூண்டுக்கிளிக்கு வராது

.

ஒரு குரங்கைக் கண்டேன்
அழகழகாய் சட்டை மாட்டிக்கொண்டு
சிங்காரமாய்ச் சீவிக்கொண்டு
குச்சைப் பார்த்துக் குட்டிக்கரணம் போட்டு
நிறைய சம்பாதிக்கிறது

கைத்தட்டும் கூட்டம்
ஏராளம் ஏராளம் ஆனால்
அதன் தந்தைக் குரங்குபற்றி
அதற்குத் தெரியாமலேயே
போய்விட்டது

.

குட்டைமரம் பார்த்திருப்பீர்கள்
ஜப்பானியர் கிள்ளிக் கிள்ளியே
ஒரு மாபெரும் மரத்தை
குள்ளமாக்கியிருப்பார்கள்
அதைப் பார்வையிட
உலகில் பல்லாயிரம் மக்கள்
அதைப் படைத்துவிட்ட
பெருமை ஆயுளுக்கும் போதும்

அந்த அருங்காட்சியகத்தில்
அணிவகுத்த கும்பலிடம்
காட்டு மரங்களுக்கும் இதற்கும்
என்ன வித்தியாசம் என்பதுமட்டும்
மறைக்கப்பட்டு
மறக்கடிக்கப்பட்டுவிடும்

—-
buhari@gmail.com

Series Navigation

வாழ்க்கை

This entry is part [part not set] of 30 in the series 20050715_Issue

கற்பகம் இளங்கோவன்.


—-
யாருமறியா முகூர்தத்தில் ஜனனம்
யாரோ வகுத்த சாலைகளில் பயணம்
எவராலோ எழுதப்பட்ட
விவரமில்லா விதிகள்
எதற்காகவோ எந்த நேரமும்
அர்த்தமில்லாத தேடல்கள்
ஏவப்பட்ட ஏவுகணைபோல
நிர்ணயிக்கப்பட்ட இலக்கு
கூண்டுக்கிளியின் குரலைப்போல
வரைகின்ற கவிதைகளைத் தவிர
சூழ்ந்திருக்கும் நிர்பந்தங்களால் மட்டுமே
நிஜமாக நகர்த்தப்படுகின்றது வாழ்க்கை.
—-

karpagamelangovan@yahoo.com

Series Navigation

வாழ்க்கை

This entry is part [part not set] of 46 in the series 20040520_Issue

சாந்தி மனோகரன்


நடப்பதை நிறுத்திவிட்டு
நின்று பார்த்தபோது
பாதையின் முடிவில் நானிருந்தேன்….

நடந்து வந்த பாதையை
திரும்பிபார்த்தால்..அதுவும்
நான் கடந்து வந்த பின்னே
உடைந்தோ இல்லை கரைந்தோ
தொலைந்து போயிருந்தது…

விளிம்பினிற்கு வந்துவிட்டோமோ எனவெண்ணி
நடக்க தொடங்கியபோது
கால் விரல் காட்டிய திசையில்
பாதை தொடர்ந்துகொண்டே இருந்தது…
நானும் நடந்துகொண்டே இருக்கிறேன்
—-

shanthi_yem@yahoo.com

Series Navigation

வாழ்க்கை

This entry is part [part not set] of 42 in the series 20030802_Issue

பா.ஸ்ரீராம் மயிலாடுதுறை


விரக்தி அடையும்
மனதிற்கு..
ஒருத்தர் கூட
ஆறுதல் இல்லை.

அறிவுரைகள் ஆயிரம்
எடுத்து கூற எத்தனையோ பேர்.
உதவி செய்ய யோசிப்பான்
கதவினை சாத்திப்பான்.

முன் பிறவி தீவினைதான்
முன்னேற தடையென்பான்.
பரிகாரம் பல சொல்வான்
குறி பார்த்து வழி சொல்வான்
அவன் குறி எல்லாம்
பணத்தின் மேல்…

அழகான சொற்களினால்
அர்ச்சணைகள் செய்திடுவான்.
பழகிய மனிதனைப் போல்
பாராட்டி பேசிடுவான்.

உறவுகளும் உறவாடும்
வரவு வர வாழ்த்து சொல்லும்
செலவு என்று சென்று நின்றால்
இழவு என்று இகழ்ந்து கூறும்.

இதுதான் வாழ்க்கை என்று
எளிதாக எடுத்துக் கொள்
இதிலே போய் இடிந்து நின்றால்
வலியை தவிர எதுவும் இல்லை.

பா.ஸ்ரீராம்
மயிலாடுதுறை

Series Navigation

வாழ்க்கை

This entry is part [part not set] of 31 in the series 20030525_Issue

ஸ்ரீராம்


பகலுடன் இரவு சேர்ந்தால் நாள்.
மண்ணோடு வேர் சேர்ந்தால் செடி.
நாருடன் பூ சேர்ந்தால் பூச்சரம்.
நீருடன் அரிசி சேர்ந்தால் சாதம்.

விண்ணோடு நீர் சேர்ந்தால் மழை.
மணியோடு நொடி சேர்ந்தால் நேரம்.
மனதோடு உதவி சேர்ந்தால் தானம்.
மனம் ஒரு நிலையாய் சேர்ந்தால் தியானம்.

காலத்தோடு உழைப்பு சேர்ந்தால் பலன்.
தன்னோடு தான் சேர்ந்தால் அகங்காரம்.
உதவியோடு நினைவு சேர்ந்தால் நன்றி.
தன்னை தெய்வத்திடம் சரணைடைந்தால் பக்தி.

மனதோடு மனம் சேர்ந்தால் காதல்.
ஆணோடு பெண் சேர்ந்தால் திருமணம்.
உடலோடு உடல் சேர்ந்தால் மழலை.
மழலையோடு சொல் சேர்ந்தால் ஆனந்தம்.

சொல்லோடு சொல் சேர்ந்தால் வாக்கியம்.
வாக்கியத்தோடு பொருள் சேர்ந்தால் கவிதை.
ஆசை பேராசையாய் சேர்ந்தால் சோகம்.
ஆனந்தத்தோடு சோகம் சேர்ந்தால் தான் வாழ்க்கை.

அன்புடன், ஸ்ரீராம்
slib@rediffmail.com

Series Navigation

வாழ்க்கை

This entry is part [part not set] of 33 in the series 20030317_Issue

புஷபா கிறிஸ்ரி


எத்தனை நாட்கள் ?

அழுத நாட்கள், சிரித்த நாட்கள்

சிந்தித்த நாட்கள்,

நிந்திக்கப் பட்ட நாட்கள்

ஆதரிக்கப் பட்ட நாட்கள்

விவாதிக்கப் பட்ட நாட்கள்

பாசம் காட்டிய நாட்கள்

பரிகசிக்கப் பட்ட நாட்கள்

அனைத்து நாட்களும்

இன்று ஒரே நாளில்

முடிவடையப் போகின்றதா ?

வாழ்க்கையின் முற்றுப் புள்ளி

வரப்போகும் இந்த நாளில்

இனி என்ன மீதமிருக்கிறது ?

இறப்புத் தானே!

இன்பமாய் அதையும்

வரவேற்றுவிடு

புஷபா கிறிஸ்ரி

pushpa_christy@yahoo.com

Series Navigation

வாழ்க்கை

This entry is part [part not set] of 18 in the series 20010610_Issue

சுஜல்


அம்மாவின் மடியில் படுத்து உறங்க அக்காளுடன் சண்டை
அப்பாவின் கை பிடித்து சென்று கடையில் வாங்கிய பச்சை ாிப்பன்
பக்கத்து வீட்டு ரகுவிடம் பல்ப்பத்திற்கு பாகப்பிாிவினை
பாட்டியின் வடுமாங்காய்,தாத்தாவின் கண்ணன் கதைகள்
இவையாவும் நேற்று கண்ட பகல் கனவாய் மனதில்…

இன்று மூடிய அறையில் கணினி மட்டும் துணனயிருக்க
அக்காவின் கல்யாணத்தை வீசீடி யிலும்
அப்பாவின் கைபட்ட வாரமொருமுறை மின்னஞ்சலையும்
பார்க்க முடியாமல் போன பாட்டியின் கடைசி நேர முகத்தையும் எண்ணி …

மூடு பனி சூழ்ந்த வீட்டினில் ,நானும் ஒரு இயந்திரமாய்…
உற்றமும் சுற்றமும் கண்டு பொறாமைப்படும்
எனது அமொிக்க வாழ்க்கை!

Series Navigation