வாழ்க்கை என்பது!….

This entry is part [part not set] of 64 in the series 20050113_Issue

விஜயமோகனச்செல்வி செல்வரத்தினம்


போதும்!..போதும்!..மனிதா!
உணர்வுகள் மரித்து! உறவுகள்
வெறுத்து வாழ்கின்ற வாழ்வென்ன
வாழ்வா ?
சக்கரத்தோடு! சிறகுகள் பூட்டி!
பறந்தோடும் வாழ்வென்ன வாழ்வா ?
இயந்திரம் ஆனாய்!…இழந்தது
எத்தனை ?!!! இதயத்தை
தொலைத்து நீ தவிக்கின்ற
இந்நிலை!…போதும்!…மனிதா
போதும்!
மனிதர்கள் வாழ்க்கை இங்கு
மணல் வாழ்க்கை! இணைந்திருந்தும்
ஒட்டாத ஒரு சேர்க்கை!ஓர்
உதரம் வழி வந்த உதிரங்கள்
உதறி!..தடம் மாறி தடுமாறும்
ஒரு வாழ்க்கை!..போதும்! மனிதா
போதும்!…
‘என்ன வாழ்க்கை இது என்ன
வாழ்க்கையென்று ‘ விரக்தி
பேச்செல்லாம் விட்டொழித்து
அமைந்த வாழ்க்கை இது
ஆனந்தம் என ஏற்று
வாழ்ந்திட்டால்!..வாழ்த்துமே
உனை இயற்கை!..
தருணம் பார்த்து வருவதில்லை
மரணஓலை அழைப்பு! நீ
சிரிக்கும்போதும் நின்று விடலாம்
உந்தன் இதயத்துடிப்பு!
வாழும் காலம் கொஞ்சம் என்ற
உண்மை நிலை ஏற்று
அன்பினால் அகிலம் அதை
நீ வென்று காட்டு!
—-
விஜயமோகனச்செல்வி செல்வரத்தினம்
—-
vijiselvaratnam@yahoo.ca

Series Navigation

விஜயமோகனச்செல்வி செல்வரத்தினம்

விஜயமோகனச்செல்வி செல்வரத்தினம்