தூண்டா விளக்கு
பிச்சினிக்காடு இளங்கோ

(சிங்கப்பூர்)
மேடை
பொன்னாடை
மாலை
தயார்
கைகுலுக்க
கட்டி அணைக்க
வேடங்கள் தயார்
வெளிச்சம்
சிரிக்கிறது
கையிருப்புக்குறையாத
புன்னகையோடு
ஒரு வரவேற்பு தர்பார்
வெளிச்சம் கிடைக்குமெனில்
இனி
எல்லாம் தானாக…
—-
pichinikkaduelango@yahoo.com